PDA

View Full Version : காக்கைகளுக்கு இப்போது வேலை இல்லை

அகத்தியன்
02-09-2010, 09:45 AM
அப்போதெல்லாம் அப்பாவின் கடிதங்கள் பற்றி
அம்மா
காக்கைகளிடம்தான் முறையிடுவாள்.
வேலிகளில் அமர்ந்தவாறு,
தலையினை சாய்த்து
அது கரைய தொடங்கும் அக்கணம்
அவளின் முகம் பிரகாசிக்கும் – ஏதோ சங்கீதம் கேட்ட மாதிரி
அவளின் எதிர்பார்ப்பு அனேகமாய் வீணாகாது
அடுத்த நாள் தபால்காரன் மணியடிப்பான்.
அப்பாவின் கடிதத்தோடு…

காலம் மாறி உலகு சுருங்க,
காக்கைகளுக்கு வேலை இல்லை.
அவைகள் பற்றி அம்மாக்கள் அலட்டுவதுமில்லை.

Narathar
02-09-2010, 10:10 AM
அருமை!

நிதர்சனமான உண்மை பாராட்டுக்கள்

Nivas.T
02-09-2010, 12:33 PM
நல்லக் கவிதை

ஆதி
02-09-2010, 12:52 PM
இப்படி மாறிய விஷயங்கள் பல, இணைய வளச்சியால் பல விஷயனக்களை இழக்கவும் செய்திருக்கிறோம்..

பாரதிதாசனின் விருந்தினர் வருகையை அறிவிக்கும் காக்கையை பற்றிய கவிதை ஞாபகத்துக்கு வந்தது.

பாராட்டுக்கள் அகத்தியன்

கலையரசி
02-09-2010, 02:14 PM
காக்கைகளும் சிட்டுக்குருவிகளும் நம் குடும்ப அங்கத்தினர் போல நம் வீட்டைச் சுற்றி வசித்த காலம் மறைந்து விட்டது. எத்தனையோ இழப்புகளில் இதுவும் ஒன்று.
நல்ல கவிதை. பாராட்டுக்கள் அகத்தியன்!

தாமரை
02-09-2010, 02:53 PM
இப்பல்லாம் செத்துப் போனவங்களுக்குத் தூதா காக்கைகளை அனுப்பிகிட்டு இருக்கோம்..

அதான் எல்லாம் செத்து செத்துப் போகுது போல...

சுடர்விழி
02-09-2010, 03:59 PM
கவிதை ரொம்ப நல்லா இருக்கு.பாராட்டுக்கள் அகத்தியன்!

த.ஜார்ஜ்
02-09-2010, 04:09 PM
இழப்புகளை இப்போது நினைத்துக் கொண்டிருக்க கவிதையாவது இருக்கிறது. பின்னொரு நாளில் இதுவும் இழ்ந்து போக நேரலாம்.

பூமகள்
02-09-2010, 04:28 PM
இழந்தது காக்கை மட்டுமா.. சிட்டுக் குருவியின் வருகை.. இப்போது காணக் கிடைக்காத அரிய காட்சி.. என் குழந்தைக்குக் காட்ட இங்கு குருவியில்லை..:frown::frown:

மைனா.. சிட்டுக் குருவி.. கிளி.. எங்கே அவை இன்று....

மனதை கனக்க வைத்த கவிதை.. நிஜம் நிஜமாகவே சுடுகிறது. பாராட்டுகள் அகத்தியன்.

சிவா.ஜி
02-09-2010, 04:44 PM
காக்கைகளின் கரைதலில்....விருந்தினரின் வருகையை சந்தோஷமாகவும், சலிப்பாகவும் அடையாளம் கண்ட காலங்கள் இருந்ததுண்டு.....

ஜார்ஜ் சொன்னதைப்போல...இழந்ததை நினைவு கூற இப்போது கவிதைகளாவது இருக்கிறது....பின்னாளில் எப்படியோ.

