PDA

View Full Version : கொல்லாதீர்



பாரதி
28-08-2010, 12:25 AM
ஓருயிரைக் கொல்லாதீர்
மிருகவதை சட்டத்தை கையிலெடுப்பீர்...
உரைத்தனர் பிக்குகள்.
சட்டென எழுந்தது கேள்வி ஒன்று.
மனிதவதை சட்டம் ஏனில்லை அங்கு?

ஆதவா
28-08-2010, 01:59 AM
ஒரு படத்தில் விவேக் கூறுவார்... பறவைகளைப் பாதுகாக்க ப்ளூக்ராஸ் இருக்கிறது... மனிதர்களுக்கு வைட் கிராஸ் என்று தனது பூணூலை இழுத்து காண்பிப்பார்.
உலகிலேயே அதிபயங்கரமானதும் கொடூரமானதுமான விலங்கு மனிதன்தான்...
ஒரு சிங்கம், இன்னொரு சிங்கத்தை அடிப்பதில்லை (உண்பதில்லை)
ஒரு சிருத்தை இன்னொன்றை அடிப்பதில்லை. (உண்பதில்லை)
ஒருசில விதிவிலக்குகள் இருந்தாலும் அவைகளைப் பெரிதாய் மதிக்கவேண்டியதில்லை

அஃறிணைகளை விடவும் மோசமானவர்கள்!!!


மனிதவதை விடுங்கள்!!!
மனவதைச் சட்டம் கொண்டுவரட்டும் முதலில்...

பாரதி
28-08-2010, 03:29 AM
ஆதவா..
சில தினங்கள் முன்பு அருகில் இருக்கும் நாட்டில் நடந்த நிகழ்வு இது.
திடீரென்று வடலூராரின் சீடர்களான பெளத்த குருமார்கள் குறித்த வியப்பே இதற்கு காரணம்.

அமரன்
28-08-2010, 09:53 PM
சகல ஜீவராசிகளையும் வதைப்பவர்கள் மனிதர்கள். அவர்களைக் கட்டுப்படுத்த சட்டங்கள் போடப்பட்டன. அப்படிப் போட்ட சட்டங்கள் சட்டங்களில் அடைக்கப்பட்டு தொங்கும் காலம் பல இடங்களில்.

பாரதி அண்ணா, நரமாமிசம் தின்பவர்களுக்கு ஏனைய மாமிசங்கள் திகட்டி விட்டதோ என்னவோ.

அரச மரத்தடியில் களைப்பாற மனுசனுக்கு அனுமதி இல்லை. அதில் அமர்ந்திருக்கும் உரிமை பிள்ளையாருக்கா புத்தருக்கா என்ற கழுத்தறுவை கொசுறு. அப்படிப்பட்ட நாட்டில் இப்படி நடக்காவிட்டால் வியப்பு. நீங்கள் கேள்விப்பட்டது அங்கே சர்வ சாதாரணமான அன்றாட நடப்பு.

பாரதியின் ரவுத்திரம் ஆதங்கமாகிக் கவிதை வடித்துள்ளது.

பாராட்டுகள் அண்ணா.