PDA

View Full Version : அரட்டை அடிக்கலாம் வாங்க!!!Pages : [1] 2

நிலா
09-11-2003, 09:21 PM
இந்தப் பதிவின் நோக்கம் எல்லோரும் சந்தோஷமாக சிரித்து இன்புறவேண்டும் என்பதுவே.அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்கி தொடங்குகிறேன்.யார் வேண்டுமானாலும் எழுத்துகள் கொடுக்கலாம் .எல்லோரும் எழுத முன்வாருங்கள் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சரி முதலில்

ப்புன்னு முடியணும் சரியா?
உ.ம்
மயக்குது உன் சிரிப்பு :lol:

எங்கஎடுத்துவிடுங்க பார்க்கலாம்....!

முத்து
09-11-2003, 09:53 PM
ரசத்தில் குறைந்தது கொஞ்சம் உப்பு ...

இளசு
09-11-2003, 10:58 PM
ரசத்தில் குறைந்தது கொஞ்சம் உப்பு ...

ஆனாலும் முத்துவை சிரிக்க வைத்தது "குப்பு":lol:

(ஒரு ஆள் ஒண்ணுக்கு மேல சொன்னா தப்பு ?)

பாரதி
10-11-2003, 04:07 AM
இப்படி ஒரு எண்ணம் நிலாவின் மனதில் தோன்றியதில் எனக்கு வியப்பு!

(நன்றி பூ)

poo
10-11-2003, 08:25 AM
[quote]இப்படி ஒரு எண்ணம் நிலாவின் மனதில் தோ

நண்பர் பாரதியே தவறாக எழுதியதில் ஒரே படபடப்பு!!

poo
10-11-2003, 08:28 AM
ரசத்தில் குறைந்தது கொஞ்சம் உப்பு ...

நல்லா வாங்கி கட்டிக்கிட்டிங்களா அப்பு?!!

இக்பால்
10-11-2003, 09:08 AM
பிரச்னை வந்தால் நிலாவே பொறுப்பு.

சேரன்கயல்
10-11-2003, 09:41 AM
பொறுப்பு வந்தாலே ஒரே வெறுப்பு...

சேரன்கயல்
10-11-2003, 09:42 AM
ரசத்தில் குறைந்தது கொஞ்சம் உப்பு ...

ஆனாலும் முத்துவை சிரிக்க வைத்தது "குப்பு":lol:

(ஒரு ஆள் ஒண்ணுக்கு மேல சொன்னா தப்பு ?)

அதென்ன பிராக்கெட்ல ஒரு தொடுப்பு...!!

Nanban
10-11-2003, 09:59 AM
நண்பர்களிடையே வந்து விடாமல் இருக்க வேண்டும் கசப்பு.........

இக்பால்
10-11-2003, 10:28 AM
நண்பர் நண்பன் வந்தாலே இனிப்பு.

poo
10-11-2003, 11:14 AM
நண்பர்களிடையே வந்து விடாமல் இருக்க வேண்டும் கசப்பு.........

ஏன் இந்த தவிப்பு?!

என்றும் நிலவும் சிரிப்பு!!

poo
10-11-2003, 11:19 AM
எல்லாருக்கும் டி.ராஜேந்தர்னு நெனப்பு!!!!?

தஞ்சை தமிழன்
10-11-2003, 11:45 AM
இதையெல்லாம் படித்தவுன் என் மனதில் உண்டானது களிப்பு.

நிலா
10-11-2003, 06:28 PM
உங்களால் மன்றத்தில் ஒரே கலகலப்பு!
பங்கெடுக்கும் முத்து,தலை இளசு,பாரதி,பூ,சேரன்கயல் .நண்பன்,இக்பால்,தஞ்சைத்தமிழன்
உங்களால் இப்பகுதிக்கு சிறப்பு!

நண்பர்களே குறைந்தது 4வரிகளாவது எழுதினால் கூடும் வனப்பு!
இல்லாவிட்டால் நான் வாங்கிடுவேன் கப்பு!(fail thaan )

kathukutti
10-11-2003, 06:42 PM
எல்லாரும் எழுதியது ஒரு நல்ல தொகுப்பு.

முத்து
10-11-2003, 06:47 PM
எல்லோரும் எழுதறதப் பாத்து ஒரே திகைப்பு..
அதோட கொஞ்சம் பிரமிப்பு..
நாமும் ஏதாவது எழுதனும்னு கையில் நமநமப்பு..
அதுக்காக ஏதோ எழுதி மன்றத்துல வந்துடக்கூடாது கைகலப்பு ..
இதுதான் எனக்கு இப்போ மனசுல நினைப்பு ...

நிலா
10-11-2003, 06:54 PM
வார்த்தைகளின் அழகிய கோர்ப்பு
மனதினில் ஆனந்த மத்தாப்பு
கலைந்தது கப்பு விழுமென்ற மப்பு
இது மன்ற நட்புகளின் தீர்ப்பு!

Chiru_Thuli
10-11-2003, 08:13 PM
[glow=red:14045e42d7]..ப்பு[/glow:14045e42d7]
ஆற்றோரத்து அழகிய தென்னந்தோப்பு
ஓடும் நீர் சுழலில் சுற்றுவதால் ஏற்படும் சலசலப்பு,
அக்கரையில் அழகிய வயல் வரப்பு,
நாற்று நடும் பெண்களின் வெள்ளிச் சிரிப்பு,
அதில் எனக்கு மட்டுமே ஆனவளின் பளபளப்பு,
இலை மறை காயாய் தெரியும் கொடி இடுப்பு,
கொடி இடையில் லாவகமாய் கொசுவக் கோர்ப்பு
வெத்தலை மென்று ஒதுக்கிய கண்ணக் கதுப்பு,
வெத்தலை சாறால் அதரத்து மேலுள்ள சிவப்பு,
இவ்வளவும் என்னவளின் சிறப்பு
அவளின் பக்கம் எனக்கோர் ஈர்ப்பு
நினைச்சுப் பார்க்கையிலேயே மனசுக்குள்ள மதமதப்பு
என்ன செய்யலாம் என்று மனசுக்குள்ளே ஒரு யோசிப்பு,
ஏதாவது செய்யனுமே அவள கவரனுமே என்ற தவிப்பு
"விடிஞ்சு முதுவுள வெயிலடிக்குது இன்னும் என்ன தூக்கம்"-னு எழுப்பிட்டாரு எங்க அப்பு!

நிலா
10-11-2003, 08:14 PM
சிறுதுளி வைத்தார் முத்தாய்ப்பு
நானடைந்தேன் இறுமாப்பு!
இது எல்லோருடைய உழைப்பு
அதனால் வந்த களைப்பு
இந்த எழுத்துக்கு இனி விடுப்பு
அடுத்த எழுத்து சொல்ல அழைப்பு
சொல்லப்போறார் நம்ம எம்பரரோட சித்தப்பு! :D

puppy
10-11-2003, 08:15 PM
அரட்டை அடிக்கலாம்ன்னு சொல்லிட்டு எங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்காம பெரிசுங்க மட்டும் பேசிக்கிட்டா எப்படிப்பு.....
இது ஏதோ போட்டி மாதிரி இருக்கு..அரட்டை அடிக்கிற மாதிரி
இல்லை...நான் வரலை இந்த பக்கம்

அலை...
11-11-2003, 03:20 AM
அப்பு. நமக்கெதுக்கு பொல்லாப்பு..

பாரதி
11-11-2003, 05:26 PM
தொண்டையிலே ஒரே கரகரப்பு
அவகிட்டே மருந்து கேட்டா பதில் தொணதொணப்பு
அவளுக்கு ஒரே இறுமாப்பு
நானும் போட்டேன் சோப்பு
வச்சா பாரு ஒரு ஆப்பு
வந்து விழுந்துச்சு செருப்பு
கடைசிலே கேட்டேன் மாப்பு
நிலாவோடது நல்ல தலைப்பு
இதுவே இன்றைய குறிப்பு.

நிலா
11-11-2003, 05:30 PM
உங்களுடையதை படித்து ஒரே சிரிப்பு
நல்ல வார்த்தை விரிப்பு
பாராட்டலைன்னா வரும் முறைப்பு
என்ன அங்க ஒரே முனுமுணுப்பு!

பாரதி
11-11-2003, 05:32 PM
உடனடி பதிலைப் பார்த்ததும் திகைப்பு
உங்க வார்த்தைக்கு இல்லை மறுப்பு.

நிலா
11-11-2003, 05:33 PM
அரட்டை அடிக்கலாம்ன்னு சொல்லிட்டு எங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்காம பெரிசுங்க மட்டும் பேசிக்கிட்டா எப்படிப்பு.....
இது ஏதோ போட்டி மாதிரி இருக்கு..அரட்டை அடிக்கிற மாதிரி
இல்லை...நான் வரலை இந்த பக்கம்


ஏனிந்த கோவிப்பு
வேண்டும் உங்கள் ஆதரவு அறிவிப்பு
போட்டியில்லை இது சந்தோஷ தெரிவிப்பு!

நிலா
11-11-2003, 05:47 PM
அடுத்த எழுத்து(கள்) யாராவது கொடுங்க !

பாரதி
11-11-2003, 05:59 PM
ஏனிந்த சலிப்பு?
சொன்னதில் ஏதேனும் தப்பு?
காண்பிக்காதீங்க இளிப்பு!
ரசத்திற்கு தாளிப்பு
சுவை பற்றி சொன்னால் வரும் பழிப்பு.
என்ன அங்கே சத்தம். நான் எழுதியது கிழிப்பு?
அந்த சத்தத்தைக் கேட்டதும் யார் முகத்தில் ஜொலிப்பு?

Chiru_Thuli
11-11-2003, 06:38 PM
நிலா,
..க்கும் என்று முடியும் வார்தைகளில் முடியும் வரிகளைக் கேட்கலாமா?

நிலா
11-11-2003, 06:50 PM
எனது மனது உமக்கு நன்றி உரைக்கும்!
வரும் நட்புகள் இதனை தொடர நினைக்கும்!
பப்பியும் சேர்ந்தால் இப்பகுதி மணக்கும்!
அனைவரும் எழுத மகிழ்சி பிறக்கும்!

Emperor
12-11-2003, 06:55 AM
நினைக்கும்
வரைக்கும்
இனிக்கும்

வேறெது? காதலாக்கும் :D

Emperor
12-11-2003, 07:04 AM
காதல் பிறக்கும்
அருமையாக மணக்கும்
கனவுகள் இனிக்கும்
புதிய கதவுகள் திறக்கும்
வீடு கண்டிக்கும்
நாடு தண்டிக்கும்
ஆழமாக கடிக்கும்
மனம் தத்தலிக்கும்
மதம் பிடிக்கும்
இனித்த காதல் கசக்கும்
நம் கதையை முடிக்கும்

இக்பால்
12-11-2003, 08:37 AM
அடிக்கிற கை அணைக்கும்.

