PDA

View Full Version : பொம்பளையா பொறந்து இருக்கலாம் ...Ravee
07-09-2010, 03:02 PM
http://www.house-maids.co.uk/images/children%20under%20feet.jpgகாலையில் எழுந்து கண்ணாடி பார்க்கும் போது
கண்ணில் பட்டது அந்த கருவளையம்

கண்டிப்பாக இன்று காணவேண்டும் மருத்துவரை
உடம்பில் ஏதோ ஒரு கோளாறு ... சிந்திக்கும் போதே

பால்காரன் மணிசத்தம் , காய்கறிக்காரன் அறைகூவல்
குளியல் அறையில் இருந்து கமலா துண்டு எங்கே ?

கமலா எக்ஸ்ப்ரஸ் புறப்பட்டது - ஒரு வண்டி
இருநூறு சக்கரங்கள் இணையாக ஓடியது

காலைஉணவு , மதியஉணவு ,நொறுக்கு தீனி
இவை எல்லாம் எடுத்து வைத்து பார்க்கையிலே

படுக்கையில் உருளும் சின்னக்குட்டி
எழுப்பி விட்டு எத்தனை நேரம் இப்படி தூங்குறியே

தூக்கி போய் காலைகடன் முடித்து
காக்கை குளியல் போட்டு தலை வாரி பூவைத்து

சட்டை போடும் போது பார்த்து
அம்மா இந்த சட்டையில பொத்தான் இல்லை

ஊசி தேடும் வேலையில் ஓசைபடாமல் போகும் கணவர்
மறந்து வைத்து போன மதிய உணவு

மூன்றாம் மாடியில் இருந்து என்னங்க சாப்பாடு என்று கூவ
இறங்கி வா என்று சைகை காட்டும் கணவன்

தூசி தட்டி வீடு கூட்டி தரை துடைத்து நிமிர்ந்து பார்க்க
" அத்தே ... மம்மம் " சேற்றுக் காலுடன் எதிர் வீட்டுக்குழந்தை

இது முடித்து அது முடித்து இளைப்பாறி உணவருந்த
என்ன கமலா சாப்பாடுல்லாம் ஆச்சா எதிர் வீட்டு மாமி

அவள் போக துணி துவைத்து துணி மடித்து
துவண்டுபோனாள் கமலா ................

அப்பாடா என்று அமர ஆட்டோ சத்தம்
மணி மூன்று அழுதபடி வந்தாள் குழந்தை

காரணம் கேட்டு காரியம் அறிந்தது
கணக்கு வரவில்லை பாவம்

வீட்டு வேலை முடித்தவளுக்கு வீட்டுப்பாடங்கள்
கை பிடித்து எழுதி கணக்கு சொல்லி கதை படிக்க

கணவன் வந்தான் கமலா தலைவலி என்று
காப்பி கொடுத்து கரிசனம் காட்ட அலுத்துக்கொண்டான்

பேசாம பொம்பளையா பொறந்து இருக்கலாம்......
வீட்டில நிம்மதியாவது இருக்கலாம் என்று

புன்முறுவல் பூத்தாள் ... இவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது
பாவம் இன்று என்ன வேலையோ ? வேதனையோ ? என்று ...

இரவு உணவு முடித்து இன்பப்பேச்சு பேசி
இருவரையும் தூங்க வைத்து பாத்திரம் கழுவ போனாள்

படுக்கவரும் போது முகம் கழுவி கண்ணாடி பார்க்க
கண்ணில் பட்டது .... கண்ணை சுற்றி கருவளையம்

கண்டிப்பாக நாளை காணவேண்டும் மருத்துவரை
காரணம் எதுவாக இருக்கும் ..... உறங்கிப் போனாள் அசதியில்

மதி
07-09-2010, 03:08 PM
தெரியாம நீங்க சொன்னா ஒரு வாக்கியத்துக்கு நங்கு நங்குன்னு உங்க தலையில குட்டி எழுத சொன்னாங்களா??? :D:D:D

Ravee
07-09-2010, 03:27 PM
தெரியாம நீங்க சொன்னா ஒரு வாக்கியத்துக்கு நங்கு நங்குன்னு உங்க தலையில குட்டி எழுத சொன்னாங்களா??? :D:D:D

இதான வேணாம்கிறது ... நாங்களும் பார்க்கத்தானே போறோம். திட்டு வாங்குறீங்களா ... குட்டு வாங்குறீங்களா என்று :lachen001:

மதி
07-09-2010, 03:30 PM
இதான வேணாம்கிறது ... நாங்களும் பார்க்கத்தானே போறோம். திட்டு வாங்குறீங்களா ... குட்டு வாங்குறீங்களா என்று :lachen001:
அதுக்கெல்லாம்.... எவ்ளோ நாள்ள்ள்.... மாசம்ம்ம்ம்ம்ம் வருஷம்ம்ம்ம்ம் இருக்கு... ஹிஹி

பா.ராஜேஷ்
07-09-2010, 03:49 PM
எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்தான் ஞாபகம் வருகிறது... அதையே கவிதையாய் படைத்திருப்பதை போல் தோன்றுகிறது... இருப்பினும் கவிதை மிக நன்று... பாராட்டுக்கள் ரவீ...

