PDA

View Full Version : என்று மெய்படும் அவன் கனவு????



Nivas.T
06-09-2010, 08:33 AM
"கனவு மெய்பட வேண்டும்" என்றான் கவி
மெய்பட்டதாக் கனவு இல்லை பொய்பட்டாத?

தினம் தினம் எத்தனைக் கனவு
அத்தனையும் பொய்யாய் போகுது! என் தேசமே!!
நான் என்ன செய்வேன்? ஏதுசெய்வேன்?
வெந்தேன் எனை நானே நொந்தேன்
கனவு என்பது பிழையால் இங்கு
களவு என்று ஆனது ஏனோ?
ஒழுக்கம் என்பது என் தேசத்தை விட்டு
போனது போனது தானோ? ஏனோ?

மதவெறி இனவெறி பெருகியதிங்கே
மனு நெறிதான் போனது எங்கே?
காசைக் காணத் தெறியுது இங்கே
பாசம் நேசம் போனது எங்கே?
எதரி வந்தால் ஒற்றுமைக் காணுது
இல்லை என்றால் வேற்றுமை பேணுது
மாநிலம் முழுதும் சாதியில் வேற்றுமை
தேசம் முழுதும் இதில்தான் ஒற்றுமை

வேற்றுமை என்பது வார்த்தையில் இல்லை
ஒற்றுமை என்பது உள்ளத்தில்(உண்மையில்) இல்லை
எங்கோ போகுது தேசம்
இட்டுகட்டிப் போடுது பல வேசம்

தண்ணீர் கொடுக்கத் தரம்கெட்டு கிடக்குது
தாய்க்காவிரி அங்கே சிறைப்பட்டு கிடக்குது
உண்மயில் சொன்னால் வெட்க்கக்கேடு
என்று மறையும் இந்த சாபக்கேடு

விடிவு ஒருநாள் வருமா? என்றேன்
கனவுகள் மெய்பட வேண்டும் என்றான் கவி

என்று மெய்படும் அவன் கனவு????

ஆதி
06-09-2010, 09:12 AM
மனு நெறியால் தானே வந்தது மற்ற வெறிகள்..

மனுநெறிக்கும் மீண்டும் மனு போட வேண்டாம்..

கனவு கண்டவன் கூட கலப்பு என்று தான் பேசுகிறான்..

எல்லாரும் மனிதராய் இருக்க
கலப்பென்ன கலப்பு,
இழப்பென்ன இழப்பு..

ஒற்றுமை என்பதில்
வேற்று மை விழுந்ததால்
வேறு பட்டு கறுப்புற்றோம்..

அணை கட்டிய போதே
அனைப்பட்டு போனதே நேயம்
இனி புலம்பி என்ன நியாயம் ?

விடிவு என்பது விடிவதில்லை
விடிவு என்பது விடிவே இல்லை..
இன்னொரு இரவுக்கு வைக்கும் புள்ளி..


வாழ்த்துக்கள் நிவாஸ்..

Nivas.T
06-09-2010, 11:59 AM
நிற்க்கச் செய்வோம் பூமியை
புலம்பல்களை புத்தைத்து விட்டு
சூரியன் நம் பக்கமே நிற்க்கட்டும்


நன்றி ஆதன்

ஆதி
06-09-2010, 12:06 PM
நிற்க்கச் செய்வோம் பூமியை
புலம்பல்களை புத்தைத்து விட்டு
சூரியன் நம் பக்கமே நிற்க்கட்டும்


நன்றி ஆதன்

நான் புலம்பலை நிவாஸ் :D

சுற்றும் பூமி நின்று போனா என்னவாகும் ?

சுமைந்திருப்பவைகளை எல்லாம் சுற்றத்தில் எறியும் :D

பூமியை நிற்க வைக்க இயலாது..

சூரியனும் நம் பக்கம் வேண்டாம் அது இருக்கும் இடத்தில் இருக்கட்டும்..

நாம் நம் பக்கங்களை(அகம்,புறம், இட,வல,முன்,பின்) பார்த்து சரி செய்து கொண்டால் எல்லாம் சரிபடும்..

நம்மிடமுள்ள கெட்டதை பழுது பார்ப்போம்..
பிறரிடமுள்ள நல்லதை பார்க்க பழகுவோம்..

Nivas.T
06-09-2010, 01:17 PM
நான் புலம்பலை நிவாஸ் :D

சுற்றும் பூமி நின்று போனா என்னவாகும் ?

சுமைந்திருப்பவைகளை எல்லாம் சுற்றத்தில் எறியும் :D

பூமியை நிற்க வைக்க இயலாது..

சூரியனும் நம் பக்கம் வேண்டாம் அது இருக்கும் இடத்தில் இருக்கட்டும்..

நாம் நம் பக்கங்களை(அகம்,புறம், இட,வல,முன்,பின்) பார்த்து சரி செய்து கொண்டால் எல்லாம் சரிபடும்..

நம்மிடமுள்ள கெட்டதை பழுது பார்ப்போம்..
பிறரிடமுள்ள நல்லதை பார்க்க பழகுவோம்..

