PDA

View Full Version : மெல்லும் காமம்



சுஜா
06-09-2010, 07:03 AM
மனமில்லாமல்
மரங்கள் வெறிப்பவருக்கு
கழுத்து வலிக்கிறது

நெளியும் இளைஞன் தலைகுனிந்து
எரிச்சலுடன் படிப்பது
இன்பாக்சின் பழைய குறுஞ்செய்தியை

மீசைக்கிழவன்
ஓரக்கண்ணில் ரசிக்கிறான்
பெருமூச்சுடன்

பழக்கூடை கிழவி...?
பிரச்சனையில்லை
பார்வை மங்கல்

சிரித்துக்கொண்டே
ரசிக்கிறார்கள் குழந்தைகள் மட்டும்
பேருந்தில் ஒளிபரப்பப்படும்
முதலிரவு பாடல் காட்சிகளை.

சுகந்தப்ரீதன்
07-09-2010, 05:03 PM
நிகழ்கால யதார்த்தம், மாறிவரும் கலாச்சாரம்.. மாற்றம் வருமா..?!:smilie_abcfra:

மெல்லும் காமம்.. குழந்தைகளின் இருப்பை உணர்த்தி சொல்லிய விதம் நன்று...!!

வாழ்த்துக்கள் சுஜா..!!:)

அமரன்
07-09-2010, 05:29 PM
குழந்தைகளுக்கு நடிக்கத் தெரியாது என்பது நிஜம்தான் போல.

பாராட்டுகள் சுஜா.

கீதம்
07-09-2010, 10:42 PM
ஒளிபரப்பப்படும் பாடல்காட்சிகளை இப்படியான பாவனைகள் மூலம் தவிர்க்கலாம். ஒலிபரப்பப்படும் சில பாடல்களை எப்படித் தவிர்ப்பதாம்? நிதர்சன வரிகள் கனகச்சிதம். பாராட்டுகள், சுஜா அவர்களே.

சுடர்விழி
08-09-2010, 10:28 AM
ரொம்ப யதார்த்தமான விஷயத்தை கவிதையாக சொல்லி இருக்கிறீர்கள்.நல்ல கவிதை..தலைப்பும் ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துக்கள் !!

Ravee
08-09-2010, 12:29 PM
ம்ம் , தாவணி கனவுகள் படத்தில் தங்கச்சிகளை பாக்கியராஜ் சில்லறை பொறுக்க சொன்ன கதைதான் ... நானும் இன்பாக்ஸ் செய்திகளை படித்தும் இருக்கிறேன்...:lachen001: