PDA

View Full Version : மாயை!!!!!



sakthiselvi
09-09-2010, 06:21 PM
மனம் எனும் மாயை அதன்
இருப்பிலும் இல்லாமையிலும்
காலபெருவெளியில் மிதந்து அலைகின்றது!!!

நினைவு ரேகைகள்
ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே
நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!!

தூக்கமும் விழிப்பும் அற்ற நிலையில்
கிளைக்கும் அதன் தீனமான குரலில் தெரிகின்றது
பொங்கிகொண்டும் பெருகிக்கொண்டும்
இருக்கும் அதன் வேட்கைகள்!!!

நிம்மதியற்ற பயணங்களும் துரத்தல்களும்
மனதின் மென்மைகளைஉருமாற்றியதால்
மழை நாட்களை போல்
மனமும் புகையோடி போய் இருக்கின்றது!!!!

பல சமயங்களில்
வியூக சூட்சமம் அமைத்தும்
சில சமயங்களில் வெடவெடப்பும்
மெலிவும் கொண்டு மடிந்து சுருள்கிறது
ஆனாலும் மீண்டும் உயிர்த்து நிற்கிறது!!!

அறிஞர்
09-09-2010, 06:26 PM
வாருங்கள் சக்தி...

மனம் ஒரு மாயையே...
மனதில் தோன்றுவதெல்லாம் நடப்பதில்லை....
---------
இது அறிமுக பகுதி.. கவிதை பதிக்க தனி இடம் உள்ளதே..

ஆதவா
10-09-2010, 05:10 AM
வாருங்கள் சக்திசெல்வி.

மனம் எனும் மாயை..

கவிதையும் வார்த்தைகளும் பிரமாதமாக இருக்கிறது. நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் நிறைய கவிதைக்குச் சொந்தக்காரர் போலத் தெரிகிறதே!!
வாழ்த்துக்கள்!

நினைவு ரேகைகள்
ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே
நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!!

இந்த வரிகள் அருமை!! தனித்திருக்கீறது.
மனம் ஒரு அரூப விலங்கு.... அதற்கு என்ன குணம் என்பதை அம் மனத்துக் காரனுக்கே தெரியமுடிவதில்லை!

தொடர்ந்து எழுதுங்கள்

பாரதி
10-09-2010, 06:37 AM
உங்கள் சொற்கள் கவிதைகளைப் படைப்பதில் நீங்கள் அடைந்திருக்கும் ஆளுமையை பறை சாற்றுகிறது.

கவிதையின் முதல் இருவரிகள் சற்று முரணாகத் தெரிகின்றன. மாயை என்று முடிவு செய்யப்பட்ட ஒன்றை இருப்பதாக காட்ட இயலுமா என ஐயம் எழுகிறது.

வியூக சூட்சமம் என்பதில் சொற்கள் இடம் மாறினால் சரியாக இருக்குமோ..?

மன்றத்திற்கு மேலும் ஒரு நல்ல கவிஞர் கிடைத்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.

எழுதுங்கள்.

சிவா.ஜி
10-09-2010, 08:12 AM
ஆதவாவும், பாரதியும் சொன்னதைப்போல...வார்த்தைகளின் பிரயோகமும், எடுத்துக்கொண்ட கனமானக் கருவும் ஒரு நல்ல கவிஞரை அடையாளம் காட்டுகிறது.

வாழ்த்துக்கள் சக்தி.

sakthiselvi
10-09-2010, 02:30 PM
ஆதவா நான் வீட்டுப்புறா சக்தி

sakthiselvi
10-09-2010, 02:33 PM
எனக்கு இன்னும் சரியாக புரிபடவில்லை இங்கு எப்படி பதிவிடவேண்டும் என வெகு விரைவில் கற்றுக்கொள்கிறேன் அறிஞரே!!!

ஆதவா
10-09-2010, 02:42 PM
ஆதவா நான் வீட்டுப்புறா சக்தி

அடடே!! வாருங்கள் சகோதரி!!!
எப்படி இருக்கிறீர்கள்....
தனிமடல் அனுப்பியிருக்கிறேன், பாருங்கள்.

Ravee
10-09-2010, 06:09 PM
அடடே!! வாருங்கள் சகோதரி!!!
எப்படி இருக்கிறீர்கள்....
தனிமடல் அனுப்பியிருக்கிறேன், பாருங்கள்.

ஓஹோ ஏற்கனவே அறிமுகம்தானா இந்த புதுமுகம் வாழ்த்துக்கள் சகோதரி :icon_b: