PDA

View Full Version : மருந்தாகியது...........

Nivas.T
02-09-2010, 01:33 PM
அறியா மனது
மண்டியிட்டக் கால்கள்

செய்யாத் தவறு
அடிவாங்கியக் கைகள்

கோணத மனம்
குட்டுப்பட்டத் தலை

காதல் வலி
கதறிய நெஞ்சம்

தோல்வியின் தொடர்ச்சி
கலங்கியக் கண்கள்

வெற்றியில் வீழ்ச்சி
ஏங்கிய நெஞ்சம்

உணர்வின் ஏக்கம்
கசிந்தக் கண்ணீர்

அழிந்த இனம்
நரக வேதனை

புரிந்த மனம்
பொய்யான சோதனை

மறைந்த உறவு
உறைந்த தாக்கம்

குலைந்த நட்பு
விளைந்த நோக்கம்

மருந்தாகியது காலம்

சுடர்விழி
02-09-2010, 03:43 PM
காலம் எல்லாவற்றிற்கும் மருந்தாகிவிடும்...நல்ல கவிதை..பாராட்டுக்கள் !!!

Nivas.T
03-09-2010, 05:37 AM
காலம் எல்லாவற்றிற்கும் மருந்தாகிவிடும்...நல்ல கவிதை..பாராட்டுக்கள் !!!

மிக்க நன்றி சுடர்விழி

ஆதவா
03-09-2010, 07:23 AM
எல்லா காயங்களுக்கும் மருந்து அப்போதே கிடைத்துவிடுகிறது. இல்லையா?
மருந்து = அனுபவம்.

காலம் என்பதே ஒன்று கிடையாது. அது அனுபவங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். (சொல்லலாமா?) சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமிக்கு அது ஒரு அனுபவம்.
நான் டைப்பிக் கொண்டிருக்கும் பொழுது ’க்;கன்னாவை சேர்த்து அடித்து அழித்தால் அதுவும் ஒரு அனுபவமே..

தோல்வியின் தொடர்ச்சி.....
வெற்றியின் வீழ்ச்சி...

இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான். வெற்றி வீழ்ந்தால் தோல்வி.... அது தொடர்ந்தால் தொடர்ச்சி.....

// ஒருமுறை எனக்கு எஸ்.எம்.எஸ் வந்தது.. சரியாக ஞாபகமில்லை..

வெற்றி என்பது வீழ்ச்சிக்கான படி
தோல்வி என்பது எழுச்சிக்கான படி //

நீங்கள் சட்டென்று அடுத்த கட்டத்திற்குள் வந்துவிட்டதாக ஒரு உணர்வு.
பாராட்டுக்கள்!

Nivas.T
03-09-2010, 08:04 AM
எல்லா காயங்களுக்கும் மருந்து அப்போதே கிடைத்துவிடுகிறது. இல்லையா?
மருந்து = அனுபவம்.

காலம் என்பதே ஒன்று கிடையாது. அது அனுபவங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். (சொல்லலாமா?) சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமிக்கு அது ஒரு அனுபவம்.
நான் டைப்பிக் கொண்டிருக்கும் பொழுது ’க்;கன்னாவை சேர்த்து அடித்து அழித்தால் அதுவும் ஒரு அனுபவமே..

தோல்வியின் தொடர்ச்சி.....
வெற்றியின் வீழ்ச்சி...

இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான். வெற்றி வீழ்ந்தால் தோல்வி.... அது தொடர்ந்தால் தொடர்ச்சி.....

நீங்கள் சட்டென்று அடுத்த கட்டத்திற்குள் வந்துவிட்டதாக ஒரு உணர்வு.
பாராட்டுக்கள்!

ஆதவா உங்கள் கூற்றில் ஒரு சிறு வேறுபாடு

காலத்தினால் விளைவது அனுபவம் ஆனால் காலத்தையும் அனுபத்தையும் ஒப்பிட முடியாது

தோல்வியின் தொடர்ச்சி.....
வெற்றியின் வீழ்ச்சி...

இவையிரண்டுமே ஒன்று கிடையாது

தோல்வியின் தொடர்ச்சி.....வெற்றி என்பதை தொடாமல் வரும் தோல்விகள் மட்டுமே

வெற்றியின் வீழ்ச்சி...தொடர்ந்து வெற்றி மட்டுமே கண்டவனின் திடீர் தோல்வி

இரண்டு மனநிலையும் முற்றிலும் மாறுபடும்

தங்கள் கருத்திற்கும்

பாராட்டிற்கும் மிக்க நன்றி :)

சிவா.ஜி
03-09-2010, 08:32 AM
காலம் மட்டுமே எல்லாவற்றுக்கும் மருந்தாகிவிடாது....மறதியும், உறுதியும் சேர்ந்த கலப்பட மருந்து....கைகொடுக்கும்.

சில வரிகளின் பொருந்தாத்தன்மை...கவிதையை வளர்ச்சியடையாக் கவிதையாய் காட்டுவதைத் தவிர்த்து....ஆதவா சொன்னதைப்போல அடுத்த படிக்கு வந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் நிவாஸ்.

Nivas.T
03-09-2010, 08:48 AM

ஒவ்வொரு படியாய்

மிக்க நன்றி அண்ணா

ஆதவா
03-09-2010, 10:23 AM
தோல்வியின் தொடர்ச்சி.....
வெற்றியின் வீழ்ச்சி...

இவையிரண்டுமே ஒன்று கிடையாது

தோல்வியின் தொடர்ச்சி.....வெற்றி என்பதை தொடாமல் வரும் தோல்விகள் மட்டுமே

வெற்றியின் வீழ்ச்சி...தொடர்ந்து வெற்றி மட்டுமே கண்டவனின் திடீர் தோல்வி

வெற்றியில் வீழ்ச்சி
ஏங்கிய நெஞ்சம்

உங்கள் ஏற்புரைக்கு நன்றி நிவாஸ்
வெற்றியில் வீழ்ச்சி என்றால் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையில் வீழ்ந்து தோல்வியடைதல் என்று பொருள்!!! ஆகமொத்தம் தோல்விதான்!!!

Nivas.T
03-09-2010, 11:42 AM
உங்கள் ஏற்புரைக்கு நன்றி நிவாஸ்
வெற்றியில் வீழ்ச்சி என்றால் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையில் வீழ்ந்து தோல்வியடைதல் என்று பொருள்!!! ஆகமொத்தம் தோல்விதான்!!!

உண்மைதான் ஆதவா

தொடர்ந்து வந்த வெற்றியில் இப்பொழுது வீழ்ச்சி என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா ?

தாமரை
03-09-2010, 11:54 AM
வெற்றியில் வீழ்ச்சி என்பது வேற. வெற்றியின் வீழ்ச்சி என்பது வேற...

அததுக்கு வேற அர்த்தம் இருக்கு!!

ஜெயிப்பவர்கள் பலசமயம் அதற்குக் கொடுக்கும் விலை மிக அதிகம்...

Nivas.T
03-09-2010, 01:19 PM
வெற்றியில் வீழ்ச்சி என்பது வேற. வெற்றியின் வீழ்ச்சி என்பது வேற...

அததுக்கு வேற அர்த்தம் இருக்கு!!

ஜெயிப்பவர்கள் பலசமயம் அதற்குக் கொடுக்கும் விலை மிக அதிகம்...

:confused:

:D:D:D

உமாமீனா
15-02-2011, 05:38 AM
காலம் எல்லா புண்ணுக்கும் மருந்திடும்

Nivas.T
20-02-2011, 02:52 PM
காலம் எல்லா புண்ணுக்கும் மருந்திடும்

உண்மைதான் உமாமீனா
மிக்க நன்றி