PDA

View Full Version : மனிதன் யார்?



அனுராகவன்
31-08-2010, 07:08 PM
மனிதன் யார்?


ஒரு அண்டத்தில் ஒரு
பிடி பிண்டத்தில்
ஒரு பிடி கல்லும்
மண்ணும் சேர்த்தது
ஒரு செல் உயிர் தானே...
மனிதனா?

ஏழு உலகத்தில்
ஏழு கடலையும்
தாண்டி அதில்
அறிய உலத்தை
உருவாக்குபவன்
மனிதனா?

பிற கோல்களில்
தன் காலை
பதித்து
அதை மண்ணுக்கு
சொல்பவன்
மனிதனா?


யார் தான் மனிதன்??

யார் முக்தியே
தேடி ஒடுகின்றானோ
அவன் மனிதன்!!!:icon_rollout:

!!
அவனே கடவுள்!!!!!!:icon_b:

Nivas.T
02-09-2010, 01:51 PM
பண்பட்ட ஆமீகக் கவிதை
நன்றி

அனுராகவன்
07-10-2010, 08:36 PM
பண்பட்ட ஆமீகக் கவிதை
நன்றி
நன்றி சகோ..

சூறாவளி
09-10-2010, 07:21 PM
படிச்சிகிட்டே கடைசியா வந்து பாத்தா... :confused:

ஆன்மீகம் பற்றிய அறிவு நமக்கு கம்மிதான்.. ஆன்மீக புத்தகங்கள் படிக்கணும் போல... அப்போ புரியுமான்னு பாப்போம்...:frown:

அனுராகவன்
09-10-2010, 07:28 PM
ஆன்மிகம் கற்க ஒரு முறை கோயில் சென்று தியானம் செய்யுங்கள்..
சற்றே அமருங்கள் தானாக வரும்..
நிறைய ஆன்மிக புத்தகம் படிங்கள்...

சூறாவளி
09-10-2010, 07:42 PM
ஆன்மிகம் கற்க ஒரு முறை கோயில் சென்று தியானம் செய்யுங்கள்..
சற்றே அமருங்கள் தானாக வரும்..
நிறைய ஆன்மிக புத்தகம் படிங்கள்...

நான் இருக்கும் இடத்தில் கோவில் போகணும்னா ரொம்ப கஷ்டம்.. கோவில் இருக்கு ஆனா போறதுக்குதான் டைம் இல்லை.. ஊரில் இருந்தால் வீட்டுக்கு பக்கத்துலயே இருக்கு.. இங்கு போகணும்னா ரொம்ப மெனெக்கடனும்..

ம்ம்ம்... இம்மன்றம் வந்தாச்சுல்ல... கொஞ்சம் கொஞ்சமா மாறுவோம்..