PDA

View Full Version : உபுண்டு 10.04 வி.எல்.சி பிளேயர் குறித்து...



பாரதி
19-08-2010, 01:17 AM
அன்பு நண்பர்களே,

எனது கணினியில் உபுண்டு10.04 இற்றைப்படுத்திய பிறகு வி.எல்.சி பிளேயர் சரிவர இயங்கவில்லை. அதை நீக்கி விட்டு மறுபடியும் நிறுவ முயற்சித்த போது பிரச்சினை ஏற்பட்டது. இது ரெபோசிட்டரில் இருக்கும் பிரச்சினை என உபுண்டு குழுமத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான எளிதான தீர்வு எதுவும் காணப்படாததால் சில தினங்களாக இணையத்தில் தேடிக்கொண்டிருந்தேன். இன்று கீழ்க்கண்ட சுட்டியில் இருக்கும் வழிமுறைகளை கையாண்டு எளிதாக வி.எல்.சி பிளேயரை நிறுவ முடிந்தது. முன்னர் போன்று பிளேயர் நல்ல முறையில் இயங்குகிறது. இத்தளத்தில் இருப்பது அதிகாரப்பூர்வமற்றது என்றாலும் கூட தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமைந்திருக்கிறது.:icon_b:


https://launchpad.net/~n-muench/+archive/vlc?field.series_filter=lucid

பாரதி
23-08-2010, 10:23 AM
வி.எல்.சி பிளேயர் 1.1.3 வெளியாகி விட்டது. இது மேலே கூறப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் தீரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. நிறுவி விட்டேன். வழமை போல நன்று.

மேலும் தகவல்களுக்கு:

http://www.videolan.org/security/sa1004.html

ஆதி
23-08-2010, 10:32 AM
தகவலுக்கு நன்றிங்கண்ணா..

8.10-ல் இருந்து மாறவே இல்லை.. இற்றைப்படுத்தாமலேயே ஓட்டிக் கொண்டிருகிறேன்.. அதனால் எந்த புரச்சனையுமில்லை ;)