PDA

View Full Version : அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்....

Nivas.T
30-08-2010, 08:52 AM
வாழ்க்கையில் சில சம்பவங்களை மறக்க முடியாது, அதிலும் பிறரை கிண்டல் செய்வதிலும்(பார்ரா....:eek:), பிறர் கேலிக்கு ஆளாவதிலும்(இப்ப சொல்றியே இது கரெக்ட்....:icon_b:) ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும். என் நண்பன் ஒருவனுக்கு நான் தினமும் ஒரு பல்பு கொடுக்கவிடில் என் தலை சுக்குநூறாக சிதறிவிடும்(அவன் ஆயிரம் பல்பு குடுப்பான?:wuerg019:), என்ன செய்வது நமக்கு வாய்த்த அடிமை அவன் ஒருவன்தான்.

எல்லாவற்றையும் மனதில் வைத்து எத்தனைநாள் திட்டம் போட்டானோ தெரியாது,
வழக்கம்போல் இன்றும் பல்பு கொடுக்கலாம் என்று

"மச்சான் பிசிய?" என்றேன்

"இல்ல ஏண்டா?" என்றவனிடம்

"கொஞ்சம் இங்க வா, ஒரு உதவி பண்ணுடா ரொம்ப முக்கியம்" என்றேன் மூன்று மேசைகள் தள்ளி அமர்ந்திருந்தவனை.

எனக்காக தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டு என்னிடம் வந்தவனை
"இல்ல மச்சி இந்த பேப்பரை இந்த குப்பைதொட்டியில போடணும், நீயே கொஞ்சம் போடேன்" என்று சொன்னேன் சிரிக்காமல் கையில் பேப்பருடன் என் அருகில் இருந்த குப்பைத் தொட்டியை சுட்டிக்காட்டியபடி.

அருகில் இருந்த அனைவரும் சிரிக்கும் முன், என்கையிலிருந்த பேப்பரை பிடுங்கி என்தலையில் போட்டுவிட்டு கூலாக சொன்னான் சண்டாளன் "மச்சா குப்பையில போட்டுட்டேன் டா" அப்பொழுது அனைவரின் சிரிப்பைவிட என் காதில் ஒலித்தது சந்தானத்தின் டயலாக் "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்".

மதி
30-08-2010, 08:57 AM
நைஜீரியாவில் ஆட்டோலாம் ஓடுதா என்ன?

உண்மையிலேயே தெரியாதுங்க.. சொன்னீங்கன்னா உபயோகமாயிருக்கும்.

Nivas.T
30-08-2010, 09:57 AM
நைஜீரியாவில் ஆட்டோலாம் ஓடுதா என்ன?

உண்மையிலேயே தெரியாதுங்க.. சொன்னீங்கன்னா உபயோகமாயிருக்கும்.

எனக்கும் தெரியல மதி
ஆனா இங்க வாடகை பைக்
அப்புறம் ஷேர் வேன் பார்த்திருக்கிறேன்
பஸ் கூட பாத்ததில்ல

நீங்க இப்ப சென்னைல தான இருக்கீங்க
சென்னை எப்டி இருக்கு ?

த.ஜார்ஜ்
30-08-2010, 10:16 AM
நண்பன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.[இருங்க நானும் கொஞ்சம் சிரிச்சிகிடறேன்.]

ஆதவா
30-08-2010, 11:03 AM
அங்கதான் நிறைய மண்ணு இருக்குமே அப்பறம் எப்படி போடுவே?னு கேட்டிருக்கலாம்ல நீங்க?

Narathar
30-08-2010, 11:20 AM
இதுக்குத்தான் சொந்த செலவிலே சூனியம் வச்சுக்குறதுன்னு சொல்வாங்களோ???:D

Nivas.T
30-08-2010, 11:52 AM
நண்பன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.[இருங்க நானும் கொஞ்சம் சிரிச்சிகிடறேன்.]

:eek:

அந்த பல்புக்கு நான் ரூம் போட்டு அழுதேன் தெரியுமா ஜார்ஜ் - :traurig001:

அப்புறமா இதெல்லாம் சகஜம்னு என்னை நானே தேத்திக்கிட்டேன் :mad:

Nivas.T
30-08-2010, 11:56 AM
அங்கதான் நிறைய மண்ணு இருக்குமே அப்பறம் எப்படி போடுவே?னு கேட்டிருக்கலாம்ல நீங்க?

என்ன பண்றது ஆதவா :rolleyes:
நான் ஒன்னும் ஆதவன் இல்லையே :D
அதாங்க ப்ரைட் இல்லன்னு சொல்லவந்தேன் :D:D:D
:lachen001::lachen001::lachen001:

Nivas.T
30-08-2010, 11:59 AM
இதுக்குத்தான் சொந்த செலவிலே சூனியம் வச்சுக்குறதுன்னு சொல்வாங்களோ???:D

இதான அது :confused:

:sport-smiley-018::sport-smiley-018:

பாரதி
30-08-2010, 12:26 PM
அது சரி நிவாஸ்...
உங்கள் நண்பன் குப்பையை கூடையில்(!) போட்டதற்கு, எதற்கு ஆட்டோக்காரன் அசிங்கப்படணும்?

Nivas.T
30-08-2010, 12:31 PM
அது சரி நிவாஸ்...
உங்கள் நண்பன் குப்பையை கூடையில்(!) போட்டதற்கு, எதற்கு ஆட்டோக்காரன் அசிங்கப்படணும்?
:eek::eek:

தெருஞ்சிகிட்டு கேக்றீங்களா
இல்ல உண்மைலேயே புரியாம கேக்றீங்களா:rolleyes:

:D:D:D:D:D

பா.ராஜேஷ்
30-08-2010, 05:41 PM
நைஜீரியாவில் ஆட்டோலாம் ஓடுதா என்ன?

உண்மையிலேயே தெரியாதுங்க.. சொன்னீங்கன்னா உபயோகமாயிருக்கும்.

ஓடுது மதி... ஆனா அத ஆட்டோன்னு இல்ல... "கெக்கே"(KEKE) னு கூப்பிடுவாங்க/சொல்லுவாங்க ...

அன்புரசிகன்
30-08-2010, 10:03 PM
பாரதி அண்ணாவின் அதே சந்தேகம். குப்பைத்தொட்டிக்கும் ஆட்டோக்காரனுக்கும் என்ன சம்பந்தம்...

-மாணிக்கத்தின் சொந்தக்காரன்
அன்பு:)

அன்புரசிகன்
30-08-2010, 10:04 PM
ஓடுது மதி... ஆனா அத ஆட்டோன்னு இல்ல... "கெக்கே"(KEKE) னு கூப்பிடுவாங்க/சொல்லுவாங்க ...

அப்போ நிவாஸ் வீதியால வந்தா எலே கெக்கே... இங்க வா லே... இப்படியா பேசுவீங்க??:lachen001:

jayashankar
30-08-2010, 11:31 PM
எனக்கும் தெரியல மதி
ஆனா இங்க வாடகை பைக்
அப்புறம் ஷேர் வேன் பார்த்திருக்கிறேன்
பஸ் கூட பாத்ததில்ல

நீங்க இப்ப சென்னைல தான இருக்கீங்க
சென்னை எப்டி இருக்கு ?

இங்கே Lagos - நைஜீரியாவில் சென்னையில் ஓடும் அதே பஜாஜ் ஆட்டோ இங்கேயும் ஓடுங்க மதி மற்றும் நிவாஸ்.

அதுமட்டுமில்லாமல், இப்போதெல்லாம், இங்கே நகரப் பேருந்தும் ஓடுகின்றன.

இரு சக்கர வாடகைவண்டி, ஷேர்வேன் எல்லாமும் இருக்கின்றது.

jayashankar
30-08-2010, 11:40 PM
அப்போ நிவாஸ் வீதியால வந்தா எலே கெக்கே... இங்க வா லே... இப்படியா பேசுவீங்க??:lachen001:

கேகே நாபே(keke napep) என்பது நம்மூரில் ஓடும் piaggio ஆட்டோ...

கேகே மார்வா (keke marwa ) என்பது நம்மூரில் ஓடும் பஜாஜ் ஆட்டோ...

அதுமட்டுமின்றி, இருசக்கர வாகனமும் உபயோகப்படுகின்றது ஒரு (pick and drop).

அவசர உபயோகத்திற்காக எப்போதாவது இந்த இரு சக்கர வாகனத்தை ஓரளவு நாம் பயன்படுத்திக் கொள்வது உண்டு. ஆனால், யாரும் இந்த மூன்று சக்கர வாகனத்தை உபயோகிப்பதில்லை (பாதுகாப்பு கருதி).

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கார் மட்டுமே உபயோகிக்கின்றார்கள் நம் மக்கள்.

அதே ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கென்றால், ஒன்று கார் அல்லது விமானம். இந்த இரண்டு வசதிதான்.

நம்மூரைப் போல் கிடைக்கும் வாகன வசதியைக் கொண்டெல்லாம் இங்கே அலைய முடியாது பாதுகாப்புக் கருதி.

Nivas.T
31-08-2010, 05:55 AM
அப்போ நிவாஸ் வீதியால வந்தா எலே கெக்கே... இங்க வா லே... இப்படியா பேசுவீங்க??:lachen001:

:eek::eek::eek:

சிவா.ஜி
31-08-2010, 07:35 AM
அந்த நண்பர் சரியான இடத்துலதான் குப்பையை போட்டிருக்கார்...ஆனா...நிவாஸ்தான் சொந்த(நொந்த) அனுபவத்தை தப்பான இடத்துல போட்டு...சிரிப்பா...சிரிக்க வெச்சுட்டாரு...ஹி...ஹி...!!!

தாமரை
31-08-2010, 12:02 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24281

மச்சானுக்கும் இதில எதாவது பங்கு இருக்குமோ???

Nivas.T
31-08-2010, 12:13 PM
அந்த நண்பர் சரியான இடத்துலதான் குப்பையை போட்டிருக்கார்...ஆனா...நிவாஸ்தான் சொந்த(நொந்த) அனுபவத்தை தப்பான இடத்துல போட்டு...சிரிப்பா...சிரிக்க வெச்சுட்டாரு...ஹி...ஹி...!!!

ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு சமூக சேவை:D:D:D:D:D:D:D

Nivas.T
31-08-2010, 12:16 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24281

மச்சானுக்கும் இதில எதாவது பங்கு இருக்குமோ???

:eek::eek:

இல்ல இல்ல இல்லவேயில்ல

இது புது திட்டமா இருக்கே?

சூரியன்
31-08-2010, 03:08 PM
இத்தனைநாள் நீங்க செஞ்சதுக்கு வச்சுச்டாரா ஆப்பு.:D

Nivas.T
31-08-2010, 05:04 PM
என்ன பண்றது சூரியன்
சம் டைம்ஸ் எல்பேண்ட் லெக் ஸ்லிப்

அதாங்க யானைக்கும் அடி சருக்கும்னு சொல்ல வந்தேன் :D:D:D:D:D:D:D:D:D

சூரியன்
08-09-2010, 03:47 PM
என்ன பண்றது சூரியன்
சம் டைம்ஸ் எல்பேண்ட் லெக் ஸ்லிப்

அதாங்க யானைக்கும் அடி சருக்கும்னு சொல்ல வந்தேன் :D:D:D:D:D:D:D:D:D

ஓ அப்ப நீங்க.:rolleyes::rolleyes:

நான் எதுக்கும் காரணம் இல்லீங்க.:D

உமாமீனா
15-02-2011, 05:25 AM
தேவையா?? வேலியில் போறதை பிடித்து.......ஞாபகத்துக்கு வந்த பழமொழி

Nivas.T
29-04-2011, 09:18 AM
தேவையா?? வேலியில் போறதை பிடித்து.......ஞாபகத்துக்கு வந்த பழமொழி

நன்றி உமாமீனா

சூரியன்
29-04-2011, 10:14 AM
:auto003:

Nivas.T
29-04-2011, 10:19 AM
என்னாச்சு சூரியன் எங்க எஸ்கேப் ஆகுறீங்க :D:D:D

சூரியன்
29-04-2011, 10:35 AM
அப்படியே போய் கொஞ்சம் காபி குடிச்சுட்டு வரலாம்னுதான்....

aathma
29-04-2011, 11:00 AM
:lachen001:

Nivas.T
29-04-2011, 11:35 AM
அப்படியே போய் கொஞ்சம் காபி குடிச்சுட்டு வரலாம்னுதான்....

காப்பிய இல்ல பீரா :D:D:D

Nivas.T
29-04-2011, 11:36 AM
:lachen001:

நன்றி ஆத்மா

aathma
29-04-2011, 03:13 PM
காப்பிய இல்ல பீரா

ரெண்டுல ஏதாவது ஒன்ன சீக்கிரமா ஓகே பண்ணீட்டு அப்படியே எனக்கும் ஒரு குவாட்டர் சொல்லுங்க தல :D

Nivas.T
29-04-2011, 04:47 PM
ரெண்டுல ஏதாவது ஒன்ன சீக்கிரமா ஓகே பண்ணீட்டு அப்படியே எனக்கும் ஒரு குவாட்டர் சொல்லுங்க தல :D

அட இதுலயும் நீங்க நம்ப கட்சிதானா:D:D:D

அமரன்
30-04-2011, 08:14 AM
உங்க சிகை அலங்காரம் கூடை வடிவத்திலா உள்ளது. போட்டோவை அனுப்பி வைங்களேன் நிவாஸ்.:)

உங்கள் நண்பர் உங்களுடன் எவ்வளவு காலமாகக் குப்பை கொட்டுறார் என்றும் மறக்காமல் சொல்லுங்க.