த.ஜார்ஜ்
07-09-2010, 04:01 PM
அம்மணிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறத விட்டுட்டு கவிதையாம் கவித..

சேவியர்
07-09-2010, 04:48 PM
கரு வலயம் போக நாட்டு மருத்தவம் இருக்கு

Ravee
08-09-2010, 05:00 AM
எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்தான் ஞாபகம் வருகிறது... அதையே கவிதையாய் படைத்திருப்பதை போல் தோன்றுகிறது... இருப்பினும் கவிதை மிக நன்று... பாராட்டுக்கள் ரவீ...

மின்னசல் உங்க வீட்டில இருந்து வந்ததா ராஜேஷ் .... ஹா ஹா ஹா :lachen001: :lachen001: :lachen001:

Ravee
08-09-2010, 05:07 AM
அம்மணிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறத விட்டுட்டு கவிதையாம் கவித..

இவ்வளவு நல்லவரா நீங்க , ஜார்ஜு குட்டி உங்க வீட்டுக்கு ஒருமுறை வரணுமே :confused:

கரு வலயம் போக நாட்டு மருத்தவம் இருக்கு

அட்ரஸ் தாரேன் நீங்களே கொரியர் பண்ணிடுங்க நண்பரே :lachen001:

sakthiselvi
08-09-2010, 09:00 AM
நல்லாயிருந்துச்சுங்க கவிதை:lachen001:

Ravee
08-09-2010, 09:16 AM
நல்லாயிருந்துச்சுங்க கவிதை:lachen001:

ஆஹா சக்தி செல்வி நன்றி , உங்களை மாதிரி புதியவர்கள் பாராட்டும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. :)

த.ஜார்ஜ்
08-09-2010, 09:55 AM
இவ்வளவு நல்லவரா நீங்க , ஜார்ஜு குட்டி உங்க வீட்டுக்கு ஒருமுறை வரணுமே :confused:
நீங்க வரதில பிரச்சனையில்ல . ஆனா குட்டியோட வருவேன்னு சொல்றீங்களே.அதான் யோசிக்க வேண்டியிருக்கு.

Ravee
08-09-2010, 10:04 AM
நீங்க வரதில பிரச்சனையில்ல . ஆனா குட்டியோட வருவேன்னு சொல்றீங்களே.அதான் யோசிக்க வேண்டியிருக்கு.

சூ சத்தமா பேசாதிங்க மன்றத்தில சில பேரு முறைக்குறாங்க :lachen001:

குணமதி
08-09-2010, 10:42 AM
அப்புறம், மருத்துவரிடம் அடுத்த நாள் போனார்களா, இல்லையா?

Ravee
08-09-2010, 12:15 PM
அப்புறம், மருத்துவரிடம் அடுத்த நாள் போனார்களா, இல்லையா?

அக்கா அந்த கவிதையின் முதல் வரியில் இருந்து திரும்ப படியுங்கள் அதுதான் பதில் :traurig001:

கலையரசி
08-09-2010, 12:34 PM
பெரும்பாலான வீடுகளில் இது தான் நிலைமை! சம்பளம் இல்லாத வேலைக்காரிகள். கணவன்மார் சிலர், ”வீட்டுல வெட்டியாத்தானே இருக்கே? இதைச் செய்யக் கூடாதா என்பர்”.
ரொம்ப நல்லாயிருக்கு ரவி!

ஆதவா
08-09-2010, 01:14 PM
இக்கவிதைக்கு எதிர்கவிதையே போடலாம்!!
அப்படியிருக்குங்க ஆம்பிளைங்க நிலைமை!
யாருமே கவனிக்கறதில்லையோ என்னவோ
(ஆண்மனம் படிச்சீங்கள்ல?)

இன்னிக்கு பாருங்க...
உணவு தயாரிக்கிறது சிலருக்கு ஹாபி மாதிரி இருக்கும்
ஜாலியாவும் தயார் பண்ணுவாங்க.
உங்க வீட்ல நீங்கதானே பண்றீங்க?

பார்க்கப் போனா, அரக்கப்பரக்க வீட்டுப்பெண்கள்
வேலை செய்யறது எல்லாம் 9 மணிக்குள்ளதான்.
அப்பறம் ரொம்பவோ, குறையவோ, ஃபிரியா இருப்பாங்க.
நைட் ட்ரஸ் போட்டுட்டுதான் இருப்பாங்க.
ஆனா
ஆண்கள் 12 மணி நேரமும் நீட்டா இருக்கணும்...

வாஷிங் மெஷின் வந்தாச்சு...
அப்படியும் இல்லாதவங்க வீட்ல சிலர்
ரெண்டுமூணு நாள் சேகரிச்சுட்டு பின்னர் துவைப்பாங்க
தினமும் துவைச்சாலும் அது ரெண்டு மணிநேர வேலைதான்.
உங்க வீட்ல நீங்க தானே துவைக்கறீங்க?

அப்பறம்?

மதியத்திலிருந்து இரவு வரை சீரியல்...
அல்லது
பெரும்பாலும் சும்மா இருக்கிறவங்க நிறைய பேர்/
இரவு சாப்பாடே இரவிலதான் ஆரம்பிப்பாங்க

ஆனா.... ஆண்கள் அப்படியில்லைங்க.
9-6, சிலருக்கு 9-9, விடாம வேலை இருக்கும்.
அப்படி வேலை செஞ்சும் “என்னத்த கிழிச்சீங்க”ங்கற பார்வை
சிலர் வீட்ல இருக்கும்..
ஆண்கள் வெளிய வேலை செய்யறதால பலருக்கு அட்ஜஸ்ட் பண்ணவேண்டியிருக்கு
அதனால ஆண்களோட மனம் ஃப்லெக்ஸிபிலா இருக்கும்.
அதேசமயம் உறுதியாவும் இருக்கும்.

திருப்பூர்ல 12 மணி நேரத்துக்கும் மேல உழைக்கிறவங்க 80 சதத்துக்கும் மேல....
அவங்களுக்கு நிம்மதின்னாவே வேலைன்னுதான் அர்த்தம்..
எத்தனை திட்டு? எத்தனை அவமானம்? எத்தனை கஷ்டம்..
இத்தனையையும் ஒரு பெண் சகிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.
என்னோட பழைய ஆஃபீஸ் ரிஷப்ஷனிஸ்ட், ஒரு பார்ட்டி திட்டறதைப் பார்த்துட்டு அழுக ஆரம்பிச்சாங்க.....
பெண்களுக்கு ஒரே ஆயுதம் அவங்க பெண்ணா இருக்கிறதுதான்,.
(அது சிலசமயம் நிராயுதமாகவும் ஆயிடும்)

வேலைக்குப் போய்ட்டு வீட்டு வேலை செய்யற பெண்கள் இதில் விதிவிலக்கு!!

அப்பறம்.......

உடல் சுகமில்லைன்னாலும் கூட பெண்கள் தாங்கிக்குவாங்களாம்
புற அழகு பிரச்சனைன்னா தாங்க மாட்டாங்களாம்..

மதி சொன்னார்!!

Ravee
08-09-2010, 02:37 PM
பேசாம பொம்பளையா பொறந்து இருக்கலாம்......
வீட்டில நிம்மதியாவது இருக்கலாம் என்று

புன்முறுவல் பூத்தாள் ... இவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது
பாவம் இன்று என்ன வேலையோ ? வேதனையோ ? என்று ....

ஆதவா உங்க கேள்விக்கு என் நாயகி இரண்டே வரிகளில் அழகா ஆண்களின் நிலைமையை புரிந்து சொல்லி இருக்காளே ... அப்புறம் நான் என்ன தனியா சொல்ல ....

சில பல விஷயங்கள் எப்படி என்றால்

கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டி பார் :confused:

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும் :eek:

Ravee
08-09-2010, 02:50 PM
பெரும்பாலான வீடுகளில் இது தான் நிலைமை! சம்பளம் இல்லாத வேலைக்காரிகள். கணவன்மார் சிலர், ”வீட்டுல வெட்டியாத்தானே இருக்கே? இதைச் செய்யக் கூடாதா என்பர்”.
ரொம்ப நல்லாயிருக்கு ரவி!

அட வேலைக்காரி என்று நீங்களே ஏன் குறைத்து சொல்லுறீங்க ... நம்ம வீட்டுக்கு செய்யுறோம் என்று நினைத்து செய்தால் கணவனுக்கோ மனைவிக்கோ இல்லறம் நல்லறம் ... அதே புரிதல் இல்லை என்றால் .... ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை போங்க.