அழகான...நிறைவான கவிதை. வாழ்த்துக்கள் அகத்தியன்.

சுகந்தப்ரீதன்
02-09-2010, 08:17 PM
காலமாற்றத்தில் கரைந்து போனவற்றில் காக்கைகளும் உண்டு.!!:D

நல்லதொரு கவிதை.. நன்று அகத்தியன்..!!

கீதம்
03-09-2010, 12:18 AM
காக்கை கரையலுக்கு விருந்தினரை எதிர்பார்த்து நானும் தம்பியும் வாசலில் காத்திருந்த இளவயதுக் காலங்கள் நினைவுக்கு வந்தன.நிகழ்காலம் பற்றிய நிதர்சனம் சொல்லும் கவிதைக்குப் பாராட்டுகள்.

ஆதவா
03-09-2010, 06:47 AM
காக்கைகளும் சிட்டுக்குருவிகளும் நம் குடும்ப அங்கத்தினர் போல நம் வீட்டைச் சுற்றி வசித்த காலம் மறைந்து விட்டது. எத்தனையோ இழப்புகளில் இதுவும் ஒன்று.
நல்ல கவிதை. பாராட்டுக்கள் அகத்தியன்!

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க....
எங்க வீட்ல எத்தனை காக்கா” பாருங்க!!!

http://tamilmantram.com/vb/picture.php?albumid=63&pictureid=266

அகத்தியன்.... கவிதை நன்று!

அலைபேசி (அது ஆக்சுவலா கொலைபேசி) வந்த பிறகு “சுவாரஸியம்” இல்லாமல் போயிற்று!!!
நான் சின்ன வய்தில் எங்கள் வீட்டுக்காரம்மா சொல்லச் சொல்ல கடிதம் எழுதுவேன். (அங்குள்ள மற்ற யாவருக்கும் கடிதம் எழுதத் தெரியாது)
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்... கடைசியாக ஒரு உறவினனுக்கு, கடிதம் எப்போது எழுதினேன்??

வாழ்த்துக்கள்

தாமரை
03-09-2010, 06:48 AM
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்... கடைசியாக ஒரு உறவினனுக்கு, கடிதம் எப்போது எழுதினேன்??

வாழ்த்துக்கள்

நான் கடைசியா கடிதம் எழுதினது...

அனிருத்துக்கு,, அதாங்க ஸ்கூல் லீவ் லெட்டர்

ஆதவா
03-09-2010, 06:52 AM
நான் கடைசியா கடிதம் எழுதினது...

அனிருத்துக்கு,, அதாங்க ஸ்கூல் லீவ் லெட்டர்

அண்ணா.... அது லிஸ்ட்ல சேராது...
அப்பறம் நான் பி.எஸ்.என்.எல் க்கு எழுதிய கடிதமெல்லாம் சொல்லுவேன்!!! \ஹாஹா :D

சூரியன்
03-09-2010, 06:56 AM
எனக்கு தெரிஞ்சு நான் கடிதம் எழுதியதே இல்லை.
(எனக்கும் எழுதனும்னு ஆசை ஆனா நான் எழுதி அத படிக்கரவங்க நிலைமைய நினைச்சா பாவம்மா இருக்கு.):D

Ravee
03-09-2010, 07:16 AM
அகத்தியன் அவசியம் நீங்க எங்க வீட்டுக்கு வரணும் , காலை ஆறு மணிக்கு எழுந்தால் எங்க வீட்டில் அம்மாவும் பொண்ணும் காக்கை, மைனா, தெருநாய் பூனை, ஆடு, வண்டிமாடு என எல்லாத்தோடயும் பேசிட்டு இருப்பாங்க அவங்களுக்கு அற்ப ஜந்து நான்தான். :medium-smiley-100:

ஆதவா
03-09-2010, 07:28 AM

:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-075::medium-smiley-080::medium-smiley-002:

சூரியன்
03-09-2010, 07:38 AM
:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-075::medium-smiley-080::medium-smiley-002:

இதுல ஏன் இவ்வளவு சந்தோசம்.
அவர நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருதா?:rolleyes:

ஆதி
03-09-2010, 07:42 AM
நான் என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த பாரதிதாசனின் கவிதையையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்..

மூட நம்பிக்கை

காக்கைசொல் நம்பிக் காசைமட்டும் போக்கடிக்காதே!

காக்கை இறைப்பில் கத்திக் கிடந்தது
வீட்டுக் காரன் கேட்டுக் வருந்தினான்
பறந்தது காக்கை சிறிதுநேரத்தில்
மறந்த நண்பன் வந்தான் விருந்தாய்!

மற்றும் ஒருநாள் வந்து காக்கை
கத்திக் கிடந்தது -- கடிதில் ஒருவன்
விருந்தாய் வந்தான் வீட்டுக் காரன்
தெரிந்து கொண்டான் காக்கையின் திறமையை

ஒருநாள் விருந்தினர் ஒன்பது பேர்கள்
வரலானார்கள் வருவதன் முன்பு
காக்கை எதுவும் கத்தவேயில்லை.
காக்கை மறந்ததாய்க் கருதினான் வீட்டினன்!

ஒருநாள் காக்கை ஓயாது கத்தவே
வரும்விருந்தென்று வழிபார்த் திருந்தான்

அஞ்சு மணிவரை ஆருமே வருகிலர்
அஞ்சல் வந்தது அயலூரி னின்றும்
ஒருவன் வருவதும் ஓலை வருவதும்
சரிநிகர் என்று தான்நினைத் திருந்தான்!
நாளை வருவதாய் நண்பன் ஒருவன்
ஆள்ஒரு வனிடம் அஞ்சல் அனுப்பினான்.
மறுநாள் காக்கையும் வாய்ப்பறை அறைய
அறிவித் தபடி அவனும் வந்தான்.
மாரி யம்மன் தேருக்கு நண்பன்
காரூரினின்று கடிது வருவான்
என்று நினைந்துகொண் டிருந்தான் வீட்டினன்.
அன்று காக்கையின் அறிக்கை தன்னை
நோக்கி யிருந்தான் காக்கையும் வந்தது,
காக்கா காக்கா என்றுகத்தியது.
மனைவியை அழைத்து வருபவனுக்குத்
தனியே ஒருபடி சமைஎனச் சொன்னான்.
காக்கை மேலும் கத்தியே கிடந்தது
நோக்கியே துப்பாக்கியோடு ஒருவன்
அண்டைவீட் டின்மேல் அமைவாய் வந்து
குண்டு பாய்ச்சிக் கொன்றான் காக்கையை!
கரிய காக்கை கழறிய வண்ணம்

வீட்டுக் காரனே விளம்புவேன் கேட்பாய்!
மோட்டுக் காக்கை முழங்குவதுண்டு,
மக்கள் விருந்தாய் வருவதுண்டு
மும்முறை அன்று முந்நூறு தரம்!
இம்முறை சரியாய் இயலுவதுண்டு.
காக்கைசொல் நம்பிக் காசை மட்டும்
போக்கடிக்காதே புகல்வேன் இன்னும்
தன்பின் தொடரும் சாவை அறியாக்
கன்னங்கரிய காக்கையா அறியும்
இல்லிடை விருந்து வருவதை?
நல்லதா மூடநம்பிக்கையதே?

Ravee
03-09-2010, 07:55 AM
:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-075::medium-smiley-080::medium-smiley-002:

ம்ம் உனக்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே ... :p
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகனே ...:icon_dance::whistling:

ஆதவா
03-09-2010, 08:02 AM
பகிர்வுக்கு நன்றி ஆதி.

என் அம்மாகூட சொல்வார்கள்... காக்காய் கத்தினா வீட்டுக்கு விருந்தாளிங்க வருவாங்க என்று..
எல்லா சமயமும் நடந்துவிடும்/
ஆனால் எல்லா நாட்களிலும் கரைவதை கவனிக்கமாட்டார்கள்!!!!

கலையரசி
03-09-2010, 01:53 PM
[QUOTE=ஆதவா;490087]என்னங்க இப்படி சொல்லிட்டீங்க....
எங்க வீட்ல எத்தனை காக்கா” பாருங்க!!!

http://tamilmantram.com/vb/picture.php?albumid=63&pictureid=266

படம் எதுவும் வெளியிட்டுள்ளீர்களா? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே?

ஆதவா
03-09-2010, 02:35 PM
இப்போ தெரியிதுங்களா?

கலையரசி
03-09-2010, 03:05 PM
இப்போ தெரியிதுங்களா?

நன்றாகத் தெரிகிறது. காகங்கள் கூட்டமாயிருப்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது!

த.ஜார்ஜ்
03-09-2010, 05:30 PM
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க....
எங்க வீட்ல எத்தனை காக்கா” பாருங்க!!!

http://tamilmantram.com/vb/picture.php?albumid=63&pictureid=266

ரொம்பவே காக்கா பிடிப்பீங்க போலிருக்கு.

ஆதவா
03-09-2010, 05:49 PM
ரொம்பவே காக்கா பிடிப்பீங்க போலிருக்கு.

அதென்னவோ தெரியலை சிலசமயம் எங்க வீட்டு மாடிக்கு மேல காக்கா கூட்டம் நிறைய இருக்கும்.... நமக்கும் ஆர்வக் கோளாறாச்சா,,,, போட்டோ அப்பப்ப எடுப்போம்... இதிலென்ன கொடுமைன்னா, நல்ல சமயங்கள்ல கேமரா கையில் இருக்காது.... ஒண்ணூமே இல்லாத நேரத்தில கேமரா சும்மா கிடக்கும்... (மொதல்ல ஒரு பெரிய்ய்ய கேமராவை வாங்கணும்!!)

இந்த ஷாட்டை எடுக்க எத்தனை சிரமப் பட்டேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்!!!

http://farm4.static.flickr.com/3429/3883454362_d8660574f0.jpg

அமரன்
03-09-2010, 09:36 PM
கடிதக் காலத்தில் குரலைக் கேட்கும் அங்கலாய்ப்பு.

குரலில் குலாவும் காலத்தில் அந்தக்காலம் போல் வருமா என்ற ஆயாசம்.

இந்த இரண்டுக்கும் நடுவில் சிக்குண்டது என்னவோ அன்புதான்/

கடிதத்தில் கை தடவி மகனின் ஸ்பரிசம் அனுபவித்த அம்மாவையும் கண்டிருக்கிறேன்.

குரலின் தட்ப வெப்ப நிலையை உணர்ந்து உறவாடிய தாயையும் கண்டிருக்கிறேன்.

இரு தாயின் முகத்திலும் திருப்தியும் அதிருப்தியும் மலைமுகட்டு வானிலைபோல் இருப்பதையும் கண்டிருக்கிறேன்.

பாராட்டுகள் அகத்தியன்.

அம்மா சந்தோசமாக இருக்கிறார் அல்லவா.

த.ஜார்ஜ்
04-09-2010, 01:11 AM
ஆதவா..
இப்படிதான் வெயில்ல அந்த காகத்தை காய வைக்கிறதா.. கறுத்து போயிடும் செல்லம்.

ஆதவா
04-09-2010, 04:05 AM
ஆதவா..
இப்படிதான் வெயில்ல அந்த காகத்தை காய வைக்கிறதா.. கறுத்து போயிடும் செல்லம்.

அடடா/.. அது உங்கள் செல்லம் என்று தெரியாமல் போயிற்றே!!! :aetsch013:

அகத்தியன்
04-09-2010, 05:38 AM
கடிதக் காலத்தில் குரலைக் கேட்கும் அங்கலாய்ப்பு.