Emperor
12-11-2003, 08:55 AM
அனைக்கிற கை அடிக்கும் :D

Emperor
12-11-2003, 08:57 AM
குளைக்காத நாய் கடிக்கும் :D

suma
12-11-2003, 11:50 PM
இந்த பக்கம் வந்தால் இனிக்கும்..
வராமல் போனால் நிலா கோபிக்கும்..

அலை...
13-11-2003, 12:06 AM
நிலா கோபித்து பின் சபிக்கும்?

அலை...

நிலா
13-11-2003, 04:27 AM
நிலா,
..க்கும் என்று முடியும் வார்தைகளில் முடியும் வரிகளைக் கேட்கலாமா?சொன்னவரின் பதிவு கிடைக்கும்
நண்பர்களின் பதிவு பக்கங்களை நிறைக்கும்
தலையின் கண்கள் இப்பகுதியை நோக்கும்
வாராதவர்களும் வந்தால்இப்பகுதி சிறக்கும்குலைக்காத நாய் கடிக்கும்


இப்படிப்பட்ட சிந்தனை எம்பரர்க்கே உதிக்கும்!

கலந்து சிறப்பிப்பவரால் என்மனம் பூரிக்கும்!

நிலா
13-11-2003, 11:28 PM
யாரையும் காணாமல் என்மனம் திகைக்கும்!

Chiru_Thuli
14-11-2003, 04:16 AM
மன்றத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லின் செல்வர்க்கும்
ஒரே மாதிரி ஒவ்வொரு வரியையும் முடிக்கும்
அடுக்கு மொழி மிகவும் பிடிக்கும்!
சொன்னவரின் வார்த்தைகளும் இங்கு உதிக்கும்
பணி மிக அதிகம் ஆனதாலாக்கும்
நான் எழுதா காரணமாக்கும்.

Nanban
14-11-2003, 06:47 AM
[glow=red:e6bf8acb82]..ப்பு[/glow:e6bf8acb82]
ஆற்றோரத்து அழகிய தென்னந்தோப்பு
ஓடும் நீர் சுழலில் சுற்றுவதால் ஏற்படும் சலசலப்பு,
அக்கரையில் அழகிய வயல் வரப்பு,
நாற்று நடும் பெண்களின் வெள்ளிச் சிரிப்பு,
அதில் எனக்கு மட்டுமே ஆனவளின் பளபளப்பு,
இலை மறை காயாய் தெரியும் கொடி இடுப்பு,
கொடி இடையில் லாவகமாய் கொசுவக் கோர்ப்பு
வெத்தலை மென்று ஒதுக்கிய கண்ணக் கதுப்பு,
வெத்தலை சாறால் அதரத்து மேலுள்ள சிவப்பு,
இவ்வளவும் என்னவளின் சிறப்பு
அவளின் பக்கம் எனக்கோர் ஈர்ப்பு
நினைச்சுப் பார்க்கையிலேயே மனசுக்குள்ள மதமதப்பு
என்ன செய்யலாம் என்று மனசுக்குள்ளே ஒரு யோசிப்பு,
ஏதாவது செய்யனுமே அவள கவரனுமே என்ற தவிப்பு
"விடிஞ்சு முதுவுள வெயிலடிக்குது இன்னும் என்ன தூக்கம்"-னு எழுப்பிட்டாரு எங்க அப்பு!

என்ன ஒரு இனிமையான ரைமிங்!!! பாராட்டுகள், வாழ்த்துகள் சிறுதுளி.......

Nanban
14-11-2003, 06:54 AM
வார்த்தைகள் கொழிக்கும்
பிள்ளைகள் களிக்கும்
இப்பகுதி செழிக்கும்...

இங்கு ரைமிங் நடை படிக்கும்
நண்பர்களுக்கு நாளை வாய்க்கும்
வாழ்க்கை சிறக்கும்.

இங்கு வருகவென அழைக்கும்
நிலாவின் அன்பில் திளைக்கும்
அன்பன்

நிலா
15-11-2003, 12:46 AM
அடுக்குமொழியால் நண்பனைக்கவர்ந்த சிறுததுளிக்கும்
கவர்ந்தவுடன் பதித்த நண்பனுக்கும்
நன்றிசொல்லி என் மனம் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கும்!
இன்னும் கவரப்படுவோர்க்கும்
வார்த்தைகள் சரளமாய் பிறக்கும்!

Nanban
15-11-2003, 04:33 AM
இசைப்பாட்டுக்கும் ஆளிருக்கும்
எசப்பாட்டுக்கும் ஆளிருக்கும்
உடன்பாடவும் ஆளிருக்கும்
இப்படி இசையாக இருக்கும்
பொழுது, பின்னே சோர்வு எங்கிருக்கும்?

Chiru_Thuli
15-11-2003, 06:13 AM
நன்றி நண்பர் நண்பனே! நன்றி நிலா...க்கும்
எனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்
என அவளுக்குத் தெரியாமலா இருக்கும்?
அவள் தருவாள் என என் மனம் எதிர் பார்க்கும்
தெரிந்து கொண்டே அவள் உள்ளம் சிரிக்கும்
என்னை தவிக்க விட்டு சோதிப்பதில் தினம் பூரிக்கும்
என் தவிப்பு அவளுக்கு பிடித்தமான விளையாட்டாக்கும்
என்ன தான் தவிக்க விட்டாலும் அவள் தான் எனக்கு எப்போதைக்கும்
அவளத்தனை கிறக்கமில்லை எப்போதைக்கும்
அவளைத்தவிர அடிமையாக மாட்டேன் வேறு எப்பேதைக்கும்
அவளுக்காக மட்டும் என் உள்ளம் காத்திருக்கும்
அவளுக்காக மட்டுமே என் தோட்டத்துப் பூவெல்லாம் பூத்திருக்கும்
வரவிருக்கும் -
அவளுக்காக என் உயிரிருக்கும்.

Chiru_Thuli
15-11-2003, 06:20 AM
[glow=red:91b244aa37]...க்கும்[/glow:91b244aa37]
அது சிரிக்கும்
ஒவ்வொரு சிரிப்பிற்கும்
ஆயிரமாயிரம் அர்த்தமிருக்கும்
அது அதற்கு மட்டுமே தெரிந்திருக்கும்
அந்தச் சிரிப்பில் நல்லது மட்டுமே கலந்திருக்கும்
அடி பட்ட அடுத்த நிமிடமே அது மறக்கும்
கள்ளங்கபடமில்லாச் சிரிப்பு மறுபடியும் பிறக்கும்
அதைக் காணும் போது மனம் எங்கெங்கோ பறக்கும்
அந்த நினைப்பிலேயே மனம் உய்க்கும்
அதன் பலனாய் அந்நாள் மிகவும் சிறக்கும்
அத்தனை சிறப்பிற்கும்
பெருமைக்கும்
பொருத்தமானது என் செல்லக் குழந்தையாக்கும்!

நிலா
15-11-2003, 06:54 PM
எசப்பாட்டு பாட மனம் துடிக்கும்
மற்றவரையும் தொடர அழைக்கும்
உமக்கு பிடிப்பதெல்லாம் அவளுக்கும்
பிடிக்க எண்ணம் நினைக்கும்!
அவள் உள்ளம் அதை உணர்ந்தே அடம்பிடிக்கும்
அதனால் உமக்கு கோபம் பிறக்கும்
ஊடல் காதலுக்கு பலம் சேர்க்கும்
காதலித்தவளை கைபிடிக்க ஊரே வியக்கும்
அவளோடு இணைந்ததால் வாழ்வு இனிக்கும்!

நிலா
15-11-2003, 06:54 PM
அடுத்த எழுத்து தரப்போவது யார்?

puppy
16-11-2003, 06:32 AM
நான் தரேன் நிலா.....அது என்று முடியனும் சரியா
வந்ததது
போனது...
அந்த மாதிரி....

இக்பால்
16-11-2003, 10:24 AM
நான் அடித்த பந்தது...
எனக்கே திரும்பி வந்தது.

Nanban
16-11-2003, 04:49 PM
பாடலது வந்தது
பப்பி கொடுத்த தலைப்பது

இங்கு மொழி பயில்வது
என்றும் உதவியாயிருக்குமது

கற்பனை வளம் ஊற்றெடுப்பது
நல்ல பயிற்சியைத் தருவது

இதுபோல எளிமையாகவாவது
இலக்கண படிப்பது
எல்லோருக்கும் நல்லது

அடுத்த முயற்சியது -
எதுகை, மோனை, தளை, சீர் என்பது
போல அனைத்து
இலக்கண உறுபுகளுக்கும் பயிற்சியது
ஆரம்பிப்பது நல்லது.....

இளசு
17-11-2003, 12:22 AM
நல்லது கெட்டது
நாலும் கலந்தது
உலகத்தில் உள்ளது..

தீயதைத் தீய்ப்பது
நல்லதை அணைப்பது
நம் கையில் உள்ளது..

madhuraikumaran
17-11-2003, 07:19 AM
வானமது
வாழ்வது
ஆரம்பித்த தலைப்பிது....

நிற்பது நடப்பது
போவது வருவது
இருவது அறுவது
அனைவரும் ருசிப்பது !
இனிவரும் நண்பரும்
பகிர்ந்திடச் சிறப்பது !

Chiru_Thuli
17-11-2003, 06:45 PM
.....அது
வானம் பொழிந்தது
பூமி விளைந்தது
வாழ்வு சிறந்தது
பல்லுயிர் பிழைத்தது.
பூமியால் பிழைத்தது
காடு கொன்றது
வீடு கொண்டது
காற்று நின்றது
மேகம் சிறுத்தது
வானம் பொய்த்தது
பூமி வரண்டது
வாழ்வு சுருண்டது.

இளசு
17-11-2003, 07:05 PM
அடி...பின்னுறீங்கப்பா எல்லாரும்..
ம.கு.; சி.து - பிச்சீட்டீங்க போங்க..

நிலா
17-11-2003, 10:52 PM
வீழ்ந்தது
மீண்டும் துளிர்த்தது
தை பிறந்தது
நம்பிக்கை மலர்ந்தது
வழி காட்டியது
மனம் தெளிந்தது
எழத்துணிந்தது
போராட்ட களமது
போட்டியிட எண்ணுவது
வீரனுக்கு அழகது
மாண்டாலும் மாண்புடையது
வெற்றிச்சங்கு முழங்குவது
தூரத்தில் கேட்கிறது!

வார்த்தைகணைகளை வீசும் நண்பர்களுக்கு மனம் நன்றிதனை உரைக்கிறது!!!

Nanban
18-11-2003, 01:40 PM
எதிர்பார்த்ததை விட எல்லோரும் சிறப்பாகப் பங்களிக்கிறார்கள். அதிகம் மனதை வ்ருத்திக் கொள்ளாமல், அதே சமயம் இசை நயம் மிக்க வார்த்தை தொகுப்பு விளையாட்டு நன்றாகத்தான் இருக்கிறது.

அடுத்தது ?

Chiru_Thuli
18-11-2003, 05:07 PM
நண்பர்காள்,
..தேன் என முடியும் வார்த்தைகளைத் தொடங்கலாமா?

"பார்த்தேன் ..
ரசித்தேன் ..
பக்கம் வரத் துடித்தேன் "
பாணியில் எடுத்து விடுங்கள்.

நிலா
18-11-2003, 11:15 PM
பார்த்தேன் ..
ரசித்தேன் ..
பக்கம் வரத் துடித்தேன்


வந்தால் விழும் உதை என பயந்தேன்
அந்த எண்ணத்தைக்கைவிடத் துணிந்தேன்
மனம்தனை மறைத்திட நினைத்தேன்
அது இயலாதென்பதை அறிந்தேன்
என்ன செய்வதென சிந்தனையில் ஆழ்ந்தேன்
நெருங்கும் வழிதனை யோசித்தேன்
என்னை புரியவைக்க முயற்சித்தேன்
நீ புரிந்ததை உணர்ந்து புன்னகைத்தேன்
அருகில் வந்து கைகொடுத்தேன்
உன் அன்பினில் எனை மறந்தேன்
ஆனந்தத்தில் நான் பறந்தேன்

முத்து
18-11-2003, 11:20 PM
இந்த பக்கம் வந்தேன்
அனைவர் திறமையும் பார்த்தேன்
அழகான சொல்விளையாட்டு ரசித்தேன்
நம்மால் ஆகாதுன்னு உணர்ந்தேன்
இதைவிட்டு அடுத்ததுக்கு பறந்தேன்

அப்புறம்தான் நிலாவின் தனி மடல் பார்த்தேன்
பதித்ததில் ஒன்று தவறென புரிந்தேன்
சரி செய்ய முனைந்தேன்
மூளையை பிசைந்தேன்
கடைசியில் ஏதோ தட்டச்சு அடித்தேன்...
வந்ததை அப்படியே பதித்தேன் ...

Emperor
19-11-2003, 12:01 PM
தமிழ்மன்றம் வந்தேன்
பல நன்பர்களை சந்தித்தேன்
அவர்களது பதிப்புகளை பார்த்தேன்
படித்தேன்
ரசித்தேன்
வியந்தேன்
என்னை மறந்தேன்
நாமும் பதிப்போம் என நினைத்தேன்
ஏதேதோ பதித்தேன்
ஆனால் அவற்றிற்க்கு ஈடு இனையில்லை என உணர்ந்தேன்
உள்ளம் துடித்தேன்
இப்பகுதியிலிறுந்து பிரிந்தேன்

Nanban
19-11-2003, 12:35 PM
கண்டேன்
ரசித்தேன்
நல்ல தேன்
ருசித்தேன்.

Chiru_Thuli
19-11-2003, 05:33 PM
...தேன்
உன்னையே சிந்தித்தேன்
உன்னையே நிந்தித்தேன்
உன் நினைவால் ஊறியது மனத்தேன்
உன் வாசம் மட்டுமே என் ஸ்வாசத்தில் மணத்தேன்.
உன் பெயரை மட்டுமே ராகமாய் இசைத்தேன்
உன் மனம் நிறைய மந்திரமாய் உச்சரித்தேன்

உன்னையல்லாத எண்ணங்களை சிதைத்தேன்
உன்னிடம் என்னை சுயம் சிறை வைத்தேன்
உன் கரிசனம் கிட்ட எனை வதைத்தேன்

உனக்காக தினம் தினம் நான் புதிதாய்ப் பூத்தேன்
வண்டாய் வர உனை அழைத்தேன்
வராமல் எனை அழ வைப்பதேன்?
உனக்காக அல்லாமல் இப்பூவிருப்பதேன்?
உனக்காக அல்லாமல் இப்பூவில் தேனிருப்பதேன்?

இப்பூ நாட எத்தனையோ வண்டு காத்திருப்பதேன்?
இப்பூவோ உன்னையே எதிர் பார்த்திருப்பதேன்?
இதை நீயோ உணராதிருப்பதேன்?
இப்போதே உணர்ந்தால் நம் வாழ்வு ஆகும் சுவையான தேன்.

gankrish
20-11-2003, 06:26 AM
நண்பர்களே இன்று தான் கண்ணில் பட்டது இந்த தலைப்பு; இதை படித்தவுடன் அடைந்தேன் வியப்பு;

மகிழ்ந்தேன் நம் மன்ற நண்பர்களின் வார்த்தை விளையாட்டை கண்டு..
படித்தவுடன் என் நெஞ்சம் குதுகலித்தது..

நிலா, பாரதி, சிறுதுளி, இக்பால், இளசு, சேரன்கயல்... வணங்குகிறேன் உங்களை. உங்கள் எழுத்து அபாரம்

இளந்தமிழ்ச்செல்வன்
20-11-2003, 10:13 AM
அடடா என நான் மகிழ்ந்தேன்
பின் உங்கள் அனைவரையும் வியந்தேன்
இங்கு இது சகஜம் என உணர்ந்தேன்
நான் வாளாவிருப்பதா என சிந்தித்தேன்
ஏதும் தோண்றா என் மனதை நிந்தித்தேன்
பின் இதோ சிறிது முயற்சித்தேன்

நிலா
20-11-2003, 06:51 PM
இ.த.செ அருமையாய் எழுதிவிட்டு கலங்குவதேன்?

கான்கிரீஷ் உங்க பாராட்டுகண்டு மகிழ்ந்தேன்!

நிலா
20-11-2003, 06:52 PM
அடுத்த எழுத்து மை!

இளசு
20-11-2003, 07:18 PM
என் அப்பா

ஆண்மை
அதிலும் கொஞ்சம் தாய்மை
இளமையில் வறுமை
இழக்காதது வாய்மை
மனதில் இல்லை முதுமை
வாக்கில் என்றும் இனிமை
கற்கும் மனதால் இளமை
கல்லாதது பொய்மை
உடலால், மனதால் தூய்மை


என் ஆதர்சம் அவர் - இது உண்மை..

நிலா
20-11-2003, 07:52 PM
உம்மால் மன்றத்திற்குப் பெருமை
எழுத்தால் விளங்குது உம் திறமை
மக்கள் அடைவர் மேன்மை
அவர்களுக்கில்லை சிறுமை
முடிதான் கருமை(உண்மை?)
உள்ளம் வெண்மை
என் உள்ளத்தில் குறைந்தது வெம்மை
அரவணைத்துச்செல்வது உமது தன்மை
இதனால் எல்லோருக்கும் நன்மை!

maduraiveera
20-11-2003, 11:08 PM
இப்பகுதி முடிந்தது
என்று சொன்னது
எந்தன் விழியது
தொடர்ந்தால் தொடருமது
என்ற எண்ணமது
மனதில் தோன்றியது
அதனால் வந்தது
இந்தப் பதிவது

குறிப்பு:
தலைப்பின் இரண்டாம் பக்கம்
மட்டுமே பார்த்து பரிதவித்து எழுதியது
இதனை தயவு செய்து நீக்கிவிடவும்.

இளசு
20-11-2003, 11:38 PM
நன்றாக உள்ளது நண்பரே
அப்படியே இருக்கட்டும்..
பாராட்டுகள்.

madhuraikumaran
21-11-2003, 12:55 AM
முடிதான் கருமை(உண்மை?)


ஓஹோ... அதான் தலை-மை ?
என்னே எந்தன் பேதமை !

இளந்தமிழ்ச்செல்வன்
21-11-2003, 09:00 AM
ஆஹா இளசு அருமை
உம் தந்தைக்கு நன்றி நவில்வது உமது கடமை
அதை நவின்ற விதம் மிக புதுமை
இதனால் உங்கள் இருவர் பற்றியும் நாங்கள் அடைந்தோம் பெருமை
உங்களை பற்றி சொன்னது நிலா பதுமை
அது அனைத்தும் உண்மை
நிலாவின் இப்பகுதியால் நம் அனைவர் மனதிலும் இனிமை
நம் தமிழுக்கு வாரா முதுமை
அதனால் என்றும் தமிழுக்கும் அதை (சு)வாசிப்போர்க்கு இளமை
இது நம்மன்றத்தால் வாய்த்தது என்பதால் அனைவருக்கும் எளிமை
இதனால் வெளிப்படும் பலரது திறமை
இங்கு கிடையாது பொய்மை
இங்கு இல்லாதது சிறுமை
இங்கு வந்தால் போய்விடும் மடமை
குடிகொள்ளும் ஆளுமை

poo
21-11-2003, 05:01 PM
அருமை... அருமை.. அருமை...!!!

Emperor
23-11-2003, 10:48 AM
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை :P

Emperor
23-11-2003, 11:05 AM
என்றென்றும் வேண்டும் இளமை
வேண்டாம் இளமையில் வறுமை

வாழ்க்கையில் வேண்டும் புதுமை
வேண்டாம் புதுமையில் சிறுமை

வாழ்வின் நிச்சயம் முதுமை
முதுமையிலும் வேண்டும் இனிமை

என்றும் செய்வோம் நம் கடமை
அதில் தீவிரமாக காட்டுவோம் நம் திறமை

அரியாமை,
இயலாமை
பலரது வாழ்வில் கொடுமை
இது தான் கசக்கும் உண்மை

தமிழ்மன்றம் தமிழுக்கு பெருமை
அதில் உலாவும் அனைத்து உறுப்பினர்களின் உள்ளம் வெண்மை

maduraiveera
23-11-2003, 11:13 PM
நன்றாக உள்ளது நண்பரே
அப்படியே இருக்கட்டும்..
பாராட்டுகள்.

இள(சு)மை
உந்தன் தலைமை
மற்றும் பெருந்தன்மை
கண்டு என் மனம் உவகை
கொண்டது என்பதே உண்மை

Nanban
24-11-2003, 10:13 AM
வார்த்தை விளையாட்டு மேன்மை
பலருக்கும் செய்யும் அது நன்மை
எல்லோருக்கும் படைக்கும் தாய்மை
இன்பம் அளித்தது பெருமை.
நான் சொல்வது உண்மை

நிலா
24-11-2003, 11:50 PM
நண்பர்களின் பங்கெடுப்பு அவர்தம் பெருந்தன்மை!

அடுத்த எழுத்து யார் தரப்போவது?

puppy
24-11-2003, 11:52 PM
யே என்னும் எழுத்தில் முடியவேண்டும்

அலையே சிற்றலையே
வந்து வந்து போகும் அலையே

முத்து
25-11-2003, 12:06 AM
பூங்காற்றே இன்று நீ வரலையே
எனக்குக் காரணமும் தெரியலையே
அதனாலே பசி தூக்கம் காணலையே
இப்படி நடக்குமுன்னு என்றும் நான் எண்ணலையே ..

puppy
25-11-2003, 12:07 AM
முத்து
உங்கள் வருத்தம் பூங்காற்று வராத்தற்க்கா
அல்லது பசி தூக்கம் இல்லாத்தற்க்கா

நிலா
25-11-2003, 12:08 AM
முத்து
உங்கள் வருத்தம் பூங்காற்று வராத்தற்க்கா
அல்லது பசி தூக்கம் இல்லாத்தற்க்கா


இது நல்ல கேள்வியே!
பதில் சொல்ல முத்து இன்னும் வரலையே

முத்து
25-11-2003, 12:13 AM
முத்து
உங்கள் வருத்தம் பூங்காற்று வராத்தற்க்கா
அல்லது பசி தூக்கம் இல்லாத்தற்க்கா

இது நல்ல கேள்வியே!
பதில் சொல்ல முத்து இன்னும் வரலையே


தூக்கம் வராததே .. காத்து வராததாலதான் ...
நான் எதுக்கும் கொஞ்ச நேரம் கழிச்சு
இந்தப் பக்கமா வர்ரேன்..
நிலைமை சரியில்லை இப்போ ...

தமிழ் தாட்சாயிணி
25-11-2003, 12:17 AM
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

.......

தமிழ் தாட்சாயிணி
25-11-2003, 12:19 AM
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே

ஆலய மணி வாழ், ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே

பாலில் விழுந்த பழங்களை போலே
பருவம் உருவம் நிறைந்தவள் நீயே
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே

முத்து
25-11-2003, 12:26 AM
தமிழ்தாட்சாயிணி அடிச்சு விளாசுறீங்க ...
தூள் கிளப்புங்க ...

gankrish
25-11-2003, 06:41 AM
நண்பர்களே உங்களை போல
எனக்கு எழுது தெரியவில்லையே...
எனக்கு தெரிந்தது எல்லாம் படித்து பாரட்டுதலையே..
என் பாராட்டுக்கள்

நிலா
25-11-2003, 06:46 AM
நண்பர் கான்கிரீஷ் தெரியவில்லையே
எனக்கூறி பாராட்டுதலையே
அழகாக சொல்லிய நீங்கள் சாமாணியன் இல்லையே!

puppy
26-11-2003, 06:42 PM
வா என்னும் எழுத்தில் முடிக்க வேண்டும்....

வரவா
போகவா
வந்து போகவா
போய் வரவா

இளசு
26-11-2003, 06:49 PM
வேடர் குலப்பெண்ணை விருத்தனாய்க் கவர்ந்த வேலவா
பாடும் இந்த பக்தன் நெஞ்சை நீ ஆளவா...
ஆசைச் சகதியில் இன்னும் நான் உழலவா
நேசம் காட்டி என்னை உன்னிடம் அழைக்க வா..!

(வெறும் சினிமாப்பாட்டு மட்டும் நான் தரவா?
இப்படி பக்திப் பாடலும் அவ்வப்போது புனையவா???)

maduraiveera
26-11-2003, 07:09 PM
மகிழ்ச்சி - தமிழ் மன்றத்துக்குப் புதியவர் வரவா
வந்தவர் சுற்றிப்பார்த்து விட்டு பதிக்காமல் போகவா
எத்தனையோ விதைத்தவர் ஏக்கத்துடன் வந்து போகவா
விடுமுறையில் செல்பவர் கூறினார் போய் வரவா ?

தமிழ் தாட்சாயிணி
27-11-2003, 09:35 AM
காவிரியே கவிக்குயிலே
கண்மணியே வா வா
மனம் வாடுதடி தவிக்குதடி
தளிர் கொடியே வா வா

......

சிரித்து சிரித்து மயக்கும்
புதுமையே வா
அணைத்து அணைத்து
ரசிக்கும் ரசிகனே வாசேலையில வீடு கட்டவா
சேர்ந்து வசிக்க
ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா
தென்றல் அடிக்க....

தமிழ் தாட்சாயிணி
27-11-2003, 09:46 AM
ஓ வெண்ணிலாவே வா ஓடிவா
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா


சேதுமாதவா உன்னை சேர்த்து அணைக்கவா
ஒரு சூது வாது தெரியாத சின்னப் பிள்ளை அல்லவா
சோது மாதவா.....

இளசு
27-11-2003, 08:52 PM
ம.வீ. & த. தா. .... கலக்குறீங்க.. பாராட்டுகள்.

Nanban
28-11-2003, 05:34 AM
கொஞ்சம் லேட்டானப் போறுமே, எல்லோரும் பின்னி எடுக்கற அழகைப் பார்க்க முடியாமல் போயிடுதே.........

நல்லது நிலா, வாழ்த்துகள்.........

maduraiveera
01-12-2003, 09:04 PM
வார்த்தை விளையாட்டைத் துவக்கியது நிலாவின் பதிப்பு
பதிப்புகளில் புதுப்புது விளாசல்களுமாய் இருக்கும்
நண்பர்கள் அனைவரின் கூட்டு முயற்சியாய் தொடர்வது
என்றுமே தொடரும் என்பதாய் அறிந்தேன்
படைப்பாளிகளை ஊக்குவிக்கும் திறமையே அருமை
என்றிருந்த தொடரில் தோன்றியுள்ள தேக்க நிலையே
இனி இல்லை எனக் கூற எழுத்தைத் தரவா
எனக்கேட்டு புது எழுத்தைத் தந்தேனோ (தந்தேன் - ஓ)

maduraiveera
01-12-2003, 09:04 PM
உன் எண்ணத்தைக் கேட்ட மனமோ
சோதனைகள் வாழ்வில் எத்தனையோ
என்று சொல்லி சோர்ந்து போனதோ

முத்து
01-12-2003, 09:23 PM
நிலா ...
எங்க போனீங்க ... ?
நாலைஞ்சு நாளா உங்கள
இந்தப் பக்கம் காணலையே ...

புது எழுத்து கொடுத்த மதுரை வீராவுக்கு ...
ஓ ..... போட்டுக்கொண்டே சீக்கிரம் வரவும் ....

puppy
04-12-2003, 05:24 PM
ஓ ஓ ஓ ஓ
நிலா இருக்காங்களான்னு
கூப்பிட்டு பார்க்கிறேன்......

நிலா
04-12-2003, 05:27 PM
எழுத்து கொடுத்த வீராக்கு ஒரு ஓ
தேடிய முத்துவிற்கு 2ஓஓ
நியாபகப்படுத்திய பப்பிக்கு 3ஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓஒ நான் நல்லாயிருக்கேன் பப்பி ஓஓஓஓஓஓஓஓஒ!

Nanban
06-12-2003, 10:47 AM
நல்ல சொல் சொல்லவோ
நல்ல கவிதை சொல்லவோ
நண்பர்களின் அன்பு மனதை காட்டவோ
அவர்களின் வார்த்தை விளையாட்டை பார்க்கவோ
கூடி விளையாடி களிக்கவோ
நேரம் தந்த இறைவனை வணங்கவோ........

நிலா
09-12-2003, 03:17 AM
குறியீட்டுக்கு நண்பனோ
நண்பனுக்கு குறியீடோ
நான் விழிப்பது தெரியலியோ
கொஞ்சம் எம்மேல கருணை காட்டக்கூடாதோ?

மக்கா இந்த பதிவையும் கொஞ்சம் கண்டுகோங்கோஓஓஓஓஓஓஓஓஒ

நிலா
10-12-2003, 11:30 PM
ஏம்பா நானா வந்து வந்து புதுப்பிக்க வேண்டியிருக்கே!யாருமே கண்டுக்க மாட்டென்றீங்களே :(

puppy
10-12-2003, 11:31 PM
கி என்னும் எழுத்தில் முடியுங்க

வானாகி மண்ணாகி இந்த மாதிரி

நிலா
10-12-2003, 11:40 PM
நானாகி
நீயாகி
பின் நாமாகி
பெற்ற பிள்ளை பெரியவனாகி
அவனாகி
அவளாகி
அவர்களாகி
அவள் நமக்கு மருமகளாகி
பெற்றபிள்ளை பேத்தியாகி
பெரியவளாகி
அவளாகி
அவனாகி
அவன் நம்பிள்ளைக்கு மாப்பிள்ளையாகி
அவர்களாகி
பேத்திக்கு கணவனாகி
அவர்களாகி
அதற்குள் நமக்கு தலை நரையாகி
வயசாகி.............

முத்து
10-12-2003, 11:48 PM
நிலா ..
அரட்டைக்காக எழுதச் சொன்னா ..
கதை எழுதியிருக்கீங்க ..
கதை எழுத வேற பகுதி இருக்கு தெரியுமா .. ? :D

நிலா
10-12-2003, 11:50 PM
நிலா ..
அரட்டைக்காக எழுதச் சொன்னா ..
கதை எழுதியிருக்கீங்க ..
கதை எழுத வேற பகுதி இருக்கு தெரியுமா .. ?தூங்குற சிங்கத்தை தட்டி எழுப்பறீங்க முத்து :D

நிலா
10-12-2003, 11:58 PM
யாராவது எழுதுவீங்களா மாட்டீங்களா?

puppy
10-12-2003, 11:59 PM
யாராச்சும் எழுதுங்கப்பா....சிங்கத்துக்கு கோபமாகி
அப்புறம் எதாச்சும் ஆச்சுனா ....