ஆதவா
08-09-2010, 03:15 PM
பேசாம பொம்பளையா பொறந்து இருக்கலாம்......
வீட்டில நிம்மதியாவது இருக்கலாம் என்று

புன்முறுவல் பூத்தாள் ... இவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது
பாவம் இன்று என்ன வேலையோ ? வேதனையோ ? என்று ....

ஆதவா உங்க கேள்விக்கு என் நாயகி இரண்டே வரிகளில் அழகா ஆண்களின் நிலைமையை புரிந்து சொல்லி இருக்காளே ... அப்புறம் நான் என்ன தனியா சொல்ல ....ஒரே ஒருவரிதான் கொடுத்திருக்கீங்க... அதுவும் “இந்தாளுக்கு என்ன வேலையோ வேதனையோ வேண்டிகெடக்கு... என்ன சொன்னா மரமண்டைக்குப் புரியும்? நு கோவத்தில சொல்றாப்ல இருக்கு!!!

சில பல விஷயங்கள் எப்படி என்றால்

கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டி பார் :confused:

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும் :eek:

ஆ ஊ ன்னா இந்த டயலாக்கையை சொல்றீங்கலே....
உங்க வீட்ல நீங்கதான் சமையலுங்கறதுக்கா, நாங்களும் அப்படியே இருக்க முடியுமா? :D:D

Ravee
08-09-2010, 03:39 PM
ஒரே ஒருவரிதான் கொடுத்திருக்கீங்க... அதுவும் “இந்தாளுக்கு என்ன வேலையோ வேதனையோ வேண்டிகெடக்கு... என்ன சொன்னா மரமண்டைக்குப் புரியும்? நு கோவத்தில சொல்றாப்ல இருக்கு!!!

புன்முறுவல் பூத்தாள் அதை விட்டுடீங்களே , கோபப்பட்டால் புன்முறுவல் வருமா ... கை முறுகல் , கால் முறுகல்தான் வரும் ஆதவா .... அனுபவபாடம் படிக்க தயாராகுங்கள்... :mini023:

ஆ ஊ ன்னா இந்த டயலாக்கையை சொல்றீங்கலே....
உங்க வீட்ல நீங்கதான் சமையலுங்கறதுக்கா, நாங்களும் அப்படியே இருக்க முடியுமா? :D:D

ஐந்து நட்ச்சத்திர ஓட்டலில் நிர்வாகியின் மனைவியா வந்து தோசை ஊத்தி தருவார் ... ஒரு ஆண்தானே பெரும்பாலும் செய்கிறான் . அதற்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து சாப்பிடும் போது நம் வீட்டில் நமக்கு நாமே சமைத்து சாப்பிடுவதில் தப்பில்லை ஆதவா. வாங்க எங்க வீட்டுக்கு உங்களை ஒரு வழி(லி) பண்ணி அனுப்புறேன். :lachen001:

ஆதவா
08-09-2010, 03:41 PM

அப்ப ஒத்துக்கிறீங்க,...

தோசை ஒழுங்கா சுடத் தெரியாம ”சுட்ட” போது கூப்பிட்டேனே, நினைவிருக்குங்களா?

கலையரசி
08-09-2010, 03:47 PM
அட வேலைக்காரி என்று நீங்களே ஏன் குறைத்து சொல்லுறீங்க ... நம்ம வீட்டுக்கு செய்யுறோம் என்று நினைத்து செய்தால் கணவனுக்கோ மனைவிக்கோ இல்லறம் நல்லறம் ... அதே புரிதல் இல்லை என்றால் .... ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை போங்க.

வேலைக்காரி என்று நான் குறைத்துச் சொல்லவில்லை ரவி. பெரும்பாலான கணவர்களின் மனநிலையைத் தான் அப்படிச் சொன்னேன். பெண்கள் தங்களை அப்படி நினைத்தால் வீட்டில் எதுவுமே ஒழுங்காக நடக்காது. அவர்கள் முழு மனதுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் தான் ஆண்கள் வீட்டைப் பற்றி எந்தக் கவலையுமின்றி நிம்மதியாக வேலைக்குப் போக முடிகிறது.

Ravee
08-09-2010, 03:53 PM
அப்ப ஒத்துக்கிறீங்க,...

தோசை ஒழுங்கா சுடத் தெரியாம ”சுட்ட” போது கூப்பிட்டேனே, நினைவிருக்குங்களா?
http://farm3.static.flickr.com/2357/2352920428_d6dcd1cd4f.jpg

என்னோட இந்த படத்தை பார்த்த பின்னே ரொம்ப புகைச்சலாய் பேசுறீங்க ஆதவா :lachen001:

அமரன்
08-09-2010, 06:45 PM
கவிதைப் படிக்குறதுக்குள்ள எத்தனை இடைஞ்சல்.

வோசிங் மெசின் கத்துது. ’அவன்’ கதறுது. அயன் பொக்ஸ் பெருமூச்சு விடுது. லப்டொப் டிங் டாங் எங்குது. அப்பப்பா....

ஹோலில டிவியும் வேலை செய்யுது. டிவிக்கு முன்னால யாரோ உட்காந்திருக்காங்க.

Ravee
08-09-2010, 09:38 PM

அது சரி தலைப்பை பொம்பளையா பொறந்து இருக்கலாம் ... (1962) என்று மாற்ற வேண்டி வரும் போல இருக்கே , மன்றத்தின் பெண்மணிகளே கண்மணிகளே எல்லோரும் சத்தம் காட்டாமல் இருந்தால் நீகள் யாரும் வீட்டில் வேலை இல்ல்லாமல் இருப்பீர்கள் என்ற கருத்தே இங்கே மேலோங்கி வருகிறது .

அது சரி எத்தனை மெசின் வந்தாலும் குழந்தைக்கு சோறு ஊட்ட ஒரு மெசின் இருந்தா சொல்லுங்க முதல் வேலையாய் என் வீட்டுக்கு அது ஒண்ணு வாங்க வேணும். :icon_rollout: :icon_rollout:

ஆதவா
09-09-2010, 07:49 AM
http://farm3.static.flickr.com/2357/2352920428_d6dcd1cd4f.jpg

என்னோட இந்த படத்தை பார்த்த பின்னே ரொம்ப புகைச்சலாய் பேசுறீங்க ஆதவா :lachen001:

உங்களுக்கு யார் அவ முத்தம் கொடுத்தான்னு உங்க வீட்ல மொத்தி எடுத்ததும் கூட நினைவிலிருக்கு!!! :aetsch013::lachen001::D

Ravee
09-09-2010, 03:00 PM
உங்களுக்கு யார் அவ முத்தம் கொடுத்தான்னு உங்க வீட்ல மொத்தி எடுத்ததும் கூட நினைவிலிருக்கு!!! :aetsch013::lachen001::D

அட நல்லா பாருங்க அவங்கதான் அவங்க ... பிறகு எதுக்கு மொத்த போறாங்க :lachen001:

பூமகள்
12-09-2010, 09:45 AM
கவிதை சொல்லும் கருத்து பெண்கள் சார்ந்த நடைமுறை வாழ்க்கைப் பரபரப்பை எடுத்தியம்புகிறது.

முற்றிலும் உண்மை என்பது சரியே. ரவி அண்ணாவின் கணிப்பு மிகச் சரி. பாராட்டுகள் அண்ணா.

--

ஆண்கள் படும் கஷ்டம் 9 முதல் 5 மணி வரையிலோ, 9 முதல் 9 மணி வரையிலோ இருந்து முடிந்துவிடுகிறது. அதன் பின் இருக்கும் மீதி நேரம் முழுக்க ஓய்வு மட்டுமே.

ஆனால், பெண்கள் நிலை அப்படியல்ல.. ரவி சொன்னது போல், வீட்டில் இருக்கும் பெண்கள் உழைப்பு 24/7 மணி நேர கால் செண்டர் பணி போலத் தான். காலை 5 அல்லது 6 மணிக்கு தொடங்கி அடுக்கப்படும் வேலை.. வீட்டில் கணவர் குழந்தைகள் சென்ற பின் இருக்கும் வீட்டின் அலங்கோல நிலையைச் சரிசெய்து பின் அவர் உண்டு, துவைத்து, மதியம் முடிந்தால் அரை மணி நேர குட்டித் தூக்கம், பின் எழுந்து மாலை வரும் குழந்தைகளுக்காக மாலை சிற்றுண்டி, இரவு உணவுக்கான ஆயத்தம் என மீண்டும் பரபரப்பு.

இது தனியாக இருக்கும் நியூக்லியர் ஃபேமலிக்கான ஒரு நாளைய பொழுது.. ஆனால், தனது கணவரின் பெற்றோரை உடன் ஒன்றாய் வாழும் கூட்டுக் குடும்பத்துத் தலைவிகளுக்கோ இன்னும் வேலை அதிகம்.. நேரா நேரத்துக்கு அவர்களுக்கு தகுந்த உணவு, மருந்து மாத்திரை, இடையிடை வசைபாடும் அத்தையை கண்டும் காணாமல் பொறுத்து போவது என பெண்களுக்கும் உண்டு உங்கள் பணி போலவே மெண்டல் டென்சன் ஆதவா..

