PDA

View Full Version : என் தனிமைகீதம்
24-08-2010, 11:18 PM
எனக்கு மட்டுமே சொந்தமான
என் தனிமையைப் பற்றி
உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும்.
என் தனிமை என்னுடன் கொண்டாடும் பொழுதுகளை
எவருடனும் பகிர்ந்துகொள்ள
நான் விரும்புவதேயில்லை என்றபோதும்
என்னென்னவோ எழுதுகிறாய்,
என்னைப்பற்றியும் எழுதேனென்று
என்னோடு தீராத சண்டை அதற்கு!

பழம் நினைவுகளை மீளசை போடுகையில்
பவ்யமாய் கைகட்டி என் பக்கத்திலும்,
எதிர்காலக் கனவுகளில்
ஏகாந்தமாய் சஞ்சரிக்கும் வேளையில்
எதுவும் பேசாமல் என் முகத்தைப் பார்த்தபடியே
எதிரிலும் நிற்கும் அதை…..
அது என்று கூறி ஒரு அஃறிணையைப்போலே
அலட்சியப்படுத்திவிட முடியாது.

உற்ற தோழியென உவமை சொல்லலாம்,
அவளுக்கு என்னைத்தவிர எத்தனை சிநேகமோ
என்ற எண்ணம் அதைத் தடுத்துவிட...
என் தனிமையை ஒரு
குழந்தையென உருவகப்படுத்துகிறேன்.
அதுவோ மனம்போல் விளையாடிக் களைத்து
தூங்கப்போய்விடுகிறது.

யாருமற்ற நேரத்தில்
இல்லத்திலும் உள்ளத்திலும்
ஒருசேரப் புகுவதால்
கள்ளக்காதலனுக்கு ஒப்பிடலாம்.
என்றாலும்..…..
என் கற்பின் சிறப்பு
களங்கப்பட்டுவிடும் என்பதால்
சாலப்பொருந்தும் அவ்வுவமை
சற்றும் பொருந்தாமற்போனது.

கடைசியாய்………
நிபந்தனைகள் அத்தனைக்கும் கட்டுப்பட்டு
என் விரலசைவிற்கும் ஓடிவந்து
என் மடியில் தஞ்சம் புகும்
செல்லப்பிராணியென்றே அதைச் சொன்னேன்.
என் தனிமைக்கு ஏகக் கொண்டாட்டம்!

கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு
கண்மறைவாய் அது ஒளிந்துகொள்ள...
கையில் செல்லப்பிராணியுடனும்
வாயில் வெற்றிச்சிரிப்புடனும் என் கணவர்!
தனிமையின் கோரப்பிடியினின்று
தண்மையாய் விடுபட இது உதவுமென்றார்!

வெருண்டுபோய்,
விருட்டென்று வெளிப்பாயும் என் தனிமையை
விரட்டிப்பிடிக்க இயலாதவளாய்
வெற்றுப்புன்னைகை பூக்கிறேன் நான்!

தாமரை
25-08-2010, 03:45 AM
தனிமை ஒரு விதமான சுகம்.

கூட்டங்களில் இருக்கும் பொழுது
இதன் தேவை
அவ்வப்பொழுது அதிகரித்து விடுகிறது..

தனிமையை எதற்கு ஒப்பிடுவது?

தேடலகளில்முழுகும் பொழுது துணையாய் தனிமை..

என்னைத் திறந்து பார்..
என்னில் மூழ்கிப் பார்..
என்னை ஆராய்ந்து பார்..

தனிமை எல்லாவற்றையும் நமக்கே அர்ப்பணித்து விட்டு நம்முடன் உட்கார்ந்து கொண்டுவிடுகிறது,,

ஆராய்ந்து பார்த்தேன். தனிமைக்கு தனிமை பிடிப்பதில்லை. அது எப்பொழுதும், யாராவது ஒருத்தர் கூடவே இருக்கிறது.

