PDA

View Full Version : விடியல்..!



கஜினி
27-08-2010, 02:12 PM
காலைவரை தூங்கினேன்
எழுந்ததும் வந்தது விடியல்
காலவரையில் தூங்கினேனே
வரவேயில்லை விடியல்..!

சிவா.ஜி
27-08-2010, 02:49 PM
”காலவரையில் தூங்கினேனே...”

புரியலையே.....!!!!

அமரன்
27-08-2010, 03:46 PM
நீங்கள்
விடியலில் எழும்புகிறீர்கள்.
நான்
எழும்போது விடிகிறது..

எப்போது
மோதி உடைகிறேனோ
அப்போது
பிறக்கக் கூடும்
இன்னொரு பூமி..

கீதம்
27-08-2010, 11:48 PM
காலவரையற்றுத் தூங்கினேனே என்றிருந்தால் பொருள் சரியாகவரும் என்று நினைக்கிறேன்.

பாராட்டுகள், தொடர்ந்து முயலுங்கள், கவிதை வசப்படும்.

ஆதவா
28-08-2010, 02:13 AM
விடியல் என்பதே கிடையாதுங்க..
வெளிச்சம் எப்போதும் இருக்கிறது, நாம்தான் சற்று நேரம் மறைந்து ஓய்வெடுக்கிறோம்!! வெளிப்படும் ஒவ்வொரு நேரத்தையும் விடியல் என்றா கூறுவது??



நீங்கள்
விடியலில் எழும்புகிறீர்கள்.
நான்
எழும்போது விடிகிறது..

எப்போது
மோதி உடைகிறேனோ
அப்போது
பிறக்கக் கூடும்
இன்னொரு பூமி..

வாவ்.... அருமை அமரன்!!!

கஜினி
28-08-2010, 07:01 AM
கருத்து தெருவித்த பெருந்தைகளுக்கு நன்றி.