PDA

View Full Version : தரவு தாளில் (எக்சல்) வருமானவரி கணக்கீடு...



nambi
31-08-2010, 07:48 PM
ஒவ்வொரு வருடத்தில் மாரச் வரும்பொழுதும் இது (வரி) எவ்வளவு? வரும்? எவ்வளவு பிடித்தம் செய்வார்கள்? என்று நடுத்தர மற்றும் சாமான்ய தொழிலாள நண்பர்கள் இதை கணக்கிடுவதற்கு திண்டாடுவதை காணலாம்....இதற்காக அலுவலக கணக்கரை போட்டு குடைந்து கொண்டிருப்போம் அவரும் தொழில் முறை முறுக்கை காட்டிக்கொண்டிருப்பார்....இனி நாமே......(நமக்கு நாமேத் திட்டம்)

தரவு தாளில் சூத்திரங்கள் பயன்படுத்தி வருமான வரி கணக்கீடு செய்து அறியலாம்....அதன்படி வருமான வரி சலுகைகளில் எப்படி சேமிப்பை பெருக்கலாம் என்பதையும் முன்கூட்டியே அறியலாம்......
அதை இரண்டு பாகமாக இங்கு வெளியிடப்படுகிறது....

வருமானவரிக் கணக்கீடு....1

இதில் வரி வருவாய் எப்படி கணக்கிடுவது....இந்திய வரவுசெலவுத் திட்ட நிதியிறக்கையின் படி....2010-2011 ஆண்டு நிதிநிலையறிக்கையில் வெளியிட்டதின்படி....

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டியுள்ளபடி உருவாக்கி அல்லது வேறுமாதிரி உருவாக்கி கொண்டாலும் சரி....இதன்படி எளியமுறையில் தோராயமாக கணக்கிட்டு கொள்ளலாம்....தனிநபர் வருவாய்க்கான வருமான வரி கணக்கிடுவதற்கு பெரிய பட்டியல் கணக்கீடு தேவையில்லை...

இதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ளதின்படி வருமானவரி சதவீத பட்டியலை தரவுதாளில் வலது பக்கத்தில் சிலபல நெடுக்கு வரிசைகள் தள்ளி....நெடுக்கு வரிசையில் உருவாக்கி கொள்ளலாம்.....(எல்லாம் சூத்திரங்கள் பயன்படுத்திய பின்பு இந்த அட்டவணையை மறைத்தும் விடலாம்)

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TaxExemptionChart.jpg

அதன்பின்பு இடது புறத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதின் படி ஒரு கணிப்பானை உருவாக்க வேண்டும்...இதில் எங்கெங்கு என்ன சூத்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை 1,2,3....என்று படத்தில் குறிப்பிடப்பட்டு அதற்கான சூத்திரம் அல்லது விதிகள் கீழே தனியாக கொடுக்கப்பட்டுள்ளது...அதை உருவாக்கிய கணிப்பானில் அந்தந்த செல்லில் உள்ளிட்டால் இந்த கணிப்பான் தயாராகிவிடும்.

அதன் பிறகு வருடத்திற்கான எல்லா கழிவுகளும் போக கிடைக்கும் வருமானத்தை அதில் (சேமிப்பு வங்கியினால் பெறும் வட்டியையும் சேர்க்கலாம்) ஒரு இடத்தில் உள்ளிட்டோமானால் வரிவருவாய் மற்றும் அதற்கான வரி எவ்வளவு என்று தெரிவிக்கும்...இதில் முன்று விதமான நபர்களுக்கு..... இந்திய அரசு மூன்று விதத்தில் வருவாய் வரி விகிதம் விதிக்கிறது அதன்படி உள்ளிடும் பொழுது ஆண், பெண், அல்லது மூத்தகுடிமகன் என்ற நபருக்கான தேர்வை உள்ளிட்டால் போதுமானது.

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/INCOMETAXCALCULATOR.jpg


1.=IF(AND(C7="ஆண்",B7>160000),VLOOKUP($B$7,$I$6:$J$9,2,1)&"%",IF(AND(C7="பெண்",B7>190000),VLOOKUP($B$7,$I$15:$J$18,2,1)&"%",IF(AND(C7="மூத்த குடி",B7>240000),VLOOKUP($B$7,$I$23:$J$26,2,1)&"%","வரி இல்லை")))


(இங்கு லுக்கப் செயற்பாட்டில் இடையேயுள்ள செல் மேற்கோளில் (செல் ரெபரன்ஸ்) டாலர் குறியீடு என்பது நிச்சயமான மேற்கோள் (அப்சலுட் ரெபரன்ஸ்) இதனால் வேறு எங்காவது கணிப்பானை நகல் எடுத்துச் சென்று ஒட்டினாலோ அச்சு நகல் எடுப்பதற்காக மாற்றினாலோ இந்த லுக்கப் செயற்பாட்டுக்குத் தேவையான தகவல் இடத்திற்கான மேற்கோள் மாறாது. அதாவது இவைகள் வருமான வரி அட்டவணையோடு அமைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து மட்டுமே தகவல் பெறப்படுவதால் இந்த மாதிரி குறியீடு அமைத்து உள்ளிடவேண்டும்....இதற்கு அந்த செல் ரெபரன்ஸில் சுட்டியை வைத்து F4 அழுத்தினால் இந்த குறியீடு வந்துவிடும் மீண்டும் அழுத்தினால் நீங்கி விடும்....இது பற்றி தனித்திரி தொடர்வதால் அதில் காணலாம்....)



2.=IF(C7="ஆண்",(B7-160000),IF(C7="பெண்",(B7-190000),IF(C7="மூத்த குடி",B7-240000)))





3.=IF(AND(B7>800000,C7="ஆண்",C11<>""),((B7-800000)*B11)+94000,IF(AND(B7>500000,C7="ஆண்",C11<>""),((B7-500000)*B11)+34000,IF(AND(B7>160000,C7="ஆண்",C11<>""),(B7-160000)*B11,"")))





4.=IF(AND(B7>800000,C7="பெண்",C11<>""),((B7-800000)*B11)+91000,IF(AND(B7>500000,C7="பெண்",C11<>""),((B7-500000)*B11)+31000,IF(AND(B7>190000,C7="பெண்",C11<>""),(B7-190000)*B11,"")))





5.=IF(AND(B7>800000,C7="மூத்த குடி",C11<>""),((B7-800000)*B11)+86000,IF(AND(B7>500000,C7="மூத்த குடி",C11<>""),((B7-500000)*B11)+26000,IF(AND(B7>240000,C7="மூத்த குடி",C11<>""),(B7-240000)*B11,"")))






6.=IF(D11="","",D11*3%)





7.=IF(E11="","",E11*3%)





8.=IF(F11="","",F11*3%)





9.=IF(D11="","",SUM(D11:d12))





10.=IF(E11="","",SUM(E11:E12))




11.=IF(F11="","",SUM(F11:F12))




இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கணிப்பான்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது....இன்னும் மேலும் சிறப்பாகவும் அமைத்துக்கொள்ளலாம்....

(இவ்விணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி சோதிக்கப்பட்டதுஇணையதள முகவரி (http://www.surfindia.com/finance/income-tax/income-tax-calculator.html)

இதன்பிறகு தொடர்ச்சியாக சேமிப்பு, முதலீட்டின் மூலம் பெறும் சலுகை கழிவுகளை கொண்டு எப்படி வரியைக் குறைத்து பார்க்கலாம் என்பதை வருமான வரிக்கணக்கீடு...2 இல் பார்க்கலாம்....

நன்றி!

rajesh2008
01-09-2010, 07:16 AM
நம்பி, மிகவும் அருமையாக உள்ளது, இனிதான் பரீட்சித்துப் பார்க்கவேண்டும். அதற்கு முன் தமிழில் எக்செல் வர என்ன செய்யவேண்டும்? என்பதையும் சொல்வீர்களா?

nambi
01-09-2010, 10:16 AM
தோழர் ராஜேஷூசுக்கு நன்றி! இதை சோதித்து பார்த்து குறை இருந்தால் குறிப்பிடவும்...மாற்றி முயற்சிக்கலாம்....


தமிழில் எக்சல் மட்டுமல்ல அனைத்தையும் அதாவது ஆபிஸ் 2003 முழுவதையும் கொண்டுவரலாம்....மைக்ரோசப்ட் தளம் இதற்கான வழியைத் தருகிறது...அனைத்தையும் இந்த தளம் சென்று எப்படித் தரவிறக்கி பயன்படுத்துவது என்பதை விளக்கமாகப் பெறலாம்...பாஷா இந்தியா தமிழ் (http://bhashaindia.com/Developers/IndianLang/Mlingual/ta/pages/TamilOffice2003.aspx)

இந்த தளம் சென்றும் வழிமுறைகளை கண்டு அதன்படி தரவிறக்கலாம்..தமிழ் மைக்ரோசாப்ட் இணையதளம் (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=ccf199bc-c987-48f5-9707-dc6c7d0e35d0&DisplayLang=ta)

இயங்கு தளமான விண்டோசையும் தமிழில் கொண்டு வரலாம் அனைத்தும் இங்கு விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

nambi
06-09-2010, 04:12 PM
வருமானவரி கணக்கீடு 2
வருமானவரியை சேமிப்புத்திட்டங்களின் எவ்ளவு குறைக்கின்றது என்பதை இதனோடு தொடர்புடைய இந்த கணிப்பானைக்கொண்டு கணக்கிட்டு நிகரவரி எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

படத்தில் உள்ளது போல் தரவுகளை அமைத்துக்கொள்ளலாம்...அல்லது தங்கள் விருப்பப்படி மாற்றி அமைத்து வண்ணமிட்டு கொள்ளலாம். முந்தய பதிவில் குறிப்பிட்டதைப்போல இதிலேயும் 1,2,3.... என்று செல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள சூத்திரங்களை கீழே பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. சில சூத்திரங்கள் அங்கேயே கொடுக்கப்பட்டுள்ளது. பிரிமியம், மாத, காலாண்டு, அ.ஆண்டு, ஆண்டுக்கான சேமிப்புத்தொகைகளை குற்றிப்படப்பட்ட செல்களில் உள்ளிட்டோமானால் அதன் தொகைகள் உங்கள் ஆண்டு வருமானத்தில் கழிக்கப்பட்டு மீண்டும் வருமான வரிகணக்கீடு ஒன்றில் உள்ளதைப்போல கணக்கிட்டு நிகர வரியை வெளியிடும். அதன்படி வரிசெலுத்துவதோ அல்லது மேலிம் சேமிப்பை கூட்டி வரியே இல்லாமல் செய்வதையோ மேற்கொள்ளலாம்.

(பிரிமயத்தொகைகள் கடந்த வருட ஏப்ரலில் இருந்து இந்த வருட மார்ச் வரை செலுத்தப்பட்டவைகளையே உள்ளிடவேண்டும் பிரிவு 80ஒ இல் 1 இலட்சத்துக்குமேல் சேமித்திருந்தால் 1 இலடசம் மட்டுமே கணக்கில் எடுத்து கொண்டு கழிக்கும். மீதியை கணக்கில் எடுக்காது இதுமாதிரி வரிச்சலுகை பிரிவுகளை அறிந்து மாற்றி அமைத்துக்கொள்ளலாம். பொதுவாக சாமான்யர்கள் அதிகம் பேர் பயன்படுத்துவதை கொண்டு சில பிரிவுகளை மட்டும் குறிப்பிட்டு அமைக்கப்பட்டுள்ளது)

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/INCOMETAXCALTOTALSHEET.jpg

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/INCOMETAXEXCEMCALNEW.jpg


1.=IF(D19="மாதம்",C19*12,IF(D19="கா.ஆண்டு",C19*4,IF(D19="அ.ஆண்டு",C19*2,IF(D19="மு.ஆண்டு",C19,""))))




2.=IF(D20="மாதம்",C20*12,IF(D20="கா.ஆண்டு",C20*4,IF(D20="அ.ஆண்டு",C20*2,IF(D20="மு.ஆண்டு",C20,""))))




3.=IF(D21="மாதம்",C21*12,IF(D21="கா.ஆண்டு",C21*4,IF(D21="அ.ஆண்டு",C21*2,IF(D21="மு.ஆண்டு",C21,""))))




4.=IF(D22="மாதம்",C22*12,IF(D22="கா.ஆண்டு",C22*4,IF(D22="அ.ஆண்டு",C22*2,IF(D22="மு.ஆண்டு",C22,""))))




5.=SUM(E19:E22)




6.=IF(AND(E23>100000,C11<>""),B7-100000,IF(C11<>"",B7-E23,""))




7.8.9.10.=IF(AND(E25>15000,G23<>0),G23-15000,IF(G23="","",G23-E25))


(7,8,9,10....7 இல் உள்ளிட்டுவிட்டு தானியங்கி நிரப்பு மூலம் (ஆட்டோ பில்-Auto fill) இதர செல்களில் நிரப்பிக்கொள்ளவும்.