:D:D:D:D:D

சுகந்தப்ரீதன்
07-09-2010, 07:20 PM
கனவிலிருந்து மீண்டு நிகழ்காலத்தில் நிலைக்கொள்ளும் நாளில் நிச்சயம் சாத்தியமாகும் அவன் கனவு...!!:)

ஆமாம் உங்களுக்குன்னு கனவுகள் எதுவுமே கிடையாதா நிவாஸ்..?!:fragend005:

அணை கட்டிய போதே
அனைப்பட்டு போனதே நேயம்
இனி புலம்பி என்ன நியாயம் ?

விடிவு என்பது விடிவதில்லை
விடிவு என்பது விடிவே இல்லை..
இன்னொரு இரவுக்கு வைக்கும் புள்ளி..
. ஆதனின் அக்மார்க் வரிகள்...:icon_b:

கவிதைக்கும் பதில் கவிதைக்கும பாராட்டுக்கள் நண்பர்களே...!!:D

Nivas.T
13-09-2010, 12:42 PM
கனவிலிருந்து மீண்டு நிகழ்காலத்தில் நிலைக்கொள்ளும் நாளில் நிச்சயம் சாத்தியமாகும் அவன் கனவு...!!:)

ஆமாம் உங்களுக்குன்னு கனவுகள் எதுவுமே கிடையாதா நிவாஸ்..?!:fragend005: ஆதனின் அக்மார்க் வரிகள்...:icon_b:

கவிதைக்கும் பதில் கவிதைக்கும பாராட்டுக்கள் நண்பர்களே...!!:D

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24136

இதைப் படியுங்கள் சுகந்தவாசன்

எனது ஒரே கனவு அதுதான்

கலையரசி
13-09-2010, 01:33 PM
இரண்டு பேரின் கவிதைகளும் நன்று. விரைவில் கனவு மெய்ப்படட்டும்!

Nivas.T
13-09-2010, 03:00 PM
மிக்க நன்றி கலையரசி அவர்களே

பாரதி
13-09-2010, 03:40 PM
கவிதையின் கருவும், ஏக்கத்தை பிரதிபலிக்கும் வரிகளும் நன்று நண்பரே.

ஆங்காங்கு இருக்கும் எழுத்துப்பிழைகளை நீக்கினீர்கள் என்றால் இன்னும் சிறக்கும்.

வாழ்த்துகிறேன் நிவாஸ்.

Nivas.T
29-04-2011, 09:21 AM
கவிதையின் கருவும், ஏக்கத்தை பிரதிபலிக்கும் வரிகளும் நன்று நண்பரே.

ஆங்காங்கு இருக்கும் எழுத்துப்பிழைகளை நீக்கினீர்கள் என்றால் இன்னும் சிறக்கும்.

வாழ்த்துகிறேன் நிவாஸ்.

பாராட்டிற்கு மிக்க நன்றி அண்ணா

இப்பொழுதுதான் சிறுது சிறுதாக திருத்தி வருகிறேன் அதுவும் உங்கள் திரியின் உதவியால்தான்

aathma
29-04-2011, 11:07 AM
உண்மையான மனிதனின் ஏக்கத்தை பிரதிபலிக்கும் கவிதை இது
வாழ்த்துக்கள் நண்பர் நிவாஸ் :)

Nivas.T
29-04-2011, 11:50 AM
உண்மையான மனிதனின் ஏக்கத்தை பிரதிபலிக்கும் கவிதை இது
வாழ்த்துக்கள் நண்பர் நிவாஸ் :)

வாழ்த்துகளுக்கு நன்றி ஆத்மா

aathma
29-04-2011, 02:33 PM
வாழ்த்துகளுக்கு நன்றி ஆத்மா

நண்பரே , நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம் ,

நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் , என் மனதில் உள்ள எண்ண அலைகளை அப்படியே கவிதையின் வாயிலாக நீங்கள் தெரிவித்தற்கு

Nivas.T
07-05-2011, 07:26 AM
நண்பரே , நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம் ,

நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் , என் மனதில் உள்ள எண்ண அலைகளை அப்படியே கவிதையின் வாயிலாக நீங்கள் தெரிவித்தற்கு

உண்மைதான் ஆத்மா

இது பலரது எண்ணத்திலும் உள்ள குமரல்தான்

தமிழன் என்று சொல்லுங்கள் என்றால்தான் அனைவருக்கும் வருத்தம் வருகிறது. ஒரு இந்தியனாக மட்டும் என்ன செய்துவிட்டீகள் என்றால் அவர்களுக்கு கோபம் வருகிறது. அப்படி ஒரு அனுபவத்தால் எழுந்த எண்ணக் கிளர்ச்சிதான் இந்தக் கவிதை

சுடர்விழி
09-05-2011, 09:13 AM
கோபத்தையும் ஏக்கத்தையும் அழகாக பிரதிபலிக்கிறது கவிதை !!
பாராட்டுக்கள் நிவாஸ் !!

Nivas.T
12-05-2011, 06:45 AM
கோபத்தையும் ஏக்கத்தையும் அழகாக பிரதிபலிக்கிறது கவிதை !!
பாராட்டுக்கள் நிவாஸ் !!

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சுடர்விழி