PDA

View Full Version : நானும் காற்றாடி போல்...



Nivas.T
04-09-2010, 05:00 PM
கடற்க்கரையோரம்

நடந்த நேரம்

காற்றாடிக் கண்டேன்

அது காற்றில் ஆடி ஆடி

நல்ல முகம் அதற்கு

முக்கோணம் வரைவதற்கு

கண்கள் இரண்டு வரைந்தது

தறிகெட்டுத் திரிந்தது

படபடக்கும் சத்தம்

சுதந்திரம் கேட்கும் அர்த்தம்

எங்கிருந்தோ இழுக்க

விரல்களோ சொடுக்க

அங்குமிங்கும் அலைந்து துடிக்க

அதிகமாய் ஆடியதால்

அறுந்தது நூல்

நானும் காற்றாடி போல்

பா.ராஜேஷ்
04-09-2010, 09:42 PM
இது உங்கள் கவிதை முயற்சி என்று நினைக்கிறன் நிவாஸ்... பாராட்டுக்கள்... இன்னும் முயலுங்கள், இன்னும் சிறப்பாய் உங்களால் எழுத முடியும்...

அமரன்
04-09-2010, 10:35 PM
பிடிமானத்தின் தேவையை எடுத்துச் சொல்லுகிறது கவிதை.

தேவையான கவிதைதான்.

பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
05-09-2010, 08:25 AM
இது உங்கள் கவிதை முயற்சி என்று நினைக்கிறன் நிவாஸ்... பாராட்டுக்கள்... இன்னும் முயலுங்கள், இன்னும் சிறப்பாய் உங்களால் எழுத முடியும்...

ஆம் ராஜேஷ்,

வெகு நாட்களுக்கு முன்பு கவிதை எழுத முயன்றபோது பிறந்த கவிதை

மிக்க நன்றி

Nivas.T
05-09-2010, 08:27 AM
பிடிமானத்தின் தேவையை எடுத்துச் சொல்லுகிறது கவிதை.

தேவையான கவிதைதான்.

பாராட்டுகள் நிவாஸ்.

இது என் சொந்த அனுபவம்

அமரன்

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி

சுடர்விழி
05-09-2010, 08:36 AM
கட்டுக்குள் அடங்க வேண்டிய கட்டயத்தை அழகாக சொல்லி இருக்கும் கவிதை...

பாராட்டுக்கள் !

Nivas.T
05-09-2010, 08:46 AM
உண்மைதான் சுடர்விழி
மிக்க நன்றி