PDA

View Full Version : தமிழில் இருந்து ஆங்கிலத்தில் கோப்புகளை மொழி மாற்றம் செய்ய ஏதாவது மென்பொருள் உள்ளதா?



பிரசன்னா
10-09-2010, 02:38 PM
அன்பார்ந்த தமிழ் நண்பர்களே

தமிழில் இருந்து ஆங்கிலத்தில் கோப்புகளை மொழி மாற்றம் செய்ய ஏதாவது மென்பொருள் உள்ளதா?

தமிழில் எழுதிய கடிதங்கள் அல்லது இலக்கிய செய்திகள் ஆகியவற்றை மொழி மாற்றம் செய்ய மென்பொருள் உள்ளதா?

உதாரணத்திற்கு google (language tools) இந்தியில் இருந்து ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் online மொழி மாற்றம் செய்து கொள்ளலாம். இதுபோன்ற வசதி தமிழில் உள்ளதா ?

nambi
10-09-2010, 03:54 PM
அப்படி எதுவும் இல்லை....இன்னும் உருவாக்கப்படவில்லை....தமிங்கலத்தில் வேண்டுமென்றால் மாற்றும்..கூகுள் டிரான்சிலேட்ரேசன்.....தமிழில் ஒரு.....சொல் பல பொருள்கொண்ட சொற்களை உள்ளடக்கி இருப்பதாலும்...அவற்றையெல்லாம் இடத்திற்கேற்ப பிரிப்பதற்கு காலதாமதமாவதாலும் இதை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தவல்கள் கூறுகின்றன.

அதற்கான முயற்சிகள் பல்வேறு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

சிக்கல்களாக கூறப்படுபவை.....உதாரணத்திற்கு........ஆங்கிலத்தில் யராயிருந்தாலும் He, She என்று குறிப்பிடலாம்....தமிழில் அப்படி குறிப்பிட முடியாது....அவர், அவன், அவள், அவர்.... என்ற வேறுபாட்டுடன் நபர்களை, வயதினரை வேறுபடுத்தி குறிப்பிடவேண்டும். இது ஒரு உதாரணம் இது போன்ற பல சிக்கல்களை இந்த கருவிகள் எதிர் நோக்கியுள்ளன. இதை கூகுள் பயனர்களிடமே சீரமைக்கும் பணியை கூகுள் நிறுவனம் ஒப்படைத்துள்ளது....குறிப்பிடத்தக்கது.

..தகவல்கள் கூகுள் நிறுவனம்

மேற்குறிப்பிட்டவை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு கருவிகள் உருவாக்குவதற்கான சிக்கல்கள் அதேபோன்றுதான் தமிழிலிருந்தும் ஆங்கிலத்தில் உருவாக்குவதற்காக கூறப்படும் காரணங்களாக இருக்கமுடியும் என்பது என் கணிப்பு......அதை பலரும் தேடிக்கொண்டிருக்கின்றனர்............? கிடைத்தால் அனைவருக்கும் பயன்தான்.

பிரசன்னா
11-09-2010, 05:03 AM
நண்பி அவர்களே,
தங்கள் தகவல்களுக்கு மிகுந்த நன்றி.
மொழிபெயர்ப்பு மென்பொருள் தமிழில் தோன்றினால் தமிழ் மொழி காலத்தை வென்று வாழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

rajesh2008
13-09-2010, 05:00 PM
அப்படி ஒரு கண்டுபிடிப்பு வந்துவிட்டால் எவ்வளவு அருமையா பயன்படும்...

nellai tamilan
13-09-2010, 08:27 PM
இப்படி ஒரு மென்பொருள் வந்தால் மிக நன்றாகத்தான் இருக்கும்.
ம்ஹிம் தமிழில் சில முரண்கள் இருப்பதால் கொஞ்சம் பொருமை காக்க வேண்டி இருக்கிறது.

காத்து இருப்போம்..

கண்மணி
14-09-2010, 06:14 AM
வேணும்னா மன்றத் தலைவர்கள் நம்ம மன்றத்தில் அப்படி ஒரு மென்பொருளை உருவாக்க ஆரம்பிக்கலாமே.. வார்த்தைகளை மட்டுமல்ல இலக்கணங்களையும் இணைத்து மொழி பெயர்க்க வேண்டும் இல்லையா? அதனால இது சவாலான வேலைதான்.

ஆதவா
15-09-2010, 05:37 AM
அப்படி ஒரு கண்டுபிடிப்பு வந்துவிட்டால் எவ்வளவு அருமையா பயன்படும்...

நிச்சயமா.... என்னைப் போன்றே ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு நிறைய உபயோகமாக இருக்கும் அல்லவா?

ஆதவா
15-09-2010, 05:39 AM
வேணும்னா மன்றத் தலைவர்கள் நம்ம மன்றத்தில் அப்படி ஒரு மென்பொருளை உருவாக்க ஆரம்பிக்கலாமே.. வார்த்தைகளை மட்டுமல்ல இலக்கணங்களையும் இணைத்து மொழி பெயர்க்க வேண்டும் இல்லையா? அதனால இது சவாலான வேலைதான்.

அதுக்கு கூகுள் ட்ரான்ஸ்லாட்டர் பயண்படுத்தலாம் கண்மணி.
விக்கிபீடியா கட்டுரைகளை மொழிபெயர்த்தால் மொழிபெயர்த்தமாதிரியும் ஆச்சு, வார்த்தைகளை அவங்க டேடாவில் சேர்த்தமாதிரியும் ஆச்சு.

kathir_tamil
12-11-2010, 04:58 AM
கூகிள் இதற்கான முயற்சில் இருக்கிறது. விரைவில் வெளிவரும் என தகவல்... காத்திருப்போம்....

மயூ
16-11-2010, 06:03 AM
ம்ஹிம் தமிழில் சில முரண்கள் இருப்பதால் கொஞ்சம் பொருமை காக்க வேண்டி இருக்கிறது.

காத்து இருப்போம்..
அப்படி என்னங்க பெரிய முரன் ஹிந்தியில் இல்லாத முரணா?? எல்லாம் பெரிய சந்தை இருந்தா வணிய ரீதியில் பயன் இருந்தா அவங்களாவே எல்லா முரணையும் தீர்த்துக்குவாங்க. ஹிந்தி வணிக சந்தையுடன் ஒப்பிடும் போது தமிழ் மிகச் சிறியதே என்பதை நாம் அனைவரும் அறிவோம் அதுதான் இப்போதைக்குக் காரணம்.



அதுக்கு கூகுள் ட்ரான்ஸ்லாட்டர் பயண்படுத்தலாம் கண்மணி.
விக்கிபீடியா கட்டுரைகளை மொழிபெயர்த்தால் மொழிபெயர்த்தமாதிரியும் ஆச்சு, வார்த்தைகளை அவங்க டேடாவில் சேர்த்தமாதிரியும் ஆச்சு.
ஆமாம் உண்மைதான் ஆதவா. தமிழ் விக்கி மக்கள் இந்த திட்டத்திற்கு எதிராக போர் கொடி தூக்குகின்றார்கள். மொழிபெயர்ப்பு தரம் மிகவும் மட்டமாக தமிழ் விக்கியின் தரத்தையே பாழடிக்கும் நிலமைக்கு மாற்றுகின்றார்கள் என்று குற்றச்சாட்டு. வங்காள மொழி விக்கிபீடியா இந்த திட்டத்தை இரத்துச் செய்துவிட்டார்கள்.

இலாப நோக்கற்ற விக்கிப்பீடியா போன்ற நிறுவனங்களை வணிக அரசர்கள் இலாப நோக்கில் பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது என்பதையே நானும் ஆமோதிக்கின்றேன்.


கூகிள் இதற்கான முயற்சில் இருக்கிறது. விரைவில் வெளிவரும் என தகவல்... காத்திருப்போம்....
கூகிள் தமிழ் உட்பட பல மொழிகளில் இதைச் செய்து வருவதாகக் கேள்வி. அதில் ஒரு படியாகத்தான் இந்த விக்கிப்பீடியாவுடனான கூட்டு.

கூகள் எப்போது வெளியிடுவார்கள் என்று காலக்கேடு எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்கள் தெரிவித்ததாகச் சரித்திரமும் இல்லை. என்றாவது ஒருநாள் திடீர் என்று வெளியிடுவார்கள் இல்லாவிட்டால் கிடப்பில் போட்டு விடுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

கூகிள் போன்ற நிறுவனங்களில் தங்கியிருப்பதை விட தமிழக அரசு, சிங்கப்பூர் அரசு இலங்கை அரசு போன்றவை பொது நல நோக்கில் இவ்வாறான திட்டத்தை செயற்படுத்த வேண்டும். அதை பொதுவில் மக்களின் பாவனைக்காக திறந்த மூலமாக வெளியிட வேண்டும்.

இலங்கை அரசு சிங்களம் <=> தமிழ் மொழிமாற்றியில் செற்பட்டு வருவதாகத் தகவல். அது வந்தால் கூடப் பரவாயில்லை.

matheen
17-11-2011, 12:25 PM
நண்பா நானும் அப்படி ஒன்றைதான் தேடுகிறேன்......கிடைத்தால் சொல்லுங்க*

அமீனுதீன்
21-11-2012, 05:19 PM
http://translate.google.com/

Keelai Naadaan
22-11-2012, 04:59 PM
மிகவும் பயணுள்ள தகவல், தளம். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி

jayanth
22-11-2012, 05:21 PM
http://translate.google.com/

இத் தளத்தில் மொழி மாற்றம் தப்பு தப்பா வருமே...!!!