இளசு
11-12-2003, 12:06 AM
நிலா,
இன்னொரு மெகாசீரியல் மேட்டருக்கு நன்றி.. :lol:

நிலா
11-12-2003, 12:11 AM
இப்படி சொல்லிக்கிணூ போயிக்கினீயே இருக்கியே தல.
இதுல ஒனக்கு டிப்புக்குமாருன்னு பட்டம் கொடுத்துகினாங்க.
ஒ ரவுச எடுத்து வுடு அண்ணாத்த!

lavanya
11-12-2003, 01:05 AM
இளசாகி, முத்தாகி,மூனாகி,நட்பாகி,சேரா(னா)கி,பார(தி)¡கி,
மதனாகி,மணியாகி,மதுரைக்கு மகனாகி,ஆராகி எண்ணாகி
ஆரென் பெயராகி,பெரிய அரசராகி,சு(ம்)மா இல்லது சூப்பராகி
ஜொலிக்குமாம் பப்பியம்மா தலைப்பாகி இங்கு

(இதுக்குதான் நான் அப்பவே வரலைன்னு சொன்னேன் நிலா)

இளசு
11-12-2003, 01:13 AM
இளசாகி, முத்தாகி,மூனாகி,நட்பாகி,சேரா(னா)கி,பார(தி)கி,
மதனாகி,மணியாகி,மதுரைக்கு மகனாகி,ஆராகி எண்ணாகி
ஆரென் பெயராகி,பெரிய அரசராகி,சு(ம்)மா இல்லது சூப்பராகி
ஜொலிக்குமாம் பப்பியம்மா தலைப்பாகி இங்கு

(இதுக்குதான் நான் அப்பவே வரலைன்னு சொன்னேன் நிலா)

கிரியா ஊக்கி
விமர்சன வித்தகி
சாப்ட்வேர் நாடக நாயகி
இசைப்போட்டியில் பாடகி


எல்லாம் சேர்த்து உள்ளாகி..உள்ளாகி..ஆகி..
சகலகலாவல்லியாய் உருவாகி
மன்றம் வந்தது லாவாகி..

poo
11-12-2003, 07:49 PM
குணத்தில் சிலையாகி
உள்ளத்தில் உறவாகி
இல்லறத்தில் துணையாகி
கவலைகளை பனியாக்கி
கரங்களை கூராக்கி
எல்லைகளை வானமாக்கி
எனை முன்னோக்கி
பார்க்கத் துடிக்கும் நீ என் வாழ்வின் கீ!!

maduraiveera
11-12-2003, 08:13 PM
அருமை பூ

puppy
11-12-2003, 08:13 PM
ஹாஹா....அசத்திட்டிங்க பூ ...
நீ என் வாழ்வின் கீ ....கோத்ரேஜ் கீயா பூ

முத்து
11-12-2003, 08:18 PM
பூ ..
ரொம்ப நல்லா இருக்கிறது ...

poo
11-12-2003, 08:24 PM
.கோத்ரேஜ் கீயா பூ

அய்யோ.. ஏங்க நானென்ன "பீரோ" போலவா இருக்கேன்...

puppy
11-12-2003, 08:34 PM
அவங்க கீ-ன்ன நீங்க பூட்டா அப்போ

முத்து
11-12-2003, 08:38 PM
ஆண்களையெல்லாம் வெளியே வரமுடியாதபடி
ஆயுளுக்கும் பூட்டி வைப்பதால் அவங்க கீ ...
அப்படித்தானே பூ ...

poo
11-12-2003, 08:38 PM
அவங்க கீ-ன்ன நீங்க பூட்டா அப்போ

ஏங்க.. நல்லவேளை "பூ"ட்டா"சிங்" -னு சொல்லாம விட்டீங்களே!!!

(இந்த வீர்சிங்கோட சகவாசம் வைச்சிக்கிட்டாலே கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்போல...)

puppy
11-12-2003, 08:41 PM
முத்து -இன்னும் கல்யாணமே ஆகலை...அதுக்குள்ள உங்க
கீ வேற யார்கிட்டயே போய்டுச்சு போல.....

முத்து
11-12-2003, 08:48 PM
முத்து -இன்னும் கல்யாணமே ஆகலை...அதுக்குள்ள உங்க
கீ வேற யார்கிட்டயே போய்டுச்சு போல.....

இதுவரைக்கும் யார் கிட்டயும் கீ போகலை பப்பி அவர்களே ..
கல்யாணத்துக்குப் பிறகும் என்னிடமே இருப்பதற்காய்
யோசித்துக்கொண்டிருக்கிறேன் ...

poo
11-12-2003, 08:52 PM
முத்து.. நம்ம அண்ணாத்தே ம.ப.க. தலைவர்,...

உன் நண்பன் நான் ம.ப.க.வுல கொ.ப

நம்ம வீரன் சேரன்... ம.ப.க.-வுல அதிமுக்கிய உறுப்பினர்..

இன்னும் நெறய்ய்ய்ய்ய்ய பேர் நிக்காக..

நல்லா யோசி... :)

யோசிச்சி முடிச்சி வந்து சேர்ந்துக்கோ.. என்னைக்கும் வாசல் தொறந்தே கெடக்கும்.. ஏன்னா வர்றவா எல்லாம் அலறி அடிச்சிண்டு இல்ல ஓடிவருவா.... :lol:

நிலா
11-12-2003, 09:45 PM
ஆம்மா அலறி அடிச்சுண்டு ஓடி வர லூசுங்களையும் பொறுமையா ஏத்துக்கிரவ தாண்பா பொண்டாட்டி!
நன்னா புரிஞ்சுக்கோங்கோஓஓஒ!
சும்மா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லவைக்காதேள்! :D

நிலா
11-12-2003, 09:47 PM
பூ நல்லா எழுதியிருக்கீங்க!
முத்து சாவியைகொடுக்கறதப்பத்தி அப்புறம் யோசிக்கலாம் .இப்ப இங்க எழுதுங்க! :wink:

நிலா
11-12-2003, 10:09 PM
கலக்கிச்சென்றிருக்கும் லாவ்,அவரைப்பின்தொடர்ந்து வந்து பாராட்டி சிறப்பித்த தலைக்கும் நன்றி!

முத்து
11-12-2003, 10:14 PM
பூ நல்லா எழுதியிருக்கீங்க!
முத்து சாவியைகொடுக்கறதப்பத்தி அப்புறம் யோசிக்கலாம் .இப்ப இங்க எழுதுங்க! :wink:

மலராகி
தீயாகி
கீயாகி ( நன்றி பப்பி அவர்கள் )
சிங்கமாகி
அதன் பிடரியாகி ( நன்றி நிலா )
அதைச் சீவும் சீப்பாகி
இப்படிப் பெண்கள் அனைத்துமாகி
மிரட்டினால் நாங்களெல்லாம் என்னவாகி
ஹ்ஹ்ம் .. எங்கள் நிலைமை இப்படியாகி ... :wink:

puppy
11-12-2003, 10:17 PM
எங்களால்
உங்கள் வாழ்க்கை நல்லாகி
உங்கள் மனைவியிடம் உங்களுக்கு நல்ல பெயராகி
அதனால் மன்றத்துக்கு நன்றி கடனாகி

Nanban
12-12-2003, 06:19 AM
மகளிர் அணியாகி
மிரட்டும் கூட்டமாகி
மன்றத்தில் தனியாகி
நிற்பவனாகி......

ம.ப.க அமைப்பாக்கி
பதவிகள் தோற்றமாக்கி
அரண்கள் உண்டாக்கி
உழைக்கும் நண்பர்களாகி
பூவும் தோழர்களும்......

ம.ப.க. விளக்கி
கொள்கை விளக்கி
நோக்கம் விளக்கி
உறுப்பினராக்கி....

(பூ, நாங்கள்லாம், என்ன, third umpiresஆ? நீங்களே மன்றம் ஆரம்பிச்சுக்கிட்டீங்க.........?)

இளசு
12-12-2003, 07:59 AM
கி.கீ. என்று மன்றக்கிளிகளை
கொஞ்சவைத்த பப்பிக்கு நன்றி..

பூவின் கீ..கவிதையும்
நிலா, முத்து, நண்பனின் தொடர் கீக்களுக்கும்
பாராட்டு..

puppy
12-12-2003, 08:05 AM
நானும் நடுவில் கீ கவிதை எழுதி இருக்கேன்...அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா.......

இளசு
12-12-2003, 08:15 AM
நானும் நடுவில் கீ கவிதை எழுதி இருக்கேன்...அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா.......

என்ன சத்தம் இந்த நேரம்..
கிளியின் மொழியா..கீ..கீ!

puppy
12-12-2003, 08:17 AM
ட்யூன் ஒன்று வரிகள் வேற ----- அங்க எழுதுங்க மிஸ்டர்

இளசு
12-12-2003, 08:22 AM
ட்யூன் ஒன்று வரிகள் வேற ----- அங்க எழுதுங்க மிஸ்டர்

பாட்டாலே நான் பொறந்தேன்
பாட்டோட நான் வளந்தேன்
பாட்டாலே நட்பு பெற்றேன் - அந்த
பாட்டுகள் பல விதந்தான்...

Nanban
16-12-2003, 08:57 AM
தை மாதம் வருகிறது - எல்லோரும் தை, தை என்று பாடுங்களேன்......

நினைவில் நின்றதை
நீங்கள் படித்ததை
எல்லோருக்கும் பகிர்ந்ததை
நாம் சொன்னதை
இங்கு பதிந்ததை
மீண்டும் அகந்தை
அழித்து, சொல்வோம்.......

நிலா
16-12-2003, 05:08 PM
மார்கழிக்கு பின் வரும் தை
நமது மனங்களில் கொண்டுவரும் ஆனந்தத்தை
நம்பிக்கையோடு காத்திருந்ததை
மெய்யாக்கவரும் மாதத்தை
பொங்கல் வைத்து கொண்டாடி அதை
மன்றத்தில் பேசி, மகிழ்சியதை
(இரட்டிப்பாக்குவோம் வாருங்கள்!!!)
நன்றி நண்பன்!!!

பாரதி
16-12-2003, 06:10 PM
நண்பர்கள் நிறுத்தப் போவதில்லை படைப்பதை
இக்கதை
இன்றைக்கு விடுகதை
இது என்றும் தொடர்கதை
எழுத இருந்த பயத்தை
எளிதாக மன்றம் போக்கியதை
இந்த மறக்க முடியா நிஜத்தை
என்றைக்கும் இருத்தும் இந்த சிறுத்தை.

poo
17-12-2003, 04:46 PM
நிலா.. எந்த வார்த்தை தந்தாலும்.

தை..தைன்னு சாரி ஹை..ஹைன்னு குதிச்சி எழுதிடறீங்க..

பாராட்டுக்கள்!!

பாரதி...பாராட்டுகிறேன்...நீங்கள் தந்ததை...யும்!!

நிலா
17-12-2003, 04:48 PM
நன்றி பூ :evil: :evil: :evil:

அப்படியே நீங்களும் எழுதறது!

poo
17-12-2003, 06:03 PM
மறுக்கமுடியவில்லை நீங்கள் கேட்பதை..
நான் எழுதவேண்டியது எதை..
படித்தும் புரியாத காட்சிக்கு கவிதை...
நிலா&கோ-விற்கு எதிராக பதில்சொல்லும் விடுகதை..
சாப்பிடாமல் மன்றத்தால் படும் அவஸ்தை
நான் இன்னமும் படிக்காத "மனசெல்லாம்" கதை..
இங்கே கதைப்பதை
வீட்டில் சொல்லி வாங்கும் உதை...

இதில் நான் எழுதவேண்டியது எதை?!!

நிலா
30-12-2003, 11:22 PM
பூ இப்பதான் பார்த்தேன் அசத்தல்!

ஆதரவற்றுக்கிடக்கும் இந்தப்பகுதியை வேறுமாதிரி மாத்தலாமென இருக்கிறேன்!(அப்பாஆஆஆஆடி யாராவது கோள்மூட்டுறதுக்குள்ள தப்பிச்ச்சாச்சு)

poo
01-01-2004, 07:29 AM
சீக்கிரம் மாற்றுவீர்கள் என நம்புகிறேன்!!

(அப்டின்னா இப்போ இருக்கிறது சரியா இல்லையான்னு கேக்கக்கூடாது ஆமாம்!!!)

நிலா
01-01-2004, 07:31 AM
சீக்கிரம் மாற்றுவீர்கள் என நம்புகிறேன்!!

(அப்டின்னா இப்போ இருக்கிறது சரியா இல்லையான்னு கேக்கக்கூடாது ஆமாம்!!!)


நான் கேட்கப்போறதையும் சேர்த்து நீங்களேக்கேட்டா எப்படிப்பூ?
சரி இந்தப்பகுதிக்கு புத்தாண்டுல நல்லவழி பிறக்குதான்னு பார்க்கறேன்!

அலை...
01-01-2004, 07:31 AM
அஹா...வந்துட்டாரய்யா...நன்றி பூ...

நிலா ஒழுங்கா பூவுக்கு பதில் சொல்லுங்க...ம்ம்...ஆமாம்...

Nanban
02-01-2004, 06:19 AM
பூ இப்பதான் பார்த்தேன் அசத்தல்!

ஆதரவற்றுக்கிடக்கும் இந்தப்பகுதியை வேறுமாதிரி மாத்தலாமென இருக்கிறேன்!(அப்பாஆஆஆஆடி யாராவது கோள்மூட்டுறதுக்குள்ள தப்பிச்ச்சாச்சு)

நல்லாத்தானே போய்க்கிட்டிருக்குது...... அப்புறம் எதற்காக மாற்றப் போகிறீர்கள்......?

வேண்டுமானால், இக்பாலையும் கூட்டி வரப்பாருங்க... இல்லன்னா, அவரோட காட்சி உண்டு, கவிதை உண்டா பக்கத்தை புறக்கணிக்கிறதா சொல்லிப் பாருங்க.....

(நான் எழுதலைன்னு எத்தனை புலம்பி இருக்காரு இக்பால், இப்ப அவருக்கு வேண்டும்....... :lol: :lol: :lol:)

சேரன்கயல்
02-01-2004, 08:43 AM
நிலா நிலா ஓடி வா...
அசைந்தாடி :wink: ஓடி வா...
உருண்டு பிரண்டு :mrgreen: ஓடி வா...

சரி சரி...சீக்கிரம் வாங்க நிலா..!!!
நண்பன் கேள்விக்கு பதில் சொல்லுங்க...

poo
02-01-2004, 11:19 AM
நிலாவைப்பத்தி என்னதான் நினைச்சிருக்கீங்க சேரன்....

(உங்கள உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க பாத்து,.. குண்டூஸ் வாங்கியதில் ஊழல்னு பப்பி மேடம்கிட்ட போட்டுக் கொடுத்திடப்போறாங்கப்பா...)

நிலா
03-01-2004, 04:44 AM
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்குது...... அப்புறம் எதற்காக மாற்றப் போகிறீர்கள்......?


எங்க ஆளரவமற்றல்லவா இருக்கிறது!


இக்பாலையும் கூட்டி வரப்பாருங்க... இல்லன்னா, அவரோட காட்சி உண்டு, கவிதை உண்டா பக்கத்தை புறக்கணிக்கிறதா சொல்லிப் பாருங்க.....


இது நல்ல ஐடியாவா இருக்கே!கடைபிடிக்கறேன்!(நீங்க இல்லன்னா ஆளேவா இல்லன்னு அவர் கேக்குறது காதில விழுந்துச்சு நண்பன்!)
நிலா நிலா ஓடி வா...
அசைந்தாடி ஓடி வா...
உருண்டு பிரண்டு ஓடி வா...

சரி சரி...சீக்கிரம் வாங்க நிலா..!!!
நண்பன் கேள்விக்கு பதில் சொல்லுங்க...


பதில் சொல்லிட்டேன்!சேரன் மனைவி,மகளைப்பார்க்க எப்பப்போறீங்க?இல்ல அவங்க எப்ப வர்றாங்க!உங்களுக்கு அப்பதான் தெளியும்னு எனக்கு நல்லாத்தெரியும்!

நிலா
06-01-2004, 11:05 PM
அடுத்த முயற்சி: தொடர் கவிதை எழுதலாமா?அல்லது இருவரிக்கவிதைகளுக்குப்பொருத்தமாய்,பதில் சொல்வதாய் அடுத்த வரிகளை அமைக்கணூம்.கவிதை எழுத முயற்சிப்பவர்களுக்கு இது உதவியாய் இருக்குமென நம்புகிறேன்.குறைந்தது 2 வரி.அதிக பட்சம் 4வரி!சரியா!

எல்லோரும் வாருங்கள்!!!

யார் ஆரம்பிக்கப்போறது?

இளசு
06-01-2004, 11:07 PM
நீங்களே ஆரம்பீங்க நிலா

puppy
06-01-2004, 11:10 PM
நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடி வா

இளசு
06-01-2004, 11:11 PM
விடுகதைப் பக்கம் வா
விடை எல்லாம் கொண்டு வா

நிலா
06-01-2004, 11:11 PM
சரி தலை!இந்தக்கவிதை ஓட்டத்தின் தலைப்பு"காதல்"--நம் நண்பர் அலைக்கு
சமர்ப்பணம்(அலை கோவிக்கக்கூடாது!நீங்களும் கலந்துக்கனும்)

வீழ வெட்கமில்லை
விழியசைக்க நீ தயாரெனில்!

puppy
06-01-2004, 11:13 PM
அட அடா அதுக்குள்ளே முடிச்சிட்டிங்களே ..பராவாயில்லை.......இதை பார்ப்போம்.....

கறிகாய் வெட்ட வெக்கமில்லை
நீ சாப்பிட தயாரெனில்

puppy
06-01-2004, 11:15 PM
நான் பந்தாய் இருக்க வெட்கமில்லை
நீ பேட்ஸ்உமனாய் இருக்க தயாரெனில்

நிலா
06-01-2004, 11:15 PM
பப்பி முந்தைய தலைப்பு முடியவில்லை!இடையில் இந்தத்தலைப்பு!


கறிகாய் வெட்ட வெக்கமில்லை
நீ சாப்பிட தயாரெனில்


லொள்ளு பண்றாப்ல இருக்கு! :evil:
ஆதரவிற்கு நன்றி1

நிலா
06-01-2004, 11:16 PM
பப்பீஈஈஈஈஈஈஈஈஈஈ!

முத்து
06-01-2004, 11:16 PM
நல்லாயிருக்கு நிலா ..
எப்படி உங்களால் இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது ..?
ஐ மீன் .... இப்படி அருமையா,புதுமையா .. :wink: :D

puppy
06-01-2004, 11:17 PM
பப்பீஈஈஈஈஈஈஈஈஈஈ!

என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன ?...ராங் ரூட்ல போயிட்டனா....எனக்கு இப்படி தான் வருது அலைன்னு சொன்னவுடன் நான் என்ன பண்ண ?

puppy
06-01-2004, 11:18 PM
விடுகதைப் பக்கம் வா
விடை எல்லாம் கொண்டு வா

சமையல் பக்கம் வா
குண்டு குண்டாய் குண்டுஸ் கொண்டு வா

நிலா
06-01-2004, 11:18 PM
முத்து உங்களுக்கு நிறையவரிகள் தோணும்னு எனக்குத்தெரியும்!எழுதுங்க!
குசும்பு வேணாம் சொல்லிட்டேன்!அப்புறம் படங்களை ரிலீஸ் பண்ணிடுவேன்! :D
யு மீன்!ஐ நோ மீன்! :D

நிலா
06-01-2004, 11:22 PM
சமையல் பக்கம் வா
குண்டு குண்டாய் குண்டுஸ் கொண்டு வா


மன்றப்பக்கம் வா
அடக்கிவாசிக்கப்பழகிவா!

முத்து
06-01-2004, 11:30 PM
முத்து உங்களுக்கு நிறையவரிகள் தோணும்னு எனக்குத்தெரியும்!எழுதுங்க!
குசும்பு வேணாம் சொல்லிட்டேன்!அப்புறம் படங்களை ரிலீஸ் பண்ணிடுவேன்! :D
யு மீன்!ஐ நோ மீன்! :D

அட ... விடுங்க நிலா ..
சமாதானமா போயிடலாம் ...

நீங்க
தங்கம் , கோகினூர் வைரம் அப்படியெல்லாம்
நேற்று சொன்னேன்( ஐஸ் வைத்தேன்.. ? :wink: ) ...
ஆனாலும் இப்படி மிரட்டுறீங்களே ... :D

poo
07-01-2004, 07:30 PM
வீழ வெட்கமில்லை
விழியசைக்க நீ தயாரெனில்!


தயாராகிவிட்டபின்னும்
தயங்குகிறேன்...
படிதாண்ட எழுந்திருக்கையில்
தட்டுகிறது தாயின் பாதம்...


(என்ன நிலா.. அதுக்குள்ளே கிளைமேக்ஸ் வந்துட்டேனா?.. மன்னிக்கவும்.)

நிலா
07-01-2004, 11:07 PM
எனை அறிந்தவள் நீ
உனை அறிந்தவள் உன்தாய்
தயக்கமென்ன சம்மதிக்க அன்னை தயாரெனில்?

முத்து
07-01-2004, 11:12 PM
சம்மதிக்க அன்னை
தயாரில்லை என்பதுதானே
கலக்கத்தின் , தயக்கத்தின் மூலமே.

puppy
07-01-2004, 11:14 PM
ஏன் நான் நிரந்தரமாய்
வராமல்
அலை மாதிரி வந்து போவாதாலா......

