PDA

View Full Version : நான் இந்த வண்டில வரல...



த.ஜார்ஜ்
01-09-2010, 05:47 PM
அந்த கூட்டத்தில் தெரியாதனமாக மாட்டிக்கொண்டேன்.
மாலை நேரத்தில் ஜான்சன் தொலைபேசியில் கூப்பிட்டான். “வீட்டுலதானே இருக்க”
“ஆமா. “ என்று தெரியாதனமாக சொல்லிவிட்டேன்.
“அங்கேயே இரு.இப்ப வரேன்.”

விளக்கு வைக்கிற நேரத்தில் புத்தம் புதிய காரில் வந்து தெருவை மிரள விட்டான். காரில் அலறிய பாட்டுக்கு போட்டியாக நாய்கள் குரைத்தன.
அவன் நண்பன் புதிய கார் வாங்கியிருக்கிறானாம். அதை ‘கொண்டாடி’ விட்டு வந்திருக்கிறார்கள். என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டுமாம். மெனக்கெட்டு வந்திருக்கிறான்.

வந்தவர்கள் வீட்டை இரண்டாக்கினார்கள்.

அவன் நண்பன் வெளிநாட்டில் வேலையிருப்பதாகச் சொன்னான். அவன் என் மனைவியைப் பார்த்து உங்கள் பெயர் A யிலிருந்து C க்குள் தொடங்கும் சரியா? என்று கேட்டு அசத்தினான். முகத்தைப் பார்த்தே அவன் கணித்தவைகளைக் கேட்டு எல்லோருக்குமே இலவச ஆரூடம் கேட்கும் ஆசை வந்துவிட்டது.

நண்பர்களின் உற்சாக [பான] கலகலப்பில் நேரம் போனதே தெரியவில்லை. தெரு கலைத்து போட்ட மாதிரி ஆகிவிட்டது. பக்கத்து வீடுகள் தொந்தரவு பொறுக்க முடியாமல் எட்டிப் பார்த்தன.

“சரி. நேரமாயிட்டது. கிளம்பு. சாரைக் கொண்டு அவர் வீட்டில விட்டுட்டு வந்திருவோம்.” ஜான்சன் விரட்டினான். அவன் சொன்ன ஊருக்கு போக இருபது கிலோமீட்டர்களாவது போகவேண்டியிருக்கும்.

மணி பதினொன்று. தயங்கினேன்.

“இங்க இருந்து என்ன பண்ணப் போற. வா சும்மா ஜாலியா..”

இப்படிதான் மாட்டிக்கொண்டேன்.

வெளியே நல்ல இருட்டு. லேசான சாரல் மழை.
வெர்சா காரில் 6 பேர் இருந்தோம்.

அந்த நண்பனின் நண்பன் செல்பேசி எடுத்து யாரையோ கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். பத்து நிமிசம் பேசியதில் பாலன்ஸ் தீர்ந்ததும் நிறுத்தினான். வெளி நாட்டுக்கு பேசினானாம்.

திடீரென்று கூடவந்த மற்றோரு நண்பன் உற்சாகத்தைக் காட்டுவதற்காக ‘-------‘ என்று கெட்ட வார்த்தையை கூவினான்.

வெளி நாட்டு நண்பருக்கு வந்ததே கோபம். “எனக்கு இப்படி கெட்ட வார்த்தையெல்லாம் பேசுறது பிடிக்காது.” என்றார். முதலில் கூவியவர் மறுபடியும் வேண்டுமென்றே கத்தினார்.

“லேய்.அறிவு இருக்கால உனக்கு. குடிச்சா இப்படிதான் கெட்டவார்த்தை பேசணுமா. அதான் பிடிக்காதுன்னு சொல்றேன்ல.. நான் சொன்ன பிறகும் நீ எப்படி பேசலாம். நிறுத்து நிறுத்து. வண்டிய நிறுத்து.”

ஓட்டிக் கொண்டிருந்த ஜான்சன் ஓரமாய் நிப்பாட்டினான்.’ யேய் இவனே பேசாமா இருக்க மாட்டியா” என்று கத்தியவனை திட்டிக்கொண்டு நண்பரை சமாதானப் படுத்த திரும்பினான்.

நண்பரோ அதற்குள் கார் கதவை திறந்துகொண்டு வெளியே இறங்கினார்.” நீங்க போங்க நான் இந்த வண்டியில வரல..”

நொந்தபடி வெளியே இறங்கினோம். வெளியே ஒருவரை ஒருவர் தெரியாத அளவுக்கு இருட்டு. இவன் எங்கே போனானோ. கார் வெளிச்சத்தில் பக்கத்தில் குளம் என்பது தெரிந்தது. தாமரை படர்ந்திருந்தது.

ஜான்சன் கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. பின்னால் வந்த லாறி வெளிச்சத்தில் சாலையை கவனித்ததில் மனித உருவமே தென்படவில்லை. “இவன் எங்கல போய் தொலஞ்சான். தண்ணி வாங்கி தந்துட்டு ராத்திரி பூரா வேலை வாங்கிருவான் போல இருக்கே.”
கெட்ட வார்த்தை சொன்னவனை ஆளாளுக்கு வறுத்தெடுக்க அவன் போதை இறங்கினான்.

இரண்டு பேர் சாலையின் வலதும் இடப்பக்கமுமாக சிறிது தூரம் நடந்து போய் தேடியாயிற்று. ம்ஹூம்.. அதற்குள் எங்கே போயிருப்பான்.
ஒருவேளை காரில் இருந்து இறங்கியதில் தடுமாறி விழுந்து குளத்துக்குள் விழுந்திருப்பானோ.. அந்த நினைப்பிற்கே ஒரு நிமிடம் மூச்சே நின்றது..

வேறு வழியில்லை. குளத்தில் இறங்கி பார்த்து விட வேண்டியதுதான்.
காரை சற்று பின்னால் நகர்த்தி ஹெட்லைட்டை போட்டு.. குளத்தில் லேசாக வெளிச்சம் விழ... ஒருவன் பான்ட் சட்டையை கழற்றி குளத்தில் இறங்க தயாரான போது-

கார் கதவைத் திறக்கும் ஓசைக் கேட்டது.

திடுக்கிட்டுத் திரும்பினால் காரருகே ஒரு உருவம். ஒருவரையொருவர் கையை பிடித்துக் கொண்டோம். பயம் எல்லொருக்குள்ளும் இருப்பது நடுக்கத்தில் தெரிந்தது.

“அங்க என்னல பண்ணிட்டு இருக்கீங்க வாங்க போவோம்” குரல் அவன்தான் என்று உறுதிபடுத்திய பிறகுதான் நிம்மதி வந்தது.

பாவி ஓசைப்படாமல் குளக்கரையை நாறடித்து விட்டு வந்திருப்பது பிறகுதான் தெரிய வந்தது..

பா.ராஜேஷ்
01-09-2010, 07:12 PM
என்ன கொடும சார் இது... வீட்டுல சும்மா இருந்தவரையும் இருட்டுல கூப்பிட்டு போய் இப்படி படுத்துறாங்களே... பாவம் ஜார்ஜ்...:frown:

தாமரை
01-09-2010, 11:53 PM
முன்னோட்டம் நடந்திருச்சி போல இருக்கே...!!!:lachen001::lachen001::lachen001:

த.ஜார்ஜ்
02-09-2010, 05:04 AM
முன்னோட்டம் நடந்திருச்சி போல இருக்கே...!!!:lachen001::lachen001::lachen001:

இந்த பதிவில் நான் எழுதிய முதல் வரியை மீண்டும் எழுதுமளவுக்கு வராது என்று நினைக்கிறேன்.
அப்படிதானே?

த.ஜார்ஜ்
02-09-2010, 05:07 AM
என்ன கொடும சார் இது... வீட்டுல சும்மா இருந்தவரையும் இருட்டுல கூப்பிட்டு போய் இப்படி படுத்துறாங்களே... பாவம் ஜார்ஜ்...:frown:

அதான் அவனுக கூட இப்ப சேரதேயில்ல.!!!!

