PDA

View Full Version : ஓவிக்கா... இந்த கதையைப் படிக்கவேண்டாம் ப்லீஸ்.

ஆதவா
24-08-2010, 05:19 PM
ஓவிக்கா... இந்த கதையைப் படிக்கவேண்டாம் ப்லீஸ்.

”என்னடா, ராக்கி வந்துவிட்டதா?”

“இல்லைக்கா”

“உனக்கு அனுப்பி விட்டேனேடா, முகவரி சரிதானே?”

“சரிதான், ஆனா; எனக்கு வரவில்லையே”

“எல்லாருக்கும் வந்துவிட்டதாமே, உனக்கு மட்டும் ஏனடா வராமல் போயிற்று?”

சதியாக இருக்குமோ?

ஆமாம்... ஓவிக்கா எனக்கு அனுப்பியதாகச் சொன்ன ராக்கி, எனக்கு வந்து சேரவில்லை. அது எந்த காரணத்தினால் தடைபட்டிருந்தது என்று தெரியவில்லை. இம்மாதிரியான
சூழ்நிலையில் ஓவிக்கா எனக்கு எந்த கொரியரில் அனுப்பினார் என்றும் தெரியாததால் விசாரிப்பதற்கு தேவையில்லாமல் போனது. எனக்கு ராக்கி கிடைக்காததால்
அனுப்பியவர் எந்த மனசூழ்நிலையை ஏற்றிருப்பார் என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏனெனில் இந்தமாதிரி அடுத்தவர் மனநிலையில் இறங்கி ஆராய்ச்சி செய்ய நான்
வளர்ந்திருக்கவில்லை. இந்நேரம் அந்த ராக்கி எங்கேயிருந்திருக்கும்? எனக்காக அதில் ஓவிக்கா என்ன எழுதியிருப்பார்கள்? யாராவது அதை எடுத்து ரக்*ஷாபந்தனுக்குக்
கட்டியிருப்பார்களோ என்று அன்று இரவு முழுக்க கனவுகளைச் சிதைத்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

என் வீடு முகவரியற்ற பூமியில் கிடக்கிறது. எல்லா வீடுகளும் முகவரியற்றுதான் இருந்திருக்கவேண்டும். நமக்குள் நாமே அடையாளப்படுத்தி தனித்துவிடப்படுபவைதானே இந்த
முகவரிகள் எல்லாமே.. சிலருக்கு அண்டைவீட்டு முகவரியே தெரிந்திருப்பதில்லை. தபால் காரனுக்குக் கூட எக்காளமிருக்கிறது. சேரியின் உட்பகுதிகளுக்கு பங்களா தபால்
எதற்குத் தேவையென்று நினைத்திருக்கலாம். ராக்கி எனக்குக் கிடைக்காததன் முழு காரணமும் தபால்காரனை அன்றி வேறு யாரும் ஏற்றுக் கொள்ளமுடியும் என்றூ எனக்குத்
தோன்றவில்லை.

ஓவிக்கா...

ஓவிக்காவை இதற்கு முன்னர் உங்களிடம் சொல்லியிருக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் விளக்கிச் சொல்லவும் முடிவதில்லை. என் நண்பன்
ஒருவன் ஓவிக்காவை சந்திக்கும் பொழுது ஒரு பின்னவீனத்துவக் கவிதை என்று விமர்சனம் கொடுத்திருந்தான். அது எளிதில் விளக்கிச் சொல்லமுடியாதது. ஆனால் நன்கு
உணரக்கூடியது. ஓவிக்காவை நீங்கள் சந்திக்கும்பொழுது குழந்தைத்தனமான சிந்தனை அடங்கிய பெரியவள் என்று சட்டென்று முடிவுகொள்வீர்கள். அது உண்மையாக
இருக்கலாம். ஆனால் அதுமட்டுமே உண்மையல்ல. யூகம். ஆக்ரோஷமும், மென்மையும் கலந்த குழந்தை என்று எனக்குப் பின்னேயிருந்து ஒரு பெண் கூறினார். அவரை
அதன்பின் பார்க்கும்படியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

சரி... ஓவிக்காவை விளக்க முற்பட்டது போதும்.. கதைக்கு வருவோம். ராக்கி கிடைக்காததால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “கிடைக்காதது வருத்தத்தை
அளிப்பதாக இருக்கிறது அக்கா” என்றேன். வருத்தம் என்பது எப்படி உணரப்படுகிறது? வெறும் வார்த்தைகள் அழுவதாலா? தெரியவில்லை.

”வேறு முகவரி இருந்தால் கொடுடா” என்றார் ஓவிக்கா

வேறு ஒரு முகவரி கொடுத்திருந்தேன். முகவரியற்றவனாக இருக்கிறாய் என்றார் ஓவிக்கா. இருக்கலாம். சிலர் முகமே இல்லாமல் இருக்கும்பொழுது நான் எவ்வளவோ
பரவாயில்லை என்றேன். உனக்கு மறுபடியும் போன் செய்கிறேன் என்றபடி அழைப்பை துண்டித்தார் ஓவிக்கா. நீங்கள் நினைக்கலாம் இப்பொழுது மனம் நிறைவாக
இருந்திருக்குமே என்று. இல்லை. மறுபடியும் எனக்கு தபால் கிடைக்காமல் போவது அபசகுனமாக எண்ணினேன். உண்மையில் சகுன நம்பிக்கை எனக்குக் கிடையாது.
ஓவிக்காவுக்கு இருக்கலாம். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இருவருக்குமான போக்குவரத்து யாரோ ஒருவரின் நப்பாசையாலோ, சலிப்பின் காரணமாகவோ
துண்டித்து விடக்கூடாது அல்லவா.

ரக்*ஷா பந்தனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சிவாண்ணா தமக்கு ராக்கி வந்ததைச் சொல்லியிருந்தார். அது எனக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அதை நிச்சயம்
ஓவிக்காவைத் தவிர வேறு யாரும் அனுப்பியிருக்க முடியாது. ஆனால் சிவாண்ணா செய்த தவறு, அவருக்குக் கிடைத்த ராக்கியை வேறு ஒருவர் அனுப்பியதாகக் கூறிவிட,
ஓவிக்காவுக்கு கோபம் வந்துவிட்டது. என்னைத் தவிர உங்களுக்கு வேறு தங்கைகளா என்று... இந்த தகவல் எனக்கு ஒருவர் மூலம் கூறப்பட்டது. ஓவிக்காவின் கோபம் என்று
அவர் சொன்னார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. உண்மையில் அது அதீத உரிமை. தன் நிலையினை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு சுய எச்சரிக்கை கூட
எழுந்திருக்கலாம். ஆனால் எனக்கு இந்த சம்பவம் பயத்தை உண்டாக்கிவிட்டது.

”இதுக்கெல்லாம் பயப்படாதே” என்று ஆறுதல் சொன்னார் சிவாண்ணா. ஆனால் உண்மை நிலைமை நீங்கள் புரிந்துகொள்ளும்படி நான் சொல்லவில்லை என்றேன். உண்மை
நிலைமை என்பதே நாம் உருவாக்கும் உருவம், அது பார்வைகளுக்கு ஏற்ப தோற்றமளிப்பது என்றார். எனக்கு அவர் சொன்னது புரியவில்லை. பிறகு, ஓவிக்காவின் ராக்கி
உண்மையில் யாரைச் சென்றடையும் என்றேன். உங்கள் இருவருக்குமிடையிலான சகோதரத்துவத்தை அடையும். அது வாழ்வின் தூயபிம்பம் என்றார். இது எனக்கு
சமாதானமளிக்கும் பதிலாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஓவிக்காவின் ராக்கி எனக்கு இனந்தெரியாத குழப்பத்தை அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது.

ஆமாம்... ஓவிக்கா அனுப்பிய ராக்கியை எனக்குக் கட்டி விடுவது இன்னொரு பெண். எனில் என் முழுமையான அதிகாரமும் பாசமும் உரிமையும் யாரைச் சென்றடையும் என்ற
குழப்பம். எனக்குத் தெரிந்து ஓவிக்காதான் எனக்கு ராக்கியை அறிமுகம் செய்தது என்றே சொல்லலாம். சின்ன வயதிலிருந்தே ஓவிக்கா என் கைகளில் இதுவரை ராக்கியைக்
கட்டியதேயில்லை. அதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் அமைத்துக் கொள்ளவில்லை. ராக்கி இன்னொரு பெண்ணின் மூலமாகத்தான் கட்டிக் கொள்ளப்பட்டது. இது ஒரு
முக்கோண சந்திப்பை எனக்குத் தருவதாக இருந்தது. ஒவ்வொரு மூலையிலும் நான், ஓவிக்கா, மற்றும் இன்னொரு பெண் அமர்ந்து அவரவருக்குண்டான உரிமை குறித்து
பேசவேண்டியதாக இருந்தது. ஆனால் இது குறித்து இருவரும் எந்த பேச்சும் எடுக்கவில்லை.. நான் மட்டுமே புலம்பிக் கொண்டிருந்தேன்.

ஒருவழியாக ராக்கி எனக்கு இன்னொரு முகவரிக்கு வந்து சேர்ந்தது. அதை தபால்காரனிடமிருந்து வாங்கியது ஒரு வங்காளிப் பெண். அவள் வங்காளியாக இருக்கும் என்பது
என் உத்தேசம் என்றாலும் ரக்*ஷாபந்தனைக் கொண்டாடும் வட இந்தியப் பெண். இப்பொழுது புரிந்திருக்குமே எனக்கு ஏற்பட்ட பிரச்சனை என்னவென்று? ராக்கியைப் பற்றி
அவளுக்கு விளக்கிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் யார் கட்டுவது என்பதை நான் எப்படி விளக்கமுடியும்? ஓவிக்கா அல்லாமல் இந்த பிரச்சனை தீராது என்பது
தெரிந்தது.

ஆனால் வேறு வழியுமில்லை. அந்த வங்காளிப் பெண்ணே எனக்கு ராக்கி கட்டிவிட்டது குறித்து முதல்முறையாக வருத்தம் ஏற்பட்டது. ராக்கி கொண்டாடப்படுவதற்கென்று
தினமொன்று வருமேயானால் ஏன், ஓவிக்கா வரும் வரை தினத்தை ஒத்திப் போடக்கூடாது? தினங்களின் வருகைக்கு நாம் எதிர்பார்ப்பது போல, நம் வருகைக்கு ஏன்
தினமொன்று எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கக் கூடாது?

ராக்கி அன்று காலையில் எனக்கு போன் வந்தது.

“ஆமாம் கா.. கட்டி கொண்டேன். இரண்டு ராக்கிகள் சிறியதும் பெரியதுமாய்” என்றேன்.

“அப்பாடா.. நிம்மதி. நான் கிடைக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன் ரைட். ஐ விஷ் யு மை பிரதர்” என்று சிரித்தபடி அழைப்பைத் துண்டித்தார் ஓவிக்கா.

இப்பொழுது எனக்குள்ளான குழப்பத்தை ஓவிக்காவிடம் சொல்லவில்லை. சொல்லாமல் விட்டது கூட ஒரு குற்றமாக இருக்கலாம். ஆனால் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதற்கு
எனக்கு ஒருவர் மட்டுமே உள்ளார்.

ஓவி உனக்கு அனுப்பியது என்ன என்றார் முதலில்.

அது ராக்கி என்றேன்.

நீ செய்த முதல் தவறு. அதை ராக்கியாக எண்ணியது. ஓவியின் துடுக்கு, அதற்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனம், மிகைந்த அறிவு, நீர்க்கோல அழகு ஆகிய அனைத்தும்
ஒருங்கிணைந்த ஒரு பாசத்தின் பிம்பம் ஒளிந்த கயிறு. அதை நீ கட்டும் பொழுது உனக்குள் அந்த கயிறின் வழியே ஓவி மட்டும்தானே தெரியக்கூடும் என்றார்.

அது எப்படி சாத்தியம்? எங்கோ இருக்கும் ஓவி, ஒரு சாதாரண கயிறில் அடங்குமா

அப்படியல்ல. அது சாதாரண கயிறு என்றால் உன் வீட்டருகே இருக்கும் மளிகைக் கடையில் வாங்கிக் கட்டிக் கொள்வதுதானே? நீ ஏன் ஓவியின் கயிறை எதிர்பார்க்கிறாய்?

என்னால் அந்த கயிறுக்குள் பாசம் பிணைந்திருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளமுடியவில்லை.

இது கடவுளைப் போன்ற இருக்கிறாரா இல்லையா எனும் சர்ச்சை. கடவுள் தூணிலும் இருப்பார், சிறு கல்லிலும் இருப்பார் என்பதற்காக தூணை நீ வணங்கினால் அது கடவுள்
ஆகிவிடாது. அல்லது உடைத்தால் கடவுள் உடைந்து போகாது. ஒரு சிறிய கல் கூட கடவுளின் உருவாக்கம். அதில் நிறைந்திருக்கிறார். ஒருவேளை அந்த கல் உனக்கு
எவ்வழியிலேனும் உதவக் கூடும். நமக்குத் தெரியாத அருவங்களால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ராக்கியில் எப்படி ஓவியைக் காணமுடியும் என்பது உன் அறிவுக்கு
எட்டாததாக இருக்கிறது. அறிவின் வளர்ச்சியில் மனிதனின் மனங்களின் கால்கள் பதிந்திருக்கவேண்டும் மேலும், அந்த வங்காளிப்பெண் ஒரு ப்ராக்ஸி. உனக்குக்
கட்டுவதன்மூலம் ஓவியின் சகோதரத்துவத்தை உனக்கு மாற்றிக் கொடுக்கிறாள். உனக்கு மாற்றிக் கொடுப்பதன் மூலம் அவளும் சகோதரத்துவத்தை வழங்குகிறாள். என்றார்.

அது ஓரளவு சமாதானம் அளிக்கக் கூடியதாக இருந்தது. சுயசமாதானங்கள் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டபடி இருக்கும் அதனால்தான் நான் என்னை நம்புவதாக
இல்லை. இந்த பெங்களூர்காரர் ஏதாவது ஒருவகையில் சமாதானத்தை வழங்கிவிடுவார். என்றாலும் முழுவதுமாக குழப்பம் நீங்கிவிட்டது என்று சொல்லிவிடமுடியாது.

இது குறித்து உனக்கு விளக்குவது சலிப்பைத் தரக்கூடியதாக இருக்கும் என்று நிறுத்திக் கொண்டார்.

உங்களுக்கு ராக்கி வந்துவிட்டதா என்று கேட்டேன்.

எப்போதோ..... .சரி சரி... இதை ஓவியிடம் சொல்லிக் கொண்டு இருக்காதே.. உன்னை தவறாக எண்ணக் கூடும் என்றார்.

எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஓவிக்கா எப்பொழுதும் பதுக்கி வைத்தலை விரும்பமாட்டார். நீங்கள் கூறியது எனக்கு உணரும்படி இருந்தது. என்றாலும்
மனம் தவிக்கிறதே.. ஏதாவது ஒன்றை நான் செய்தாகவேண்டும் என்றேன்.

பேசாமல் கதையாக எழுதிவிடு என்றார்.

இதோ எழுதிவிட்டேன் என்றேன்...:)

மதி
25-08-2010, 01:25 AM
ஹாஹா..
அழகான நடையில் சம்பவக்கோர்வை... நீர் சொல்வதும் சரி தான்... ஒவ்வொரு ரக்ஷாபந்தனுக்கும் முன் முகவரி கேட்டு மெயில் வருதலும்... பின் சரியான நேரத்தில் ராக்கி வருவதும்.. வாந்துவிட்டதா என்று உறுதிசெய்வதும்... இம்முறை என் தம்பிக்கும் சேர்த்து...

தாமரை
25-08-2010, 03:47 AM
ஆமாம் ஆதவா.. ராக்கி திருப்பூர்ல தானே இருந்தாற். திக் திக் பயணத்திற்கு கூட வந்தாரே..

அப்புறம் ஏன் இப்படி?

ஆதவா
25-08-2010, 05:16 AM
ஹாஹா..
அழகான நடையில் சம்பவக்கோர்வை... நீர் சொல்வதும் சரி தான்... ஒவ்வொரு ரக்ஷாபந்தனுக்கும் முன் முகவரி கேட்டு மெயில் வருதலும்... பின் சரியான நேரத்தில் ராக்கி வருவதும்.. வாந்துவிட்டதா என்று உறுதிசெய்வதும்... இம்முறை என் தம்பிக்கும் சேர்த்து...

ஹிஹி... நன்றி மதி!! எப்படியும் இந்த கதையை ஓவிக்கா (அதாவது கதாப்பாத்திரம்) படிக்கப் போவதில்லை. அந்த தைரியம்தான் எழுத வைத்தது!! இம்முறை எனக்கும் நண்பருக்கும் தம்பிக்கும் ராக்கிகள்!!

ஆமாம் ஆதவா.. ராக்கி திருப்பூர்ல தானே இருந்தாற். திக் திக் பயணத்திற்கு கூட வந்தாரே..

அப்புறம் ஏன் இப்படி?

ராக்கி தொண்ணூத்தஞ்சு கிலோ. பார்சல் பண்ணினா என்னவாகும் யோசிச்சுப் பாருங்க!!!

தாமரை
25-08-2010, 07:41 AM
பஞ்சு மிக மென்மையானது. இலேசானது. பிறந்த குழந்தையின் மேனிகூட பஞ்சு போல மென்மையானது என்றுதான் உவமானிக்கப் படுகிறது. அம்மா சுட்ட இட்லி கூட பஞ்சு போலத்தான். பஞ்சு மென்மையானது மட்டுமல்ல. கதகதப்பானது. தாய் வயிற்றில் இருக்கும் சுகம் போல பஞ்சு மெத்தைகளும் தலையணைகளும் பலருக்கு நிம்மதிகளை அளித்துக் கொண்டிருக்கிறது.

அந்தப் பஞ்சு முறுக்கிக் கொள்ளும் பொழுது நூலாகிறது.. கயிறாகிறது. கப்பல்களையும் யானைகளையுமே கட்டும் வல்லமை பெற்றதாகிவிடுகிறது.

அந்தக் கயிற்றின் உறுதி பஞ்சில் எங்கு ஒளிந்திருந்தது? யாருக்கும் தெரியாது.

பஞ்சின் மென்மை காணாமல் போயிருக்கும்.

இப்போது கயிற்றின் முறுக்கை குறைத்தாலும் சரி.. என்ன செய்தாலும்.. பஞ்சு இருந்தாலும் பஞ்சின் மென்மை வருவதில்லை.

காரணம் என்னவாக இருக்கும்?

ஆதவா
25-08-2010, 08:01 AM

பஞ்சு என்பதை “வளர்தல்”இன் குறியீடாகக் கொண்டால் எல்லா வளர்தலும் அப்படித்தான் இருக்கிறது.
நேற்று பிறந்த குழந்தைக்குள் நாளைய மனிதன் ஒளிந்திருக்கிறான்... எனில் அதை வெளிக் கொண்டுவருவது அவன் கையில் இல்லை. சுற்றியுள்ளவர்கள்தானே.. அதேமாதிரி.

பஞ்சாக இருந்த பஞ்சு, (என்னா பஞ்ச்!!) சிலபல(ர்) யுக்திகளால் கயிறாகத் திரிக்கப்படுகிறது....
பஞ்சாக இருந்த பொழுது அது என் கையில் மொசுமொசுவென்று மென்மையாக...... அந்த மென்மையை உணர்ந்தேன்!!
கயிறு இழுத்தபொழுது கை வலிக்கிறது!!!
கயிறுகள் உறுதியாக இருக்கிறது என்றாலும்!

சிவா.ஜி
25-08-2010, 08:54 AM
இதோ வருகிறது...வந்து கொண்டேயிருக்கிறது....எதிர்பார்ப்பு.....வரவில்லை என்றதும் பதட்டம்....முகவரியற்றவனா என்ற தத்துவ சிந்தனை....அனுப்பியவரிடம் வரவில்லையென தயக்க பதில்....வந்தேவிட்டது என்றதும்...நாமாக கட்டிக்கொள்வதா...மூன்றாவது ஆள் கட்டிவிட்டால்....அந்த சகோதரிப் பாசமும் சேருமா....அடடா....எல்லாக் குழப்பத்தையும்...தெளிவான கதையாக.....நல்லாருக்கு ஆதவா.

பரிச்சையமான பெயர்கள் இல்லாதிருந்தால்...அருமையான கதை. கதையா...உண்மை சம்பவமா...

எப்படியிருந்தாலும்....கயிறுடன் கலந்து வந்தது பாசம்...உண்மையான பாசம்....அதுதான் நாடி துடிக்கும் இடத்தில் கட்டிக்கொண்டு....ஒவ்வொரு துடிப்பிலும் அந்தப் பாசத்தை உணர்ந்துகொள்கிறோம்.

என் கையிலும் ஐந்து கயிறுகள்....ஆட்டோராணியின் பாசத்தை...உள்ளத்துக்குள் செலுத்திக்கொண்டேயிருக்கிறது.

வாழ்த்துக்கள் ஆதவா.

அமரன்
25-08-2010, 09:11 AM
பஞ்சு மிக மென்மையானது. இலேசானது. பிறந்த குழந்தையின் மேனிகூட பஞ்சு போல மென்மையானது என்றுதான் உவமானிக்கப் படுகிறது. அம்மா சுட்ட இட்லி கூட பஞ்சு போலத்தான். பஞ்சு மென்மையானது மட்டுமல்ல. கதகதப்பானது. தாய் வயிற்றில் இருக்கும் சுகம் போல பஞ்சு மெத்தைகளும் தலையணைகளும் பலருக்கு நிம்மதிகளை அளித்துக் கொண்டிருக்கிறது.

அந்தப் பஞ்சு முறுக்கிக் கொள்ளும் பொழுது நூலாகிறது.. கயிறாகிறது. கப்பல்களையும் யானைகளையுமே கட்டும் வல்லமை பெற்றதாகிவிடுகிறது.

அந்தக் கயிற்றின் உறுதி பஞ்சில் எங்கு ஒளிந்திருந்தது? யாருக்கும் தெரியாது.

பஞ்சின் மென்மை காணாமல் போயிருக்கும்.

இப்போது கயிற்றின் முறுக்கை குறைத்தாலும் சரி.. என்ன செய்தாலும்.. பஞ்சு இருந்தாலும் பஞ்சின் மென்மை வருவதில்லை.

காரணம் என்னவாக இருக்கும்?

தேவை.

ஆதவா
25-08-2010, 10:11 AM
இதோ வருகிறது...வந்து கொண்டேயிருக்கிறது....எதிர்பார்ப்பு.....வரவில்லை என்றதும் பதட்டம்....முகவரியற்றவனா என்ற தத்துவ சிந்தனை....அனுப்பியவரிடம் வரவில்லையென தயக்க பதில்....வந்தேவிட்டது என்றதும்...நாமாக கட்டிக்கொள்வதா...மூன்றாவது ஆள் கட்டிவிட்டால்....அந்த சகோதரிப் பாசமும் சேருமா....அடடா....எல்லாக் குழப்பத்தையும்...தெளிவான கதையாக.....நல்லாருக்கு ஆதவா.

பரிச்சையமான பெயர்கள் இல்லாதிருந்தால்...அருமையான கதை. கதையா...உண்மை சம்பவமா...

எப்படியிருந்தாலும்....கயிறுடன் கலந்து வந்தது பாசம்...உண்மையான பாசம்....அதுதான் நாடி துடிக்கும் இடத்தில் கட்டிக்கொண்டு....ஒவ்வொரு துடிப்பிலும் அந்தப் பாசத்தை உணர்ந்துகொள்கிறோம்.

என் கையிலும் ஐந்து கயிறுகள்....ஆட்டோராணியின் பாசத்தை...உள்ளத்துக்குள் செலுத்திக்கொண்டேயிருக்கிறது.

வாழ்த்துக்கள் ஆதவா.

இதில் பிரச்சனை என்னவென்றால்.... இந்த கதைக்கு வேறு பாத்திரங்கள் வைத்திருந்தாலும் நிச்சயம் சம்பந்தப்பட்ட பாத்திரங்களே நினைவுக்கு வருவார்கள்!!! ஆக, மன்றத்துக்கு வெளியேதான் இக்கதை செல்லுபடியாகும்!!! ம்ம்ம்ம்ம்ம்

நன்றி அண்ணா!!

-------------------------------
ஓவிக்கா.... படிச்சாச்சா!!! :sprachlos020:

அமரன்... வாழ்வு vs தேவை.... இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது இல்லையா!!?? இரண்டுமே கயிறு பிணைந்தது போல,,,,,, ம்ம்ம் சரி!!

Narathar
25-08-2010, 10:36 AM
நாராயணா!!!!

அப்போ "பாசக்கயிறு" பலருக்கு சென்றிருக்கின்றது.... என்னையும் சேர்த்து!

க.கமலக்கண்ணன்
25-08-2010, 12:46 PM
என்னையும் சேர்த்து....

அதை கைகளில் வாங்கியதும் கண்கள் கலங்கியது என்னவோ உண்மையே

அன்பு எழுகடல் தாண்டியும் நம்மை கலங்கடிக்கும் என்பதை உணர வைத்தது

அது ஓவியாவின் பாசக்கயிறு...

அந்த அன்பு தாமரையை பெற எத்தனை தவம் செய்திருக்கிறேன் என்று தெரியவில்லை

அன்பு மலருக்கு கிடைத்துவிட்டது என்ற பதில் கூட

அனுப்ப முடியாத அளவில் உடல் நலகுறைவு ம்ம்ம்ம்ம்ம்

அதை கையில் கிடைத்த உடன் நலகுறைவு

அனைத்து காற்றாய் மறைந்து விட்டது...

அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அந்த பாசமலரின்

அன்னைக்கு மகனாய் பிறந்து ஓவியா என்ற அன்பு தாரகையின் முழு

அன்பையும் நான் முழு நேரத்திலும் பெற வேண்டும் என்ற சின்ன

அபலாசையுடன்

ஆதவா
27-08-2010, 04:46 PM
நாரதரே!!! நலமா?? நன்றி.

கமலக்கண்ணன் அவர்களே... இந்த கவிதை ஓவியா அக்காவுக்கு சமர்ப்பணம்!!!:)

ஷீ-நிசி
27-08-2010, 06:36 PM
புரிஞ்சிடுச்சி! அன்னைக்கு நீ வீட்டுக்கு போகும்போது ஃபுல் மப்புல ஒருத்தன் உன்னை க்ராஸ் செஞ்சி போயிருக்கான்... அப்ப வீட்டுக்கு போய் போட்ட பதிவுதான இது!! :lachen001: :lachen001:

ஆதவா
28-08-2010, 01:41 AM
புரிஞ்சிடுச்சி! அன்னைக்கு நீ வீட்டுக்கு போகும்போது ஃபுல் மப்புல ஒருத்தன் உன்னை க்ராஸ் செஞ்சி போயிருக்கான்... அப்ப வீட்டுக்கு போய் போட்ட பதிவுதான இது!! :lachen001: :lachen001:

அது நீங்கதான்னு சொல்லமாட்டேன்!!! :aetsch013:

நன்றிங்க ஷீ-நிசி

Ravee
28-08-2010, 08:36 PM
ஆதவா எனக்கு மூன்று விசயங்களில் உன் மீது பொறாமை

உன் எழுத்து - உள்ளத்தை உறிஞ்சி உணர்ச்சிகளை கொட்டும் எழுத்து ... எங்குமே மைகறை இல்லையே...:)

உன் ஓவி அக்கா ( என்னை மறந்துட்டியே அக்கா) ....:frown:

கடைசியாக அந்த பெங்களூர்காரர் - இப்படி ஒரு மனிதர் நான் கூப்பிடும் தூரத்தில் இருந்து இருந்தால் கூட நான் என் வாழ்க்கையில் பதினைந்து வருடத்தை வீணடித்திருக்க மாட்டேன்....:frown:

கலையரசி
10-09-2010, 10:04 AM
ஓவியாக்காவின் பாசம் கலந்த அந்த ராக்கி கயிறை வைத்து அருமையான நடையில் ஒரு கதை...இல்லையில்லை ஓர் உண்மை சம்பவம்! நல்லாயிருக்கு ஆதவா!