முத்து
07-01-2004, 11:17 PM
நான் அலை போல் வந்துபோவதே
நம் காதல் அந்தக் கடல்நுரைபோல்
ஆயிடக்கூடாது என்பதற்கே ..

நிலா
07-01-2004, 11:20 PM
கரை கடக்க
அலை முயன்றால்
சமூகல் சபிக்குமென
சலனம் கொள்கிறாளோ?

முத்து
07-01-2004, 11:23 PM
நீ அலையாய்க் கடந்தால்தானே
சமூகம் பழிக்கும்
மழையாய் வா ...
உலகே போற்றும்

நிலா
07-01-2004, 11:24 PM
அலை எதைச்சொல்றார்?அவர் ஆளு எதைச்சொல்றாங்கன்னு ஒரே குழப்பமா இருக்கு எனக்கு! :roll: :roll:

ஆனாலும் நல்லாவேப்போகுது ஓட்டம்!

பப்பி முத்து எப்படி எடுத்துவிடுறார் பாருங்க தென்றல் தென்றல் செய்யிறவேலை! :D

முத்து
07-01-2004, 11:28 PM
அலை எதைச்சொல்றார்?அவர் ஆளு எதைச்சொல்றாங்கன்னு ஒரே குழப்பமா இருக்கு எனக்கு!


எல்லோரும் வாங்க... அப்படின்னு
ஒரு தொடர் கதை ஆரம்பிச்சீங்களே
அது மாதிரிதான் ஆகுமுன்னு நினைக்கிறேன் ... :D

நிலா
07-01-2004, 11:29 PM
பப்பி உங்கப்பதிவை எப்படி நக்கலா பேசறார் பாருங்க!கொஞ்சம் கவனிங்க முத்துவ :D

lavanya
07-01-2004, 11:30 PM
வெட்டி எறிவதுதான் விருப்பம் எனில்
விரல் நகமாகவும் இருந்து போகிறேன்...

இது இங்கே ஒத்துவருமாப்பா - கரீட்டா தலைப்பை புடிச்சிருகேனா

நிலா
07-01-2004, 11:31 PM
"பார்" போற்ற அல்லடி பெண்ணே
நின் பார்வை விழுந்தால் போதும்
மனதையே மழையாய்ப்பொழிவேன்

puppy
07-01-2004, 11:31 PM
வெட்டுவதுக்கென்று தனி கூட்டம்
ஒன்று இருக்கு
நீ என் விரலாக வருவாயா....

முத்து
07-01-2004, 11:33 PM
பப்பி உங்கப்பதிவை எப்படி நக்கலா பேசறார் பாருங்க!கொஞ்சம் கவனிங்க முத்துவ :D

நிலா ..
அந்தக் கதை மாதிரி ஏகப்பட்ட திருப்பத்தோட
சுவாரசியமா போகுமுன்னு சொல்ல் வந்தேன் .. :wink:

நிலா
07-01-2004, 11:33 PM
லாவ் கலக்கிப்போட்டீங்கோஓஓஓ!
இதே ஆதரவு தொடரணும் சரியா?

puppy
07-01-2004, 11:33 PM
அதானே பார்த்தேன்...நீங்க சொல்றதா பார்த்தா க்ரைம் கவிதை ஆகிட போகுது....மன்மதனை கொஞ்சம்படிச்சிட்டு கவிதை எழுத சொல்லுங்க

முத்து
07-01-2004, 11:38 PM
மன்மதன் இன்னும் இந்தப் பக்கம் வரவே இல்லையே ..
எங்க இருக்கிறார்... :roll:

நிலா
07-01-2004, 11:38 PM
விரும்பி நீ உரைக்க
விரலென்ன
உயிர்தர நான் துணிவேன்!

puppy
07-01-2004, 11:39 PM
லாவ் கலக்கிப்போட்டீங்கோஓஓஓ!
இதே ஆதரவு தொடரணும் சரியா?

அன்பா கேக்குறீங்களா இல்லை........................சொல்லுங்க நிலா....

முத்து
07-01-2004, 11:41 PM
உன்னுயிராய் நானிருக்க
அதை நீ எங்ஙனம் எனக்கே தருவாய்.. ?

நிலா
07-01-2004, 11:42 PM
ஆதரவு தொடர்ந்தா அன்பாஆஆஆஆஆஆ
இல்ல.................. :wink:

(போட்டியில குதிச்சாச்சு பப்பி பெயர் வாங்கியே ஆகணும்,அதுக்காகத்தான் இப்படி) :D

நிலா
07-01-2004, 11:42 PM
முத்து சான்ஸே இல்லை!சும்மா கலக்குறீங்க!(தென்றலுக்கு நன்றி)

lavanya
07-01-2004, 11:42 PM
அதானே..ஏதோ முத்துவை மிரட்டுறமாதிரி தொனி தெரியுதே

நிலா
07-01-2004, 11:44 PM
லாவ் முத்துவ மட்டுமல்ல........... :wink:

puppy
07-01-2004, 11:44 PM
உன்னுயிராய் நானிருக்க
அதை நீ எங்ஙனம் எனக்கே தருவாய்.. ?

நிலா சொல்றது எல்லாம் உண்மை தான் போல.....

puppy
07-01-2004, 11:45 PM
லாவ் முத்துவ மட்டுமல்ல........... :wink:

அன்பாய் சொன்னாலே போதும் நிலா லாவ்க்கு.....

lavanya
07-01-2004, 11:47 PM
என்ன நிலா எப்பவாவது எட்டி பார்த்தா இப்படி மெரட்டுறீங்க

நிலா
07-01-2004, 11:49 PM
எட்டிப்பார்த்தாதான் மிரட்டல் லாவ்!
உரிமையா உள்ளவந்து உக்காருங்க!பாசத்தைப்பொழிவேன் பாருங்க!(உள்ளத்தை டச் பண்ணிட்டேனா :D )

முத்து
07-01-2004, 11:50 PM
என்ன நிலா எப்பவாவது எட்டி பார்த்தா இப்படி மெரட்டுறீங்க
விடுங்க லாவண்யா ..
இந்த மிரட்டல் , உருட்டல் புதுசா என்ன .. ?
( விடு ஜூட்.. )

puppy
07-01-2004, 11:50 PM
காலங்காத்தாலே லாவ் குளிரில் நடுங்கறாங்க பாருங்க.......

lavanya
07-01-2004, 11:53 PM
ஆமாம் பப்பி ..ஆனா நடுங்கறது குளிர்னாலே இல்லே..

நிலா
07-01-2004, 11:54 PM
தென்றலோட தாக்கத்தில் முத்து எழுதின வரிகளுக்குப்பதில் சொல்லமுடியாம நான் இங்க குழம்பிகிட்டு இருக்கேன்! :roll:

முத்து
07-01-2004, 11:56 PM
எல்லாம் சரிதான்..
ஆனால் தென்றல்தான் யாருன்னு தெரிய்லை ... :roll:

நிலா
08-01-2004, 12:04 AM
தென்றலோட போட்டோவ மன்றத்துல காண்பிக்கவா முத்து :D

முத்து
08-01-2004, 12:06 AM
தென்றலோட போட்டாவா.. ? இல்லை தென்றல்களோட போட்டாவையா .. ? :wink:

lavanya
08-01-2004, 12:07 AM
காண்பிங்க நிலா நாங்களும் பார்க்கிறோம்

நிலா
08-01-2004, 12:08 AM
உன்னுயிராய் நானிருக்க
அதை நீ எங்ஙனம் எனக்கே தருவாய்..


உள்ளம் உணர்ந்தவனே
உடன்வர ஏன் நீ யோசிக்கிறாய்?

(என்ன வேற யாரையும் காணோம்?)

முத்து
08-01-2004, 12:10 AM
காண்பிங்க நிலா நாங்களும் பார்க்கிறோம்

நிலா ...
நாம சமாதானமா போயிடலாமே ...
நமக்குள்ள எதுக்கு சண்டை .. :wink: :D

நிலா
08-01-2004, 12:11 AM
அடிக்கடி சமாதானக்கொடி காட்டி எஸ்கேப் ஆயிடுறீங்க முத்து!
இல்ல தென்றலைப்பார்க்காம எஸ்கேப் ஆயிடுறாங்க மக்கள்! :wink:
(லாவ் விஷப்பரிட்சை போட்டோ பார்க்கறது :D)

lavanya
08-01-2004, 12:14 AM
உள்ளம் உணர்ந்தவனே
உடன்வர ஏன் நீ யோசிக்கிறாய்?

(என்ன வேற யாரையும் காணோம்?)பந்தம் இணைக்க ஆசைதான்
பர்ஸில் பணம் கம்மி

(நான் இருக்கேன் நிலா)

சேரன்கயல்
08-01-2004, 12:18 AM
உடன்கட்டையும் ஏறுவேன் கண்ணே...
உன்னுடன் இருப்பதே என் இன்பம்...

(எல்லாம் ஒன்னுதான்... :wink: )

(எங்கேயோ இருந்து திடீரென குதித்து...கபால்னு எஸ்கேப்)

நிலா
08-01-2004, 12:23 AM
பந்தம் இணைக்க ஆசைதான்
பர்ஸில் பணம் கம்மி


மனத்தேடுதலில் வெற்றிகண்டு
பணத்தேடலை தொடர்வோம் வா!

lavanya
08-01-2004, 12:26 AM
அட்டகாசம் நிலா....கொன்னுட்டீங்க போங்க

நிலா
08-01-2004, 12:26 AM
உடன்கட்டையும் ஏறுவேன் கண்ணே...
உன்னுடன் இருப்பதே என் இன்பம்...

(எல்லாம் ஒன்னுதான்... )இன்னும் வீட்டுல வரலைன்னு தைரியமாஆஆஅ? :D

வாழும்போதுதான் நித்திரையில்லை
சாகவாவது விடேன் நிம்மதியாக!

(சேரன் உங்களால எதிர்த்திசையில போகுதுலெ ஓட்டம் :D )

நிலா
08-01-2004, 12:27 AM
அட்டகாசம் நிலா....கொன்னுட்டீங்க போங்க


வஞ்சப்புகழ்ச்சி மாதிரி இருக்கே லாவ்! :(

சேரன்கயல்
08-01-2004, 12:31 AM
வாழும்போதுதான் நித்திரையில்லை
சாகவாவது விடேன் நிம்மதியாக!


என்னுள் குதித்து உன்னுள் எழும் காதலுக்கு
ஏது கண்ணே நித்திரையும் சாவும்...

(அவ்வளவு சீக்கிரத்தில சாக விட்டுருவோமா..??)

நிலா
08-01-2004, 12:33 AM
என்னுள் குதித்து உன்னுள் எழும் காதலுக்கு
ஏது கண்ணே நித்திரையும் சாவும்...

(அவ்வளவு சீக்கிரத்தில சாக விட்டுருவோமா..??)


ஹா.........ஹா......கலக்கல் சேரன்!

அழவைத்துப்பார்த்துவிட்டு
அழகாகச்சமாளிக்கிறாய் கள்வனே!

சேரன்கயல்
08-01-2004, 12:44 AM
அழவைத்துப்பார்த்துவிட்டு
அழகாகச்சமாளிக்கிறாய் கள்வனே!


என்னை களவாடிச் சென்றவள் நீ
கலங்கி நிற்கும் நான் கள்வனா...

சேரன்கயல்
08-01-2004, 12:44 AM
அழவைத்துப்பார்த்துவிட்டு
அழகாகச்சமாளிக்கிறாய் கள்வனே!


அழுகை முடித்து கோபத்தில் செவ்வானம்..
இதற்குத்தானே உன்னை அழவைத்தது...

நிலா
08-01-2004, 01:37 AM
என்னை களவாடிச் சென்றவள் நீ
கலங்கி நிற்கும் நான் கள்வனா...


உன்னை நானும்
என்னை நீயும் குறைகூறியபடியே
வருந்துவதென்னவோ நம் காதல் தான்!

சேரன்கயல்
08-01-2004, 03:23 PM
குறையும் நிறையுமாய் நானும் நீயும்...
குறையாமல் நிறைந்திருப்பது காதல் மட்டும்

(நீயும் நானும் என்றுதான் எழுதியிருக்கனும்...படிக்கும்போது எல்லாம் சரியாயிடும்ல)

நிலா
08-01-2004, 04:15 PM
பூ,முத்து இங்கேயும் வந்து எழுதங்கப்பா!(ஒவ்வொருதடவையும் நானே காப்பாத்த வேண்டிக்கிடக்கு இந்தப்பதிவை :( )

முத்து
08-01-2004, 04:18 PM
எழுத நினைக்கிறேன்..
ஆனால் வார்த்தைகள் வந்தால் தானே .. ?

poo
08-01-2004, 04:22 PM
பூ,முத்து இங்கேயும் வந்து எழுதங்கப்பா!(ஒவ்வொருதடவையும் நானே காப்பாத்த வேண்டிக்கிடக்கு இந்தப்பதிவை :( )

மரத்தை வைச்சவன்
தண்ணி ஊத்துவான்....


(முத்து இப்படி என்கிட்ட பாடிக் காட்றார் நிலா!!)

நிலா
08-01-2004, 04:28 PM
உங்களையெல்லாம் விழாவுல கவனிக்கறேன்! :wink:

வார்த்தை தேவையில்லை
விழி அசைத்துவிடு கண்ணே
வீழ்வதற்கு நான் அஞ்சவில்லை!

(ஹி...ஹி திருப்பி முதல்ல ஆரம்பிச்ச இடத்துக்குப்போங்க)

சரி அடுத்து புதுடாபிக் சரியா?வரிகளைக்கொடுங்க!

முத்து
08-01-2004, 04:31 PM
சரி அடுத்து புதுடாபிக் சரியா?வரிகளைக்கொடுங்க!

நிலா புது டாபிக் ...?
இதுவேதான் டாபிக்கா .. :roll:
கொஞ்சம் கஷ்டமான வேலைதான்... :(

நிலா
08-01-2004, 04:34 PM
இதுவேதான் டாபிக்கா ..
கொஞ்சம் கஷ்டமான வேலைதான்...


அடடட டடடாஆஆஆஆஆஆஆ!
வேற ஏதாவது வரிகளைக்கொடுங்க முத்து!அலை டாபிக் முடிஞ்சுபோச்சு1 :D

முத்து
08-01-2004, 04:40 PM
ஓஓஓஓ.... அப்படியாஆஆஆ
புரிஞ்சுடுச்சு நிலா ...

பாரதி
08-01-2004, 05:02 PM
என்ன முத்து..? சொல்லுங்க...

முத்து
08-01-2004, 05:28 PM
உங்களை புதுசா ஒரு தலைப்பு கொடுக்கச் சொல்லுறாங்க நிலா ..
வேற ஒண்ணுமில்லை .... :wink:

பாரதி
08-01-2004, 06:27 PM
வேற ஒண்ணுமில்லை ....

ஆஹா... முத்து.. உங்க தலைப்பு அபாரம்..!

நிலா
08-01-2004, 06:40 PM
அரட்டைக்கே அரட்டையாஆஆஅ?
இதுக்கும் எழுதுவோம்ல

பாரதி
08-01-2004, 06:46 PM
நாங்களும்தான் படிப்போம்ல.!

சேரன்கயல்
09-01-2004, 09:44 AM
இப்படி ஜவ்விகிட்டே இருந்தா நாங்க ஓடிடுவோம்ல...

poo
09-01-2004, 03:38 PM
இப்படி ஜவ்விகிட்டே இருந்தா நாங்க ஓடிடுவோம்ல...

அதை நான் அப்பவே செஞ்சிட்டேன்ல.....

நிலா
09-01-2004, 06:08 PM
:evil: !என்ன நானும் புதுப்பிச்சுக்கிடே இருக்கேன்!ஆதரவே இல்லாம போனாஆஅ நான் என்ன பண்றது! :( .

தந்தை மகனிடம்:

கரிசநிலம் தரிசாப்போகுதேன்ற
கரிசனத்துல கத்தறேன்டாச்செல்லக்கண்ணு
வேறஒன்னுமில்லை!

பாரதி
09-01-2004, 06:28 PM
ரொம்ப நல்லாயிருக்கு புள்ள நீ சொல்றது.
இதத் தவிர சொல்ல
வேற ஒண்ணுமில்ல.

நிலா
09-01-2004, 10:30 PM
நல்லாயிருந்தாலும்
வரவேற்பு இல்லையேன்னு
புலம்பரேங்க மீசக்கண்ணு
வேறஒன்னுமில்லை!

நிலா
09-01-2004, 10:43 PM
கரிசனம் கன்னியாக்குமரிக்கே
கேக்குறாப்ல வேணானு
சொல்றேங்க அப்பாக்கண்ணு
வேறஒன்னுமில்லை

puppy
09-01-2004, 10:53 PM
நிலா நல்லா இருக்கு,,,,அடுத்த டாபிக் கொடுங்க

நிலா
09-01-2004, 11:01 PM
நீங்க கொடுங்களேன் பப்பி!
ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

puppy
09-01-2004, 11:04 PM
நான் கொஞ்சம் ரூட்டை மாத்தவா நிலா ?

இளசு
09-01-2004, 11:05 PM
என்ன நடக்குது இங்கே?

நிலா
09-01-2004, 11:05 PM
:shock: :roll: எந்த ரூட்டுன்னு சொல்லிட்டுப்போய்க்கிட்டேயிருங்க பப்பி!நா ஓடிவந்தாவது புடிச்சர்றேன்! :D

puppy
09-01-2004, 11:10 PM
சரி இதுதான் புது ரூட்....

நம்ம அருமை பெருமை ம.அணி மாணிக்கம் நிலா ஊர் பெருமை பேசலாம்ன்னு புதுசா ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க...அதை பார்த்தவுடனே எல்லா ஆ.அணிக்கும் அதே ஆசை வந்து இருக்கும் ...ஆனால் சாப்பாடு
பார் இவை மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்...அதனால் வேற என்ன எழுதறதுன்னு யோசனையா இருக்கும் இல்லையா..உங்களுக்கு ஒரு சின்ன உதவி...ஊர் பேரு ஒன்னு சொல்லுவேன்/வோம்.அது சம்ப்ந்தபட்ட உங்களுக்கு ஞாபகம் வரது எல்லாம் சொல்லலாம்.....அதை வச்சு ஒரு கட்டுரை கொடுக்கனும் அந்த ஊர் காரங்க.....எங்க ஊரு ஆளு ஏற்கனவே ஆரம்பிச்சுட்டாங்க......மத்த ஊர்காரங்க எல்லாம் எங்கே.......சரியா....புரியுதா......
ஓகேவா ...நிலா ஓகேவா ....

இளசு
09-01-2004, 11:12 PM
ஹய்யா இந்த ரோட்டுலதான்
ஹொய்யா புது ரூட்டுலதான்....

நிலா
09-01-2004, 11:13 PM
டபுள் ஓகே பப்பி!(முதல் ஓ.கே பொதுவா கேட்டதுக்கு,2வது ஓ.கே என்னைத்தனியா கேட்டதுக்கு :D )

ஏற்கனவே இது ஆஹா புரடக்ஷனா இருக்கு!ஓஹோ புரடக்ஷனாயிடாம இருந்தா சரி பப்பி! :(

puppy
09-01-2004, 11:14 PM
(நான் வந்துட்டேன் இல்லே...) அப்படி எல்லாம் ஆகாது நிலா.....நம்ம பெருசை ஒர் ஊர் பேர் கொடுக்க சொல்லுங்க......

நிலா
09-01-2004, 11:21 PM
தலை ஊர்ப்பேரு கொடுத்தீங்கன்னா என் ஆஹா புரடக்ஷன பப்பி புண்ணியத்துல சாகா புரடக்ஷனா மாத்திருவேன்!கொஞ்சம் கருணை காட்டுங்க

இளசு
09-01-2004, 11:27 PM
நான் பொறந்தது தனியா
மண்ணில் வளர்ந்தது தனியா

எந்த ஊர் என்றவனே

இப்படிப் பாடித் தப்பிக்க ஆசைதான்...

சிதம்பரம்....

என்னைக் கவர்ந்த ஊர்... அங்கிருந்து ஆரம்பிக்கலாமே

நிலா
09-01-2004, 11:28 PM
எங்க ஊர்ப்பெருமை சிதம்பர இரகசியம் னுயாரும் சொல்லிடப்போறாங்க!

தல உங்க சொந்தஊர் சிதம்பரமா?

puppy
09-01-2004, 11:31 PM
அண்ணாமலை பல்கலைகழகம்
நடராஜர் கோவில்

puppy
09-01-2004, 11:32 PM
இப்படி சொல்லனும் நிலா......கூடுதல் தகவல்கள் கூட கொடுக்கலாம்......

puppy
09-01-2004, 11:39 PM
லேனா டாக்கிஸ்
மாரியப்பா தியேட்டர்
சீனிவாசா தியேட்டர்

நிலா
09-01-2004, 11:40 PM
பப்பி இந்தத்தியேட்டர்கள் ரொம்ப பிரபலமா அங்க?