செல்லப் பிராணிகளும அப்படித்தான். தன் தலைவனைப் பிரிவதில்லை. பிரிந்தாலும் அவன் வருகைக்காக வாசலிலேயே காத்திருக்கும்.

தனிமை நீர்மத் தன்மை கொண்டதாய் இருக்கிறது..

அதை எந்தக் கொள்கலனில் வைத்தாலும், கலனின் வடிவை அது அடைந்து விடுகிறது..

தனிமை நிறமற்றது. அதை ஊடுருவிப் பார்க்க முடிகிறது,

தனிமை மணமற்றது. அருகில் ஒருவர் தனிமையுடன் இருக்கிறார் என அறிய முடிவதில்லை.

தனிமை தாகம் தீர்க்கிறது.. தனிமை ஜீரணிக்க முடியாதவற்றை ஜீரணிக்க உதவுகிறது.

தனிமையில் மூழ்கிக் குளிக்கவும் முடிகிறது.. மூச்சுத்திணறி உயிரையும் விடுகிறோம்.

தனிமை தண்ணீரா? செல்லப் பிராணியா?

யோசிக்கணும்.. அதற்கு...

தனிமை தேவை. :lachen001::lachen001::lachen001::lachen001:

ஆதவா
25-08-2010, 05:33 AM
கவிதை நன்றாக இருக்கிறது... ஆனால் பாருங்கள் நாம் தனிமையை உணருகிறோமா இல்லையா என்ற கேள்வியும் இருக்கிறது. நீங்கள் தனிமையை ஒரு பிம்பமாக்கிவிடுகிறீர்கள். அதனை தோழியாக்கி பிராணியாக்கி தோள்தழுவி மடிபுரண்டு.........

இப்பொழுது தனிமை தனிமையாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு தனிமையின் துணை கிடைத்துவிட்டதால் நீங்கள் தனிமையை உணரமுடியாதல்லவா?? (எப்புடி??)
யாருமற்ற இல்லத்தில் புகுதல் கள்ளக்காதலனால் மட்டுமன்று.. கணவனாலும் இயலுமே!!! ஏனுங்க... தனிமையை கணவருக்கு ஒப்பிடமாட்டீர்களா? அப்படி கொடுத்து வைக்காதவர்களா அவர்கள்!!! பாவம்!!!
சரி ஓகே!!! ஏற்கன்வே தனிமையை அனுபவித்துவிட்டதாலும் அதனை காதலித்து எல்லாமும் செய்துவிட்டதாலும் இப்பொழுது அதைப் பற்றி பேச போரடிக்கிறது!!

ஆனா ஒண்ணு சொல்றேங்க.... நல்லா எழுதி பழகிட்டீங்க. அம்புட்டுத்தேன்!!!

எல்லோரும் உடன் இருக்கிறார்கள்
என்னோடு மட்டும் இருக்கிறது
தனிமை

பாரதி
25-08-2010, 01:21 PM
நல்ல கற்பனை!

தனிமையும் உங்களிடம் அடம் பிடிக்கும் அழகை தனி மையால் எழுதாமல் தண்மையாய் எழுதி இருக்கிறீர்கள்.

விரலசைவுக்கு கட்டுப்படும் தனிமையா..?
எதுவும் இல்லாத போது எதையும் சொல்லாமலே ஒட்டிக்கொள்ளுமே..இல்லையா?

இக்கவிதை முன்பு மன்றத்தில் கவிதா அவர்களின் "தனிமை இனிமை" என்ற கவிதையை நினைவூட்டியது.

உங்கள் பன்முக ஆளுமை மேலும் வளர வாழ்த்துகிறேன்.

அமரன்
25-08-2010, 02:24 PM
என் தனிமை...

சொல்லும் விதத்தில இருக்குங்க.

என் என்று சொல்லும் அழகு தனிமையின் சொல்லழகை சிறப்பாக வெளிப்படுத்தும்.

