PDA

View Full Version : உண்மை சுடும்

கலையரசி
03-09-2010, 02:51 PM
உமாவிற்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, வீட்டின் நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது.

மனைவிக்கு ’மைல்ட் ஹார்ட் அட்டாக்’ என்று தெரிந்த போது ஆடித்தான் போய் விட்டான் எதற்கும் கலங்காத கணபதி.

குக்கரில் வேக வைத்த சாதம் அவனுக்குப் பிடிக்காது. கஞ்சி வடிக்கப்பட்ட சாதம் தான் வேண்டும். காலை நேர டென்ஷனில் சிலசமயம் கையில் கஞ்சிக் கொட்டிக் கொண்டு நின்ற மனைவியைப் பார்த்து ஒரு நாள் கூட அவன் பரிதாபப் பட்டதில்லை.

“சாதம் வடிக்கக் கூடத் தெரியலை; என்ன வளர்த்திருக்காங்க ஒங்க வீட்டுல?” என்பான் கேலியாக.

என்றாவது பதம் தவறி, சாதம் குழைந்து போனாலோ கோபம் தலைக்கேறிவிடும். மாவு அரைத்து பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது அவனது கண்டிப்பான உத்தரவு. தினந்தினம் புதிதாக அரைத்துத் தான் இட்லி ஊற்ற வேண்டும்.

குழந்தைகளைப் பாட்டு வகுப்புக்குக் கொண்டு விடச்சொல்லி மனைவி கேட்ட போது, “வண்டி ஓட்டக் கத்துக்கோ” என்று சொல்லி ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து விட்டு அந்த வேலையிலிருந்து கழன்று கொண்டான்.

“வேலைக்கும் போய்க்கிட்டு வீட்டையும் கவனிக்க முடியல. கொஞ்சம் ஒத்தாசை பண்ணக் கூடாதா?” என்று அவள் புலம்பும் போதெல்லாம், “உன்னை யார் வேலைக்குப் போகச் சொன்னது? வெணுமின்னா வேலையை விட்டுடு,” என்பான் விட்டேற்றியாக.

குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லையென்றாலும் அவளுக்குத் தான் திட்டு விழும். குழந்தைங்க படிக்கிறதைக் கூடக் கவனிக்காம, அப்படி என்ன வெட்டி முறிக்கிறே?’ என்பான் கோபத்தோடு.

மனைவி படுத்த படுக்கையான பிறகு வேறு வழியின்றி சமையலைக் கற்றுக் கொள்ளத் துவங்கியவன், முதல் வேலையாக அரிசி குக்கர் வாங்கி வந்தான். கடையில் விற்கும் மாவு வாங்கி வந்து இட்லி ஊற்றினான்.

குழந்தைகளுக்கு டியூஷன் ஏற்பாடு பண்ணியவன், பெண் குழந்தையின் முடியைக் குறைத்து ‘பாப்’ வெட்டி விட்டான்.
படிக்க நேரமில்லாததால், பத்திரிக்கைகளை நிறுத்த வேண்டியதாயிற்று.

முதன் முறையாக ரசம் செய்து பரிமாறிய போது,

”சே! இது அம்மா வைக்கிற ரசம் மாதிரியில்ல” என்று கோபத்தோடு தட்டை நகர்த்தி விட்டான் பையன்.

“எவ்ளோ கொழுப்பு இருந்தா தட்டை நகர்த்தி விடுவே? ஒண்டியா கஷ்டப்பட்டு வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன். அவ்ளோ நாக்கு ருசி கேக்குதா?” என்றபடி பையன் கன்னத்தில் தன் விரல்கள் பதியும்படியாக அறை விட்டான் கணபதி.

“நீங்க மட்டும் எத்தினி நாள் சாப்பாடு சரியில்லேன்னு தட்டைத் தூக்கி அடிச்சிருக்கீங்க. அம்மா பாவம்.....உங்களால தான் ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டாங்க...”

மகன் தேம்பிக் கொண்டே சொன்ன வார்த்தைகளிலிருந்த உண்மை அவனை நெருப்பாய்ச் சுட்டது.

