PDA

View Full Version : ரப்பர்..!



கஜினி
25-08-2010, 05:38 PM
பென்சில் தான் வாழ
மரத்தூளை அழிக்கிறது
மரத்தூளோ தானும் இழிந்து
தன்னை அழித்த
பென்சிலையும் அழிக்கிறது
ரப்பராகி..

அமரன்
25-08-2010, 08:23 PM
பிழைகளை அழிப்பதால்
நானும் தற்கொடைப் போராளிதான்.
ரப்பர்

ஆதவா
26-08-2010, 06:48 AM
பென்சில் தான் வாழ
மரத்தூளை அழிக்கிறது
மரத்தூளோ தானும் இழிந்து
தன்னை அழித்த
பென்சிலையும் அழிக்கிறது
ரப்பராகி..

இயற்கையின் சமநிலையைப் பற்றி பென்சில் ரப்பர் கதைகளால் விளக்குகிறீர்கள்!! சபாஷ்!!

ரப்பரோ தானும் அழிந்து
பென்சிலின் பயனையும் அழிக்கிறது... :)

பென்சிலின் பயன் அது எழுதப்படுவதே!!

கவிதை நல்ல்லா இருக்குங்க. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா நல்ல கவிதைகள் அமையும்!!