PDA

View Full Version : அய்யோ அய்யய் யய்யோ



ஆதவா
02-09-2010, 06:07 PM
1. தீபம் வைக்கத் தெரியாது
திரி திரிக்கத் தெரியாது
அய்யகோ,
போன் அடித்தால்
எடுக்கக் கூட தெரியாது
உனக்கு!!

2. இட்லி சாப்பிட்டேன்
உடல் இளைத்தது
அக்கா நீ செஞ்ச
பிரியாணி சாப்பிட்டேன்
ஊதிடுச்சே!!!

3. கவிதை தவிர
வேற எதுவும்
ஒனக்குத் தெரியாது
கவிதையோடு ஒட்டிகிட்ட உன்னை
பிச்செடுத்தது
யாரு?
யாரு?

4. அரிவாளோடு சுற்றுவாய்
அறிவாளோடு சுற்றுவாய்
மீட்டர் சுட்டாலும்
மேட்டர் சுட்டாலும்
வெட்டுவாய்....
யக்கோவ்!!

தொடருமா?

ஆதவா
02-09-2010, 06:13 PM
5. சொல்லால் அடித்தாய்
சொல்ல வைத்தே அடித்தாய்
சொல்லச் சொல்ல அடித்தாய்
சொல்லம்மா சொல்லொன்று
சொல்லம்மா

6. கத்தாழை குத்தும் என்றார்கள்
அய்யகோ,
கடிக்கிறதே கண்ணழகி!

7. பெருங்கடல்
புதையல்
தோண்டத் தோண்ட
எழுத்துக் குவியல்
ஆமாவா?//

அனுராகவன்
02-09-2010, 08:00 PM
ஆதவா அவர்களே!!
என்னே!! உங்கள் கவிதை...
கொஞ்சம் நயம் கலந்து கலக்கி
விட்டீர்...

ஆதவா
03-09-2010, 04:42 AM
ஆதவா அவர்களே!!
என்னே!! உங்கள் கவிதை...
கொஞ்சம் நயம் கலந்து கலக்கி
விட்டீர்...

எல்லாம் ஒரு காரணமாத்தான்!!!!
படிக்க வேண்டியவங்க படிச்சா
படைச்சதை “ஓ....ஹோ....” என்று சொல்வார்கள்!!! :)

கண்மணி
03-09-2010, 04:51 AM
6. கத்தாழை குத்தும் என்றார்கள்
அய்யகோ,
கடிக்கிறதே கண்ணழகி!

கவிதை ஆறின் நாயகி நான்.
அப்படின்னா இதெல்லாம் மன்ற மக்கள்..

1. தீபம் வைக்கத் தெரியாது
திரி திரிக்கத் தெரியாது
அய்யகோ,
போன் அடித்தால்
எடுக்கக் கூட தெரியாது
உனக்கு!!

இது மலரக்கா!!!
மலர் ஏற்றிய கார்த்திகை தீபம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13532)

2. இட்லி சாப்பிட்டேன்
உடல் இளைத்தது
அக்கா நீ செஞ்ச
பிரியாணி சாப்பிட்டேன்
ஊதிடுச்சே!!!

இது யாருண்ணா..? பிரியாணின்னா யவனிகா அக்கா!! ஊதிய அந்தத் தம்பி யாரு?

3. 3. கவிதை தவிர
வேற எதுவும்
ஒனக்குத் தெரியாது
கவிதையோடு ஒட்டிகிட்ட உன்னை
பிச்செடுத்தது
யாரு?
யாரு?

இது பிச்சி

4. அரிவாளோடு சுற்றுவாய்
அறிவாளோடு சுற்றுவாய்
மீட்டர் சுட்டாலும்
மேட்டர் சுட்டாலும்
வெட்டுவாய்....
யக்கோவ்!!

இது ஓவியாக்கா!!!

5. சொல்லால் அடித்தாய்
சொல்ல வைத்தே அடித்தாய்
சொல்லச் சொல்ல அடித்தாய்
சொல்லம்மா சொல்லொன்று
சொல்லம்மா

இது அல்லிராணி!

7. பெருங்கடல்
புதையல்
தோண்டத் தோண்ட
எழுத்துக் குவியல்
ஆமாவா?

இது தாமரை அண்ணா!

சிவா.ஜி அண்ணாக்கும் பென்ஸ் அண்ணாக்கும், மதி அண்ணாக்கும் இன்னும் கவிதை ரெடியாகலியா?

Narathar
03-09-2010, 05:06 AM
அட! இங்க இப்படி ஒரு மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கா?
கலிகாலம்............... நாராயணா!!!!

சூரியன்
03-09-2010, 05:08 AM
அழகான வரிகள்,
எப்படியெல்லாம் கவிதைகள் எழுதுறீங்க.
அருமை.

ஆதவா
03-09-2010, 05:13 AM
6. கத்தாழை குத்தும் என்றார்கள்
அய்யகோ,
கடிக்கிறதே கண்ணழகி!

கவிதை ஆறின் நாயகி நான்.
அப்படின்னா இதெல்லாம் மன்ற மக்கள்..

1. தீபம் வைக்கத் தெரியாது
திரி திரிக்கத் தெரியாது
அய்யகோ,
போன் அடித்தால்
எடுக்கக் கூட தெரியாது
உனக்கு!!

இது மலரக்கா!!!
மலர் ஏற்றிய கார்த்திகை தீபம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13532)

2. இட்லி சாப்பிட்டேன்
உடல் இளைத்தது
அக்கா நீ செஞ்ச
பிரியாணி சாப்பிட்டேன்
ஊதிடுச்சே!!!

இது யாருண்ணா..? பிரியாணின்னா யவனிகா அக்கா!! ஊதிய அந்தத் தம்பி யாரு?

3. 3. கவிதை தவிர
வேற எதுவும்
ஒனக்குத் தெரியாது
கவிதையோடு ஒட்டிகிட்ட உன்னை
பிச்செடுத்தது
யாரு?
யாரு?

இது பிச்சி

4. அரிவாளோடு சுற்றுவாய்
அறிவாளோடு சுற்றுவாய்
மீட்டர் சுட்டாலும்
மேட்டர் சுட்டாலும்
வெட்டுவாய்....
யக்கோவ்!!

இது ஓவியாக்கா!!!

5. சொல்லால் அடித்தாய்
சொல்ல வைத்தே அடித்தாய்
சொல்லச் சொல்ல அடித்தாய்
சொல்லம்மா சொல்லொன்று
சொல்லம்மா

இது அல்லிராணி!

7. பெருங்கடல்
புதையல்
தோண்டத் தோண்ட
எழுத்துக் குவியல்
ஆமாவா?

இது தாமரை அண்ணா!

சிவா.ஜி அண்ணாக்கும் பென்ஸ் அண்ணாக்கும், மதி அண்ணாக்கும் இன்னும் கவிதை ரெடியாகலியா?

அடடே!! கண்மணி!!! :sprachlos020:
ஏழாம் நம்பர்ல ரெண்டு பேருமே ஒரு தப்பு பண்ணிட்டோம்...

நான் பண்ணின தப்பு அதை ஒழுங்கா எழுதாதது
நீங்க பண்ணின தப்பு எல்லாருமே பெண்களா இருக்கறப்போ, தாமரை அண்ணாவை ஏன் இழுக்கணும்!!!!

பெருங்கடலை சமுத்ரம் நு நினைச்சு எழுதினேன்.... அது அப்படியாயிட்டுது!!!

கண்மணி
03-09-2010, 05:20 AM
..

நான் பண்ணின தப்பு அதை ஒழுங்கா எழுதாதது
நீங்க பண்ணின தப்பு எல்லாருமே பெண்களா இருக்கறப்போ, தாமரை அண்ணாவை ஏன் இழுக்கணும்!!!!


ஏன் பெண்பாவில் அடிபட்டது மறந்து போச்சா?

ஆதவா
03-09-2010, 05:34 AM
ஏன் பெண்பாவில் அடிபட்டது மறந்து போச்சா?

அதுதான் நான் எழுதின கடைசி பா!!!
யப்பா!!!
மறக்க முடியுமாம்மா??

(எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம்...)

ஆதவா
03-09-2010, 06:07 PM
8. எல்லாரும் கூந்தலுக்குச் சூடுவார்கள்
நீ மட்டும் ஏன்
முகத்துக்குச் சூடினாய்?
மாமா கோச்சுக்கப் போறாருக்கோவ்!!

