PDA

View Full Version : தலைப்பில்லா கவிதை



ஆதவா
27-08-2010, 02:58 PM
Qவில் வளையாதவன் வீட்டில்
அணைந்த நர்த்தனப் புகை
மின்சார விளக்கில் வழிந்து கிடக்கிறது
கம்பிகளின் வழியே
வாய்களைப் பரிமாறியவன்
பாதிவழியிலேயே அறுந்து கிடக்கிறான்
எப்போதும் திறந்து கிடக்கும்
எதிர்வீடுகள்
கானல் புகையில் காணாமல் போகின்றன
அவனை வாங்க வந்தவனும்
இவனை விற்க வந்தவனும்
தற்கொலை செய்துகொள்கிறார்கள்
காசட்டைத் தலைகளை
கொய்து எறிகிறார்கள் கணக்குள்ளவர்கள்
மாய தொடர்புகள் துண்டிக்கப்பட்டு
காயங்கள் போர்த்திக் கிடக்கிறது
உயிர்க்கோளம்.

இவை கண்டு
மனநுண்மைகளில்
பாதரசம் நிரம்பிய மனிதர்கள்
சுய பிரஞ்ஞையற்ற ஆதிவாசியாகத்
திரிகிறார்கள்
இணையமற்ற காட்டில்

Ravee
27-08-2010, 03:05 PM
ஒருமுறைக்கு இருமுறை படித்த பின் சொன்ன வார்த்தை " ஆஹா " :p

அமரன்
27-08-2010, 03:48 PM
ஒருமுறைக்கு இருமுறை படித்த பின் சொன்ன வார்த்தை " ஆஹா " :p

முதல் முறை ஆ..
மறு முறை ஹா..
அப்படித்தானே.. ஆஹா..

ஆதவா
27-08-2010, 04:12 PM
ஒருமுறைக்கு இருமுறை படித்த பின் சொன்ன வார்த்தை " ஆஹா " :p


முதல் முறை ஆ..
மறு முறை ஹா..
அப்படித்தானே.. ஆஹா..

ஆஹா ஆஹா.....

யப்பா... இப்படியே ஓட்டிராதீங்கப்பா!!!! :sprachlos020::sprachlos020:

அமரன்
27-08-2010, 04:16 PM
வில்லு என்றாலே எனக்குப் பயம். அதிலும் விஜய் வில்லு பாத்த பிறகு அப்படி ஒரு பயம்.
நீங்க என்னடான்னா வில்லு முன்னால சுழிச்சுக் காமிச்சு இருக்கீங்க. பயப்படாமல் என்ன செய்றது

ஆதவா
27-08-2010, 04:38 PM
வில்லு என்றாலே எனக்குப் பயம். அதிலும் விஜய் வில்லு பாத்த பிறகு அப்படி ஒரு பயம்.
நீங்க என்னடான்னா வில்லு முன்னால சுழிச்சுக் காமிச்சு இருக்கீங்க. பயப்படாமல் என்ன செய்றது

தளபதியின்:) வில்லு வை விட மோசமாகவா இருக்கிறது கவிதை?? :D:D:D

கீதம்
27-08-2010, 11:32 PM
என்னைப் பொறுத்தவரை இக்கவிதை எனக்குக் காட்டுவது தன் வறியமுகத்தை.

மின்சாரக்கட்டணம் கட்டப்படாமல் இருண்டுகிடக்கும் வீடு, தொலைபேசிக்கட்டணம் கட்டப்படாமல் அறுக்கப்பட்ட தொடர்பு, கேட்கப்படவிருக்கும் இரவல்களுக்காய் கதவடைக்கும் எதிர்வீடுகள், எதையும் விற்கவோ வாங்கவோ முடியாமல் திணறல், காசட்டை, கடனட்டையானபின் உண்டாகும் சிரமம், துண்டிக்கப்பட்ட இணையத்தொடர்பு, இத்தனையும் ஏற்று வாழும் ஒருவனது வாழ்க்கை ஒரு ஆதிவாசியின் வாழ்வுக்கு நிகரானது.

இப்படிதான் அர்த்தப்படுத்திக்கொண்டேன். ஒன்றுமே புரியாமல் போவதை விடவும் கொஞ்சமாவது எனக்கும் புரிகிறதே என்றொரு சந்தோஷம்.

ஆதவா, இப்படி ஒரு வியாக்கியானமா என்று வருத்தப்படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

ஆதவா
28-08-2010, 01:51 AM
இப்படிதான் அர்த்தப்படுத்திக்கொண்டேன். ஒன்றுமே புரியாமல் போவதை விடவும் கொஞ்சமாவது எனக்கும் புரிகிறதே என்றொரு சந்தோஷம்.

ஆதவா, இப்படி ஒரு வியாக்கியானமா என்று வருத்தப்படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


பார்ப்பவர்களுக்குப் பல கருத்துக்களைக் கொடுப்பதுதானே கவிதை? இதில் நீங்கள் நினைத்தது தவறென நான் சொல்லுவது என் கவிதையை கொலை செய்வதற்கு சமமானதாகும்.

உங்களது ஆழ்ந்த வாசிப்பையும், திறமையையும் கண்டு வியக்கிறேன்.
மிகவும் நன்றிங்க கீதம்

உங்கள் அர்த்தம் அனைத்தும் சரியானதே வரிகளை சற்று இடம்மாற்றினால்..

Nivas.T
28-08-2010, 06:39 AM
உங்கள் அர்த்தம் அனைத்தும் சரியானதே வரிகளை சற்று இடம்மாற்றினால்..

அப்பாடி கவிதை எனக்கும் புரிஞ்சிடுச்சு :)
அதவா ரொம்ப கஷ்டமா இருந்தது :rolleyes:

நல்லக் கவிதை
நன்றி ஆதவா :)

ஆதி
01-09-2010, 12:23 PM
இன்றைய சூழலில் பயன்படுத்து பல விஷயங்கள் படிமங்களாகி உலவுகின்ரன இக்கவிதைக்குள், அதற்கு தனி சபாஷ் ஆதவா..

Qவில் வளையாதவன்

கம்பிகளின் வழியே
வாய்களைப் பரிமாறியவன்

கானல் புகையில் காணாமல் போகின்றன

சுய பிரஞ்ஞையற்ற ஆதிவாசியாகத்
திரிகிறார்கள்
இணையமற்ற காட்டில்

இவை நான் மிக ரசித்த வரிகள்..

பாராட்டுக்கள்

ஆதவா
01-09-2010, 12:33 PM
நிவாஸ் மற்றும் ஆதனுக்கு நன்றிகள்!!

@ ஆதன். (பழக்க தோஷத்தில ஆதவன்னு டைப் அடிக்க வருது.)
ரசித்தமைக்கு நன்றி!

சசிதரன்
01-09-2010, 02:50 PM
உங்களுக்கே உரிய சொல்லாடலில் அற்புதமான கவிதை ஆதவா... வேறென்ன சொல்ல... பிரமிப்பாக இருக்கிறது... :)

"பொத்தனூர்"பிரபு
03-09-2010, 04:41 AM
முதலில் புரிய வில்லை , பின் கீதம் கொடுத்த விளக்கத்துக்குக்கு பின் பிடிச்சிருக்கு

கலையரசி
03-09-2010, 01:59 PM
அப்பாடா! பல முறை வாசிப்புக்குப் பிறகு எனக்கும் கொஞ்சம் புரிந்தது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
பாராட்டுக்கள் ஆதவா!

ஆதவா
03-09-2010, 02:41 PM
நன்றி
சசிதரன்
பொத்தனூர் பிரபு
கலையரசி

அமரன்
03-09-2010, 10:21 PM
வாழ்ந்து கெட்ட வீடு..

இந்த ஒற்றை ஓட்டுக்குள் அடக்கி, ஆள விடலாமா ஆதன், படிமங்களை.

நீங்கள் இன்னும் விரிவாக அலசி இருக்கலாம் ஆதன்.

படிமக் கவிதைகள் உங்களுக்குக் கற்கண்டுகள் என்று எனக்குத் தெரியும்.

கடிப்பீங்களா..

பாரதி
11-09-2010, 12:28 PM
ஆதிவாசி உணர்வற்றவனாக இருப்பானா என்ற ஐயத்தை எழுப்புகிறது கவிதை!

அவனை வாங்க வந்தவனும், இவனை விற்க வந்தவனும் .... மிக அழகு.

கவிதை முழுவதிலும் சொல்லாடல் மிக நன்றாக இருக்கிறது. இருப்பினும் ”அளவுக்கு மிஞ்சினால்” என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

தலைகள் என்பதை எண்களாக எண்ணிக்கொள்ளலாமா..?

இதயமற்ற வீடுகளும்
இணையமற்ற காடுகளும்
காலப்பெருவெளியில்
காணாமல் போகட்டும்.

உங்களின் சொல்லாடல்கள் என் போன்ற எளியவர்களிடமும் எளிதில் சென்று சேர வேண்டும்.

இன்னும் எழுத வாழ்த்துகிறேன் ஆதவா.

ஆதவா
15-09-2010, 01:29 PM
மிக்க நன்றி பாரதி அண்ணா.
தொடர்ந்து எழுதுகிறேன்.