(20.07.2008 தினமணிக்கதிரில் ஒரு பக்கக் கதை பகுதியில் எழுதியது)

வியாசன்
03-09-2010, 03:20 PM
தனக்கு வந்தால்தான் தெரியும் தலையிடியும் காய்ச்சலும். நல்லகதை பாராட்டுக்கள். கலையரசி

மதி
03-09-2010, 03:29 PM
நீதிக்கதைகள் வரிசையில் இன்னுமொரு கதை... மக்களில் பெரும்பாலானோரின் இன்றைய நிலைமையை சொல்லும் சிறுகதையானாலும் முடிவு முன்னரே யூகிக்க முடிகிறது.. அதற்கேற்றாற் போல் நீங்கள் எழுதிய தேதியையும் கொடுத்திட்டீங்க..

பாராட்டுக்கள்..க்கா..

ஆதவா
03-09-2010, 05:03 PM
உண்மை சுடும்??
உண்மையாகவா?

உண்மையை ஆறப்போட்டாலும் சுடும்..
உண்மையை அப்பவே சொன்னாலும் சுடும்..

அது எப்பவுமே சூடாத்தான் இருக்கும் போல!!!

நல்ல கதை!! வார இதழில் வந்தமைக்கு பாராட்டுக்கள்!!!

கீதம்
04-09-2010, 08:45 AM
தவறு செய்பவர்கள், இப்படி ஒற்றைச் சொல்லிலேயே எல்லா உண்மைகளையும் உணர்ந்து திருந்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஏங்கத்தான் முடிகிறது. சில உண்மைகள் ஆதவா சொல்வது போல் உடனடியாய் இல்லாவிட்டாலும் தாமதமாகவாவது சுடும்.சுடவேண்டும்.

பாராட்டுகள்,அக்கா.

சிவா.ஜி
04-09-2010, 02:50 PM
மகனின் கேள்வி நச்...!! மனைவியின் வலியறியாதவனெல்லாம்...கணவனாய் இருக்கவே தகுதியில்லை.

நல்ல கதை...நல்லக் கருத்து. வாழ்த்துக்கள்ங்க கலையரசி மேடம்.

அமரன்
04-09-2010, 09:43 PM
மகன் தேம்பிக் கொண்டே சொன்ன வார்த்தைகளிலிருந்த உண்மை அவனை நெருப்பாய்ச் சுட்டது.

தேம்பாமல் சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும். பய புள்ள கன்னா பின்னா என்று வாங்கிக் கட்டி இருக்கும்.

சொல்லும் விதத்திலும் இருக்குங்க மனசைத் தொடும் மந்திரம்.

நீங்க சொன்ன விதம் அருமை. சட்டென்று பத்துது.

கண்பதிதான் சரியான டியூப்லைட். அனுபவிச்சும் அறியும் அறிவு சுத்தமா இல்லை. ஸ்ராட்டர் மாதிரி வோல்டச் கூட்டினால் பத்துறான், விசு படக் கதாநாயகன் போல.

பாராட்டுகள் கலைக்கா.

கலையரசி
10-09-2010, 09:37 AM
தனக்கு வந்தால்தான் தெரியும் தலையிடியும் காய்ச்சலும். நல்லகதை பாராட்டுக்கள். கலையரசி

பாராட்டுக்கு மிக்க நன்றி வியாசன்!

கலையரசி
10-09-2010, 09:37 AM
நீதிக்கதைகள் வரிசையில் இன்னுமொரு கதை... மக்களில் பெரும்பாலானோரின் இன்றைய நிலைமையை சொல்லும் சிறுகதையானாலும் முடிவு முன்னரே யூகிக்க முடிகிறது.. அதற்கேற்றாற் போல் நீங்கள் எழுதிய தேதியையும் கொடுத்திட்டீங்க..

பாராட்டுக்கள்..க்கா..

பாராட்டுக்கு ரொம்ப நன்றி மதி!

கலையரசி
10-09-2010, 09:38 AM
உண்மை சுடும்??
உண்மையாகவா?

உண்மையை ஆறப்போட்டாலும் சுடும்..
உண்மையை அப்பவே சொன்னாலும் சுடும்..

அது எப்பவுமே சூடாத்தான் இருக்கும் போல!!!

நல்ல கதை!! வார இதழில் வந்தமைக்கு பாராட்டுக்கள்!!!

பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஆதவா!

கலையரசி
10-09-2010, 09:39 AM
தவறு செய்பவர்கள், இப்படி ஒற்றைச் சொல்லிலேயே எல்லா உண்மைகளையும் உணர்ந்து திருந்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஏங்கத்தான் முடிகிறது. சில உண்மைகள் ஆதவா சொல்வது போல் உடனடியாய் இல்லாவிட்டாலும் தாமதமாகவாவது சுடும்.சுடவேண்டும்.

பாராட்டுகள்,அக்கா.

பாராட்டுக்கு நன்றி கீதம்!

கலையரசி
10-09-2010, 09:42 AM
மகனின் கேள்வி நச்...!! மனைவியின் வலியறியாதவனெல்லாம்...கணவனாய் இருக்கவே தகுதியில்லை.

நல்ல கதை...நல்லக் கருத்து. வாழ்த்துக்கள்ங்க கலையரசி மேடம்.

ஆமாம் சார்! மனைவியின் வலியறிந்து அனுசரணையாக இருக்கும் போது தான் இல்லறம் இனிக்கும்! வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவாஜி சார்!

கலையரசி
10-09-2010, 09:42 AM
தேம்பாமல் சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும். பய புள்ள கன்னா பின்னா என்று வாங்கிக் கட்டி இருக்கும்.

சொல்லும் விதத்திலும் இருக்குங்க மனசைத் தொடும் மந்திரம்.

நீங்க சொன்ன விதம் அருமை. சட்டென்று பத்துது.

கண்பதிதான் சரியான டியூப்லைட். அனுபவிச்சும் அறியும் அறிவு சுத்தமா இல்லை. ஸ்ராட்டர் மாதிரி வோல்டச் கூட்டினால் பத்துறான், விசு படக் கதாநாயகன் போல.

பாராட்டுகள் கலைக்கா.
பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி அமரன்!

அன்புரசிகன்
12-09-2010, 12:09 PM
காலையிலிருந்து இரவுவரை உழைக்கும் மனைவியை (உத்தியோகம் என்று வெளியே செல்லாவிட்டாலும்) அநேக புருசர் மார் கேட்கும் கேள்வி அப்படி என்ன வெட்டிவிழுத்துறாய் என்று தான்... அலுவலகம் சென்று கதிரையிலிருந்து அவர் டென்ஷனாகுறது தான் அவர் வெட்டி முறிப்பது. வீட்டிலிருந்து உடலை வருத்துவது வேலை இல்லை என்று பலரும் நினைப்பது. அதனை சரியாக புகட்டுமாறு வரியப்பட்ட கதை. வாழ்த்துக்கள் கலையரசி.

Nivas.T
13-09-2010, 11:53 AM
அடுத்தவர் படும் துன்பங்களை அவர்கள் நிலையில் நின்று யோசிப்போர் எத்துனை பேர்

உண்மை நிஜமாகவே சுடுகிறது

நல்ல ஒரு கதை

நன்றி கலையரசி அவர்களே

கலையரசி
13-09-2010, 01:36 PM
காலையிலிருந்து இரவுவரை உழைக்கும் மனைவியை (உத்தியோகம் என்று வெளியே செல்லாவிட்டாலும்) அநேக புருசர் மார் கேட்கும் கேள்வி அப்படி என்ன வெட்டிவிழுத்துறாய் என்று தான்... அலுவலகம் சென்று கதிரையிலிருந்து அவர் டென்ஷனாகுறது தான் அவர் வெட்டி முறிப்பது. வீட்டிலிருந்து உடலை வருத்துவது வேலை இல்லை என்று பலரும் நினைப்பது. அதனை சரியாக புகட்டுமாறு வரியப்பட்ட கதை. வாழ்த்துக்கள் கலையரசி.

வாழ்த்துக்கு மிக்க நன்றி அன்புரசிகன்!

கலையரசி
13-09-2010, 01:37 PM
அடுத்தவர் படும் துன்பங்களை அவர்கள் நிலையில் நின்று யோசிப்போர் எத்துனை பேர்

உண்மை நிஜமாகவே சுடுகிறது

நல்ல ஒரு கதை

நன்றி கலையரசி அவர்களே

மிக்க நன்றி நிவாஸ்!

பா.சங்கீதா
18-09-2010, 06:41 AM
நல்ல கதை.........
வாழ்த்துகள்...........:)