PDA

View Full Version : செய்திகள்....



kulirthazhal
23-08-2010, 10:42 AM
நிசப்தமாய்
பதறினேன்...

நிறைமாத கற்பத்தில்
கிளை தாவும் குரங்கு..,

கொலை செய்ய
கற்றுக்கொள்ளும்
புலிக்குழந்தை..,

சிங்கத்தை பார்த்துக்கொண்டு
புல் மேயும் மான்கள்..

உறவில் ஒன்றின்
இறப்பைக்கண்டு
வெறித்து நிற்கும் மந்தை..,

எதோ பயத்தில்
சகிக்க பொறுக்காமல்
தாவினேன்...

அங்கு
பணத்திற்கு வன்முறை..
பதவிக்கு வன்முறை..
அழகுக்கு வன்முறை..
அன்பிற்கு வன்முறை..
கொள்கைக்கு வன்முறை..
குடும்பமானம்
வன்முறை..
சிரித்த முகத்தோடு
செய்தி சொன்னாள்
பதற்றம் ஏதுமில்லை...

கடந்த தினங்களோடு
இணைத்துப்பார்த்துக்கொண்டு
எது பெரிதென்ற
கணக்கோடு
அடுத்த சேனல்...,

எனக்கேனோ தெரியும்
என் வீட்டு மதிற்சுவரும்,
மாதச்சம்பள காவலனும்,
வன்முறையை காட்டிலும்
எனை நெருங்கி நிற்பதால்
நாளையும் கிடைக்கும்
செய்திகள்....

-குளிர்தழல்.