பெருமை, சோகம், எரிச்சல், என பல உணர்வுகள் என்னுள் அடங்கி விடுகின்றன.

சிலருக்குத் தனிமை பிடிப்பதில்லை.
தனிமைக்கு எல்லாரையும் பிடிக்கும்.

இந்த வகையிலும் தனிமை சிறந்தது.
ஒவ்வொருவரும் தன்னை அறிவதை தனிமையும் தருகிறது.

வசீகரிக்கும் உங்கள் எழுத்தாண்மைக்கு என்றுமே ஜெயம்தான்.

வாழ்த்துகள் கீதம்.

சிவா.ஜி
25-08-2010, 02:47 PM
அசத்தல். தனிமையை செல்லப்பிராணியாக்கி....உருவகப் பிராணியை விரட்ட..உருவமுள்ள பிராணியைக் கவிதையில் நுழைத்து....அசத்திட்டீங்க.

நிஜமாவே....உங்களோட எழுத்தாளுமை பிரமிக்க வைக்கிறது தங்கையே. நீங்கள் இன்னும் பல உயரங்களைத் தொடும் தூரம் அதிகமில்லை.

வாழ்த்துக்கள்ம்மா.

(தாமரையோட தனிமை விளக்க வரிகள் மிகப் பிரமாதம். ஆதவாவின் மூன்றுவரிக் கவிதை அசத்தல்.
அமரன் ரெண்டு வரி...சூப்பர். தனிமைக்கு எல்லோரையும் பிடிக்கும்...தனிமை எல்லோரையும் பிடிக்கும்....)

Nivas.T
25-08-2010, 04:36 PM
அஃறிணை
தோழி
குழந்தை
கள்ளக்காதலன்
செல்லப்பிராணி

தாங்கள் எடுத்துக்கொண்ட உவமைகளும் அதற்கான உருவகமும் மிக அற்ப்புதம் இந்த கவிதையை பாராட்டும் அளவுக்கு நான் இல்லை நன்றி கீதம் அவர்களே

இறந்தகால நினைவுகளை இழுத்து
நிகழ்காலத்தை இறக்கச் செய்யும்
என் தனிமை

கீதம்
25-08-2010, 10:39 PM
தனிமை ஒரு விதமான சுகம்.

கூட்டங்களில் இருக்கும் பொழுது
இதன் தேவை
அவ்வப்பொழுது அதிகரித்து விடுகிறது..

தனிமையை எதற்கு ஒப்பிடுவது?

தேடலகளில்முழுகும் பொழுது துணையாய் தனிமை..

என்னைத் திறந்து பார்..
என்னில் மூழ்கிப் பார்..
என்னை ஆராய்ந்து பார்..

தனிமை எல்லாவற்றையும் நமக்கே அர்ப்பணித்து விட்டு நம்முடன் உட்கார்ந்து கொண்டுவிடுகிறது,,

ஆராய்ந்து பார்த்தேன். தனிமைக்கு தனிமை பிடிப்பதில்லை. அது எப்பொழுதும், யாராவது ஒருத்தர் கூடவே இருக்கிறது.

செல்லப் பிராணிகளும அப்படித்தான். தன் தலைவனைப் பிரிவதில்லை. பிரிந்தாலும் அவன் வருகைக்காக வாசலிலேயே காத்திருக்கும்.

தனிமை நீர்மத் தன்மை கொண்டதாய் இருக்கிறது..

அதை எந்தக் கொள்கலனில் வைத்தாலும், கலனின் வடிவை அது அடைந்து விடுகிறது..

தனிமை நிறமற்றது. அதை ஊடுருவிப் பார்க்க முடிகிறது,

தனிமை மணமற்றது. அருகில் ஒருவர் தனிமையுடன் இருக்கிறார் என அறிய முடிவதில்லை.

தனிமை தாகம் தீர்க்கிறது.. தனிமை ஜீரணிக்க முடியாதவற்றை ஜீரணிக்க உதவுகிறது.