வீட்டு வேலையை கணவர், மனைவி பகிர்ந்து செய்து கொள்வதில் எந்த இழிவும் வந்துவிடப் போவதில்லை.. அது இருவருக்குமான பரஸ்பர புரிதலையும் அன்பையும் அதிகமாக்கும் என்பது அனுபவப்பட்டவர்களுக்கு விளங்கும் உண்மை. மனைவி வேலைக்கு போனால் தான் வீட்டு வேலையில் அவருக்கு உதவ வேண்டும் என்று ஆண்கள் எண்ணாமல் வீட்டிலிருக்கும் மனைவிக்கும் உதவிப்பாருங்கள்.. இந்த விசயத்தில் ரவி அண்ணா கருத்தே என்னுடையதும்..

தலைவலியும் காய்ச்சலும் தமக்கு வந்தால் தான் தெரியும்.. அது மாதிரி, திருமணம் செய்து கோள்வீர்களானால் உங்களின் பல பார்வைகள் மாறும்.. உண்மை புரியும்..

மதி சொன்னது போலல்லாமல் ஆரோக்கியமாக இருக்க விரும்பும் பெண்கள் அதிகம்.. ஆரோக்கியம் சார்ந்த புறத் தோற்ற மாறுதல்கள் மேல் வேண்டுமானால் அவர்கள் கவலை இருக்கக் கூடும்..

மதிக்கும் ஆதவாவுக்கும் இந்த அனுபவ அறிவு வருவதற்காகவே விரைந்து திருமணம் செய்து வைச்சாகனும்.. :cool::D

Ravee
25-10-2010, 02:33 PM
பூமகள் - மதிக்கும் ஆதவாவுக்கும் இந்த அனுபவ அறிவு வருவதற்காகவே விரைந்து திருமணம் செய்து வைச்சாகனும்..

Ravee - மதிக்கு டென்மார்க்கில் ஜெஸியின் கடைக்கண் பார்வை கிட்டும் அறிகுறி தெரியுது பூமகள் .... :lachen001: :lachen001: :lachen001:

மதி அப்பா அம்மாவிற்கு ஒரு மேல்நாட்டு மருமகள் கிடைக்கட்டும் என்று வாழ்த்துவோம். :icon_b:

பென்ஸ்
25-10-2010, 03:28 PM
ரவி....
நல்ல கவிதை... ஆனாலும் சில உள் அர்த்தங்களுக்காக நான் இந்த கவிதையை விமர்சிக்க வேண்டி வருகிறது...

சில காதல் கவிதைகளையும், சமுதாய கவிதைகளையும் வாசிக்கும் போது அதை எந்த தடையும் இல்லாமல் ஏற்று கொள்ள முடியும்... ஆனால் கவிதை எப்போது ஒரு சாராரை மட்டும் "தூக்கி" சொல்லுகிறதோ அப்போது கவிதையை தட்டியும், குட்டியும் பேசுபவர்கள் வந்து விடுகிறார்கள்...

இந்த கவிதையை நான் நீங்கள் பதித்த போதே வாசித்து விட்டேன், ஆனால் கவிதையின் பின்னூட்டங்கள் என்னையும் எழுத வைக்கிறது...

காலையிலே கலப்பை எடுத்து, மாட்டை பிடித்து, துனை வேலைக்கு ஆளை தேடி, வருவேன் என்று சொன்னவன் வராமல் போக, தானே அதை செய்து, வரப்பு வெட்டி, வெயில் காய்ந்து, தண்ணிக்கு சண்டை போடும் ஆணும்... அவனது கலையில் கஞ்சி வைத்து, அடுப்பு ஊதி, முகம் காய்ந்து , அழும் குழந்தையை அமைத்து, வீடு பெருக்கி இருக்கும் பெண்ணும்...

அலுவலகம் செல்லும் முன் கரண்ட் பில் கட்ட கூவில் நின்று , லேட் ஆகி, திட்டு வாங்கி, முடிக்க முடியா மேலாளர் வேலையும் சேர்த்து செய்து, வழியில் செக்கிள்காரன் திட்டு வாங்கி வீடு வரும் ஆணோ... அல்லதி அவனது மனைவியோ....

யாராக இருந்தாலும்... அவரவது பணியை முளுமையாக செய்வதும்.... அதற்க்கான பாராட்டுதலை எதிர்பார்ப்பதும் சகஜம்...
"ஆமா உங்களுக்கு என்ன ஆபிசு ஏசியில் ஜம்முன்னு இருந்திட்டு வந்திட்டிங்க...!!" என்றொ அல்லது...
"ஆமா, காலையில் இருந்து நீ என்னத செய்து கிளிச்சிட்ட.." என்று கேட்பதும் மனதை சுடும் விடயங்கள்.... அது தவறு என்பதும்.. அதை நாம் அதை டிஸ்பிலேஸ்மென்ட் டிபன்ஸ் ஆக உபயோகிக்காமல் இருக்கவும் பார்த்து கொண்டால் நலம்....

அடுத்தவர் காலில் இருந்தும் யோசித்திருந்தால், இந்த கவிதையின் கரு மாறியிருக்கலாம்...

தாமரை
25-10-2010, 03:33 PM
அடுத்தவர் காலில் இருந்தும் யோசித்திருந்தால், இந்த கவிதையின் கரு மாறியிருக்கலாம்...

நான் யோசிக்கிறதெல்லாம் மூளையில் செய்யும் வேலை:icon_b: என நினைத்தேன்..

பென்ஸ்
25-10-2010, 03:41 PM
நான் யோசிக்கிறதெல்லாம் மூளையில் செய்யும் வேலை:icon_b: என நினைத்தேன்..

உங்களுக்கு உடம்பு முழுவதும் மூளைதானே தாமரை...:D:D:D

கருணை
25-06-2011, 03:24 PM
http://www.house-maids.co.uk/images/children%20under%20feet.jpgகாலையில் எழுந்து கண்ணாடி பார்க்கும் போது
கண்ணில் பட்டது அந்த கருவளையம்

கண்டிப்பாக இன்று காணவேண்டும் மருத்துவரை
உடம்பில் ஏதோ ஒரு கோளாறு ... சிந்திக்கும் போதே

பால்காரன் மணிசத்தம் , காய்கறிக்காரன் அறைகூவல்
குளியல் அறையில் இருந்து கமலா துண்டு எங்கே ?

கமலா எக்ஸ்ப்ரஸ் புறப்பட்டது - ஒரு வண்டி
இருநூறு சக்கரங்கள் இணையாக ஓடியது

காலைஉணவு , மதியஉணவு ,நொறுக்கு தீனி
இவை எல்லாம் எடுத்து வைத்து பார்க்கையிலே

படுக்கையில் உருளும் சின்னக்குட்டி
எழுப்பி விட்டு எத்தனை நேரம் இப்படி தூங்குறியே

தூக்கி போய் காலைகடன் முடித்து
காக்கை குளியல் போட்டு தலை வாரி பூவைத்து

சட்டை போடும் போது பார்த்து
அம்மா இந்த சட்டையில பொத்தான் இல்லை

ஊசி தேடும் வேலையில் ஓசைபடாமல் போகும் கணவர்
மறந்து வைத்து போன மதிய உணவு

மூன்றாம் மாடியில் இருந்து என்னங்க சாப்பாடு என்று கூவ
இறங்கி வா என்று சைகை காட்டும் கணவன்

தூசி தட்டி வீடு கூட்டி தரை துடைத்து நிமிர்ந்து பார்க்க
" அத்தே ... மம்மம் " சேற்றுக் காலுடன் எதிர் வீட்டுக்குழந்தை

இது முடித்து அது முடித்து இளைப்பாறி உணவருந்த
என்ன கமலா சாப்பாடுல்லாம் ஆச்சா எதிர் வீட்டு மாமி

அவள் போக துணி துவைத்து துணி மடித்து
துவண்டுபோனாள் கமலா ................

அப்பாடா என்று அமர ஆட்டோ சத்தம்
மணி மூன்று அழுதபடி வந்தாள் குழந்தை

காரணம் கேட்டு காரியம் அறிந்தது
கணக்கு வரவில்லை பாவம்

வீட்டு வேலை முடித்தவளுக்கு வீட்டுப்பாடங்கள்
கை பிடித்து எழுதி கணக்கு சொல்லி கதை படிக்க

கணவன் வந்தான் கமலா தலைவலி என்று
காப்பி கொடுத்து கரிசனம் காட்ட அலுத்துக்கொண்டான்

பேசாம பொம்பளையா பொறந்து இருக்கலாம்......
வீட்டில நிம்மதியாவது இருக்கலாம் என்று

புன்முறுவல் பூத்தாள் ... இவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது
பாவம் இன்று என்ன வேலையோ ? வேதனையோ ? என்று ...

இரவு உணவு முடித்து இன்பப்பேச்சு பேசி
இருவரையும் தூங்க வைத்து பாத்திரம் கழுவ போனாள்

படுக்கவரும் போது முகம் கழுவி கண்ணாடி பார்க்க
கண்ணில் பட்டது .... கண்ணை சுற்றி கருவளையம்

கண்டிப்பாக நாளை காணவேண்டும் மருத்துவரை
காரணம் எதுவாக இருக்கும் ..... உறங்கிப் போனாள் அசதியில்
என்ன வீட்ல கேமரா எதாவது செட் பண்ணீங்களா...........சரி சரி wife பத்தி ரொம்ப கவலை பண்ணாதீங்க

Ravee
25-06-2011, 10:17 PM
என்ன வீட்ல கேமரா எதாவது செட் பண்ணீங்களா...........சரி சரி wife பத்தி ரொம்ப கவலை பண்ணாதீங்க

அட வீட்டுக்கு வீடு கொஞ்சம் பொறுப்போடு இருக்கும் தாய்குலங்கள் இப்படித்தானே இருக்காங்க .... இதை கேமிரா வச்சு வேற பார்க்கனுமா ............ :) இது ஒரு வகை பதில் உங்களுக்கு.

