PDA

View Full Version : காலம்simariba
02-09-2010, 05:45 AM
கடந்த காலமெனும்
நினைவுகளிலும்

எதிர்காலமெனும்
கற்பனைகளிலும்

நிகழ்காலமெனும்
நிஜத்தை

நின்று ரசிக்காமல்
ஓடி ஓடி எதையோ
தேடுகிறோம்

எதைத்தேடுகிறோம்
என நினைத்துப்பார்த்தால்

பணம், பதவி, சொத்து,
வெற்றி, அங்கிகாரம்

இப்படி
ஏதுவோ ஒன்று

கிடைத்ததா? என்றால்
இல்லவே இல்லை

கிடைத்தாலும்
அதை நினைக்க
நேரமேயில்லை

ஒன்றன் பின் ஒன்றாக
நம் இலக்குகள்
மாற மாற

தேடல் மட்டும்
ஓய்ந்தபாடில்லை

தேடலும் ஓடலும்
தவறேயில்லை

வாழ்வின் ஒளியே
அவைதான்

நிகழ்காலமெனும்
நிஜத்தில்
நின்று
நிதானமாய்

கடந்த காலத்தில்
இருந்து பாடத்தையும்

எதிர்காலத்திலிருந்து
இலக்கையும்

தவிர வேறெதையும்
நிகழ்காலத்தில்
சுமக்காமல்

வாழ்வை ரசிப்போம்
ரசித்தபடியே
ஓடுவோம்
தேடுவோம்

வெற்றியை
கொண்டாடுவோம்

nambi
02-09-2010, 06:08 AM
கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!
..................................
''நிகழ்காலமெனும்
நிஜத்தில்
நின்று
நிதானமாய்

கடந்த காலத்தில்
இருந்து பாடத்தையும்


எதிர்காலத்திலிருந்து
இலக்கையும்

தவிர வேறெதையும்
நிகழ்காலத்தில்
சுமக்காமல்''

மேலே கூறியவைகளே சுமைகள் தான்....? அதை மறந்துவிட்டு எப்படி....? துறப்பது போல் துறந்து....பின் ஏற்றுக்கொள்வதா...?

simariba
02-09-2010, 06:23 AM
பின்னூட்டத்துக்கு நன்றி நம்பி!

"மேலே கூறியவைகளே சுமைகள் தான்....? அதை மறந்துவிட்டு எப்படி....? துறப்பது போல் துறந்து....பின் ஏற்றுக்கொள்வதா...?"

அவற்றையும் விட்டு விட முடியுமானால்
துன்பமே இல்லை வாழ்வில்...
ஆனால் எல்லோரும் முனிவர்களல்லவே!

சுடர்விழி
02-09-2010, 07:25 AM
நல்ல கவிதை அபி !!(ரொம்ப நாளா மன்றத்துப் பக்கம் உங்களைக் காணவில்லையே..’உங்களை இங்கே தேடுகிறார்கள்’ பகுதியில் விசாரிக்கலாம் என்று நினைத்தேன்..)


தேடல் மட்டும்
ஓய்ந்தபாடில்லை

தேடல் ஓய்ந்து விட்டால் வாழ்வு அர்த்தமற்று போய் விடும்...நல்ல வரிகள்..பாராட்டுக்கள் தோழி!!

சிவா.ஜி
02-09-2010, 09:10 AM
கவிதை சொல்லும் கருத்து யோசிக்கவேண்டியதே. நிகழ்கால நிஜத்தை ரசிக்கக்கூட நேரமின்றி, தேடலும், ஓடலுமாய்...நகரும் வாழ்க்கையில்...சரியான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு....நிகழ்காலத்தையும் ரசித்துக்கொண்டு சென்றால்....நம் இருப்பு இனிக்கும்.

நீண்டநாட்களுக்குப் பிறகு அருமையான கவிதையோடு மன்றம் வந்த அபிக்கு வாழ்த்துக்கள்.

Nivas.T
02-09-2010, 11:33 AM
அழகான கவிதை
வாழ்த்துக்கள்!!!!

கலையரசி
02-09-2010, 01:58 PM
எங்கே அபி ரொம்ப நாளா ஆளையே காணோம்? நலந்தானே?

இன்றைய அவசர உலகத்தில் தேடுவதும் ஓடுவதுமே வாழ்க்கை என்றாகிவிட்டது. தேடலுக்கும் ஓடலுக்கும் இடையே கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு இன்றைய வாழ்க்கையையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் தான்.
நல்லதொரு கருத்தைச் சொல்லும் கவிதை. பாராட்டுக்கள் அபி!

ஆதவா
02-09-2010, 04:22 PM
நினைவுகளை
நிஜத்தால்
கற்பனைசெய்து
தேடுகிறோம்.
தேடியது கிடைக்கவில்லை
ஆனாலும்
ஓய்ந்தபாடில்லை
நினைவுகளின் நிஜத்தையும்
கற்பனையின் நினைவுகளையும்
தவிர வேறேதுமின்றி
வெற்றி பெறுவோம்!!

சும்மா... கவிதையை சுருக்கிப் பார்த்தேங்க.

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க..... வாங்க வாங்க...
உங்களைத் தேடித் தேடி நீங்களும் தேடலோடு வந்திட்டீங்க...

சுகந்தப்ரீதன்
02-09-2010, 08:24 PM
ஜீவனுள்ள வாழ்வைத் தேடி
ஜீவனை தொலைத்து விட்டு
ஜீவிதமாய் திரியும்...
ஜீவன்கள் நாம்...!!

எப்பவோ நான் எழுதியது இப்போது ஞாபகத்தில்..!!

பொருளினை தேடிடும் பொருளற்ற வாழ்க்கை... பொறுத்துக் கொள்ளுங்கள்...!!:D

கவிதைக்கு என் வாழ்த்துக்கள்.!!

கீதம்
03-09-2010, 12:24 AM
தேடலே சுகம் என்பது ஒருவகை. தேடலின் முடிவில் சுகம் என்பது வேறுவகை. மாறிக்கொண்டிருக்கும் இலக்குகளைக் கொண்டு தேடலின் முடிவை நிர்ணயிக்கமுடியாது. பொருள் செறிந்த கவிதைக்கு என் பாராட்டுகள், அபி.

simariba
03-09-2010, 12:30 AM
மிக்க நன்றி நண்பர்களே!
வலையில் என் நேரம்
எல்லையில்லாமல் போக
எனக்கு நானே போட்டுக்கொண்ட
தடையால் மின்னஞ்சல் தவிர
வேறெங்கும்
வருவதேயில்லை.
மன்றத்திலேயே நிறைய
இருக்கிறது படிக்க!
இந்த இடைவேளையில்
செய்தது என்னவென்றால்..
http://tamizcholai.blogspot.com/2010/07/blog-post_17.html

ஆதவா
03-09-2010, 05:04 AM
மிக்க நன்றி நண்பர்களே!
வலையில் என் நேரம்
எல்லையில்லாமல் போக
எனக்கு நானே போட்டுக்கொண்ட
தடையால் மின்னஞ்சல் தவிர
வேறெங்கும்
வருவதேயில்லை.
மன்றத்திலேயே நிறைய
இருக்கிறது படிக்க!
இந்த இடைவேளையில்
செய்தது என்னவென்றால்..
http://tamizcholai.blogspot.com/2010/07/blog-post_17.html

நல்லா இருக்கே!!! :icon_b:
பேசன் தோடுகள்!!!

நீங்கள் ஏன் இதைப் பற்றி பதிவு எழுதக்கூடாது????
நாங்களும் எங்கள் மனைவிமார்களுக்கு செய்து காண்பித்து அன்பை பெறுவோமே!!! :D

சூரியன்
03-09-2010, 05:14 AM
நீங்கள் ஏன் இதைப் பற்றி பதிவு எழுதக்கூடாது????
நாங்களும் எங்கள் மனைவிமார்களுக்கு செய்து காண்பித்து அன்பை பெறுவோமே!!! :D

எல்லாரும் இதைக்கொஞ்சம் கவனீங்க.:sprachlos020:

simariba
03-04-2011, 01:35 PM
நன்றி ஆதவா! முயற்சி செய்கிறேன்! ரொம்ப நாளாக இதை பார்க்கவில்லை நான்!
நன்றி சூரியன்!

muthuvel
17-04-2011, 05:45 AM
அருமை பாராட்டுக்கள்

இளசு
17-04-2011, 10:03 PM
வாழ்வின் வேதம்..
எளிய பாடலாக..


பாராட்டுகிறேன்.

ஜான்
18-04-2011, 05:36 PM
live today
என்று ஒருவரியில் சொல்லிவிடலாம்
ஆனால் சந்தம் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்