View Full Version : வேண்டுகோள்!
குணமதி
09-09-2010, 10:52 AM
ஒரு திருத்தம் செய்ய வேண்டுகோள் :
பொழுது போக்கு மையம் பகுதியில் மன்ற உருப்பினர்களுக்குள் விளையாடும் விளையாட்டுக்கள் என்றுள்ளது.
உறுப்பினர் - எனறு திருத்தம் செய்யுமாறு கேட்டுக்
கொள்கின்றேன்.
அன்புரசிகன்
09-09-2010, 11:36 AM
கவனயீர்ப்புக்கு நன்றி. வெகுவிரைவில் திருத்தப்படும்.
அறிஞர்
09-09-2010, 02:18 PM
தகவலுக்கு நன்றி குணமதி... மாற்றப்பட்டது...
குணமதி
09-09-2010, 03:47 PM
கவனயீர்ப்புக்கு நன்றி. வெகுவிரைவில் திருத்தப்படும்.
தகவலுக்கு நன்றி குணமதி... மாற்றப்பட்டது...
மிக்க நன்றி.
த.ஜார்ஜ்
09-09-2010, 04:55 PM
ஆகாகா... எவ்வளவு கண்ணும் கருத்துமாக மன்றத்தை கவனித்துக் கொள்கிறீர்கள்.
நல்லது
பால்ராஜ்
15-09-2010, 12:26 PM
இந்த 'ர' 'ற' பிரச்சினை பல இடங்களிலும் இருக்கும்போல் தெரிகிறது
சுறா என்பதைக் கூட சுரா என்று பார்த்ததாக ஞாபகம்...!
devamsa
15-09-2010, 03:48 PM
நான் எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும். நான் இந்த முகவரிக்கு புதியவன். எனக்கு எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. தயவு செய்து தாங்கள் செயல்விள்ளக்கம் கொடுங்கள் மிக்க நன்றி
குணமதி
15-09-2010, 03:54 PM
இந்த 'ர' 'ற' பிரச்சினை பல இடங்களிலும் இருக்கும்போல் தெரிகிறது
சுறா என்பதைக் கூட சுரா என்று பார்த்ததாக ஞாபகம்...!
தனிப்பட்டவர்களின் பதிவுகளில் பல இடங்களில் குழப்பங்கள், பிழைகள் காணப்படுவது உண்மைதான். ஆனால், மன்றத்தின் பொதுவான எழுத்துக்களில் பிழையின்றி இருக்க இயன்றவரை அனைவரும் கவனம் செலுத்தல் இன்றியமையாத் தேவையாகும்.
அன்புரசிகன்
15-09-2010, 09:59 PM
நான் எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும். நான் இந்த முகவரிக்கு புதியவன். எனக்கு எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. தயவு செய்து தாங்கள் செயல்விள்ளக்கம் கொடுங்கள் மிக்க நன்றி
நண்பரே...
மன்றத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் உங்களுக்கு தேவைப்படும் அனைத்துவிடையங்களும் உங்கள் மின்னஞ்சலுக்கும் மன்ற தனிமடலுக்கும் அனுப்பப்பட்டிருக்கும். ஆகவே அதை முழுவதுமாக படியுங்கள். நீங்கள் பதிவேற்றம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. மன்றத்தில் மின்னூல்களை பதிவேற்ற நீங்கள் பண்பட்டவராக இருக்க வேண்டும். அதற்கான விளக்கமும் தனிமடலில் இருக்கும்.
Powered by vBulletin® Version 4.1.10 Copyright © 2012 vBulletin Solutions, Inc. All rights reserved.