PDA

View Full Version : நிலையாமை



jawid_raiz
12-09-2010, 01:53 AM
http://1.bp.blogspot.com/_tvBk3RLflXE/THyHlBlN4qI/AAAAAAAAAj0/vYBulbU6NBM/s200/DropDrop.jpg

தங்கியிருந்த மழைத் துளிகள் எத்தனையோ
தன்னிச்சையாய் பிரிகையிலும்
தளராத கல் நெஞ்சு
இந்தத் துளியின் பிரிவில் மட்டும்
இடிந்து போவது ஏனோ?



தவறு எங்கிருக்கிறது?
என்னிலா? உன்னிலா?
முள்ளந்தண்டு வில்லாகி
இரத்தக் குழாய்கள் நானாகி
உஷ்ணக் காற்றை நாணேற்றி
விடையில்லா
கேள்விகள் தொடுக்க...



நானில்லை என்று
என் ஆணவமும்
நீயில்லை என்று
அசரீரியாய் ஒரு குரலும்
மாறி மாறி போர் தொடுக்க
கள்ளமில்லா இதயங்கள்
சல்லடையாய் உடைந்து நொறுங்க..
மயான அமைதி
மனதெங்கும் நிலைக்கிறது



மீண்டும் கேள்வி!
மீண்டும் போர்!
மீண்டும் அமைதி...
மீண்டும் கேள்வி!



மீண்டும் ஒரு முறை
இதயம் நொறுங்கும் முன்
விடையை தேட வேண்டும்

நிலையாமையே நிலைத்ததென்று
புரிந்துகொள்ளாதது தான்
நான் இழைத்த பிழையோ?

-ஜாவிட் ரயிஸ்



.

சுகந்தப்ரீதன்
17-09-2010, 12:49 PM
கடைசியில விடையை கண்டுபிடிச்சிட்டீங்களே... அப்ப இனி உங்களுக்கு விடுதலைதான் ஜாவித்..!!:D

நிலையாமையை நிலைநிறுத்திய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்..!!:)

jawid_raiz
18-09-2010, 05:00 AM
கடைசியில விடையை கண்டுபிடிச்சிட்டீங்களே... அப்ப இனி உங்களுக்கு விடுதலைதான் ஜாவித்..!!:D

நிலையாமையை நிலைநிறுத்திய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்..!!:)

நன்றி சுகந்தவாசன்!

அனுராகவன்
19-09-2010, 08:25 PM
அருமையான கவி..

jawid_raiz
25-09-2010, 01:24 AM
அருமையான கவி..

நன்றி அனு!