குரலில் குலாவும் காலத்தில் அந்தக்காலம் போல் வருமா என்ற ஆயாசம்.

இந்த இரண்டுக்கும் நடுவில் சிக்குண்டது என்னவோ அன்புதான்/

கடிதத்தில் கை தடவி மகனின் ஸ்பரிசம் அனுபவித்த அம்மாவையும் கண்டிருக்கிறேன்.

குரலின் தட்ப வெப்ப நிலையை உணர்ந்து உறவாடிய தாயையும் கண்டிருக்கிறேன்.

இரு தாயின் முகத்திலும் திருப்தியும் அதிருப்தியும் மலைமுகட்டு வானிலைபோல் இருப்பதையும் கண்டிருக்கிறேன்.

பாராட்டுகள் அகத்தியன்.

அம்மா சந்தோசமாக இருக்கிறார் அல்லவா.

நன்றிகள் அமரா, அனைவரும் நலம்...

பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கு நன்றிகள்

Ravee
04-09-2010, 06:21 AM
அதென்னவோ தெரியலை சிலசமயம் எங்க வீட்டு மாடிக்கு மேல காக்கா கூட்டம் நிறைய இருக்கும்.... நமக்கும் ஆர்வக் கோளாறாச்சா,,,, போட்டோ அப்பப்ப எடுப்போம்... இதிலென்ன கொடுமைன்னா, நல்ல சமயங்கள்ல கேமரா கையில் இருக்காது.... ஒண்ணூமே இல்லாத நேரத்தில கேமரா சும்மா கிடக்கும்... (மொதல்ல ஒரு பெரிய்ய்ய கேமராவை வாங்கணும்!!)

இந்த ஷாட்டை எடுக்க எத்தனை சிரமப் பட்டேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்!!!

http://farm4.static.flickr.com/3429/3883454362_d8660574f0.jpg

வெளுத்துக்கட்டும் சூரியனுள் கருத்த காகம் கொஞ்சம் கூட பிசிறாமல் லைட்டிங் என்ன செட் செய்தீர்கள் ஆதவா அருமை அருமை

சூரியனின் பையன்தான் சனிபகவான்., இருவருக்கும் ஆகாதாம் ( எல்லார் வீட்டிலும் நம்ப வீடு போலத்தானா ) ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து புண்ணியம் தேடிக் கொண்டீர்களே ஆதவா ... நல்ல படம் வாழ்த்துக்கள் :icon_b:

ஆதவா
04-09-2010, 06:40 AM
வெளுத்துக்கட்டும் சூரியனுள் கருத்த காகம் கொஞ்சம் கூட பிசிறாமல் லைட்டிங் என்ன செட் செய்தீர்கள் ஆதவா அருமை அருமை

சூரிய பகவான் இருக்க, வேறெந்த லைட்டிங்கும் சிறந்தது கிடையாதே!!!

இது படத்தின் பின்தகவல்.:

Exposure : 1/2000 (-2EV)
Aperture : f/7.1
Focal Length : 5.8 mm
ISO Speed : 80
Camera : Canon PowerShot A550

சூரியனின் பையன்தான் சனிபகவான்., இருவருக்கும் ஆகாதாம் ( எல்லார் வீட்டிலும் நம்ப வீடு போலத்தானா ) ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து புண்ணியம் தேடிக் கொண்டீர்களே ஆதவா ... நல்ல படம் வாழ்த்துக்கள் :icon_b:

அதான் சூரியனைப் பார்த்துட்டு தலையை திருப்பிடுச்சே..... :sprachlos020: கவனிக்கலையா நீங்க?

கலையரசி
04-09-2010, 12:56 PM
கறுப்பு காகத்தைச் சுற்றி ஓர் ஒளி வட்டம்! படம் அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்!