PDA

View Full Version : பயணத் துணை..!!



பூமகள்
03-09-2010, 07:36 AM
http://3.bp.blogspot.com/_ATCRNmCxu-E/TICii_rpz8I/AAAAAAAACFw/UBBAWNjsYlk/s400/travel_600.jpg (http://3.bp.blogspot.com/_ATCRNmCxu-E/TICii_rpz8I/AAAAAAAACFw/UBBAWNjsYlk/s1600/travel_600.jpg)



உன் சுவடு விடுத்து
பல நூறு மைல்
பயணித்த வேளையில்..

அடுத்த பயணியாய்
நீ என் பின்னே..

விண் நோக்கி
விழி விரிய வைத்த
கணங்கள் என்
மனக் கண்ணில்..

தெரிந்தும் தெரியாதது
போல் சக பயணிகளோடு
நாம் இருவரும்..

விலக்க முயற்சிக்கும்
காந்த எதிர்புலங்களாய்
விழி முட்டி தவிர்க்கும்
வாழ்க்கையின் எதார்த்தம்..

இதழோரப் புன்னகையோ
விழியோர ஈரமோ
இருவரும் அறியாதபடி
கலைந்து இயல்பெனக்
காட்ட முயற்சிக்கிறோம்..

மண்ணில் காணக்
கிடைக்காதது..
ஏனோ விண்ணில்
கண்ட விந்தை..

எடுத்து அப்பிய
இறுகிய முகத்தை
இருவரும் காட்டி
அவசர கதி உடை
பூண்டு நகர்கிறோம்..

வலி மரத்த இதயம்
முன்னிலும் அதிகம்
வலித்தது அன்று..

ஒரு வார்த்தை
பேசியிருக்கலாமோ??

ஆதவா
03-09-2010, 12:56 PM
இறுக்கத்தை அவிழ்த்தால்
சந்தோஷம் தெரியும்!
வலியை வலியால் வலிக்க வைப்பது எதற்காக?
தேவையேயில்லை.
நாவடக்கம் தேவைதான்...
சில இடங்களில் நாவடங்கிப் போனால்
நாமடங்கிப் போவோம்!!

ஒரு துளி சிரிப்பைக் காட்டி, சந்தோஷ மழையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
விட்டுக் கொடுத்தலைக் காட்டிலும் வேறெந்த சந்தோஷமும் இருக்கிறதா என்பதை
மனதிற்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.


விலக்க முயற்சிக்கும்
காந்த எதிர்புலங்களாய்

எதிர்புலங்கள் விலக்காது!!

காந்தம் கூட பாருங்கள், N + S உடன் தான் இணையும்...
N = ஆண் S = பெண்... இரண்டும் ஒட்டிக் கொள்ளும்... என்னே ஆண்டவனின் படைப்பு.
ஒன்று கோபமாக இருந்தால், இன்னொன்று சாந்தமாக இருக்கவேண்டும்...
அதுதான் இறைவன் காந்தத்தில் வைத்திருக்கும் குறியீடு!


மண்ணில் காணக்
கிடைக்காதது..
ஏனோ விண்ணில்
கண்ட விந்தை..

இதை நான் வேறுவிதத்தில் யூகித்திருக்கிறேன்... எனினும் கவிதைக்கு அது ஒட்டாதது போல் தெரிகிறது!! கொஞ்சம் விளக்கினால் இந்த மண்டைக்கு புரியும் என்று நினைக்கிறேன்.!

பூமகள் என்றால் சோகம் என்று பின்வரும் காலங்களில் சொல்லவைக்காதீர்கள்.
உங்களது பழைய கவிதைகளில் துள்ளும் கவிதைத்தனம் இக்கவிதையில் சோகச்சப்தத்தில் கரைந்துவிட்டது!!!

தொடருங்கள் சகோதரி!

கலையரசி
03-09-2010, 01:20 PM
[QUOTE=ஆதவா;490167]
மண்ணில் காணக்
கிடைக்காதது..
ஏனோ விண்ணில்
கண்ட விந்தை..
இதை நான் வேறுவிதத்தில் யூகித்திருக்கிறேன்... எனினும் கவிதைக்கு அது ஒட்டாதது போல் தெரிகிறது!! கொஞ்சம் விளக்கினால் இந்த மண்டைக்கு புரியும் என்று நினைக்கிறேன்.!

மண்ணில் ஒன்றாய் வாழ்ந்த போது ஒட்ட மறுத்த இதயங்கள், பிரிந்த பிறகு யாரோ எவரோ போல பயணிகளாய் தெரியாத முகங்களோடு விண்வெளியில் பறக்கும் போது ஒன்றிடத் தவிப்பதைத் தான் இவ்வரிகள் சொல்கின்றனவோ?

இக்காலத்தில் விட்டுக் கொடுத்தல் என்பது குறைந்து கொண்டே வருகிறது என்பதைப் பெருகி வரும் விவாகரத்து வழக்குகள் மூலம் அறிகிறோம். ஆண், பெண் இருவருக்கும் விட்டுக் கொடுப்பதற்கு ஈகோ இடிக்கிறது.

இக்கவிதையில் வருவது போல் வாய்ப்பைத் தவற விட்டு விட்டு ஒரு வார்த்தை பேசியிருக்கலாமோ என்று பின்னர் வருந்துபவர்களும் உண்டு.

கவிதை பிரிவின் வலியை உணரச்செய்கிறது. பாராட்டுக்கள் பூமகள்!

Nivas.T
03-09-2010, 01:53 PM
ஒரு வார்த்தை
பேசியிருக்கலாமோ??

வலி கொடுக்கும் வரி

நல்ல ஒரு காதல் கவிதை

நன்றி பூமகள்

பூமகள்
03-09-2010, 05:01 PM
@ஆதவா.

கவிதையினை மற்றொரு கோணத்தில் கண்டு விட்டுக் கொடுத்தலின் மகத்துவம் சொன்னது அருமை.. எனக்கே எட்டாத கரு அது. இப்போது உணர்கிறேன். நன்றி ஆதவா.

காந்தப் புலங்கள் பற்றிய வரிகள் என் கவனக் குறைவே. கவன ஈர்ப்பு விளக்கம் என்னை பள்ளி நாட்களுக்கு இட்டுச் சென்று விட்டது... ஆயினும்.. எதிர்ப்பவை விலக்கும் என்ற அர்த்தத்தில்.. 'எதிர்' என்ற வார்த்தை உபயோகித்துவிட்டேனோ..??!!
அதாவது ஒரு காந்தத்தை எதிர்ப்பது மற்றொரு காந்தத்தின் எதிர்க்கும் பகுதி என்று கொள்ளலாம் அல்லவா...??!!(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.. ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா...... :aetsch013::D)


மண்ணில் காணக்
கிடைக்காதது..
ஏனோ விண்ணில்
கண்ட விந்தை.. இன்னும் தெளிவாக யாருக்கும் கரு விளங்கவில்லையென்பது என் யூகம்.. இதை தகுந்த இடத்தில் பதிக்காதது என் குற்றமோ??!! :icon_ush:

கவிதை விளக்கம் - கவிதை இடமாற்றினாலே விளங்கும் என்பது என் அனுமானம்.

கவிதைக் கரு. களம் கற்பனையே.. இப்படி சந்தித்திருந்தால் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும் என்பது கவிதை சொல்லும் விடை..

எதனாலோ பிரிந்த காதல், மீண்டும் பார்க்க நேர்ந்த இடம்.. விண் பயணம்.. எதார்த்த வாழ்க்கையில் ஊறியிருக்கும் நிஜம்.. இப்படி பின்னிப் பாருங்கள்.. விடை தெரியும் என்று நம்புகிறேன்.

(சமீபத்திய பயணத்தில் யோசித்த கற்பனை.. உங்க மண்டை காய வைத்துவிட்டதோ??!!)

ஐயய்யோ.. என்ன ஆதவா.. இப்படி சோக கீதம் பாடுவதாக ஒரு போடு போட்டுவிட்டீர்கள்... எனது இதற்கு முன் எழுதிய "ஊடல் கொள்வோம் வா.." படிக்கவில்லையோ நீங்க... ??!! :p:D

ஆதவா
03-09-2010, 05:31 PM
@ஆதவா.
இன்னும் தெளிவாக யாருக்கும் கரு விளங்கவில்லையென்பது என் யூகம்.. இதை தகுந்த இடத்தில் பதிக்காதது என் குற்றமோ??!! :icon_ush:





மண்ணில் ஒன்றாய் வாழ்ந்த போது ஒட்ட மறுத்த இதயங்கள், பிரிந்த பிறகு யாரோ எவரோ போல பயணிகளாய் தெரியாத முகங்களோடு விண்வெளியில் பறக்கும் போது ஒன்றிடத் தவிப்பதைத் தான் இவ்வரிகள் சொல்கின்றனவோ?


என்ன சகோதரி.... கலையக்கா எழுதிய இதை நீங்கள் கவனிக்கவில்லையா....
(அய்யகோ! சோடாபுட்டி ஒன்றை வாங்கிப் போடுங்கள்!!! :D)

இக்கவிதைக்கான படைப்பாளியின் பாடுபொருள் என்னைப் போன்ற சாதா கவிஞர்களுக்கு சட்டென்று புரிந்துவிடும்.....
ஆயின் நான் நேரடியாக எடுத்துக் கொள்ளவில்லை!!

கவிதைக்கான அர்த்தம் வாசகன் வாசிப்பில் இருக்கிறது.. அவன் எடுத்துக்கொள்ளும் அர்த்தமே கவிதைக்கான அர்த்தமுமாகும்... ஆகவே வேறு வேறு விளக்கங்கள் வரும் பொழுது நீங்களாகவே அர்த்தம் தரவேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்!

நான் கொட் செய்திருந்த பகுதியை ஏன் கொடுத்தேனெனில்....
உங்கள் பயணம் (கவிதை சொல்லியின்) விமானம் என்பதை இங்கே தரமுயற்சி செய்கிறீர்கள்... ஆனால் ஒட்டுமொத்த கவிதையைப் படிக்கும் பொழுது அந்த பத்தி சற்று விலகியிருப்பதாகத் தோன்றுகிறது. பயணம் என்பது எந்த தளத்திலும் வரலாம்..... வாழ்க்கை நகர்ந்து கொண்டிருப்பதும் ஒரு பயணம் தானே!!, மண்ணில் காணக் கிடைக்காத ஒன்று விண்ணில் கிடைத்தது என்பது பூமியில் காணக்கிடைக்காத பொருளொன்று விண்வெளியில் பார்க்கமுடிந்தது என்று பொருளாகிறது!! உங்களது பொருளின் படி, காதலனோ காதலியோ, மண்ணில் காணக்கிடைக்காத, காணமுடியாத ஒருவரல்ல... முயற்சித்தால் பார்க்க முடியுமல்லவா...

ஆக,

அது சற்று தொக்கி நிற்கிறது! (இதெல்லாம் என்னோட கருத்துதாங்க..... மாற்று கருத்து வ்ரவேற்கப்படுகிறது!!)

பூமகள்
03-09-2010, 05:42 PM
நன்றி ஆதவா... கலையரசிக்கா சொன்னது பார்த்தேனுங்க.. கொஞ்சம் அர்த்தம் என் சிந்தனைக்கு ஒப்பாததால் அதை வேறொரு கோணமாக எடுத்துக் கொள்ள விட்டுவிட்டேன்.. ஆனால் சரியாக என் கருவை யாரும் பிடிக்கவில்லை என்பதாலேயே விளக்கமளித்தேன்..

மண்ணில் முயன்றாலும் காண இயலாத/விரும்பாத சூழல் இருக்கலாம் அல்லவா?? பிடிக்காதவரை முயன்று பார்ப்பார்களா??

ஆக..
இருமனம் ஒத்தால் காணலாம்..
ஒரு மனம் முரணித்தால் காணாமலே போகலாம் இல்லையா...??!! :lachen001::lachen001::smilie_abcfra::smilie_abcfra:

எனக்கு என் வரை சரியாகவே தெரிகிற்து ஆதவா.. பத்திகள் மாற்றியமைத்திருந்தால் ஒருவேளை அந்த வரிகள் தொக்கி நிற்காதோ??!! :icon_ush::mini023:

கீதம்
03-09-2010, 11:52 PM
வாழ்க்கைத்துணையாய் வந்திருக்கவேண்டிய உறவொன்றை வழித்துணையாய் சந்திக்கநேர்ந்த தர்மசங்கடமான சூழலை ஒரு தமிழ்ப்பெண்ணின் தர்மம் பிசகாது, சங்கடமாக சொல்லி நிற்கிறது, கவிதை. ஒத்தபுலங்களை உவமை சொல்லியிருப்பதிலேயே புரிந்துவிடுகிறது, பிரிவின் சாரம். பிரிந்தபின்னும் பிரியாத ஈகோ இருவரையும் ஒரு வார்த்தை பேசவிடாமல் செய்து பிரித்தேவைக்கிறது.

நான் புரிந்துகொண்டது சரிதானா, பூமகள்?

வலி மரத்த இதயத்தில்
உணரப்பட்டது
புதிதாய் ஒரு வலி!

இப்படியிருந்தால் இன்னும் சரியாக வருமா?

கவிதைக்கு எனது வாழ்த்துகள்.

பூமகள்
04-09-2010, 06:05 AM
அடடே... நாடி பிடித்து விட்டீர்கள் கீதமக்கா.. அசத்தல்.