மற்றொன்று ........... எப்போதாவது இப்படி நடக்காதா என்ற நப்பாசையில் கூட கற்பனைகள் உதயம் ஆகும் ........... :rolleyes:

உங்களுக்கு பிடித்த பதிலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

தாமரை
05-09-2013, 04:51 AM
நாங்களும் பார்க்கத்தானே போறோம். திட்டு வாங்குறீங்களா ... குட்டு வாங்குறீங்களா என்று .....

முரளி
06-09-2013, 04:51 AM
அருமையான கருத்து. வாழ்த்துக்கள் ரவி.

பெண்களை வெறும் இயந்திரங்களாக பார்ப்பவருக்கு ஒரு புரிதலாக இருக்கும். இவ்வளவையும் ஓயாமல் ஒழியாமல் செய்யும் கமலாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

எனக்கு தோன்றியது. ஏதோ கிறுக்கியிருக்கிறேன்.

வெறும் ஆர்வ கோளாறு. கவிதைக்கும் எனக்கும் காத தூரம். மன்னிக்கவும்.

"உறக்கத்திலும் கமலாவுக்கு குடைசல் கோபம். எனக்கு மட்டும் ஏன்
இத்துணை துன்பம். இறைவா? என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்?

ஏக்கத்த்தில் புரண்டாள்."என்ன கமலா! ஏதேனும் உடம்பு ?வாட்டமா இருக்கே?
டாக்டரை பாக்கலாமா? நாளைக்கு போகலாமா?" கணவனின் கரிசனம்.

காலையில் கருவளையம் கமலாவின் கண்ணில் காணாமல் போனது.

அப்பாவை அண்டாமல், அம்மா! என்று ஓடி வந்து ஒட்டிக் கொண்ட,
காதலுடன் கட்டி முத்தமிட்ட கடைக்குட்டியின் ஆரவாரம்.

ஏம்மா நேத்திக்கு நீ டல்லா இருந்தே ?

கணவனின் கண் சிமிட்டல். குடும்ப உறவின் டானிக். அமுதம்.

ஆயிரம் யானை பலம் அவளுக்குள் வந்தது.
எரிச்சலும் ஏக்கமும் எங்கேயோ போனது.

"எத்துனை பிறப்பிலும் பெண்ணாகவே பிறக்க வேண்டும்" என்று
இரவில் இறைவனுக்கு போட்ட மடலை மாற்றினாள் மடந்தை.

பென்ஸ்
17-09-2013, 08:57 PM
அதுக்கெல்லாம்.... எவ்ளோ நாள்ள்ள்.... மாசம்ம்ம்ம்ம்ம் வருஷம்ம்ம்ம்ம் இருக்கு... ஹிஹி

நல்ல கவிதை ரவி...

நல் வாழ்த்துகள் மதி...

Ravee
23-09-2013, 11:53 AM
அதுக்கெல்லாம்.... எவ்ளோ நாள்ள்ள்.... மாசம்ம்ம்ம்ம்ம் வருஷம்ம்ம்ம்ம் இருக்கு... ஹிஹி

இப்போ எப்படி மதி .... திட்டா ............ குட்டா ......:traurig001:

பென்ஸ்
01-10-2013, 05:28 PM
நேற்று உங்கள் கவிதையை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தேன்...

சில கவிதைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன,,,,

மும்பை நாதன்
01-10-2013, 06:02 PM
பின்னூட்டங்களால் சுவை கூட்டப்பட்ட திரியாகி விட்டது.
பதிவிட்ட அனைவருக்கும் நன்றி.

மும்பை நாதன்
01-10-2013, 06:12 PM
[QUOTE]எனக்கு தோன்றியது. ஏதோ கிறுக்கியிருக்கிறேன்.

வெறும் ஆர்வ கோளாறு. கவிதைக்கும் எனக்கும் காத தூரம். மன்னிக்கவும்.

கதையில் மட்டுமல்ல நேரம் இருந்தால் கவிதையிலும் ஒரு கலக்கு கலக்கலாம் முரளி. முயற்சிக்கு பாராட்டுதல்கள்.