PDA

View Full Version : அதிசய முகங்கள் அணிந்தவன்கீதம்
06-09-2010, 12:22 AM
நம் ஒவ்வொரு சந்திப்பும் பெரும்பாலும்
அறிமுகப்படலத்தோடே நிறைவடைந்துவிடுகின்றன,
உன் அதிசயமுகங்கள் காரணமாய்!

உன்னைப் புதியவனாய் எண்ணி விலகும்
என்னைப் பிடித்து நிறுத்தி
என்னைத் தெரியவில்லையா என்கிறாய்!

எத்தனை முகங்களைத்தான்
உன்வசம் வைத்திருக்கிறாய்?
முகங்களை மாற்றியென்னைக்
கலவரப்படுத்துவதே
உனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு போலும்!

பொருத்தப்பட்ட போலி முகங்களுக்குப்
பின்னால் புதைந்திருக்கும்
உன் மெய்முகம் மீட்கப் போராடி தோற்கிறேன்!

சில அகோர, விகார முகங்கள் தவிர்த்து
அழகுமுகம் காணநேரும் சமயங்களிலும்
அதனூடே இழையோடும்
அந்தப் புன்னகை பறைசாற்றும்
அதுகொண்ட கபடம்!

திடீர் திடீரென முகங்களை மாற்றி
திணறச்செய்யும் உன்னிடம்
எனக்குப் பிடித்தமான
பழையமுகம் ஒன்று இருந்ததைப் பற்றிப்பேசி
பரிச்சயப்படுத்த முனைகிறேன்!

நீயோ...
அலட்சியமுகம் அணிந்துகொள்கிறாய்!
தொடர்ந்த என் நச்சரிப்பைத் தாளாமல்
அதைக்கழற்றியெறிந்து ஆவேசமுகமணிந்து
ஆக்ரோஷத்துடன் அவ்விடம் விட்டகல்கிறாய்!

அவசரத்தில் நீ விட்டுச்சென்ற
அத்தனை முகங்களையும்
பத்திரப்படுத்துகிறேன்,
நம் அடுத்த சந்திப்பின்போது
உனக்கு நிகராய்
நானும் அணிந்துகொள்ள ஏதுவாய்!

சுடர்விழி
06-09-2010, 02:23 AM
அருமையான கவிதை கீதம்..

’சில அகோர, விகார முகங்கள் தவிர்த்து
அழகுமுகம் காணநேரும் சமயங்களிலும்
அதனூடே இழையோடும்
அந்தப் புன்னகை பறைசாற்றும்
அதுகொண்ட கபடம்!’ --நல்ல வரிகள்..

கடைசி வரிகளும் ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துக்கள் !

தாமரை
06-09-2010, 04:11 AM
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே!!!:lachen001::lachen001::lachen001:

Nivas.T
06-09-2010, 06:48 AM
சில அகோர, விகார முகங்கள் தவிர்த்து
அழகுமுகம் காணநேரும் சமயங்களிலும்
அதனூடே இழையோடும்
அந்தப் புன்னகை பறைசாற்றும்
அதுகொண்ட கபடம்!

அழகுக் கவிதை
:eek:
எப்டிங்க முடியுது?:confused:

Nivas.T
06-09-2010, 06:49 AM
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே!!!:lachen001::lachen001::lachen001:

:confused::confused::confused::confused::confused:

ஆதவா
06-09-2010, 09:23 AM
தன்னைத் தானே நிறுத்தி சுயபரிசோதனை செய்து கொள்வது உலகிலேயே மிகவும் கடினமான சோதனை என்பேன். தனக்கு, தான் எனும் பொழுது தட்டின் ஒரு பகுதி யாருமறியாம்லேயே கீழிறங்கிவிடுகிறது.

மனம் ஒரு தொழிற்சாலை. அது பல முகமூடிகளைத் தயார் செய்து தருகிறது. ஆனால் அதற்கே தெரிவதில்லை நாம் எத்தனை தயார் செய்து கொடுத்தோம் என்று......

கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணன் வேடமணிந்த ஒரு சிறுவனைக் கண்டேன். (அந்த கிருஷ்ணனுக்கு வால் இருந்தது) அவன் தன் புறமெங்கும் தெய்வீகத்தையே நிரப்பியிருந்தான். அவனது அகம் ரொம்பவும் சிறுமை வாய்ந்தது. இந்த இருமுகங்களையும் அவன் கழற்றி வைத்துவிட்டு, வறுமை முகத்தைப் பூசிலானான் அதேநாளில். அம்முகம் வறுமை பூச்சுக்களால் நிறைந்தது என்று நான் நினைத்தது தவறானதாக இருந்தது. பிறகு சந்தோஷ முகமொன்று அவனையும் அறியாமலேயே பூத்திருந்தது. அவனது அம்மாவும் அப்பாவும் (நல்ல உடல்வாகு கொண்டவர்கள்தான்) குறிக்கோலற்ற அலட்சியத்தை உதடுகளில் பூசி வைத்திருந்தார்கள். அந்த சிறுமிக்கு தாம் என்ன முகம் அணிந்திருக்கிறோம் என்றே தெரியவில்லை. அது தனது முகத்தை சதா உரித்தவாரே கிடந்தது.
கவனித்து செல்லும் என்னைப் போன்ற ஒவ்வொருவரும் பச்சாதாப முகத்தையே காட்டிக் கொண்டு சென்றார்கள்!
எத்தனை முகங்கள்!!!!

இக்கவிதையே “நானுக்கும்” “எனக்கும்” இடையிலான அறிதல் போராட்டம். என்னை நானே அறிந்து கொள்ள நான் என்னையே பயன்படுத்துகிறேன் என்பதுதான் அவரவர் அவரவரை அறிந்து கொள்ளும் உத்தி. இக்கவிதையும் அப்படித்தான்.

முதல் வரியிலேயே வார்த்தையை கவனமாக கையாண்டுவிட்டீர்கள். புதுமுகங்களுக்கான சந்திப்பு அறிமுகப்படலத்தோடுதான் தொடங்கவும் நிறையவும் செய்கின்றன. நம்மில் நம்மை இனங்காண முடியாமல் ஒவ்வொரு முறையும் தோற்றோடுவது பின் போராடுவது, ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொள்ள இயலாமல்தான்.

உன்னைப் புதியவனாய் எண்ணி விலகும்
என்னைப் பிடித்து நிறுத்தி
என்னைத் தெரியவில்லையா என்கிறாய்!

குழப்பம். போராட்டம்.. தனது மையத்திலிருந்து விளிம்பு வரை சிடி லென்ஸ் போன்று சீராக படிக்காமல் குழப்பமடைதல். நமக்குத் (பல நாட்கள் கழித்து) தெரிந்த ஒருவர் தெருவில் நடந்து செல்லும் பொழுது, என்னைத் தெரியவில்லையா என்ற கேள்வி அவரை முதலில் சிந்திக்கவே வைக்கிறது. பழைய ஞாபகங்கள் பிறகே வெளிப்படுகிறது. சிலர் யாரென்றே தெரியாமலும் பேசிக் கொண்டிருப்பார்கள். (நான் அப்படியெல்லாம் பேசியிருக்கிறேன்)

உன் மெய்முகம் மீட்கப் போராடி தோற்கிறேன்!

அது எப்போதோ உரிந்துவிட்டது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தை உண்டு. அதுவே மெய்யான முகம். அது பிற்காலங்களில் மீட்கப்படுகிறது. அதுவரையிலும் போராடியே ஆகவேண்டும்.

உனக்கு நிகராய்
நானும் அணிந்துகொள்ள ஏதுவாய்!

நீ என்பது உண்மையிலேயே நமது புறம். அதற்குச் சமான நிலையில் முகம் அணிய அகம் தயாராகிறது. அதில் எவ்வளவு தூரம் வெற்றியடைகிறது என்பது அம்முகத்தை மாட்டியவர்களுக்கே தெரியும். கவிதையில் உணர்தல் என்பது செயல்முறைக்குப் பின்னர் விளையும் விளைவுகளின் முடிவிலே இருக்கிறது.
ரொம்பவும் அழகாகவும் சிறப்பாகவும் எழுதியிருக்கிறீர்கள். இதைப் போன்றே படிமங்கள் தாங்கி நிற்கும் கவிதைகள் நிறைய படையுங்கள். கவிதையில் அடுத்த உலகிற்குள் நுழைந்திருக்கிறீர்கள் அந்த உலகம் சிறிய அடர்த்தியான உலகம். அதன் பின்னரும் பல மேம்பாலங்கள் வழியே செல்லவேண்டியிருக்கும்... ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் கீழிறங்கி விடாதீர்கள்.

சூரியன்
06-09-2010, 09:25 AM
கவிதை அருமை,
ஆதவா அவர்களின் பின்னுட்டம் மிகவும் அருமை..

ஆதவா
06-09-2010, 09:28 AM
கவிதை அருமை,
ஆதவா அவர்களின் பின்னுட்டம் மிகவும் அருமை..

கவிதை அவ்வளவு அழகில்லையென்றால் இவ்வளவு அழகாக ரசிக்கவும் முடியாதல்லவா?
கவிதையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் கொடுங்களேன்!!! :icon_b:

சூரியன்
06-09-2010, 09:33 AM
கவிதை அவ்வளவு அழகில்லையென்றால் இவ்வளவு அழகாக ரசிக்கவும் முடியாதல்லவா?
கவிதையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் கொடுங்களேன்!!! :icon_b:

இப்போது இருப்பது அலுவலகத்தில் விரிவாக விமர்சனம் தர முடியாதல்லவா,நேரம் கிடைத்தவுடன் எழுதுகின்றேன் சரியா.:)

ஆதவா
06-09-2010, 09:33 AM
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே!!!:lachen001::lachen001::lachen001:

என்னைக் கேட்டால்..
எல்லாரிடமும் எல்லாமுகமும் இருக்கின்றன அண்ணா.
உங்களிடம் ஸ்ப்லிட் பர்சனாலிடி மாதிரி அடிக்கடி (நொடிக்கடி :)) மா(ற்)றிக் கொள்ளும் முகம் இருக்கிறது. அது பெரும்பாலும் ஒரு விஷயத்தை 360 டிகிரியில் பார்க்கும் கேமரா முகம்!
உங்களது முகங்களில் ஆளுமையும் இருக்கிறது. அதன் வீச்சு, நன்கு தெரிந்தவருக்கு உடனே பழக்கமாகிவிடுகிறது.
தெரியாதவர்களுக்கு அகோரமாகக் கூட தெரியலாம்!!!:eek:

(பேசாம, தக்ஸ் ஆரம்பிச்ச தாமரைசெல்வன் திரிய நாம ஆரம்பிச்சிருக்கலாம்!!!:D)

தாமரை
06-09-2010, 09:51 AM
என்னைக் கேட்டால்..
எல்லாரிடமும் எல்லாமுகமும் இருக்கின்றன அண்ணா.சின்ன விஷய்ம்தான்..

உலகம் ஒரு கண்ணாடி என்று எண்ணிக் கொண்டு, நம் முகத்தை அதில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

நாம் தேடும் நம் முகம் தவிர எல்லா முகங்களும் அதில் தெரிகிறது.

நம்முகத்திற்கும் அவற்றிற்கும் உள்ள வேறுபாடுகள் மனதைக் குடைய, இது இல்லை.. இது இல்லை என ஒவ்வொன்றாய் ஒதுக்கித் தள்ளி தேடிக் கொண்டிருக்கிறோம்.

சிலர் ச்சீ இந்த உலகம் ரொம்ப மோசம் என்று அலுத்துக் கொண்டு விடுகிறார்கள்..

