PDA

View Full Version : சிரித்தால் நல்லதுgvchandran
23-08-2010, 11:44 PM
கோபு . நான் வீட்டுக்கு லேட்டா போனா என் மனைவி சள்ளுனு எரிஞ்சு விழுவாள்.
பாபு ; இது தேவலை. என் ஆளு கரண்டியை என் மேலே எறிஞ்சுடுவாளே!
-------------------------------------------------------------------------
கலா; கல்யாணத்துக்கு அப்புறம் உன் மகன் வேலையை விட்டுட்டானா? ஏன்?
மாலா: அவன் எழுதிய “ பேயுடன் வாழ்க்கை” நாவல் நல்லா வித்துடுச்சு/
அதான் முழு நேர எழுதாளனா ஆகிட்டான்.
--------------------------------------------------------------------------
மணி: நேத்து நீலப்படம் பார்த்தபோது அப்பா கிட்ட மாட்டிக்கிட்டேன்.
ரகு : அப்புறம் என்ன ஆச்சு?
மனி என்னை பச்சை பச்சையா திட்டிட்டு சிடியை பறிமுதல் பண்ணி வச்சுக்கிட்டார்,
--------------------------------------------------------------------------
ஷீலா” லண்டன் போனியே சுத்தி பார்த்தியா?
சுமதி: எங்க வீட்டிலேயே பிரிட்டிஷ் காலத்து சுத்தியல் இருக்கு. அதனாலே அங்கே பார்க்கலை.

சீனு : நேத்து என் மனைவி கன்னத்துலே ஒண்ணு கொடுத்தேன்.
குரு: அப்புறம் என்ன ஆச்சு?
சீனு: அவளும் பதிலுக்கு என் கன்னத்துலே பளார்னு அறை விட்டாள்.
---------------------------------------------------------------------------

"பொத்தனூர்"பிரபு
24-08-2010, 02:44 AM
ஷீலா” லண்டன் போனியே சுத்தி பார்த்தியா?
சுமதி: எங்க வீட்டிலேயே பிரிட்டிஷ் காலத்து சுத்தியல் இருக்கு. அதனாலே அங்கே பார்க்கலை.
/////
:lachen001:

Nivas.T
24-08-2010, 05:33 AM
சீனு : நேத்து என் மனைவி கன்னத்துலே ஒண்ணு கொடுத்தேன்.
குரு: அப்புறம் என்ன ஆச்சு?
சீனு: அவளும் பதிலுக்கு என் கன்னத்துலே பளார்னு அறை விட்டாள்.

:lachen001::lachen001::lachen001:

ஆதவா
24-08-2010, 05:42 AM
இதை படிக்கும் பொழுது ஒரு சம்பவம்.

தெலுகில் கெண்ட்ட என்றால் மணி (க்லாக்) என்றும், கரண்டி என்றும் அர்த்தமுண்டு.

நான் வந்திருந்த விருந்தினர்களுக்கு சாதம் பரிமாறிக் கொண்டிருந்தேன். என் அக்கா வந்து என்னிடம், கெண்ட்ட எந்த்த (மணி எவ்வளவு?) என்று கேட்க, நான் ஒகுட்டி (ஒன்று) என்றேன். அப்போது சாயங்காலம்.. திரும்பவும்,

லேதுரா, கெண்ட்ட எந்த ரா? என்று கேட்க,...

செப்பிதினே, கெண்ட்ட ஒகுட்டினி...

தேவுடா.... ஏமி கெண்ட்டரா

என்னிசாரி செப்பேனு.. கெண்ட ஒகுட்டி ஒகுட்டி ஒகுட்டி.....

இப்படியே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்க....... போடா என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். பாவம்.. கடைசிவரைக்கும் எத்தனை மணி என்ற கேள்விக்கு ஒரு கரண்டி என்ற பதிலைத் தவிர வேறேதும் கேட்கவேயில்லை அவள்!!!

இதுமாதிரி பல நடக்கும்!! (இட் ஹேப்பன்ஸ்/// எதைன்னாலும் தெளிவா சொல்லணும்ல..)

பா.ராஜேஷ்
29-08-2010, 01:56 PM
ஆதவா, வேணும்னே பண்ணுனீங்கதான!!! ;)

ஜிங்குசாங்கு
01-09-2010, 09:36 PM
பிரபு, நீங்க "பொத்தனூர்"ஆ இல்ல "போத்தனூர்"ஆ

"பொத்தனூர்"பிரபு
02-09-2010, 02:50 AM
பிரபு, நீங்க "பொத்தனூர்"ஆ இல்ல "போத்தனூர்"ஆ

"பொத்தனூர்"

ஜிங்குசாங்கு
02-09-2010, 07:24 PM
சரிங்க பிரபு, என் நண்பன் ஒருவன் போத்தனூரில் இருக்கிறான்... அந்த ஊராக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் தோன்றியது, அதான்!

"பொத்தனூர்"

விகடன்
07-10-2010, 09:43 AM
சந்திரனின் இரண்டாவது, நான்காவது ஜோக்குகள் நன்றாக இருக்கிறது.

ஆதவாக்கு தெழுங்கும் தெரியுமா? :sprachlos020:
சொல்லவே இல்லை

ஆன்டனி ஜானி
30-10-2010, 03:11 PM
வயறு குலுங்க சிரித்தால் நோயி நம்மை விட்டு போகும் இது இயற்கை ...............இருந்தாலும் இப்படி சிரிப்புகளை தந்த உங்களுக்கு ரெம்ப நன்றி

Ravee
30-10-2010, 03:25 PM
இதை படிக்கும் பொழுது ஒரு சம்பவம்.

தெலுகில் கெண்ட்ட என்றால் மணி (க்லாக்) என்றும், கரண்டி என்றும் அர்த்தமுண்டு.

நான் வந்திருந்த விருந்தினர்களுக்கு சாதம் பரிமாறிக் கொண்டிருந்தேன். என் அக்கா வந்து என்னிடம், கெண்ட்ட எந்த்த (மணி எவ்வளவு?) என்று கேட்க, நான் ஒகுட்டி (ஒன்று) என்றேன். அப்போது சாயங்காலம்.. திரும்பவும்,

லேதுரா, கெண்ட்ட எந்த ரா? என்று கேட்க,...

செப்பிதினே, கெண்ட்ட ஒகுட்டினி...

தேவுடா.... ஏமி கெண்ட்டரா

என்னிசாரி செப்பேனு.. கெண்ட ஒகுட்டி ஒகுட்டி ஒகுட்டி.....

இப்படியே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்க....... போடா என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். பாவம்.. கடைசிவரைக்கும் எத்தனை மணி என்ற கேள்விக்கு ஒரு கரண்டி என்ற பதிலைத் தவிர வேறேதும் கேட்கவேயில்லை அவள்!!!

இதுமாதிரி பல நடக்கும்!! (இட் ஹேப்பன்ஸ்/// எதைன்னாலும் தெளிவா சொல்லணும்ல..)

சூடையா , இ பாபு எமிஎல்லாம் செச்தாறுன்னி.... நீன்ன பெல்லி செச்த அம்மாயி பாவம் ரா பாபு ... :traurig001:

பூமகள்
30-10-2010, 04:55 PM
ஹா ஹா... பேயுடன் வாழ்க்கையும்.. அதைச் சொன்னதால் வந்த அறையும் அருமையோ அருமை.. வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் பாடு தான் திண்டாட்டம்.,.

ஆதவ - ரவி தெலுங்கு கூட்டணி நல்லாவே வேலை செய்கிறது.. திரும்ப திரும்ப படிச்சி ரசித்தேன்..

ஏமிரா பாபு... நசுவேசி நசுவேசி நா ஸ்டொமெக் பெய்ன் ஒச்சிந்த்தி ரா... ஸ்டாப் செய்ர பாபு... :cool:

வானவர்கோன்
30-10-2010, 10:14 PM
சிரிப்பு வந்தது :lachen001: :lachen001: :lachen001: