PDA

View Full Version : ஒருநாள் யாரோ..... (அத்தியாயம் 14 & 15 )கீதம்
13-09-2010, 04:57 AM
ஆங்கிலேயர் காலத்தில் மிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்ட மத்திய அரசுப் பணியாளர் குடியிருப்புகள் அடங்கிய அந்தப்பகுதி, பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். வரிசையாய் கோர்க்கப்பட்ட மணிகளைப் போல ஒவ்வொரு பிளாக்கிலும் சீமை ஓடுகள் வாய்ந்த பன்னிரண்டு வீடுகள் பக்கவாட்டுச்சுவர்களை பொதுவாய் சொந்தம் கொண்டாடிக்கொண்டு இருந்தாலும் முன்னும் பின்னும் தங்களுக்கென கையகலத் தோட்டங்களையாவது பராமரித்துவந்தன.

எல்லா வீடுகளிலும் முருங்கைமரம் தவறாமல் இருக்கும். ஒரு பிளாக்குக்கு ஒரு வீட்டிலாவது மாமரம் இருக்கும். இது தவிர ரோட்டோர வாதுமை மரங்களும், வேப்பமரங்களும் சாலையோரத்தில் நிழல்கூட்டி போவோர் வருவோருக்கு இளைப்பாறவும், குடியிருப்பின் பெண்களுக்கு கதை பேச பொதுவான அரங்கங்களாகவும் உதவின. குடியிருப்புவாசிகள் பெரும்பாலும் இன்னாரின் அப்பா, அம்மா என்று குழந்தைகளின் பெயரை முன்னிறுத்தியே அழைக்கப்பட்டனர்.

இத்தகைய அருமையான குடியிருப்பின் இரண்டாவது பிளாக்கில் ஏழாவது வீட்டில் வசிக்கும் மூன்றுமாத கர்ப்பிணியான பிரமிளாவுக்கும் அவள் கணவன் ஈஷ்வருக்கும் இரண்டு நாட்களாய் சண்டை.

"என்னை எங்க ஊரிலே கொண்டுபோய் விடப்போறீங்களா, இல்லையா?"

"ஏண்டி என்னை இப்படிப் படுத்தறே? அதான் அடுத்த மாசம் உங்க அம்மா வர்றதுக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணியிருக்கேனில்ல, பின்ன ஏன் இப்படி அடம்பிடிக்கிறே?"

"நானா அடம்பிடிக்கிறேன், உங்களுக்குதான் நாத்தமும் தெரியாது, வாசனையும் தெரியாது, எனக்கு அப்படியில்ல, என்னால் இந்த நாத்தத்தில வாழவே முடியாது. இப்படியே வாந்தி எடுத்து எடுத்து சாவத்தான் போறேன், அப்புறமா தலையில அடிச்சிகிட்டு அழுவுங்க"

"சரி, இப்ப என்ன? எங்கேயாவது எலி செத்துக்கிடக்கும், ரெண்டுநாள் நாறும், அதை காக்கா தின்னு முடிச்சிடுச்சின்னா நாறாது. அதுக்காக இப்பவே என்னைக் கொண்டுபோய் கன்னியாகுமரியில விடுன்னு சொன்னா என்ன அர்த்தம்? நெனச்சா நடக்கிற காரியமா இது?"

"இங்க பாருங்க, இந்தப்பக்கம் போற யாரை வேணுமானாலும் கேட்டுப்பாருங்க, நாத்தம் கொடலப்புரட்டுது..... என்னால....உவ்........வே........."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே குமட்டல் மேலிட வயிற்றைப்பிடித்துக்கொண்டே குளியலறைக்கு ஓடினாள். பின்னாலேயே ஓடிப்போய் தலையைத் தாங்கிப்பிடித்தான். வாந்தி எடுத்து எடுத்து சோர்ந்துபோய் இருப்பவளைக் கைத்தாங்கலாய் அழைத்துவந்து படுக்கையில் கிடத்தினான். மின்விசிறியைச் சுழலவிட்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். பிரமிளா அரைமயக்கநிலையிலிருந்தாள்.

ஈஷ்வருக்கு எரிச்சலாய் இருந்தது. மசக்கை என்றால் இப்படி வாந்தியெடுப்பார்கள் என்று தெரியும். டாக்டரிடம் காண்பித்து மருந்து வாங்கிக்கொடுத்தாகிவிட்டது. காலையில் வாசல் தெளிப்பதிலிருந்து சமையல் செய்து, பாத்திரம் துலக்கி, துணி துவைத்து எல்லா வேலைகளையும் அவனே செய்துவிடுகிறான். படுத்து ஓய்வெடுப்பது மட்டும்தான் அவள் வேலை. என்னவோ இவள்தான் அதிசயமாய்ப் பிள்ளைபெறுபவள் போல் பேசுகிறாளே! ஈஷ்வரின் அக்கா பாக்கியம், வேலைக்கும் போய்வந்துகொண்டு வீட்டிலும் வேலை செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லையா?

அம்மா வீட்டுக்குப் போக ஒரு சாக்கு. என்னவோ நாறுகிறதாம். இருக்கமுடியலையாம்.

எங்கேயாவது எலி செத்துக்கிடக்கலாம். குடியிருப்புகளில் அடிக்கடி நிகழ்வதுதான். எலித்தொல்லை தீர எலிபாஷாணம் அல்லது எலிப்பொறி! இரண்டையும் விட்டால் பூனை.

இந்த மக்களையும் சொல்லவேண்டும். எலி செத்தால் அதை குழிதோண்டிப்புதைப்பதில்லை. அப்படியே கொல்லையில் கடாசிவிட்டுவிடுவார்கள். அக்கா வீட்டுப்பக்கமும் இப்படிதான். ஒவ்வொருமுறையும் மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் போக, அக்காதான் இவனிடம் கெஞ்சுவாள்.

"ஈஷ்வர்! இந்த எலியைக் கொஞ்சம் புதச்சிட்டுப்போடா!"

ஈஷ்வருக்கு ஒரு வசதி. அவனுடைய மூக்கு நுகரும் தன்மையை இழந்திருந்தது, பின்னாளில்தான் தெரியவந்தது. தோட்டத்துப் பூவின் நறுமணத்தை அனைவரும் அனுபவிக்க அதை வேடிக்கை மட்டுமே பார்த்திருப்பான். அதற்காக அவன் வருந்தியதுமில்லை.

'உங்களை ஏமாத்தி என் தலையில் கட்டிவச்சிட்டாங்க' என்று பிரமிளா, அடிக்கடிச் சொல்லி, சீண்டுவாள்.

துவண்டுபோய் கிடக்கும் பிரமிளாவைப் பார்த்தான். செல்லமாய் வளர்ந்தவள். தலைவலிக்கே ஊரைக்கூட்டுபவள். இவள் எப்படி மிச்சகாலத்தைக் கடந்து பிள்ளையைப் பெறுவாள் என்பதே ஈஷ்வரின் கவலையாக இருந்தது.

போனவாரம் கூட பக்கத்துவீட்டு சாரதா டீச்சரிடம் இருவரும் புலம்பியதில், அவர் வந்து இருவருக்கும் புத்தி சொல்லிப்போனார்.

"ஈஷ்வர், ஒரு பெண் இதுமாதிரி சந்தர்ப்பங்களில் அம்மா பக்கத்தில் இருக்கணும்னு நினைக்கிறதில் ஆச்சர்யம் ஒண்ணுமில்ல. என் பெண்ணையே பாருங்க, ஒரு கல்லூரியில கிட்டத்தட்ட துணை முதல்வர் பொறுப்பில் இருக்கிறவ. பத்து வருஷத்துக்குப் பிறகு இப்பதான் உண்டாகியிருக்கா. ரொம்ப கவனமா இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காராம். அவ புருஷனும், மாமியாரும் அவளை உள்ளங்கையில் வச்சிதான் தாங்கறாங்க, ஆனாலும் 'அம்மா வாம்மா, அம்மா வாம்மா'ன்னு ஒரே பல்லவிதான்.

எனக்கு மட்டும் ஆசை இல்லையா?எங்க பள்ளிக்கூடத்தில் ஹெச்.எம் ஊரில் இல்லை. அவர் வரும்வரைக்கும் பொறுப்பு என் கையில். உடனே கிளம்பிவரமுடியாதும்மான்னு சொன்னால் கோவம் வருது. என்னைவிடவும் உனக்கு ஸ்கூல்தான் முக்கியமான்னு நேத்து போனில் ஒரே அழுகை. இதுக்கு என்ன சொல்றீங்க?"

"சரிங்க, டீச்சர்! ஆனா இவள் ஊர் ஒரு கிராமம், மருத்துவ வசதி கிடையாது. அதனால் இவங்க அம்மாவை வரச்சொல்லியிருக்கேன். அவங்களும் உங்களை மாதிரிதான். வயல்வேலை பாதியில் இருக்கு. முடிச்சிட்டு வரேன்னு சொல்லியிருக்காங்க, அதுக்குள்ள என்னைப் போட்டுப் படுத்தறா, டீச்சர்."

ஈஷ்வர் நிறுத்தியதும் பிரமிளா தொடர்ந்தாள்.

"டீச்சர், நீங்களே சொல்லுங்க, இவர் பாட்டுக்கு காலையில் போனா சாயங்காலம் வராரு, நாளெல்லாம் நான் வாந்தியெடுத்துகிட்டு தண்ணி எடுத்துக்கொடுக்கக் கூட ஆளில்லாம கஷ்டப்படுறேன். ஊரிலே கொண்டுபோய் விட ஒரு சனி ஞாயிறு பத்தாதா? இவருக்கு மனசில்ல, சும்மா ஊரில ஆஸ்பத்திரி இல்ல, அது இதுன்னு கத விடறாரு!"

சாரதா டீச்சர் சிரித்தார்.

"பாரு, என் பெண் கிட்ட சொல்றமாதிரிதான் உனக்கும் சொல்றேன், ஒரு மாசம் பொறுத்துக்கோ, உங்க அம்மா இங்க வந்திருவாங்க, அப்புறம் எந்தப் பிரச்சனையும் இருக்காது. நல்ல பொண்ணுதானே? இன்னைக்கு ராத்திரி அடைக்கு ஊறவச்சிருக்கேன். பசங்ககிட்ட கொடுத்தனுப்பறேன். நீங்க எதுவும் செஞ்சிடாதீங்க."

"உங்களுக்கு எதுக்கு டீச்சர், சிரமம்? நீங்க உங்க ஒருத்தருக்காக செய்ய இருப்பீங்க..."

"என் ஒருத்தருக்கா? அது கெட்டது, தினமும் எங்க வீட்டுக்கு படிக்க வர பசங்களை எந்தக் கணக்கில சேர்க்கிறதாம்?"

டீச்சரின் விருந்தோம்பலை எண்ணி ஈஷ்வரும், பிரமிளாவும் பிரமித்து நிற்க,டீச்சர் சிரித்துக்கொண்டே வெளியேறினார்.

அவர் உபயத்தால் அன்றிரவு சூடான அடையும், அவியலும் இரவு உணவானது. ஆனாலும் பிரமிளாவின் வாய் அடையவில்லை. தினம் தினம் நச்சரிக்கத் துவங்கிவிட்டாள். இரண்டுநாட்களாய் நாற்றம் நாற்றம் என்று புத்துக்கதை வேறு. எப்படியாவது அம்மாவீட்டுக்குப் போய்விடவேண்டும். போனால் குழந்தை பிறந்துதான் வருவாள். அது சர்வநிச்சயம்.

"பிரமிளா, இந்தா மாத்திர. நல்லா படுத்து தூங்கு. இன்னும் இருபதுநாள்தான். அத்தை வந்திடுவாங்க, அதுவரைக்கும் வேலையெல்லாம் நாந்தான் பாத்துக்கறேனே, படுத்து ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதான உன் வேல?"

இதமாய்ப் பேசினான். பிரமிளாவோ இவனுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியாமல் தடுமாறினாள். இரண்டுநாளாய் நாற்றமென்றால் நாற்றம் அப்படியொரு நாற்றம். முதலில் சாக்கடை எங்காவது அடைத்திருக்கும் என்றுதான் நினைத்தாள். அதன்பின் எலி செத்திருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. இப்போதிருக்கும் நாற்றத்தைப் பார்த்தால் பூனையோ, நாயோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நேற்று கொல்லைச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம் என்று வந்தபோது குமட்டி அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டாள். எதற்கோ வந்த, பின் பிளாக்கைச் சேர்ந்த வாசுகி அம்மா, இவளிருக்கும் நிலையைப் பார்த்து பதறி மற்றவீட்டுப் பெண்களை உதவிக்கு அழைத்து இவளை வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்த்தாள். ஈஷ்வருக்கும் போன் செய்து வரவழைத்தாள். இவன் என்னடாவென்றால் எதையும் புரிந்துகொள்ளாமல் பேசுகிறான். ஊருக்கு போகாவிடினும் இப்போதைக்கு இந்த இடத்தைவிட்டுப் போனால் போதுமென்று இருந்தது.

"நான் சத்தியமா சொல்றேங்க, என்னை ஊருக்கு அனுப்பாட்டியும் பரவாயில்ல, உங்க அக்கா வீட்டுக்காவது அனுப்பி வைங்க, இந்த நாத்தம் போனதும் வந்து அழைச்சிக்கோங்க!"

கண்ணீர் மல்க, கையெடுத்துக்கும்பிடுபவளைப் பார்த்து அவனுக்குள் எதுவோ செய்தது. இவ்வளவுதூரம் கெஞ்சுகிறாள் என்றால் நிச்சயம் அவளால் தாங்கமுடியாத நிலையாகத்தான் இருக்கக்கூடும்.

"சரி, அக்காவுக்கு போன் செஞ்சு கேட்டுகிட்டு இன்னைக்கே உன்னை அக்கா வீட்டில் கொண்டுபோய் விடறேன். நீ அமைதியா தூங்கு. நான் போய் லீவு போட்டுட்டு சாப்பிட ஏதாவது வாங்கி வரேன்."

அவள் தலைதடவி நெற்றியில் முத்தமிட்டான்.

சட்டையை அணிந்துகொண்டு கொல்லைப்புறம் வந்தான். சிறிய தாழ்வாரத்தைத் கடந்ததும், கழிவறையும், குளியலறையும் ஒன்றுடன் ஒன்று 'காய்' விட்டுக்கொண்டதுபோல் இடதும் வலதுமாய் தனித்தனியே இருந்தன. நடுவில் இருந்த இரும்புக்கதவைத் திறக்க, கொல்லையில் பிரமிளாவின் கைவண்ணத்தில் உருவான தோட்டம் வரவேற்றது.

சிலநாட்களாகவே பிரமிளா தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதை வாடிக்கிடந்த மல்லிகை,, கனகாம்பரச்செடிகள், தம் பூக்களைக் கண்ணீராய் சொரிந்து உணர்த்தின. ஒரு ஓரமாய் முருங்கை நின்றிருந்தது. முற்றி வெடித்து, மண்ணில் வீழ்ந்திருந்த முருங்கைவிதைகளை, காற்று பகடைக்காய்களென உருட்டி விளையாடிக்கொண்டிருந்தது.

சாரதா டீச்சர் வீட்டு மாமரம் பரந்து கிட்டத்தட்ட மூன்று வீட்டுக்கொல்லைகளுக்கு நிழல் பரப்பிக்கொண்டிருந்தது. மாமரத்தில் ஏகப்பட்ட காக்கைகள் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் பறந்தமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தன. ஒரு காக்கைக்கு அடிபட்டாலும் அத்தனையும் ஒன்றுகூடி பெரும் களேபரமே பண்ணிவிடுமே!

நினைத்துக்கொண்டவனாய் கொல்லைப் படலின் கதவைத் திறந்து வெளியில் வந்தான். எங்கேயாவது எலியோ, இல்லை பிரமிளா சொல்வதுபோல் பூனையோ, நாயோ செத்துக்கிடக்கிறதா என்று ஆராய்ந்தான்.

சாரதா டீச்சருக்கு கொல்லைப்பக்கத் தோட்டம் கிடையாது. கொல்லைக்கதவைத் திறந்தால் வெட்டவெளிதான். இதனாலேயே மாங்காய் திருடும் பையன்களுக்கு கொஞ்சம் கஷ்டம். ஒளிவதற்கு எந்த வசதியும் இருக்காது. யாராவது பார்த்துவிட்டு சத்தம் போடுவார்கள்.

டீச்சர் வீட்டு வாசலை அடைந்ததும் என்னவோ கண்ணை உறுத்த சட்டென்று நின்றான். கொல்லைக் கதவின் கீழ்ப்புறத்தில் உள்ளிருந்து ஏதோ திரவம் வடிந்துகொண்டிருக்க, அதைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.

என்ன இது? மாம்பழம் ஏதாவது மரத்திலிருந்து கனிந்து விழுந்து அதிலிருந்து சாறு வழிகிறதா? ஆனாலும் இத்தனைச் சாறு எப்படி வடியும்? மாம்பழ சீசனுமில்லையே? ஒரு வேளை இங்குதான் எலி செத்துக்கிடக்கிறதோ? டீச்சர் எப்படி கவனிக்காமல் போனார்கள்?

இன்று செவ்வாய்க்கிழமை! டீச்சர் வீட்டிலிருக்க மாட்டார்கள். மாலை வந்தபின்புதான் என்னவென்று பார்க்கவேண்டும். அப்பாடா! ஒருவழியாய் பிரமிளாவின் கஷ்டத்துக்கு தீர்வு கிடைத்துவிட்டது.

பிரமிளாவிடம் சொல்லப்போனான். அவள் அசந்து தூங்குவது புரிய, சத்தமிடாமல் கதவைத் தாழிட்டு, கிளம்பினான்.

(தொடரும்)

Akila.R.D
13-09-2010, 05:05 AM
அடடே கீதத்தின் அடுத்த தொடர்கதையா?...

படிக்க ஆவலாக காத்துள்ளோம்...

மதி
13-09-2010, 06:40 AM
அதென்ன திடீர் தொடர்..

படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள். மற்றவர்கள் மாதிரி பாதியில் நிறுத்தி வேலையை பார்க்க செல்லாமல் எப்படியாவது... சீக்கிரம் அடுத்த பாகத்தை போட்டுடுங்க.. ஹிஹி

கீதம்
13-09-2010, 07:24 AM
அடடே கீதத்தின் அடுத்த தொடர்கதையா?...

படிக்க ஆவலாக காத்துள்ளோம்...

முதல் வாசகியாய் வந்திருக்கும் உங்களுக்கு என் நன்றி, அகிலா. போனதொடர் போல் தினமொன்று சாத்தியம் இல்லை. இரண்டுநாட்களுக்கொரு அத்தியாயம் பதிக்க முயல்கிறேன்.

கீதம்
13-09-2010, 07:29 AM
அதென்ன திடீர் தொடர்..

படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள். மற்றவர்கள் மாதிரி பாதியில் நிறுத்தி வேலையை பார்க்க செல்லாமல் எப்படியாவது... சீக்கிரம் அடுத்த பாகத்தை போட்டுடுங்க.. ஹிஹி

திடீரென்று தோன்றியதால் திடீர் தொடர். முன்னறிவிப்பில்லாமல் வருவதாலும் சொல்லலாம்!

சிறுகதையொன்று வளர்ந்து தொடர்கதையாக விழைந்ததன் பலன் இது. :)

தொடரை முழுவீச்சில் முடிக்க முயற்சிக்கிறேன்.:icon_b:

பாரதி
13-09-2010, 11:00 AM
தொடர்கதைக்கே உரித்தாக திருப்பம் வரும் நேரத்தில் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்ததற்கு சபாஷ்.

Nivas.T
13-09-2010, 12:10 PM
திடீர் தொடர்

அருமை

திகில் தொடரா?

கலையரசி
13-09-2010, 01:29 PM
திடீர் தொடர் அதிலும் திகில் தொடர்! அடுதத பாகத்தை எதிர்பார்க்கும் ஆவலைத் தூண்டுமாறு அமைந்துள்ளதற்குப் பாராட்டுக்கள். தொடர்ந்து எழுது கீதம்!

அன்புரசிகன்
14-09-2010, 01:30 AM
அப்போ கொலை நடந்திருச்சா... சாதாரண கதையின் இறுதியில் அமையப்பெற்ற திகில் ஆர்வத்தை தூண்டுகிறது. தொடருங்கள் கீதம்.

கீதம்
14-09-2010, 01:42 AM
தொடர்கதைக்கே உரித்தாக திருப்பம் வரும் நேரத்தில் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்ததற்கு சபாஷ்.

ஊக்கத்துக்கு நன்றி, பாரதி அவர்களே.

கீதம்
14-09-2010, 01:44 AM
திடீர் தொடர்

அருமை

திகில் தொடரா?

நன்றி, நிவாஸ். என்ன மாதிரி கதை என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.:)

கீதம்
14-09-2010, 01:46 AM
திடீர் தொடர் அதிலும் திகில் தொடர்! அடுதத பாகத்தை எதிர்பார்க்கும் ஆவலைத் தூண்டுமாறு அமைந்துள்ளதற்குப் பாராட்டுக்கள். தொடர்ந்து எழுது கீதம்!

திகில் தொடர் என்று முடிவே செய்துவிட்டீர்களா?:frown:
பாராட்டுக்கு நன்றி, அக்கா.

கீதம்
14-09-2010, 01:48 AM
அப்போ கொலை நடந்திருச்சா... சாதாரண கதையின் இறுதியில் அமையப்பெற்ற திகில் ஆர்வத்தை தூண்டுகிறது. தொடருங்கள் கீதம்.


நான் சொல்லமாட்டேன்.:icon_ush:
தொடர்ந்துவந்து தெரிந்துகொள்ளுங்கள். :icon_b:

கீதம்
14-09-2010, 01:49 AM
(2)

இந்தவீட்டுக்கு ஈஷ்வரும் பிரமிளாவும் குடிவந்து ஆறுமாதங்களே ஆனாலும் அக்கம்பக்கத்தவர் அனைவரும் அவர்களிடம் சகஜமாகப் பழகுவது பெரும் வியப்பைத்தந்தது. அதிலும் டீச்சர் ஒரு தனி மனுஷி. இளவயதிலேயே கணவனை இழந்தவராம். அவருடைய ஒரே மகள் சென்னையில் கல்லூரி விரிவுரையாளராக இருக்கிறாள் என்றும் மாப்பிள்ளைக்கு தலைமைச் செயலகத்தில் ஏதோ முக்கிய பொறுப்பு என்றும் தெரியும்.

டீச்சரின் மகள், பத்துவருடங்களுக்குப் பின் கர்ப்பமானதில் டீச்சருக்கு தலைகால் புரியா சந்தோஷம். குழந்தையில்லை என்று தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார்களாம். இப்போது ஒன்றுக்கு இரண்டாக இரட்டைக் குழந்தைகள் கருவில். விஷயம் தெரிந்த அன்று கேசரி செய்து அக்கம்பக்கமெல்லாம் வழங்கினார்.

இயல்பாகவே டீச்சருக்கு உதாரகுணம். மாலை வேளைகளில் அக்கம்பக்கக் குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொண்டு படிக்கவைப்பதும், கதை, பாட்டு சொல்லுவதும், சமயங்களில் இரவு உணவையும் சாப்பிடவைத்து அனுப்புவதும் வாடிக்கைதான்.

இன்னும் ஆறுமாதங்களில் வி.ஆர். எஸ். வாங்கிக்கொண்டு மகளிடமே செல்லவிருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார். அவருடன் பழகிய அனைவருக்கும் அதில் வருத்தம் இருந்தாலும், வயதான காலத்தை மகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் கழிக்கவிருப்பதை எண்ணி ஆறுதல் அடைந்தனர்.

அந்தக் காலனிக்கே டீச்சரின்மேல் மிகுந்த மரியாதை. டீச்சரின் தோற்றத்தைப் பார்த்தாலே மரியாதை தன்னால் வரும். பள்ளிக்குக்குப் போகும்போது வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான நூல் புடவையை மிகவும் நேர்த்தியாக மடிப்புகள் மாறாமல் உடுத்தியிருப்பார். வீட்டிலிருந்தால் வெள்ளையில் சின்னச்சின்ன பூக்கள் போட்ட சிந்தெடிக் புடவை அணிந்திருப்பார்.

பாதிக்குமேல் நரைத்திருக்கும் தம் நெளி மயிரை கொத்தாகப் பிடித்து உச்சியில் ஒரு கொண்டை போட்டிருப்பார். அவரது உயரத்துக்கும், அதற்கேற்ற பருமனுக்கும் அது மிகவும் கம்பீரமாகவும், எடுப்பாகவும் இருக்கும். நெற்றியில் விபூதிக்கீற்று எப்பவும் பளிச்சிடும்.மூக்குக் கண்ணாடியும், கைக்கடிகாரமும் அவருக்குக் கவசகுண்டலம் மாதிரி. கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியும், வலது கையில் ஒரு மெல்லிய தங்க வளையலும் அணிந்திருப்பார். காதில் வெள்ளைக்கல் தோடு மின்னும்.

கண்களில் சாந்தமும், உதட்டில் புன்னகையும் எப்போதும் குடிகொண்டிருக்கும். சாரதா டீச்சரைப் போல் ஒரு அற்புத மனுஷியை சந்தித்தது தன் பாக்கியமே என்று ஈஷ்வர் நினைத்துக்கொண்டான். தாயைக் கண்டிராத அவனுக்கு அவரைப் பார்க்கும்போதெல்லாம் தன் தாயாகவே நினைக்கத் தோன்றும்.

ஈஷ்வர் தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தபோது டீச்சர் வீட்டு கேட்டில் சங்கிலி சுற்றப்பட்டு பூட்டு உட்புறம் பார்த்து தொங்கிக்கொண்டிருந்தது. இது ஒரு சங்கேதக் குறிப்பு. டீச்சர் வீட்டில் இருந்தாலும் இல்லையென்றாலும் வாசற் கதவு பூட்டப்பட்டே இருக்கும். ஆனால் பூட்டின் இருப்பு உள்ளேயா வெளியேயா என்பதைப் பொறுத்து டீச்சரின் இருப்பு, அதற்கு மாறாக இருக்கும் என்பது டீச்சரை அறிந்தவர்கள் அறிந்த விஷயம்.

டீச்சரிடம் பணப்புழக்கம் சற்று தாராளமாக இருக்கும். அவசரத்துக்கு அவரிடம் நம்பிக்கையுடன் போய் நிற்கலாம். எப்போதும் கைவசம் கணிசமான தொகை இருக்கும். பாதுகாப்பு கருதி வெளியில் போகும்போது வீட்டுக்குள் ஆளிருப்பதைப் போல் அப்படி ஒரு மாயையை உருவாக்கியிருப்பார்.

கடைவீதிக்குப் போய் காவேரி மெஸ்ஸில் சாப்பாடு வாங்கிக்கொண்டு திரும்பும்வழியில் சித்ராவின் அப்பா ரோட்டோரம் நடந்து போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தான்.

ஸ்கூட்டரை அவரருகில் நிறுத்தி, "சார், வீட்டுக்குதானே? வாங்க," என்றான்.

"என்னங்க, தம்பி, இன்னைக்கு வேலைக்குப் போகலையா?" அவன் தோள்களைப் பற்றியபடியே ஏறி அமர்ந்தார்.

"இல்ல சார், பிரமிளாவுக்கு உடம்பு சரியில்ல, ஒரே வாந்தி, மயக்கம். சமைக்க முடியல, அதான் சாப்பிட ஏதாவது வாங்கிவரலாம்னு வந்தேன்."

"என்ன தம்பி, அதுக்காகவா உடம்பு முடியாத பொண்ணை வீட்டில விட்டுட்டுஇவ்வளவு தூரம் கிளம்பி வந்தீங்க? நம்ம வீட்டில சொன்னா செஞ்சு தருவாங்களே ஒண்ணுக்கு மூணு பொம்பளைங்க இருக்கங்க"

"பரவாயில்ல சார், எத்தனை நாள் செய்யமுடியும்? அதுவுமில்லாம இன்னைக்கு சாயங்காலம் அவளைக் கொண்டுபோய் விராலிமலையில் இருக்கிற எங்க அக்கா வீட்டில விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். ரெண்டு நாளா நாறுது, நாறுதுன்னு ஒரே தொல்லை"

"தம்பி, உங்களுக்குத் தெரியலையா? மனுஷன் இருக்க முடியல, தம்பி, என்ன எழவுன்னே தெரியல. சில சமயம் கழிவுநீர் சாக்கட அடைச்சிகிட்டு வெளியில் வழிஞ்சு இம்சை பண்ணும். அப்படி எதுவும் தெரியல. நானாவது இப்படி காத்தாட கெளம்பி வந்திடறேன். வீட்டுப் பொம்பளங்க பாடுதான் கஷ்டம்."

"ஸாரி சார், எனக்கு அந்த அளவுக்கு ஸ்மெல் எதுவும் தெரியாது"

"கொடுத்துவச்ச மனுஷன்பா!"

டீச்சர் வீடு எட்டாம் எண் என்றால் ஒன்பதாம் எண் சித்ரா வீடு. அவர்களுக்கும் பிரச்சனை கடுமையாக இருக்கும் என்று நினைத்தான்.

"சார், டீச்சர் வீட்டிலதான் எதுவோ செத்துக்கெடக்குன்னு நினைக்கிறேன். அவங்க வீட்டு கொல்லப்பக்கம் ஒரே ஈ மயம். எதுக்கும் இன்னைக்கு சாயங்காலம் டீச்சர் வந்தவுடனே பாக்கச்சொல்லலாம்னு இருக்கேன்."

"தம்பி, உங்களுக்கு விஷயம் தெரியாதா? டீச்சர் ஊருக்குப் போய் மூணு நாளாவுது. அவங்க பொண்ணைப் பாக்க சென்னை போயிருக்காங்க. காலாண்டு லீவு முடிஞ்சுதான் வருவாங்க."

"அடக்கடவுளே! இப்ப என்ன பண்றது?"

ஈஷ்வர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்.

தொடரும்....

******************************************************************

அன்புரசிகன்
14-09-2010, 02:07 AM
அடடடா... டீச்சரின் வர்ணனையி்ல் அவரை கண்ணுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டீர்கள். சுற்றத்தாரின் மனதை வெள்ளை என்பதை அவர்களது உரையாடலால் தெரிவித்துள்ளீர்கள். தொடருங்கள். அடுத்து என்ன செய்யப்போறார் ஈஷ்வர்?

தாமரை
14-09-2010, 02:52 AM
ஒரு வேளை சித்தர் கோவில் திரியைப் படிச்சிட்டு குமட்டிக் குமட்டி யோசிச்சு கருவைப் பிடிச்சீங்களோ?

டீச்சர் யாரையோ போட்டுத்தள்ளிட்டார்னு தெரியுது. யாரையா இருக்கும்?

:confused::confused::confused:

கலையரசி
14-09-2010, 03:05 PM
ஒரு வேளை சித்தர் கோவில் திரியைப் படிச்சிட்டு குமட்டிக் குமட்டி யோசிச்சு கருவைப் பிடிச்சீங்களோ?

டீச்சர் யாரையோ போட்டுத்தள்ளிட்டார்னு தெரியுது. யாரையா இருக்கும்?

:confused::confused::confused:

டீச்சர் யாரையாவது போட்டுத் தள்ளினார்களா அல்லது அவரை யாராவது போட்டுத் தள்ளிவிட்டார்களா?

சிவா.ஜி
14-09-2010, 04:04 PM
திடீர்த் தொடர் திகிலா....திரில்லான்னு சொல்ல முடியாத மாதிரி இருக்கு. உங்களுக்கே உரித்தான சரளமான உரையாடல்கள்...பாத்திரப் படைப்புகள், வர்ணனைகள்ன்னு எடுத்ததுமே கதை டாப் கியர்ல போகுது.

கலையரசி மேடத்துக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் எனக்கும்...டீச்சரை யாராவது.....???

பார்ப்போம். அட்டகாசமா போகுது கதை. தொடருங்க தங்கையே...!!

govindh
14-09-2010, 07:00 PM
"ஒருநாள் யாரோ....."
திடீர் தொடர்- விறு விறுப்பாக அமைத்து விட்டீர்கள்...

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

கீதம்
15-09-2010, 05:03 AM
அடடடா... டீச்சரின் வர்ணனையி்ல் அவரை கண்ணுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டீர்கள். சுற்றத்தாரின் மனதை வெள்ளை என்பதை அவர்களது உரையாடலால் தெரிவித்துள்ளீர்கள். தொடருங்கள். அடுத்து என்ன செய்யப்போறார் ஈஷ்வர்?

பின் தொடர்வதற்கு நன்றி அன்புரசிகன்.

கீதம்
15-09-2010, 05:05 AM
ஒரு வேளை சித்தர் கோவில் திரியைப் படிச்சிட்டு குமட்டிக் குமட்டி யோசிச்சு கருவைப் பிடிச்சீங்களோ?

டீச்சர் யாரையோ போட்டுத்தள்ளிட்டார்னு தெரியுது. யாரையா இருக்கும்?

:confused::confused::confused:

குமட்டிக் குமட்டிக் கருவைப் பிடிச்சேன்கிறதுவரைக்கும் சரி. ஆனால் பிடிச்ச இடம் நீங்கள் சொன்ன இடமில்லை. அது வேறு.:icon_b:

யாரை என்பது அடுத்த அத்தியாயத்தில் தெரியவரும்.

கீதம்
15-09-2010, 05:07 AM
டீச்சர் யாரையாவது போட்டுத் தள்ளினார்களா அல்லது அவரை யாராவது போட்டுத் தள்ளிவிட்டார்களா?

அக்கா, கதையை முன்கூட்டியே ஊகிக்கக்கூடாது. அப்புறம் எப்படி எனக்கு எழுதவரும்?:lachen001:

கீதம்
15-09-2010, 05:11 AM
திடீர்த் தொடர் திகிலா....திரில்லான்னு சொல்ல முடியாத மாதிரி இருக்கு. உங்களுக்கே உரித்தான சரளமான உரையாடல்கள்...பாத்திரப் படைப்புகள், வர்ணனைகள்ன்னு எடுத்ததுமே கதை டாப் கியர்ல போகுது.

கலையரசி மேடத்துக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் எனக்கும்...டீச்சரை யாராவது.....???

பார்ப்போம். அட்டகாசமா போகுது கதை. தொடருங்க தங்கையே...!!

கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் தொடங்கியிருக்கேன். அதனால் சில இடங்களில் தடுமாறும் வாய்ப்பு உண்டு. வழிநடத்த உங்களைப்போன்றோர் உண்டு என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன், அண்ணா.

கீதம்
15-09-2010, 05:12 AM
"ஒருநாள் யாரோ....."
திடீர் தொடர்- விறு விறுப்பாக அமைத்து விட்டீர்கள்...

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தொடர்ந்து வருவதற்கு நன்றி, கோவிந்த்.

கீதம்
15-09-2010, 05:14 AM
(3)

டீச்சர் வீட்டில் இல்லை என்ற செய்தி அறிந்ததும் தவிப்பின் உச்சத்துக்குப் போனான், ஈஷ்வர். எப்படியாவது 'அதை' எடுத்துப் புதைத்துவிட்டால் பிரமிளாவை எங்கும் அனுப்பாமல் தன்னுடனேயே வைத்துக்கொள்ளலாம் என்றொரு யோசனை வைத்திருந்தான்.

"அடுத்தமாசம்தான் போறேன்னு சொல்லிட்டிருந்தாங்க."

"அப்படிதான் சொன்னாங்க. ஆனா பாருங்க, அன்னைக்கு என் சம்சாரத்துக்கிட்ட சொல்லிருக்காங்க, மனசு சரியில்ல, பொண்ண ஒரு எட்டு பாத்துட்டு வந்தா நல்லாயிருக்கும்னு."

"அப்படியா? அப்படின்னா....நானே மதிலேறிக்குதிச்சு என்னன்னு பாத்திடறேன். அவங்க போன் நம்பர் இருக்கா? எதுக்கும் அவங்ககிட்ட சொல்லிட்டு செஞ்சிடலாம்."

"வீட்டுல இருக்கு, தம்பி, தரேன்!"

சித்ராவின் வீட்டுமுன் ஸ்கூட்டரை நிறுத்த, அவர் இறங்கிக்கொண்டார்.

"வாங்க, தம்பி உள்ள வாங்க"

"யாருங்க?" கேள்வியுடன் வந்த சித்ராம்மா ஈஷ்வரைப் பார்த்ததும், முகத்தில் ஆசார்யம் மேலிட, "வாங்க, தம்பி, என்ன புதுக்காத்து உங்களை இந்தப்பக்கம் தள்ளியிருக்கு?"என்றாள்.

வீட்டுக்குள் நாலாபுறமும் ஊதுபத்தி புகைந்துகொண்டிருந்தது. நிச்சயமாய் ஏதோவொரு வாசனையை அவை பரப்பிக்கொண்டிருக்கவேண்டும். சித்ரா தையல் மிஷினில் என்னவோ தைத்துக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் தன் வேலையில் மூழ்கினாள்.என்ன செய்வதென்று புரியாமல் ஊதுபத்திகளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சித்ராவின் அப்பா, தன் டைரியில் டீச்சரின் நம்பரை தேடிக்கொண்டிருந்தார். சித்ராவின் எதிரில் அமர்ந்திருப்பதை ஈஷ்வர் தர்மசங்கடமாய் உணர்ந்து, கிளம்பினான்.

"சார், நீங்க தேடிவைங்க, நான் அப்புறமா வந்து வாங்கிக்கிறேன்"

"இருங்க, இருங்க, ரஞ்சனி, தம்பிக்கு குடிக்க எதாவது குடு!"

"அதெல்லாம் வேணாம் சார், நான் கெளம்பறேன்"

"இந்தாங்க, மோரு!"

பல நிறங்களில் கண்ணாடி வளையல்கள் குலுங்க, தம்ளரை நீட்டியவளை நிமிர்ந்து பார்க்காமலேயே வாங்கிக்கொண்டான். "தாங்க்ஸ்"

"தம்பி, இதுதான் என் மருமக ரஞ்சனி. என் மூத்தமகன் துபாய்ல இருக்கான்னு சொன்னேனே, அவன் பெண்டாட்டி. அதிகம் பாத்திருக்கமாட்டீங்க, தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருக்கும். அதிர்ந்து பேசாது, சாது!"

அதோடு அவர் நிறுத்தியிருக்கலாம், ஆனால் கூடவே,"எங்க சித்ரா மாதிரி கிடையாது" என்றார்.

ஈஷ்வருக்கு தர்மசங்கடமாகிவிட்டது. யாரோ ஒரு மூன்றாம் மனிதனுக்கு முன் மகளை மட்டம் தட்டிப் பேசுவதே தவறு. அதிலும் மருமகளுடன் ஒப்பிட்டுப் பேசினால், அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடுபடும்? நாளை அவன் முகத்தைப் பார்க்கநேரும்போதெல்லாம் அவமான உணர்வு எழுமே! என்ன தகப்பன் இவர்?

"சார், எங்க அப்பா இப்படி சொல்றாரேன்னு அவரைத் தப்பா நினைக்காதீங்க. எல்லாம் மருமகளுக்கு வக்கிற ஐஸ். எங்க சின்ன அண்ணனை நம்பமுடியாது. அவன் இப்பவே தனக்கு கல்யாணமாகிட்டா, எல்லாரும் வேறவீடு பாத்துட்டு போயிடுங்கன்னு நேராவே சொல்லிட்டான். நானும் போய்ட்டா, எங்க அம்மாவும் அப்பாவும் எங்க அண்ணி தயவினாலதானே காலந்தள்ளணும், அதான், இப்பயிருந்தே பேங்க்ல டெபாஸிட் பண்றமாதிரி பாராட்டுப்பத்தரம் வழங்கி, அவங்க நல்லெண்ணத்தைச் சம்பாதிச்சுக்கறாங்க"

தொடர்ச்சியாய்ப் பேசிய சித்ராவைக் கண்டு மலைத்தான். முன்பின் பழக்கமில்லாத ஒரு ஆணிடம் தன் குடும்பத்தைப் பற்றிப்பேசி குறைகூறுவாளா ஒரு பெண்? நல்ல குடும்பமடா சாமி என்று நினைத்துக்கொண்டே மோரைக் குடிக்கையில்,

"வாயாடிக் கழுத! வாயை மூடுடி!"

சித்ராம்மா மகளை அடக்குவதாய் நினைத்து அவர் பங்குக்கு தம் குடும்ப கெளரவத்தைக் குலைத்தார்.

"இந்தாங்க, தம்பி, டீச்சரோட போன் நம்பர்"

"எதுக்குப்பா?" சித்ரா குறுக்கிட, அவர் விவரம் சொல்ல, சித்ராம்மா பிடித்துக்கொண்டாள்.

"தம்பி, சீக்கிரம் பாருங்க, தம்பி, உங்களுக்குப் புண்ணியமாப்போவும். ரெண்டு நாளா ஒருவாய் சோறு திங்க முடியல, நாத்தம் கொடலப்பொரட்டுது. ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட் ஊதுவத்தி செலவாகுது."

ஈஷ்வருக்கு பிரமிளாவின் பேச்சின் தீவிரம் அப்போதுதான் புரிந்தது. அவன் அங்கிருந்தபடியே தன் மொபைல் மூலம் டீச்சரைத் தொடர்பு கொள்ள முயன்றான். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் விழிக்க, சித்ராப்பா துணிந்தவராய் பேசினார்.

"தம்பி, நம்ப சாரதா டீச்சர்தானே! ஒண்ணும் சொல்லமாட்டாங்க, எனக்கு அவங்களை இருவது வருஷமாத் தெரியும். ரொம்ப தங்கமான குணம். நான் சொல்லிக்கிறேன், நீங்க வாங்க."

அவர் கைலியில் மாறிக்கொண்டு, கடப்பாறை, மண்வெட்டி சகிதம் ஒரு முடிவுடன் கிளம்பிவிட்டார்.

"தம்பி, நீங்களும் ட்ரெஸ்ஸ மாத்திகிட்டு , கொல்லப்பக்கம் வாங்க, ஏ... பார்வதி, அயன் வண்டிகிட்ட ஜெகதீஸ் இருக்கானான்னு பாரு, இருந்தா அவனைக் கொஞ்சம் வரச்சொல்லு!"

"அவனக் காணும், எங்க போய்த் தொலைஞ்சானோ?"

வாசலுக்கு வந்து பார்த்த சித்ராம்மா சலித்துக்கொண்டாள்.

"ஆண்ட்டீ, யாரத்தேடுறீங்க, ஜெகதீஷையா?" எதிர்வீட்டு வேப்பமர நிழலில் கேரம் விளையாடிக்கொண்டிருந்த ராஜா கேட்டான்.

ராஜா, துவாக்குடி பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். இன்று லீவு போலும். லீவு விட்டால் இந்த வேப்பமரத்தடியில் கேரம்போர்டு விளையாடுவதுதான் இவனுக்கும் இவன் நண்பர்களுக்கும் வேலை. மடேர் மடேர் என்று சத்தமும், கலாட்டாவும் மனுஷியை மத்தியானத்தில் தூங்கவிடாது.

"ஆமாம்பா, டீச்சர் வீட்டுக்குள்ள எதுவோ செத்துக்கெடக்குதாம். டீச்சர் வேற ஊர்ல இல்ல. எடுத்துப் புதைக்கலாம்னு சித்ரா அப்பாவும் ஈஸ்வர் தம்பியும் போயிருக்காங்க, இவன் இருந்தா ஒத்தாசையா இருக்கும்னு பாக்கிறேன், ஆளக் காணலியே?"

"ஆண்ட்டீ, அவன் இப்பதான் சைக்கிளை எடுத்துகிட்டு சாப்பிடப் போனான். வேணும்னா நான் வரவா?"

"அருவறுப்பு படமாட்டல்ல? அப்படின்னா வா"

"டேய், நீங்களும் வரீங்களாடா?

"வாங்கடா, போய் ஹெல்ப் பண்ணிட்டு வந்திடுவோம்."

கேரம்போர்டை அநாதையாக்கிவிட்டு நால்வரும் எழுந்துசென்றனர். சித்ராவீட்டு வழியாக விடுவிடுவென்று கொல்லைப்புறம் சென்றனர். சென்றதும் ஒருவன், "என்னடா, பொணநாத்தம் அடிக்கிது?" என்றபடியே மூக்கைப் பொத்தினான்.

"டேய், சும்மா இருடா, ஏதாவது பீதியக் கெளப்பாத" ராஜா அடக்கினான்.

கொஞ்சநேரத்தில் டீச்சர்வீட்டு கொல்லைப்புறம் ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது. நாய் எதுவும் உள்ளே போயிருக்க வாய்ப்பில்லை. மரநாய் அல்லது பூனையாக இருக்கலாம் என்று பேசிக்கொண்டனர்.

ஒருதடவை மரநாய் ஒன்று எதிர்வரிசையில் பாலன் வீட்டுக்குள் புகுந்து, கழுவவைத்திருந்த சோற்றுதேக்ஸாவுக்குள் தலையைவிட்டு படாதபாடு பட்டதே! மாட்டிக்கொண்டதும் ஒரு இடத்தில் நிற்கவில்லை. மூர்க்கத்துடன் கண்மூடித்தனமாய் பாய ஆரம்பித்துவிட்டது. எங்கே கடித்துவிடப்போகிறதோ என்று எல்லாருக்கும் பயம். அது கண் தெரியாமல் ஒருநாள் முழுவதும் அங்குமிங்கும் முட்டி மோதி எல்லாவற்றையும் சேதப்படுத்தி ஒருவழியாய் ஓய்ந்தபின்புதான் அதைப்பிடித்து தேக்ஸாவை எடுக்க முடிந்தது. எடுத்ததும், விட்டால் போதுமென்று பிடித்ததே ஓட்டம்! இப்போதும் அதை நினைத்தால் சிரிப்புதான் வரும். அப்படி ஏதாவது மரநாய் வந்து மாட்டியிருக்கலாம்.

"மதில் சுவர்மேல ஏறணும்னா ஒரு ஸ்டூல் கொண்டுவாங்க," சித்ரா அப்பா கட்டளையிட ஸ்டூல் வந்தது.

"யாராவது ஏறி உள்ள போய் கதவுத் தாழ்ப்பாளைத் திறந்துவிடுங்க, எல்லாரும் உள்ளவந்து என்ன பண்றதுன்னு பாப்போம்"

"ஹரீஷ், நீ போறியாடா?"

"எனக்குப் பயமா இருக்குடா"

"நானே போறேன்" ஈஷ்வர் துணிந்து ஸ்டூலில் ஏறி மதிலின் மேல் கைகளை ஊன்றி எழும்பி மேலேறினான்.

உள்ளே பார்வையிடுவதற்குள் வெளியிலிருந்து,சித்ராப்பா கத்தினார்.

"என்ன தம்பி, ஏதாவது கெடக்கா?"

"ஐயோ......ழா.....ஆ.......ழா.......ழா....."

அதிர்ச்சியில் வாய்குழறி நின்ற ஈஷ்வரைப் பார்த்து எல்லோரும் திகைத்தனர்.

"என்ன தம்பி? என்னா இருக்கு?"

தடாலென்று அவரருகில் குதித்து சுருண்டு விழுந்தான், ஈஷ்வர். நிலைகுத்திய விழிகளுடன் பேயறந்ததைப் போல் கிடந்த அவனைக் கண்டு அனைவரும் திகிலில் உறைந்தனர்.

"ழார்....ழா.....ர்.......ழா.....ர்......ழீ.....ழ்ழர்.........ல்லாவ்வோஆழ்ழாம்ம்வ்வழ்ழோ....."

"இந்தக்காலத்துப் புள்ளங்களே இப்படிதான். கொஞ்சங்கூட தைரியமே கிடையாது"

அலுத்துக்கொண்டபடி சித்ராப்பா ,பின்னால் நின்ற இளைஞர்களைப் பார்க்க, ஏதோ விபரீதமென்று உணர்ந்தவர்களாய், அவர்கள் பயத்துடன் பின்வாங்கினர்.

*****************************************************************

மதி
15-09-2010, 06:05 AM
சரியான இடத்தில் நிறுத்தி இருக்கீங்க.... அப்படி என்ன தான் ஈஸ்வர் பார்த்தான்..?? தாங்க முடியாத ஆவலில்...

கண்மணி
15-09-2010, 06:17 AM
ழார் = சார்
ழீழ்ழர் = டீச்சர்
ல்லாவ்வோஆழ்ழாம்ம்வ்வழ்ழோ = எல்லாரும் வாங்க??

அப்ப டீச்சரைப் போட்டுத் தள்ளியாச்சி!!!

Akila.R.D
15-09-2010, 06:56 AM
திடீர் தொடர்னு போடறதுக்கு பதிலா மர்மத்தொடர்னு போட்டிருக்கலாம்....

தொடருங்கள்...

Nivas.T
15-09-2010, 08:05 AM
ஐயய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :torsten_violent-smi
பிரசர் எகுருதுங்கோ!!!!!!!!!!:Nixe_nixe02b:

சீக்கிரம் அடுத்தபாகத்த பதிச்சுடுங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!:huepfen024:
முடியல.......... முடியல..............
என்னால தாங்க முடியல:shutup::shutup::shutup::shutup::shutup:

Nivas.T
15-09-2010, 08:08 AM
ழார் = சார்
ழீழ்ழர் = டீச்சர்
ல்லாவ்வோஆழ்ழாம்ம்வ்வழ்ழோ = எல்லாரும் வாங்க??

அப்ப டீச்சரைப் போட்டுத் தள்ளியாச்சி!!!

ஆஹா என்ன ஒரு கண்டு பிடிப்பு :sport-smiley-018::icon_dance:
என்ன ஒரு விளக்கம்

ஆதவா
15-09-2010, 08:36 AM
கலக்கல் கதையோடு வந்திருக்கும் கீதம் அவர்களைப் பாராட்டுகிறேன்.
கதை ஆரம்பிக்கும்பொழுது குடியிருப்பு சகிதம் விவரித்தது நன்றாக இருக்கிறது. அதேபோல டீச்சரின் தோற்றம் குறித்தும் கற்பனைக்கு வரமுடிகிறது. இவையெல்லாம் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான்..

இப்போது வரும் நாவல்களில் உரையாடல்களுக்குப் பின்னோ அல்லது உரையாடல்களின் வழியோதான் விவரணைகள் இருக்கும். நீங்கள் பழைய நடைநுட்பத்தையே பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

ஈஷ்வருக்கு மூக்கில் கோளாறு என்றதும், அதை பொத்தாம்பொதுவாகச் சொல்லாமல் அது என்ன நோய் (ஈஷ்வருக்கு Anosmia ) என்று ஓரிரு வரிகளில் விளக்கியிருந்தால், நம்பகத்தன்மை ஏற்பட்டிருக்கும். கதைகளில் இந்தமாதிரி குறுஞ்சீவல்கள் ரசிப்புடன் இருக்கும் குறிப்பாக மர்மக் கதைகளில்
சாரதா டீச்சர் முதல்பாகத்தில் உரையாடியபிறகு (கிட்டத்தட்ட) இரண்டு நாட்கள் கழிந்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். டீச்சரும் ஊருக்குப் போய் இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. ஆக, கவனமாகவே கையாளுகிறீர்கள். இருப்பினும் அந்த உரையாடலில் அல்லது பிறகு ஏதோவொன்று குறைந்திருப்பதாக உணர்கிறேன்.

காற்று பகடைக்காய்களென உருட்டி விளையாடிக்கொண்டிருந்தது.
கேரம்போர்டை அநாதையாக்கினார்கள்

போன்ற அநாயச வரிகள் ரசிக்க வைக்கிறது!

தொடருங்கள் கீதம்...

சிவா.ஜி
15-09-2010, 08:56 AM
ஒரு காலனியை மிக அழகாக கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஓய்வில் கேரம் விளையாடும் விடலைப் பையன்கள், ஒருவருக்கொருவர் வாரிக்கொள்ளும் குடும்பம், ஒரு பொது வேலையை எல்லோருமாய் சேர்ந்து செய்வதற்கான முஸ்தீபுகள் என எல்லாமே கச்சிதம்.

டீச்சர்தானா ’அது’.....எப்படி...யார்...எப்போ....தெரிஞ்சிக்கிற ஆவலை ஏற்படுத்திட்டீங்க. அசத்தல். தொடருங்க கீதம்.

govindh
15-09-2010, 09:37 AM
ழார் = சார்
ழீழ்ழர் = டீச்சர்
ல்லாவ்வோஆழ்ழாம்ம்வ்வழ்ழோ = எல்லாரும் வாங்க??

அப்ப டீச்சரைப் போட்டுத் தள்ளியாச்சி!!!

விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி.

பாரதி
15-09-2010, 01:04 PM
தொடர்ந்து மர்மம் என்ன என்பதை அறியும் ஆவலை ஏற்படுத்தும் வகையில் கதையை கொண்டு செல்வதற்கு பாராட்டு.

இருப்பினும் இரண்டு மூன்று தினங்களாக அவ்வளவு சிரமத்துடன் இருந்த அனைவரும் இவ்வளவு பொறுமைசாலிகளாக இருப்பார்களா என்ற சிறிய ஐயமும் கூடவே வருகிறது.

தொடருங்கள். மர்மம் விலகும் வரை படிக்காமல் விடப்போவதில்லை.:lachen001:

கீதம்
15-09-2010, 10:31 PM
சரியான இடத்தில் நிறுத்தி இருக்கீங்க.... அப்படி என்ன தான் ஈஸ்வர் பார்த்தான்..?? தாங்க முடியாத ஆவலில்...

உன்னை தற்கொலை செய்யவான்னு பெரிய பெரிய பிராஜக்ட் பண்ற உங்களுக்குத் தெரியாதா ஈஷ்வர் என்ன பார்த்தான் என்பது? இருந்தாலும் எழுதப்பழகும் எனக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பின்னூட்டமிடும் உங்களுக்கு நன்றி, மதி.

கீதம்
15-09-2010, 10:33 PM
ழார் = சார்
ழீழ்ழர் = டீச்சர்
ல்லாவ்வோஆழ்ழாம்ம்வ்வழ்ழோ = எல்லாரும் வாங்க??

அப்ப டீச்சரைப் போட்டுத் தள்ளியாச்சி!!!

பாருங்க, உங்களுக்குப் புரிஞ்சிடுச்சி. இந்த சித்ராப்பா ஒண்ணுமே புரியாம நிக்கிறாரு!

அதிர்ச்சியிலும், பதற்றத்திலும் வாய் குழறி நிற்பவனின் உளறல்களின் மொழிபெயர்ப்புக்கு நன்றி, கண்மணி.

கீதம்
15-09-2010, 10:37 PM
திடீர் தொடர்னு போடறதுக்கு பதிலா மர்மத்தொடர்னு போட்டிருக்கலாம்....

தொடருங்கள்...

மர்மம் எதுவும் கிடையாது, அகிலா. படிச்சிட்டே வாங்க, உங்களுக்கே புரியும்.

கீதம்
15-09-2010, 10:39 PM
ஐயய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :torsten_violent-smi
பிரசர் எகுருதுங்கோ!!!!!!!!!!:Nixe_nixe02b:

சீக்கிரம் அடுத்தபாகத்த பதிச்சுடுங்கோ!!!!!!!!!!!!!!!!!!!!:huepfen024:
முடியல.......... முடியல..............
என்னால தாங்க முடியல:shutup::shutup::shutup::shutup::shutup:

ஐயையோ, நீங்க என்ன வெடிகுண்டெல்லாம் வச்சிருக்கீங்க? அப்படியெல்லாம் பெரிய அளவுக்கு போகமாட்டேன், நிவாஸ். ரிலாக்ஸா இருங்க, நாளை அடுத்த அத்தியாயம் பதிக்கிறேன்.

கீதம்
15-09-2010, 10:43 PM
கலக்கல் கதையோடு வந்திருக்கும் கீதம் அவர்களைப் பாராட்டுகிறேன்.
கதை ஆரம்பிக்கும்பொழுது குடியிருப்பு சகிதம் விவரித்தது நன்றாக இருக்கிறது. அதேபோல டீச்சரின் தோற்றம் குறித்தும் கற்பனைக்கு வரமுடிகிறது. இவையெல்லாம் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான்..

இப்போது வரும் நாவல்களில் உரையாடல்களுக்குப் பின்னோ அல்லது உரையாடல்களின் வழியோதான் விவரணைகள் இருக்கும். நீங்கள் பழைய நடைநுட்பத்தையே பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

ஈஷ்வருக்கு மூக்கில் கோளாறு என்றதும், அதை பொத்தாம்பொதுவாகச் சொல்லாமல் அது என்ன நோய் (ஈஷ்வருக்கு Anosmia ) என்று ஓரிரு வரிகளில் விளக்கியிருந்தால், நம்பகத்தன்மை ஏற்பட்டிருக்கும். கதைகளில் இந்தமாதிரி குறுஞ்சீவல்கள் ரசிப்புடன் இருக்கும் குறிப்பாக மர்மக் கதைகளில்
சாரதா டீச்சர் முதல்பாகத்தில் உரையாடியபிறகு (கிட்டத்தட்ட) இரண்டு நாட்கள் கழிந்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். டீச்சரும் ஊருக்குப் போய் இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. ஆக, கவனமாகவே கையாளுகிறீர்கள். இருப்பினும் அந்த உரையாடலில் அல்லது பிறகு ஏதோவொன்று குறைந்திருப்பதாக உணர்கிறேன்.

காற்று பகடைக்காய்களென உருட்டி விளையாடிக்கொண்டிருந்தது.
கேரம்போர்டை அநாதையாக்கினார்கள்

போன்ற அநாயச வரிகள் ரசிக்க வைக்கிறது!

தொடருங்கள் கீதம்...

இந்த மாதிரி முயற்சி எனக்குப் புதுசு, ஆதவா. அதனால் ஒன்றல்ல, பல குறைகள் இருக்கும். அவ்வப்போது சுட்டிக்காட்டினால் என்னால் விளங்கிக்கொள்ளமுடியும்.

மூக்கின் நுகரும் தன்மை பாதிக்கப்பட்டிருப்பது ஒருவகை நோய் என்பதை நீங்கள் சொல்லிதான் புரிந்துகொண்டேன். எனக்குத் தெரிந்த சிலருக்கு இப்படி இருப்பதால் இயல்பாகவே இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

விமர்சனப் பின்னூட்டத்துக்கு நன்றி, ஆதவா.

கீதம்
15-09-2010, 10:45 PM
ஒரு காலனியை மிக அழகாக கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஓய்வில் கேரம் விளையாடும் விடலைப் பையன்கள், ஒருவருக்கொருவர் வாரிக்கொள்ளும் குடும்பம், ஒரு பொது வேலையை எல்லோருமாய் சேர்ந்து செய்வதற்கான முஸ்தீபுகள் என எல்லாமே கச்சிதம்.

டீச்சர்தானா ’அது’.....எப்படி...யார்...எப்போ....தெரிஞ்சிக்கிற ஆவலை ஏற்படுத்திட்டீங்க. அசத்தல். தொடருங்க கீதம்.

குடியிருப்புவாசிகளின் பார்வையிலேயே கதை நகர்த்தப்படுவதற்கான முன்னோட்டம்தான் அந்த வர்ணனைகள். தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி, அண்ணா.

கீதம்
15-09-2010, 10:49 PM
தொடர்ந்து மர்மம் என்ன என்பதை அறியும் ஆவலை ஏற்படுத்தும் வகையில் கதையை கொண்டு செல்வதற்கு பாராட்டு.

இருப்பினும் இரண்டு மூன்று தினங்களாக அவ்வளவு சிரமத்துடன் இருந்த அனைவரும் இவ்வளவு பொறுமைசாலிகளாக இருப்பார்களா என்ற சிறிய ஐயமும் கூடவே வருகிறது.

தொடருங்கள். மர்மம் விலகும் வரை படிக்காமல் விடப்போவதில்லை.:lachen001:

நான் பெரும்பாலும் ஏதாவதொரு உண்மைச் சம்பவத்தை மையப்புள்ளியாகக் கொண்டு கதை பின்னுவேன் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இக்கதையை எழுதத் தூண்டிய அந்த நிகழ்வின் விவரத்தை முடிவில் சொல்கிறேன். பின்னூட்டத்துக்கு நன்றி, பாரதி அவர்களே.

கண்மணி
16-09-2010, 03:09 AM
சாரதா டீச்சருக்கு கொல்லைப்பக்கத் தோட்டம் கிடையாது. கொல்லைக்கதவைத் திறந்தால் வெட்டவெளிதான். இதனாலேயே மாங்காய் திருடும் பையன்களுக்கு கொஞ்சம் கஷ்டம். ஒளிவதற்கு எந்த வசதியும் இருக்காது. யாராவது பார்த்துவிட்டு சத்தம் போடுவார்கள்.

டீச்சர் வீட்டு வாசலை அடைந்ததும் என்னவோ கண்ணை உறுத்த சட்டென்று நின்றான். கொல்லைக் கதவின் கீழ்ப்புறத்தில் உள்ளிருந்து ஏதோ திரவம் வடிந்துகொண்டிருக்க, அதைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.
(3)


"அப்படியா? அப்படின்னா....நானே மதிலேறிக்குதிச்சு என்னன்னு பாத்திடறேன். அவங்க போன் நம்பர் இருக்கா? எதுக்கும் அவங்ககிட்ட சொல்லிட்டு செஞ்சிடலாம்."

"மதில் சுவர்மேல ஏறணும்னா ஒரு ஸ்டூல் கொண்டுவாங்க," சித்ரா அப்பா கட்டளையிட ஸ்டூல் வந்தது.

"யாராவது ஏறி உள்ள போய் கதவுத் தாழ்ப்பாளைத் திறந்துவிடுங்க, எல்லாரும் உள்ளவந்து என்ன பண்றதுன்னு பாப்போம்"

"ஹரீஷ், நீ போறியாடா?"

"எனக்குப் பயமா இருக்குடா"

"நானே போறேன்" ஈஷ்வர் துணிந்து ஸ்டூலில் ஏறி மதிலின் மேல் கைகளை ஊன்றி எழும்பி மேலேறினான்.

உள்ளே பார்வையிடுவதற்குள் வெளியிலிருந்து,சித்ராப்பா கத்தினார்.

"என்ன தம்பி, ஏதாவது கெடக்கா?"

"ஐயோ......ழா.....ஆ.......ழா.......ழா....."

அதிர்ச்சியில் வாய்குழறி நின்ற ஈஷ்வரைப் பார்த்து எல்லோரும் திகைத்தனர்.

*

கொஞ்சம் இடறுகிற மாதிரி தெரியுதே அக்கா, சரியா புரிஞ்சிக்க முடியலையே!!!

கீதம்
16-09-2010, 06:16 AM
கொஞ்சம் இடறுகிற மாதிரி தெரியுதே அக்கா, சரியா புரிஞ்சிக்க முடியலையே!!!

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பம் நியாயமானதுதான், கண்மணி. ரயில்வே குடியிருப்புகள் பற்றி அறிந்தவர்களுக்கு இது புரியும்.

திருச்சி பொன்மலைப் பகுதியில் ரயில்வே பணிமனை உள்ளது. அதன் ஊழியர்களுக்காக ஏழு வகையான குடியிருப்புகள் உள்ளன. அதாவது ஊழியர்களின் வருமான அளவீட்டைப் பொறுத்து இத்தகைய வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கும். இவற்றில் ஒருவகைக் குடியிருப்பைப் பற்றிதான் குறிப்பிட்டுள்ளேன்.

நான் குறிப்பிட்டிருக்கும் குடியிருப்பைப் பொறுத்தவரை,

ஒரு வீடு என்பது இரண்டு அறைகளையும், ஒரு அடுப்படியும் கொண்டிருக்கும். அடுப்படிக்குப் பிறகு கொல்லைப்புறமும் (வாசலில் இருப்பதைப் போல்) ஒரு சிறிய வராந்தா இருக்கும். எல்லா வீடுகளிலும் இந்த வராந்தாவுக்கு மரத்தாலான fencing போடப்பட்டிருக்கும். அந்த fencing ஐத் திறந்து வெளியில் வந்தால் பத்தடி தூரத்தில் கொல்லை மதிற்சுவர். இந்தப் பத்தடிக்குள்தான் டீச்சர் வீட்டில் மாமரம் உள்ளது.

குடியிருப்பின் எல்லாக்கதவுகளும் முழுக்க முழுக்க கனத்த இரும்பினால் ஆனவை. இத்தகைய கதவுதான் கொல்லை மதிலில் பொருத்தப்பட்டிருக்கும். உள்ளே இருந்து வெளியில் பார்க்கமுடியாது. வெளியே இருந்து உள்ளே பார்க்கவும் முடியாது. சற்று உயரமான அந்த மதில் சுவர் வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரே மாதிரியான பன்னிரண்டு இரும்புக்கதவுகளைத் தாங்கி எது யார் வீடு என்பதை சட்டெனப் புரிந்துகொள்ளமுடியாமல் குழப்பமுண்டாக்கும்.

மதிலை ஒட்டி உட்புறம் குளியலறையும்,கழிவறையும் இடதும் வலதுமாக இருக்கும். அதாவது அந்தப்பக்கத்து வீட்டுக் குளியலறையுடன் இணைந்து நம் வீட்டுக் குளியலறையும், இந்தப் பக்கத்துவீட்டு கழிவறைச்சுவருடன் இணைந்து நம் கழிவறையும் இருக்கும். வீடுகள் reciprocal ஆக அமைந்திருப்பதால் இப்படி இருக்கும்.

பின்பக்கக் கதவோடு வீட்டின் எல்லை முடிந்துவிடும். சிலர் அதற்குப் பின்னாலும் தோட்டமிட்டு வளர்ப்பர், பிரமிளாவைப்போல்!

என்னால் முடிந்தவரை விளக்கியிருக்கிறேன். இப்போது ஓரளவு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இன்னும் தெளிவாகவில்லையெனில் இனி வரவிருக்கும் அத்தியாயங்கள் உதவும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை! என்ன சொல்றீங்க?

கீதம்
16-09-2010, 06:18 AM
(4)

ஈஷ்வருக்கு குளிர்ஜுரம் கண்டுவிட்டிருந்தது. அவன் ஜுரவேகத்தில் அனத்திக்கொண்டிருந்தான். அவனால் தான் பார்த்த எதையும் நம்பமுடியவில்லை. முகம் கழுத்து எங்கும் காக்கைகளால் கன்னாபின்னாவென்று கொத்திக் குதறப்பட்டு, கருவிழிப்பந்துகள் வெளியில் விழுந்துகிடந்த, நொலநொலத்து, புழுபுழுத்து, இரத்தமும், ஊணீரும் வடிந்து, 'கொல்'லென்று ஈக்கள் மொய்த்துக்கிடந்த அந்த உடலைப் பார்த்தநொடியே பாதி உயிர் போய்விட்டது.

நினைக்க நினைக்க அந்தக் கோர உருவம் மனக்கண்ணில் மீண்டும் விரிந்து இம்சித்தது. அடிவயிற்றைப் பிரட்ட, மீண்டுமொருமுறை வாந்தியெடுக்க தலையை உயர்த்தியபோது, பிரமிளா அருகில் வைத்திருந்த பேசினை அவன்முன் நீட்டினாள்.

விஷயம் கேள்விப்பட்டு பாக்கியமும் வந்துவிட்டாள். அவள் தம்பியின் அருகிலேயே இருந்து, நடுங்கிக்கொண்டிருக்கும் அவனை அணைத்து சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள். பிரமிளா தன் வேதனைகளை மறந்து ஈஷ்வருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

தலைவலி என்றாலும் ஊரைக்கூட்டும் பிரமிளா உறுதியாக நிற்பதையும், ஈஷ்வர் இப்படி துவைத்துப்போடப்பட்ட கந்தலென இருப்பதையும் பார்த்து பாக்கியம் வியந்தாள். அவனை மன உறுதியுடன் வளர்க்காதது தன் தவறு என்பதுபோல் குற்ற உணர்வில் தவித்தாள்.

"பிரமிளா, சாப்பிட்டியாம்மா?"

"இல்ல, அத்தாச்சி, நீங்களும் வாங்க, எவ்வளவு நேரம் தான் அவர் பக்கத்திலயே உக்காந்துகிட்டிருப்பீங்க, வாங்க, அவர்தான் தூங்குறாரில்ல."

"தூக்கத்திலகூட தூக்கித் தூக்கிப் போடுதேம்மா! யாராவது பக்கத்தில இருந்தா நல்லதுன்னு தோணுது, பாரு, ஏதாவது பினாத்திகிட்டே இருக்கான் பாரு"

பிரக்ஞையற்றுப் புலம்பும் தம்பியின் நிலையைக் கண்டு கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

"அத்தாச்சி, நீங்க வந்தது எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு, தெரியுமா? இல்லைன்னா...எப்படி தனியா இவரை சமாளிச்சிருப்பேன்னு தெரியல."

"என்ன பண்றது? எல்லாம் நேரம் தான். நீ வாயும் வயிறுமா இருக்கும்போது இப்படி ஆயிடுச்சு பாரு, நான் உன்னப்பத்திதான் கவலப்பட்டேன், இவன் தாங்கிக்குவான்னு நெனச்சேன், எல்லாம் தலைகீழா நடக்குது ." கவலையோடு சொன்ன பாக்கியம் மேலும் சொன்னாள்,

"கூடிய சீக்கிரம் வீட்டை மாத்த ஏற்பாடு பண்ணனும்"

"அது இப்ப முடியாதாம், அத்தாச்சி, விசாரணை முடியறவரைக்கும் ஒருத்தரும் நகரக்கூடாதாம்."

"என்னமோ, போ! என்கூடயாவது உங்க ரெண்டுபேரையும் அழைச்சிட்டுப் போய் வச்சிக்கலாம்னு பாத்தேன். ஆத்தி, ராத்திரியில பாத்ரூம் போவ எனக்கே பயமா இருக்கே, இவனும் ஆபிஸ் போய்ட்டான்னா நீ எப்படி தனியா இருப்பே?"

"எனக்கொண்ணும் பயம் இல்ல, அத்தாச்சி, எனக்கு இந்த ஆவி, பேய் இதில எல்லாம் நம்பிக்கையில்ல."

"ஆத்தி, அழுத்தக்காரிதான். இருந்தாலும், விசாரணை முடிஞ்ச கையோட வேறவீடு பாக்கிறதுதான் நல்லது. என்ன?"

"சரி, அத்தாச்சி" இருவரும் தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர்.

ஈஷ்வர் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். கனவில் டீச்சர் வந்தார். "என் நிலையைப் பாத்தியாப்பா, ஈஷ்வர்?" என்று கண்ணீர் விட்டார். திடீரென கொடூரமாய் நகைத்தபடியே, கொஞ்சங்கொஞ்சமாய் அவர் உருமாறத்தொடங்கினார்.

"நீதானே என்னைக் கொன்னே......? நீதானே என்னைக் கொன்னே......? நீதானேடா அது......?"
அடித்தொண்டையில் கர்ஜித்துக்கொண்டு, பிதுங்கிய விழிகளுடனும், துருத்திய பற்களுடனும், பிய்ந்து தொங்கும் சதைகளுடனும் தன் அழுகிய கைவிரல்களைக்கொண்டு அவன் குரல்வளையை நெறிக்கத் தொடங்கினார். மூச்சுமுட்டி, கண்கள் வெளித்தள்ளப்படும் நிலைக்கு வந்த ஈஷ்வர், பலங்கொண்டமட்டும் அவர் கைகளை விலக்கித் தன்னை விடுவித்துக்கொண்டு, திக்கித்திணறிக் கத்தினான்.

"ஐயையோ........நான் இல்ல......நான் இல்ல....... டீச்சர்...... அது நானில்ல...... என்ன விட்டுடுங்க......என்....ன.... விட்...ட்....டு.....".
கத்திக்கொண்டே கட்டிலிலிருந்து சரிந்து விழுந்தான்.

பாக்கியமும், பிரமிளாவும் அப்படியே ஓடிச்சென்று அவனைத் தாங்கிப் பிடித்தனர். அவனை எழுப்பி நேராக படுக்கவைத்ததும், தண்ணீர் எடுத்துக்கொடுத்தாள் பிரமிளா.

ஈஷ்வருக்கு உடல் முழுவதும் வியர்த்திருந்தது. போர்த்தியிருந்த போர்வையை விலக்கிய பாக்கியம் மின்விசிறியைச் சுழலவிட்டாள். அவனுடைய நெற்றியில் தன் புறங்கையை வைத்துப் பார்த்துவிட்டு காய்ச்சல் விட்டிருப்பதை உறுதி செய்துகொண்டாள்.

"ஈஷ்வர், கண்ணா.... ஏண்டா இப்படி கிடந்து அல்லாடறே? தைரியமா இருப்பா.... ஒண்ணும் ஆகாது. நீ ஒண்ணும் செய்யல... சரியா? எழுந்து கொஞ்சம் காலாற நடப்பா.... படுத்தே கெடந்தா இப்படி ஏதாவது சிந்தனை வந்துகிட்டேதான் இருக்கும்"

"ஆமாங்க, வாங்க, கொஞ்சநேரம் டி.வி. பாருங்க. கஞ்சி தரேன், குடிச்சிட்டு மாத்திர போட்டுக்கங்க."

ஈஷ்வர் அசைந்துகொடுக்கவில்லை. அவன் கண்களைச் சிமிட்டாமல் மோட்டுவளையையே பார்த்தவண்ணம் படுத்திருந்தான். பாக்கியம் அவன் கைகளைப் பற்றி இதமாக தடவிக்கொடுத்தாள். பிரமிளா கவலை பொங்கும் கண்களுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சற்று நேரம் கழித்து ஈஷ்வர் எழ முயற்சி செய்யவும், இருவரும் அவனுக்கு கை கொடுத்து உதவினர்.

"அக்கா.... பாத்ரூம் போகணும்"

"வா..." அவனை அழைத்துக்கொண்டு கொல்லைப்புறம் போக, ஈஷ்வர் அண்ணாந்து பக்கத்து வீட்டு மாமரத்தைப் பார்த்தான். பாக்கியம் அவன் பார்வையைத் தடுக்க முடியாமல் தவித்தாள்.

"அக்கா.... இங்கதான்க்கா..... இந்த இடத்திலதான்க்கா... "

அவன் நடுங்கிக்கொண்டே, தான் நின்றுகொண்டிருக்கும் இடத்தைக் கால்களால் தட்டிக்காட்டினான்.

"அதையெல்லாம் நினைக்காதன்னு சொன்னேன். நான் இங்க நிக்கிறேன், சீக்கிரம் போய்ட்டு வா!"

பாக்கியம் உள்ளூற ஏற்பட்ட உதறலை வெளிக்காட்டாமல் சொன்னாள். ஈஷ்வர் உள்ளே சென்று கதவை மூடியதும் தனியே நிற்க அவளுக்குப் பயமாக இருந்தது. ஆனாலும் பிரமிளாவின் துணிச்சலை எண்ணி, 'சின்னப்பெண், அவளே இத்தனை தைரியமாய் இருக்கும்போது தானும் தம்பியும் கோழைகளாய் இருப்பது நகைப்புக்குரிய செய்தியாகிவிடும்' என்று பயந்தவளாய் கண்களை மூடிக்கொண்டு ஈஷ்வருக்காக காத்திருந்தாள்.

"அத்தாச்சி...... மறுபடியும் விசாரிக்க வந்திருக்காங்களாம், நம்பவீட்டுக்கும் வருவாங்கன்னு நினைக்கிறேன்." பிரமிளா ரகசியம்போல் சொல்ல, பாக்கியமும் தணிந்த குரலில் அவளிடம் சொன்னாள்.

"பிரமிளா, நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும், என்கிட்ட சொன்னது என்னோடவே இருக்கட்டும், அவங்ககிட்ட எதுவும் உளறிவச்சிடாதே"

"சரி அத்தாச்சி"

பிரமிளா போனதும் பாக்கியம் வேதனையுடன் அலுத்துக்கொண்டாள்.

"போன மகராசி போய்ச்சேர்ந்துட்டா...., இருக்கிறவங்கள இவனுங்க போட்டு வதைக்கிறானுங்க."

*******************************************************

அன்புரசிகன்
16-09-2010, 06:40 AM
பாகம் 3ன் முடிவிற்கும் 4 இன் ஆரம்பத்துக்கும் ஏதோ பெரிய இடைவெளி இருப்பதாக தோன்றுகிறது. மற்றப்படி கதை அட்டகாசமாக போகிறது. அது என்ன விடையம் மறைக்க எத்தெனிக்கிறார்கள் என்பதில் தற்போதய சஸ்பென்ஸ். தொடருங்கள் கீதம்.

கண்மணி
16-09-2010, 09:56 AM
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பம் நியாயமானதுதான், கண்மணி. ரயில்வே குடியிருப்புகள் பற்றி அறிந்தவர்களுக்கு இது புரியும்.


என்னால் முடிந்தவரை விளக்கியிருக்கிறேன். இப்போது ஓரளவு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இன்னும் தெளிவாகவில்லையெனில் இனி வரவிருக்கும் அத்தியாயங்கள் உதவும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை! என்ன சொல்றீங்க?

இப்படி விளக்கமாச் சொன்னதும் எனக்குப் புரிஞ்சிடுச்சி.. மதி சுவர் உயரம் 6 அடி.. கொல்லைக் கதவுன்னா, காம்பவுண்ட் கேட்.வீட்டுக் கதவு இல்லை. காம்பவுண்ட் கேட்னா. கிரில் கேட் இல்லை..இரும்பினாலான முழுசும் மறைக்கும் கேட் .. இப்படிச் சில விஷயங்களை நாம யூகிக்க முடியாது இல்லையா?

ரீஜண்டா 20 வருஷத்துக்கு முன்னால என் மனைவியை நான் தான் கொன்னேன்.. ஆவியா வந்து என்னை பயமுறுத்துறா என ஒரு கணவன் விஜய் டி.வி.ல குத்தத்தை ஒத்துகிட்டத வந்துச்சே... :icon_b:

govindh
16-09-2010, 10:26 AM
"பிரமிளா, நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும், என்கிட்ட சொன்னது என்னோடவே இருக்கட்டும், அவங்ககிட்ட எதுவும் உளறிவச்சிடாதே" -

...'தயவு செய்து எங்களிடம் மட்டும் சீக்கிரம் சொல்லிடுங்க.......'

மதி
16-09-2010, 01:48 PM
மதி சுவர் உயரம் 6 அடி.. :icon_b:
ஆனாலும் இப்படி நானும் சுவரும் ஒன்னுன்னு சொல்லிட்டீங்களே...!!!:icon_rollout::icon_rollout::icon_rollout:

தாமரை
16-09-2010, 01:57 PM
ஆனாலும் இப்படி நானும் சுவரும் ஒன்னுன்னு சொல்லிட்டீங்களே...!!!:icon_rollout::icon_rollout::icon_rollout:

ம்தி, சுவர் உயரம் - 6 அடி என்று உன் உயரத்தைச் சூசகமாச் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

அதில பாரு மதி.. சுவத்தில எத்தனை சினிமா போஸ்டர் ஒட்டினாலும் சுவர் சினிமா பாக்கப் போகாது..

அதே மாதிரி எத்தனை உருகி உருகி காதல் கதை எழுதினாலும்... மதி காதலிக்க மாட்டான். :D:D:D:D

சரியாத்தான் சொல்லியிருக்காங்க.. போல

மதி உயரமான சுவர்னு சொல்லி இருக்காங்கன்னு பெருமைப் பட்டுக்க வேண்டியதுதான். குட்டிச் சுவர்னு சொல்லலியே!!

Nivas.T
16-09-2010, 02:13 PM
மதி உயரமான சுவர்னு சொல்லி இருக்காங்கன்னு பெருமைப் பட்டுக்க வேண்டியதுதான். குட்டிச் சுவர்னு சொல்லலியே!!

:D:D:D:D:D:D

மதி
16-09-2010, 02:16 PM
ம்தி, சுவர் உயரம் - 6 அடி என்று உன் உயரத்தைச் சூசகமாச் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

அதில பாரு மதி.. சுவத்தில எத்தனை சினிமா போஸ்டர் ஒட்டினாலும் சுவர் சினிமா பாக்கப் போகாது..

அதே மாதிரி எத்தனை உருகி உருகி காதல் கதை எழுதினாலும்... மதி காதலிக்க மாட்டான். :D:D:D:D

சரியாத்தான் சொல்லியிருக்காங்க.. போல

மதி உயரமான சுவர்னு சொல்லி இருக்காங்கன்னு பெருமைப் பட்டுக்க வேண்டியதுதான். குட்டிச் சுவர்னு சொல்லலியே!!
ஹிஹி.. அதனால தான் கதையா எழுதறோம்.. அதுக்கு ஆள் இருந்தா... :icon_b:

சிவா.ஜி
16-09-2010, 02:58 PM
ஈஷ்வரோட உளறலுக்குப் பிறகு என்னவோ நடந்திருக்கு....அதுலதான் இருக்கு மர்மம். இவ்ளோ பயந்தாங்கொள்ளியாவா இருப்பான் இந்த ஈஷ்வர். பிரமிளாவே பரவால்ல போலருக்கு.

நல்லா கொண்டு போறீங்க...தொடருங்க தங்கையே.

சிவா.ஜி
16-09-2010, 03:00 PM
அதில பாரு மதி.. சுவத்தில எத்தனை சினிமா போஸ்டர் ஒட்டினாலும் சுவர் சினிமா பாக்கப் போகாது..

அதே மாதிரி எத்தனை உருகி உருகி காதல் கதை எழுதினாலும்... மதி காதலிக்க மாட்டான். :D:D:D:D

சரியாத்தான் சொல்லியிருக்காங்க.. போலஇது சூப்பரு............!!!!!:icon_b: :D

கலையரசி
16-09-2010, 03:20 PM
நான் எதிர்பார்த்தபடியே டீச்சரைப் போட்டுத் தள்ளியாயிற்று. ஏன்? எதற்கு என்பதற்கு விடை காண ஆவலாயிருக்கிறோம். கதை சுவாரசியமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. தொடரை ஆவலாய் எதிர்பார்க்க வைக்கும் நடை. பாராட்டுக்கள் கீதம்!

கீதம்
17-09-2010, 01:02 AM
இப்படி விளக்கமாச் சொன்னதும் எனக்குப் புரிஞ்சிடுச்சி.. மதி சுவர் உயரம் 6 அடி.. கொல்லைக் கதவுன்னா, காம்பவுண்ட் கேட்.வீட்டுக் கதவு இல்லை. காம்பவுண்ட் கேட்னா. கிரில் கேட் இல்லை..இரும்பினாலான முழுசும் மறைக்கும் கேட் .. இப்படிச் சில விஷயங்களை நாம யூகிக்க முடியாது இல்லையா?

ரீஜண்டா 20 வருஷத்துக்கு முன்னால என் மனைவியை நான் தான் கொன்னேன்.. ஆவியா வந்து என்னை பயமுறுத்துறா என ஒரு கணவன் விஜய் டி.வி.ல குத்தத்தை ஒத்துகிட்டத வந்துச்சே... :icon_b:

தெளிவாக விளக்காதது என் தவறுதான். இப்போது புரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. உங்கள் உதவியால் மற்றவர்களுக்கும் புரிந்திருக்கும். விளக்கம் கேட்டதற்கு நன்றி கண்மணி.

கீதம்
17-09-2010, 01:03 AM
"பிரமிளா, நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும், என்கிட்ட சொன்னது என்னோடவே இருக்கட்டும், அவங்ககிட்ட எதுவும் உளறிவச்சிடாதே" -

...'தயவு செய்து எங்களிடம் மட்டும் சீக்கிரம் சொல்லிடுங்க.......'

சொல்லாம இருப்பேனா? சொல்றேன்...சொல்றேன்! கொஞ்சம் காத்திருங்க.

கீதம்
17-09-2010, 01:10 AM
பாகம் 3ன் முடிவிற்கும் 4 இன் ஆரம்பத்துக்கும் ஏதோ பெரிய இடைவெளி இருப்பதாக தோன்றுகிறது. மற்றப்படி கதை அட்டகாசமாக போகிறது. அது என்ன விடையம் மறைக்க எத்தெனிக்கிறார்கள் என்பதில் தற்போதய சஸ்பென்ஸ். தொடருங்கள் கீதம்.

சினிமாவில் காட்டுவதுபோல் காட்சி மாற்றம்! அதனால்தான் இடைவெளி இருப்பதுபோல் தோன்றுகிறது.

ஒரு கொலை நடந்திருக்கிறது என்பதையும், அது யார் என்பதையும் சொல்லியாகிவிட்டது. இதற்குப்பின் நடைபெறும் சம்பிரதாய நடவடிக்கைகளைச் சொல்லி கதையை இழுக்கவிரும்பவில்லை.

இந்தக் கொலைக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளையும், பின்னால் நடக்கும் நிகழ்வுகளையும் அங்கிருக்கும் மக்களின் பார்வையிலேயே பதிவு செய்ய இருக்கிறேன். அதனால் புலனாய்வு பற்றி பெரிதாய் எழுதவில்லை.

கீதம்
17-09-2010, 01:12 AM
ம்தி, சுவர் உயரம் - 6 அடி என்று உன் உயரத்தைச் சூசகமாச் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

அதில பாரு மதி.. சுவத்தில எத்தனை சினிமா போஸ்டர் ஒட்டினாலும் சுவர் சினிமா பாக்கப் போகாது..

அதே மாதிரி எத்தனை உருகி உருகி காதல் கதை எழுதினாலும்... மதி காதலிக்க மாட்டான். :D:D:D:D

சரியாத்தான் சொல்லியிருக்காங்க.. போல

மதி உயரமான சுவர்னு சொல்லி இருக்காங்கன்னு பெருமைப் பட்டுக்க வேண்டியதுதான். குட்டிச் சுவர்னு சொல்லலியே!!

பிரமாதம்.:icon_b:

கீதம்
17-09-2010, 01:14 AM
ஈஷ்வரோட உளறலுக்குப் பிறகு என்னவோ நடந்திருக்கு....அதுலதான் இருக்கு மர்மம். இவ்ளோ பயந்தாங்கொள்ளியாவா இருப்பான் இந்த ஈஷ்வர். பிரமிளாவே பரவால்ல போலருக்கு.

நல்லா கொண்டு போறீங்க...தொடருங்க தங்கையே.

சிலபேர் இப்படிதான், பார்க்க பயில்வான் மாதிரி இருப்பாங்க, ஆனால் சின்ன விஷயத்துக்கெல்லாம் உடம்பைப் போட்டு அலட்டிப்பாங்க.

தொடர்வதற்கு நன்றி, அண்ணா.

கீதம்
17-09-2010, 01:18 AM
நான் எதிர்பார்த்தபடியே டீச்சரைப் போட்டுத் தள்ளியாயிற்று. ஏன்? எதற்கு என்பதற்கு விடை காண ஆவலாயிருக்கிறோம். கதை சுவாரசியமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. தொடரை ஆவலாய் எதிர்பார்க்க வைக்கும் நடை. பாராட்டுக்கள் கீதம்!

நன்றி, அக்கா. அநேகமாய் நீங்கள் ஊரிலிருந்து திரும்பி வருவதற்குள் தொடர் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். வந்தபிறகு பொறுமையாய்ப் படித்து கருத்து சொல்லுங்கள்.

கண்மணி
17-09-2010, 02:19 AM
உங்க புது அவதார் அழகா இருக்குக்கா!!

கீதம்
17-09-2010, 03:42 AM
உங்க புது அவதார் அழகா இருக்குக்கா!!

நன்றி, கண்மணி. என் கற்பனையைச் சொன்னேன். என் மகள்தான் செலக்ட் செய்துகொடுத்தாள்.

கீதம்
17-09-2010, 08:57 AM
(5)

"சார், அவருக்கு இன்னும் உடம்பு சரியாகலை, இப்படி அடிக்கடி தொந்தரவு பண்ணாதீங்க, ப்ளீஸ்!"

பேச்சுச்சத்தம் கேட்டு வெளியில் வந்த பாக்கியம், வராந்தாவில் நின்றுகொண்டிருந்த போலிஸ் அதிகாரிகளிடம் துணிச்சலாய்ப் பேசும் பிரமிளாவைக் கண்டு விதிர்விதிர்த்துப்போனாள். போலிஸ் என்றாலே தனக்கு உதறலெடுக்கும். இவள் என்னடாவென்றால் என்னவோ பக்கத்துவீட்டுக்காரனிடம் பேசுவதுபோல் பேசுகிறாளே?

பிரமிளாவும் ஆரம்பத்தில் பயந்துதான் பதில்சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் விசாரணையென்று யாராவது மாறி மாறி வந்து கேள்விகேட்பதே வாடிக்கையானபின் ஓரளவு பயம் தெளிந்துவிட்டிருந்தது.

"மேடம், இவர்தான் இனிமே இந்தக்கேஸை ஹேண்டில் பண்ணப்போற ஆபிஸர். நீங்க எல்லாரும் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தாதான் சீக்கிரமா கொலையாளியைப் பிடிக்கமுடியும். உங்களுக்கும் ரிலீஃபா இருக்கும். தயவு செஞ்சு ஹெல்ப் பண்ணுங்க, ப்ளீஸ்."

இன்ஸ்பெக்டர் இறங்கிவருவதற்கும் காரணம் இருந்தது. இந்தக் குடியிருப்புகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மத்திய அரசுப் பணிமனையின் ஊழியர்கள் என்பதையும், தன் அதிகாரமெல்லாம் அவர்களது யூனியன்களுக்குமுன் எடுபடாது என்பதையும் அவர் புரிந்துவைத்திருந்தார். அதனால் எப்போதும் ஒருவித நிதானத்துடனேயே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். ஆனால் இறந்துபோன சாரதா டீச்சரின் மருமகனுக்கு மேலிடத்திலிருந்த செல்வாக்கால் இந்த கேஸ் ஒரு சிறப்பு அதிகாரியின் கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

புது அதிகாரி நடுத்தர வயதிலிருந்தார். பலத்த விறைப்புடனும், மிடுக்குடனும் தென்பட்ட அவரை பார்க்கவே பயம் தொற்றிக்கொண்டது பாக்கியத்துக்கு.

அவர் ஆரம்பப்புள்ளியிலிருந்து தன் விசாரணையைத் தொடங்கினார்.

"உங்க பேர் என்ன?" மிரண்ட விழிகளுடன் நின்றிருந்த பாக்கியத்தைப் பார்த்துக் கேட்டார்.

"சார், நான்.... நான்.... இது என் தம்பி வீடுங்க, நான்... சும்மா... தொணைக்கு வந்திருக்கேன்... நேத்துதான் வந்தேன்..... சொல்லு பிரமிளா..."

பாக்கியம் நடுங்கினாள்.

"சார், அவங்க என் நாத்தனார். அவங்களுக்கு எதுவும் தெரியாது. நானும் என் கணவரும்தான் இந்த வீட்டில குடியிருக்கோம். என் பேர் பிரமிளா. என் கணவர் பேர் ஈஷ்வர். அவருக்கு ஜுரம். மாத்திரை சாப்பிட்டுட்டு இப்பதான் கொஞ்சம் கண்ணசந்திருக்கார்."

"நீங்க ஒர்க் பண்றீங்களா?"

"இல்ல சார், வீட்டிலதான் இருக்கேன்"

"டீச்சரோடு உங்களுக்கு பழக்கம் எப்படி?"

"அவங்களை எங்களுக்கு ஆறுமாசமாதான் தெரியும் சார்"

"நான் அதைக் கேட்கலை, அவங்களோடு உங்க ரிலேஷன்ஷிப் எப்படி இருந்தது?"

"ரொம்ப தங்கமானவங்க, சார். நல்லா நட்பா பழகுவாங்க, ஒரு தாய் மாதிரி அன்பா ஆதரவா இருந்தாங்க..." சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது.

அவர் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். இதற்குமுன் கேட்கப்பட்ட அதே கேள்விகள்! வரிசை மட்டும் மாறியிருந்தன. முன்பு சொன்ன அதே பதில்களையே இயந்திரத்தனமாய் சொல்லிக்கொண்டிருந்தாள், பிரமிளா.

"டீச்சர் வீட்டுக்கு வழக்கமா யார் யார் வருவாங்கன்னு உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?"

அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் டக் டக்கென்று பதில் சொன்னவள், அடுத்துவந்த இந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் ஒரு சிறு தயக்கத்துக்குப் பின் பதிலளித்தாள்.

"சார், நான் பக்கத்துவீடுங்கிறதால் என்னால் சரியா சொல்ல முடியல. எதிர் வீட்டில் குடியிருக்கிறவங்களுக்குதான் இதைப் பத்தித் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு."

"அவங்களையும் விசாரிப்பேன், முதலில் உங்களுக்குத் தெரிஞ்ச விபரங்களைக் கொடுங்க,வாசல் பக்கம் அல்லது கொல்லைப் பக்கம் சந்தேகத்துக்கிடமா அன்னைக்கு யாரையாவது பார்த்தீங்களா?"

பிரமிளா, பாக்கியத்தைப் பார்க்க, பாக்கியம் 'சொல்லாதே' என்று கண்களால் எச்சரித்தாள்.

"இல்ல சார், அப்படி யாரையும் பாக்கல. நான் கொல்லப் பக்கம் முன்ன மாதிரி போறதே இல்ல,எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல, அதனால செடிக்குத் தண்ணீ ஊத்தக்கூட போகல"

"சரி, அப்படி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சாலோ, அல்லது இது தொடர்பா ஏதாவது சொல்லணும்னு தோணினாலோ எனக்கு போன் பண்ணுங்க" என்று தன் விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டி விடைபெற்றார்.

"அப்பாடா, ஒருவழியாப் போய்த்தொலைஞ்சானுங்க, எங்க ஏதாவது உளறிடப்போறியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்"

"அதை சொன்னா என்ன பிரச்சனை வரும்னு நினைக்கிறீங்க, அத்தாச்சி?"

"இவனுங்க சும்மாவே கொடையறானுங்க, நீ ஏதாவது சொல்லப்போக சாட்சி, அது இதுன்னு கோர்ட்டுக்கு இழுத்தடிச்சானுங்கன்னு வை, வாயும் வயிறுமா இருந்துகிட்டு உன்னால முடியுமா? முதல்ல உம்புருஷனைக் கவனிச்சு, தேத்துற வழியப்பாரு"

"சரி, அத்தாச்சி" அரை மனதுடன் பிரமிளா தலையாட்டினாள்.

டீச்சர் கொலையாவதற்கு கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன் பார்த்த அந்தச் சம்பவமும் அதன் தொடர்ச்சியாக டீச்சருடன் பேசியதும் நினைவுக்கு வந்தது.

"டீச்சர், இன்னைக்கு நீங்க கொல்லைக் கதவை தாழ்போட மறந்துட்டீங்களா?"

இதைக் கேட்கவெனவே டீச்சர் வரும் நேரத்தில் வாசலில் காத்திருந்த பிரமிளா கேட்கவும், டீச்சர் குழப்பத்துடன், "இல்லையே! நான் கதவத் தொறக்கவே இல்லையே!" என்றார்.

"கவனிச்சிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன், டீச்சர், இன்னைக்கு காலையில இருந்தே எனக்கு நெஞ்சைக் கரிச்சுகிட்டு இருந்துச்சு. படுக்க முடியல. சரி, அம்மாகிட்டயாவது பேசலாம்னு போனை எடுத்துகிட்டு காத்தாட உட்காரலாம்னு கொல்லைக்கதவைத் திறந்தேன். பாத்தா உங்க வீட்டுக் கதவைத்தொறந்துகிட்டு யாரோ ஒரு பொம்பள விடுவிடுன்னு போனது. கதவு தொறந்திருக்கவும் மாங்கா திருட வந்திருக்கும்னு நினைக்கிறேன்."

டீச்சர் கண்களில் ஒருவித திகில் தெரிந்தது. "நிஜமாவா சொல்ற?"

"ஆமாம், டீச்சர். நான் உள்ள போய் பாத்தேனே, கொல்லை க்ரில் கதவு பூட்டிதான் இருந்தது. பின்கதவு மட்டும் தாழ்போடாம இருந்திருக்கு."

"ஆளு யாருன்னு பாத்தியா?"

"தெரியல, டீச்சர், அவ முக்காடு போட்டிருந்தா. சின்ன வயசாதான் இருக்கும்னு தோணுது."

"என்னன்னு ஒண்ணும் புரியலையே?"

"எதுக்கும் உள்ள போய் எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கங்க, டீச்சர். அவ கையில பெரிசா ஒண்ணும் எடுத்துட்டுப் போன மாதிரி தெரியல, இந்தக் குப்ப பொறுக்கிற பசங்க வந்திருந்தாங்கன்னா அகப்படுற சாமான்களையெல்லாம் தூக்கிட்டுப் போயிடுவானுங்க" சொல்லிக்கொண்டே டீச்சர் பின்னாலேயே பிரமிளாவும் போனாள்.

டீச்சர் முன்வராந்தாவின் க்ரில்கதவைத் திறந்து உள்ளே போய் கூடத்தின் அறைக்கதவில் தொங்கிய அந்தக்கால இரும்புப் பூட்டைத் திறந்தார். அங்கிருந்து நேரே அடுப்படிக் கதவைத் திறந்து, வெளியில் வந்து கொல்லை க்ரில் கேட்டைப் பார்த்தார். அதுவும் பூட்டப்பட்டே இருந்தது. அதையும் திறந்துவிட்டு வெளியில் வந்த டீச்சர், நன்றாகத் தாழிடப்பட்டிருந்த கொல்லைக்கதவைப் பார்த்துவிட்டு சிரித்தார். பிரமிளாவோ தன் கண்களை நம்ப முடியாதவளாய் அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றாள்.

"பிரமிளா, இன்னைக்கு ஒண்ணும் ஏப்ரல் ஒண்ணு இல்லையே?"

"டீச்சர், சாமிசத்தியமா சொல்றேன், டீச்சர், நானே உள்ள வந்து பாத்தேன், இப்ப எப்படி இப்படி தாழ் போட்டிருக்குன்னு தெரியல, ப்ராமிஸா டீச்சர், என்னை நம்புங்க"

பதற்றத்துடன் தனக்குத் தெரிந்த மொழிகளிலெல்லாம் சத்தியம் செய்பவளை பரிதாபமாய்ப் பார்த்தார், டீச்சர். கனவு ஏதாவது கண்டிருப்பாளோ?

டீச்சரின் அந்தப் பார்வையைச் சந்திக்க இயலாமலும் தன்மீதே நம்பிக்கையற்றுப்போயும் மிகுந்த குழப்பத்துடன் "ஸாரி, டீச்சர், எனக்கு ஒண்ணுமே புரியல, ஆனா நான் பாத்தது நிஜம், டீச்சர்," என்றபடியே வெளியேறினாள். அதன்பின் வேறு யாரிடமும் இதைப் பற்றி பேசவே இல்லை.

ஈஷ்வருக்கும் தெரியாமல் வைத்திருந்த இந்த விஷயத்தை பாக்கியத்திடம் மட்டும், அதுவும் டீச்சரின் கொலைக்குப் பிறகே பகிர்ந்துகொண்டாள். அதைத்தான் போலிஸிடம் சொல்லவேண்டாமென்று பாக்கியம் எச்சரித்திருந்தாள். பிரமிளா அதைச் சொல்லாமல் மறைத்துவிட்டதாய் எண்ணி நிம்மதியடைந்தவேளையில், புலனாய்வு அதிகாரி, தன் உதவியாளரிடம் இப்படிச் சொல்லிக்கொண்டிருந்தார்,

"நிச்சயமா இந்தப்பொண்ணுகிட்ட நமக்குத்தேவையான விஷயம் ஏதோ இருக்கு, கூடிய சீக்கிரம் அதை வெளியில் கொண்டுவரணும்"


********************************************************************

ஆதவா
17-09-2010, 09:14 AM
ரொம்ப நல்லா சுவாரசியமா போவுது. அன்பு சொன்னாமாதிரி ஒரு கேப் தெரிந்தாலும்...... நீங்கள் விளக்கியதும் நன்றாக இருந்தது.
பிரமிளா அந்த விஷயத்தை மறைத்ததும் ஒரு கணம் இன்ஸ்பெக்டர் சந்தேகித்திருப்பார் என்று உணர்ந்தேன்.. அது சரியாக இருந்தது.
இந்தமாதிரி கதைகளைப் படிக்க எனக்கு சஸ்பென்ஸ் தாளாது. அதனால ஒருநாளைக்கு ஒரு பாகமாவது போட்டுடுங்க.....

தொடருங்கள்.

மதி
17-09-2010, 10:40 AM
செம சுவாரஸ்யமா போகுது... இப்போ பிரமை யாருக்குன்னு சின்ன குழப்பம்.. :):)ஈஸ்வருக்குக்கா பிரமிளாவுக்கா..?

சிவா.ஜி
17-09-2010, 02:29 PM
பிரமிளா இன்ஸ்பெக்டரிடம் மறைத்த அந்த விஷயத்தில்தான் ஏதோ விஷயமிருக்கு.

சஸ்பென்ஸை ரொம்ப நல்லாவே மெயிண்டெயின் பண்றீங்க. பரபரப்பா போகுது கதை.

பாரதி
17-09-2010, 04:57 PM
தலைப்பில் ஆரம்பித்த கதையின் மர்மம், முற்றும் போடுகிற வரை தொடரும் போல இருக்கிறதே..!

கீதம்
18-09-2010, 11:12 AM
அத்தியாயம் 6


"ஏன்'டா, இவனே! உன்னை என்னாடா விசாரிச்சிது போலிஸ்?"

இஸ்திரி செய்த துணிகளைக் கொடுக்கவந்த ஜெகதீஷிடம் சித்ராப்பா தன் விசாரணையைத் துவக்கினார்.

"ம்? எத்தன நாளா இங்க வண்டி போட்டிருக்கேன்னாரு, ஒரு மூணு வருஷமாவது இருக்கும்னேன். கொல நடந்த அன்னைக்கும் இங்கதான் வண்டி போட்டிருந்தியான்னாரு, ஆமாம்னேன். டீச்சர் வீட்டுக்கு கடைசியா எப்ப போனேன்னாரு, எப்பவும் சனி, ஞாயிறுலதான் போவேன், சனிக்கெழமை காலையில பதினோரு மணிகணக்கா போனேன், பூட்டு உள்ளப்பாத்து தொங்குச்சி, சரி, டீச்சர் எங்கயோ வெளியில போயிருக்காங்க போலயிருக்குன்னு திரும்பிட்டேன். அப்பதான் சித்ராம்மா டீச்சர் ஊருக்குப் போயிருக்குறதா சொன்னாங்கன்னேன்!"

"அடப்பாவி! டீச்சர் வீட்டில இல்லையான்னு நீ கேட்டதாலதானே நான் சொன்னேன்? என்னமோ நானா வந்து உங்கிட்ட சேதி சொன்னாமாதிரியில்ல சொல்லியிருக்கே?"

அவன் முடிப்பதற்குள் சித்ராம்மா கத்தினாள்.

"அதெல்லாம் வெவரமா சொல்லிட்டிருக்க முடியுமா? சேதிய மட்டுந்தான் சொன்னேன்"

"பயங்கரமான ஆள்தாண்டா, அப்புறம் அந்தக் குடிகாரனைப் பத்தியும் நீதான் போட்டுக்குடுத்தியா?"

"ஆமாம், பின்னே? என்னமோ நாந்தான் கொலைகாரங்கிற மாதிரி என்னையே குறுக்குக் கேள்வி கேட்டிட்டிருந்தாரு, அந்த புது ஆபிஸரு, அதான் அவன மாட்டிவுட்டுட்டேன். அப்புறம் எதுக்கும் இருக்கட்டுமின்னு மூணுமாசம் முன்னாடி டீச்சர் வீட்டு ஒட்டுமேல ஒருத்தன் ஒக்காந்திருந்து மாட்டிகிட்டானே, நாம எல்லாரும் தரும அடி குடுத்து வெரட்டிவுட்டோமே, அவனப் பத்தியும் சொல்லிவுட்டேன்." மகாபெருமையுடன் சொன்னவனைப் பார்த்துச் சிரித்தாள், சித்ராம்மா.

"பாவிப்பயலே, அவன் தான் மாங்கா திருடவந்தேன்னு ஒத்துகிட்டானே! அவனையுமா? அவன் யாருனே தெரியாதேடா?"

"தெரியாட்டி என்னா? சந்தேகம்னு வந்தா சொல்லிடவேண்டியதுதான? போலிஸ் மோப்பம் புடிச்சிடாதா?"

"ஆமா, நாய் வந்தே ஒண்ணும் கிழிக்கல, வாத்தியார்குளம் வரைக்கும் ஓடி நின்னுடிச்சி" சித்ரா நக்கலடித்தாள்.

"அப்ப கொலைகாரனுக்கு வாத்தியார்கொளம் தாண்டிதான் ஜாகையோ என்னவோ?" ஜெகதீஷ் சந்தேகிக்க,

"ஆங், அப்பா, உங்களுக்கு அடுத்த துப்பறியும் புலி இவருதான், பேசாம போலிஸை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு நீங்க ரெண்டுபேருமா கெளம்பிப்போங்க, சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்" சித்ரா மீண்டும் கிண்டலடித்தாள்.

"கிண்டலா பண்றீங்க? நானும் போலிஸ் வேலைக்கு ஆளெடுக்கும்போது போயிருந்தேங்க, ஒசரம் கொறையிதுன்னு திருப்பி அனுப்பீட்டாங்க. என்னைவிடவும் குள்ளமானவனையெல்லாம் எடுத்திருக்காங்க, எல்லாம் காசு பண்ற வேலதான்"

"நல்லவேளை, நீ மட்டும் போலிஸ் வேலைக்குப் போயிருந்தா, எங்களோட துணியெல்லாம் அயர்ன் பண்றது யாரு? பத்ரியும் ஒழுங்காவே பண்ணமாட்டேங்கிறான், நீ போவாதது எங்களுக்கெல்லாம் எவ்வளவு லாபம் தெரியுமா? ஆனா, என்ன? போலிஸ் இலாகா ஒரு அருமையான துப்பறியும் நிபுணரை இழந்திடுச்சி"

"சித்ரா. என்னடி இது? வயசு வந்த பையன் கிட்ட இப்படியா வாயடிக்கிறது? உள்ள போய் வேலையப் பாருடி!"

சித்ரா, எழுந்துபோகும்போது அங்கிருந்த ரஞ்சனிக்கு மட்டும் கேட்கும் வகையில் ஏதோ கமெண்ட் அடித்துவிட்டு உள்ளே செல்ல, ரஞ்சனி களுக்கென்று சிரித்தாள்.

"இந்தா, ரஞ்சனி, துணியெல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு, வேற எதுவும் குடுக்கணும்னா சித்ராகிட்ட கேட்டுக் குடு. சின்னவனோட பேண்ட், ஷர்ட் துவைச்சி காயுது பாரு, அதையும் எடுத்துக்குடு"

ரஞ்சனி எல்லாவற்றையும் ஒரு கட்டைப்பையில் போட்டுக்கொடுத்தாள். வாங்கும்போது வெகு எச்சரிக்கையாக கைகள் படாமல் வாங்கியவன், அவளை நிமிர்ந்தும் பாராமல் வெளியேறினான். இவள் என்ன பாம்பா? பழுதா? தெரியவில்லையே!

கொஞ்சநாளாகதான் கவனிக்கிறான், ரஞ்சனி இவனைப் பார்க்கும் பார்வையே சரியில்லை. அல்லது தான் அவளைப்பார்க்கும் பார்வைதான் சரியில்லையோ? மாலை நேரங்களில் சில சமயம் ரஞ்சனி வாசல் தெளித்துக் கோலம் போடுவாள். அப்போது கெண்டைக்கால் தெரிய சேலையை உயர்த்திச் செருகி, குனிந்து அவள் கூட்டும்போதும், கோலமிடும்போதும் பார்த்தால் ஆண்கள் கிறங்கிவிடுவார்கள்.கண்கள் படபடக்க அவள் பேசும்போது இவனுக்குள் ஒரு கிளர்ச்சி உண்டாகிறதே, அதை என்னவென்று சொல்வது? அவள் நடவடிக்கைகளில் ஏதோ ஒரு வித்தியாசம்! எல்லாமே தன் கற்பனையாகவும் இருக்கலாம்.

ஆரம்பத்தில் சித்ராவைதான் நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். அவள் கண்டுகொள்ளாமல் போக, தனிமைத் தவமிருந்தவனுக்கு, இவனை கண்களாலேயே விழுங்கும் ரஞ்சனியைப் பார்க்கப் பார்க்க ஆசை மேலிட்டது.

கல்யாணமானவளை இப்படி ரசிப்பது எவ்வளவு கீழ்த்தரமானது என்பது புரிந்தும் அவன் அவளை ரசிப்பதை அவளே விரும்புவதுபோல் தெரிய, உள்ளுக்குள் ராட்சசம் உருப்பெற்றுக்கொண்டிருந்தது.

சில சமயங்களில் அவளா இவள்? என்னுமளவுக்கு அப்பாவியாய் குனிந்த தலை நிமிராமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இவனைக் கண்டுகொள்ளாமல் இருப்பவளைக் காண இவளை எந்தக்கணக்கில் சேர்ப்பது என்று புரியாமல் தவித்தான்.

இப்படிதான் போன புதன் அன்று மாலை, அவள் வாசலில் குனிந்து கோலமிடும் அழகை ஓரக்கண்ணால் ரசித்தபடி, இஸ்திரிப்பெட்டிக்கான கரியை நெருப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான், அருகில் டீச்சர் வந்து நிற்பதையும் உணராமல்!

"என்ன பலத்த யோசனை சார்?"

"டீச்சர்?" திடுக்கிட்டு உணர்வு பெற்றான்.

"ஜெகதீஷ்! வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது கொஞ்சம் வாயேன், பரண்ல இருந்து ஒரு பெட்டியை இறக்கணும்"

சரி, டீச்சர்!" படபடக்கும் இதயத்துடன் பதிலளித்தான். தான் ரஞ்சனியை ரசித்துக்கொண்டிருந்ததை டீச்சர் பார்த்திருப்பாரோ? பயம் தலைதூக்கியது.

உண்மையில் பெட்டியை இறக்க தன்னை அழைக்கவில்லை என்பதும், தன் மனதில் புதிதாய்க் குடியேறிய கயமை எண்ணத்தை இறக்கவே அழைத்திருக்கிறார் என்பதும் அவர் வீட்டுக்குப் போனபிறகே புரிந்தது.

**********************************************************************

கீதம்
18-09-2010, 11:14 AM
ரொம்ப நல்லா சுவாரசியமா போவுது. அன்பு சொன்னாமாதிரி ஒரு கேப் தெரிந்தாலும்...... நீங்கள் விளக்கியதும் நன்றாக இருந்தது.
பிரமிளா அந்த விஷயத்தை மறைத்ததும் ஒரு கணம் இன்ஸ்பெக்டர் சந்தேகித்திருப்பார் என்று உணர்ந்தேன்.. அது சரியாக இருந்தது.
இந்தமாதிரி கதைகளைப் படிக்க எனக்கு சஸ்பென்ஸ் தாளாது. அதனால ஒருநாளைக்கு ஒரு பாகமாவது போட்டுடுங்க.....

தொடருங்கள்.

பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவதற்கு நன்றி, ஆதவா.

கீதம்
18-09-2010, 11:16 AM
செம சுவாரஸ்யமா போகுது... இப்போ பிரமை யாருக்குன்னு சின்ன குழப்பம்.. :):)ஈஸ்வருக்குக்கா பிரமிளாவுக்கா..?

குழம்புங்க, குழம்புங்க, நல்லா குழம்புங்க. எங்களையெல்லாம் உ.த.செ.வில் எப்படிக் குழப்புறீங்க?:lachen001:

கீதம்
18-09-2010, 11:18 AM
பிரமிளா இன்ஸ்பெக்டரிடம் மறைத்த அந்த விஷயத்தில்தான் ஏதோ விஷயமிருக்கு.

சஸ்பென்ஸை ரொம்ப நல்லாவே மெயிண்டெயின் பண்றீங்க. பரபரப்பா போகுது கதை.

தொடர்ந்து வருவதற்கு ரொம்ப நன்றி, அண்ணா.

கீதம்
18-09-2010, 11:22 AM
தலைப்பில் ஆரம்பித்த கதையின் மர்மம், முற்றும் போடுகிற வரை தொடரும் போல இருக்கிறதே..!

விறுவிறுப்பு குறையாமல் கடைசிவரை தொடரவேண்டும் என்ற என் ஆசை நிறைவேறுகிறதா என்று பார்க்கவேண்டும். பின்னூட்டத்துக்கு நன்றி, பாரதி அவர்களே.

Nivas.T
18-09-2010, 01:32 PM
இப்ப யாரா சந்தேகப்படுறதுன்னு தெரியல :confused:
இந்த கொலைக்கு முடிச்சு எங்க இருக்குன்னு தெரியல..................:icon_wacko: யார் அந்த கருப்பு ஆடு.........:teufel021: :icon_hmm:இம்ம்ம்ம் :icon_hmm::icon_hmm:

கீதம்
19-09-2010, 12:57 AM
கருப்பு ஆடா? இந்தக் கதையில் கருப்பு ஆடு ஒரு கேரக்டர் இல்லையே?:lachen001:

பின்னூட்டத்துக்கு நன்றி, நிவாஸ்.

மதி
19-09-2010, 04:29 AM
சுவாரஸ்யமா போகுது..... கலக்கல்...

கீதம்
19-09-2010, 04:43 AM
சுவாரஸ்யமா போகுது..... கலக்கல்...

தொடர்ந்து தரும் பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி, மதி.

கீதம்
19-09-2010, 10:00 AM
(7)


"ஜெகதீஷ், உன்னை ரொம்ப நல்ல பையன்னு நினைச்சிருந்தேன், நீ இப்படி செய்யலாமா?"

"டீச்சர், நான்.....நான் என்ன செஞ்சேன், டீச்சர்?"

"கொஞ்சநாளா பாக்கறேன், நீ ரஞ்சனியைப் பாக்கிற பார்வை சரியில்லையோன்னு தோணுது"

டீச்சர் நேரடியாக இந்த விஷயத்தை இப்படிப் போட்டுடைப்பார் என்று எதிர்பாராததால் அதிர்ந்தான்.

"இல்ல....டீச்சர்....வந்து......"

"சரி, போனது போகட்டும், இனிமேல் இப்படிச் செய்யாதே! உன் அக்கா தங்கைகளையோ உன் வருங்கால மனைவியையோ அவளுடைய இடத்தில் வச்சுப்பார்! மத்த ஆண்கள் அவங்களை இப்படிப் பாத்தால் உனக்கு சரியாப்படுமா சொல்லு"

"டீச்சர், நாலுபேர் முன்னாடி அசிங்கப்படுத்தாம வீட்டுக்குள்ள கூப்புட்டுவச்சு சொல்றதுக்கு உங்கள ஆயிரம் தடவ கும்புட்டு நன்றி சொல்றேன், டீச்சர். ஆனா.....இதுக்கெல்லாம் நாம் மட்டுமே காரணமில்ல, டீச்சர். அதும்தான் டீச்சர். அது என் கையைத் தொட்டு துணி வாங்குது. என்னைப் பார்த்து ஒருமாதிரி சிரிக்கிது, மத்தவங்க முன்னால ஒண்ணுந்தெரியாதமாதிரி நிக்கிது, அது ஆளக்கண்டு நடிக்கிது, டீச்சர். என்னதான் வாயாடினாலும், சித்ராகிட்ட இருக்கிற கண்டிப்பும், கண்ணியமும் இதுகிட்ட இருக்கிறமாதிரி தெரியல, டீச்சர்"

மடைதிறந்துவிட்டதுபோல் அவன்பாட்டுக்கு சொல்லிக்கொண்டிருந்தான். டீச்சர் என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் ஒரு சிறிய இடைவெளி விட்டு மூச்சு வாங்கினான். பின் எச்சிலைக் கூட்டி விழுங்கிவிட்டு மேலும் தொடர்ந்தான்.

"நான் செய்யிறது தப்புனா.... அதுக்குக் காரணம் அந்தப் பொண்ணுதான் டீச்சர்,என்னைக் கூப்புட்டு சொன்னமாதிரி அந்தப் பொண்ணுகிட்ட உங்களால் சொல்லமுடியுமா? டீச்சர்"

டீச்சர் சிரித்தார். "அசடன்டா, நீ! ஊரான் வீட்டுத் தோட்டத்துக்குள் உன்னை நுழையாதேன்னு சொன்னா...கதவு ஏன் திறந்திருக்குன்னு கேக்கிற. நீ உன் வரைக்கும் சரியா இரு. கவனிப்பாரில்லாத தோட்டம் அது. அதுக்கு என்னால் பாதுகாப்பு கொடுக்கமுடியுதான்னு பாக்கறேன். நீ இப்படி அடுத்த வீட்டுத் தோட்டத்தை மேஞ்சுகிட்டிருந்தா...உன் வீட்டுத்தோட்டம் பாழாயிடும், ஞாபகம் வச்சுக்கோ!"

"டீச்சர்....."

"ஜெகதீஷ், உன் வயசு உன்னை இப்படியெல்லாம் அலைக்கழிக்குது. உங்க பெரியப்பாவ வரச்சொல்லு, உனக்கொரு பொண்ணைப் பாத்திடலாம். அப்புறம் அவ பாத்துக்குவா உன்னை!"

"டீச்சர்....."

"ஜெகதீஷ், கவலைப்படாதே, மனசை அலைபாயவிடாதே! உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்ட தாராளமா மனசுவிட்டுச் சொல்லு. என்னை உன் அம்மாவா நினைச்சிக்கோ!"

"டீச்சர், என்னை மன்னிச்சிடுங்க, எனக்கு பெத்தவங்க இல்ல டீச்சர், எடுத்துச் சொல்ல பெரியவங்களும் இல்ல, தெய்வம் போல வந்து என் கண்ணை திறந்துவிட்டீங்க, டீச்சர். இனிமே அந்தப் பொண்ணு மட்டுமில்ல, டீச்சர், இனி எந்தப் பொண்ணப் பாத்தாலும் உங்களை நினைச்சுக்குவேன், டீச்சர்."

காலில் விழுந்தவனைத் தூக்கி நிறுத்தினார், டீச்சர்.

"சரி, உக்காரு! சாப்பிட்டுப் போலாம்"

அறிவுரையும் தந்து ஆகாரமும் தந்து உபசரிக்கும் டீச்சரின் அன்பையும் அக்கறையையும் எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டான்.

போகும்போது டீச்சர் அவனிடம் சொன்னார், "ஜெகதீஷ், எது எப்படியோ, அந்தப் பொண்ணு, இன்னொருவர் மனைவி. அதைப் பத்தித் தப்பாப் பேசுறது சரியில்ல, தற்செயலா நடக்கிறதை நீ உனக்கு சாதகமா நினைச்சிருக்கலாம். அதனால் அந்தப் பொண்ணைப் பத்தின தவறான அபிப்பிராயத்தை மாத்திகிட்டு சாதாரணமா பழகு. அப்பவும் உனக்குத் தப்பா தெரிஞ்சா விலகிடு. நீ நல்ல பையன், புத்திசாலித்தனமா நடந்துக்கோ!"

டீச்சர் அவனுடன் பேசியது அன்றே கடைசி. இந்தச் சங்கடமான சந்திப்பு விசாரணையின்போது சாதுர்யமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது அவனால்.


*********************************************************************************

குப்பையும் கூளமும் சேர்ந்து தன் வனப்பிழந்துகிடக்கும் பக்கத்து வீட்டு வாசலைப் பார்த்தாள், சித்ராம்மா. போன வெள்ளிக்கிழமை டீச்சர் போட்ட தாமரைத்தட்டுக் கோலம் அழிந்து காவியினாலான வெளிவடிவம் மட்டும் உள்ளே ஒரு தாமரை இருந்ததைச் சொல்லாமல் சொல்லி நின்றது. பார்ப்பதற்கு டீச்சர் ஊருக்குப் போயிருப்பதைப் போலவே இருந்தது. ஆனால் பூட்டி சீல்வைக்கப்பட்ட கதவு அப்படி நினைக்காதே என்று உண்மையைப் பறைசாற்றி நின்றது.

சித்ராம்மா, டீச்சரைக் கடைசியாய்ப் பார்த்தது, அவர் கொலையாவதற்கு முதல்நாள் மாலை. அப்போது எவ்வளவு உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தார்! மாலை நான்கு மணி இருக்கும். பள்ளி முடிந்து வழக்கமாய் டீச்சர் வீட்டுக்கு வரும் நேரம் அதுதான்.அந்தநேரத்தில்தான் சித்ரா அம்மாவும் வாசல் தெளித்து கோலம் போடுவாள்.

மாலை வேளைகளில் இப்படி சலிக்கத் தண்ணீர் தெளித்தால்தான், வெக்கை மிகு இரவுநேரங்களில் வாசலில் பாய் போட்டு உட்கார இதமாக இருக்கும். முன்பெல்லாம் டி.வி. கிடையாது. அதனால் பெண்களும் ஆண்களும் இரவு உணவை முடித்துவிட்டு இப்படி கொஞ்சநேரம் காற்றாட அமர்வது வழக்கமாக இருந்தது. டி.வி. வந்தபிறகு எல்லாரும் வீட்டுக்குள் சிறைப்பட்டுவிட, சித்ராம்மாவும், சித்ராப்பாவும் மட்டுமே பழையபாணியைப் பின்பற்றி, அவர் ஒரு சாய்வு நாற்காலியிலும், இவர் ஒரு பாயிலுமாய் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர்.

சித்ரா எப்போதாவது வந்து அவர்கள் பேச்சில் கலந்துகொள்வாள். அவள் கல்யாணப்பேச்செடுத்தால் மட்டும் நாசுக்காக எழுந்துசென்றுவிடுவாள். அவளுக்கும் வயது இருபத்தைந்து ஆகிறது. செவ்வாய் தோஷம். இதுவரை எந்த இடமும் சரிவர அமையவில்லை. இவளுக்காகவே பெரியவனுக்குக் கல்யாணம் பண்ணாமல் வைத்திருந்து அவனுக்கும் முப்பது தாண்டி ரெண்டுவருஷம் ஆகிவிட்டது.

வெறுத்துப்போய் அவன் துபாய் போய்விட்டான். மூன்று வருஷத்துக்கு ஒருதடவை வந்துபோவான். அவனுக்கு நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பெண்வந்தது. சரி, விட்டால் இவனுக்கும் வயதாகிவிடும் என்று பயந்தவர்களாய், போன வருஷம் அவன் இங்கு வந்தபோது திருமணத்தை முடித்துவைத்து அனுப்பிவிட்டனர்.

பெண்டாட்டியைக் கூப்பிட்டுக்கறேன் என்றுதான் சொன்னான். இப்போது கேட்டால் என்னென்னவோ சாக்குபோக்கு சொல்லி முடியாது என்கிறான். இப்போது அந்தக்கவலையும் இவர்களுக்கு சேர்ந்துவிட்டது.அதே சிந்தனையுடன் இருந்தவளுக்கு டீச்சர் வந்ததே தெரியவில்லை.

"என்ன சித்ராம்மா, செளக்கியமா? பாத்து ஒருவாரம் ஆயிடுச்சி?" டீச்சர் தன்வீட்டுப் பூட்டைச் சாவியால் திறந்துகொண்டே கேட்டார்.

"செளக்கியத்துக்கென்ன குறைச்சல், டீச்சர்?"

"ஏன் அலுத்துக்கறீங்க, ஏதாவது பிரச்சனையா?"

"என்னன்னு சொல்றது, டீச்சர், இந்தப்பொண்ணுக்கு ஒரு எடம் தகையமாட்டேங்குதேங்கிற கவலை மட்டுந்தான் இதுவரைக்கும் எங்க ரெண்டுபேருக்கும் இருந்திச்சு, இப்ப புதுசா மருமக கவலையும் சேந்துடுச்சி."

டீச்சர் கதவைத் திறக்காமல் சித்ராம்மாவின் அருகில் வந்தார்.

"ஏன், என்னாச்சி?"

"நேத்து அவங்க அப்பாவும் அண்ணனும் வந்து என்னென்னவோ பேசிட்டுப் போறாங்க, நாங்க ஏமாத்திக் கல்யாணம் பண்ணிட்டோமாம், பொண்ணை ஊறுகா போடவா கல்யாணம் பண்ணுனீங்கன்னு கேக்குறாங்க, நாங்க என்ன பண்ணமுடியும்? ரெண்டே மாசத்தில அழைச்சுக்குவேன்னு சொன்னான், அவன் பேச்சை நம்பி அவனுக்குக் கல்யாணம் பண்ணினது தப்புன்னு இப்பதான் தெரியிது."

"உங்க மருமக என்ன சொல்றா?"

"அது ஒரு அப்பிராணிங்க டீச்சர், வாயைத் தொறந்து எதுவும் சொல்லமாட்டேங்குது. அவங்க அப்பாரு ஊருக்கு கூப்புட்டாலும் போகமாட்டேன்னு என் கையைப் பிடிச்சுகிட்டு அழுவுது."

"அடப்பாவமே! அவளையே விட்டு உங்க பையன்கிட்ட பேச சொல்றதுதானே?"

"அவன் ஒரு முசுடு, டீச்சர். பொண்டாட்டின்னு கூடப் பாக்காம சள்ளுனு எரிஞ்சு வுழுவுறான். கம்பெனியில ஏதோ பிரச்சனையாம். இவளையும் அங்க அழைக்க முடியாதாம், அவனும் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இந்தப்பக்கம் தலகாட்ட முடியாதாம்."

"கல்யாணமாகி ஒன்றரை வருஷம் ஆவுதே, அதுக்கும் ஆசை இருக்காதா?நீங்க சொல்லிப்பாக்கவேண்டியதுதானே?"

"என்னத்தை சொல்றது டீச்சர்? என் கஷ்டம் உனக்குப் புரியாதும்மாங்கறான்,வேலய விட்டுட்டு வாடான்னா காண்டிராக்ட் ல கையெழுத்துபோட்டுட்டேன், இஷ்டத்துக்கு வரமுடியாதுங்கறான்."

"ரொம்ப கஷ்டம்தான்,ரெண்டுமாசம் ஒண்ணா இருந்திருப்பாங்களா?"

"எங்க டீச்சர்? ஒரு மாசம், பத்துநாள் இருந்தா பெரிசு!"

"அப்படி இருந்தும் உங்க மருமக அவ பிறந்தவீட்டுக்குப் போகாம உங்ககூடவே இருக்காள்னா பெரிய விஷயம்தான். குடுத்துவச்ச மாமியார்தான் நீங்க, சித்ரா எங்க? கம்ப்யூட்டர் கிளாஸ் போயிருக்காளா?"

"இன்னைக்குக் கெடையாது, டீச்சர். திங்கள், புதன், வெள்ளி மூணுநாளுதான். மத்தநாளில தையல் கிளாஸ் போறா. என்னமோ அவளுக்கும் பொழுது போவணுமே!"

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது கையில் தம்ளருடன் ரஞ்சனி வெளியில் வந்தாள்.

"அத்தை, காபி இந்தாங்க, வருவீங்க, வருவீங்கன்னு பாத்தேன், சூடு ஆறுது, அதான் எடுத்திட்டு வந்திட்டேன்."

"ரஞ்சனி, டீச்சருக்கும் காபி எடுத்திட்டு வா!"

"ரஞ்சனி, வேண்டாம்மா! என் கையால நானே போட்டுக் குடிச்சாதான் எனக்குத் திருப்தி. டிகாக்ஷன் போட்டு வச்சது இருக்கு. காய்ச்சின பால் ஃப்ரிஜில இருக்கு. சூடுபடுத்தி கலக்கவேண்டியதுதான்" சொல்லிவிட்டு ரஞ்சனியைப் பார்த்துக் கேட்டார்,

"ரஞ்சனி, நீ எம்.எஸ்ஸி படிச்சிருக்கதானே? உனக்கு வேலைக்குப் போற ஐடியா எதுவும் இல்லையா?" டீச்சருக்குப் பதில் சொல்லாமல், ரஞ்சனி மாமியாரைப் பார்த்தாள்.

"என்னை ஏன் பாக்குறே? இந்தக் கதையைக் கேளுங்க டீச்சர், சித்ராப்பா, தெரிஞ்சவங்க மூலமா ஒரு வேலை ஏற்பாடு பண்ணினாரு. அவன் அங்க இருந்துகிட்டு அதெல்லாம் வேணாங்கிறான். இதுவும் எதுவும் சொல்லாம தலையாட்டிகிட்டு இருக்கு."

"என்ன படிச்சிருந்தும் என்ன? புருஷன் சொல்லே வேதவாக்குன்னு வாழுறா உங்க மருமக! ரஞ்சனி, நீ இந்தக்காலத்துக்கு ஏத்த பொண்ணே இல்ல!" டீச்சர் சிரித்தார். ரஞ்சனி புன்னகைத்தவாறே காலி தம்ளரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

"கமலி எப்படியிருக்கு, டீச்சர்?" சித்ராம்மா ஆர்வமுடன் கேட்டார்.

"நல்லாயிருக்கா, ஆனால் வாம்மா, வாம்மான்னு தெனம் புலம்பல்தான், எனக்கும் ஒரு மாதிரி இருக்கு, சித்ராம்மா, கொஞ்சநாளாவே மனசு சரியில்ல, நாளைக்கு நைட் ட்ரெயின் ஏறலாம்னு நினைச்சுகிட்டிருக்கேன். வீட்டைப் பாத்துக்கங்க, நான் போய்ட்டு போன் பண்றேன். காலையில பால்காரனையும், பேப்பர்காரனையும் பாத்தா சொல்றேன், பால் பையைக் கழட்டிவச்சாலே புரிஞ்சுக்குவான். இருந்தாலும் நீங்களோ, சித்ராப்பாவோ பாத்து சொல்லுங்க"

"சரிங்க, டீச்சர். கவலைப்படாதீங்க, கமலிக்கு நல்லபடியா பிரசவமாகி பேரப்பிள்ளைகளோட சந்தோஷமா இருப்பீங்க, தைரியமா இருங்க"

சரியாக ஒருவாரத்துக்குமுன் இதே வியாழன் அன்றுதான் தானும் டீச்சரும், அவ்வளவுநேரம் பேசிக்கொண்டிருந்தோம் என்பதை நினைக்க நினைக்க மலைப்புதான் உண்டானது. எத்தனை ஆசையுடன் மகளைப் பார்க்கப்போவதாய் சொன்னவர், மகளைப் பார்க்காமலேயே போய்ச்சேர்ந்துவிட்டாரே? ஒரு நல்ல மனுஷியின் சாவு இத்தனைக் கோரமாகவா இருக்கவேண்டும்?

யாருக்கும் மனதாலும் கெடுதல் நினையாதவராயிற்றே? இந்த பழிபாதகச் செயலைச் செய்தவன் யாராய் இருக்கும்? கீச்சென்ற சத்தம்கூட கேட்கவில்லையே? போலிஸ் ரிப்போர்ட்படி அவர் கொலைசெய்யப்பட்டது மதியம் மணி இரண்டிலிருந்து நான்குக்குள் இருக்கலாம் என்கிறார்கள்.அந்த நேரத்தில் நான் வீட்டில்தானே இருந்தேன்?

அங்கே வந்தவன், இந்த வீட்டுக்குள் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சித்ராவின் கல்யாணத்துக்கென வாங்கிய நகைகளும், ரஞ்சனி போட்டுவந்த நகைகளும் பீரோவில்தான் இருக்கின்றன. முதல் வேலையாக அவற்றை லாக்கரில் வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

சித்ராம்மா பலத்த யோசனையிலிருந்தாள்.

**************************************************

Nivas.T
19-09-2010, 10:29 AM
இவ்வளவு நல்லவங்களா இருந்தவங்கள கொல்ல எப்டி மனசு வந்துச்சு, இதுக்கு ஏதோ ஒரு பலமான காரணம் இருக்கணும், அது என்னன்னுதான் புரியல?

மதி
19-09-2010, 01:21 PM
அன்று நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வர... யார் தான் கொன்றிருப்பார் டீச்சரை..???!!!

Akila.R.D
19-09-2010, 01:35 PM
இவ்ளோ நல்ல டீச்சரை யார் கொன்றார்கள்?..

விறுவிறுப்பா கொண்டு போறீங்க கதையை...

தொடருங்கள்...

சிவா.ஜி
19-09-2010, 02:14 PM
ரெண்டு அத்தியாயத்தையும் படிச்சேன். அழகா முடிச்சு போடறீங்க. யார சந்தேகப்படறதுன்னு குழப்பமா இருக்கு. ஜகதீஷ், ரஞ்சனி விஷயத்த டீச்சர் ரொம்ப நல்லா கையாண்டாங்க.

விறுவிறுப்பா போகுது. அசத்துங்கம்மா....!!!

அன்புரசிகன்
20-09-2010, 02:05 AM
ஒவ்வொரு உரையாடல்களிலும் அவர்களை கண்முன்னே கொண்டுவந்துவிடுகிறீர்கள். இவ்வளவு நல்லவங்களுக்கு என்ன தான் பிரச்சனை? யர் அந்த இனம் தெரியாத நபர்? தொடருங்கள். பலகேள்விகளுக்கு விடை பின்னர் வர காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் கீதம்.

ஆதவா
20-09-2010, 07:26 AM
ஒருவேளை டீச்சரே கொடூரமா தற்கொலை செஞ்சிருப்பாங்களோ??
எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு...
அடுத்தது என்ன்ன?

govindh
20-09-2010, 12:42 PM
பரபரப்பு... விறுவிறுப்பு...
அசத்தலாகத் தொடர்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

கீதம்
20-09-2010, 09:33 PM
இவ்வளவு நல்லவங்களா இருந்தவங்கள கொல்ல எப்டி மனசு வந்துச்சு, இதுக்கு ஏதோ ஒரு பலமான காரணம் இருக்கணும், அது என்னன்னுதான் புரியல?


அன்று நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வர... யார் தான் கொன்றிருப்பார் டீச்சரை..???!!!


இவ்ளோ நல்ல டீச்சரை யார் கொன்றார்கள்?..

விறுவிறுப்பா கொண்டு போறீங்க கதையை...

தொடருங்கள்...


ரெண்டு அத்தியாயத்தையும் படிச்சேன். அழகா முடிச்சு போடறீங்க. யார சந்தேகப்படறதுன்னு குழப்பமா இருக்கு. ஜகதீஷ், ரஞ்சனி விஷயத்த டீச்சர் ரொம்ப நல்லா கையாண்டாங்க.

விறுவிறுப்பா போகுது. அசத்துங்கம்மா....!!!


ஒவ்வொரு உரையாடல்களிலும் அவர்களை கண்முன்னே கொண்டுவந்துவிடுகிறீர்கள். இவ்வளவு நல்லவங்களுக்கு என்ன தான் பிரச்சனை? யர் அந்த இனம் தெரியாத நபர்? தொடருங்கள். பலகேள்விகளுக்கு விடை பின்னர் வர காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் கீதம்.

பின்னூட்டங்களுக்கு நன்றி, நிவாஸ், மதி, அகிலா, சிவாஜி அண்ணா மற்றும் அன்புரசிகன் .

இப்படியே யோசிச்சுகிட்டே இருங்க. கொலையாளி யார் என்பதோ கொலை ஏன் நடந்தது என்பதோ தெரிந்துவிட்டால் கதை முடிந்துவிடுமே!

அதுவுமில்லாமல் இங்கு பிள்ளைகளுக்கு இருவார விடுமுறை துவங்கிவிட்டது. அதனால் அடுத்தடுத்த அத்தியாயங்கள் பதிக்க சற்று தாமதம் ஏற்படலாம். உங்களைக் காக்க வைப்பதற்கு வருந்துகிறேன்.

கீதம்
20-09-2010, 09:35 PM
ஒருவேளை டீச்சரே கொடூரமா தற்கொலை செஞ்சிருப்பாங்களோ??
எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு...
அடுத்தது என்ன்ன?

என்ன ஒரு கொடூர கற்பனை? இப்படி ஒரு கதை யாராவது எழுதாமலா இருக்கப்போறாங்க? பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி, ஆதவா.


பரபரப்பு... விறுவிறுப்பு...
அசத்தலாகத் தொடர்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.


தொடர்ந்து வருவதற்கு நன்றி, கோவிந்த்.

அன்புரசிகன்
20-09-2010, 11:21 PM
அதுவுமில்லாமல் இங்கு பிள்ளைகளுக்கு இருவார விடுமுறை துவங்கிவிட்டது. அதனால் அடுத்தடுத்த அத்தியாயங்கள் பதிக்க சற்று தாமதம் ஏற்படலாம். உங்களைக் காக்க வைப்பதற்கு வருந்துகிறேன்.

அதுவா சங்கதி? வீதியில் வாகன நெருக்கடியே இல்லை. வழமையாக 50-60 நிமிட பயணம் நேற்று இன்று 20 நிமிடத்தில் வேலைக்கு வரமுடிந்தது... (மழையிலும்) நன்றாக பிள்ளைகளுடன் நேரத்தை கழியுங்கள். வரும் வெள்ளிக்கிழமை வெய்யிலாம். எங்காவது போய்வரலாமே... :D

Ravee
21-09-2010, 04:52 AM
மன்னிக்கணும் கீதம் உங்க தொடரை படிக்க முடியவில்லை வருத்தமாய் இருக்கிறது. அடுத்த வாரம் நேரம் கிடைக்கும் கண்டிப்பாக படித்துவிட்டு என் பின்னூட்டத்தை தருகிறேன் கீதம்

தாமரை
21-09-2010, 05:01 AM
என்ன ஒரு கொடூர கற்பனை? இப்படி ஒரு கதை யாராவது எழுதாமலா இருக்கப்போறாங்க? பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி, ஆதவா.
தொடர்ந்து வருவதற்கு நன்றி, கோவிந்த்.

இதை எழுதணும்னா கிரிமினல் பிரெய்ன் இருக்கிறவங்களாலத் தான் முடியும்.

தன்னை வாழவிடாதவர்களை நிம்மதியா வாழ விடாம இருக்க.. எல்லாத்தையும் சந்தேகப்பட வைக்கிற மாதிரி நிறைய ஆதாரங்களைச் செட்டப் செய்து வைத்து விட்டு தற்கொலை செய்து கொல்கிற மாதிரி ஒரு கதை..

ஆதவா ஐடியாவை யார் பிடிக்கிறாங்கன்னு பார்க்கலாம்.

ஆதவா
21-09-2010, 05:22 AM
என்ன ஒரு கொடூர கற்பனை?

நாங்கல்லாம் டெரர் பாய்ஸ்! :eek::D


தன்னை வாழவிடாதவர்களை நிம்மதியா வாழ விடாம இருக்க.. எல்லாத்தையும் சந்தேகப்பட வைக்கிற மாதிரி நிறைய ஆதாரங்களைச் செட்டப் செய்து வைத்து விட்டு தற்கொலை செய்து கொல்கிற மாதிரி ஒரு கதை..

யார் எழுதினாலும் எனக்கு ராயல்டி வேணும் ஆமாம்.... :rolleyes:

அன்புரசிகன்
21-09-2010, 05:59 AM
யார் எழுதினாலும் எனக்கு ராயல்டி வேணும் ஆமாம்.... :rolleyes:
சாதா-டி ஸ்பெஷல்-டி ஸ்ட்ரோங்-டி சைனா-டி என பல டி கேள்விப்பட்டிருக்கேன். இது என்ன ராயல்-டி???:rolleyes:

ஏன்னா இந்த ஒரு டி க்கு மட்டும் இப்படி அடம்பு டிக்கிறீங்களே அதனால கேட்டேன்...

ஆதவா
21-09-2010, 06:23 AM
சாதா-டி ஸ்பெஷல்-டி ஸ்ட்ரோங்-டி சைனா-டி என பல டி கேள்விப்பட்டிருக்கேன். இது என்ன ராயல்-டி???:rolleyes:

ஏன்னா இந்த ஒரு டி க்கு மட்டும் இப்படி அடம்பு டிக்கிறீங்களே அதனால கேட்டேன்...

அது ராயலா இருக்குல்ல அதான்!!! :D

தாமரை
21-09-2010, 06:33 AM
அது ராயலா இருக்குல்ல அதான்!!! :D

ஈரோடு பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில ராயல் ரெஸ்டாரண்ட்ல டீ வாங்கித் தரணும்.. அவ்வளவுதானே! ஓகே ஓகே..

இப்படித்தான், ஒசூர் கிருஷ்ணகிரி ரோட்டில வரும்பொழுது அண்ணிகிட்ட கேட்டேன்..

உனக்கு காமத்துப் பால் வேணுமா?

அண்ணி திரு திருன்னு விழிக்க...

அங்க தக்ஷிண் திருப்பதி அருகே பழைய ரிலையன்ஸ் இருந்த இடத்தில் புதுசா திறந்து இருந்து காமத் ஹோட்டலைக் காட்டினேன்.

காமத் ஹோட்டலில் வாங்கிய பால் காமத்துப் பால்தானே? :icon_b::lachen001:

கீதம்
21-09-2010, 08:39 AM
மன்னிக்கணும் கீதம் உங்க தொடரை படிக்க முடியவில்லை வருத்தமாய் இருக்கிறது. அடுத்த வாரம் நேரம் கிடைக்கும் கண்டிப்பாக படித்துவிட்டு என் பின்னூட்டத்தை தருகிறேன் கீதம்

அட, இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க? கதை நம்ம மன்றத்தைவிட்டு எங்க போகப்போவுது? நேரம் கிடைக்கும்போது பொறுமையாகப் படித்து கருத்துச் சொல்லுங்க, ரவி.

கீதம்
21-09-2010, 08:42 AM
நாங்கல்லாம் டெரர் பாய்ஸ்! :eek::Dயார் எழுதினாலும் எனக்கு ராயல்டி வேணும் ஆமாம்.... :rolleyes:

டெரர் பாய்ஸ்னு நீங்களே சொல்லிட்டீங்க. அப்புறமென்ன? மதிக்குப் போட்டியா 'என்னைக் கொலைசெய்துகொள்ளவா'ன்னு ஒரு தொடர் தொடங்கிடுங்க, ஆதவா.

கீதம்
21-09-2010, 09:07 AM
(8)

மாலை மணி ஏழரை இருக்கும். திடீரென்று மின்சாரம் போய்விட்டது. அதுவரை அடைகோழிகளென தங்கள் வீட்டு டிவி பெட்டிகளை அடைகாத்துக்கொண்டிருந்த காலனிவாசிகள், குளிர்கால உறக்கம் முடித்து பொந்திலிருந்து வெளிவரும் பாம்புகளென ஒவ்வொருவராய் வெளிவரத் தொடங்கினர்.

"டேய், ராஜா! அந்த மடக்கு நாற்காலிய எடுத்திட்டுவா!" எதிர்வீட்டு ராஜாப்பாவின் கட்டளையை அவர் மனைவி நிறைவேற்ற, "எங்கடி அவன்?" என்றார்.

"அவன் வண்டிய எடுத்திட்டுப் போய்தான் அரமணிநேரம் ஆச்சே!" அலட்சியமாய் பதில் சொன்னாள் ராஜாம்மா.

"என்னது, வண்டிய எடுத்திட்டுப் போயிருக்கானா? எவ்வளவு திமிரு? இன்னைக்குதான் பெட்ரோல் போட்டு வச்சேன், பயபுள்ள, ஊரைச்சுத்திட்டு எல்லாதையும் காலிபண்ணிட்டுதான் கொண்டுவந்து வைக்கப்போவுது!" மகனை கரித்துக்கொட்டினார்.

"என்ன விளையாடறீங்களா? உங்ககிட்ட கேட்டுட்டுதானே வண்டியை எடுத்தான்? சுப்பிரமணியபுரத்தில இருக்கிற ஃபிரெண்டுக்கு உடம்பு சரியில்லை, பாக்கப்போறேன்னு சொல்லிட்டுதானே போனான், அவன் கேட்டப்போ ஊம், ஊம்னு தலையை ஆட்டிட்டு இப்போ எங்கிட்ட கத்துறீங்க?"

இருவரின் உரையாடலையும் ஆரம்பத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த சித்ராப்பா இடையில் புகுந்தார்.

"என்ன மகாலிங்கம், உங்க பையன்கிட்ட தலையாட்டும்போது என்ன ஞாபகத்தில் இருந்தீங்க?"

"நான் டிவி பார்த்திட்டிருக்கும்போது வந்து கேட்டிருப்பான், சார், இந்தப் பயலுக்கு இதுதான் சார் வேல, நாம ஏதாவது இன்ட்ரஸ்டா பாத்துகிட்டிருக்கும்போது நைஸா வந்து காரியத்தை சாதிச்சிடுவான்."

"சரிதான், இத்தனநாள் அக்கம்பக்கத்தில நடக்கிறதுதான் தெரியாம இருந்துச்சு, இப்ப வீட்டுக்குள்ள நடக்கிறதுமா? இதெல்லாம் எங்கபோய் முடியப்போகுதோ?"

சித்ராப்பாவின் பேச்சில் இருந்த நியாயம் ராஜாப்பாவைப் பேசவிடாமல் கட்டிப்போட்டது. சற்றுநேரம் மெளனமாக இருந்தவர், பேச்சைத் திசை திருப்பும் முயற்சியாக,

"என்ன சார் , டீச்சர் விஷயத்துல உங்களைதான் போலிஸ் கொடகொடன்னு கொடஞ்சுதாமே?" எனவும், சித்ராப்பா உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார்.

"என்னை விடுங்க, அந்த ஈஷ்வர் தம்பிதான் பாவம், ரொம்பவும் பயந்திடுச்சு. ஆள் இன்னும் வெளியிலயே வரலை. அந்தப்பொண்ணுதான் எல்லாருக்கும் பதில் சொல்லிட்டிருக்கு. ஏன் மகாலிங்கம், நீங்க என்ன நினைக்கிறீங்க, இது திருட்டுக்குன்னு நடந்த கொலைன்னா?"

"நமக்கென்ன சார் தெரியும்? விசாரணை முடியிறவரைக்கும் அவங்க கேக்கிற கேள்விக்கு பதிலைச் சொல்லிட்டு மத்த விஷயங்களைப் பேசாம இருக்கிறதுதான் உத்தமம்."

"அதில்லைங்க,கத்தியைக் காட்டினா கழுத்தில, காதுல இருக்கிறதைக் கழட்டித்தரமாட்டேன்னா டீச்சர் சொல்வாங்க? அதுலபாருங்க, கழுத்த அறுத்தவனுக்கு காதறுக்க எவ்வளவு நேரமாகப்போவுது? கம்மலை அழகா கழட்டி எடுத்திருக்கான். அதுமட்டுமில்ல, கையில, கழுத்தில இருக்கிறத களவாடினவனால பீரோவைத் தொறந்து எடுக்கத் தெரியாதா? இவ்வளவுக்கும் பீரோ சாவி பீரோ மேலேயே இருக்கு. நீங்க வேணா பாருங்க, எவனோ தெரிஞ்சவந்தான் இதைப் பண்ணியிருக்கணும்"

"சார், போலிஸ் உங்களுக்கு மேல யோசிப்பாங்க, கண்டுபிடிச்சிடுவாங்க, நீங்க அலட்டீக்காதீங்க."

"ஏங்க, இந்நேரத்துக்கு உங்களுக்குப் பேச வேற சேதியே கிடைக்கலையா? எங்க பாத்தாலும் இருளோன்னு கிடக்கு. நீங்க வேற எதையாவது பேசி பயமுறுத்தாதீங்க." சித்ராம்மா கடிந்தபடியே வந்தாள்.

"மகாலிங்கம், நம்ம தெருவில நிறைய பேரு வீட்டை மாத்த எழுதிக்கொடுத்திருக்காங்களாம்ல, கேட்டாலே சிரிப்புதான் வருது." சித்ராப்பா உரக்கச் சிரித்துக்கொண்டார்.

"ஏன் சார் சிரிக்கிறீங்க?" ராஜா அப்பா புரியாதவராய் கேட்டார்.

"இந்த ஜனங்களை நினைச்சு சிரிக்காம என்ன பண்றது? சாரதா டீச்சர் இருக்கிறவரைக்கும் தாயா புள்ளயா பழகுனவங்க எல்லாம் அவங்க செத்தபிறகு பேயா பிசாசால்ல நினைக்கிறாங்க? எத்தன உத்தமமான மனுஷி! போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணினாங்களோ, அப்ப தெய்வமா தெரிஞ்சவங்க, இப்ப எல்லாருக்கும் பயங்கரமா இருக்காங்க. இப்ப பயம் திருடனுக்கோ, கொலகாரனுக்கோ இல்ல, அந்த டீச்சரோட ஆவிகிட்டதான்! இந்த மடத்தனத்த பாத்து சிரிக்காம என்ன பண்ணச் சொல்றீங்க?" சித்ராப்பா மீண்டும் சிரிக்க, பளிச்சென்று விளக்குகள் எரிந்தன.

ராஜாப்பா ஒன்றும் பேசாமல் நாற்காலியை மடக்கி எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார். வீடு மாற்றத்துக்கு எழுதிக்கொடுத்திருப்பவர்களில் அவரும் ஒருவர்!

*********************************************************

வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவர்களுக்கு டீச்சரின் கொலை அவலாக ஆகிப்போனது. எல்லோரும் தங்களுக்குத் தெரிந்த, தெரியாத விவரங்களை அடுத்தவரிடம் பரப்புவதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர். ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கினர். இந்தக் கொலை பற்றி போலிஸைவிடவும் தங்களுக்கு அதிகம் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்ளவே ஒவ்வொருவரும் விரும்பினர். இதற்கு சித்ராம்மா வீட்டை மையமாய்க் கொண்டு பல படையெடுப்புகள் நிகழ்த்தப்பட்டவண்ணம் இருந்தன, அந்த வீட்டினருக்கு தங்களைவிடவும் ஒரு சதவீதமாவது கூடுதலாய்த் தெரிந்திருக்கும் என்ற திடமான நம்பிக்கையில்!

"சித்ராம்மா....சித்ராம்மா..... வீட்டுலதான் இருக்கீங்களா....."

"யாரு? கோவிந்தம்மாவா? வாங்க, என்ன இந்தப்பக்கம்?"

"ரேசன் கடைக்கு சக்கரை வாங்க வந்தேன், சரி, அப்படியே உங்களையும் பாத்திட்டுப் போலாம்னு வந்தேன்."

"வாங்க, உங்க பேரப்புள்ள எப்படியிருக்கான்?"

"அவனுக்கென்ன? எல்லாரையும் நல்லா ட்ரில்லு வாங்குறான். சரியான வாலு!"

"என்னா இப்படி அலுத்துக்கிறீங்க?"

"அலுத்துக்கிறதா? யப்பா! அது அடிக்கிற லூட்டி தாங்கல. உங்களுக்கு ஒருத்தன் வந்தாதான் என் பாடு புரியும்"

"ஹு....ம், அந்தக் கொடுப்பினையெல்லாம் எனக்கு இருக்கான்னு தெரியலையே...." சித்ராம்மா பெருமூச்சு விட்டபடி, அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டிருந்த ரஞ்சனியை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

"சரி, சித்ராம்மா....இந்த டீச்சர் கெதியப் பாத்தீங்களா? அந்த மனுசிக்கு இப்படி ஒரு நெலம வரணுமா?"

"என்ன பண்றது, கோவிந்தம்மா, யார் தலையில என்ன எழுதியிருக்கோ அதுப்படிதான நடக்கும்?"

"ஆமா, நீங்க போய் பாத்தீங்களா? ரொம்பக் கண்றாவியா இருந்துச்சாமே!"

"இல்லைங்க, சித்ராப்பா எங்களையெல்லாம் வெளியிலயே வரப்படாது கண்டிஷனா சொல்லிட்டாரு, அவருக்கே பாக்க சகிக்கலயாம். மூட்டை கட்டிதான் எடுத்திட்டுப் போனாங்களாம்"

"அதெப்படிங்க, பக்கத்துவீட்டுல ஒரு பொணம் கிடக்கிறது கூட தெரியாம இருந்திருக்கிறீங்க?"

"என்னத்தச் சொல்றது? அதை நெனைச்சாலே எனக்கு இப்பவும் கொமட்டுது"

வாசல் கதவைத் திறந்துகொண்டு சித்ராப்பா வேகநடைபோட்டு உள்ளேவந்தார்.

"ஏய், பார்வதி, நான் அன்னைக்கே சொல்லல, இந்தக் கொலையில ஏதோ உள்நோக்கம் இருக்குன்னு. பாரு, பேப்பர்ல போட்டிருக்கான், இது திருட்டுக்காக நடந்தது இல்லன்னு, வேற ஆங்கில்லயும் போலிஸ் விசாரணை பண்ணுதாம். நெறைய அறிமுகமில்லாத கைரேகைங்க கிடைச்சிருக்காம், டீச்சர் வீட்டுக்கு அடிக்கடி யார் யாரோ வரப்போக இருந்திருக்காங்களாம். அது எப்படிடி நமக்குத் தெரியாம இருக்கும்? அநேகமா மறுபடியும் விசாரணைக்கு வருவானுங்கன்னு நினைக்கிறேன்."

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க சொல்லி முடித்தவர், அப்போதுதான் கோவிந்தம்மாவைக் கண்டவராய், "வாங்க, எப்ப வந்தீங்க?" என்றார்.

அவருக்குப் பதில் சொல்வதைவிடவும், தகவல்களைத் திரட்டுவதிலேயே ஆர்வம் காட்டினாள், கோவிந்தம்மா.

"எனக்கென்னமோ போலிஸை திசை திருப்ப கொலைகாரன் பண்ணின வேலையாக்கூட இருக்கலாம்னு ஒரு நினைப்பு! நீ என்ன நினைக்கிற?" சித்ராப்பா மனைவியைப் பார்த்துக்கேட்டார்.

குளித்துமுடித்து தலையைத் துவட்டிக்கொண்டே வந்த சிவா, "ஏம்ப்பா, நீங்க வாயை வச்சிகிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா? எதையாவது உளறிவச்சி பிரச்சனையில மாட்டிக்கப்போறீங்க, உங்களோட சேர்ந்து நாங்களும் அல்லாடப்போறோம்!"

"என்னடா பிரச்சனையாயிடும்? எனக்குத் தோணுனதை சொல்றேன். அதை சொல்லக்கூட உரிமை இல்லையா?"

"சொல்லுங்க, வேணாங்கல, ஆனா தேவையில்லாம மத்தவங்க முன்னாடி எதையாவது பேசி பிரச்சனையில மாட்டிக்காதீங்கன்னுதான் சொல்றேன்"

கோவிந்தம்மா அங்கிருப்பதைத்தான் சிவா குறிப்பாய் உணர்த்துகிறான் என்பதைப் புரிந்துகொள்ளாதவராய் சித்ராப்பா கோபமாக கேட்டார்.

"ஏன்டா, இருவது வருஷமா ஒண்ணுமண்ணா பழகுன ஒரு மனுஷி கோரமா கொலையாகி இருக்கா! அவளப் பத்தி பேசக்கூடாதுன்னு சொல்றியே, நீயுந்தானே அந்த சாரதா டீச்சர்கிட்ட ரெண்டுவருஷம் படிச்சே? அந்த நன்றி, விசுவாசம் கொஞ்சமாவது இருக்கா உனக்கு?"

"எல்லாம் இருக்கு, நீங்க சும்மா அதைப் பத்தியே பேசிப் பேசி எரிச்சலை உண்டாக்காதீங்க"

சட்டையை மாட்டிக்கொண்டு வெளியேறியவனைப் பார்த்து, "இந்தக் காலத்துப் புள்ளைங்களே இப்படிதான்!" என்று விரக்தி மேலிட, வழக்கமான பல்லவியைப் பாடினார்.

**************************************************************************

Nivas.T
21-09-2010, 10:02 AM
" அடுத்து பேயும் வருதா?"
பலே பலே
வரட்டும் வரட்டும்

Nivas.T
21-09-2010, 10:04 AM
டெரர் பாய்ஸ்னு நீங்களே சொல்லிட்டீங்க. அப்புறமென்ன? மதிக்குப் போட்டியா 'என்னைக் கொலைசெய்யவா'ன்னு ஒரு தொடர் தொடங்கிடுங்க, ஆதவா.

"என்னைத் தற்கொலை செய்ய நீ வா"

டைட்டில் எப்புடி :rolleyes:

சிவா.ஜி
21-09-2010, 01:28 PM
எங்கேயோ நடந்த விஷயத்தைப் பேப்பர்ல பாத்தே பலதையும் பேசற ஜனங்க....அவங்க ஏரியாவுலேயே நடந்ததைப் பத்தி இவ்வளாவாச்சும் பேசலைன்னா எப்படி.

ஆனா எப்படியோ எங்களையெல்லாம் செமையா குழப்பறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க....அதுல சூப்பரா வெற்றியும் அடைஞ்சிட்டீங்க....

அசத்துங்க தங்கையே.....!!!

கீதம்
22-09-2010, 03:11 AM
" அடுத்து பேயும் வருதா?"
பலே பலே
வரட்டும் வரட்டும்

பேய்க்கு ஏதுங்க கைரேகையெல்லாம்? என்னையே குழப்புறீங்களே?:confused:

கீதம்
22-09-2010, 03:12 AM
"என்னைத் தற்கொலை செய்ய நீ வா"

டைட்டில் எப்புடி :rolleyes:

ஆகா, பிரமாதம்.

கீதம்
22-09-2010, 03:14 AM
எங்கேயோ நடந்த விஷயத்தைப் பேப்பர்ல பாத்தே பலதையும் பேசற ஜனங்க....அவங்க ஏரியாவுலேயே நடந்ததைப் பத்தி இவ்வளாவாச்சும் பேசலைன்னா எப்படி.

ஆனா எப்படியோ எங்களையெல்லாம் செமையா குழப்பறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க....அதுல சூப்பரா வெற்றியும் அடைஞ்சிட்டீங்க....

அசத்துங்க தங்கையே.....!!!

அண்ணா, இந்த மாதிரி கரு எடுத்து கதை பின்னுவது என்னுடைய முதல் முயற்சி. ரொம்பவெல்லாம் குழம்பாதீங்க. கதை முடிந்தபிறகு நீங்கள் எல்லாரும் என்னை முற்றுகையிட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுக் குடையப்போறீங்க, அதுக்குத் தயாரா இருங்க.

அன்புரசிகன்
22-09-2010, 03:25 AM
என்னவோ நடக்குது. மர்மமா இருக்குது என்ற பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது. கதைக்கான எதிர்பார்ப்பு பாகம் கூட கூட கூடுது. தொடருங்கள். வாழ்த்துக்கள் கீதம்.

தாமரை
22-09-2010, 04:19 AM
அண்ணா, இந்த மாதிரி கரு எடுத்து கதை பின்னுவது என்னுடைய முதல் முயற்சி. ரொம்பவெல்லாம் குழம்பாதீங்க. கதை முடிந்தபிறகு நீங்கள் எல்லாரும் என்னை முற்றுகையிட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுக் குடையப்போறீங்க, அதுக்குத் தயாரா இருங்க.

சிவா.ஜி? கேள்வி மேல் கேள்வி?

இல்லையே.. கதையின் க.க.க.போ சிவா,ஜியாச்சே..

அவர் 3 கேள்விக்கு மேல் கேட்டா...

நானும் அப்புறம் மர்மக்கதை எழுத ஆரம்பிச்சிடுவேன்.:icon_b:

ஆதவா
22-09-2010, 06:13 AM
சிவா.ஜி? கேள்வி மேல் கேள்வி?

இல்லையே.. கதையின் க.க.க.போ சிவா,ஜியாச்சே..

அவர் 3 கேள்விக்கு மேல் கேட்டா...

நானும் அப்புறம் மர்மக்கதை எழுத ஆரம்பிச்சிடுவேன்.:icon_b:

நீங்க மர்ம கதை எழுதினா, அது அனுபவமாத்தான் இருக்கும்!! :icon_b:

அனுராகவன்
22-09-2010, 03:58 PM
மர்மம் கதைக்கு அமிர்தம்..
நல்ல ரசனை..
தொடருங்கள் நண்பரே!!

கீதம்
23-09-2010, 12:04 AM
என்னவோ நடக்குது. மர்மமா இருக்குது என்ற பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது. கதைக்கான எதிர்பார்ப்பு பாகம் கூட கூட கூடுது. தொடருங்கள். வாழ்த்துக்கள் கீதம்.

தொடர்ந்து வருவதற்கு நன்றி, அன்புரசிகன்.

கீதம்
23-09-2010, 12:07 AM
சிவா.ஜி? கேள்வி மேல் கேள்வி?

இல்லையே.. கதையின் க.க.க.போ சிவா,ஜியாச்சே..

அவர் 3 கேள்விக்கு மேல் கேட்டா...

நானும் அப்புறம் மர்மக்கதை எழுத ஆரம்பிச்சிடுவேன்.:icon_b:

அப்படியா? அப்படி என்றால் நானே கேள்விகளை எடுத்துக்கொடுத்து சிவாஜி அண்ணாவைக் கேட்கவைத்து உங்களை மர்மக்கதை எழுதவைத்துவிடுகிறேன். அனுபவஸ்தராகிய நீங்கள் எழுதினால் வெகுசுவையாக இருக்கும் அல்லவா?:icon_b:


நீங்க மர்ம கதை எழுதினா, அது அனுபவமாத்தான் இருக்கும்!! :icon_b:

கீதம்
23-09-2010, 12:09 AM
மர்மம் கதைக்கு அமிர்தம்..
நல்ல ரசனை..
தொடருங்கள் நண்பரே!!

நன்றி, அனு.

அன்புரசிகன்
23-09-2010, 12:32 AM
அப்படியா? அப்படி என்றால் நானே கேள்விகளை எடுத்துக்கொடுத்து சிவாஜி அண்ணாவைக் கேட்கவைத்து உங்களை மர்மக்கதை எழுதவைத்துவிடுகிறேன். அனுபவஸ்தராகிய நீங்கள் எழுதினால் வெகுசுவையாக இருக்கும் அல்லவா?:icon_b:
:eek::eek::eek:
இதை கேட்க்க தாமரைச்செல்வி எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும். :D :D :D

அனுராகவன்
23-09-2010, 02:34 AM
:eek::eek::eek:
இதை கேட்க்க தாமரைச்செல்வி எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும். :D :D :D
:lachen001::lachen001:

கீதம்
23-09-2010, 05:48 AM
:eek::eek::eek:
இதை கேட்க்க தாமரைச்செல்வி எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும். :D :D :D

என்னா ஒரு வில்லத்தனம்? :eek::eek:

கீதம்
23-09-2010, 05:50 AM
(9)

"புஷ்பா, இதையெல்லாம் நீ ஏன் போலிஸ்கிட்ட சொல்லலை?"

"என்னன்னு சொல்றது? சாரதாவுக்கு ஏதோ மனப்பிரமை, இதைப்போய் பெரிசா சொல்லணுமான்னுதான் சொல்லல."

"படிச்சிருந்தும் உனக்கு புத்தியில்ல, புஷ்பா! நீ சொல்லாம விட்டது தப்புதான், புஷ்பா."

"இங்க பாருங்க, நான் சொல்றதா வேணாமான்னு குழப்பத்தில இருக்கேன். அதுக்குதான் உங்ககிட்ட யோசனை கேட்டேன். நீங்க இப்படி என்னைக் குத்தம் சொல்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்ககிட்டயும் சொல்லியிருக்கமாட்டேன்."

புஷ்பா தன் கணவனிடம் சிடுசிடுத்தாள். புஷ்பா, சாரதா டீச்சரைவிடவும் இளையவராக இருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் வா, போ என்று உரிமையுடன் அழைத்துக்கொள்ளும் அளவுக்கு இணைபிரியாத தோழிகள். போலிஸ், விடுமுறைக்கு வெளியூர் சென்றிருந்தவர்களைத் தவிர புஷ்பா உள்ளிட்ட மற்ற ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து விசாரித்திருந்தது.

புஷ்பா, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாலும், தானாய் முன்வந்து எந்த விவரத்தையும் சொல்லத் துணியவில்லை. முக்கியமாய் சாரதா டீச்சர் கொலையான நாள் காலையில் இவர்கள் இருவருக்குமிடையில் நடந்த உரையாடலை முழுவதுமாய் தணிக்கை செய்தே வெளியிட்டாள். அதை சொல்வதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்று நினைத்திருந்தாள்.

ஆனால் இரண்டு மூன்று நாட்களாகவே மனம் ஒரு நிலையில் இல்லை. கனவில் அடிக்கடி சாரதா வந்துபோகிறாள். பதினைந்து வருடப் பழக்கம். இப்படி ஒரேநாளில் முடிந்துவிட்டதே! பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பிரிவுபசாரவிழாவை எப்படியெல்லாம் பிரமாதமாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர்.

"சரி, டென்ஷனாகாத, அன்னைக்கு அந்த ஆபிஸர் கொடுத்த கார்டு இருக்குதானே, குடு, அவருக்குப் போன் பண்ணிப்பாக்கிறேன்."

"ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டார்தானே?"

"நினைச்சாலும் ஒண்ணும் பண்ணமுடியாது. ஆனா சொல்லாம இருக்கிறது ரொம்ப தப்பு"

புஷ்பா நிம்மதியாய் உணர்ந்தாள். இந்தத் தகவல் கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவுமா உதவாதா என்று தெரியவில்லை. ஆனால் தன் மன பாரம் நிச்சயம் குறைந்துவிடும் என்று நம்பினாள். அன்று மாலையே வீட்டுக்கு வந்தார் புலனாய்வு அதிகாரி. உள்ளூர் காவல்நிலைய கான்ஸ்டபிள் ஒருவரும் உடன் வந்திருந்தார்.

புஷ்பா டீச்சரின் வீடு, காலனியை ஒட்டிய ராஜீவ் நகரில் இருந்தது. பழையகாலத்து வீடு.

வீட்டை நோட்டமிட்ட அதிகாரி, 'டேவிட்' என்று தன்னை ராஜாராமிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

"சார், நான் ராஜாராம், ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றேன், இவங்க என் மனைவி, புஷ்பா! இவங்கதான்...."

"வாங்க, மேடம், உட்காருங்க, ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களாம்"

புஷ்பா கணவரின் அருகில் அமர்ந்தாள்.

"ஸாரி, சார். எனக்கு ஒரே குழப்பமா இருந்தது, அதான் முன்னாடியே சொல்லல."

"பரவாயில்ல, சொல்லுங்க"

எப்படியாவது இந்தக் கேஸை முடித்துவிட ஆர்வம் காட்டினார் அவர்.

"சார், சாரதா கொலையானதா சொன்ன அந்த வெள்ளிக்கிழமை காலையில என்கூட நிறைய பேசினா, ஆக்சுவலா, அன்னைக்கு அவளை அரைநாள் லீவு எடுத்துகிட்டு வீட்டுக்குப் போகச் சொன்னதே நான்தான் சார், அதுதான் நான் செஞ்ச தப்பு. சாரதா என்னை மன்னிக்கவே மாட்டா!"

"அழாதீங்க, ப்ளிஸ்."

"ஸாரி, சார்."

கண்களைத் துடைத்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு புஷ்பா அன்றைய நிகழ்வுகளைத் தொடுக்கத் தொடங்கினாள்.

***************************************************************************
தேர்வு நடந்துகொண்டிருந்ததால் மற்ற ஆசிரியர்கள் வகுப்பறையில் கண்காணிப்புக்கிருக்க, தலைமையாசிரியர் அறையில் சாரதா டீச்சரும், புஷ்பா டீச்சரும் அலுவலில் ஈடுபட்டிருந்தனர். சாரதா டீச்சரிடம் வழக்கமான சுறுசுறுப்பு காணப்படாததை புஷ்பா கவனித்துவிட்டுக் கேட்டாள்.

"என்ன சாரதா, டல்லா இருக்கே?"

"ப்ச், ஒண்ணுமில்லப்பா!"

"என்ன, கமலி நினைப்பா?"

"அதுவும் இருக்கு, அதைவிடவும் வேற ஒரு விஷயம் இருக்கு, சொன்னா கிண்டல் பண்ணக்கூடாது"

"என்ன புதிர் போடறே, சொல்லு, கிண்டல் பண்ணமாட்டேன்"

"புஷ்பா, இன்னும் கொஞ்சநாளில எனக்குப் பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயமா இருக்குப்பா!"

"ஐயையோ, இந்த ஸ்கூல்லயே சூப்பரான டீச்சர்னு பேர் வாங்கின உனக்கே இந்த நிலைமையா?"

"ஏய், சீரியஸாதான் சொல்றேன், கொஞ்சநாளாவே எனக்கு ஏதோ ஒரு பிரமைப்பா. என்னவோ என்வீட்டுல என்னைத்தவிர வேற யாரோ புழங்குறமாதிரி!"

"சாரதா, என்னப்பா, என்னென்னவோ சொல்லி பயமுறுத்துறே?"

"நிஜமாதான் சொல்றேன், புஷ்பா. பிரமையா, நிஜமா ஒண்ணும் புரியல. சிலசமயம் யோசிச்சு யோசிச்சு எனக்கு பிரஷர்தான் அதிகமாகுது."

"ரொம்ப வருஷமா தனியாவே இருக்கிற, அதனால மனரீதியா ஏதாவது பிரச்சனை இருக்கப்போவுது, வேணுமின்னா ஒரு டாக்டரைப் பார்ப்போமா?

"நான் சொல்றத முழுசா கேட்டுட்டு சொல்லு. உனக்கே தெரியும், நான் காலையில ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி ஃப்ரிட்ஜ் தவிர எல்லா ஸ்விட்சையும் நிறுத்திடுவேன். ஒருநாள் சாயங்காலம் பாத்தா ஃபேன் ஓடிகிட்டிருக்கு. ஒருநாள் சிங்க் ஈரமா இருக்கு, இன்னொருநாள் ஃப்ரிட்ஜில தண்ணீ பாட்டில் காலியா இருக்கு."

"அவ்வளவுதானா? நானும் பயந்திட்டேன். ஏய், உனக்கும் வயசாயிட்டே வருதுப்பா! சிலசமயம் மறதியா நடக்கிறதுதான் இதெல்லாம். நீ கிளம்பும்போது கரண்ட் போயிருந்திருக்கும், நீ ஃபேனை நிறுத்திட்டதா நினைச்சு வந்திருப்பே, கரண்ட் வந்ததுக்கு அப்புறம் ஓடிட்டிருந்திருக்கும். அப்புறம் அந்த சிங்க் பைப்பை சரியா மூடாம வந்திருப்ப, மூணு மணிக்கு தண்ணி விட்டப்போ சொட்டி ஈராமாயிருந்திருக்கும், இன்னொன்னு சொன்னியே, தண்ணி பாட்டில்! நீயே குடிச்சிருப்பே! எதையாவது கற்பனை பண்ணிகிட்டு உடம்பக் கெடுத்துக்காத, சாரதா!"

புஷ்பா மிகவும் ஆறுதலாய் சொன்னாள். ஆனாலும் சாரதா சமாதானமாகவில்லை.

"இல்ல, புஷ்பா, உனக்கு எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியல, படுக்கைவிரிப்பெல்லாம் கசங்கியிருக்கு. இத்தன வருஷமா புழங்குறேன், எனக்குத் தெரியாதா, நம்மளைத் தவிர இன்னொருத்தர் புழங்குறது? இன்னொன்னு சொன்னா நீ கண்டிப்பா ஒத்துக்குவே!"

"என்ன?"

"எங்க பக்கத்து வீட்டுல பிரமிளான்னு ஒரு பொண்ணு, குடிவந்து ஆறுமாசம் தான் ஆவுது. போனவாரம் ஒருநாள், நான் ஸ்கூல் முடிஞ்சு போகும்போது பாத்து, 'டீச்சர், உங்க வீட்டுக் கொல்லக்கதவு தாழ்போடமறந்திட்டீங்களா? யாரோ ஒரு பொம்பள உள்ளயிருந்து வெளியில போனத பாத்தேன்' அப்படின்னுச்சு. நானும் பதறிப்போய் வீட்டுக்குள்ள போய்ப் பாத்தா எல்லாம் வச்சது வச்சமாதிரி இருக்கு, கொல்லை க்ரில் பூட்டினபடி இருக்கு. கொல்லைக்கதவும் உள்பக்கம் தாழ்போட்டிருக்கு.

அந்தப்பொண்ணுக்கு ரொம்ப அதிர்ச்சியாயிடுச்சி, நானும் விளையாட்டா அந்தப் பொண்ணுகிட்ட எதையோ சொல்லி சமாளிச்சிட்டேன். ஆனா எனக்கிருந்த சந்தேகம் ஊர்ஜிதமாயிடுச்சு. யாரோ நான் இல்லாதப்ப என் வீட்டுக்குள்ள வராங்க, போறாங்க. ஒரே மர்மமா இருக்குப்பா!"

"நீ சொல்றதை என்னால புரிஞ்சுக்கவே முடியல, சாரதா. அப்படியே எவனாவது ஓட்டைப் பிரிச்சிட்டு இறங்குனாலும், சும்மா வந்து ஃபேனைப் போட்டு காத்து வாங்கிட்டு, பைப்பையும், ஃப்ரிட்ஜையும் திறந்து தண்ணியக் குடிச்சிட்டுப் போயிடுவானா? ஏதாவது ஆவியா இருந்தாலும், ஆவி தண்ணி குடிக்குமா? காத்து வாங்குமான்னு தெரியல."

"நீ நம்ப மாட்டேன்னு எனக்குத் தெரியும். நீ மட்டுமில்ல, யாருமே இதை நம்பமாட்டாங்க, அதனால்தான் யார்கிட்டயும் சொல்லாம இருந்தேன். இன்னைக்கென்னவோ எனக்கு காலையில இருந்து ஒரே படபடப்பா இருக்கு. சொல்லமுடியாத திகிலா இருக்கு. தலைவலி வேற, இன்னைக்கு கடைசி பரிட்சையாச்சேன்னுதான் பல்லக் கடிச்சிட்டு வந்தேன். இன்னைகு நைட் கிளம்பிப்போய் கமலியைப் பாத்துட்டு வரலாம்னு இருக்கேன். லெட்டர் எழுதிக்கொடுக்கிறேன், இந்த பேப்பர் கரெக்ஷன் வேலையை எல்லாம் நீயோ சுந்தரம் சாரோ பாத்துக்கறீங்களா?"

"ஸ்கூலப் பத்திக் கவலைப்படாதே! நாங்க பாத்துக்கிறோம், நீ தாராளமாப் போய்ட்டுவா! உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும், சரி, கமலிக்கு போன் பண்ணி சொல்லிட்டியா?"

"இல்லப்பா, ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லல."

"டிக்கட்?"

"பஸ்லதான் போகப்போறேன்"

"நல்லபடியாப் போய்ட்டு வா! பஸ் பயணம்னா சரியா வராதே! நான் சொல்றதைக் கேளு, நீ இப்பவே வீட்டுக்குக் கிளம்பு, போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்திட்டு போனா சரியா இருக்கும், பஸ் ஸ்டாண்டுக்கு எப்படிப் போவ? எங்க வீட்டுல அவரை வரச்சொல்லவா?"

"வேணாம்பா! நான் ஆட்டோ பிடிச்சிப் போயிடுவேன்"

"எல்லாம் சரி, மகளைப் பாத்த சந்தோஷத்திலே அங்க இருந்தே வி.ஆர்.எஸ். கொடுத்திடாதே. இங்க உனக்கு பிரமாண்டமா வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடு பண்ணிகிட்டிருக்கோம்."

"எனக்கெதுக்குப்பா அதெல்லாம்?"

"எதுக்கா? ஒருநாள் கூட லீவு எடுக்காம உன் வாழ்க்கையையே இந்த ஸ்கூலுக்கு அர்ப்பணிச்சிருக்கே, உனக்குச் செய்யிறது எங்களுக்கெல்லாம் பெருமை இல்லையா?"

அன்று சாரதாவிடன் சொன்னபோது கலங்கியது போலவே இப்போதும் கண்கள் கலங்கியிருந்தன. ஆனால் மனம் தெளிவாக இருந்தது.

அதிகாரி டேவிட்டுக்கு இந்தத் தகவல் பெரிதும் உதவும் என்று புரிந்தது. பிரமிளா சொல்லாமல் மறைத்த விவரமும் அறிந்துகொள்ளமுடிந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றியுடன் ராஜாராமிடம் கைகுலுக்கி விடைபெற்றார். விடைபெறுமுன்,

"உங்க வீட்டு மெம்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தவில்லையே?" என்று, உள்ளேயிருந்து அவ்வப்போது குறுகுறுப்புடன் எட்டிப்பார்த்த தலைகளை மனதில் கொண்டு குறுஞ்சிரிப்பு சிரித்தபடி கேட்டார்.

ராஜாராம் உள்ளிருந்த பெண்களை அழைத்தார். சற்று வயதான ஒருத்தியைக் காட்டி, "இவங்கதான் என் அம்மா," என்றார். அந்த அம்மாள் வெகுவாய் சங்கோஜப்பட்டார்.

அடுத்து இருபதுகளில் நின்ற இரட்டைப் பெண்களை, தன் தங்கைகள் ஜெயா, விஜயா எனவும் கூடியவிரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். அவர்கள் நாணத்தால் நெளிந்தனர்.

டேவிட் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றதும்,

"ஏங்க, ரஞ்சித் பத்தி நீங்க எதுவுமே சொல்லையே" என்ற புஷ்பாவின் கேள்விக்கு,

"ஆமாம், சொல்லிக்கிற மாதிரி என்ன கிழிச்சிருக்காரு, தொர?" என்று உச்சகட்ட வெறுப்பை உமிழ்ந்தார் ராஜாராம்.

********************************************************

பூமகள்
23-09-2010, 07:40 AM
சிலப் பல யூகங்களை உண்டாக்குகிறது கதையின் போக்கு.. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. :confused::icon_ush:

கீதமக்கா.. கதை வெகு சுறுசுறுப்பாக கொண்டு செல்கிறீர்கள்.. எப்படி இத்தனை எதார்த்தத்தை வார்த்தைகளில் வடிக்கிறீர்களென வியக்கிறேன்.. இனி எல்லா பாகமும் முடியாமல் நான் இந்தப் பக்கம் வந்து படிப்பதில்லையென்று முடிவெடுத்துவிட்டேன்.. ஏனெனில், என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல அக்கா.

கலக்கறீங்க.. உங்க கிட்ட நிறைய கத்துக்கனும். எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிட்டே இருங்க. பாராட்டுகள் கீதமக்கா. :)

(உங்க எழுத்து எனக்கு யவனி அக்காவை நினைவு படுத்துது.. யவனிகா அக்கா.. ஐ மிஸ் யூ சோ மச்.. :frown:)

Nivas.T
23-09-2010, 07:41 AM
மர்மம்........ மர்மம்........ ஒரே.... மர்மம்................

புதுசா ரஞ்சித் வருகிறார்.......... சந்தேகம் இன்னும் வலுக்கிறது, என்னால யூகிக்க முடியுது ஆனா நிச்சயமா நினைக்க முடியல......... ஒரே.....குழப்பம்

இந்த வரிகள படிச்சு என்னால சிரிக்காம இருக்க முடியல


(9)
ஏதாவது ஆவியா இருந்தாலும், ஆவி தண்ணி குடிக்குமா? காத்து வாங்குமான்னு தெரியல.

:lachen001::lachen001::lachen001:
:icon_b:

govindh
25-09-2010, 12:32 PM
வெகுவாக ரசித்து படித்த வரிகள் :

"அடைகோழிகளென தங்கள் வீட்டு டிவி பெட்டிகளை அடைகாத்துக்கொண்டிருந்த காலனிவாசிகள், குளிர்கால உறக்கம் முடித்து பொந்திலிருந்து வெளிவரும் பாம்புகளென ஒவ்வொருவராய் வெளிவரத் தொடங்கினர்."

ஈரைப் பேனாக்கி....பேனைப் பெருமாளாக்கி......

விறுவிறுப்பு குறையாமல்...
நயமுடன்..கதை அமைக்கிறீர்கள்...
தொடர்ந்து அசத்துங்கள்.

Nivas.T
25-09-2010, 02:28 PM
அத்தியாயம் 10 எங்கே..........? எங்கே..............? எங்கே......................................................................?:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

அன்புரசிகன்
26-09-2010, 01:34 AM
இரண்டு ஆசிரியர்களின் யதார்த்தமான உரையாடல். நெருக்கத்தினால் வந்த சோகம் என அழகாக காட்டியுள்ளீர்கள். ரஞ்சித்... அங்க ஏதாவது இருக்குமோ.... தொடருங்கள். வாழ்த்துக்கள் கீதம்

கீதம்
26-09-2010, 09:39 PM
சிலப் பல யூகங்களை உண்டாக்குகிறது கதையின் போக்கு.. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. :confused::icon_ush:

கீதமக்கா.. கதை வெகு சுறுசுறுப்பாக கொண்டு செல்கிறீர்கள்.. எப்படி இத்தனை எதார்த்தத்தை வார்த்தைகளில் வடிக்கிறீர்களென வியக்கிறேன்.. இனி எல்லா பாகமும் முடியாமல் நான் இந்தப் பக்கம் வந்து படிப்பதில்லையென்று முடிவெடுத்துவிட்டேன்.. ஏனெனில், என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல அக்கா.

கலக்கறீங்க.. உங்க கிட்ட நிறைய கத்துக்கனும். எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிட்டே இருங்க. பாராட்டுகள் கீதமக்கா. :)

(உங்க எழுத்து எனக்கு யவனி அக்காவை நினைவு படுத்துது.. யவனிகா அக்கா.. ஐ மிஸ் யூ சோ மச்.. :frown:)

பூமகள், உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகள் எனக்கு புது உற்சாகம் தருகின்றன. அத்தனை சஸ்பென்ஸாகவா இருக்கிறது? மிகவும் நன்றி. இன்னும் குறைந்தபட்சம் மூன்று அத்தியாயங்களில் கதை முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். முடிந்தபிறகு படித்து விமர்சியுங்கள்.

கீதம்
26-09-2010, 09:41 PM
மர்மம்........ மர்மம்........ ஒரே.... மர்மம்................

புதுசா ரஞ்சித் வருகிறார்.......... சந்தேகம் இன்னும் வலுக்கிறது, என்னால யூகிக்க முடியுது ஆனா நிச்சயமா நினைக்க முடியல......... ஒரே.....குழப்பம்

இந்த வரிகள படிச்சு என்னால சிரிக்காம இருக்க முடியல:lachen001::lachen001::lachen001:
:icon_b:

மிகவும் நன்றி, நிவாஸ். சிரிப்புத் திருடன் சிங்காரவேலு மாதிரி ஆயிட்டுதா என் கதை?:eek:

கீதம்
26-09-2010, 09:42 PM
வெகுவாக ரசித்து படித்த வரிகள் :

"அடைகோழிகளென தங்கள் வீட்டு டிவி பெட்டிகளை அடைகாத்துக்கொண்டிருந்த காலனிவாசிகள், குளிர்கால உறக்கம் முடித்து பொந்திலிருந்து வெளிவரும் பாம்புகளென ஒவ்வொருவராய் வெளிவரத் தொடங்கினர்."

ஈரைப் பேனாக்கி....பேனைப் பெருமாளாக்கி......

விறுவிறுப்பு குறையாமல்...
நயமுடன்..கதை அமைக்கிறீர்கள்...
தொடர்ந்து அசத்துங்கள்.

ரசித்ததைக் குறிப்பிட்டுப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துவதற்கு மிகவும் நன்றி, கோவிந்த்.

கீதம்
26-09-2010, 09:44 PM
அத்தியாயம் 10 எங்கே..........? எங்கே..............? எங்கே......................................................................?:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

வந்துகொண்டே இருக்கிறது.....:icon_b:

கீதம்
26-09-2010, 09:46 PM
இரண்டு ஆசிரியர்களின் யதார்த்தமான உரையாடல். நெருக்கத்தினால் வந்த சோகம் என அழகாக காட்டியுள்ளீர்கள். ரஞ்சித்... அங்க ஏதாவது இருக்குமோ.... தொடருங்கள். வாழ்த்துக்கள் கீதம்

தொடர்ந்து வந்து ஆதரவு தருவதற்கு நன்றி, அன்புரசிகன். இதோ....அடுத்த அத்தியாயம்!

கீதம்
26-09-2010, 09:50 PM
(10)

"ஜெயராமன், உங்களுக்கு புஷ்பா டீச்சரை முன்னாடியே தெரியுமா?" காரை ஓட்டிக்கொண்டே டேவிட் கேட்டார்.

டேவிட் கேட்டதும் கான்ஸ்டபிள் ஜெயராமன் வியந்துபோனார். புஷ்பா டீச்சரின் வீட்டுக்குள் நுழைந்ததும் டீச்சரைப் பார்த்து ஒரு புன்சிரிப்பைச் சிந்தியதையும், விடைபெற்று வெளியில் வரும்போது தலையசைத்து விடைபெற்றதையும் இவர் இத்தனை நுணுக்கமாகக் கவனித்திருக்கிறாரே என்ற வியப்புதான் அது.

"சார், அவங்களோட ஸ்கூல்லதான் சார், என் சம்சாரம் பழனியம்மா ஆயாவா வேல பாக்குது!"

"ஓ! ஐ ஸீ! அந்த டீச்சருக்கு குழந்தைகள் இல்லையா?"

"இல்ல சார், இவங்க ரெண்டுபேரும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்க சார். புஷ்பா டீச்சரோட புருஷனுக்கு முன்னெல்லாம் நல்ல வேல கூட கிடையாது, சார். என்னென்னவோ பிஸினஸ் பாத்து கடைசியா ரியல் எஸ்டேட் பிஸினஸைப் புடிச்சாரு, அதில இருந்து காசு கொட்டுது, சார்."

"ஜெயராமன், ராஜாராமுக்கும் அவர் தங்கைகளுக்கும் வயசு வித்தியாசம் நிறைய இருக்கும்போல இருக்கே, பாத்தா அவரோட பொண்ணுங்க மாதிரி இருக்காங்க!"

டேவிட் சாரின் கூரிய கவனிப்பைக் கண்டு மீண்டும் வியந்தவராக, ஜெயராமன் விவரம் சொல்ல ஆரம்பித்தார்.

"ஆமா சார், அந்தம்மா இவரோட சொந்த அம்மா இல்ல, சார். சின்னம்மா! அதாவது, அவங்கப்பாவோட ரெண்டாவது சம்சாரம். அந்தப் பொண்ணுங்க கூட அந்தம்மாவோட பொண்ணுங்கதான். அவங்கப்பா செத்ததுக்கப்புறம் எங்கேயோ கஷ்டஜீவனம் நடத்திகிட்டிருந்தவங்களை, புஷ்பா டீச்சர்தான் கூட்டியாந்து ஒண்ணா வச்சிருக்காங்க, இது தவிர அந்தம்மாவுக்கு ரஞ்சித்னு ஒரு மகனும் இருக்கான், சார்!"

"ராஜாராம் அவனைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே?"

"எப்படி சார் சொல்வாரு? சரியான தற்குறி, சார் ! அந்தக் குடும்பத்தைக் கெடுக்கவந்த கோடரிக்காம்பு, சார். ஒருவேலையும் கெடையாது. சும்மா எவ பின்னாலயாவது ஊரைச் சுத்துறதுதான் பொழப்பு. படிச்ச புள்ள கூட அப்படி ட்ரெஸ் பண்ணாது, சார். இந்தத் தறுதல, ராஜா வூட்டுப் புள்ள கணக்கா அத்தனச் சோக்கா உடுத்தும், சார். அண்ணனும், அண்ணியும் சம்பாரிக்கிறாங்க. புள்ளகுட்டி கெடையாது. அனுபவிக்கிறான், சார். சுகஜீவனம் சார்."

ஜெயராமன், ரஞ்சித் பற்றி தான் அறிந்தவற்றை மிக சிரத்தையுடன் சொல்லி, ஒவ்வொரு வாக்கியத்தையும், சார் என்ற முற்றுப்புள்ளியால் முடித்தார். இவ்வளவு பெரிய அதிகாரி தன் பேச்சுக்கும் செவிமடுக்கிறாரே என்பதில் உச்சி குளிர்ந்திருந்தார்.

"இவனால ரெண்டுமூணு தகராறு ஆயிருக்கு, சார். எல்லாம் பொம்பள கேஸுதான். விஷயம் பெரிசானா பேர் கெட்டுப்போயிடும், வீட்டில் இவனுக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்கே, அதுங்க வாழ்க்கை பிரச்சனையாயிடும்னு பயந்து எப்படியோ, பேசி, விஷயத்தை அமுக்கிட்டாங்க, சார்."

உற்சாக மிகுதியில் ஜெயராமன் புழுதிபடிந்துபோயிருந்த நினைவுகளையெல்லாம் தூசுதட்டி வெளியில் கொண்டுவந்து கொண்டிருந்தார்.