தனிமையில் மூழ்கிக் குளிக்கவும் முடிகிறது.. மூச்சுத்திணறி உயிரையும் விடுகிறோம்.

தனிமை தண்ணீரா? செல்லப் பிராணியா?

யோசிக்கணும்.. அதற்கு...

தனிமை தேவை. :lachen001::lachen001::lachen001::lachen001:

முதல் பின்னூட்டத்துக்கும், முழுமையான பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி தாமரை அவர்களே.

தனிமைக்கு தண்ணீர் உவமை என்று நீங்கள் சொல்வது மெத்தச் சரி. ஆனால் என் தனிமை, என் தனிமை என்னும்போது அதனுடன் என்னையோ என்னுடன் அதனையோ ஏதோவொரு பந்தத்தின் மூலம் இணைத்துக்கொள்ளவேண்டியிருப்பதால் அதை செல்லப்பிராணியென்றேன்.

கீதம்
25-08-2010, 10:47 PM
கவிதை நன்றாக இருக்கிறது... ஆனால் பாருங்கள் நாம் தனிமையை உணருகிறோமா இல்லையா என்ற கேள்வியும் இருக்கிறது. நீங்கள் தனிமையை ஒரு பிம்பமாக்கிவிடுகிறீர்கள். அதனை தோழியாக்கி பிராணியாக்கி தோள்தழுவி மடிபுரண்டு.........

இப்பொழுது தனிமை தனிமையாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு தனிமையின் துணை கிடைத்துவிட்டதால் நீங்கள் தனிமையை உணரமுடியாதல்லவா?? (எப்புடி??)
யாருமற்ற இல்லத்தில் புகுதல் கள்ளக்காதலனால் மட்டுமன்று.. கணவனாலும் இயலுமே!!! ஏனுங்க... தனிமையை கணவருக்கு ஒப்பிடமாட்டீர்களா? அப்படி கொடுத்து வைக்காதவர்களா அவர்கள்!!! பாவம்!!!
சரி ஓகே!!! ஏற்கன்வே தனிமையை அனுபவித்துவிட்டதாலும் அதனை காதலித்து எல்லாமும் செய்துவிட்டதாலும் இப்பொழுது அதைப் பற்றி பேச போரடிக்கிறது!!

ஆனா ஒண்ணு சொல்றேங்க.... நல்லா எழுதி பழகிட்டீங்க. அம்புட்டுத்தேன்!!!

எல்லோரும் உடன் இருக்கிறார்கள்
என்னோடு மட்டும் இருக்கிறது
தனிமை

ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையில்
கவிதையின் உவமைக்காகவும்கூட
கள்ளக்காதல் புகுந்துவிடக்கூடாது என்று
கரிசனத்துடன் கவலைப்படும் ஆதவா!
நீவிர் வாழ்க!:icon_b:

தனிமையைக் கணவனாய் வரித்தால் தனிமை என் பிடிக்குள் இருக்காது. நான் தான் அதன் பிடியில் இருப்பேன். :mad:

நான் எழுதிப் பழகியதே தமிழ்மன்றச் சிலேட்டுப்பலகையில்தானே? அதற்கு உங்களைப்போன்ற ஆசிரியர்களும் உதவியதில் எனக்கு மகிழ்ச்சியே!:)

கீதம்
25-08-2010, 10:53 PM
நல்ல கற்பனை!

தனிமையும் உங்களிடம் அடம் பிடிக்கும் அழகை தனி மையால் எழுதாமல் தண்மையாய் எழுதி இருக்கிறீர்கள்.

விரலசைவுக்கு கட்டுப்படும் தனிமையா..?
எதுவும் இல்லாத போது எதையும் சொல்லாமலே ஒட்டிக்கொள்ளுமே..இல்லையா?

இக்கவிதை முன்பு மன்றத்தில் கவிதா அவர்களின் "தனிமை இனிமை" என்ற கவிதையை நினைவூட்டியது.

உங்கள் பன்முக ஆளுமை மேலும் வளர வாழ்த்துகிறேன்.

உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி பாரதி அவர்களே. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது எனக்குக் கிடைக்கும் தவிர்க்க இயலா தனிமைப்பொழுதுகள் அதிகம். சில வருடங்களுக்கு முன் என்னை வாட்டிய அப்பொழுதுகளை இன்று என் வசப்படுத்தி இருப்பதில் எனக்கு பெருமையே!

கீதம்
25-08-2010, 10:58 PM
என் தனிமை...

சொல்லும் விதத்தில இருக்குங்க.

என் என்று சொல்லும் அழகு தனிமையின் சொல்லழகை சிறப்பாக வெளிப்படுத்தும்.

பெருமை, சோகம், எரிச்சல், என பல உணர்வுகள் என்னுள் அடங்கி விடுகின்றன.

சிலருக்குத் தனிமை பிடிப்பதில்லை.
தனிமைக்கு எல்லாரையும் பிடிக்கும்.

இந்த வகையிலும் தனிமை சிறந்தது.
ஒவ்வொருவரும் தன்னை அறிவதை தனிமையும் தருகிறது.

வசீகரிக்கும் உங்கள் எழுத்தாண்மைக்கு என்றுமே ஜெயம்தான்.

வாழ்த்துகள் கீதம்.

உண்மைதான் அமரன். என் தனிமைக்குள் நானே அடக்கம். என்னை யாரென்று நான் அறியவும், அறியப்பட்ட நான் நானாகவே இருக்கவும் தனிமைதான் துணை செய்கிறது.

பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி, அமரன்.

கீதம்
25-08-2010, 11:01 PM
அசத்தல். தனிமையை செல்லப்பிராணியாக்கி....உருவகப் பிராணியை விரட்ட..உருவமுள்ள பிராணியைக் கவிதையில் நுழைத்து....அசத்திட்டீங்க.

நிஜமாவே....உங்களோட எழுத்தாளுமை பிரமிக்க வைக்கிறது தங்கையே. நீங்கள் இன்னும் பல உயரங்களைத் தொடும் தூரம் அதிகமில்லை.

வாழ்த்துக்கள்ம்மா.

(தாமரையோட தனிமை விளக்க வரிகள் மிகப் பிரமாதம். ஆதவாவின் மூன்றுவரிக் கவிதை அசத்தல்.
அமரன் ரெண்டு வரி...சூப்பர். தனிமைக்கு எல்லோரையும் பிடிக்கும்...தனிமை எல்லோரையும் பிடிக்கும்....)

உங்கள் ஆசிகளுடன் நான் மேலும் வளர்வேன். மிகவும் நன்றி அண்ணா. உண்மையில் என் தனிமை என்னோடுதான் இருக்கிறது. கவிதைக்காக அப்படி எழுதினேன்.:)

சுட்டிபையன்
25-08-2010, 11:02 PM
நல்ல கவிக்தை, நல்ல கற்பனை. தனிமைக்கும் எனக்கும் ரொம்பவே நெருக்கம் அதிகம் பல வேலைகளில் தனிமை இனிமை, சில வேளைகளில் ரொம்ப கொடுமை... உங்கள் தனிமை ஒரு கவிதை.

கீதம்
25-08-2010, 11:04 PM
அஃறிணை
தோழி
குழந்தை
கள்ளக்காதலன்
செல்லப்பிராணி

தாங்கள் எடுத்துக்கொண்ட உவமைகளும் அதற்கான உருவகமும் மிக அற்ப்புதம் இந்த கவிதையை பாராட்டும் அளவுக்கு நான் இல்லை நன்றி கீதம் அவர்களே

இறந்தகால நினைவுகளை இழுத்து
நிகழ்காலத்தை இறக்கச் செய்யும்
என் தனிமை

தன்னடக்கத்துடன் குறிப்பிட்டிருந்தாலும் உங்கள் கவி வன்மையை நான் அறிவேன்.:icon_b:

பாராட்டுக்கும், பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி, நிவாஸ்.

கீதம்
25-08-2010, 11:11 PM
நல்ல கவிக்தை, நல்ல கற்பனை. தனிமைக்கும் எனக்கும் ரொம்பவே நெருக்கம் அதிகம் பல வேலைகளில் தனிமை இனிமை, சில வேளைகளில் ரொம்ப கொடுமை... உங்கள் தனிமை ஒரு கவிதை.

ஆம்! தனிமை இனிமையா கொடுமையா என்பது அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தது. பாராட்டுக்கு மிகவும் நன்றி சுட்டிப்பையன் அவர்களே!

கவிச்சமர் ஆரம்பித்த சுட்டிப்பையன் நீங்கள்தானா?

தாமரை
26-08-2010, 02:18 AM
முதல் பின்னூட்டத்துக்கும், முழுமையான பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி தாமரை அவர்களே.

தனிமைக்கு தண்ணீர் உவமை என்று நீங்கள் சொல்வது மெத்தச் சரி. ஆனால் என் தனிமை, என் தனிமை என்னும்போது அதனுடன் என்னையோ என்னுடன் அதனையோ ஏதோவொரு பந்தத்தின் மூலம் இணைத்துக்கொள்ளவேண்டியிருப்பதால் அதை செல்லப்பிராணியென்றேன்.

ஏன் ஆனந்து புரத்து வீடு மாதிரி பின் கட்டில் சொந்தமா ஒரு தாமரைக்குளம் வைத்துக் கொள்ளும் ஆசை இல்லையா?

கீதம்
26-08-2010, 05:32 AM
ஏன் ஆனந்து புரத்து வீடு மாதிரி பின் கட்டில் சொந்தமா ஒரு தாமரைக்குளம் வைத்துக் கொள்ளும் ஆசை இல்லையா?

:):):)

கலையரசி
26-08-2010, 01:39 PM
தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு என்னைப் பிடிக்குமா என இதுவரை கற்பனை செய்ததில்லை. குழந்தை, தோழி, கள்ளக்காதலன்,செல்லப்பிராணி எனத் தனிமையைக் கற்பனை செய்த விஷயம் புதிதாக இருந்தது.
பாராட்டுக்கள் கீதம்!

கீதம்
28-08-2010, 12:06 AM

மிகவும் நன்றி, அக்கா.

Ravee
28-08-2010, 08:55 PM
நானும் ஒரு தனிமை விரும்பி

என் தனிமை எல்லோரையும் அச்சுறுத்துவது ஏன் ?
நான் தனியே இருக்க விரும்பி தனியறை பூட்டி இருந்தால்

நொடிக்கொருதரம் என்னை எட்டிப் பார்க்கும் மனைவி
விலகி நின்று வேடிக்கை பார்க்கும் மகள்

விந்தையாய் பார்க்கும் அண்டை வீட்டுக்காரர்
இப்போதான் இப்படி இருக்கான் என்று அங்கலாய்க்கும் அன்னை

இவர்களுக்கு ஏன் புரிவதில்லை
என் தனிமை எனக்கு இழந்த சக்தியை மீட்டுத்தரும் என்று

கீதம்
29-08-2010, 01:35 AM

வலியக் கிடைத்த தனிமையை நான் வலிந்து எனதாக்கிக்கொண்டேன்.
நீங்களோ இல்லாத தனிமையைத் தனதாக்கிக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். வெற்றி கிட்ட என் வாழ்த்துகள்.

Ravee
29-08-2010, 01:53 AM
உங்க பதில் என்னை சிந்திக்க வைத்தது , இருங்க ஒரு கவிதையுடன் வரேன்.....:)