PDA

View Full Version : உயர் ஜாதி மலைகள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-08-2010, 05:18 AM
பின்னரும் அதி நவீனத்துவ பொருளொன்றை
இழந்த தொனியில் பிடித்தமர்ந்திருந்தன
சூழ் கிராமத்து மலைகள்
முதுகில் இடறும் காதல் வயப்பட்ட மரங்களை
உருகியோடித் திரியும் தன் தேச உயிர்களை
என்றென்றும் நேசம் பாராட்ட விளைவதில்லை
அக்கல் மலைகள்
நீண்டதோர் தொடு விசையிலிருந்து
தன் நிழல்களைத் தேடிய படியும்
அதனிடுக்குகளில் உறைந்திருக்கும்
காற்றை வெளித்துரத்திய படியும்
தன் அடியோரம் ததும்பிக் கிடக்கும்
பனித் துளிகளை உறிஞ்சிய படியும்
தம் ஆற்றாமைகளை வெளிக் கொணர
துடித்திருக்கின்றன அக் கல் மலைகள்
யுகங்கள் தாண்டிய மூப்புக் கர்வங்களும்
கடவுள் வாரியிறைத்த வனக் கனிமங்களின்
சேகரங்களைச் சுமந்த முடிவுறா சஞ்சாரங்களும்
அற்ப வஸ்த்துக்களில் நின்றும்
நிர்க்கதியடையச் சபித்து விடுகின்றன அவைகளை
இருள் கவ்விய நிலவொளிப் பொழுதுகளில்
தன் தலையுயர்த்தி நிலா நேசம் பூண விளைகையில்
தன் அருகதை இழக்கின்றன அம்மலைகள்.

Nivas.T
21-08-2010, 08:49 AM
அழகான கவிதை

வாழ்த்துக்கள் சுனைத் :)