PDA

View Full Version : விசாரிப்பு-ஒரு நிமிடக்கதை

சொ.ஞானசம்பந்தன்
22-08-2010, 06:05 AM
பத்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக ஊழியர் கோபாலனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு வருவதற்காக மாணிக்கம் தம் மனைவியுடன் சென்றிருந்தார். அலுவலகச் செய்திகள், ஊர் வம்பு, சினிமா, அரசியல் என உற்சாகமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பி வருகையில் மனைவி கேட்டாள்:

“ஏங்க, கல்யாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்து போன கதையா, என்னென்னமோ அரட்டை அடிச்சுட்டுக் கடைசியில அவரோட உடம்பைப் பத்தி விசாரிக்கவும், ஆறுதல் சொல்லவும் மறந்துட்டீங்களே, அவர் என்ன நினைச்சுக்குவார்?”

மாணிக்கம் சிரித்தவாறே சொன்னார்:

“ஒண்ணும் நினைக்க மாட்டான்! சந்தோஷந்தான் படுவான். நான் வேணும்னு தான் அவன் நோயைப் பத்திப் பேசலை. இந்தப் பத்து நாளில் எத்தனை பேரின் கேள்விகளுக்கு உடம்பைப் பத்தி, சிகிச்சை பத்தி சொல்லி சொல்லி அலுத்துப் போயிருப்பான்? அந்த நிலையில் என் பேச்சு, அவனுக்கு நிச்சயம் புத்துணர்வும் தெம்பும் கொடுத்திருக்கும்.”

(01/08/2007 ஆனந்த விகடனில் ஒரு நிமிடக்கதை பகுதியில் எழுதியது)

கீதம்
22-08-2010, 09:08 AM
உளப்பூர்வ நட்பு என்பது இப்படிதான் சிந்திக்குமோ? நல்லதொரு கருத்து சொல்லும் கதைக்கும் ஆனந்தவிகடனில் பிரசுரமானதற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

அமரன்
22-08-2010, 10:19 AM
இந்தக் குணம் இருப்பதால் நான் வாங்கிக் கட்டுறேன், அடிக்கடி.

நல்ல கதை.

பாராட்டுகிறேன் அய்யா.

தாமரை
22-08-2010, 10:22 AM
இந்தக் கதையை ஆனந்த விகடனில் முன்பே படித்து விட்டேன். எழுதியது நம்ம அய்யாதானேன்னு கூட யோசிச்சேன். என் ஊகம் சரியாய் இருந்ததில் ஆனந்தம்.

நோயாளிக்கு இதுதான் தெம்புதரும். ஆனால் அவர்கள் கூட இருக்கிற ஜால்ராக்களாலோ...

வம்பு வருதே அய்யா!!:lachen001::lachen001::lachen001:

அமரன்
22-08-2010, 10:24 AM
அண்ணோய் ஜால்ரான்னாக் கூடப் பரவாயில்ல.

வீட்டுக்காரங்களே......

வீக்கங்களுடன்
அமரன்

தாமரை
22-08-2010, 10:31 AM
அண்ணோய் ஜால்ரான்னாக் கூடப் பரவாயில்ல.

வீட்டுக்காரங்களே......

வீக்கங்களுடன்
அமரன்

இதுக்குத்தான் சொல்றது ஒரு வீட்டோடு வச்சுக்கணும்னு.. வீக்கத்தோட போயிருக்கும். இப்பக் கள் சேர்ந்திருச்சா? முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். கள்ளை கள்ளாலதான்... :icon_b::icon_b::icon_b:

சூரியன்
22-08-2010, 10:37 AM
இதுக்குத்தான் சொல்றது ஒரு வீட்டோடு வச்சுக்கணும்னு.. வீக்கத்தோட போயிருக்கும். இப்பக் கள் சேர்ந்திருச்சா? முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். கள்ளை கள்ளாலதான்... :icon_b::icon_b::icon_b:

கள் அங்க கிடைக்குமா இல்ல அனுப்பி வைக்கனுமா?:rolleyes:

மதி
22-08-2010, 01:48 PM
நல்ல அர்த்தத்துடன் ரத்தினசுருக்கமான கதை.. விகடனில் வெளிவந்ததா..? மிக்க சந்தோஷம்..

nambi
22-08-2010, 03:23 PM
சமயத்தில் அதிகமான நலம் விசாரிப்புகள் நோயுற்றவரின் பயத்தை அதிகரிக்கும்...அதற்கு மாற்றாக...உருவாக்கப்பட்ட கதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

அன்புரசிகன்
23-08-2010, 02:57 AM
ஊர் வம்புகள் பேசும் போது பலரும் இளமையாகிவிடுகிறார்கள். அது தான் சிறந்த மருந்து என்று இரத்தினச்சுருக்கமாக தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஐயா..

பாரதி
23-08-2010, 07:14 AM
"எதைத்தின்றால் பித்தம் தெளியும்" என்ற வித்தையைக் கற்ற மனித(ர்) மாணிக்கத்தைக் காட்டிய ஐயாவிற்கு நன்றி.

ஆதவா
23-08-2010, 07:30 AM
கதை நன்றாக இருக்கிறதுங்க. ஒருநிமிடக் கதை எழுதுவது சற்று சிரமம்தான். அழகாக எழுதியிருக்கிறீர்கள்!!!

நேற்று கூட உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்று (அவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை நடந்தது) ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரைப் பார்த்தவுடன் உடம்பு பரவாயில்லையா என்ற கேள்வியோடு நின்றுகொண்டேன். பிறகு செல்போன்கள், 3G, இணையம், தொழில், திருமணம் என்றுதான் பேசினோம்!!

சிலசமயம் நானும் இப்படி கேட்கவே மாட்டேன்.. அதற்குக் காரணம், கேட்கத் தெரியாது!!! :)

சிவா.ஜி
23-08-2010, 08:06 AM
எதார்த்தமான கதை. என் குணத்தை பிரதிபலிக்கிறது. அநாவசியமாய்...நோயைப் பற்றிப் பேசி அச்சமூட்டுவதைவிட...இப்படி உற்சாகமூட்டுவது மிகவும் நல்லது.

சொ.ஞா ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
23-08-2010, 04:21 PM
இதைத்தான நம்ப வசூல்ராஜாக்கூட சொன்னாரு...:D

ஒரு நிமிடத்தில் பாடம் புகட்டிய ஞானசம்பந்தம் ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள்..!!:)

பா.ராஜேஷ்
29-08-2010, 03:19 PM
அருமையான நிமிட கதை.. படிப்பினை.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் அய்யா..

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 05:53 AM
உளப்பூர்வ நட்பு என்பது இப்படிதான் சிந்திக்குமோ? நல்லதொரு கருத்து சொல்லும் கதைக்கும் ஆனந்தவிகடனில் பிரசுரமானதற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 05:56 AM
அருமையான நிமிட கதை.. படிப்பினை.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் அய்யா..

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 05:59 AM
இந்தக் குணம் இருப்பதால் நான் வாங்கிக் கட்டுறேன், அடிக்கடி.

நல்ல கதை.

பாராட்டுகிறேன் அய்யா.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 06:02 AM
இந்தக் கதையை ஆனந்த விகடனில் முன்பே படித்து விட்டேன். எழுதியது நம்ம அய்யாதானேன்னு கூட யோசிச்சேன். என் ஊகம் சரியாய் இருந்ததில் ஆனந்தம்.

நோயாளிக்கு இதுதான் தெம்புதரும். ஆனால் அவர்கள் கூட இருக்கிற ஜால்ராக்களாலோ...

வம்பு வருதே அய்யா!!:lachen001::lachen001::lachen001:

வம்பை சமாளிக்க வேண்டியதுதான். பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 06:05 AM
நல்ல அர்த்தத்துடன் ரத்தினசுருக்கமான கதை.. விகடனில் வெளிவந்ததா..? மிக்க சந்தோஷம்..

ஆம்.விகடனில் வந்து 250 ரூ. பரிசும் தந்தது. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 06:07 AM
சமயத்தில் அதிகமான நலம் விசாரிப்புகள் நோயுற்றவரின் பயத்தை அதிகரிக்கும்...அதற்கு மாற்றாக...உருவாக்கப்பட்ட கதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 06:09 AM
ஊர் வம்புகள் பேசும் போது பலரும் இளமையாகிவிடுகிறார்கள். அது தான் சிறந்த மருந்து என்று இரத்தினச்சுருக்கமாக தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஐயா..

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 06:11 AM
"எதைத்தின்றால் பித்தம் தெளியும்" என்ற வித்தையைக் கற்ற மனித(ர்) மாணிக்கத்தைக் காட்டிய ஐயாவிற்கு நன்றி.

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 06:13 AM
கதை நன்றாக இருக்கிறதுங்க. ஒருநிமிடக் கதை எழுதுவது சற்று சிரமம்தான். அழகாக எழுதியிருக்கிறீர்கள்!!!

நேற்று கூட உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்று (அவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை நடந்தது) ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரைப் பார்த்தவுடன் உடம்பு பரவாயில்லையா என்ற கேள்வியோடு நின்றுகொண்டேன். பிறகு செல்போன்கள், 3G, இணையம், தொழில், திருமணம் என்றுதான் பேசினோம்!!

சிலசமயம் நானும் இப்படி கேட்கவே மாட்டேன்.. அதற்குக் காரணம், கேட்கத் தெரியாது!!! :)

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 06:15 AM
எதார்த்தமான கதை. என் குணத்தை பிரதிபலிக்கிறது. அநாவசியமாய்...நோயைப் பற்றிப் பேசி அச்சமூட்டுவதைவிட...இப்படி உற்சாகமூட்டுவது மிகவும் நல்லது.

சொ.ஞா ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
03-09-2010, 06:17 AM
இதைத்தான நம்ப வசூல்ராஜாக்கூட சொன்னாரு...:D

ஒரு நிமிடத்தில் பாடம் புகட்டிய ஞானசம்பந்தம் ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள்..!!:)

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

பா.சங்கீதா
05-09-2010, 07:00 AM
நல்ல கதை.
வாழ்த்துக்கள். :)

சொ.ஞானசம்பந்தன்
19-09-2010, 05:44 AM
நல்ல கதை.
வாழ்த்துக்கள். :)

வாழ்த்துக்கு மிக்க நன்றி

விகடன்
06-10-2010, 12:49 PM
ஆமாம் ஐயா. நலம் விசாரிக்கும் பெயரில் சம்பந்தப்பட்டவரிற்கு மன உழைச்சலைத்தான் கொடுக்கிறோம். இனிமேலாவது நமது பழக்கத்தை ஓரளவேனும் மாற்றிக்கொள்ளுவோம். வழமைபோல கேட்டாலும் சாதாரணமான விடயங்கள் பலவற்றையும் கண்டிப்பாக கதைத்துவிட்டு வரவேண்டும்.

சொ.ஞானசம்பந்தன்
11-10-2010, 04:55 AM

பின்னூட்டத்துக்கு அகமார்ந்த நன்றி.

aren
06-12-2010, 09:29 AM
நானும் இதே மாதிரி பல சமயங்களில் செய்திருக்கிறேன், கேட்டால் மனதிற்கு கஷ்டமாக இருக்குமோ என்ற நினைப்பில்.

உங்கள் கதையின்மூலம் நான் செய்வதும் சரியே என்று தோன்றுகிறது.

இன்னும் நிறைய எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

ஆன்டனி ஜானி
06-12-2010, 01:58 PM
எவ்வளவு நோயில் இருந்தாலும் ஒருவனுக்கு
மற்றவரை கேலி பண்ணி சொல்லும் போது அதில் கிடைக்கும் சந்தோசத்தில் நோயும்,வலியும் போய் விடும் ........ இது இயற்கை தான்

அருமையான கதை நண்பரே ..........

வாழ்த்துக்கள் .....

சொ.ஞானசம்பந்தன்
08-12-2010, 04:30 AM