ஆதவா
03-09-2010, 06:16 PM
9. மீன் செய்தேன் சாப்பிடவா,
இறால் வறுத்தேன் வாயில் நறுக்க வா
கோழி அடித்தேன் உனக்காக
தம்பி
கறியை உறித்து தின்ன வா,
தலைக்கறிதான் பிடிக்குமென்றாய்
சமைத்திருக்கிறேன் வாடா
காடை, கவுதாரி, முயல்
அப்பப்பா எதுன்னாலும் தின்பாயே
தின்ன வாடா
என்கிறாயே அக்கா,
புழுக் கறிதான் வேண்டுமென்றேன்
உவ்வே என்கிறாயே??

ஆதவா
03-09-2010, 06:23 PM
10. அடி வாங்கி அலுத்து
கடி தின்று காயப்பட்டு
கொட்டு வாங்கி வீங்கிப் போய்
நொந்து நூடில்ஸ் ஆகி
விழி பிதுங்கி
மொழி வற்றி
அப்பப் பப்பப் பப்பா
முடியலை என்று எஸ்கேப் ஆகி...

சொல்றேன் கேளு!!
கிளி சூப்பு குடி
தெம்பா இருக்கும்.... :D

ஜிங்குசாங்கு
03-09-2010, 08:40 PM
மேலிருந்து படிக்கும்போது ஒன்றும் புரியவில்லை, கண்மணி அவர்களின் பின்னூட்டத்தை படிக்கும் வரை! கலக்கறீங்க ஆதவன்!!

#8. முகத்தை பூக்களால் மறைத்த பூமகள்??

த.ஜார்ஜ்
04-09-2010, 01:05 AM
கைடு புத்தகம் போட்ட கண்மணிக்கு ரொம்ப நன்றி.
அப்பப்ப இது மாதிரி உதவுங்க. நாங்களும் புரிஞ்சிக்க பழகிக்கிறோம்.

தாமரை
04-09-2010, 02:28 AM
10. அடி வாங்கி அலுத்து
கடி தின்று காயப்பட்டு
கொட்டு வாங்கி வீங்கிப் போய்
நொந்து நூடில்ஸ் ஆகி
விழி பிதுங்கி
மொழி வற்றி
அப்பப் பப்பப் பப்பா
முடியலை என்று எஸ்கேப் ஆகி...

சொல்றேன் கேளு!!
கிளி சூப்பு குடி
தெம்பா இருக்கும்.... :D



மீரா --- http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994

தாமரை
04-09-2010, 02:32 AM
9. மீன் செய்தேன் சாப்பிடவா,
இறால் வறுத்தேன் வாயில் நறுக்க வா
கோழி அடித்தேன் உனக்காக
தம்பி
கறியை உறித்து தின்ன வா,
தலைக்கறிதான் பிடிக்குமென்றாய்
சமைத்திருக்கிறேன் வாடா
காடை, கவுதாரி, முயல்
அப்பப்பா எதுன்னாலும் தின்பாயே
தின்ன வாடா
என்கிறாயே அக்கா,
புழுக் கறிதான் வேண்டுமென்றேன்
உவ்வே என்கிறாயே??

இது கலையக்கா!!!

பூமகள்
04-09-2010, 06:44 AM
ஆதவாவின் அனுமதி இருப்பின் என் கவிதையும் இங்கே.. கண்டு பிடிச்சிக்கோங்க..!! :)

# ஆர்பரிக்கும் பேச்சக்கா..
உன் ஆழ்மனம் ஓர் அமுதக்கா..
ஒத்த ரோசா ஆடுதுக்கா உனைக்
காணாம தேடுதுக்கா..
வந்த சோலி முடிஞ்சாலும்
மறுபடி வந்து பாரக்கா....
பராக்கு பாக்கும் கூட்டமுங்கா - இங்கு
நீ வந்தா துள்ளுமக்கா...!!:icon_ush::icon_ush:

ஆதவா
04-09-2010, 06:52 AM
ஆதவாவின் அனுமதி இருப்பின் என் கவிதையும் இங்கே.. கண்டு பிடிச்சிக்கோங்க..!! :)

# ஆர்பரிக்கும் பேச்சக்கா..
உன் ஆழ்மனம் ஓர் அமுதக்கா..
ஒத்த ரோசா ஆடுதுக்கா உனைக்
காணாம தேடுதுக்கா..
வந்த சோலி முடிஞ்சாலும்
மறுபடி வந்து பாரக்கா....
பராக்கு பாக்கும் கூட்டமுங்கா - இங்கு
நீ வந்தா துள்ளுமக்கா...!!:icon_ush::icon_ush:

அனுமதியெல்லாம் எதுக்குங்க... யார்வேணும்னாலும் எழுதலாம்./

இதைப் படிக்கையில ரெண்டு பேர் நினைவுக்கு வராங்க.

சாம்பவி
ஓவியா.

மத்தவங்க கண்டுபிடிக்கிறாங்களான்னு பார்ப்போம்!!!

பூமகள்
04-09-2010, 06:55 AM
ஆதவா அனுமானம் சரியா இல்லையா... :icon_ush::mini023::cool:
மத்தவங்க மத்தத சொல்லட்டும்.. இறுதியில் சொல்றேன். :icon_ush:

தாமரை
04-09-2010, 07:01 AM
ஆதவாவின் அனுமதி இருப்பின் என் கவிதையும் இங்கே.. கண்டு பிடிச்சிக்கோங்க..!! :)

# ஆர்பரிக்கும் பேச்சக்கா..
உன் ஆழ்மனம் ஓர் அமுதக்கா..
ஒத்த ரோசா ஆடுதுக்கா உனைக்
காணாம தேடுதுக்கா..
வந்த சோலி முடிஞ்சாலும்
மறுபடி வந்து பாரக்கா....
பராக்கு பாக்கும் கூட்டமுங்கா - இங்கு
நீ வந்தா துள்ளுமக்கா...!!:icon_ush::icon_ush:

இதுக்கெல்லாம் என்ன டிக்ஷனரியா போடமுடியும்.. மாங்கா, பிரியாணி புகழ யவனிகாதான்...

கீதம்
04-09-2010, 08:13 AM
9. மீன் செய்தேன் சாப்பிடவா,
இறால் வறுத்தேன் வாயில் நறுக்க வா
கோழி அடித்தேன் உனக்காக
தம்பி
கறியை உறித்து தின்ன வா,
தலைக்கறிதான் பிடிக்குமென்றாய்
சமைத்திருக்கிறேன் வாடா
காடை, கவுதாரி, முயல்
அப்பப்பா எதுன்னாலும் தின்பாயே
தின்ன வாடா
என்கிறாயே அக்கா,
புழுக் கறிதான் வேண்டுமென்றேன்
உவ்வே என்கிறாயே??

இது மஞ்சுபாஷிணி அவர்களைக் குறிக்கிறதென்று நினைத்தேன்.

தாமரை
04-09-2010, 09:37 AM
இது மஞ்சுபாஷிணி அவர்களைக் குறிக்கிறதென்று நினைத்தேன்.


சித்தர்கோவில் திரியில் படிங்க!!!

அமரன்
04-09-2010, 11:39 AM
கவிதையைக் கண்டு பிடிச்சுச் சொல்லிட்டீங்க.

தலைப்பூ..

எல்லா அக்காக்களும் கூடி அடித்தௌ துவைக்கும் போது ஆதவா இப்படித்தான் கத்துவார்..அய்யோ.. அய்யய் யய்யோ..

கீதம்
06-09-2010, 01:04 AM
அடிக்கக்கூடிய அக்காக்கள் எல்லாம் மன்றம் வராத தைரியத்தில்தானே ஆதவா ஆரம்பித்திருக்கிறார்?

தாமரை
06-09-2010, 02:11 AM
வராத தைரியமா? ஆதவா, அக்கா கீதத்துக்கு ஒரு பாட்டு போடு...

:lachen001::lachen001::lachen001:

கீதம்
06-09-2010, 04:38 AM
(சொல்லால்) அடிக்கிற அக்காக்களைத்தானே சொன்னேன். இப்ப மன்றத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் நாங்கள் எல்லாம் ரொம்ப அப்பாவி அக்காக்களாக்கும்.

ஆதவா
06-09-2010, 08:30 AM
அடிக்கக்கூடிய அக்காக்கள் எல்லாம் மன்றம் வராத தைரியத்தில்தானே ஆதவா ஆரம்பித்திருக்கிறார்?

ஹாஹா..... இந்த தம்பி மேல கையை வைக்கிற தைரியம்
ஓவிகுட்டிக்கு மட்டும்தான் இருக்கிறது (தப்பிச்சேண்டா சாமி)



வராத தைரியமா? ஆதவா, அக்கா கீதத்துக்கு ஒரு பாட்டு போடு...

:lachen001::lachen001::lachen001:


எழுதி வெச்சாச்சு..
ஆனா உடனே போட்டுட்டா லீக் ஆயிடும்...
தெரியாதமாதிரி பதிக்கனும்!!


(சொல்லால்) அடிக்கிற அக்காக்களைத்தானே சொன்னேன். இப்ப மன்றத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் நாங்கள் எல்லாம் ரொம்ப அப்பாவி அக்காக்களாக்கும்.


அப்பாவி அக்காக்களா இருக்கிறவங்கதான் அடிக்க வாராங்க..
இதுக்கு என்ன சொல்றீங்க

கலையரசி
06-09-2010, 03:03 PM
கவிதைகளைப் படித்து மிகவும் ரசித்தேன். என்னுடையதைப் படித்தவுடன் புரிந்து விட்டது. கண்மணி சொன்ன பிறகே, மன்றத்தின் பழைய அக்காக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
அது சரி. யாரும் ஒங்களை அடிக்க வராதப்போ அபச குணமாய் ஏன் இந்தத் தலைப்பு?
’கவிதை படி,கண்டுபிடி’ என்று மாற்றலாமே! மன்றத்தில் உலவும் எல்லாரையும் பற்றி (அக்காக்கள் & அண்ணன்கள்) புதிர் கவிதை எழுதி கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

பா.ராஜேஷ்
06-09-2010, 07:05 PM
ஏனுங்க தம்பிகளுக்கு எல்லாம் எழுத கூடாதா!!??

கலையரசி
08-09-2010, 12:12 PM
9. மீன் செய்தேன் சாப்பிடவா,
இறால் வறுத்தேன் வாயில் நறுக்க வா
கோழி அடித்தேன் உனக்காக
தம்பி
கறியை உறித்து தின்ன வா,
தலைக்கறிதான் பிடிக்குமென்றாய்
சமைத்திருக்கிறேன் வாடா
காடை, கவுதாரி, முயல்
அப்பப்பா எதுன்னாலும் தின்பாயே
தின்ன வாடா
என்கிறாயே அக்கா,
புழுக் கறிதான் வேண்டுமென்றேன்
உவ்வே என்கிறாயே??

மண்டி போட்டு ஊர்ந்த வயதில்
கண்ணில் பட்ட புழு பூச்சிகளை
வாயில் வைத்துக் கடித்த பழக்கம்
இன்னுமா மாறவில்லை தம்பியுனக்கு?
கண்டதைக் கற்றால்
பண்டிதன் ஆகலாம், ஆனால்
கண்டதைத் தின்ன
ஒவ்வாமை வந்து சேரும்
அக்கா சொல்வது
உன் நன்மைக்கே!
ஆதலின் ஆதவா!
அக்கா சொல்லைத் தட்டாதே!

ஆதி
08-09-2010, 12:26 PM
ஏனுங்க தம்பிகளுக்கு எல்லாம் எழுத கூடாதா!!??

செய்யலாமே :)

அந்த லிஸ்டில் கடைசி தம்பியா நானு..

ஆதவா
08-09-2010, 12:44 PM
கவிதைகளைப் படித்து மிகவும் ரசித்தேன். என்னுடையதைப் படித்தவுடன் புரிந்து விட்டது. கண்மணி சொன்ன பிறகே, மன்றத்தின் பழைய அக்காக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
அது சரி. யாரும் ஒங்களை அடிக்க வராதப்போ அபச குணமாய் ஏன் இந்தத் தலைப்பு?
’கவிதை படி,கண்டுபிடி’ என்று மாற்றலாமே! மன்றத்தில் உலவும் எல்லாரையும் பற்றி (அக்காக்கள் & அண்ணன்கள்) புதிர் கவிதை எழுதி கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

தலைப்பை கண்டுபிடின்னு வெச்சுட்டா அமரன் மாதிரியான ஆளுங்க கண்ணுல வெளக்கெண்ணை ஊத்திட்டு வந்து கண்டுபிடிச்சு கரீட்டா சொல்லிடுவாங்க. அதனால்தான் இப்படி..
இதை படிக்கவேண்டியவங்க யாரும் படிச்சாமாதிரி தெரியலை. அதனால அடிக்க வருவாங்கன்னு நினைக்கிறேன்!!! (அதென்னங்க புதுசா ஒரு குணம்? அபச குணம்?)




