PDA

View Full Version : மாமனை கட்டிக்க சம்மதமா?!?



"பொத்தனூர்"பிரபு
26-08-2010, 11:21 AM
மாமனை கட்டிக்க சம்மதமா?!? (http://priyamudan-prabu.blogspot.com/2010/08/blog-post_26.html)




http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/THVD5Y9lWmI/AAAAAAAAA6U/FUkBrvIDT5Q/s1600/veera1.jpg (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/THVD5Y9lWmI/AAAAAAAAA6U/FUkBrvIDT5Q/s1600/veera1.jpg)



மத்தியானம் வேள
ஒரு மோரு சாதம் போல
ஏ(ன்) மனசிலிறங்கும் கண்ணம்மா..
இந்த மாமன(னை) கட்டிக்க சம்மதமா ?!?.....(இந்த...)

காத்திலாடும் சேல - என்
மனசுக்கனுப்பும் ஓல
இது வேலையத்த வேல-ஆனா
காதலுங்குது மூள..... (இது..)

சின்னதா நீ சிரிச்ச - அடி
சீக்கிரம் மனச பறிச்ச
இத காதலுன்னு சொல்லி
என்ன கானா பாட வச்ச..... (இத..)

சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
ஏறுதுந்தன் மவுசு
இந்த மாமா பாட்டு புதுசு
இன்னும் ஏண்டி இந்த ரவுசு

கால் கொலுசு பாட்டு பாடும்
காதில் கம்மல் ஆட்டம் ஆடும்
என் மனசு உன்ன தேடும்
நீ இல்லாங்காட்டி வாடும் .....
(நீ இல்லாங்காட்டி வா........டும்)


(சில ஆண்டுகளுக்கு முன் இரவு நேர பணியில் இருந்த போது உடன் வேலை செய்த நண்பர் ஒருவர் ஒரு கானா பாட்டுபோல பாட சொன்னார் , அப்போது அதற்காக முயற்சி செய்து ஒரு 20 நிமிடத்தில் இப்படி எழுதினேன் ,.... எப்படி இருக்கு???)


பிரியமுடன் பிரபு ...
http://priyamudan-prabu.blogspot.com/2010/08/blog-post_26.html

ஆதவா
05-09-2010, 02:31 AM
நல்லா வந்திருக்குங்க... படிக்கும்பொழுதே ஒருமாதிரி பாட்டு பாடற உணர்வு வருது!! வாழ்த்துக்கள்!!
அதென்னவோ தெரியல, கிராமத்து பாட்டாவும் தெரியுது! அதிலும் சுருதி ஏற்ற இறக்கத்தையும் கொடுத்திருக்கீங்க....

இப்படியே முயற்சி செஞ்சா, சினிமா மெட்டுகள் கைவசமாகும்!!!

தொடருங்கள் பிரபு!!

தாமரை
05-09-2010, 04:26 AM
போற போக்கைப் பார்த்தா, "கானா கஜானா" என புதுத் திரி ஆரம்பிச்சி எல்லோரையும் எழுத வைக்கலாம்.

அங்கங்க தட்டற தளையைச் சீவினா அழகா பாடலாம்..

உதாரணம் :


சின்னதா நீ சிரிச்ச - அடி
சீக்கிரம் மனச பரிச்ச
இத காதலுன்னு சொல்லி
என்ன கானா பாட வச்ச.....

சிரிச்ச , பரிச்ச அப்படின்னு முன் வரிகளை முடிக்கறப்ப கடைசி வரியையும் தவிச்சேன் என்கிற மாதிரி (புளிமா ) வில் முடிச்சா அழகா வரும். வச்ச என்பது தேமா..


இத காதலுன்னு சொல்லி - நானும்
கானா பாடித் தவிச்சேன்

சில வார்த்தைகளையும் மாத்தணும் உதாரணமா

சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
ஏறுதுந்தன் மவுசு

சத்தம் போடுது உங்கொலுசு - அதில்
ஏறுது உம் மவுசு

கிராமத்து பாடல்களில் சாதாரண வார்த்தைகளையே உப்யோகிக்கணும்.

உதித் நாரயணன் இப்போதைய பாடலை பாடினா அழகா இருக்கும்.

இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்..

rajesh2008
05-09-2010, 04:45 AM
நன்பரே, உங்கள் மெட்டு அருமையான சினிமா பாடல் போலவும், கிராமியப்பாடல் போலவும் ரம்மியமாக அமைந்துள்ளது. ஆனால் 10ஆவது வரியில் "பறிச்ச" என்று வருவது தானே முறை.

"பொத்தனூர்"பிரபு
26-10-2010, 09:05 AM
நல்லா வந்திருக்குங்க... படிக்கும்பொழுதே ஒருமாதிரி பாட்டு பாடற உணர்வு வருது!! வாழ்த்துக்கள்!!
அதென்னவோ தெரியல, கிராமத்து பாட்டாவும் தெரியுது! அதிலும் சுருதி ஏற்ற இறக்கத்தையும் கொடுத்திருக்கீங்க....

இப்படியே முயற்சி செஞ்சா, சினிமா மெட்டுகள் கைவசமாகும்!!!

தொடருங்கள் பிரபு!!

நன்றிங்க

"பொத்தனூர்"பிரபு
26-10-2010, 09:08 AM
போற போக்கைப் பார்த்தா, "கானா கஜானா" என புதுத் திரி ஆரம்பிச்சி எல்லோரையும் எழுத வைக்கலாம்.

அங்கங்க தட்டற தளையைச் சீவினா அழகா பாடலாம்..

உதாரணம் :


சின்னதா நீ சிரிச்ச - அடி
சீக்கிரம் மனச பரிச்ச
இத காதலுன்னு சொல்லி
என்ன கானா பாட வச்ச.....

சிரிச்ச , பரிச்ச அப்படின்னு முன் வரிகளை முடிக்கறப்ப கடைசி வரியையும் தவிச்சேன் என்கிற மாதிரி (புளிமா ) வில் முடிச்சா அழகா வரும். வச்ச என்பது தேமா..


இத காதலுன்னு சொல்லி - நானும்
கானா பாடித் தவிச்சேன்

சில வார்த்தைகளையும் மாத்தணும் உதாரணமா

சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
ஏறுதுந்தன் மவுசு

சத்தம் போடுது உங்கொலுசு - அதில்
ஏறுது உம் மவுசு

கிராமத்து பாடல்களில் சாதாரண வார்த்தைகளையே உப்யோகிக்கணும்.

உதித் நாரயணன் இப்போதைய பாடலை பாடினா அழகா இருக்கும்.

இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்..

நன்றிங்க
எனக்கு இலக்கணம் அவ்வளவா (?) தெரியாதுங்க ( தேமா புளிமா கூட ..)
சும்மா நண்பர் கேட்டார் முறைபெண்ணை பார்த்து படுவதுபோல வேணும் என்று
அதுக்காக நானே பாடிபார்த்து எழுதினேன் , எனக்கு இசையோ இலக்கணமோ தெரியாது என்பதால் சில தவறு இருக்கலாம்
உங்கள் கருத்துக்கு நன்றி

"பொத்தனூர்"பிரபு
26-10-2010, 09:09 AM
நன்பரே, உங்கள் மெட்டு அருமையான சினிமா பாடல் போலவும், கிராமியப்பாடல் போலவும் ரம்மியமாக அமைந்துள்ளது. ஆனால் 10ஆவது வரியில் "பறிச்ச" என்று வருவது தானே முறை.


ஆமாங்க நன்றி