"அவன் எனக்கு இப்ப தேவைப்படறானே?"

"சா...ர்?" புரியாமல் கேட்டார் ஜெயராமன்.

"அவனையும் நான் விசாரிக்கணும், ஏற்பாடு பண்ணுங்க."

டேவிட்டின் அவசரத்துக்கு காரணம் புரியாவிடினும், அவருடைய கவனப்பொறியில் எதுவோ சிக்கிவிட்டது என்று புரிந்தது.

அரைமணி நேரத் தவணைக்குப் பின் மீண்டும் டேவிட் முன் ஆஜரானார், ஜெயராமன்.

"சார், அந்தப் பய ரஞ்சித் ஊர்ல இல்லையாம், சார்"

"எங்க போயிருக்கானாம்?" டேவிட் தன் புருவங்களில் முடிச்சிட்டவண்ணம் கேட்டார்.

"சொந்தமா பிஸினஸ் ஏதோ ஆரம்பிக்கப்போறேன்னு அண்ணன்கிட்ட ரெண்டுலட்சம் கேட்டு கொஞ்சநாள் முன்னாடி தகராறாம். இவரு தரமுடியாதுன்னுட்டாரு போல. இவருக்கு தெரியாதா, பிஸினஸ் பண்ற மூஞ்சி எதுன்னு? கோவிச்சுகிட்டு வீட்டை விட்டுப் போயிட்டானாம். இது வழக்கமா நடக்கிறதுதான். ஒருவாரம், பத்துநாள் கழிச்சி வருவான்னு அவங்க அம்மா சொல்றாங்க, சார்!"

"இது நடந்தது என்னைக்காம்?"

ஜெயராமன் சொன்னதைக்கேட்டு டேவிட் புருவமுடிச்சுகளை அவிழ்த்துப் புன்னகைத்தார்.


********************************************************************************

அக்கம்பக்க வீட்டுப் பெண்களுடன் 'சரவணா டாக்கீஸ்'க்கு மதிய காட்சி பார்க்கப்போன மகளும், மருமகளும் வீட்டுக்குள் நுழைந்ததும், சித்ராம்மா சொன்னாள்.

"ரஞ்சனி, இப்பதான், கொஞ்சமுன்னாடி, உன் ஊர்க்காரப்பொண்ணு, அன்னை நகர்ல இருக்காளே, அவ பேரு சட்டுனு வாயில வரமாட்டேங்குது, அவ போன் பண்ணினா. நீயும், சித்ராவும் சினிமாவுக்குப் போயிருக்கீங்கன்னு சொன்னேன். நீ வந்ததுக்கப்புறம் உன்னைப் போன் பண்ணச் சொன்னா..."

சித்ராம்மா சொன்னதுமே உதறல் எடுத்தது ரஞ்சனிக்கு. காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது போலிருக்கே! உள்ளுக்குள் என்னென்னவோ நினைவுகள் வந்துபோக, இயல்பாய் இருக்க முனைந்து,

"யார், அத்தை? சுஷ்மிதாவா?" என்றாள்.

"ஆங், ஆங்...அவதான் சுசுமிதா....." அம்மா சொன்னதைக் கேட்டு சித்ரா பலமாய்ச் சிரித்தாள்.

"ஏண்டி சிரிக்கிறே?"

"நீ இப்படி அதுபேரைக் கொலை பண்றதை அந்தப் பொண்ணு மட்டும் கேக்கணும், நொந்துபோயிடும்!"

"ஆமாண்டி, ஈஸியா வாயில நொழையிற பேர வக்காம என்னத்தையோ தஸ்ஸு புஸ்ஸுன்னு வச்சா இப்புடிதான்!"

"அம்மா! வாயில நுழையிற பேருன்னா... வாழைப்பழம்னு வக்கவேண்டியதுதான்."

இந்த உரையாடலில் கலந்துகொள்ளாமல் எதையோ பறிகொடுத்தவளைப் போல் நின்றிருந்த ரஞ்சனியைப் பார்த்து சித்ரா கேட்டாள்,

"என்ன ரஞ்சனி, சினிமா பாத்ததும் அண்ணன் நினைப்பு வந்திடுச்சா?"

சட்டென்று சுயநினைவுக்கு வந்த ரஞ்சனி, வெட்கத்துடன் அடுக்களை சென்று தேநீர் தயாரிக்கும் வேளையில் முனைந்தாள்.

சுஷ்மிதாவுக்கு போன் செய்வதா வேண்டாமா என்று ரஞ்சனிக்கு ஒரே குழப்பம்! போன் செய்தாலும் பிரச்சனை, போன் செய்யாவிட்டாலும் பிரச்சனை! தன் துயரத்தை சொல்லி அழவும் ஒருவருமில்லாத நிலையை எண்ணி உள்ளுக்குள் அழுதாள், ரஞ்சனி.

ரஞ்சனியின் முகம் கருத்திருப்பதை கவனித்தாள், சித்ரா. படம் விட்டு வீடு வரும்வரை எல்லோரிடமும் நன்றாகதானே பேசிக்கொண்டு வந்தாள். வீட்டுக்கு வந்ததும் என்னாயிற்று? சுஷ்மிதாவிடமிருந்து போன் வந்தது என்று அம்மா சொன்னதிலிருந்தே ரஞ்சனியின் முகம் சரியில்லை. சுஷ்மிதாவுக்கு மறுபடி போன் செய்து பேசவும் இல்லை. இவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையா? சித்ரா சுஷ்மிதாவைப் பார்த்ததில்லை. சித்ரா மட்டுமல்ல, அந்த வீட்டிலிருக்கும் எவருமே பார்த்ததில்லை.

ஒருநாள் ரஞ்சனி மட்டும் தனியாக வீட்டில் இருந்தபோது வந்து பார்த்துப் பேசி போயிருந்திருக்கிறாள். அதை அனைவரிடமும் ரஞ்சனி சொல்லியிருந்தாள். அதன்பின் அடிக்கடி வீட்டுக்கு போன் செய்து ரஞ்சனியிடம் பேசுவாள். அவளும் ரஞ்சனியின் ஊரான திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவள் என்பதைத் தவிர சுஷ்மிதாவைப் பற்றி சித்ராவுக்கு வேறெதுவும் தெரியாது.

இப்போது இதுபற்றிக் கேட்டால் ரஞ்சனி தவறாக நினைத்துக்கொள்வாளோ என்ற பயமும் இருந்தது. அவளுடைய சொந்த விஷயத்தில் இவள் தலையிடுவதாக நினைப்பாளோ? சொல்லக்கூடியதாய் இருந்தால் அவளே சொல்லியிருக்க மாட்டாளா? இருந்தாலும் சித்ராவுக்கு ரஞ்சனியைப் பார்க்க பரிதாபமே மேலிட்டது.

'எனக்கும் அவளுக்கும் பெரிதாய் என்ன வித்தியாசமிருந்துவிடப்போகிறது, கழுத்தில் ஏறியிருக்கும் தாலி ஒன்றைத் தவிர? நானாவது சுதந்திரப்பறவையாய் வலம் வருகிறேன், அப்பா, அம்மா என்று உறவுகளுடன் இன்னும் சிறுபிள்ளைபோல் செல்லம் கொஞ்சிக்கொண்டு வாழ்ந்துவருகிறேன். இவள் நிலை என்னைவிடவும் கொடுமை அல்லவா? தாலி கட்டிக்கொண்ட காரணத்துக்காக, பெற்றோரை, பிறந்த ஊரை விட்டு இன்னொரு குடும்பத்துக்கு வந்து ஒரு இயந்திரம் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். மனதுக்குள் எத்தனைக் கனவுகளோடு மணமேடை ஏறியிருப்பாள்? எல்லாக்கனவுகளும் ஒரே மாதத்தில் கானலாகிவிட்டதே!

இந்த அண்ணனைச் சொல்லவேண்டும். ஒரு பெண்ணின் உணர்வுகளையும், ஏக்கங்களையும் புரிந்துகொள்ளாமல் சன்யாசம் வாங்கிக்கொண்டு போனவனைப்போல் அவன்பாட்டுக்கு அங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறான். வரமுடியவில்லையா? சரி, வரவேண்டாம். தன் மனைவிக்கென்று ஒரு மொபைல் ஏற்பாடு செய்துகொடுத்து, அவளுடன் தனிமையில் இனிமையாய்ப் பேசி அவள் மனபாரத்தைக் குறைத்தால் என்னவாம்? இதையெல்லாமா தங்கையான நான் சொல்ல முடியும்? அவனுக்குதான் அறிவில்லை என்றால் இந்தவீட்டுப் பெரியவர்களுக்கு எங்கே போனது புத்தி?

எப்ப பாரு, சித்ராவுக்கு வரன் அமையல, சித்ராவுக்கு வாழ்க்கை அமையலன்னு புலம்புறதை விட்டுட்டு வாழவந்த மருமகளுக்கு ஒரு ஏற்பாடு பண்ணக்கூடாது? சே! ரஞ்சனி மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்றதுக்கு பதில், என்னைப்போல கல்யாணமாகாமலேயே இருக்கலாம்'

சித்ரா, ரஞ்சனிக்காக மனமுருகிக்கொண்டிருந்த வேளையில் ரஞ்சனி சுஷ்மிதாவைப் பற்றி சித்ராவிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற மனப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாள்.

***************************************************************

மதி
27-09-2010, 07:43 AM
புது புது கேரக்டர்... புது புது சம்பவம். எல்லாம் ஒரு நூலில் கோர்கப்படுவது எப்போ??
நல்லா கொண்டு போறீங்க கதையை.

அன்புரசிகன்
27-09-2010, 09:21 AM
சந்தேசம் வலுக்கிறது. ரஞ்சனி சுஷ்மிதா ரஞ்சித் ... ஏதோ மர்மமுடிச்சு உள்ளது போல... பார்க்கலாம்... தொடருங்கள் கீதம்...

Nivas.T
27-09-2010, 09:25 AM
தொடரும் முடிச்சுகள்? நீளும் மர்மம்?
கொலைக்கான காரணம் என்ன?
டேவிட் யூகித்தது எதை? அவரின் அடுத்த நடவடிக்கைத்தான் என்ன?
காத்திருக்கிறோம்............... அத்யாயம் 11 எங்கே.......
எங்கே.......... என்று.

govindh
29-09-2010, 07:11 AM
கதை முடிச்சுகள் ....கதை அமைப்பு எல்லாம் அருமை.
ரஞ்சித் எப்போது வருவான்....? சுஷ்மிதா என்ன செய்தாள்....?
ரஞ்சனி சுஷ்மிதாவைப் பற்றி சித்ராவிடம் சொன்னாளா....?

காத்திருக்கிறோம்....
தொடருங்கள்....!

சிவா.ஜி
30-09-2010, 04:20 PM
ரஞ்சித்கிட்ட என்னமோ இருக்கு. அண்ணன் பணம் கொடுக்காததுலயும் பிரச்சனை இருக்குன்னு நினைக்கிறேன். புதுசா இப்ப சுசுமிதாவும் வந்திருக்கா....பாப்போம்.

இயல்பா எல்லோருக்கும் ஏற்படுவதைப்போல சித்ராவின் அம்மாவும்...சட்டுன்னு பேர் வாயில வரலைங்கறதை அழகா சொல்லி எதார்த்தத்தை காட்டியிருக்கீங்க.

தொடருங்க தங்கையே.

பாரதி
01-10-2010, 08:04 AM
ஆரம்பத்தில் இருந்த வேகம் சற்று குறைந்தாற் போல இருக்கிறது. புதிய பாத்திரங்கள் கதையில் இணைவதும் காரணமாக இருக்கும் போல தோன்றுகிறது. கதையில் சிக்கல் தீர்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கீதம்
04-10-2010, 01:30 AM
புது புது கேரக்டர்... புது புது சம்பவம். எல்லாம் ஒரு நூலில் கோர்கப்படுவது எப்போ??
நல்லா கொண்டு போறீங்க கதையை.

மிகவும் நன்றி, மதி.

கீதம்
04-10-2010, 01:31 AM
சந்தேசம் வலுக்கிறது. ரஞ்சனி சுஷ்மிதா ரஞ்சித் ... ஏதோ மர்மமுடிச்சு உள்ளது போல... பார்க்கலாம்... தொடருங்கள் கீதம்...

பின்னூட்டத்துக்கு நன்றி, அன்புரசிகன்.

கீதம்
04-10-2010, 01:33 AM
தொடரும் முடிச்சுகள்? நீளும் மர்மம்?
கொலைக்கான காரணம் என்ன?
டேவிட் யூகித்தது எதை? அவரின் அடுத்த நடவடிக்கைத்தான் என்ன?
காத்திருக்கிறோம்............... அத்யாயம் 11 எங்கே.......
எங்கே.......... என்று.


கதை முடிச்சுகள் ....கதை அமைப்பு எல்லாம் அருமை.
ரஞ்சித் எப்போது வருவான்....? சுஷ்மிதா என்ன செய்தாள்....?
ரஞ்சனி சுஷ்மிதாவைப் பற்றி சித்ராவிடம் சொன்னாளா....?

காத்திருக்கிறோம்....
தொடருங்கள்....!

அடுத்த அத்தியாயம் இன்றே பதிவிட்டுவிடுகிறேன். பொறுமையுடன் காத்திருந்ததற்கு நன்றி, நண்பர்களே.

கீதம்
04-10-2010, 01:34 AM
ரஞ்சித்கிட்ட என்னமோ இருக்கு. அண்ணன் பணம் கொடுக்காததுலயும் பிரச்சனை இருக்குன்னு நினைக்கிறேன். புதுசா இப்ப சுசுமிதாவும் வந்திருக்கா....பாப்போம்.

இயல்பா எல்லோருக்கும் ஏற்படுவதைப்போல சித்ராவின் அம்மாவும்...சட்டுன்னு பேர் வாயில வரலைங்கறதை அழகா சொல்லி எதார்த்தத்தை காட்டியிருக்கீங்க.

தொடருங்க தங்கையே.

தொடர்ந்து வருவதற்கு நன்றி, அண்ணா.

கீதம்
04-10-2010, 01:35 AM
ஆரம்பத்தில் இருந்த வேகம் சற்று குறைந்தாற் போல இருக்கிறது. புதிய பாத்திரங்கள் கதையில் இணைவதும் காரணமாக இருக்கும் போல தோன்றுகிறது. கதையில் சிக்கல் தீர்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தொடர்ந்து எழுதாமையும் தொய்வுக்குக் காரணமாக இருக்கலாம். பின்னூட்டமிட்டு ஊக்கம் அளிப்பதற்கு நன்றி, பாரதி அவர்களே.

கீதம்
04-10-2010, 01:38 AM
(11)

கொட்டுமேளம் முழங்க, உச்சிகால பூசை முடிந்து உச்சிவெயிலில் இளைப்பாறிக்கொண்டிருந்தாள், உறையூர் வெக்காளி. எந்தக்காலமும் எந்தக்கூரையையும் ஏற்பதில்லை. ஓலை வேய்ந்தால் எரிப்பதும், ஓடு வேய்ந்தால் இடிப்பதுமாய் இருந்த அவள் செயலுக்கு காரணம் புரியாமல் தவித்தபோது பூசாரியின் கனவில் வந்து கறாராய்ச் சொல்லிவிட்டாளாம். தன் புருஷன் விஸ்வநாதன் குடிகொண்டிருக்கும் காசி ஆலயதரிசனம் காணும்வகையில் அமைந்திருக்கவேண்டுமாம் அவளது மேற்கூரை! சாத்தியப்படுமா அது?

முடிந்தால் அப்படி ஒரு வானளந்த கோபுரம் கட்டுங்கள் இல்லையெனில் என்னை இப்படியே வெய்யிலில் விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டாளாம். அன்றுமுதல் அக்காளி, ஆகிவிட்டாள், வெக்காளி! பண்டாரங்களே பூசை செய்யவேண்டுமென்ற அவளது மற்றுமொரு ஆசை இன்றுவரை எந்தக்குறையுமின்றி நிறைவேற்றப்பட்டுவருகிறது. அவள் வெயிலில் காய்ந்தாலும் பக்தர்களுக்கு நிழல்தந்து குளிர்விக்கும் இளகியமனதுக்காரி.

தியான மண்டபத்தின் ஒரு ஓரமாய் அமர்ந்தபடி வெக்காளியம்மனின் பெருமைகளையும், பெயர்க்காரணத்தையும் புளகாங்கிதத்துடன் ரஞ்சனியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள், சித்ரா. ரஞ்சனியோ எதிலும் ஈடுபாடற்று எதையோ பறிகொடுத்தவள் போல் அமர்ந்திருந்தாள். அவளது பரிதவிப்பு சித்ராவுக்குப் புரியாமல் இல்லை. அதைப் பற்றித் தெரிந்துகொள்ளத்தானே இத்தனைதூரம் அவளைக் கடத்தி வந்திருக்கிறாள்!

நேற்று இரவு ரஞ்சனி பசியில்லை என்று படுத்துவிட, அம்மாவும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சித்ராவுக்கு அவளை அப்படியே விட்டுவிட மனமில்லை. ஒரு முடிவுக்கு வந்தவளாய், அம்மாவிடம்,

"அம்மா! நாளைக்கு நானும் ரஞ்சனியும் வெக்காளியம்மன் கோவிலுக்குப் போய்ட்டுவரோம், ரஞ்சனி இதுவரைக்கும் போனதில்லதானே?"

"வெக்காளியம்மன் கோவிலுக்கா? நானும் வரேனேடி, போய் ரொம்ப நாளாச்சு"

"ஏம்மா, வயசுப்பொண்ணுங்க போறாங்களே, நாமும் கூட போய் அவங்க சந்தோஷத்தைக் கெடுக்கணுமான்னு யோசிம்மா!

"அடிப்பாவி! இன்னைக்கு சினிமாவுக்குப் போறோம், வராதன்னு சொன்னே! நாளைக்கு கோவிலுக்குமா?"

"ஆமாம்மா! எல்லாரும் கெளம்பிப் போய்ட்டா, அப்புறம் வீட்டைப் பாத்துக்கிறது யாரு? திருடன் வந்துட்டா?"

"பாவி....பாவி...ஏண்டி என்னை பயமுறுத்தறே?"

சித்ராம்மா அதோடு அடங்கிவிட்டாள். ரஞ்சனி மறுப்பேதும் சொல்லவில்லை. இப்போதிருக்கும் மனநிலையில் கோவிலுக்குச் செல்வது ஆறுதல் தரக்கூடும் என்று நினைத்திருக்கலாம்.

காலையிலேயே இருவரும் கிளம்பிவிட்டனர். இன்று விசேச நாள் இல்லையென்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை. வந்திருந்த சிறுகூட்டமும் உச்சிகால பூஜை முடிந்ததும் கிளம்பிவிட்டது.

நிதானமாக கும்பிட்டு, பிரசாதம் வாங்கிக்கொண்டு இருவரும் தியானமண்டபத்தை அடைந்தனர். அங்கு அமர்ந்துகொண்டுதான் சித்ரா அம்மனின் கதைகளை சொல்லிக்கொண்டிருந்தாள். ரஞ்சனி வெறுமனே 'உம்' கொட்டிக்கொண்டுவந்தாள். ரஞ்சனியின் மெளனத்தைக் கலைக்கும்விதமாக, சாதாரணமாகக் கேட்பதுபோல் சித்ரா கேட்டாள்.

"ரஞ்சனி, உன் ஃபிரெண்டுக்கு போன் பண்ணினியா?"

"யாருக்கு?" பிரசாதத்தை விண்டு வாயில் போட்டவளுக்கு சட்டென்று புரையேறியது.

சித்ரா அவள் தலையை மெல்லத் தட்டிவிட்டு பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள்.

"சுஷ்மிதாவுக்குதான். ரெண்டுநாளா போன் பண்றாங்களாமே!"

"அவளுக்கென்ன? சும்மா பண்ணுவா!"

"ரஞ்சனி, உனக்கும் அவங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா?"

"இ..இ...இல்லயே!"

"அவங்க போன் பண்ணிப் பேசச் சொன்னா பேசமாட்டேங்கறே! அதான் ஒருவேளை உங்க ரெண்டுபேருக்கும் ஏதோ பிரச்சனையோன்னு நினைச்சேன். தப்பா எடுத்துக்காத."

ரஞ்சனி திக்பிரமை பிடித்தவள் போல் அப்படியே உட்கார்ந்திருக்கக்கண்டு அவள் எதையோ நினைத்து பயமோ, கவலையோ அடைவது புரிய அது என்னவாக இருக்கும் என்று கவலைப்பட ஆரம்பித்தாள், சித்ரா.

"ரஞ்சனி, என்னை உன் நாத்தனாரா பாக்காதே! ஒரு ஃபிரெண்டா நினைச்சுக்கோ! ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லு. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். உன் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு சொல்லமுடியுதான்னு பாக்கறேன். நீ இப்படி இருக்கிறதைப் பாத்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அண்ணன் ஏதாவது சொன்னதா?"

"சேச்சே! அதெல்லாம் ஒண்ணுமில்ல, சித்ரா. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத!"

"சரி, நான் கற்பனை பண்ணல. நீ உண்மையச் சொல்லு. கோவில்ல வச்சுக் கேக்கறேன், உன் பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லக்கூடாதா, ரஞ்சி?"

ரஞ்சனி சட்டென்று குனிந்து கண்களைத் துடைத்துக்கொண்டாள். சொல்லலாமா வேண்டாமா என்று தடுமாறிய மனதைக் கட்டுக்குள் கொணர்ந்தாள். இத்தனை அன்பானவளிடம் சொல்வதே தன் மனப்பாரம் குறைய ஒரே வழி என்று முடிவெடுத்தவள் போல் சொல்லத் தயாரானாள்.

"சித்ரா... அந்த சுஷ்மிதா எனக்கு ஃபிரெண்டே கிடையாது. அவளா அப்படி சொல்லிக்கிட்டிருக்கா."

"அதனால என்ன? ஒரே ஊரு, அதனால் சொல்லியிருப்பாங்க!"

"ஐயோ...சித்ரா...நீ தப்பா புரிஞ்சிவச்சிருக்கே....அவ நல்ல பொண்ணு கிடையாது...நான் எப்படி சொல்றது? அவ ஒரு மாதிரி...."

"ரஞ்சனி, என்ன சொல்றே? அவ கேரக்டர் சரியில்லைன்னு சொல்லவரியா?"

"ஆ...ஆமாம், சித்ரா"

இந்த எதிர்பாராத பதிலால் சித்ரா சற்றே திகைத்தாலும், ரஞ்சனி, சுஷ்மிதாவிடமிருந்து விலக விரும்புவதன் நியாயத்தை உணர்ந்து, உடனடியாய் சொன்னாள்.

"சரி, விடு... தெரிஞ்சதுக்கப்புறம் ஒதுங்கிக்கிறதுதான் நல்லது. இனிமேல் போன் பண்ணினா கட் பண்ணச் சொல்லி அம்மாகிட்ட சொல்லிடறேன். இதுக்குதான் அப்படி பயந்தியா....? "

"இல்ல, ரஞ்சனி, அவளை அப்படி என்னால் கட் பண்ண முடியாது, அவ....அவ....என்னை ஒருவிஷயத்தில ப்ளாக்மெயில் பண்றா, சித்ரா...."

"என்ன விஷயத்தில?"

"வந்து....வந்து....சித்ரா...என்னைத் தப்பா நினைக்கமாட்டியே?"

"என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? சொல்லு, ரஞ்சி!"

"அது வந்து... வந்து..... என்னோட பழைய காதலைப் பத்தி உங்க எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்னு பயமுறுத்தறா..."


(தொடரும்)

தாமரை
04-10-2010, 02:09 AM
கலையக்கா வர்ரதுக்குள்ள முடிச்சிருவேன்னு வாக்கு கொடுத்திருக்கீங்க. ஞாபகம் இருக்கா?

மீண்டும் ஆரம்பத்தில இருந்து படிக்கணும். போலத் தோணுது, நீங்க அடுத்த அத்தியாயம் பதிவதற்கு முன்னால தெரோவா படிச்சிக்கிறேன்,

அன்புரசிகன்
04-10-2010, 02:37 AM
திடீர் திருப்பம். ரஞ்சனிக்கு கொலையின் காரணி தெரியும் போல... தொடருங்கள். சுவாரசியமாக நகர்த்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.

கீதம்
04-10-2010, 02:39 AM
கலையக்கா வர்ரதுக்குள்ள முடிச்சிருவேன்னு வாக்கு கொடுத்திருக்கீங்க. ஞாபகம் இருக்கா?

மீண்டும் ஆரம்பத்தில இருந்து படிக்கணும். போலத் தோணுது, நீங்க அடுத்த அத்தியாயம் பதிவதற்கு முன்னால தெரோவா படிச்சிக்கிறேன்,

கலையக்கா சொன்ன தேதியைவிடவும் முன்னால் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.:D:D வந்துகிட்டே இருக்காங்கன்னு பட்சி சொல்லுது.

சொதப்பத் துவங்கிட்டேனா?

மதி
04-10-2010, 07:14 AM
இன்னொரு புது பூதம் கிளம்புது... நடத்துங்க... !!

Nivas.T
04-10-2010, 12:35 PM
கொலைக்கு மூலகாரணம் இப்பதான் தலதூக்குது

அருமை அருமை
தொடருங்கள் (கதையின் மர்மம் போலவே இடைவெளியும் நீளுது):sprachlos020:

சிவா.ஜி
04-10-2010, 03:46 PM
இந்த அத்தியாயத்தோட ஆரம்பம் அட்டகாசம். வெக்காளியம்மன் ஏன் வெக்காளியானாள்ங்கறதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
ஒரு நாத்தனார் இந்தளவுக்கு நல்லவளா இருக்கறது...படிக்கவே சந்தோஷமா இருக்கு.

டீச்சர் வீட்டுக்கு வந்துட்டுப் போனது சுஷ்மிதாவா....ரொம்ப ஆர்வத்தை உண்டாக்குறீங்கம்மா கீதம்.

(ஆனா நிச்சயம் சொதப்பல....தைரியமா தொடருங்க.)

கீதம்
05-10-2010, 12:17 AM
திடீர் திருப்பம். ரஞ்சனிக்கு கொலையின் காரணி தெரியும் போல... தொடருங்கள். சுவாரசியமாக நகர்த்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.

தொடர்ந்துவந்து ஊக்கம் தருவதற்கு நன்றி, அன்புரசிகன்.

கீதம்
05-10-2010, 12:19 AM
இன்னொரு புது பூதம் கிளம்புது... நடத்துங்க... !!

கிணறு வெட்ட பூதம் கிளம்புது. சரியாதான் சொல்றீங்க. பின்னூட்டத்துக்கு நன்றி, மதி.

கீதம்
05-10-2010, 12:20 AM
கொலைக்கு மூலகாரணம் இப்பதான் தலதூக்குது

அருமை அருமை
தொடருங்கள் (கதையின் மர்மம் போலவே இடைவெளியும் நீளுது):sprachlos020:

நன்றி, நிவாஸ். விரைவில் மர்மம் விலகும்.

கீதம்
05-10-2010, 12:24 AM
இந்த அத்தியாயத்தோட ஆரம்பம் அட்டகாசம். வெக்காளியம்மன் ஏன் வெக்காளியானாள்ங்கறதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
ஒரு நாத்தனார் இந்தளவுக்கு நல்லவளா இருக்கறது...படிக்கவே சந்தோஷமா இருக்கு.

டீச்சர் வீட்டுக்கு வந்துட்டுப் போனது சுஷ்மிதாவா....ரொம்ப ஆர்வத்தை உண்டாக்குறீங்கம்மா கீதம்.

(ஆனா நிச்சயம் சொதப்பல....தைரியமா தொடருங்க.)

நன்றி, அண்ணா.

வெக்காளியின் உண்மையான பெயர்க்காரணமும் தலவரலாறும் வேறு உள்ளது. அதையெல்லாம் சொன்னால் ஆன்மீகம் கலந்துவிடும் என்பதால், இயல்பாய் இருக்கவேண்டி, நடைமுறையில் மக்கள் சொல்லும் காரணத்தையே இதில் கையாண்டேன்.

தொடர்ந்துவருவதற்கு நன்றி, அண்ணா.

கீதம்
05-10-2010, 12:26 AM
(12)

ரஞ்சனி சித்ராவின் முகத்தைச் சந்திக்க விரும்பாதவளாய்த் தரையைப் பார்த்துக்கொண்டே சொன்னாள். சித்ரா தான் நினைப்பதுபோல் இது சாதாரண விஷயமில்லை என்பதை உணர்ந்தவளாய், மெளனமாய் ரஞ்சனியின் கைகளைப் பற்றி மறுபடியும் அவளுக்கு நம்பிக்கை ஊட்டினாள்.

"சித்ரா, உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி எனக்கொரு காதல் இருந்துது. காலேஜுக்கு பஸ்ஸில போகும்போது பழக்கமாச்சு. அவனும் படிச்சிகிட்டிருந்தான். நாங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் உண்மையா காதலிச்சோம். ஆனா எங்கப்பா அதுக்கு ஒத்துக்கல."

"ஏன்? வேற ஜாதியா?" பெரும்பாலான காதல்களுக்கு சாதிகளே எதிரிகளாய் அமைவதை நிஜத்திலும், நிழலிலும் கண்டிருப்பதால் சித்ரா கேட்டாள்.

"வேற ஜாதி மட்டுமில்ல, நம்மள விடவும் கீழ்ஜாதி. உனக்குதான் தெரியுமே, இங்க இருக்கிற மாதிரி கிராமத்தில எல்லாம் எல்லாரையும் வீட்டுக்குள்ள விடமாட்டாங்க. வேலைக்காரி துலக்கிவச்ச சாமான் மேல தண்ணி தெளிச்சிதான் வீட்டுக்குள்ள கொண்டுவருவாங்க, எங்கம்மா. அப்படிப்பட்டவங்க எங்க காதலை எப்படி ஏத்துப்பாங்க? அதனால....அதனால...."

"என்னாச்சு, ரஞ்சனி?" தவிப்புடன் கேட்டாள், சித்ரா.

"அதனால...நாங்க ரெண்டுபேரும் ஓடிப்போய்க் கல்யாணம் பண்றதுன்னு முடிவெடுத்தோம். அது எங்கப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சுபோயிடுச்சி.”

"அப்புறம்?"

"அப்புறம் என்ன? வீட்டுக்குள்ளயே ஜெயில்தான். காலேஜ்க்கும் போகவிடல. தற்கொலைக்கெல்லாம் முயற்சி பண்ணினேன். காப்பாத்திட்டாங்க. இருந்தாலும் விஷயம் வெளியில் தெரியாம பாத்துகிட்டாங்க. அவன் என்ன ஆனான்னு தெரியல. ஊரைவிட்டுப் போய்ட்டான்னு சொல்லிகிட்டாங்க. அவனா போனானா, எங்கப்பா வெரட்டிவிட்டாரான்னு தெரியல. சரி, நமக்கு விதிச்சது இதுதான்னு என் மனச தேத்திகிட்டு எங்கப்பாகிட்ட கெஞ்சிக்கூத்தாடி கரஸ்ல படிச்சு முடிச்சேன். அப்பதான் உங்க அண்ணனோட ஜாதகம் வந்துது. பொண்ணையும் வெளிநாடு கூட்டிட்டுப் போயிடுவார்னு சொன்னதால என்னை அவசர அவசரமா உங்க அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணிக்குடுத்திட்டாங்க........"

"இத்தனை நாள் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமாதானே இருந்தே? இப்ப திடீர்னு என்னாச்சு?"

"சொல்றேன், சித்ரா. சுஷ்மிதாவும் எங்க காலேஜ்லதான் படிச்சா. அவ ஒரு அலட்டல் பார்ட்டி. நிறைய பையன்களோட சிநேகம் இருந்தது. அவகூட பொண்ணுங்க யாரும் அவ்வளவா பழக்கம் வச்சுக்கமாட்டோம். அவ அவங்க அத்தை வீட்டிலதான் தங்கி படிச்சா. சுஷ்மிதா அப்பா அம்மா எல்லாம் சென்னையில இருந்தாங்க. அங்க அவ நடவடிக்கை சரியில்லைன்னுதான் அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பியிருந்தாங்க. அங்க வந்தும் அவ கொட்டம் குறைஞ்சபாடில்ல. அப்பவே அவ கேரக்டர் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்.

அப்படிப்பட்டவ திடீர்னு ரெண்டுமாசத்துக்கு முன்னாடி ஒருநாள் நம்ம வீட்டுக்கு வந்தா. அப்ப நீ கம்ப்யூட்டர் க்ளாஸ் போயிருந்தே. அத்தையும், மாமாவும் பாலு அய்யரைப் பாக்கப் போயிருந்தாங்க. அப்பதான் வந்தா. கல்யாணமாகி ஆறுமாசம் ஆச்சின்னா. நான் இருக்கிற ஊருன்னு தெரிஞ்சதால எங்க வீட்டில இருந்து என்னோட அட்ரஸ் வாங்கினாளாம். நல்லாப் பேசினா. பொதுவாதான் பேசிட்டிருந்தோம். ஊருல நடந்தது, காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் பத்தின கதையெல்லாம் பேசினோம்."

"எல்லாம் சரி, உன் கதை பழைய கதைதானே? நீ உன் லவ்வரைப் பாக்கவே இல்லைன்னு சொல்றே! அப்படியே பழசைக் கிளறி எங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி உன் வாழ்க்கையைக் கெடுக்கிறதில அவளுக்கு என்ன லாபம்?"

சித்ரா குழப்பத்துடன் கேட்க, ரஞ்சனி சொல்லலாமா வேண்டாமா என்று உள்ளுக்குள் ஒரு முடிவெடுக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

"சொல்லு, ரஞ்சனி, உன்னைக் காட்டிக்கொடுக்கிறதில அவளுக்கு என்ன லாபம்?"

"அப்பதானே நான் அவளைக் காட்டிக்கொடுக்கமாட்டேன்!" படபடக்கும் நெஞ்சை ஒருகையால் பற்றிக்கொண்டு பட்டென்று சொல்லிவிட்டு, அமைதி காத்தாள், ரஞ்சனி.

சித்ராவின் குழப்பம் மேலும் அதிகமாகியது. கைக்கடிகாரத்தைப் பார்க்க, மணி இரண்டு என்றது. இன்னும் நேரமிருக்கிறது. இன்று எப்படியாவது இவளைப் பேசவைத்து இவள் மறைக்கும் விஷயங்களைக் கறந்துவிடவேண்டும். எவளோ ஒரு ஒழுக்கங்கெட்டவள் என் அண்ணனின் மனைவியைப் படுத்திக்கொண்டிருக்கிறாள், அவளிடமிருந்து எப்படியாவது இவளை விடுவிக்கவேண்டும். இவள் வேறு புதுப்புதுக்கதைகளை அவிழ்த்துக்கொண்டிருக்கிறாள். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போலாகிவிட்டது.

கோவிலில் இவர்களையும், இன்னும் ஓரிருவரையும் தவிர எவரும் இல்லை. பூசாரியும், கோவில் அலுவலகத்தில் அமர்ந்து யாருடனோ அரட்டை அடித்துக்கொன்டிருந்தார்.

சித்ரா, ரஞ்சனியின் முகத்தை நிமிர்த்தி, "ரஞ்சனி, இப்படியே தயங்கித் தயங்கி நீ சொல்லி முடிக்கிறதுக்குள்ள நேரமாயிடும். சட்டுன்னு சொல்லு! அவளைப் பத்தி அவளோட புகுந்தவீட்டுல நீ சொல்லிடுவேன்னு பயப்படுறாளா?அப்படியெல்லாம் எதுவும் சொல்லமாட்டேன்னு நீ சொல்லவேண்டியதுதானே?"

"இல்ல, சித்ரா... இது வேற...எனக்கு சொல்ல பயமாயிருக்கு, சித்ரா...." ரஞ்சனியின் உதடுகள் துடித்தன, கைகள் மெல்ல நடுங்கின.

ரஞ்சனி, சித்ராவின் காதருகே வந்து, துடிக்கும் உதடுகளால், "டீச்சர் கொலை விஷயமா நான் அவளைக் காட்டிக்கொடுத்திடுவேன்னு பயப்படுறா...."

சித்ராவுக்கு தூக்கிவாரிப்போட்டது. டீச்சர் கொலை விஷயமாவா? அப்படியென்றால்....சுஷ்மிதாவுக்கும் இதற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது, ரஞ்சனிக்கும் இதைப்பற்றி என்னவோ தெரிந்திருக்கிறது. சித்ராவுக்கு இப்போதுதான் ரஞ்சனியின் பயத்துக்கான காரணமும் அதன் தீவிரமும் புரிந்தது.

அடக்கடவுளே! எத்தனை பெரிய விஷயம்? இப்போது என்ன செய்வது? இவள் சொல்வதை முழுதாய்க் கேட்டுவிட்டுதான் எதையும் முடிவுசெய்யவேண்டும். ரஞ்சனியின் முகத்தில் இதுவரை அப்பியிருந்த கலவரம் இப்போது சித்ராவின் முகத்திலும் கொஞ்சங்கொஞ்சமாய் அப்பத்தொடங்கியது.

"ரஞ்சனி, என்ன விளையாடறியா? எவ்வளவு பெரிய விஷயம்? இதைப்போய் இவ்வளவு நாளா மறைச்சு வச்சிருக்கே? இங்க பாரு, எதுவா இருந்தாலும் உண்மையைச் சொல்லிடு. நாளைக்கு ஏதாவது பிரச்சனை ஆனா நீதான் மாட்டிக்குவே! சொல்லு!"

கொஞ்சம் கடுமையாகவே சொன்னாள், சித்ரா. எதை முக்கியமாய்ச் சொல்லவேண்டுமோ, அதை விடுத்து என்னென்னவோ கதை சொல்லிக்கொண்டிருக்கிறாளே என்று ரஞ்சனியின்மேல் கடுங்கோபம் ஏற்பட்டிருந்தது அவளுக்கு.

*********************************

தாமரை
05-10-2010, 12:39 AM
இப்படி வேக வேகமா போட்டேள்னா படிக்கறதுக்கு சுறுசுறுன்னு இருக்கும்.:D:D:D:D

நாளைக்கு அடுத்த அத்தியாயம் குடுத்திருங்கோ..

நீங்க ரஞ்சனி போலவும் நான் சித்ரா போலவும் தோணுது!!!:D:D:D:D

அன்புரசிகன்
05-10-2010, 01:25 AM
கதையின் முடிச்சு அவிழ்ந்துவிட்டதாய் உணர்வு. இருந்தாலும் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை. தொடருங்கள்...

சிவா.ஜி
05-10-2010, 06:33 AM
முடிச்சு அவிழத் தொடங்கியாச்சு போலருக்கு....ரொம்ப பரபரப்பா போகுது....அடுத்து எந்த குண்டை ரஞ்சனி தூக்கிப் போடப்போறாளோ....

தொடருங்க தங்கையே...

கீதம்
05-10-2010, 11:20 PM
இப்படி வேக வேகமா போட்டேள்னா படிக்கறதுக்கு சுறுசுறுன்னு இருக்கும்.:D:D:D:D

நாளைக்கு அடுத்த அத்தியாயம் குடுத்திருங்கோ..

நீங்க ரஞ்சனி போலவும் நான் சித்ரா போலவும் தோணுது!!!:D:D:D:D

இன்னும் சித்த நாழியில அடுத்த அத்தியாயம் போட்டுடறேன். படிச்சிட்டு, உங்க அபிப்பிராயம் சொல்லுங்கோ!

குழந்தைகளுக்கு லீவு முடிஞ்சிடுத்தோன்னோ.... அதான் இத்தன சுறுசுறு!

கீதம்
05-10-2010, 11:21 PM
கதையின் முடிச்சு அவிழ்ந்துவிட்டதாய் உணர்வு. இருந்தாலும் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை. தொடருங்கள்...

ஆமாம், உங்கள் யூகம் சரியாக இருக்கலாம். தொடர்வதற்கு நன்றி, அன்புரசிகன்.

கீதம்
05-10-2010, 11:23 PM
முடிச்சு அவிழத் தொடங்கியாச்சு போலருக்கு....ரொம்ப பரபரப்பா போகுது....அடுத்து எந்த குண்டை ரஞ்சனி தூக்கிப் போடப்போறாளோ....

தொடருங்க தங்கையே...

உங்களை மாதிரிதான் சித்ராவும் கவலைப்பட்டுகிட்டிருக்கா!

தொடர்ந்து வருவதற்கு நன்றி, அண்ணா.

கீதம்
05-10-2010, 11:25 PM
(13)

சித்ராவின் கோபத்தைக் கண்டு பயந்த ரஞ்சனி, இரண்டுமாதத்துக்கு முன் தானும், சுஷ்மிதாவும் சந்தித்தபோது நடந்த விவரங்களைச் சொல்லத் தொடங்கினாள்.

"அன்னைக்கு காலையில நம்ம வீட்டுக்கு சாரதா டீச்சர் வந்திருந்தாங்க. நினைவிருக்கா? அவங்க வீட்டுக்குளியலறையில இருக்கிற சிமெண்ட் தொட்டியில எங்கயோ விரிசல் விட்டிருக்கும்போல, எல்லா தண்ணியும் கசிஞ்சி வெளியில் போயிடுதுன்னு சொல்லி ரிப்பேருக்கு எழுதிக்கொடுத்திருந்தாங்க. ஆள் எப்ப வருவான்னு தெரியாது, இதுக்காக லீவும் போட முடியாது. அதனால் வேலை செய்ய ஆள் வந்தா வேலை முடியறவரைக்கும், கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கமுடியுமான்னு மாமாவைக் கேட்டாங்க. அப்பதான் அத்தையும், மாமாவும் நல்லநேரம் பாத்து திருவாரூர் ஜாதகத்தை எடுத்துகிட்டு பாலு அய்யரைப் பாக்கப் போகலாம்னு முடிவெடுத்திருந்தாங்க. நீயும் க்ளாஸுக்குப் போகணும். அதனால் அத்தை, டீச்சர் வீட்டுச் சாவியை எங்கிட்ட கொடுத்து என்னைப் போய் பாத்துக்கச் சொன்னாங்க."

"ஆமாம், அம்மா சொல்லும்போது நான் தான் இருந்தேனே!"

"நீங்க எல்லாரும் போனதுக்கப்புறம்தான் சுஷ்மிதா வந்தா. நாங்க பேசிகிட்டிருக்கும்போது டீச்சர் வீட்டுக்கு வேலை செய்ய ஆளும் வந்தாச்சி. வழக்கமா வருவாங்கல்ல, அவங்க ரெண்டுபேரும்தான் வந்தாங்க. நான் தான் பூட்டைத் திறந்துவிட்டேன். சுஷ்மிதாவும் என்னோட வந்தா. அவங்க வேலை முடிய ஒருமணிநேரம் போல ஆச்சி. அதுவரைக்கும் நானும் சுஷ்மிதாவும் டீச்சர் வீட்டுக்குள்ளதான் பேசிட்டிருந்தோம். அப்ப அவ டீச்சரைப் பத்தி நெறைய விசாரிச்சா. நானும் ரொம்பப் பெருமையா அவங்க இத்தன வருஷமா தனியாளா தைரியமா இருக்கிறதையும், அவங்களுக்கு வேலை மேல இருக்கிற ஈடுபாட்டையும், ஒருநாள் கூட தேவையில்லாம லீவு போடமாட்டாங்கங்கிறதையும் விலாவாரியாச் சொன்னேன். அவ எதுக்கு அதையெல்லாம் விசாரிச்சான்னு எனக்கு அப்ப தெரியல. ஒருவாரம் கழிச்சுதான் புரிஞ்சது."

சித்ரா பீதியுடன் அடுத்துவரும் ஆபத்துகளை எதிர்நோக்கி ரஞ்சனியின் வாயையே பார்த்திருந்தாள்.

"ஒருவாரம் கழிச்சு தற்செயலா கொல்லைப் பக்கக் கதவைத் திறந்து குப்பை கொட்டப்போனப்போ சுஷ்மிதா, டீச்சர் வீட்டுக்குள்ள இருந்து வெளியில் வரா. எனக்கு ஒரே அதிர்ச்சி. அவ என்னைப் பாத்ததும் பெரிசா ஒண்ணும் அலட்டிக்கல. என்னைப் பாத்து மெல்லிசா சிரிச்சிட்டுப் போய்ட்டா. நான் தான் கையும் ஓடாம காலும் ஓடாம அப்படியே நின்னேன். சுஷ்மிதாவுக்கு டீச்சர் வீட்டுல என்ன வேல? அதுவும் டீச்சர் வீட்டுல இல்லாதப்போ? கொல்லக்கதவு எப்படி திறந்திருந்தது? ஒண்ணுமே புரியல. கொஞ்ச நேரத்தில அவகிட்டயிருந்து போன் வந்திச்சு. அத்தைதான் எடுத்தாங்க. எவ்வளவு மரியாதையாவும், பாசமாவும் பேசறா, தங்கமான பொண்ணுன்னு அவளை ரொம்பவும் புகழ்ந்தாங்க. அவ என்கிட்ட பேசும்போது அவ தொணியே மாறியிருந்துது. அவளை டீச்சர் வீட்டில் பாத்ததா யார்கிட்டயாவது சொன்னா என்னோட பழைய காதல் கதையைக் கிளறி, என்னை அவமானப்படுத்திடுவேன்னு சொல்லி பயமுறுத்தினா. எனக்கு அப்பவும் ஒண்ணும் புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது, அவ டீச்சர் வீட்டை தன்னோட தப்பான உறவுக்குப் பயன்படுத்துறாங்கற விஷயம்!"

"என்னால் நம்பவே முடியல, ரஞ்சனி. எப்படி ஒருத்தர் வீட்டை அவங்களுக்குத் தெரியாம இன்னொருத்தர் பயன்படுத்த முடியும்? டீச்சருக்கு இது தெரியாம இருந்திருக்குமா?"

"தெரியல, சித்ரா. ஆனா டீச்சரைக் கொல்ற அளவுக்கு அவ துணிவான்னு நான் நினைச்சே பாக்கலை"

"அப்படின்னா....டீச்சரை அவதான் கொலை பண்ணினாளாமா?"

"அப்படிதான் நினைக்கிறேன். இல்லைன்னா....எதுக்கு எனக்குப் போன் பண்ணி விசாரிக்கிறா? என்னை மிரட்டுறா?"

"பயங்கரமான ஆள்தான். டீச்சரோட வீட்டையும் அனுபவிச்சிட்டு, அவங்களையும் கொல்லணும்னா அவ தேர்ந்த கைகாரியாதான் இருக்கணும். ரஞ்சனி, உன் காதல் விவகாரத்தைப் பத்தி நான் அப்பா அம்மா, அண்ணன்கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லிடறேன். இப்ப நீ சொன்ன எல்லா விஷயத்தையும் நாம் போலிஸ்ல சொல்லிடலாம். நீ என்ன சொல்ற?"

"ஐயையோ, எனக்கு பயமாயிருக்கு, சித்ரா. அவளுக்கு யாரு பக்கபலம்னு தெரியலையே.... அங்க வந்து கழுத்தறுத்தவளுக்கு, நம்ம வீட்டுக்கு வந்து கழுத்தறுக்க எவ்வளவு நேரமாவும்?”

"நீ சொல்றதும் சரிதான். இந்த விஷயத்தை எடுத்தோம், கவுத்தோம்னு முடிவு பண்ணமுடியாது. நான் எதுக்கும் சிவா அண்ணன்கிட்ட இதைப் பத்திப் பேசிப்பாக்கறேன். அவன் கொஞ்சம் நிதானமா யோசிப்பான்."

"ஐயோ....வேணாம், சித்ரா.... இதை இப்படியே விட்டுடுவோம். போலிஸா கண்டுபிடிச்சா பிடிக்கட்டும், நாமா எதுவும் சொல்லவேணாம். உங்க பெரியண்ணனைப் பத்தி உனக்குத் தெரியும் தானே? என்னை உண்டு, இல்லைன்னு ஆக்கிடுவாரு."

"ரஞ்சனி, இதையெல்லாம் நீ அப்பவே சொல்லியிருக்கணும், இப்ப பாரு, தலைக்கு மேல வெள்ளம் போயாச்சி. சும்மா இப்படியே எத்தன நாளைக்குதான் பயந்துகிட்டிருப்ப? நான் இருக்கேன், தைரியமா இரு! அவள......." சித்ரா சுஷ்மிதாவை நினைத்து பல்லைக்கடித்தாள்.

*****************************************************************

வீட்டுக்குப் போகும்போது லேசாக இருட்டிவிட்டது. அம்மா கத்தப்போகிறாள் என்று பயந்துகொண்டே உள்ளே நுழைந்தவர்களை மிகவும் உணர்ச்சிப்பெருக்குடன் அவள் வரவேற்றது ஆச்சர்யத்தைத் தந்தது.

"சித்ரா, ரஞ்சனி, எங்கடி போயிட்டீங்க ரெண்டுபேரும்? காணோமே காணோமேன்னு ஒரே கவலையாப்போச்சி"

சித்ரா பதில் சொல்ல வாயைத் திறக்குமுன் சித்ராம்மா படபடப்பு அடங்காதவளாய்த் தொடர்ந்து பேசினாள்.

"சேதி தெரியுமா? டீச்சரைக் கொன்னவனைப் புடிச்சிட்டாங்களாம். பாவி, படுபாவி....அவன் நல்லா இருப்பானா...? நாசமாப் போவ......" சித்ராம்மா சபிக்கத்துவங்க, அவசரமாய் அவளை இடைமறித்து சித்ரா, "யா....யாரும்மா அது? உனக்குத் தெரியுமா?" என்றாள்.

ரஞ்சனியோ வெளியில் தெறித்து விழுந்துவிடுமோவென்று துடிக்கும் இதயத்தைப் பற்றியபடியே சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.

'கொன்னவன் என்றால் எவனோ ஒருவன்! அப்படியென்றால் சுஷ்மிதா மாட்டவில்லை. இனி தன்னை என்ன மாதிரிக் குடையப்போகிறாளோ? மாட்டியவன் அவள் பேரைச் சொன்னால் அவள் தன் பேரைச் சொல்வாளோ? ஆனால்.... ஆனால்..... நான் எந்தவிதத்தில் இதற்கு பொறுப்பாவேன்? என்னைக் கேட்டா அவர்கள் டீச்சர் வீட்டை தங்கள் இச்சை தீர்க்க உபயோகப்படுத்தினார்கள்? என்னோடு ஒருநாள் அவளை டீச்சர் வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன். அதையும் டீச்சர் வந்தவுடன் சொல்லிவிட்டேனே! என் பெயரில் எந்தத் தப்பும் இல்லையே!'

குழப்ப சிந்தனை அவள் புலன்களை ஆக்கிரமித்திருக்க, சித்ராம்மா சொன்ன எதுவும் கவனத்தில் நுழையவில்லை.

"ரஞ்சனி, அம்மாகிட்ட அந்தப் பிரசாதத்தை எடுத்துக்கொடு"

சித்ராவின் உலுக்கலில் சுயநினைவுபெற்ற ரஞ்சனி, கெஞ்சும் விழிகளால் சித்ராவைப் பார்க்க, சித்ரா இயல்பான துடுக்குடன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தபடியே அம்மாவிடம் கேட்டள்.

"நம்ம வீட்டுத் துப்பறியும்புலி எங்கம்மா?"

"யாரு? உங்கப்பாவா? அவரும் ஜெகதீசும்தான் காலையில இருந்து ஓடி ஓடி தகவல் சேகரிச்சிட்டுவந்து எங்க எல்லாருக்கும் சொன்னாங்க. உனக்கு புஷ்பா டீச்சரைத் தெரியுமாடி, சித்ரா?"

"தெரியுமே? சாரதா டீச்சரோட ஃப்ரெண்டு. டீச்சர்வீட்டுக்கு வரும்போது பாத்திருக்கேன். அவங்களுக்கென்ன?"

"அவங்களோட கொழுந்தன்தானாம். உதவாக்கறையா சுத்திகிட்டிருந்தவனாம். இங்க டீச்சரைக் கொன்னு, நகையெல்லாம் திருடிகிட்டு வீட்டுக்குப் போய் ஒண்ணுமே தெரியாதவனாட்டம் இருந்திருக்கான். அப்புறம் அவங்க அண்ணன்கிட்ட... அதான் புஷ்பா டீச்சர் புருஷன்கிட்ட வேணும்னே தகராறு பண்ணிட்டு கோவிச்சிட்டுப் போறமாதிரி வீட்டைவிட்டுப் போயிட்டானாம். கொஞ்சநாளு தலமறைவா இருந்துட்டு சத்தம் அடங்கினதுக்கப்புறம் வரலாம்னு திட்டம் போட்டிருக்கான். ஆனா.... அவன் கணக்கு தப்பிடுச்சி. அவனோட சுத்துவட்டாரத்தில பழகுனவங்க, போனவங்க, வந்தவங்கன்னு ஒருத்தர விடாம விசாரிச்சதில செங்கல்பட்டு பக்கம் அவன் கூட்டாளியோட சுத்திகிட்டிருக்கான்னு தெரிஞ்சிடுச்சி. ஆளப் புடிச்சி கொண்டாந்துட்டாங்களாம். நம்ம சிவா வயசுதான் இருக்குமாம். போலிஸ் கையில மாட்டிட்டான்ல. இனி அவன் செத்தான்!"

சித்ராம்மா மூச்சுவிடாமல் சொல்லிமுடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். சித்ராவும், ரஞ்சனியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டனர். விஷயம் இப்படியே இருக்கட்டும், மேற்கொண்டு அதைப் பற்றி யோசிக்காமல் நிம்மதியாய் உறங்கு என்று ரஞ்சனியின் காதோடு சொல்லிச் சென்றாள், சித்ரா. ஆனால் விஷயம் இத்துடன் முடியப்போவதில்லை என்பதை ரஞ்சனி உணர்ந்திருந்ததால் இரவெல்லாம் சத்தமில்லாது, தலையணையை நனைத்துக்கொண்டிருந்தாள்.

(அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்.)


**********************************************

பாரதி
06-10-2010, 12:56 AM
எங்கெல்லாமோ போன கதை.... ஒரு வழியா ஆளைப் பிடிச்சாச்சா..!?
இல்ல... கடைசி பாகத்தில இன்னும் ஒரு திருப்பம் இருக்குமா..?
கடைசி பாகத்தையும் அசத்திருங்க.

அன்புரசிகன்
06-10-2010, 01:48 AM
உங்கள் கடிகாரத்தின் முள்ளை 22 அதிகமாக சுற்றவைத்துவிட்டு அடுத்த பாகத்தையும் பதியுங்கள். அந்த டீச்சரின் கொழுந்தருக்கும் சுஷ்மிதாவுக்கும் கள்ளத்தொடர்போ.. அடுத்தபாகத்தை ஆவலுடன் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் கீதம்.

தாமரை
06-10-2010, 02:03 AM
"நீ சொல்றதும் சரிதான். இந்த விஷயத்தை எடுத்தோம், கவுத்தோம்னு முடிவு பண்ணமுடியாது. நான் எதுக்கும் சிவா அண்ணன்கிட்ட இதைப் பத்திப் பேசிப்பாக்கறேன். அவன் கொஞ்சம் நிதானமா யோசிப்பான்."


:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:


சிவா (ஜி) அண்ணனை வம்புக்கு இழுப்பதே தனி சுகம்தான்.

பூமகள்
06-10-2010, 05:23 AM
கதை ரணகளப்படுதுப்பா.... கடைசியா கொலையாளி புடிச்சிட்டாலும்.. இன்னும் மர்மம் நீடிக்கிறதே.. ஏதோ பெரிய திருப்பம் இருக்குன்னு மட்டும் புரியுது..

அக்கா.. சீக்கிரம் இறுதி பாகத்தைப் போடுங்க..

@தாமரை,

சிவா அண்ணாவை வம்பிழுத்தே அவர் 'முடில'-னு சொல்ல வைச்சிடறீங்களே.. :aetsch013::D

மதி
06-10-2010, 07:43 AM
பரபரன்னு போகுது... ஆள் மாட்டியாச்சா? அவன் தானா..? இதுல மாற்றமேதுமில்லையே ..?

Nivas.T
06-10-2010, 08:50 AM
அப்பாடி... இப்பதான் :cool:
ஒரு பெரிய பாரம் கொறஞ்சமாதிரி ஒரு பீலிங் :D
இறுதி பாகம் சில திருப்பங்கள் தரலாம் என்று நினைக்கிறேன்:)
அது சரி கொலை எப்படி நிகழ்ந்தது? :eek::eek::eek:

சிவா.ஜி
06-10-2010, 09:54 AM
அடடா கதை எங்கெங்கோ சுத்தி....எங்களையும் சுத்தல்ல விட்டு இப்பதான்...ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கு.(அப்படீன்னும் நினைக்க முடியாது...முடிவில என்ன வெச்சிருக்கீங்களோ)

ரொம்ப பரபரப்பா இருந்தது இந்த அத்தியாயம். சூப்பர்.

கீதம்
07-10-2010, 12:46 AM
அனைவரின் ஊக்கத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே.

இறுதி அத்தியாயம் நீண்டுவிட்டதால் இரண்டாய்ப் பதிக்கிறேன்.

நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டினால் மகிழ்வேன்.

கீதம்
07-10-2010, 12:50 AM
(14)

ரஞ்சனியின் கனவில் டீச்சர் வந்தார். அவர் கண்களில் அனல் தெறித்தது. இதற்குமுன் டீச்சரை இப்படியொரு கோலத்தில் அவள் கண்டதே இல்லை.

"பாவி, பழிகாரி, என் நிலைக்கு நீயும் ஒரு காரணம்தானே? உன்னை சும்மா விடமாட்டேன், பார்! உன்னை சந்தி சிரிக்கவைக்கிறேன், பார்... சுஷ்மிதா சொல்லாவிட்டால் என்ன? நான் சொல்கிறேன்...."

டீச்சர் காற்றில் பறப்பதுபோல் எழும்பி உயர்ந்து முன்னேறினார்.

"டீச்சர், வேணாம் டீச்சர், சொல்லாதீங்க டீ......ச்ச....ர்...."

கண்ணீருடன் கதறியபடியே ரஞ்சனியும் அவர் பின்னாலேயே ஓடினாள்.

"ரஞ்சி...... ரஞ்சி......"

பக்கத்தில் படுத்திருந்த சித்ரா, விளக்கைப் போட்டுவிட்டு அவளைத் தட்டியெழுப்ப.... ரஞ்சனி மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள். சற்றுதூரத்தில் சித்ராம்மா சன்னமாய்க் குறட்டைவிட்டுக்கொண்டிருந்தாள்.

"என்னாச்சி, ஏதாவது கெட்ட கனவா?" தண்ணீர் தம்ளரை நீட்டியபடியே கேட்டாள்.

"ம்ம்.... வந்து... நான் ஏதாவது உளறினேனா....."

"ஒரே ப்ளாப்ளாப்ளான்னு கொழறல், என்னாச்சி? அதையே நினைச்சி பயந்துகிட்டிருக்கியா? அதான் ஒருவழியா முடிஞ்சிடுச்சில்ல, பின்ன ஏன் பயப்படுறே?"

சித்ரா எழுந்துபோய் விபூதி கொண்டுவந்து ரஞ்சனியின் நெற்றியில் பூசினாள். சித்ரா பயங்கரக் கனவு கண்டு எழுந்துகொண்டால் அவள் அம்மா இப்படிதான் செய்வாள். ரஞ்சனி சற்று தெளிவானதும், விளக்கை அணைத்துவிட்டு அவளை ஒட்டிப் படுத்து அவள் கரங்களைத் தன் கரங்களுடன் பிணைத்து, தைரியமாய் இரு என்பதை சொல்லாமல் சொல்லி மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள், சித்ரா.

ரஞ்சனிக்கு அவளைப் பார்க்க ஒரு தாயின் மறு உருவமாகவே தோன்றியது. இவளிடம் சொல்லாமல் மறைத்த விபரங்கள் நெருஞ்சியாய் மனதில் தைத்தன.

டீச்சர் கொலையாவதற்கு முதல்நாள் மாலை வாசலில் மாமியாருடன் பேசிக்கொண்டிருந்தபோது தானும் பேச்சில் கலந்துகொண்டாள், ரஞ்சனி. பேசிவிட்டுப் போகும்போது, வசந்தி டீச்சர் ஜாக்கெட் பிட்டுகள் கொடுத்துவிட்டிருப்பதாகச் சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்தார்.

"உக்காரு, ரஞ்சனி!"

ரஞ்சனி, சோபாவில் ஒரு ஓரமாய் தயங்கியபடியே அமர்ந்தாள்.வண்ண வண்ண ரவிக்கைத் துணிக்கட்டை அவள்முன் வைத்துவிட்டு, டீச்சர் உள்ளே சென்றார். விழிகள் விரிய பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. டீச்சர் எப்போதும் ரவிக்கைத் துணிகளை வீட்டுக்குதான் கொடுத்துவிடுவார். அப்போதுதான் அவற்றை புடவையுடன் பொருத்தம் பார்த்து வாங்க முடியும். இன்றென்னவோ தன்வீட்டுக்கு வரச்சொல்லி வலுக்கட்டாயமாய் வரவழைத்திருக்கிறார். இப்படி வெறும் ரவிக்கைகளை வைத்து எப்படி பொருத்தம் பார்ப்பதாம்?

"இந்தா ரஞ்சனி!” டீச்சர், ஆவி பறக்கும் காப்பியை அவள்முன் நீட்டினார்.

"ஐயோ.. டீச்சர், இப்பதான் எங்க வீட்டில் குடிச்சேன்"

"சும்மா குடி, அரை தம்ளர்தான், எங்க வீட்டுக் காப்பி எப்படி இருக்குன்னு பாக்கவேணாமா?"

"தாங்க்ஸ், டீச்சர்!" தயக்கத்துடன் வாங்கிக்கொண்டு, டீச்சரிடம் சொன்னாள்.

"டீச்சர், எனக்கு எந்த கலர் என் புடவைக்கு மேட்சாகும்னு குழப்பமா இருக்கு, நான் வீட்டுக்கு எடுத்திட்டுப் போய் பாத்துவரவா?"

"ஏன் ரஞ்சனி, உனக்குப் பொருத்தம்னு தோணுறதை எடுத்துக்கோயேன்"

"அதெப்படி டீச்சர், சரியா வரலைன்னா நல்லாயிருக்காதே?"

"புடவைக்கு மட்டும் பொருத்தம் பாக்கறியே? உன் வாழ்க்கையைப் பத்தி யோசிச்சியா?"

"டீச்சர்....என்ன சொல்றீங்க?"

"ரஞ்சனி, நீ குழந்தை இல்ல, நான் சொல்றது என்னன்னு உனக்குப் புரியும். உன் மனசில் இப்ப ஏதோ ஒரு சஞ்சலம் உண்டாயிருக்கு, சரிதானா நான் சொல்றது?"

"அப்படியெல்லாம் எதுவும் இல்ல, டீச்சர்!" அவள் படபடப்பே அவளைக் காட்டிக்கொடுத்தது.

"உன்னோட நடவடிக்கைகளில் ஏதோ ஒரு மாற்றம் தெரியுது, ரஞ்சனி, அது நல்லதா எனக்குப் படல. உன் வாழ்க்கை வீணாயிடக்கூடாதுங்கற நல்லெண்ணத்திலதான் நான் இதைச் சொல்றேன்.

"டீச்சர், நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிகிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்,"

"சரியாத்தான் புரிஞ்சு சொல்றேன், ரஞ்சனி, உன் போக்கு சரியில்ல, இதனால் உன் வாழ்க்கை மட்டுமில்ல, உன்னைச் சுத்தி இருக்கிறவங்க வாழ்க்கையும் பாதிக்கப்படும்."

"நான் தப்பு எதுவும் செய்யலையே, டீச்சர்!"

"நீ தப்பு எதுவும் செய்திடக்கூடாதேன்னுதான் முன்னெச்சரிக்கையா சொல்றேன். என்னை நீ வெறுத்தாலும் பரவாயில்ல, இல்ல இவங்க யாரு என் சொந்த விஷயத்தில தலையிடறதுன்னு நினைச்சாலும் பரவாயில்ல, நான் சொல்லவேண்டியதைச் சொல்லிடறேன். உனக்கொரு நல்ல வாழ்க்கை காத்துகிட்டிருக்கு. இப்ப கொஞ்சம் நிலைமை சரியில்ல, உன் புருஷனால் இங்க வர முடியாத நிலை. கணேஷ் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். கொஞ்சம் முன்கோபிதான், ஆனா...நல்ல பையன். வேலையில் பயங்கர ஈடுபாடு. எடுத்த காரியத்தை சரியாச் செஞ்சு முடிக்கணும்னு நினைப்பான். கடுமையான உழைப்பாளி. நான் எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னா.... பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இருக்கிறதை விட்டுடாதேன்னுதான். உன் கையில் அருமையான வாழ்க்கை இருக்கு. அது கனியறதுக்கு கொஞ்சகாலம் தேவைப்படுது. அதுவரைக்கும் நீ உன் பெண்மையையும் கண்ணியத்தையும் கவனமாக் கட்டிக்காக்கணும், நான் சொல்றது புரியுதா?"

ரஞ்சனி மெளனமாய் அமர்ந்திருந்தாள். டீச்சர் சொல்வது சரிதான். இந்த சுஷ்மிதாவுடனான பழக்கம் இப்படியொரு நெருக்கடியான நிலையில் தன்னைத் தள்ளிவிடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் கணவன் அருகிலிருந்தும் அவனை உதாசீனப்படுத்திவிட்டு மனம்போல் வாழ்க்கை வாழ்கிறாள். இதொன்றும் மகாபாவம் இல்லை என்று போதிக்கிறாள். அவளது போதனைகளை ஏற்று தானும் பாதை மாறவிருந்ததை ஆரம்பத்திலேயே டீச்சர் கண்டுபிடித்துவிட்டார்.

‘போகாதே, அந்தப்பாதையில் மேற்கொள்ளப்படும் பயணமானது சட்டத்துக்கும், சமுதாய நடைமுறைக்கும் புறம்பானது’ என்று அறிவுறுத்தி இழுத்துப் பிடிக்க முயல்கிறார், ஒற்றையாளாய். அவர் நினைத்திருந்தால் ஊரைக்கூட்டியும் அவளைத் தடுத்திருக்கமுடியும். இப்போது அவரது பிடியை விடுவித்துக்கொண்டு ஓடுவது ஒன்றும் அத்தனை கடினமான காரியம் அல்ல.

ஆனால் கல்யாணத்துக்கு முன்பிருந்ததுபோல் இப்போது கண்மூடித்தனமான காதல் இல்லை. கண்ணை மறைப்பது காமம் மட்டுமே! அதையும் ஒரு வைராக்கியத்துடன் எதிர்கொண்டால் வாழ்க்கை வசந்தமாகிவிடும்.

குழம்பிய மனம் தன் விபரீத ஆசைகளை வண்டலென அடியில் படியவைத்தது. இனி எக்காலமும் அதை மீளவும் குழப்பி மேலே கொண்டுவரக்கூடாது என்ற உறுதியுடன் கண்கள் பனிக்க, நன்றியுடன் டீச்சரைப் பார்த்தாள்.

இத்தனை பொறுமையாகவும், அன்பாகவும், எடுத்த எடுப்பில் குற்றம் சுமத்தாமலும், தன் தவறைப் புரியவைக்க முயற்சிக்கும் டீச்சரிடம் தன் மனப்போராட்டத்துக்கான காரணத்தை சொல்லவிழைந்தாள்.

"டீச்சர், நான் கட்டுப்பாட்டோடுதான் இருந்தேன், டீச்சர். ஆனா.... என் மனசை ஒருத்தி அலைபாய வச்சிட்டா, டீச்சர்."

"யாரது?"

"எங்க ஊர்க்காரப்பொண்ணு, சுஷ்மிதான்னு....அன்னைக்குக் கூட இங்க வந்திருந்தான்னு சொன்னேனே! அவளோட நான் சகவாசம் வச்சிகிட்டது என்னோட தப்புதான் டீச்சர், நானும் அவளை மாதிரியே வழிமாறிப்போக இருந்தேன், என் கண்ணைத் திறந்திட்டீங்க, டீச்சர். இனிமேல் கவனமா இருப்பேன், டீச்சர்."

"ரொம்ப சந்தோஷமா இருக்கு, ரஞ்சனி, எங்கே நான் புத்தி சொன்னா... என்மேல கோவிச்சிட்டு முகம் திருப்பிட்டுப் போயிடுவியோன்னு பயந்தேன். நல்லவேளை, புரிஞ்சிகிட்ட. நான் சென்னை போய் செட்டிலானதுக்கப்புறம் என்னை மறந்திட மாட்டியே?"

"உங்களை என் வாழ்க்கை பூராவும் மறக்கமாட்டேன், டீச்சர். உங்களைத் தவிர வேற யாராவது இருந்தா.... இந்நேரம் என் மாமியார்கிட்ட என்னைப் பத்திச் சொல்லி பிரச்சனையாகி இருக்கும். நீங்க... என்னை...மன்னி....மன்னிச்ச்...டுங்க....டீ...டீ.."

மேற்கொண்டு சொல்லமுடியாமல் குரல் தழுதழுத்தது..

"ஆமாம், அந்த சுஷ்மிதா வீடு எங்க இருக்கு?"

"அன்னை நகர்ல, பரந்தாமன்னு ரிட்டயர்டு போஸ்ட்மாஸ்டர் இருக்காரில்ல, அவரோட மருமகள்." கண்களைத் துடைத்துக்கொன்டு பதில் சொன்னாள்.

"அவரா? அவர எனக்கு நல்லாத் தெரியுமே! அவர் மனைவி, மகன் எல்லாருமே ரொம்ப நல்ல மாதிரி. அவங்களுக்குப் போய் இப்படி ஒரு மருமகளா? அடப்பாவமே! அவளை ஒருநாள் வீட்டுக்கு அழைச்சிட்டு வாயேன், நான் கொஞ்சம் பேசிப்பாக்கறேன்"

ரஞ்சனி திடுக்கிட்டாள். அந்தக் கடன்காரி டீச்சருக்குத் தெரியாமல் டீச்சர் வீட்டுக்கே அவ்வப்போது வந்து உல்லாசமாய் இருந்துபோகிறாள். அது தெரியாமல் டீச்சர் அவளை வீட்டுக்கு அழைக்கிறார். டீச்சரது அப்பாவித்தனத்தை எண்ணி உள்ளுக்குள் வருந்தியபடியே,

"டீச்சர், அவ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல, டீச்சர், அவ....."

"முயற்சி செய்யறதில் ஒண்ணும் தப்பில்லையே, நீ கூட்டிட்டு வா... பாக்கலாம்!"

அன்று அத்துடன் எல்லா பாரமும் நீங்கி பிரச்சனை ஓய்ந்ததாகவே நினைத்தாள். ஆனால் டீச்சரிடம் சுஷ்மிதா வந்துபோவதை சொல்வதா வேண்டாமா என்னும் விஷயத்தில்தான் குழப்பம் மிஞ்சியது. அவளைப்பற்றிச் சொன்னால், தானே மறந்துபோயிருக்கும் தன் காதல் விவகாரத்தை வெளியிட்டுவிடுவேனென்று மிரட்டுகிறாள்.. இப்போது என்ன செய்வது? டீச்சர் சொன்னபடி குடும்பவாழ்க்கையைக் கட்டிக்காப்பதே இப்போதைக்கு முக்கியம் என்று உணர்ந்தவளாக அமைதி காத்தாள்.

அடுத்தநாள் என்ன நடந்திருக்கும் என்று ரஞ்சனியால் ஓரளவு யூகிக்க முடிந்தது. அன்று எதிர்பாராதவிதமாக டீச்சர் முற்பகலில் வந்தபோது, தன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் அரக்க ஜென்மங்களைப் பார்த்திருப்பார். பதறியபடியே அக்கம்பக்கத்தவரை உதவிக்கு அழைக்க வெளியில் ஓட முயன்றிருப்பார். அப்போது அந்தக் கயவன் தன் கொடூர குணத்தைக் காட்டிவிட்டிருக்கிறான்.


(தொடரும்)
*******************************************************************

கீதம்
07-10-2010, 01:02 AM
(15)

சாராதா டீச்சர் கொலை வழக்கில் கொலையாளி பிடிபட்டான்.பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கள்ளக்காதலைக் கண்டுபிடித்ததால் கழுத்தை அறுத்தேன், கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம்.

கொலைக்கு உடந்தையாய் இருந்த இளம்பெண்ணை போலிஸார் கைது செய்தனர். போலிஸ் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.

திருச்சி, ராஜிவ் நகரைச் சேர்ந் ரஞ்சித் என்பவனும், அன்னை நகரைச் சேர்ந்த சுஷ்மிதா என்னும் இளம்பெண்ணும் கடந்த சில நாட்களாகவே தங்கள் கள்ள உறவுக்கு ஆசிரியையின் வீட்டை, அவர் அறியாமல் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.சுஷ்மிதாவின் கணவர் ஜெகன் ஒரு தனியார் வங்கியில் மேலாளராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நாளேடுகளில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இதுபற்றிய செய்திகளே வெளியாகி இருந்தன. பலரது வாய்களும் சூயிங்கம் மெல்வதைப்போல் துப்ப மனமில்லாமல் இந்தச் செய்திகளையே மீண்டும் மீண்டும் மென்றுகொண்டிருந்தன.

காலணிப் பெண்களின் அரட்டைக் கச்சேரிகள் ஆங்காங்கே அரங்கேறத் தொடங்கியிருந்தன. வாய் பார்க்கவந்த சிறுவர் சிறுமிகள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆண்களும் பெண்களும் பொதுவில் இதுபற்றிப் பேசத் தயங்கினர்.

காமம் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது? தகாத உறவினால் எப்போதும் பாழாவதென்னவோ அவ்வுறவில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கையும், அவர்களோடு தொடர்புடைய நேரடி சொந்தங்களும்தான். ஆனால் இன்று.....?

எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு நல்ல மனுஷி அப்படியொரு உறவினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்! எத்தனைப் பெரிய சோகம் இது? அவள் பெற்ற ஒரே பெண் பத்து வருடங்களுக்குப் பின் கர்ப்பவதியாகியிருக்கும் நிலையில், அதுவும் இரட்டைக் குழந்தைகளை ஏந்திநிற்கும் நிலையில், அவள் தாயின் சேவை அவளுக்கு எத்தனைத் தேவை? இருந்த ஒரு உறவையும் இழந்துவிட்டு அந்தப் பெண் படும்பாடு எத்தனை வேதனைக்குரியது? எனக்கும் ஒரு மகள் இருக்கிறாளே! அந்த வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறதே!

சித்ராம்மாவின் உள்ளம் கழிவிரக்கத்தால் கசிந்தது. சித்ராம்மாவின் வீட்டு வாசலில்தான் பெண்களின் மாநாடு கூடியிருந்தது.

"அவ உங்க மருமகளோட ஃப்ரெண்டுதானாமே!" பூர்ணாம்மா கேட்க, சித்ராம்மா சற்று காட்டமாகவே பதில் சொன்னாள்.

"பிரெண்டெல்லாம் இல்ல, சும்மா பழக்கம். அவ்வளவுதான், போன்ல பேசும்போது நானே அவள நல்லவன்னு நெனச்சேனே! ரஞ்சனி பாவம், என்ன பண்ணும்? வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனக்கிற பொண்ணு!"