Nivas.T
30-04-2011, 08:17 AM
உங்க சிகை அலங்காரம் கூடை வடிவத்திலா உள்ளது. போட்டோவை அனுப்பி வைங்களேன் நிவாஸ்.:)

உங்கள் நண்பர் உங்களுடன் எவ்வளவு காலமாகக் குப்பை கொட்டுறார் என்றும் மறக்காமல் சொல்லுங்க.

அவனுக்கு அப்டி தோனுச்சு போல நான் என்ன செய்ய முடியும் :D

அந்த வெங்காயம் என்கூடத்தான் இருக்கான் மூணு வருசமா :rolleyes:

விகடன்
02-05-2011, 02:36 AM
உங்களை சரியாக புரிந்துகொண்ட நண்பன்!

Nivas.T
02-05-2011, 05:32 AM
உங்களை சரியாக புரிந்துகொண்ட நண்பன்!

:eek::confused:
:D:D:D:D

அன்புரசிகன்
02-05-2011, 05:51 AM
:eek::confused:
:D:D:D:D

:confused::confused::confused:
இந்த ரியாக்ஷனுக்கு என்ன பெயர்??? அதுக்கும் ஸ்மைலி போட்டிராதீங்க..

Nivas.T
02-05-2011, 06:00 AM
:confused::confused::confused:
இந்த ரியாக்ஷனுக்கு என்ன பெயர்??? அதுக்கும் ஸ்மைலி போட்டிராதீங்க..

:eek: - ஐயயோ நான் குப்பைனு என் நண்பன் சரியாக புரிந்து கொண்டான் என்று சொன்னதுக்கு

:confused: -இது அவருக்கு எளிமையா புரிஞ்சு போச்சே

:D -விடுங்க பாஸ் இவங்க எப்பவுமே இப்படித்தான்

:icon_b:

sarcharan
06-09-2011, 01:10 PM
http://www.youtube.com/watch?v=WsLyD3ECfas&feature=related

அசிங்கப்பட்டான்டா ஆட்டோக்காரன்

Nivas.T
06-09-2011, 01:45 PM
ஏன் சாரா ஏன் இந்த கொலைவெறி?:confused::D

aren
06-09-2011, 01:53 PM
இப்படி உண்மையை வெளியே சொல்லிவிட்டானே. அவர் செய்தது சரிதான். சில சமயம் புத்திசாலி நண்பராகவும் சிலர் நமக்கு வாய்ப்பது உண்டு, என்ன செய்வது.

Nivas.T
06-09-2011, 02:07 PM
என்ன பண்ணுவது ஆரென் இதெல்லாம் நான் எப்போதோ செய்த பாவங்கள் என்று நினைத்து என்னை நானே சமாதானப் படுத்திக்கொள்வேன். எனக்கு வைக்கப் படும் ஆப்புகள் எல்லாம் என்னோடு இருப்பவர்களால்த்தான் :frown::frown:
:D:D

seguwera
06-09-2011, 02:51 PM
நிவாஸ் அப்போ உன் நண்பனை யாரும் எங்க குப்பை கொட்டி கொட்டிக்கிட்டு இருக்கான்னு கேட்டால் நைஜீரியான்னு சொல்லாம உங்க தலைய காட்டலாம்
:mini023::mini023::mini023::mini023::D

seguwera
06-09-2011, 02:53 PM
:lachen001:அடடா எதிர்க்கட்சிக்காரன் பார்த்தால் என்ன நெனைப்பான் :lachen001:

sarcharan
07-09-2011, 09:35 AM
ஏன் சாரா ஏன் இந்த கொலைவெறி?:confused::D

:redface::redface::redface:

இப்படி உண்மையை வெளியே சொல்லிவிட்டானே. அவர் செய்தது சரிதான். சில சமயம் புத்திசாலி நண்பராகவும் சிலர் நமக்கு வாய்ப்பது உண்டு, என்ன செய்வது.

அவன் ஒரு புத்திசாலி வேற, சொல்றதையும் சொல்லீட்டு போன கட் பண்ணிட்டான்..

என்ன பண்ணுவது ஆரென் இதெல்லாம் நான் எப்போதோ செய்த பாவங்கள் என்று நினைத்து என்னை நானே சமாதானப் படுத்திக்கொள்வேன். எனக்கு வைக்கப் படும் ஆப்புகள் எல்லாம் என்னோடு இருப்பவர்களால்த்தான் :frown::frown:
:D:D

யாரை சொல்லுறீங்க..:sprachlos020::sprachlos020::confused::confused::p:p;);).

பொதுவாக நிவாஸ் மனசு தங்கம்..
பெரும் போட்டியுன்னு வந்துபுட்ட சிங்கம்...
லலலாலா லா லா
லலலாலா லா லா

sarcharan
07-09-2011, 09:41 AM
:lachen001:அடடா எதிர்க்கட்சிக்காரன் பார்த்தால் என்ன நெனைப்பான் :lachen001:

இவனுக்கு வேற வேலை இல்லை போலும் அப்படின்னு :lachen001::lachen001::lachen001:

ஹீ ஹீ நான் டி ஆர மட்டும் தான் சொன்னேன்...;);)

Nivas.T
07-09-2011, 02:05 PM
நிவாஸ் அப்போ உன் நண்பனை யாரும் எங்க குப்பை கொட்டி கொட்டிக்கிட்டு இருக்கான்னு கேட்டால் நைஜீரியான்னு சொல்லாம உங்க தலைய காட்டலாம்
:mini023::mini023::mini023::mini023::D

அண்ணா எதாவது கோபம் இருந்தா தனியா பேசி தீத்துக்கலாம், இப்படியெல்லாம் பண்ணா நான் அழுதுடுவேன் :traurig001::traurig001::traurig001:

Nivas.T
07-09-2011, 02:09 PM
:lachen001:அடடா எதிர்க்கட்சிக்காரன் பார்த்தால் என்ன நெனைப்பான் :lachen001:

:redface::redface::redface:

அவன் ஒரு புத்திசாலி வேற, சொல்றதையும் சொல்லீட்டு போன கட் பண்ணிட்டான்..

யாரை சொல்லுறீங்க..:sprachlos020::sprachlos020::confused::confused::p:p;);).

பொதுவாக நிவாஸ் மனசு தங்கம்..
பெரும் போட்டியுன்னு வந்துபுட்ட சிங்கம்...
லலலாலா லா லா
லலலாலா லா லா

இவனுக்கு வேற வேலை இல்லை போலும் அப்படின்னு :lachen001::lachen001::lachen001:

ஹீ ஹீ நான் டி ஆர மட்டும் தான் சொன்னேன்...;);)

யார்யாரோ என்ன அடிச்சு பெரிய ஆளா ஆயிட்டாங்க, அதனால நீங்களும் என்ன அடிச்சு பெரிய ஆளா ஆகனும்னு நெனைக்றீங்க. ஆகனும் பெரிய ஆளா ஆகனும். அப்டி ஆனா இந்த ஏட்டையவுக்கு என்ன செய்வீங்க?????? :D:D:D:D:D:D:D:D:D:D:D

vseenu
20-09-2011, 01:57 PM
நைஜீரியாவிலிருந்து நம்ம ஊர் பாஷை மச்சியை கேட்க மகிழ்ச்சிதான்

aparajithc.achan
08-10-2011, 09:03 AM
சொந்த வாழ்க்கையில் நடந்ததைச் சொல்ல தைரியம் வேணும்... அது உங்க கிட்ட இருக்குதுங்கோவ்....

வாழ்த்துக்கள்....

அபராஜிதன்

jaffer
08-10-2011, 09:16 AM
உண்மை சம்பவங்கள் ரசிக்கும் படிதான் இருக்கும் அப்படியே இதுவும்

Nivas.T
12-10-2011, 07:40 AM
நைஜீரியாவிலிருந்து நம்ம ஊர் பாஷை மச்சியை கேட்க மகிழ்ச்சிதான்

சொந்த வாழ்க்கையில் நடந்ததைச் சொல்ல தைரியம் வேணும்... அது உங்க கிட்ட இருக்குதுங்கோவ்....

வாழ்த்துக்கள்....

அபராஜிதன்

உண்மை சம்பவங்கள் ரசிக்கும் படிதான் இருக்கும் அப்படியே இதுவும்

ரசித்து பின்னூட்டமிட்ட சீனு, அப்ராஜித்தன், ஜாபர் ஆகியோருக்கு மிக்க நன்றி

venkat8
25-01-2012, 08:27 PM
சுத்தமா சிரிப்பு வரவே இல்லை