PDA

View Full Version : தூறல் மழைக் காலம்



M.Rishan Shareef
02-09-2010, 05:42 AM
தூறல் மழைக் காலம் (http://mrishanshareef.blogspot.com/2010/09/blog-post.html)

குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்

மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை

அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்

தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்

நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
09012010

நன்றி
# வீரகேசரி வார இதழ் 22.08.2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

வியாசன்
02-09-2010, 06:10 AM
உங்களுடன் சேர்ந்து நானும் மழைக்காலத்தை இரசித்தேன்

nambi
02-09-2010, 06:17 AM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

ஆதவா
05-09-2010, 01:54 AM
மனசுதான் ரிஷான்.
மனம் குளுகுளுவெனெ இருந்தால் அதனுள்ளே இருப்பவர்கள் கட்டியணைத்தபடி இருப்பார்கள்...
ஓவரா சம்மரடிச்சா...... தூசிகூட இருக்காது!

நீ என்பது நீயாக மட்டுமில்லை. நீ, யாராகவேண்டுமானாலும் இருக்கலாம். (எதுவாகவும்)
அந்த ஆதங்கம் எல்லாருக்கும் நிகழ்வதுதான் ரிஷான்.
ஒரு கதகதப்பான அந்த மாலைப் பொழுதில் அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே ‘நீ’ யாக இருந்தது என் அண்ணன்.
என் அம்மாவுக்கு அது “பகவான் கிருஷ்ணன்”

வாழ்த்துக்கள் ரிஷான்.

Nivas.T
05-09-2010, 05:32 AM
பருவகாலங்களில் எனக்குப் மிகவும் பிடித்த மழைக்காலம், ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு எண்ணத்தின் சாரல் என்னுள் வீசிக்கொண்டே இருக்கும், அதனை அனுபவிக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழத்தூண்டும்.

நன்றி ரிஷான்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
08-09-2010, 03:20 PM
கவிதைக்கான சூழலை தேர்வுசெய்த விதமும் அதை வருடித்த உணர்வுகளும் மிக்க நன்று ரிஸான்.

பாரதி
11-09-2010, 11:34 AM
எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் போது இறுதி வரிகள் தேவையான வடிவைத் தந்திருக்கிறது.

தூறல் காலம் தொடர்மழை காலமாகட்டும் நண்பரே.

M.Rishan Shareef
15-09-2010, 05:07 AM
அன்பின் வியாசன்,

//உங்களுடன் சேர்ந்து நானும் மழைக்காலத்தை இரசித்தேன்//

:-)
நன்றி நண்பரே !

M.Rishan Shareef
15-09-2010, 05:12 AM
அன்பின் நம்பி,

//கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!//

கருத்துக்கு நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef
15-09-2010, 05:14 AM
அன்பின் ஆதவா,

//மனசுதான் ரிஷான்.
மனம் குளுகுளுவெனெ இருந்தால் அதனுள்ளே இருப்பவர்கள் கட்டியணைத்தபடி இருப்பார்கள்...
ஓவரா சம்மரடிச்சா...... தூசிகூட இருக்காது!

நீ என்பது நீயாக மட்டுமில்லை. நீ, யாராகவேண்டுமானாலும் இருக்கலாம். (எதுவாகவும்)
அந்த ஆதங்கம் எல்லாருக்கும் நிகழ்வதுதான் ரிஷான்.
ஒரு கதகதப்பான அந்த மாலைப் பொழுதில் அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே ‘நீ’ யாக இருந்தது என் அண்ணன்.
என் அம்மாவுக்கு அது “பகவான் கிருஷ்ணன்”//

மிக அருமையான, அழகான கருத்து ஆதவா.

//வாழ்த்துக்கள் ரிஷான்.//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef
15-09-2010, 05:16 AM
அன்பின் த.நிவாஸ்,

//பருவகாலங்களில் எனக்குப் மிகவும் பிடித்த மழைக்காலம், ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு எண்ணத்தின் சாரல் என்னுள் வீசிக்கொண்டே இருக்கும், அதனை அனுபவிக்க ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழத்தூண்டும்.

நன்றி ரிஷான்//

எனக்கும் தான்..மழை..உள்ளும் புறமும் குளிர்மையைத் தூண்டும்..ஈர வாசனை மனதை நெகிழ்விக்கும் எப்பொழுதும்..!

கருத்துக்கு நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef
15-09-2010, 05:17 AM
அன்பின் எஸ்.எம். சுனைத் ஹஸனீ,

//கவிதைக்கான சூழலை தேர்வுசெய்த விதமும் அதை வருடித்த உணர்வுகளும் மிக்க நன்று ரிஸான்.//

:-)
கருத்துக்கு நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef
15-09-2010, 05:18 AM
அன்பின் பாரதி,

//எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் போது இறுதி வரிகள் தேவையான வடிவைத் தந்திருக்கிறது.

தூறல் காலம் தொடர்மழை காலமாகட்டும் நண்பரே.//

உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும்.
கருத்துக்கு நன்றி நண்பரே :-)