PDA

View Full Version : வரலாறானவன் வாய்மொழிகள்!



குணமதி
31-08-2010, 04:19 PM
வரலாறானவன் வாய்மொழிகள்!


'வளைந்து
கொடாவிடில்
ஒடிந்து போவாய்!

வளைதலின்
ஒடித்தாலே நலம்'
*****************

'ரயிலே நில்!
தண்டவாளத்தில்
குருவி'
******************

'செருப்பை
உதறிவிட்டு
நடக்கிறேன்...

தாய்மண் மீது!'
******************

'யாரங்கே?

என் கல்லறை மீது
நின்று கொண்டு

எனக்காகக்
கண்ணீர் வடிக்கும்

மெழுகுவர்த்தியை
அணைத்து விடுங்கள்!

அழுகை
எனக்குப் பிடிக்காத
ஒன்று!'
*******************

-- முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் தொகுப்பிலிருந்து
நன்றி : 'கீற்று'க்கு.

வியாசன்
31-08-2010, 04:22 PM
இறுதி கவிதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

Nivas.T
31-08-2010, 05:07 PM
வரலாறானவன் வாய்மொழிகள்!


'செருப்பை
உதறிவிட்டு
நடக்கிறேன்...

தாய்மண் மீது!'



என்ன ஒரு கவிதை

நன்றி குணமதி

கீதம்
31-08-2010, 09:56 PM
மனம் தொட்ட கவிதைகள். பகிர்வுக்கு நன்றி, குணமதி அவர்களே!

நேற்றுதான் திடீரென நினைத்துக்கொண்டேன், சமீப காலமாக நீங்கள் கவிதை எதுவும் எழுதக்காணோமே? செந்தமிழ் கொஞ்சும் கவிதைகள் காண ஆவலாய் இருக்கிறேன். சுவைக்கத் தாருங்களேன்.

கலையரசி
01-09-2010, 01:34 PM
எனக்கும் கடைசிக் கவிதை மிகவும் பிடித்தது. பகிர்வுக்கு நன்றி. கீதம் சொல்வது போல் தற்போது உங்கள் பதிவுகள் குறைந்துள்ளனவே ஏன்?