அன்புரசிகன்
02-09-2010, 05:11 AM
அதான் அவனுக கூட இப்ப சேரதேயில்ல.!!!!
ஏன்? அவங்க வாங்கித்தந்த சரக்கு சரியில்லையா???:D

ஆதவா
02-09-2010, 05:19 AM
இந்த பதிவில் நான் எழுதிய முதல் வரியை மீண்டும் எழுதுமளவுக்கு வராது என்று நினைக்கிறேன்.
அப்படிதானே?

அது இன்னும் 10 நாளைக்கு அப்பறமா தெரியும்! :lachen001::aetsch013::lachen001:

ஜிங்குசாங்கு
02-09-2010, 10:25 PM
ஜார்ஜ், என்னோட நண்பன் ஒருத்தன் நேத்து புது கார் வாங்கினான். வரும் சனிக்கிழமை இரவு அத கொண்டாடலாம்னு இருக்கோம். உங்க வீடு எங்கேன்னு சொன்னீங்கன்ன, வழில உங்களையும் கூட்டிட்டு போறோம், தயாரா இருங்க :)

சூரியன்
03-09-2010, 04:56 AM
சும்மா இருந்த உங்கள இப்படி இழுத்துட்டு போய் பயப்படுத்தி விட்டுட்டாங்க.:D

சிவா.ஜி
03-09-2010, 08:25 AM
வெர்சா வண்டியில கூட்டிட்டுப் போய்...மெர்சலாயிட்டீங்க போல...

வண்டி கறுப்புக் கலரா.....?

நடுராத்திரி..நடுரோட்டு பஞ்சாயத்து...நல்லவேளை குளத்துல எறங்காம இருந்தீங்களே.

Nivas.T
03-09-2010, 09:22 AM
ஐயோ பாவம் :D:D:D

விகடன்
04-10-2010, 05:51 AM
காரை விட்டு இறங்கியவர் கூட வந்தவர்களை இறக்கிவிட்டு காரை எடுத்துச்சென்றுவிட்டாரோ? என்று கூட சிந்திக்கத்தோன்றிற்று.

புதுக்கார் எடுத்தால் இப்படியெல்லாமா கொண்டாடுவாங்கள்?
வித்தியாசமான அனுபவந்தான் ஜார்ஜ்.
”....உற்சாகத்தைக் காட்டுவதற்காக ‘-------‘ என்று கெட்ட வார்த்தையை கூவினான்” என்று “ _ _ போட்டெல்லாம் காட்டவேண்டியதில்லை. சாதாரணமாக கெட்டவார்த்தையை கூவினான் என்று சொன்னால் போதுமென நினைக்கிறேன்.

அன்புரசிகன்
04-10-2010, 05:54 AM
புதுக்கார் எடுத்தால் இப்படியெல்லாமா கொண்டாடுவாங்கள்?


அடிக்கடி Benz, BMW, Cadillac என்று காரை மாற்றும் உங்களுக்கு இது ஒரு சாதாரண விடையம். ச்விங்கம் மென்று துப்புவது போல்...

விகடன்
04-10-2010, 07:47 AM
ஏன்? ஏன்??
நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு....
----------
அது சரி அன்பு, நீங்கள் இருக்குமிடத்தில் ஏதோ புதுக்கார் இறங்கியதாக ஒரு தகவல் கசியுதே...

அன்புரசிகன்
04-10-2010, 07:50 AM
அது சரி அன்பு, நீங்கள் இருக்குமிடத்தில் ஏதோ புதுக்கார் இறங்கியதாக ஒரு தகவல் கசியுதே...

நான் என்ன துறைமுகத்துக்கு அருகிலா இருக்கிறேன்...

விகடன்
04-10-2010, 08:28 AM
ஒரு கார் இறங்கியதைப்பற்றித்தானே கேட்டேன். அதற்கேன் இந்தப்பெரிய வார்த்தையெல்லாம்???

ஜார்ஜ் அழைக்கப்பட்டது போல நீங்களும் அழைத்துக்கொண்டு போயிருப்பீர்களே? அந்த அனுபத்தையும் இதில் தரவேண்டியதுதானே!