PDA

View Full Version : சிறந்த கிரிக்கெட் வீரர் - ஓட்டெடுப்பு



அறிஞர்
26-08-2010, 04:29 PM
இணையவாசிகளான உங்கள் வாக்கு... யாருக்கு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இதில், இந்த முறை புதிய அம்சமாக, பீப்பிள் சாய்ஸ் அவார்ட் என்ற மக்கள் ஆதரவு பெற்ற கிரிக்கெட் நாயகனை தேர்ந்தெடுக்கும் பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுக்கப்போவது, உங்களைப் போன்ற கிரிக்கெட் ரசிகர்கள்தான்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த விருதுக்கான வீரரை தேர்வு செய்யப் போகிறார்கள்.

ரசிகர்களே தேர்வு செய்யும் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர் விவரத்தை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில்,இந்திய நட்சத்திர வீரர் டெண்டுல்கர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற மற்ற வீரர்களின் விவரங்கள்: மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா), ஜெயவர்த்தனே (இலங்கை), ஆண்டரு ஸ்டார்ஸ் (இங்கிலாந்து), டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா).

மொத்தம் 5 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் யார் இந்த முதல் விருதை தட்டிச்சென்று சாதனைப் படைக்க போகிறார்கள் என்பது தான் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம்...

இந்த ஐந்து பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கும் உள்ளது என்பதே. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்களும் வாக்களிக்கலாம்.

உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வாக்களிக்கும் வகையில் இந்த தளத்தில் ஐசிசி எளிய முறையை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

ஐசிசி விருதுகளை ஸ்பான்சர் செய்யும் எல்.ஜி. நிறுவனத்தின் பெயரில் வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரருக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் இந்த விருதுக்கு அவரை தகுதி பெறச் செய்யலாம்.


http://icc-cricket.yahoo.net/events_and_awards/lg_icc_awards/people_choice_award.php

சூரியன்
26-08-2010, 04:38 PM
நல்ல பகிர்தல் அறிஞரே.
நான் ஓட்டு போட்டாச்சுங்கோ.:D

மச்சான்
26-08-2010, 10:44 PM
இதிலென்ன சந்தேகம்.....? த க்ரேட் சச்சின் டெண்டுல்கருக்கு ஓட்டை குத்திட்டோம்ல....!:) சாதாரணமாக தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல்களில் எல்லாம் துட்டு கொடுத்து மக்களை ஓட்டு போட வைப்பார்கள்..... ஆனால் இங்கே சுட்டி கொடுத்து ஓட்டுப்போட வைத்த அறிஞர் அண்ணாவுக்கு மிக்க நன்றி.:D

அன்புரசிகன்
26-08-2010, 11:43 PM
அதில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவருமே நேர்மையான விளையாட்டுவீரர்கள். பெரிய ஆர்பார்ட்டம் அற்றவர்கள். காரணம் அவர்கள் நிறைகுடம்... என் வாக்கு செலுத்திவிட்டேன்...

பாரதி
27-08-2010, 12:43 AM
தகவலுக்கு நன்றி அறிஞரே.
இம்முறை நல்லதென்றாலும் கூட மக்கள்தொகை அதிகம் இருக்கும் நாட்டின் வீரர் எளிதாக தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறதே!

aren
27-08-2010, 02:35 AM
கடந்த வருடம் என்று மட்டும் எடுத்துக்கொண்டால் என்னுடைய ஓட்டு டி.வில்லியர்ஸுக்குத்தான்.

அமரன்
27-08-2010, 09:18 AM
கடந்த வருடம் என்று மட்டும் எடுத்துக்கொண்டால் என்னுடைய ஓட்டு டி.வில்லியர்ஸுக்குத்தான்.

சபாஸ்ண்ண..

நானும் அவ்வாறே..

அறிஞர்
27-08-2010, 05:36 PM
இது முதல் முறை என்பதால்... சற்று தடுமாற்றம்.

இந்த ஓட்டெடுப்பு ஆகஸ்ட்-2009- செப்டம்பர்-2010. ஒருவருடம் என்றால் யோசிக்கனும்.