PDA

View Full Version : வெங்காயமா என் வாழ்க்கை

Ravee
25-08-2010, 02:28 PM
வெங்காயமா என் வாழ்க்கை

http://www.recipetips.com/images/glossary/o/onion_red_pearl.jpg

பால்மணம் மாறும் முன் இளமை வந்தது
இளமை பூத்த போதே கடமை வந்தது

கடமை முடியும் முன்னே முதுமை வந்தது
இத்தனை வருடம் கழித்து திரும்பி பார்த்தேன்

ஒன்றும் இல்லை அங்கே ......... :traurig001:
இன்பம் துன்பம் கலைந்த பின் எல்லாம் வெறுமை

உரித்து பார்த்த பின் ஒன்றும் இல்லாமல் போன
உதவாத வெங்காயமா என் வாழ்க்கை

சிவா.ஜி
25-08-2010, 02:39 PM
ரொம்ப பேருக்கு அப்படித்தான் ரவீ. வெந்ததைத் திண்ணுட்டு..விதி வந்தா சாகற எல்லோரோட வாழ்க்கையும் வெங்காயம்தான். ஆனா....எல்லாத்தையும் அடைய ஆசைப்படறவங்க வாழ்க்கை 'பெருங்காயம்'தான்.

வாழ்த்துக்கள் ரவீ.

Nivas.T
25-08-2010, 04:12 PM
மனித வழக்கை என்பதே ஒரு வெங்காயம்தான்

பூண்டு வாழ்க்கை கொஞ்ச பேருக்குதான்

ஆனா மத்த எல்லோர் வாழ்க்கையும் வெங்காயம்தான்

-வாழ்க பெரியார்

சூரியன்
25-08-2010, 04:25 PM
ரொம்ப பேருக்கு அப்படித்தான் ரவீ. வெந்ததைத் திண்ணுட்டு..விதி வந்தா சாகற எல்லோரோட வாழ்க்கையும் வெங்காயம்தான். ஆனா....எல்லாத்தையும் அடைய ஆசைப்படறவங்க வாழ்க்கை 'பெருங்காயம்'தான்.

வாழ்த்துக்கள் ரவீ.

உண்மை தான் அண்ணா.

தாமரை
25-08-2010, 04:29 PM
உரிக்கும் போது கண்ணீர் வந்ததா?

அப்படின்னா வெங்காயம்தான் :lachen001::lachen001::lachen001:

சூரியன்
25-08-2010, 04:33 PM
உரிக்கும் போது கண்ணீர் வந்ததா?

அப்படின்னா வெங்காயம்தான் :lachen001::lachen001::lachen001:

எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு.:icon_b:

ஆதவா
25-08-2010, 04:44 PM
வெங்காயத்தை இவ்வளவு கேவலமாகப் பேசிய உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

உங்கள் கவிதையை திரும்பவும் வாசித்துப் பார்த்தேன்.

பால்மணம் மாறும் முன் இளமை வந்தது
குழந்தையிலேயே முதிர்ச்சி பெறுதல் அறிவில் ஓங்கி நின்றல்.. அதெல்லாவற்றையும் விட இளமை எப்பொழுதுமே இளமைகாலத்தில்தான் வரும்... பால்மணம் மாறும் முன்னர் வரும் இளமை மனக்குழப்பத்தை அல்லது பைத்தியத்தைக் குறிக்கும்.

இளமை பூத்த போதே கடமை வந்தது
கடமை இல்லையென்றால் எதுவுமே இல்லை. நீங்கள் இக்கவிதையை எழுதவேண்டியது உங்கள் கடமை.. படித்தும் படிக்காமலும் எழுதியும் எழுதாமலும் போவது என் கடமை!!

கடமை முடியும் முன்னே முதுமை வந்தது
கடமை என்றும் முடிந்துவிடாது. அப்படி முடியும் முன்னரே முதுமை வந்தால் அதைவிட சந்தோஷம் வேறேது இருக்கிறது??? நிம்மதியாக இருக்கலாமே!!

இத்தனை வருடம் கழித்து திரும்பி பார்த்தேன்
ஒன்றும் இல்லை அங்கே .........
எல்லாம் நல்லபடியாக போனபிறகு ஒன்று இல்லை என்று புலம்புவது எவ்வகையில் நியாயம்?

வெங்காயமா என் வாழ்க்கை என்று சொல்கிறீர்களே... வாழ்க்கையை வாழ்நிலையை சரியாகச் சொல்ல வெங்காயத்தை விடவும் வேற எந்த காய்கறி உண்டோ?

வெங்காயம் பல அடுக்குகளை உடையது.
பலபடிமானங்களையும் அமில குறியீட்டையும் உடையது.
அதன் மேற்தோல் மெல்லியது ஆனால் உட்புறம் கடினமான தோலைக் கொண்டது
அதன் தலை, முடிகளைக் கொண்டது
மண்ணுக்கடியில் புதைந்து வளரக்கூடியது,
அதைக் கொன்றால் அது அழவைக்கக் கூடியது
அதன் சுவை தன்னோடு சேர்பவர்களைப் பொறுத்து மாறக்கூடியது
சிறியதில் பெரியதுமாய், பெரியதில் சிறியதுமாய் அல்லது இரண்டுமாய் எவ்வடிவிலும் இருக்க முடிவது.

எத்தனை இருக்கிறது பாருங்கள்!!!! ஆக, இனிமேல் நீங்கள் புலம்புவதாக இருந்தால் வெங்காயத்தைச் சொல்லக் கூடாது.:icon_ush:.. சரியா??? :D

Nivas.T
25-08-2010, 04:54 PM

அப்படி என்றால் ஆதவாவை வெங்காயம் என்று சொன்னால் கோவப்பட மாட்டார்........:icon_b:

வெங்காயத்துக்கு வக்காலத்து வாங்கிய :rolleyes:

வெங்காய(தின்) தலைவர் ஆதவா வாழ்க!!!!!!! :D:D:D:D:D:D:D

சூரியன்
25-08-2010, 04:55 PM
வெங்காயத்தை இவ்வளவு கேவலமாகப் பேசிய உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

உங்கள் கவிதையை திரும்பவும் வாசித்துப் பார்த்தேன்.

குழந்தையிலேயே முதிர்ச்சி பெறுதல் அறிவில் ஓங்கி நின்றல்.. அதெல்லாவற்றையும் விட இளமை எப்பொழுதுமே இளமைகாலத்தில்தான் வரும்... பால்மணம் மாறும் முன்னர் வரும் இளமை மனக்குழப்பத்தை அல்லது பைத்தியத்தைக் குறிக்கும்.

கடமை இல்லையென்றால் எதுவுமே இல்லை. நீங்கள் இக்கவிதையை எழுதவேண்டியது உங்கள் கடமை.. படித்தும் படிக்காமலும் எழுதியும் எழுதாமலும் போவது என் கடமை!!

கடமை என்றும் முடிந்துவிடாது. அப்படி முடியும் முன்னரே முதுமை வந்தால் அதைவிட சந்தோஷம் வேறேது இருக்கிறது??? நிம்மதியாக இருக்கலாமே!!

எல்லாம் நல்லபடியாக போனபிறகு ஒன்று இல்லை என்று புலம்புவது எவ்வகையில் நியாயம்?

வெங்காயமா என் வாழ்க்கை என்று சொல்கிறீர்களே... வாழ்க்கையை வாழ்நிலையை சரியாகச் சொல்ல வெங்காயத்தை விடவும் வேற எந்த காய்கறி உண்டோ?

வெங்காயம் பல அடுக்குகளை உடையது.
பலபடிமானங்களையும் அமில குறியீட்டையும் உடையது.
அதன் மேற்தோல் மெல்லியது ஆனால் உட்புறம் கடினமான தோலைக் கொண்டது
அதன் தலை, முடிகளைக் கொண்டது
மண்ணுக்கடியில் புதைந்து வளரக்கூடியது,
அதைக் கொன்றால் அது அழவைக்கக் கூடியது
அதன் சுவை தன்னோடு சேர்பவர்களைப் பொறுத்து மாறக்கூடியது
சிறியதில் பெரியதுமாய், பெரியதில் சிறியதுமாய் அல்லது இரண்டுமாய் எவ்வடிவிலும் இருக்க முடிவது.

எத்தனை இருக்கிறது பாருங்கள்!!!! ஆக, இனிமேல் நீங்கள் புலம்புவதாக இருந்தால் வெங்காயத்தைச் சொல்லக் கூடாது.:icon_ush:.. சரியா??? :D

என்ன ஒரு பிரித்தாய்வு.:icon_b: