PDA

View Full Version : நானாக நானில்லை...



சசிதரன்
30-08-2010, 04:00 PM
புன்னகையோ கண்ணீரோ
ஏதோவொன்று எப்பொழுதும்
தேவையாயிருக்கிறது
என் முகம் மறைக்கும் முகமூடியாய்.

வேண்டாத விருப்பங்களில்
திணிக்கப்படும் போதெல்லாம்..
போலியாய் புன்னகைத்து
பிறரறியாமல் அழுகிறேன்.

எனக்கான காரணங்கள்
எதுவுமின்றி
அழவும் சிரிக்கவும்
பழகிவிட்டேன்.

என் முகமூடியை
அடையாளம் காணும் உங்களுக்கு
என் முகம்
தெரிவதே இல்லை.

போலியாய் புன்னகைத்து
போலியாய் அழுது
போலியாய் வாழ்கிறேன்..

நீங்கள் பார்க்கும் நான்
உண்மையில் நானில்லை.
உண்மையான நான்...
உங்களுக்கு அவசியமேயில்லை.

உங்கள் புன்னகைகளை
என் உதடுகளில்
பொறுத்தி விட்டீர்கள்..

உங்கள் கண்ணீரை
என் கண்களில்
வழிய விட்டீர்கள்...

நீங்கள் முகம் பார்க்கும்
நிலைக் கண்ணாடியென
என்னை மாற்றி விட்டீர்கள்.

உங்கள் இரவுகளின்
குளிர் போக்க..
என் கனவுகள்
எரிக்கபடுகிறது.

எரியும் கனவுகளோடு
கொஞ்சம் கொஞ்சமாய்
எரிந்துக் கொண்டிருக்கிறேன்
நானும்.

சுடர்விழி
31-08-2010, 01:15 AM
அருமையான கவிதை...என் மனதில் இப்போது உள்ள விஷயங்களை அப்படியே நீங்கள் கவிதையாக சொல்லி இருக்கிறீர்கள்...
”எனக்கான காரணங்கள்
எதுவுமின்றி
அழவும் சிரிக்கவும்
பழகிவிட்டேன்” --உண்மை..ரொம்ப நல்லா இருக்கு கவிதை..பாராட்டுக்கள்.

"பொத்தனூர்"பிரபு
31-08-2010, 02:51 AM
ரொம்ப நல்லா இருக்கு கவிதை..
பல நேரங்களில் நாம் நாம இருப்பதில்லை / இருக்க முடிவதில்லை
நிர்வாணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21114)படிச்சு பாருங்க

Nivas.T
31-08-2010, 07:57 AM
அழகான கவிதை சசிதரன் நன்றி

மூடி மறைத்த முகத்தோடு ஓடுகிறேன்
என் உண்மை முகத்தைத் தேடி
என்றாவது கண்டுப்பிடித்து விடுவேன்
என்ற முகமூடியோடு

வியாசன்
31-08-2010, 09:38 AM
சசி உங்கள் முகமூடியை கழட்டி எறியுங்கள் புன்னகை ஒன்று மட்டுமே போதும். காதல் தோல்விகள் பலரை பாதாளத்தில் புதைத்துவிடும். எரித்தாலும் மீண்டும் சாம்பலிருந்து எழுவோம் கிரேக்கத்தின் பீனிக்ஸ் பறவையாய்.
வலிகளை தந்தவர்களுக்கு
வாழ்க்கையை உணர்த்துவோம்.