11.=IF(G29<0,"",G29)




12.=IF(AND(C7="ஆண்",C31>160000,C31<>""),(C31-160000),IF(AND(C7="பெண்",C31>190000,C31<>""),(C31-190000),IF(AND(C7="மூத்த குடி",C31>240000,C31<>""),C31-240000,"")))




13.=IF(AND($C$7="ஆண்",C31>160000,C31<>""),VLOOKUP($C$31,$I$6:$J$9,2,1)&"%",IF(AND($C$7="பெண்",C31>190000,C31<>""),VLOOKUP($C$31,$I$15:$J$18,2,1)&"%",IF(AND($C$7="மூத்த குடி",C31>240000,C31<>""),VLOOKUP($C$31,$I$23:$J$26,2,1)&"%","வரி இல்லை")))




14.=IF(C35="வரி இல்லை","",IF(AND(C31>800000,C7="ஆண்"),((C31-800000)*C35)+94000,IF(AND(C31>500000,C7="ஆண்"),((C31-500000)*C35)+34000,IF(AND(C31>160000,C7="ஆண்"),((C31-160000)*C35),""))))



15.=IF(C35="வரி இல்லை","",IF(AND(C31>800000,C7="பெண்"),((C31-800000)*C35)+91000,IF(AND(C31>500000,C7="பெண்"),((C31-500000)*C35)+31000,IF(AND(C31>190000,C7="பெண்"),(C31-190000)*C35,""))))



16.=IF(C35="வரி இல்லை","",IF(AND(C31>800000,C7="மூத்த குடி"),((C31-800000)*C35)+86000,IF(AND(C31>500000,C7="மூத்த குடி"),((C31-500000)*C35)+26000,IF(AND(C31>240000,C7="மூத்த குடி"),((C31-240000)*C35),""))))




17.18. 19.=IF(D33="","",D33*3%)
(17 வது செல்லில் உள்ளிட்டு ஆட்டோ பில் மூலம் மீதி 2 செல்லையும் நிரப்பலாம்)




20.21.22.=IF(D33="","",SUM(D33:D34))

(20 வது செல்லில் உள்ளிட்டு ஆட்டோ பில் மூலம் மீதி 2 செல்லையும் நிரப்பலாம்)

இவ்விணையதள அட்டவணையில் கொடுத்துள்ள உதாரணத்தின் படி (கணிப்பான் அல்ல) சோதித்துப் பார்க்கப்பட்டது...இணையதள முகவரி (http://www.surfindia.com/finance/income-tax/income-tax-calculator.html)

nambi
07-09-2010, 04:38 PM
மேலே குறிப்பிட்டுள்ள சூத்திரங்களை உள்ளிட்டு முயற்சித்து பார்க்கவும்...... சேமிப்புகளை ஆண்டு வருமானத்தில் தான் கழிக்கவேண்டும் அதனடிப்படையில் மீண்டும் சேமிப்பில் செலுத்தப்பட்ட தொகைகளை கூட்டி பின் ஆண்டு வருமானத்தில் கழித்து அதன்பின் மீண்டும் வீலுக்கப் மூலம் சதவீதம் கண்டுபிடித்து நிகர வரி கண்டுபிடிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 500001 என்ற ஆண்டு வருமானத்தை உள்ளிட்டு சோதித்தோமானால் சதவீத வேறுபாடு மாறுவதைக்காணலாம்..

குறைகள் இருப்பின் தெரிவிக்கவும்....வேறு ஏதாவது வழியில் முயற்சித்து பார்க்கலாம்.....இதை விசுவல் பேசிக் நிரல் மூலமும்..ஒரே பட்டியலாக தயாரித்து பயன்படுத்தலாம். அஞ்சலக சேமிப்பு மற்றும் கூட்டு வட்டி முறைகளையும் விசுவல் பேசிக் நிரல் மூலம் உருவாக்கி பயன்படுத்தலாம். அதுபற்றிய பதிவை வேறு சந்தர்ப்பத்தில் பதிவிடுகிறேன்.
நன்றி!