PDA

View Full Version : என்னதான் செய்யும் மலர்ப்பஞ்சு!!!!!

Nivas.T
22-08-2010, 08:50 AM
அழகிய பாலகனவன்!
பால்முகம் மாறாதவன்!
கண்களில் ஏனோ கண்ணீர்த்துளி?
முகத்திலோ பயத்தின் வலி!
ஏனோ அவனுள் ஏக்கம்!
பயத்தினால் வந்த தாக்கம்!
பலவந்தம் படுத்தப்பட்டான்!
பலம்கொண்டு அழுத்தப்பட்டான்!
வலியவரால் ஒடுக்கப் பெற்றான்!
இருப்புக்கரங்களால் அடக்கப் பெற்றான்!
என்னதான் செய்யும் மலர்ப்பஞ்சு!
பலமில்லாக் கரமோ வெறும்பிஞ்சு!
சிறுகச் சிறுக அருக்கப்பட!
இழக்க இழக்க இறுக்கம் விட!
உதடுகள்தான் சுருங்கியது!
கண்களும்தான் அடங்கியது!
அழுகையும் மறையத் தொடங்கியது!
தேம்பலோ நிறையத் தொடங்கியது!
அந்த முடித்திருத்தகமே மூழ்கியது சோகத்தில்!

அமரன்
22-08-2010, 10:14 AM
ஹஹ்ஹ்ஹ்ஹா.

சலூன்களில் அடிக்கடி காணும் காட்சி.

அனைவரும் கடந்து வந்திருப்போ இதை.

முன்பெல்லாம் கரண்டில் வேலை செய்யும் கட்டர் இருந்ததில்லை. டிக்கு டிக்கு எனக் கையாள் அமுக்கும் இயந்திரம் இருந்த காலத்தில், தலை மயிரைக் கெட்டியாகப் பற்றி இழுத்து நோகடிக்கும். அழுகை தானாக ஓடிவரும்.

Nivas.T
22-08-2010, 12:03 PM

உண்மை

நான் கதறி அழுத:traurig001: காலங்களும் உண்டு

nambi
22-08-2010, 03:16 PM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

Nivas.T
22-08-2010, 03:55 PM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

மிக்க நன்றி நம்பி

கீதம்
23-08-2010, 03:58 AM
என் மகனின் அழுகை தோய்ந்த முகம் ஒருகணம் நினைவில் வந்து வாட்டியது.

பாராட்டுகள், நிவாஸ். கவிதை வெகு அழகு.

Nivas.T
23-08-2010, 06:17 AM
என் மகனின் அழுகை தோய்ந்த முகம் ஒருகணம் நினைவில் வந்து வாட்டியது.

பாராட்டுகள், நிவாஸ். கவிதை வெகு அழகு.

நானும் நிறைய பசங்கள பாத்திருக்கேன்
ரொம்ப பாவமா இருக்கும்

மிக்க நன்றி கீதம் அவர்களே

ஆதவா
23-08-2010, 06:58 AM
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா..

நான் சின்னப் பிள்ளையா இருக்கப்போ, அழுது அடம்பிடிக்காமத்தான் முடித்திருத்தகம் போனேன்.

பாரதி
23-08-2010, 07:00 AM
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.:icon_b:
கவிதையின் வரிகளில் இருக்கும் ஆச்சரியக்குறிகளை எண்ணி எனக்கும் வியப்பு!:)

Nivas.T
23-08-2010, 07:08 AM
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.:icon_b:
கவிதையின் வரிகளில் இருக்கும் ஆச்சரியக்குறிகளை எண்ணி எனக்கும் வியப்பு!:)

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பாரதி

கலைரசிகை
26-08-2010, 07:16 PM
என் மகனின் தேம்பல் தான் கண் முன் வந்து சென்றது. நன்றாக இருக்கிறது !!

Nivas.T
28-08-2010, 12:45 PM
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா..

நான் சின்னப் பிள்ளையா இருக்கப்போ, அழுது அடம்பிடிக்காமத்தான் முடித்திருத்தகம் போனேன்.

அப்டியா சொல்லவே இல்ல ஆதவன்
உங்க படத்த பாத்தா பிறந்தது முதல் நீங்க அந்த பக்கம் போனமாதிரி தெரியல

நன்றி ஆதவா

Nivas.T
28-08-2010, 12:48 PM
என் மகனின் தேம்பல் தான் கண் முன் வந்து சென்றது. நன்றாக இருக்கிறது !!
மிக்க நன்றி கலைரசிகை அவர்களே

சிவா.ஜி
28-08-2010, 02:27 PM
”எனக்கும் பொன்னாடை போர்த்தினார்கள்
முடிதிருத்த நிலையத்தில்”

எப்போதோ படித்த கவிதை நினைவுக்கு வருகிறது. என் நண்பனின் முடிதிருத்தகத்தில் அமர்ந்திருக்கும்போது இப்படி நிறைய காட்சிகளைக் கண்டிருக்கிறேன். உள்ளே வரும்போதே, பலிக்கு வரும் ஆட்டைப் போன்ற மருண்ட பார்வையுடன் தான் வருவார்கள், பிறகு அந்தக் குட்டிப் பையனுக்கான ஒரு பலகையை எடுத்து நாற்காலியின் கரங்களின் குறுக்கே போடுவதைப் பார்த்ததுமே..பையனின் முகம் அழுகைக்குத் தயாராகிவிடும். கத்திரி பட்டதும்...கதறலாய் வெடித்துவிடும்....

நல்லாருக்கு நிவாஸ். வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்க.

(உதடுகளும்தான், கண்களும்தான்...என ’தான்’ சேர்ப்பது ராஜேந்தர் காலத்து ஸ்டைல்....புதுசுக்கு மாறுங்க நிவாஸ்.....)

Ravee
28-08-2010, 07:47 PM
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா..

நான் சின்னப் பிள்ளையா இருக்கப்போ, அழுது அடம்பிடிக்காமத்தான் முடித்திருத்தகம் போனேன்.

ஓஹோ முடி வெட்டிக்க வேண்டியவர் கூட போனீங்களா... சரி சரி :lachen001:

Ravee
28-08-2010, 08:09 PM
”எனக்கும் பொன்னாடை போர்த்தினார்கள்
முடிதிருத்த நிலையத்தில்”

எப்போதோ படித்த கவிதை நினைவுக்கு வருகிறது. என் நண்பனின் முடிதிருத்தகத்தில் அமர்ந்திருக்கும்போது இப்படி நிறைய காட்சிகளைக் கண்டிருக்கிறேன். உள்ளே வரும்போதே, பலிக்கு வரும் ஆட்டைப் போன்ற மருண்ட பார்வையுடன் தான் வருவார்கள், பிறகு அந்தக் குட்டிப் பையனுக்கான ஒரு பலகையை எடுத்து நாற்காலியின் கரங்களின் குறுக்கே போடுவதைப் பார்த்ததுமே..பையனின் முகம் அழுகைக்குத் தயாராகிவிடும். கத்திரி பட்டதும்...கதறலாய் வெடித்துவிடும்....

எனக்கு அந்த சோக சம்பவம் எல்லாம் நல்ல நினைவில் இருக்கு சிவா அண்ணா ...
என் அப்பாவுடன் தான் நானும் அண்ணனும் முடி வெட்டிக்க போவோம். போனவுடன் அங்கே இருக்கும் சுழல் நாற்காலியில் இரண்டு கைபிடிக்கும் இடையில் பாலம் போடுவார் கடைக்காரர். அது சரியா இருக்கா என்று அழுத்தி பார்த்து மேலே தூக்கி உக்கார வைப்பார்கள். அடுத்து இரண்டு நாற்காலி தள்ளி அப்பா உக்கார திருவிழா ஆரம்பிக்கும். தலையில் முதலில் தண்ணி அடிப்பார்கள். பலி ஆடு போல மண்டையை சிலுப்புவேன். கத்திரியை கையில் வைத்து கடைக்காரர் மிரட்டுவார் ... டாய் தம்பி ஆட்டம் காட்டினா காது ரெண்டையும் கட் பண்ணிடுவேன் என்று.. ஒரு ரவுண்டு முடியும் .. அண்ணாச்சி என்பார் கடைக்காரர் , புத்தகத்தில் இருந்து தலையை வெளியே எடுத்து என் அப்பா சொல்வார் இன்னும்ம்ம்ம் ... அடுத்த ஆயுதம் கத்திரி போய் மெசின் , திப்புசுல்தானிடம் இருந்து வாங்கி இருப்பார் போலும் ஒவ்வொரு முடியாக சொல்லி சொல்லி பிடுங்கும் . ஐந்து நிமிடம் கழித்து அண்ணாச்சி ... அப்பா மெதுவாக இன்னும்ம் .....அடுத்து கத்தி இரண்டு காதுக்கும் நூல் போட்டது போல கன கச்சிதாமா வழித்து விடுவார். இப்போதுதான் அப்பாவுக்கு திருப்தி ... ம்ம்ம் மூன்று ரூபாய் கை மாறும்.பலி ஆடுகள் திரும்பும் பட்டியை நோக்கி . முதுகுக்குப் பின் இருந்து சூரியன் கிரகணம் பாய்ச்ச இரும்பு சட்டிக்கு இரண்டு காது வைத்தார் போல நானும் என் அண்ணனும் போவோம்.

பள்ளிக்கு போன பின்னே பையன்களின் கோவிந்து கொஸ்டின் : ஏண்டா சட்டியை கவுத்தி முடி வெட்டுனாங்கள... இல்லை நூல்ல கோடு போட்டு வெட்டுனாங்கள ??? :traurig001: :traurig001:

அமரன்
28-08-2010, 09:45 PM
ஹி...ஹி... ரவீ.

மழை, பனிக் காலத்திலும் சம்மர் கட் செய்தவங்க பட்டியலில் என்னையும் சேர்த்திடுங்க. உங்களுக்கு அப்பா, எனக்குத் தாத்தா என்பது தவிர வேறு வேறுபாடு இல்லை.

Ravee
28-08-2010, 09:51 PM
ஹி...ஹி... ரவீ.

மழை, பனிக் காலத்திலும் சம்மர் கட் செய்தவங்க பட்டியலில் என்னையும் சேர்த்திடுங்க. உங்களுக்கு அப்பா, எனக்குத் தாத்தா என்பது தவிர வேறு வேறுபாடு இல்லை.

அமரன் பிடரியில் கத்தியை போட்டு காயம் ஆகிவிட அந்த படிக்கார கல்லை எடுத்து என் காயத்தில் வைப்பார் பாருங்கள் ... அந்த வயதில் எனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்லி அந்த கடைக்காரை வாழ்த்துவோம் பாருங்கள் ,

சுடர்விழி
30-08-2010, 01:13 AM
கவிதை ரொம்ப நல்லா இருக்கு.பாராட்டுக்கள் !!

Nivas.T
30-08-2010, 07:49 AM
எனக்கு அந்த சோக சம்பவம் எல்லாம் நல்ல நினைவில் இருக்கு சிவா அண்ணா ...
என் அப்பாவுடன் தான் நானும் அண்ணனும் முடி வெட்டிக்க போவோம். போனவுடன் அங்கே இருக்கும் சுழல் நாற்காலியில் இரண்டு கைபிடிக்கும் இடையில் பாலம் போடுவார் கடைக்காரர். அது சரியா இருக்கா என்று அழுத்தி பார்த்து மேலே தூக்கி உக்கார வைப்பார்கள். அடுத்து இரண்டு நாற்காலி தள்ளி அப்பா உக்கார திருவிழா ஆரம்பிக்கும். தலையில் முதலில் தண்ணி அடிப்பார்கள். பலி ஆடு போல மண்டையை சிலுப்புவேன். கத்திரியை கையில் வைத்து கடைக்காரர் மிரட்டுவார் ... டாய் தம்பி ஆட்டம் காட்டினா காது ரெண்டையும் கட் பண்ணிடுவேன் என்று.. ஒரு ரவுண்டு முடியும் .. அண்ணாச்சி என்பார் கடைக்காரர் , புத்தகத்தில் இருந்து தலையை வெளியே எடுத்து என் அப்பா சொல்வார் இன்னும்ம்ம்ம் ... அடுத்த ஆயுதம் கத்திரி போய் மெசின் , திப்புசுல்தானிடம் இருந்து வாங்கி இருப்பார் போலும் ஒவ்வொரு முடியாக சொல்லி சொல்லி பிடுங்கும் . ஐந்து நிமிடம் கழித்து அண்ணாச்சி ... அப்பா மெதுவாக இன்னும்ம் .....அடுத்து கத்தி இரண்டு காதுக்கும் நூல் போட்டது போல கன கச்சிதாமா வழித்து விடுவார். இப்போதுதான் அப்பாவுக்கு திருப்தி ... ம்ம்ம் மூன்று ரூபாய் கை மாறும்.பலி ஆடுகள் திரும்பும் பட்டியை நோக்கி . முதுகுக்குப் பின் இருந்து சூரியன் கிரகணம் பாய்ச்ச இரும்பு சட்டிக்கு இரண்டு காது வைத்தார் போல நானும் என் அண்ணனும் போவோம்.

பள்ளிக்கு போன பின்னே பையன்களின் கோவிந்து கொஸ்டின் : ஏண்டா சட்டியை கவுத்தி முடி வெட்டுனாங்கள... இல்லை நூல்ல கோடு போட்டு வெட்டுனாங்கள ??? :traurig001: :traurig001:

அதான் அதேதான்
எங்க அப்பாவும் அப்டிதான்
ஒவ்வொரு தடவையும் சட்டி கவுத்தா தான்
முழு திருப்தியோட வீட்டுக்கு கூட்டிகிட்டு போவாங்க
அதுல கடைசியா ஒரு டயலாக் சொல்லுவாங்க
" இப்பதான் அழகா இருக்க புள்ளையாட்டம்"
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா............. :sauer028::sauer028::sauer028:

:lachen001:

Nivas.T
30-08-2010, 07:51 AM
கவிதை ரொம்ப நல்லா இருக்கு.பாராட்டுக்கள் !!

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சுடர்விழி

உமாமீனா
15-02-2011, 05:30 AM
இதையும் கவியாக்கிய நிவாசுக்கு வாழ்த்துக்கள்

Nivas.T
15-02-2011, 11:22 AM
இதையும் கவியாக்கிய நிவாசுக்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு மிக்க நன்றி உமாமீனா

எல்லா இடத்திலையும் புகுந்து வரீங்க போல

உங்க இமேஜ் உங்களுக்கு சரியாத்தான் இருக்கு (டாம் & ஜெர்ரி) :D

உமாமீனா
15-02-2011, 11:46 AM
வாழ்த்துக்கு மிக்க நன்றி உமாமீனா

எல்லா இடத்திலையும் புகுந்து வரீங்க போல

உங்க இமேஜ் உங்களுக்கு சரியாத்தான் இருக்கு (டாம் & ஜெர்ரி) :D

நன்றி உங்களின் பாராட்டுக்கு

சும்மா போர் அடிச்சது அதை திருப்பி அடிக்கலேன்னா நம்ம குலத்துக்கு அவலமல்லவோ