சிலர் இத்தனை ரக முகங்களா என மேலும் மேலும் ஆச்சர்யத்தோடு தேடுகிறார்கள்.

தேடி அலுத்தவரும் தேடலில் தொலைந்தவரும் என்றோ ஒரு நாள் அந்த முகத்தைக் காண்கிறார்கள்.

அந்த முகத்தில் தேடல் இல்லை... என்ன செய்கிறாய் என்கிறார்கள்.. என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறது.

தேடுகிறாயா? அப்படியென்றால் இங்கே உட்கார்ந்துகொண்டு என்ன செய்கிறாய் என்கிறார்கள் அவர்கள்.

என்னை என்னுள்ளே தேடாமல் வேறு எங்கு தேடுவது என்றான் அவன்.

அதுதான் ஆதவா மேட்டரே.. எல்லோரும் மற்றவர்களில் நம்மைக் காண முயற்சிக்கிறோம். ஆனால் அவர்களோ தினத்திற்கு ஒரு விதமாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள்..

நாமும் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அடுத்தவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதால் நம் மாற்றம் நம்ம கண்களுக்குப் புலப்படுவதில்லை.

கடைசியில் நாமும் மாறுவோம் என முடிவெடுத்து.. உலகத்தோடு கலந்து விடுகிறோம்.

அடையாளமிழந்து போகின்றன முகங்கள்.. முகமூடிகள் மட்டுமே சிதறிக் கிடக்கின்றன. போகிற போக்கில் கண்ணுக்குச் சிக்கிய எதையோ ஒன்றை மாட்டிக் கொண்டு உலகம் பார்க்க கிளம்பி விடுகிறோம் பின்னர்.

ஆதவா
06-09-2010, 11:13 AM
சின்ன விஷய்ம்தான்..

உலகம் ஒரு கண்ணாடி என்று எண்ணிக் கொண்டு, நம் முகத்தை அதில் தேடிக் கொண்டிருக்கிறோம்.இப்படி ஒரு கவிதை கூட இருக்கிறது அண்ணா. சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை..
அதில்,
அவன் கண்ணாடியில் எத்தனை முறை பார்த்தாலும் அவன் முகம் மட்டும் தெரியாது,
அதேபோல் கண்ணாடி சொல்லுமாம், நீ உன் முகத்தைத்தான் பார்க்கிறாய், என்னை ஒருநாளாவது பார்த்திருப்பாயா என்று....

அது ஒரு நல்ல கவிதை, யார் எழுதியது என்று மறந்துவிட்டது.

தாமரை
06-09-2010, 11:17 AM
அவன் கண்ணாடியில் எத்தனை முறை பார்த்தாலும் அவன் முகம் மட்டும் தெரியாது,
அதேபோல் கண்ணாடி சொல்லுமாம், நீ உன் முகத்தைத்தான் பார்க்கிறாய், என்னை ஒருநாளாவது பார்த்திருப்பாயா என்று....
.
இரசம் போன பின்னால் கண்ணாடியைப் பார்போம்..குறை சொல்ல

Nivas.T
06-09-2010, 12:08 PM
இரசம் போன பின்னால் கண்ணாடியைப் பார்போம்..குறை சொல்ல

கண்ணாடியை உடைந்த பின்பும்
அல்லது உடைப்பதற்கு மட்டும் கண்ணாடியாய் பார்ப்பவர் உண்டு

ஆதி
06-09-2010, 12:59 PM
இப்படி ஒரு கவிதை கூட இருக்கிறது அண்ணா. சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை..
அதில்,
அவன் கண்ணாடியில் எத்தனை முறை பார்த்தாலும் அவன் முகம் மட்டும் தெரியாது,
அதேபோல் கண்ணாடி சொல்லுமாம், நீ உன் முகத்தைத்தான் பார்க்கிறாய், என்னை ஒருநாளாவது பார்த்திருப்பாயா என்று....

அது ஒரு நல்ல கவிதை, யார் எழுதியது என்று மறந்துவிட்டது.

கிரிஷ்ணர் மாதிரி.. சகுனித்தான் தெரிவான் :D

கலையரசி
06-09-2010, 02:30 PM
-

எத்தனை முகங்களைத்தான்
உன்வசம் வைத்திருக்கிறாய்?

திடீர் திடீரென முகங்களை மாற்றி
திணறச்செய்யும் உன்னிடம்
எனக்குப் பிடித்தமான
பழையமுகம் ஒன்று இருந்ததைப் பற்றிப்பேசி
பரிச்சயப்படுத்த முனைகிறேன்!
!

தாம் நினைத்தவற்றைச் சாதித்துக் கொள்ள வேளைக்குத் தகுந்தாற் போல், இடத்திற்கேற்றார் போல் முகத்தை மாற்றும் முகமூடி மனிதர்கள்! சட்டையை மாற்றுவது போல் முகத்தை மாற்றும் இவர்கள் ஒரு கட்டத்தில் தங்களது ஒரிஜினல் முகம் எது என்பதையே மறந்து போய் விடுவார்கள். அவர்களிடம் பழைய முகம் பற்றிப் பேசுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.
ஆதவா சொல்வது போல் படிமக் கவிதைகளை அழகாக எழுதத் துவங்கிவிட்டாய். தொடர்ந்து எழுது. வாழ்த்துடன் பாராட்டுக்கள்.
ஆதவாவின் அருமையான பின்னூட்டத்திற்கும் ஒரு சபாஷ்!

பாரதி
06-09-2010, 03:06 PM
சமீபத்தில் படித்த கவிதைகளில் சட்டென மனதில் பதிந்த சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. பின்னொரு சமயம், மீள் வாசிப்பிற்குப் பின்னர் தோன்றுவதைக் கூறுகிறேன். இனிய பாராட்டும் வாழ்த்தும்.

பா.ராஜேஷ்
06-09-2010, 07:01 PM
அருமையாக தேர்ந்தெடுக்கப் பட்ட வார்த்தைகள் உள்ளம் கவர்கின்றன.. பாராட்டுக்கள் கீதம்..

கீதம்
07-09-2010, 03:48 AM
அருமையான கவிதை கீதம்..

’சில அகோர, விகார முகங்கள் தவிர்த்து
அழகுமுகம் காணநேரும் சமயங்களிலும்
அதனூடே இழையோடும்
அந்தப் புன்னகை பறைசாற்றும்
அதுகொண்ட கபடம்!’ --நல்ல வரிகள்..

கடைசி வரிகளும் ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துக்கள் !

மிகவும் நன்றி, சுடர்விழி.

கீதம்
07-09-2010, 03:49 AM
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே!!!:lachen001::lachen001::lachen001:

இவ்வளவு சீரியஸா எழுதியிருக்கேன், காமெடின்னு சொல்லிட்டீங்களே?:eek:

கீதம்
07-09-2010, 03:51 AM
சில அகோர, விகார முகங்கள் தவிர்த்து
அழகுமுகம் காணநேரும் சமயங்களிலும்
அதனூடே இழையோடும்
அந்தப் புன்னகை பறைசாற்றும்
அதுகொண்ட கபடம்!

அழகுக் கவிதை
:eek:
எப்டிங்க முடியுது?:confused:

எல்லாம் மன்ற உறவுகளாகிய நீங்கள் கொடுக்கும் உற்சாகம்தான்.:icon_b: மிகவும் நன்றி, நிவாஸ்.

கீதம்
07-09-2010, 03:58 AM
ரொம்பவும் அழகாகவும் சிறப்பாகவும் எழுதியிருக்கிறீர்கள். இதைப் போன்றே படிமங்கள் தாங்கி நிற்கும் கவிதைகள் நிறைய படையுங்கள். கவிதையில் அடுத்த உலகிற்குள் நுழைந்திருக்கிறீர்கள் அந்த உலகம் சிறிய அடர்த்தியான உலகம். அதன் பின்னரும் பல மேம்பாலங்கள் வழியே செல்லவேண்டியிருக்கும்... ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் கீழிறங்கி விடாதீர்கள்.

என்னவோ தோன்றியது. எழுதினேன். ஆதவா, உங்கள் பின்னூட்ட அலசலுக்குப் பிறகுதான் என் கவிதையின் முழுப்பொருளும் எனக்கே விளங்குகிறது.

தூக்கிவிட இத்தனைக் கரங்கள் இருக்கும்போது அடுத்த படிக்கு உயர்வதைப்பற்றி எனக்கென்ன கவலை? உங்கள் அறிவுரைக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி, ஆதவா.

தாமரை
07-09-2010, 03:59 AM
இவ்வளவு சீரியஸா எழுதியிருக்கேன், காமெடின்னு சொல்லிட்டீங்களே?:eek:

பலர் அவர்களுக்கே தெரியாமல் முகங்களை அணிந்து கொள்கிறார்கள்.

சிலர் தெரிந்தே முகங்களை அணிந்து கொள்கிறார்கள்.

நானு இரண்டாவது கேட்டகிரி (கேட்காட்டி நரியா??).. அதான் :wuerg019:

கீதம்
07-09-2010, 04:01 AM
கவிதை அருமை,
ஆதவா அவர்களின் பின்னுட்டம் மிகவும் அருமை..

இப்போது இருப்பது அலுவலகத்தில் விரிவாக விமர்சனம் தர முடியாதல்லவா,நேரம் கிடைத்தவுடன் எழுதுகின்றேன் சரியா.:)

பொறுமையாய் விமர்சியுங்கள். படித்தவுடன், பிடித்திருக்கும்பட்சத்தில் அருமை என்று ஒரு வார்த்தை சொல்லிப்போவது கூட படைப்பாளரை உற்சாகப்படுத்தும் அல்லவா?

மிகவும் நன்றி, சூரியன் அவர்களே.

கீதம்
07-09-2010, 04:08 AM
என்னைக் கேட்டால்..
எல்லாரிடமும் எல்லாமுகமும் இருக்கின்றன அண்ணா.
உங்களிடம் ஸ்ப்லிட் பர்சனாலிடி மாதிரி அடிக்கடி (நொடிக்கடி :)) மா(ற்)றிக் கொள்ளும் முகம் இருக்கிறது. அது பெரும்பாலும் ஒரு விஷயத்தை 360 டிகிரியில் பார்க்கும் கேமரா முகம்!
உங்களது முகங்களில் ஆளுமையும் இருக்கிறது. அதன் வீச்சு, நன்கு தெரிந்தவருக்கு உடனே பழக்கமாகிவிடுகிறது.
தெரியாதவர்களுக்கு அகோரமாகக் கூட தெரியலாம்!!!:eek:

(பேசாம, தக்ஸ் ஆரம்பிச்ச தாமரைசெல்வன் திரிய நாம ஆரம்பிச்சிருக்கலாம்!!!:D)

ஐயோ, ஆதவா, நான் நிஜமாவே பொதுவாத்தான் எழுதினேன். நீங்க சொல்றதைப் பார்த்தால் நான் வேணும்னே வேணும்னே தாமரை அவர்களைக் குறிவைத்து எழுதினமாதிரியில்ல சொல்லி விளக்கம் தரீங்க?:confused:

கீதம்
07-09-2010, 04:12 AM
தாம் நினைத்தவற்றைச் சாதித்துக் கொள்ள வேளைக்குத் தகுந்தாற் போல், இடத்திற்கேற்றார் போல் முகத்தை மாற்றும் முகமூடி மனிதர்கள்! சட்டையை மாற்றுவது போல் முகத்தை மாற்றும் இவர்கள் ஒரு கட்டத்தில் தங்களது ஒரிஜினல் முகம் எது என்பதையே மறந்து போய் விடுவார்கள். அவர்களிடம் பழைய முகம் பற்றிப் பேசுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.
ஆதவா சொல்வது போல் படிமக் கவிதைகளை அழகாக எழுதத் துவங்கிவிட்டாய். தொடர்ந்து எழுது. வாழ்த்துடன் பாராட்டுக்கள்.
ஆதவாவின் அருமையான பின்னூட்டத்திற்கும் ஒரு சபாஷ்!

உங்கள் அருமையான பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி, அக்கா.

கீதம்
07-09-2010, 04:15 AM
பலர் அவர்களுக்கே தெரியாமல் முகங்களை அணிந்து கொள்கிறார்கள்.

சிலர் தெரிந்தே முகங்களை அணிந்து கொள்கிறார்கள்.

நானு இரண்டாவது கேட்டகிரி (கேட்காட்டி நரியா??).. அதான் :wuerg019:

தெரிந்தே முகங்களை அணிபவர்களுக்கு தான் இன்னமுகத்தில் இருக்கிறோம் இப்படி நடக்கவேண்டும் என்பது புரியும். தனக்குத் தெரியாமல் முகத்தை மாற்றுபவர்களிடம் சிக்கினால் எதிராளி பாடு கஷ்டம்தான்.

கீதம்
07-09-2010, 04:16 AM
சமீபத்தில் படித்த கவிதைகளில் சட்டென மனதில் பதிந்த சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. பின்னொரு சமயம், மீள் வாசிப்பிற்குப் பின்னர் தோன்றுவதைக் கூறுகிறேன். இனிய பாராட்டும் வாழ்த்தும்.

பாராட்டுக்கும் இ பண ஊக்குவிப்புக்கும் மிகவும் நன்றி, பாரதி அவர்களே.

கீதம்
07-09-2010, 04:17 AM
அருமையாக தேர்ந்தெடுக்கப் பட்ட வார்த்தைகள் உள்ளம் கவர்கின்றன.. பாராட்டுக்கள் கீதம்..

மிகவும் நன்றி, ராஜேஷ்.

தாமரை
07-09-2010, 04:29 AM
ஐயோ, ஆதவா, நான் நிஜமாவே பொதுவாத்தான் எழுதினேன். நீங்க சொல்றதைப் பார்த்தால் நான் வேணும்னே வேணும்னே தாமரை அவர்களைக் குறிவைத்து எழுதினமாதிரியில்ல சொல்லி விளக்கம் தரீங்க?:confused:

ஐயே... இப்படியா பயப்படுவது,,

இங்க இருக்கும் தாமரை ஒரு டிஜிட்டல் வடிவம். ஒரு இமேஜினேஷன். கற்பனை.. என் மனசில் தாமரை என்னும் ஒரு மனுஷனுக்கு நான் கொடுத்த முகமூடி..

அதான் இது.. உண்மையைச் சொன்னதுக்கு ஆதவாவுக்கு நன்றியில்லையா சொல்லணும்.

முகம் தெரியாத ஒரு கவிஞர் எழுதினா அட நம்மளை பற்றி எழுதின மாதிரியே இருக்கேன்னு மன்சுக்குள்ள நினைச்சுப்போம். நான் இங்க வெளிப்படையா சொல்லி இருக்கேன்.. அவ்வளவுதான். இதில யாரையும் குத்தம் சொல்ல எதுவும் இல்லையே...

மதி
07-09-2010, 05:15 AM
கவிதையில் பற்பல முகங்களைப் பற்றிய பிரமிப்பு தெரிகின்றது.. அதனாலேயே அதிசயமுகம் என்று வந்ததோ? ஒவ்வொரு முறையும் நாம் விரும்பும் அவர் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்.. ஏன்?? அதற்கான காரணம் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாமும் முகம் மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாத அதிசயம் தானோ இந்த முகம் மாறுதல்..?

பாத்தீங்களா.. இங்கேயும் எனக்குப் பிடித்த மாதிரி நீ இல்லை.. நீ அணியும் முகம் இல்லேன்னு... தன்னிலை ஸ்திரமா இருக்குங்கறதே உங்க பல முகங்கள்ல ஒன்னு தானே?

தாமரை
07-09-2010, 05:19 AM
அப்படி இல்லை மதி.. முகங்களை அணிய அதுவும் ஒகக் காரணமுலு!!

மதி
07-09-2010, 05:23 AM
அப்படியும் இல்லேன்னு சொல்லியிருக்கலாம்.. நீ அணிகிறாய் பார்.. நானும் அணியப் போகிறேன்.. இதுவே ஒருவித அணி தானே..!!
முகங்கள் அணிதலும் அணி.. அணியவில்லை என்று மறுத்தாலும் அணி....!!!

யார் எந்த அணி..? யார் யார் அணி..??
அணி... அணி.. அணி...!!!

:D:D:D

(கடைசியில இன்னிக்கு நீ எதுவும் ஆணி பிடுங்களியானு கேக்காதீங்க.)

ஆதவா
07-09-2010, 05:27 AM
ஐயே... இப்படியா பயப்படுவது,,

இங்க இருக்கும் தாமரை ஒரு டிஜிட்டல் வடிவம்...

http://tamilmantram.com/vb/customavatars/avatar1096_2.gif

இதுவா???? :aetsch013:

ஆதவா
07-09-2010, 05:30 AM
அப்படியும் இல்லேன்னு சொல்லியிருக்கலாம்.. நீ அணிகிறாய் பார்.. நானும் அணியப் போகிறேன்.. இதுவே ஒருவித அணி தானே..!!
முகங்கள் அணிதலும் அணி.. அணியவில்லை என்று மறுத்தாலும் அணி....!!!

யார் எந்த அணி..? யார் யார் அணி..??
அணி... அணி.. அணி...!!!

:D:D:D

(கடைசியில இன்னிக்கு நீ எதுவும் ஆணி பிடுங்களியானு கேக்காதீங்க.)

ஹனி நு சொல்றதுக்கு ஆள் இல்லாம அணி அணின்னு புலம்பும் மதியின் அணியில்...

ஆதவா. :lachen001::D

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
07-09-2010, 03:28 PM
ஒன்றும் செய்ய இயலாது. விதியின் ஊழ் வினைகளில் கட்டுப்பட்டது இந்த முக மாற்றுகள். நல்ல வரிகள் கீதம். பாராட்டுக்கள்.

த.ஜார்ஜ்
07-09-2010, 04:06 PM
கழற்ற கழற்ற அதுவா முளைச்சிட்டே இருக்கு. என்ன பண்ண. [ஏதோ கொடுப்பினை போல இருக்கு]

அமரன்
07-09-2010, 05:22 PM
பாரதி அண்ணா சொன்னது போல முதல் பார்வையிலேயெ பழகிய முகம் போல் பட்டெனப் பதிந்து விட்ட கவிதை.

ஒப்பனை செய்த பின்னூட்டங்கள்.

அருமை.. அருமை..

பாராட்டுகள்.

கீதம்
07-09-2010, 10:57 PM
ஒன்றும் செய்ய இயலாது. விதியின் ஊழ் வினைகளில் கட்டுப்பட்டது இந்த முக மாற்றுகள். நல்ல வரிகள் கீதம். பாராட்டுக்கள்.

நன்றி, சுனைத் ஹஸனீ அவர்களே.

கீதம்
07-09-2010, 10:58 PM
கழற்ற கழற்ற அதுவா முளைச்சிட்டே இருக்கு. என்ன பண்ண. [ஏதோ கொடுப்பினை போல இருக்கு]

பின்னூட்டத்துக்கு நன்றி, ஜார்ஜ் அவர்களே.

கீதம்
07-09-2010, 10:59 PM
பாரதி அண்ணா சொன்னது போல முதல் பார்வையிலேயெ பழகிய முகம் போல் பட்டெனப் பதிந்து விட்ட கவிதை.

ஒப்பனை செய்த பின்னூட்டங்கள்.

அருமை.. அருமை..

பாராட்டுகள்.

பாராட்டுக்கு நன்றி, அமரன்.