ஏனுங்க தம்பிகளுக்கு எல்லாம் எழுத கூடாதா!!??

லேடிஸ் பர்ஸ்ட்..... அதனால்தான்!!


மண்டி போட்டு ஊர்ந்த வயதில்
கண்ணில் பட்ட புழு பூச்சிகளை
வாயில் வைத்துக் கடித்த பழக்கம்
இன்னுமா மாறவில்லை தம்பியுனக்கு?
கண்டதைக் கற்றால்
பண்டிதன் ஆகலாம், ஆனால்
கண்டதைத் தின்ன
ஒவ்வாமை வந்து சேரும்
அக்கா சொல்வது
உன் நன்மைக்கே!
ஆதலின் ஆதவா!
அக்கா சொல்லைத் தட்டாதே!

பூச்சி கடித்தால்
பூஜ்யம் எளிதென்று
ஓவியன் சொன்னதால்....

---------------


பாண்டின்னா சரக்கு
பூச்சி தின்னா கிருக்கு
டாப்கியர்ல முருக்கு
வழியில் கிடைச்சத நொருக்கு
அப்ப பூச்சி?
கலைக்கா வீட்லதான் இருக்கு

(சும்மா... மதி மாதிரி எழுதி பார்த்தேன்!) :D

கலையரசி
08-09-2010, 03:26 PM
அதென்னங்க புதுசா ஒரு குணம்? அபச குணம்?)

ஹா ஹா! அபசகுனம் என்பதைத் தான் அபச குணம் என்று தட்டச்சு செய்து விட்டேன்.

(சும்மா... மதி மாதிரி எழுதி பார்த்தேன்!) :

பொண்ணுன்னா தான் மதியை இழுப்பீங்க, இதுக்கும் மதியா?

ஆதவா
08-09-2010, 03:30 PM
பொண்ணுன்னா தான் மதியை இழுப்பீங்க, இதுக்கும் மதியா?

அய்யோ அய்யய் யய்யோ :eek::lachen001::D:aetsch013::confused::icon_b::cool:

ஆதவா
08-09-2010, 03:31 PM
அதென்னங்க புதுசா ஒரு குணம்? அபச குணம்?)

ஹா ஹா! அபசகுனம் என்பதைத் தான் அபச குணம் என்று தட்டச்சு செய்து விட்டேன்.



அதுவும் ஒரு குணம் தானே!! :icon_b:

கலையரசி
08-09-2010, 03:40 PM
அய்யோ அய்யய் யய்யோ :eek::lachen001::D:aetsch013::confused::icon_b::cool:


இப்போ தலைப்பு சூப்பராப் பொருந்துது! பாவம் மதி!

தாமரை
08-09-2010, 03:53 PM
இப்படி வச்சுக்கலாமா ஆதவா?

பசம் என்றால் பசப்புதல்.. அதாவது சப்பைக் கட்டு கட்டுதல்
அபசம் என்றால் பட்டவர்த்தனமான உண்மை

அபச குணம் என்றால் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் உண்மையை நேரிடையாக உடைத்துச் சொல்லும் குணம்..

கலையரசி
08-09-2010, 04:03 PM
இப்படி வச்சுக்கலாமா ஆதவா?

பசம் என்றால் பசப்புதல்.. அதாவது சப்பைக் கட்டு கட்டுதல்
அபசம் என்றால் பட்டவர்த்தனமான உண்மை

அபச குணம் என்றால் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் உண்மையை நேரிடையாக உடைத்துச் சொல்லும் குணம்..

ஆகா! உங்கள் புண்ணியத்தில் தமிழுக்கு ஒரு புதுச்சொல் கிடைத்து விட்டது!

தாமரை
08-09-2010, 04:43 PM
ஆகா! உங்கள் புண்ணியத்தில் தமிழுக்கு ஒரு புதுச்சொல் கிடைத்து விட்டது!

புண்ணியமா? ஓ பலப்பல உயிகளுக்கும் புண்ணியம் ஹோல்சேல்ல டிஸ்டிரிபியூட் பண்ணறதினால கிடைக்குதே அதுவா?

அப்ப சரி!

govindh
08-09-2010, 05:43 PM
ஆஹா...எப்படியெல்லாம் கவிதையை வடிக்கிறாங்க...!!!

வாழ்த்துக்கள் ஆதவா.