உங்க வரிகள் கவிதையை மேலும் மெருகேற்றுமே...!!
நன்றி.. நன்றி அக்கா. :)

அமரன்
04-09-2010, 10:11 PM
உன் சுவடு விடுத்து
பல நூறு மைல்
பயணித்த வேளையில்..


முன்னால் நடந்தவர்


அடுத்த பயணியாய்
நீ என் பின்னே..

’பின்னால்’ நடப்பவர் ஆகிவிட்டார்.

’முன்னால்’ காதலர்/லி
பின்னால் கணவன்/மனைவி..
இதுதான் நடைமுறை.

நீங்க வித்தியாசப்படுத்திட்டீங்க.

இதில கவனிக்க வேண்டிய விசயம் என்ன என்றால்
பக்கத்தில் வரவே இல்லை..
பக்கத்தில் வராம எப்படி...?


அதையும் விடுவோம்..

நீங்க ‘திரும்பிப்’ பாத்திருக்கீங்க.
அவங்களோ முன்னாலதான் பாக்கிறாங்க.
இப்பவும் எப்படி வரும் பேச்சு ...?
சுவாசிச்சுப் பாருங்க.
உள்ளே போகலாம் சுடும் பெருமூச்சு.
நீங்களும் எவ்வளவு நேரம்தான் ரிவர்சில நடப்பீங்க. முடியாதில்ல..


விண் நோக்கி
விழி விரிய வைத்த
கணங்கள் என்
மனக் கண்ணில்..





மண்ணில் காணக்
கிடைக்காதது..
ஏனோ விண்ணில்
கண்ட விந்தை


அப்பவும் சரி.. இப்பவும் சரி
’வெள்ளி’தான் உங்க ‘எதிர்’பார்ப்பு.
வெளிப்படையா சொன்னால் ஆகாயத்தில் மிதந்து கலந்திருக்கீங்க. ,(இதை கவிதையில் சொல்லியும் இருக்கீங்க)

கனவு கண்டுகொண்டே வாழ முடியாதுங்க.

கவிதை சொல்லும் நிலைக்குக்காரணம் இப்ப புரிஞ்சிருக்குமே..

கடந்த காலம் ஒரு கண்ணில்
எதிர்காலம் மறுக் கண்ணில்..
நிகழ்காலம்...?

கவிதையின் சிறப்பு என்று பார்த்தால் பயணிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களே தவிர இரு பயணிகள்தான் நடமாடுகிறார்கள். அந்த உணர்வு உயிர்ர்புடன் இருந்து உயிர்ப்பின் இருப்பை உருதி செய்கிறது.

முகங்கள் உரசிக்கொள்ளும் பொழுதில்
அகங்கள் முகம் கழுவிக் கொள்கின்றன
அவ்வப்போது கண்ணீரிலும்.

தாமரை
05-09-2010, 03:59 AM
அமரா,

பொதுவாச் சொல்றேன். காதலானாலும் சரி, மற்றபடி வாழ்வில் வேற வழிகளுலும் சரி... அடிபட்டவங்களுக்கு வாழ்க்கையில் உயரணும் என்ற எண்ணம் இருக்கும் ஆனா ஒரே ஒரு கண்டிஷன்


அடிச்சவன் முன்னால உயரணும் என்று தான் எண்ணம் வரும்..

அவன் முன்னால வாழ்ந்து காட்டணும் என்ற வெறிக்கு காரணம் தழும்புகளை தடவிப் பார்த்தலே!!



ஒரு வார்த்தை
பேசியிருக்கலாமோ??

கடைசி வரிகள் மன்னித்தலைக் காட்டுகின்றன. மன்னிக்கத் தயாராகி விட்டதை.. அந்த எண்ணம் வாழட்டும்,, உயரட்டும்.


உயரப் பறந்த விமானம் தரை இறங்கி இருக்கலாம்.

இனிதான் வாழ்க்கை உயரப் பறக்கும்.

பயணத் துணை என்பது தவறான தலைப்பு எனத் தோன்றுகிறது..

சகபயணி என்றிருந்திருக்கலாமோ?

அமரன்
05-09-2010, 08:41 AM
அண்ணா...

சத்தியமான வார்த்தைகள்..

நீங்கள் சொன்ன மாதிரி தலைப்புத்தான் திசைக்காட்டி.

அதன் வழிதான் வார்த்தைகளின், கோர்வைகளின் கருத்துக் காட்டல்.

தலைப்பின் திசையில் பயணித்தது என் தவறு.

அதை உணர்த்தியது சகபயணியாகி தலைப்பைக் கண்டுபிடித்த நீங்கள்.