"நான் அன்னைக்கே டீச்சர்கிட்ட சொன்னேன், சித்ராம்மா. உங்க வீட்டுக் கொல்லக்கதவத் திறந்திட்டு ஒரு பொம்பள போனாள்னு. அவங்க வந்து பாத்தப்ப கதவு உள்பக்கம் தாழ் போட்டிருந்துதா....அவங்க உடனே என்னைக் கேலி பேச ஆரம்பிச்சிட்டாங்க. நமக்கெதுக்கு வம்புன்னு நானும் பேசாம இருந்திட்டேன். அந்தச் சண்டாளிதான் போயிருக்கா...." பிரமிளா ஆவேசமாகச் சொன்னாள்.

"டீச்சர் வேற அன்னைக்குன்னு பாத்து வீட்டுக்கு வந்தப்புறம் ஏதோ ஞாபகத்தில பூட்டை உள்பக்கம் பாத்தே பூட்டிட்டாங்க போல. அதுதான் தப்பாயிடுச்சி. அவங்க ஊருக்குப் போயிருக்காங்கன்னே நாங்க எல்லாரும் நெனச்சிட்டோம்."

"ஆமாம், எப்பவும் எங்க ராஜா கிட்ட சொல்லிதான் ஆட்டோ பிடிப்பாங்க, என்னடா, நம்மகிட்ட சொல்லலியேன்னு நினைச்சேன், சரி, சித்ராப்பாவோ, சிவாவோ ஆட்டோ பிடிச்சிருப்பாங்கன்னு நினைச்சு சும்மா இருந்திட்டேன்."

"நாமெல்லாரும் இருக்கையிலேயே இந்த அநியாயம் நடந்திருக்கு, பாருங்க. என்னால நம்பவே முடியல. இது எப்படி சாத்தியம்?" ராஜாம்மா மேவாயில் கைவைத்து தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.

"எது எப்படி சாத்தியம்?" பூர்ணாம்மா புதிதாய்க் கேட்பதுபோல் கேட்டாள்.

"அதாங்க, அதுங்க ரெண்டும் டீச்சர் வீட்டுக்குள்ள எப்படிப் போகவர இருந்துதுங்க?"

"என்ன பெரிய கம்பசூத்திரம்? அவனே ஒரு பொறுக்கி, சுவரேறிக்குதிக்க எவ்வளவு நேரமாவும்? முதல்ல அவன் உள்ள போயிட்டு கதவு தாழ்ப்பாளை நீக்கி வச்சிடுவானாம், பின்னால இவ போவாளாம். மாமரம் சனியன் வேற பந்தல் போட்டமாதிரி ஓட்டுமேல படர்ந்து கெடக்கா.... அது அவனுக்கு ரொம்பவே வசதியா போயிட்டுது."

"ரெட்டை ஓடாச்சே! அவ்வளவு ஈஸியாப் பிரிக்க முடியாதே? எப்படிப் பிரிச்சான்?"

"அவன் எங்கேங்க ரெட்டை ஓட்டைப் பிரிச்சான்? அடுப்படிக்கு மேல ஒத்த ஓடுதானே? அதத்தான் பிரிச்சிருக்கான். என்னா அக்கிரமம், பாருங்க"

"இந்த டீச்சருக்கு எதுவுமேவா தெரியாம இருந்திருக்கும்?"

"வச்சது வச்ச எடத்தில் இருந்தா அவங்களுக்கு ஏன் சந்தேகம் வரப்போவுது?"

"என்னவோ போங்க, இப்பெல்லாம் வீட்டைப் பூட்டிட்டு வெளியில போகவே பயமா இருக்கு..."

மெகாதொடர்களைத் பெருந்தியாகம் செய்து பேசிக்கொண்டிருந்தார்கள், அவர்கள்.


**********************************************************

அன்றைய மாலை நாளேடுகளில் வெளியான ஒரு செய்தி அனைவரையும் மனம் பதைக்கவைத்தது.

இளம்பெண் சுஷ்மிதாவின் கணவன் விஷம் அருந்தி தற்கொலை. மனைவியின் நடத்தையால் அவமானம் தாங்காமல் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

*******************************************************************
(முற்றும்)

மதி
07-10-2010, 03:16 AM
செமையா போச்சு கதை....!!! அழகா வசனங்கள் மூலமே பல கதாபாத்திரங்களை செதுக்கி நிகழ்வுகளை சொன்ன விதம் அருமை.

தாமரை
07-10-2010, 05:36 AM
ஒரு சம்பவம். அதைச் சுற்றி உண்டாகும் நிகழ்வுகள். அக்கம் பக்கத்தவரின் செயல்கள் எண்ணங்கள் இப்படி கதையை அருமையாய் நகர்த்தி முடித்த விதம் அருமை.

இந்தக் கதையின் எந்தக் கதாபாத்திரமாகவும் கதாசிரியர் சம்பவத்தைப் பார்க்காமல் எப்பொழுதுமே ஒரு பார்வையாளராகவே இருந்து கதையைச் சொன்னது அசத்தல்.

சம்பவங்களை உரையாடல்கள் மூலமே கொண்டு வந்தது விஷேசம். ரஞ்சித்தோ, சுஷ்மிதாவோ கதையில் நேரடியாக காட்டப்படாமல், அக்கம் பக்கத்து மனிதர்களின் பின்னாலேயே நம்மை ஒரு பார்வையாளராக கொண்டு போய் காட்டி இருப்பது சூப்பர்.

இதுதான் நடந்தது என்று கதை சொல்வது எளிது. ஆனால் பலரின் பார்வையில் என்ன என்ன நடந்தது என்பதைக் கோர்த்து அதில் இடறாமல் கதை பயணித்து இருக்கு.

தேர்ந்த கதாசிரியை என்பதை பல இடங்களில் காட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள். உங்களுக்குப் பரிசா கலையக்காவை நண்டு குழம்பு வைத்துக் கொடுக்க சிபாரிசு செய்யறேன்.

:D:D:D

கீதம்
07-10-2010, 06:05 AM
செமையா போச்சு கதை....!!! அழகா வசனங்கள் மூலமே பல கதாபாத்திரங்களை செதுக்கி நிகழ்வுகளை சொன்ன விதம் அருமை.

மிகவும் நன்றி, மதி. கதையும் முடிவும் நான் எதிர்பார்த்தபடியே முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

கீதம்
07-10-2010, 06:17 AM
ஒரு சம்பவம். அதைச் சுற்றி உண்டாகும் நிகழ்வுகள். அக்கம் பக்கத்தவரின் செயல்கள் எண்ணங்கள் இப்படி கதையை அருமையாய் நகர்த்தி முடித்த விதம் அருமை.

இந்தக் கதையின் எந்தக் கதாபாத்திரமாகவும் கதாசிரியர் சம்பவத்தைப் பார்க்காமல் எப்பொழுதுமே ஒரு பார்வையாளராகவே இருந்து கதையைச் சொன்னது அசத்தல்.

சம்பவங்களை உரையாடல்கள் மூலமே கொண்டு வந்தது விஷேசம். ரஞ்சித்தோ, சுஷ்மிதாவோ கதையில் நேரடியாக காட்டப்படாமல், அக்கம் பக்கத்து மனிதர்களின் பின்னாலேயே நம்மை ஒரு பார்வையாளராக கொண்டு போய் காட்டி இருப்பது சூப்பர்.

இதுதான் நடந்தது என்று கதை சொல்வது எளிது. ஆனால் பலரின் பார்வையில் என்ன என்ன நடந்தது என்பதைக் கோர்த்து அதில் இடறாமல் கதை பயணித்து இருக்கு.

தேர்ந்த கதாசிரியை என்பதை பல இடங்களில் காட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள். உங்களுக்குப் பரிசா கலையக்காவை நண்டு குழம்பு வைத்துக் கொடுக்க சிபாரிசு செய்யறேன்.

:D:D:D

ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களிடமிருந்துதான் நிறைய கேள்விகள் வரும் என்று எதிர்பார்த்தேன்.

உங்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவும், ஊக்குவிப்பும் எனக்கு தொடர்ந்து எழுதும் உற்சாகத்தைக் கொடுத்தது என்பது உண்மை. மிகவும் நன்றி, தாமரை அவர்களே.

அதுசரி, கலையக்கா எனக்கு நண்டு குழம்பு வச்சித்தர நீங்கள் என்ன சிபாரிசு? இது நல்லா இருக்கே!:mini023::mini023:

தாமரை
07-10-2010, 08:23 AM
அதுசரி, கலையக்கா எனக்கு நண்டு குழம்பு வச்சித்தர நீங்கள் என்ன சிபாரிசு? இது நல்லா இருக்கே!:mini023::mini023:

கூடவே நாங்களும் ஜோதியில் ஐக்கியமாவோம் இல்லியா? அதுக்குத்தான் :D:D:D

கீதம்
07-10-2010, 08:28 AM
கூடவே நாங்களும் ஜோதியில் ஐக்கியமாவோம் இல்லியா? அதுக்குத்தான் :D:D:D

அதுக்கு இன்னும் ரெண்டுவருஷம் காத்திருக்கணுமே, முடியுமா உங்களால்?

தாமரை
07-10-2010, 08:32 AM
அதுக்கு இன்னும் ரெண்டுவருஷம் காத்திருக்கணுமே, முடியுமா உங்களால்?

இரண்டே வருஷம்தானே... இப்பவே நண்டு வளர்க்க ஆரம்பிச்சிட்டா போச்சு!!!:lachen001::lachen001::lachen001:

பூமகள்
07-10-2010, 08:59 AM
வசிஸ்டர் கையால் பாராட்டு வாங்கியதுக்கப்புறம்.. இந்த குட்டி காளானின் பாராட்டுத் தேவையே இல்லை கீதமக்கா..

மிகுந்த பொறாமையுடன் பூ....

தாமரை
07-10-2010, 09:00 AM
வசிஸ்டர் கையால் பாராட்டு வாங்கியதுக்கப்புறம்.. இந்த குட்டி காளானின் பாராட்டுத் தேவையே இல்லை கீதமக்கா..

மிகுந்த பொறாமையுடன் பூ....

என்னக் கொடுமை இது பூமகள்?

பூமகள்
07-10-2010, 09:03 AM
அடக்கடவுளே... வசிஸ்டர் வாயில மாட்டிக்கிட்டேனே...

கீதம் + அக்கா = கீதமக்கா (இதை தப்பா பெரிசு பண்ணினாதீங்க தாமரையண்ணா..)

இப்படி ஆரம்பப் பள்ளிப் பாடம் எடுக்க வேண்டுமா என்ன உங்களுக்கு?? :eek::eek:

கீதம்
07-10-2010, 09:04 AM
வசிஸ்டர் கையால் பாராட்டு வாங்கியதுக்கப்புறம்.. இந்த குட்டி காளானின் பாராட்டுத் தேவையே இல்லை கீதமக்கா..

மிகுந்த பொறாமையுடன் பூ....

நன்றி, பூமகள். உங்க பொறாமை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எத்தனை நாள்தான் நான் உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டுக்கொண்டே இருப்பது? ஒரு மாறுதல் வேண்டாமா?:lachen001:

பூமகள்
07-10-2010, 09:05 AM
ஹே ஹே... ஹேஹ்ஹே... :D:D :mini023::mini023:

என்னை.. என்னை.. என்னைப் பார்த்து....... :lachen001::lachen001:

கீதம்
07-10-2010, 09:08 AM
வசிஸ்டர் கையால் பாராட்டு வாங்கியதுக்கப்புறம்.. இந்த குட்டி காளானின் பாராட்டுத் தேவையே இல்லை கீதமக்கா..

மிகுந்த பொறாமையுடன் பூ....

இந்த கீதமக்காவை ரொம்ப நாளாகவே எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். எல்லாரும் படு எச்சரிக்கையா கீதத்தையும் அக்காவையும் பிரிச்சே வச்சிருந்தாங்க. இன்னைக்கு அதை பூமகள் அதிக பாசத்தால் பிணைத்துவிட்டார்கள்.

கவலைப்படதீங்க பூ. நான் உங்களை தப்பா நினைக்கமாட்டேன்.

மதி
07-10-2010, 09:11 AM
என்னக் கொடுமை இது பூமகள்?
:D:D:D:D
அச்சச்சோ.. :eek::eek::eek::eek:

தாமரை
07-10-2010, 09:13 AM
எல்லாம் அக்னிக்குப் பயந்துதான் பிரிச்சி எழுதறாங்க.. அக்னி கொஞ்ச நாளா சரியா வர்ரதில்லை. அதான் அவரோட கடமைகளில் ஒண்ணு ரெண்டு நாம செய்வோம்னு...

சிவா.ஜி
07-10-2010, 04:17 PM
ரொம்ப திருப்தியா இருக்கு. ஒரு நல்ல பூரணமான கதையை.....குறை சொல்ல முடியாத கதையை...ரொம்ப சிறப்பாக் கொடுத்திருக்கீங்கம்மா கீதம்.
உங்களுக்கு கதையரசின்னு பட்டமும், கதைக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்த்தும், 1000 மின் பணம் வெகுமதியும் அளித்து சந்தோஷமடைகிறேன்.
பூ சொன்ன அதே டயலாக்தான்.

"பொறாமையா இருக்கு....."

மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா. இன்னும் பல உயரங்களை அடையப்போறீங்க. வெகுஜன ஊடகங்கள்ல எல்லா இடத்துலயும் உங்க பேரைப் பாக்கப்போற நாள் அதிக தூரமில்லை.

கீதம்
08-10-2010, 12:36 AM
ரொம்ப திருப்தியா இருக்கு. ஒரு நல்ல பூரணமான கதையை.....குறை சொல்ல முடியாத கதையை...ரொம்ப சிறப்பாக் கொடுத்திருக்கீங்கம்மா கீதம்.
உங்களுக்கு கதையரசின்னு பட்டமும், கதைக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்த்தும், 1000 மின் பணம் வெகுமதியும் அளித்து சந்தோஷமடைகிறேன்.
பூ சொன்ன அதே டயலாக்தான்.

"பொறாமையா இருக்கு....."

மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா. இன்னும் பல உயரங்களை அடையப்போறீங்க. வெகுஜன ஊடகங்கள்ல எல்லா இடத்துலயும் உங்க பேரைப் பாக்கப்போற நாள் அதிக தூரமில்லை.

உங்கள் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும், ஐந்துநட்சத்திரங்களுக்கும், அன்புப்பரிசுக்கும் மிகவும் நன்றி அண்ணா. 'கதையரசி' மட்டும் கொஞ்சம் மிகையோ என்று தோன்றுகிறது. அதை அப்படியே பத்திரமாக வைத்திருங்கள். இன்னும் என்னை முன்னேற்றிக்கொண்டு பிறகு உங்களிடமிருந்து நானே வாங்கிக்கொள்கிறேன். உங்கள் அன்புக்கு என் மனம் நிறைந்த நன்றி, அண்ணா.

(உங்கள் இணைய இணைப்பு இன்னமும் செயல்படவில்லையா?)

பாரதி
08-10-2010, 02:31 AM
நல்ல மர்மக்கதை!

இன்று முழுக்கதையையும் மீண்டும் படித்தேன்.

கதையில் பல கதை மாந்தர்கள். அவ்வப்போது படிக்கும் போது ஏன் இத்தனை பாத்திரங்கள் என்ற எண்ணம் தோன்றவே செய்தது.

சில ஆங்கிலப்படங்களைப் போல ஒவ்வொருவரின் கோணத்தையும் தனித்தனியாக கூறி கடைசியில் கதையின் முடிச்சு அவிழ்க்கப்பட்டது சிறப்பு. ஒரு மரணத்தை கதையாக்கியதை விட கதை கூறப்பட்ட விதம்தான் அதன் பலமும் பலவீனமும். இது போன்ற கதைகளை முழுமை பெற்ற பின்னர் ஒரே மூச்சில் வாசித்தால் கதையின் சிறப்பு புலனாகிறது.

ஆரம்பத்தில் சில பகுதிகள் ஈஷ்வர், பிரமிளாவை சுற்றி அமைக்கப்பட்டது ஒரு எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். கதையின் போக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும் என்றால் அதை சற்று குறைத்திருக்கலாம்.

ஈஷ்வரின் கனவில் சாரதா டீச்சர் வந்து "நீதானே என்னைக் கொன்னே......? நீதானே என்னைக் கொன்னே......? நீதானேடா அது......?" என்பது கதையின் போக்கில் ஒரு சிறிய பின்னடைவு. ஏனெனில் அதன் பின்னர் அதன் தொடர்ச்சி எதுவும் கதையில் கூறப்படவில்லை.

இது போன்ற நிகழ்வு ரஞ்சனிக்கும் கதையில் நேர்கிறது`-`"பாவி, பழிகாரி, என் நிலைக்கு நீயும் ஒரு காரணம்தானே? உன்னை சும்மா விடமாட்டேன், பார்! உன்னை சந்தி சிரிக்கவைக்கிறேன், பார்... சுஷ்மிதா சொல்லாவிட்டால் என்ன? நான் சொல்கிறேன்...."

பாத்திரப்படைப்பில் ஈஷ்வரைக்கொண்டு கதையை விளக்குவதா அல்லது ரஞ்சனியைக் கொண்டு கதையை விளக்குவதா என்ற சிறிய ஐயம் ஏற்பட்டிருக்கக்கூடுமோ..? தனித்தனி பாகங்களாக எழுதி பதிந்திருப்பதால் இவ்விதம் நேர்ந்திருக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதாக உணர்கிறேன். எனது ஐயம் சரியெனில் கதையின் வரிகளை சற்றே திருத்தி அமைக்கலாம்.

தனித்தனியே படிக்கும் போது தோன்றாத ஆர்வம் மொத்தக்கதையையும் ஒருமித்து படிக்கும் போது உண்டானது. ஒரு சிறந்த கதாசிரியரின் அத்தனை அம்சங்களும் உங்களின் படைப்புகளில் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்க காத்திருக்கிறேன். முழு மனதுடன் வாழ்த்திப்பாராட்டுகிறேன்.:icon_b:

அன்புரசிகன்
08-10-2010, 02:40 AM
சிவா அண்ணாவுக்கு அடுத்து உங்களது பாணியில் கதையை அழகாக நகர்த்துகிறீர்கள். எல்லோரும் கூறியபின் என்ன கூற. என்னுடைய 5 நட்சத்திர வாழ்த்தினையும் ஏற்றிடுங்கள்.

அடுத்த கதை எப்போ???

பின் குறிப்பு: கதை எழுதினா கீதாக்கா போல் முடிக்க தெரிஞ்சுக்கணும். :D :D :D சில பல கதைகள் அந்தரத்தில் நிக்குது.... :D

கீதம்
08-10-2010, 04:37 AM
நல்ல மர்மக்கதை!

இன்று முழுக்கதையையும் மீண்டும் படித்தேன்.

கதையில் பல கதை மாந்தர்கள். அவ்வப்போது படிக்கும் போது ஏன் இத்தனை பாத்திரங்கள் என்ற எண்ணம் தோன்றவே செய்தது.

சில ஆங்கிலப்படங்களைப் போல ஒவ்வொருவரின் கோணத்தையும் தனித்தனியாக கூறி கடைசியில் கதையின் முடிச்சு அவிழ்க்கப்பட்டது சிறப்பு. ஒரு மரணத்தை கதையாக்கியதை விட கதை கூறப்பட்ட விதம்தான் அதன் பலமும் பலவீனமும். இது போன்ற கதைகளை முழுமை பெற்ற பின்னர் ஒரே மூச்சில் வாசித்தால் கதையின் சிறப்பு புலனாகிறது.

ஆரம்பத்தில் சில பகுதிகள் ஈஷ்வர், பிரமிளாவை சுற்றி அமைக்கப்பட்டது ஒரு எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். கதையின் போக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும் என்றால் அதை சற்று குறைத்திருக்கலாம்.

ஈஷ்வரின் கனவில் சாரதா டீச்சர் வந்து "நீதானே என்னைக் கொன்னே......? நீதானே என்னைக் கொன்னே......? நீதானேடா அது......?" என்பது கதையின் போக்கில் ஒரு சிறிய பின்னடைவு. ஏனெனில் அதன் பின்னர் அதன் தொடர்ச்சி எதுவும் கதையில் கூறப்படவில்லை.

இது போன்ற நிகழ்வு ரஞ்சனிக்கும் கதையில் நேர்கிறது`-`"பாவி, பழிகாரி, என் நிலைக்கு நீயும் ஒரு காரணம்தானே? உன்னை சும்மா விடமாட்டேன், பார்! உன்னை சந்தி சிரிக்கவைக்கிறேன், பார்... சுஷ்மிதா சொல்லாவிட்டால் என்ன? நான் சொல்கிறேன்...."

பாத்திரப்படைப்பில் ஈஷ்வரைக்கொண்டு கதையை விளக்குவதா அல்லது ரஞ்சனியைக் கொண்டு கதையை விளக்குவதா என்ற சிறிய ஐயம் ஏற்பட்டிருக்கக்கூடுமோ..? தனித்தனி பாகங்களாக எழுதி பதிந்திருப்பதால் இவ்விதம் நேர்ந்திருக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதாக உணர்கிறேன். எனது ஐயம் சரியெனில் கதையின் வரிகளை சற்றே திருத்தி அமைக்கலாம்.

தனித்தனியே படிக்கும் போது தோன்றாத ஆர்வம் மொத்தக்கதையையும் ஒருமித்து படிக்கும் போது உண்டானது. ஒரு சிறந்த கதாசிரியரின் அத்தனை அம்சங்களும் உங்களின் படைப்புகளில் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்க காத்திருக்கிறேன். முழு மனதுடன் வாழ்த்திப்பாராட்டுகிறேன்.:icon_b:

இந்தக்கதை பற்றிய உங்கள் விமர்சனங்களை பேருவகையுடன் வரவேற்கிறேன், பாரதி அவர்களே.

ஒரு கொலை பற்றிய கதை பின்னி, அதன் பின்னனியில் கொலையானவருடன் பழகிய அக்கம்பக்க மாந்தரின் பார்வையில் அந்தக் கொலையையும், அதன் பாதிப்பையும் காட்ட விரும்பினேன். இதுபோன்ற குடியிருப்புகளில் வசிப்போருக்கு எதிர் வீடுகளை விடவும், இருபக்கமும் அமைந்த பக்கத்து வீடுகளுடந்தான் பெருமளவில் பழக்கமிருக்கும். அதன் அடிப்படையிலேயே சித்ரா வீட்டு அங்கத்தினரையும், ஈஷ்வர், பிரமிளாவையும் முன்னிலைப்படுத்தினேன்.

டீச்சரின் கொலையை முதலில் கண்டறிய ஒரு பாத்திரம் தேவை. அதற்கு நுகர்திறனற்ற ஈஷ்வரின் பாத்திரம் உதவியது. சாதாரணமாய் எந்தப்பாத்திரமாய் இருந்தாலும் டீச்சரின் பிணம் கண்டு பெரும் அதிர்ச்சி அடைவார்கள் என்றாலும் நாற்றம் உணரமுடியாதவன் ஒருவன் எவ்வித பயமோ பதட்டமோ இன்றி லேசான அலட்சியத்துடன் பார்க்கையில் அங்கு ஒரு அழுகிய பிணம் கிடந்தால் அதுவும் ஒரு தாயைப் போல் பழகிய ஒரு பெண்மணியினுடையது என்றால், அதை அவன் எவ்வாறு எதிர்கொள்வான் என்று தோன்றியது. அவன் இயல்பிலேயே துணிவற்றவனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் பயந்து நடுங்குவான் என்பதாலும் அவனது பயத்தின், பிரமையின் அடிப்படையில் அதுபோன்றதொரு கனவு வருவதாக எழுதினேன்.

அதன்பின் அந்தப்பாத்திரம் தேவைப்படவில்லை என்பதால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது.

ரஞ்சனியின் கனவுபற்றி எழுதும்போது ஈஷ்வரின் கனவும் இதே பாணியில் அமைந்தது நினைவுவந்தது.ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். வாசகர்களுக்கு குழப்பம் வரும் என்றால் ரஞ்சனியின் கனவுப்பகுதியை நிக்கிவிடலாம். அதில்லாவிட்டாலும் கதையின் ஓட்டம் தடைபடாது என்றே தோன்றுகிறது.

என் எழுத்தைச் செப்பனிட முன்வந்த உங்கள் கரங்களுக்கு என் கனிவான நன்றி.

கீதம்
08-10-2010, 04:40 AM
சிவா அண்ணாவுக்கு அடுத்து உங்களது பாணியில் கதையை அழகாக நகர்த்துகிறீர்கள். எல்லோரும் கூறியபின் என்ன கூற. என்னுடைய 5 நட்சத்திர வாழ்த்தினையும் ஏற்றிடுங்கள்.

அடுத்த கதை எப்போ???

பின் குறிப்பு: கதை எழுதினா கீதாக்கா போல் முடிக்க தெரிஞ்சுக்கணும். :D :D :D சில பல கதைகள் அந்தரத்தில் நிக்குது.... :D

உங்கள் பாராட்டுக்கும், ஐந்து நட்சத்திரங்களுக்கும் மிகவும் நன்றி, அன்புரசிகன்.

தொடர்கதை எழுதுவதென்பது எத்தனைக் கஷ்டம்னு எனக்குத் தெரிகிறது. அதனால் தொடரைப் பாதியில் விட்டிருப்பவர்களை ஒன்றும் சொல்லாதீங்க. நேரம் கிடைக்கும்போது எழுதாமல் போயிடுவாங்களா, என்ன?

அன்புரசிகன்
08-10-2010, 05:01 AM
தொடர்கதை எழுதுவதென்பது எத்தனைக் கஷ்டம்னு எனக்குத் தெரிகிறது. அதனால் தொடரைப் பாதியில் விட்டிருப்பவர்களை ஒன்றும் சொல்லாதீங்க. நேரம் கிடைக்கும்போது எழுதாமல் போயிடுவாங்களா, என்ன?

எழுதுறதே கஷ்டம் என்றால் வாசித்துவிட்டு ஏங்குற எங்கட கஷ்டம் ???!!!! :eek::eek:

Nivas.T
08-10-2010, 12:39 PM
அருமையான கதையோட்டம்

ஒரு உண்மை சம்பவம் பற்றி படிப்பதுபோல் இருந்தது

எதிர்பார்த்த முடிவுதான், செய்தித்தாளின் பிணைப்பு மிக அருமை

ஒரு சம்பவம் அதன் விளைவு அதில் சமூகத்தின் பார்வை என அனைத்தும் அழகு

என்ன செய்வது சமூகத்தில் அனைத்து வகையான ஆண்களும், பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

ஆனால் "பலநாள் திருடன் நிச்சயம் ஒருநாள் பிடிபடுவான்"

மிக்க நன்றி கீதம் அவர்களே :)

Nivas.T
08-10-2010, 12:48 PM
எழுதுறதே கஷ்டம் என்றால் வாசித்துவிட்டு ஏங்குற எங்கட கஷ்டம் ???!!!! :eek::eek:

அதானே?:rolleyes:

மதி
08-10-2010, 01:16 PM
பின் குறிப்பு: கதை எழுதினா கீதாக்கா போல் முடிக்க தெரிஞ்சுக்கணும். :D :D :D சில பல கதைகள் அந்தரத்தில் நிக்குது.... :D
இதை நான் வன்முறையா கண்டிக்கறேன்... :traurig001::traurig001:

சிவா.ஜி
08-10-2010, 03:22 PM
இதை நான் வன்முறையா கண்டிக்கறேன்... :traurig001::traurig001:

நீங்க அழறதப் பாத்தா வேற யாரோ உங்க மேல வன்முறையை பிரயோகப்படுத்தின மாதிரி இருக்கே மதி....

உ.த.செ....அடுத்த பாகம் எப்ப...(மறுபடியுமான்னு புலம்பாதீங்க...மள மளன்னு உக்காந்து எழுத ஆரம்பியுங்க...)

கீதம்
09-10-2010, 04:26 AM
அருமையான கதையோட்டம்

ஒரு உண்மை சம்பவம் பற்றி படிப்பதுபோல் இருந்தது

எதிர்பார்த்த முடிவுதான், செய்தித்தாளின் பிணைப்பு மிக அருமை

ஒரு சம்பவம் அதன் விளைவு அதில் சமூகத்தின் பார்வை என அனைத்தும் அழகு

என்ன செய்வது சமூகத்தில் அனைத்து வகையான ஆண்களும், பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

ஆனால் "பலநாள் திருடன் நிச்சயம் ஒருநாள் பிடிபடுவான்"

மிக்க நன்றி கீதம் அவர்களே :)

நன்றி, நிவாஸ். இதில் நான் தொட்ட உண்மைச்சம்பவம் டீச்சரின் கொலை. இதுபோலவே இருபது வருடங்களுக்குமுன் ஒரு கொலை நடந்து அக்கம்பக்கத்தவர்க்கு மூன்றுநாட்கள் கழித்தே சந்தேகம் வந்து போலிஸுக்கு சொல்லி வெளியில் தெரியவந்தது. அதன் பாதிப்பில் எழுந்ததுதான் இக்கதை. உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.

கீதம்
09-10-2010, 04:27 AM
எழுதுறதே கஷ்டம் என்றால் வாசித்துவிட்டு ஏங்குற எங்கட கஷ்டம் ???!!!! :eek::eek:

பெருங்கஷ்டம்தான்!:D

ஆதவா
12-10-2010, 10:34 AM
இன்னிக்குத்தான் படிச்சு முடிச்சேன்.
இந்தமாதிரி தொடர்கதைகள் படிப்பதில் எனக்குள்ள சிக்கல் என்னவெனில், விட்டு விட்டு படிப்பதனால் மறந்து போய்விடுவேன். அதனால் கோர்வையாக வராது.

மர்மக் கதைகள் எனும் ஜெனரில் (Genre) சிவா.ஜி அண்ணாதான் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். இப்போது அவருக்குப் போட்டியாக நீங்களும்..
கதைக்கு மிக முக்கியமான இரு கொலையாளிகள், கதை முழுக்க எங்குமே பேசவில்லை, இதுவே ஒரு நல்ல கதையமைப்பு. நான் “ரஞ்ஜனி”யாக இருக்கும் என்று நினைத்தேன். ஒருசில மர்மப் படங்களில்/கதைகளில் எதற்கு கொலை செய்கிறார்கள் என்று தெரியாது ஆனால் நல்ல கதாப்பாத்திரங்களை திடீரென்று யூ டர்ன் அடிக்கச் செய்து கொலைசெய்விப்பார்கள்!

ரஞ்சனியின் கனவு, பயம் கொள்ளும் ஒவ்வொருவரின் இரவிலும் வரும் இயல்பான நிகழ்வு... ஒரு ஈர்ப்பின் மையத்தில் மனம் புகும்பொழுது கனவுகள் அதையொட்டி வருவது சாத்தியமே..
பல நேரங்களில் பின்நோக்கு உத்தி (Flashback) மூலமும் கதை நகர்கிறது. ஆகையால் கதை ஒரு ஊஞ்சல் நிலையில் இங்குமங்குமாய் சென்று இறுதியில் மெதுவாக ஓய்ந்து முடிகிறது.
கொலை செய்தவிதம் என்று தனியாக எதையும் கொடுக்காததும் நன்று!

ஆக மொத்தம், திரில்லர் கதை, திரில்லிங்காக இருந்தது!! முழுக்கதையுமாக!!!

கீதம்
12-10-2010, 09:36 PM
இன்னிக்குத்தான் படிச்சு முடிச்சேன்.
இந்தமாதிரி தொடர்கதைகள் படிப்பதில் எனக்குள்ள சிக்கல் என்னவெனில், விட்டு விட்டு படிப்பதனால் மறந்து போய்விடுவேன். அதனால் கோர்வையாக வராது.

மர்மக் கதைகள் எனும் ஜெனரில் (Genre) சிவா.ஜி அண்ணாதான் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். இப்போது அவருக்குப் போட்டியாக நீங்களும்..
கதைக்கு மிக முக்கியமான இரு கொலையாளிகள், கதை முழுக்க எங்குமே பேசவில்லை, இதுவே ஒரு நல்ல கதையமைப்பு. நான் “ரஞ்ஜனி”யாக இருக்கும் என்று நினைத்தேன். ஒருசில மர்மப் படங்களில்/கதைகளில் எதற்கு கொலை செய்கிறார்கள் என்று தெரியாது ஆனால் நல்ல கதாப்பாத்திரங்களை திடீரென்று யூ டர்ன் அடிக்கச் செய்து கொலைசெய்விப்பார்கள்!

ரஞ்சனியின் கனவு, பயம் கொள்ளும் ஒவ்வொருவரின் இரவிலும் வரும் இயல்பான நிகழ்வு... ஒரு ஈர்ப்பின் மையத்தில் மனம் புகும்பொழுது கனவுகள் அதையொட்டி வருவது சாத்தியமே..
பல நேரங்களில் பின்நோக்கு உத்தி (Flashback) மூலமும் கதை நகர்கிறது. ஆகையால் கதை ஒரு ஊஞ்சல் நிலையில் இங்குமங்குமாய் சென்று இறுதியில் மெதுவாக ஓய்ந்து முடிகிறது.
கொலை செய்தவிதம் என்று தனியாக எதையும் கொடுக்காததும் நன்று!

ஆக மொத்தம், திரில்லர் கதை, திரில்லிங்காக இருந்தது!! முழுக்கதையுமாக!!!

ரசித்து வாசித்திருக்கிறீர்கள் என்று பின்னூட்டம் மூலம் அறிகிறேன். மிகவும் நன்றி, ஆதவா.

govindh
14-10-2010, 08:49 AM
மிக அருமையான கதை அமைப்பு.
பரபரப்பு...விறுவிறுப்பு....
அடுத்த நிகழ்வுகளை அறிந்து கொள்ள
ஆவலைத் தூண்டும் விதத்தில்...எழுத்து நடை...
அனைத்தும் அருமை..
பாராட்டுக்கள்.

தொடர்ந்து அசத்துங்கள்.
அடுத்த கதையினையும்
விரைவில் தாருங்கள்.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.

கீதம்
15-10-2010, 12:25 AM
மிக அருமையான கதை அமைப்பு.
பரபரப்பு...விறுவிறுப்பு....
அடுத்த நிகழ்வுகளை அறிந்து கொள்ள
ஆவலைத் தூண்டும் விதத்தில்...எழுத்து நடை...
அனைத்தும் அருமை..
பாராட்டுக்கள்.

தொடர்ந்து அசத்துங்கள்.
அடுத்த கதையினையும்
விரைவில் தாருங்கள்.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மிகவும் நன்றி, கோவிந்த்.

அடுத்த தொடர் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. நல்லதொரு கரு கிடைத்ததும் தொடர்வேன். உங்கள் ஊக்கமிகு வார்த்தைகளுக்கு நன்றி.

vinothan.sigamani
19-10-2010, 01:35 PM
கீதம் அவர்களே,

நீண்ட நாட்களுக்குப் பிறகு திரில்லான கதையைப் படித்தேன். உங்கள் கதையைப் படித்த பிறகு ராஜேஷ்குமாரின் நாவலைப் போன்று உணர்கிறேன். இதைப் போன்று பல கதைகளை எதிர்பார்க்கிறேன்..

கீதம்
19-10-2010, 09:39 PM
கீதம் அவர்களே,

நீண்ட நாட்களுக்குப் பிறகு திரில்லான கதையைப் படித்தேன். உங்கள் கதையைப் படித்த பிறகு ராஜேஷ்குமாரின் நாவலைப் போன்று உணர்கிறேன். இதைப் போன்று பல கதைகளை எதிர்பார்க்கிறேன்..

மிகவும் நன்றி விநோதன் சிகாமணி அவர்களே.

இது போன்ற கதைகள் அதிகம் எழுதிப் பழக்கமில்லை. முதல் முயற்சியிலேயே உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி. சிறிய இடைவேளைக்குப்பின் தொடர்வேன்.

ஆதி
24-10-2010, 10:58 AM
அக்கா ஒரு மூச்சில் படிச்சேன் இந்த கதையை, ஆரம்பிக்கும் போது ஒரு உணர்வையும், அப்புறம் போக போக துப்பறியும் கதை போலவும் நகர்த்தப்பட்டது மிக சிறப்பு, முதலிரண்டு அத்தாயத்திலேயே டீச்சர் தான் கொலையே பட்டிருப்பார் என்று கணித்துவிட்டேன், அப்புறம் ரஞ்சினிக்கு இதில் தொடர்ப்பிருக்கும் என்று மனசுத்தோன்றியது, அதற்கு காரணம் அவளின் சூழலை வைத்து யூகித்தேன், ஆனால் என் யூகத்துக்கு கதையின் முடிவுக்கும் சபந்தமில்லை..

சில வழக்கமான கதை பாணியை உடைத்திருக்குறீர்கள், கொலையாளியை எப்படி பிடித்தார்கள் என்று தெளிவாக சொல்லப்படவில்லை, விறுவிறுப்பு சற்று குறையாமல் கதையை நகர்த்தியது மிக சிறப்பு, பாராட்டுக்கள் அக்கா..

கீதம்
30-10-2010, 11:51 PM
முழுக்கதையையும் பொறுமையாக ஒரே மூச்சில் படித்ததற்கு நன்றி, ஆதன். எனக்கு இதுபோன்ற க்ரைம் கதைகள் படித்தோ எழுதியோ பழக்கமில்லாததால் விரிவாக விவரிக்க இயலவில்லை. அதனாலேயே ஆரம்பத்திலிருந்து நேரடியாக புலன்விசாரணையில் இறங்காமல் அக்கம்பாக்க மாந்தரை வைத்தே கதையைப் பின்னியுள்ளேன்.

தாமரை
09-11-2010, 02:51 AM
சிவா.ஜி அண்ணா உங்க லேட்டஸ்ட் அனுபவத்திற்குப் பின்னால் இந்தக் கதையைத் திரும்பிப் பார்த்தீங்களா?

கீதம்
09-11-2010, 04:58 AM
சிவா.ஜி அண்ணா உங்க லேட்டஸ்ட் அனுபவத்திற்குப் பின்னால் இந்தக் கதையைத் திரும்பிப் பார்த்தீங்களா?

என்ன அந்த லேட்டஸ்ட் அனுபவம்?

சிவாஜி அண்ணா...... நாங்களும் அறியத் தாருங்கள்.