PDA

View Full Version : என்ன கொடுமை காக்கையே ?



Ravee
07-09-2010, 02:04 PM
http://farm5.static.flickr.com/4018/4709072735_a0724dcb5b.jpg



குழந்தைகளுக்காக வடகம் இட்டாள் அம்மா
வடகத்தை கொத்தி தின்ன வந்த காக்கைகள்

காவலாய் நான் இருக்க கண்டு
வெறுப்பில் எச்சம் இட்டு சென்றன

வீட்டுக்காரி வந்து வன்குரலில் இரைந்தாள்
எச்சம் இட்டதால் இடம் எல்லாம் பாழாய் போனது

இதற்க்கெல்லாம் பொறுப்பு நீ என்று
என்ன கொடுமை காக்கையே ?

உன்னை நான் இலை போட்டு அழைத்தேனா ???
இல்லை எச்சம் இடத்தான் அழைத்தேனா !!!

தாமரை
07-09-2010, 02:08 PM
பதில் சொல்லி இருக்கலாம்

காக்கைகள் நம் முன்னோர்கள்

அந்தக் காக்கைகள்

மாமியார் கூட்டமாய்

இருந்திருக்கலாமென..:sprachlos020::sprachlos020::sprachlos020:

Ravee
07-09-2010, 03:47 PM
அட அண்ணா , இது சொந்தக்கதை .. சோக கதை , அலுவலகத்தில் மாமியாரை விட பத்து மடங்கு கோரமாய் ஒருத்தன் ..... மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன் குடம்ன்னு பழமொழி சொல்லி கொல்லும் ஒரு கிழமொழி ....:eek:

பா.ராஜேஷ்
07-09-2010, 03:50 PM
பாவம்... ரொம்பவே கொடுமைதான்...

த.ஜார்ஜ்
07-09-2010, 03:57 PM
பாவம் ரொம்பதான் நொந்து போயிருக்கீங்க போல

சேவியர்
07-09-2010, 04:57 PM
பாவபடவேன்டியது உங்களதான்

அமரன்
07-09-2010, 05:41 PM
காக்கா ஆய் போனதுக்கா இந்தக் காட்டுக் காத்து.

அனுராகவன்
07-09-2010, 07:16 PM
காக்கையாக மாறி கவிதை..
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு..
நல்ல கவி..இன்னும் தொடருங்கள்...

கீதம்
07-09-2010, 10:37 PM
கடைசிவரிகளைப் படிக்கும்போது பச்சாதாபத்தையும் மீறிப் புன்னகை பிறக்கிறது. கவிதைக்கரு அருமை. பாராட்டுகள், ரவி.