PDA

View Full Version : என்ன கிழிக்கப் போகிறாய்?

Nivas.T
03-09-2010, 09:17 AM
இறைவன் படம்

முடிந்து போன நாள்

இருக்கும் நாள்

வரவிருக்கும் நாட்கள்

நல்ல நேரம்

ராசிபலன்

தத்துவம்

பண்டிகைக் காலம்

அரசு விடுமுறை

விழும் பலன் யாருக்குத்தெரியும்?

பார்த்துவிட்டு

கிழித்தேன்

கழித்துவிட்டாய் என்னை!

நீ என்ன கிழிக்கப் போகிறாய்?

இன்று

கேட்டது

என் வீட்டுச்சுவற்று

நாட்காட்டி

கண்மணி
03-09-2010, 09:36 AM
வேலை இருக்கிறவர் தேதியைக் கிழிச்சிட்டு உடனே போய் வேலையைப் பார்க்க ஆரம்பிப்பார்.

நீங்க இவ்வளவு டீட்டெய்லா பார்க்கறதைப் பார்த்து காலண்டருக்கே கோபம் வந்திருச்சி போலிருக்கு.

இன்னிக்கு எங்க வீட்டுக் கேலண்டர் கூட என்னை இதே கேள்வி கேட்டது,

நான் உடனே பதில் சொன்னேன்

நிவாஸை என்று!!!:lachen001::lachen001::lachen001:

ஆதி
03-09-2010, 10:00 AM
"நீ என்ன கிழிக்கப் போகிறாய்"

உன்ன ஏற்கனவே கிழிச்சாச்சு னு பதில் சொல்ல வேண்டியதுதான நீங்க :D

நாள் காட்டியை பார்த்தே சில நேரம் நாளை வீணடித்துவிடுகிறோம்..

நல்ல கவிதை நிவாஸ்... வாழ்த்துக்கள்...

Nivas.T
03-09-2010, 10:11 AM
வேலை இருக்கிறவர் தேதியைக் கிழிச்சிட்டு உடனே போய் வேலையைப் பார்க்க ஆரம்பிப்பார்.

நீங்க இவ்வளவு டீட்டெய்லா பார்க்கறதைப் பார்த்து காலண்டருக்கே கோபம் வந்திருச்சி போலிருக்கு.

இன்னிக்கு எங்க வீட்டுக் கேலண்டர் கூட என்னை இதே கேள்வி கேட்டது,

நான் உடனே பதில் சொன்னேன்

நிவாஸை என்று!!!:lachen001::lachen001::lachen001:

:eek:

அப்படியா? முயச்சிக்கலாம் தவறே இல்லை?:080402gudl_prv:

ஆனால் நிவாஸ்
கிழிப்பதற்கு காகிதமல்ல
உடைப்பதற்கு கல்லும் அல்ல
உருக்க இரும்புமல்ல :icon_nono:

நான் ஒரு வெற்றிடம் விண்வெளிபோல்:innocent0002:

(கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு பரவால்ல):smartass:

நன்றி கண்மணி அவர்களே :lachen001::lachen001:

Nivas.T
03-09-2010, 10:15 AM
"நீ என்ன கிழிக்கப் போகிறாய்"

உன்ன ஏற்கனவே கிழிச்சாச்சு னு பதில் சொல்ல வேண்டியதுதான நீங்க :D

நாள் காட்டியை பார்த்தே சில நேரம் நாளை வீணடித்துவிடுகிறோம்..

நல்ல கவிதை நிவாஸ்... வாழ்த்துக்கள்...

ஒவ்வொருநாள் நான் தேதி கிழிக்கும் போது
இப்படித்தான் தோன்றும் எனக்கு

மிக்க நன்றி ஆதன்

அனுராகவன்
18-09-2010, 06:43 PM
கிழிக்க தேதி இருக்கு..:icon_nono:ஆனா தினமும் தலை சுத்த செய்திதாள் இருக்கு..:violent-smiley-034:
நாம் கிழிக்க என்ன இருக்கு..இருக்கவே இருக்கு சிலேட்டும் ,பல்பமும்..:icon_v:
புதுசா எதாவது கத்துக்கலாமுல..:icon_03:

Nivas.T
29-04-2011, 09:11 AM

மிக்க நன்றி அணு

aathma
29-04-2011, 11:14 AM
நீ என்ன கிழிக்கப் போகிறாய்?

இன்று

கேட்டது

என் வீட்டுச்சுவற்று

நாட்காட்டி

பாவம் அதுவும் ஓயாமத்தான் என்னை கேள்வி கேட்டு பார்த்துச்சு , ஆனா நா அதுக்கெல்லாம் மசியற ஆளு இல்ல , கடைசி வரைக்கும் பதில் சொல்லமாட்டோம்மில்ல :D

Nivas.T
29-04-2011, 11:57 AM
பாவம் அதுவும் ஓயாமத்தான் என்னை கேள்வி கேட்டு பார்த்துச்சு , ஆனா நா அதுக்கெல்லாம் மசியற ஆளு இல்ல , கடைசி வரைக்கும் பதில் சொல்லமாட்டோம்மில்ல :D

நீங்க நம்ப கட்சியா தலைவா

வாங்க இங்க நேரிய பேரு நம்ப கட்சிதான்

புதுசா ஒரு கூட்டணி வச்சிருவோம்

Ravee
29-04-2011, 12:01 PM
இதுக்குத்தான் மாத நாட்காட்டிய வச்சுக்கணும் .... ஆறுமாசம் போனதும் என் பொண்ணோட புத்தகத்துக்கு எல்லாம் அட்டை போட உதவும்..... :lachen001: :lachen001: :lachen001:

Nivas.T
29-04-2011, 12:09 PM
இதுக்குத்தான் மாத நாட்காட்டிய வச்சுக்கணும் .... ஆறுமாசம் போனதும் என் பொண்ணோட புத்தகத்துக்கு எல்லாம் அட்டை போட உதவும்..... :lachen001: :lachen001: :lachen001:

அப்படீனா மாத காலண்டருக்கு ஒரு கவித எழுதலாமா........... :rolleyes:

:D:D:D

Ravee
29-04-2011, 12:26 PM
அப்படீனா மாத காலண்டருக்கு ஒரு கவித எழுதலாமா........... :rolleyes:

:D:D:D

:icon_rollout:

ஆஹா இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு ........ :eek: அப்ப இனிமேல டைரி, பஞ்சாங்கம், எல்லாத்துக்கும் எழுதுவீங்க போல இருக்கு யுவர் ஆனர் ......... இவர் வீட்டில் இருக்கும் தட்டச்சு பலகையை பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் .

Nivas.T
29-04-2011, 01:07 PM

:eek::eek::eek:

வீட்ல இல்லங்க அலுவலகத்துல தான்

அதுசரி மடிக்கணினி தட்டச்சுபலகைய எப்டி தனியா கழட்ட முடியும் :confused::confused::confused:

aathma
29-04-2011, 02:22 PM
நீங்க நம்ப கட்சியா தலைவா

வாங்க இங்க நேரிய பேரு நம்ப கட்சிதான்

புதுசா ஒரு கூட்டணி வச்சிருவோம்

உலக மக்கள் தொகையில 99 சதவீதம் நம்ப கட்சி ஆளுங்கதான் பாஸ் ,
நாம்பதான் மெஜாரிட்டி பாஸ் ,

எல்லா சர்தான் , ஆனா நம்ம கட்சிக்கு யாரு பாஸ், தலைவரு ?

Nivas.T
29-04-2011, 02:40 PM
உலக மக்கள் தொகையில 99 சதவீதம் நம்ப கட்சி ஆளுங்கதான் பாஸ் ,
நாம்பதான் மெஜாரிட்டி பாஸ் ,

எல்லா சர்தான் , ஆனா நம்ம கட்சிக்கு யாரு பாஸ், தலைவரு ?

இந்தத் திரில யார் யார் பின்னூட்டம் போற்றுக்கங்கன்னு பாருங்க பாஸ்

அவங்கள ஒருத்தர நாம தேர்ந்தெடுக்கலாம்

aathma
29-04-2011, 03:15 PM
எனக்கென்னமோ இந்த திரியை ஆரம்பிச்சவர்தான் சிறந்த தலைவர் ன்னு தோணுது :) உங்களுக்கு ஓகே வா ?

Nivas.T
29-04-2011, 04:52 PM
எனக்கென்னமோ இந்த திரியை ஆரம்பிச்சவர்தான் சிறந்த தலைவர் ன்னு தோணுது :) உங்களுக்கு ஓகே வா ?

:eek::eek::eek::eek:

ஏன் இந்த கொலை வெறி

Ravee
30-04-2011, 04:39 AM
:eek::eek::eek:

வீட்ல இல்லங்க அலுவலகத்துல தான்

அதுசரி மடிக்கணினி தட்டச்சுபலகைய எப்டி தனியா கழட்ட முடியும் :confused::confused::confused:

http://thumbs.dreamstime.com/thumb_547/12868770490E9CyH.jpg

அந்த கவலை உங்களுக்கு வேணாம் சார் ... உங்க மடி கணக்கியில் இருந்து என்ன என்ன பொருள் வேணும்ன்னு சொல்லுங்க கழட்டி தரேன் ......

Nivas.T
30-04-2011, 05:23 AM

அமரன்
30-04-2011, 08:58 AM
எங்க வீட்ல நாட்காட்டி எதுவும் இல்ல. ஆளுக்கு ஒரு அலைபேசி. அதன் மூஞ்சியில இன்று என்ன நாள்.. இப்போ என்ன நேரம் என்ற விபரம். தேவைப்பட்டால் பாத்துக்குவோம். தேவைப்பட்டால் அலைபேசியில் கலண்டரை திறந்து ஞாபகப்படுத்தல்களை குறிச்சிடுவோம்.

வேலை இடத்தில் நாட்காட்டி.. நாட் குறிப்பேடு... இப்படி ஏகப்பட்டவை..

தினசரியைக் கவிதையாக்கி கவர்ந்து விட்டீங்க நிவாஸ்.

Nivas.T
30-04-2011, 09:01 AM

பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அமரன் :)

ஓவியன்
01-05-2011, 04:51 AM
இதுக்குத்தான் நிவாஸ் உலகத்தில பல பொருட்களுக்கு ஆண்டவன் பேசும் சக்தியைக் கொடுக்கலை, கொடுத்திருந்தா இப்படி நார் நாராக கிழிந்து தொங்கத்தான் வேண்டியிருக்கும்...

நல்ல கவிதை, என் வாழ்த்துகளும்...

Nivas.T
01-05-2011, 05:19 AM
இதுக்குத்தான் நிவாஸ் உலகத்தில பல பொருட்களுக்கு ஆண்டவன் பேசும் சக்தியைக் கொடுக்கலை, கொடுத்திருந்தா இப்படி நார் நாராக கிழிந்து தொங்கத்தான் வேண்டியிருக்கும்...

நல்ல கவிதை, என் வாழ்த்துகளும்...

உண்மைதான் ஓவியன் அப்படி மட்டும் இருந்தால் மனிதன் கதி அந்தோ கதிதான்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஓவியன்

கீதம்
01-05-2011, 08:55 AM
நல்ல கற்பனை. கிழித்துக் கசக்கியெறியப்படும் நாட்காட்டித் தாளிலும் கவிதை கண்டெடுக்க முடிகிறதே உங்களால்!

பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
01-05-2011, 09:00 AM
நல்ல கற்பனை. கிழித்துக் கசக்கியெறியப்படும் நாட்காட்டித் தாளிலும் கவிதை கண்டெடுக்க முடிகிறதே உங்களால்!

பாராட்டுகள் நிவாஸ்.

பாராட்டுகளுக்கு நன்றீங்க