PDA

View Full Version : தியாக மலரே!



சொ.ஞானசம்பந்தன்
18-08-2010, 06:13 AM
+ தியாக மலரே!

திருமதி மகாதேவி வர்மா இந்தியில் இயற்றிய கவிதை ஒன்றின் தலைப்பு :சூக்கா சுமன் = உலர்ந்த மலர். அதை அம் மொழியிலிருந்து நேரடியாய்த் தமிழுக்குக் கொண்டுவந்தேன். அது இம் மாத (2010 ஆகச்ட் ) மஞ்சரியில் வெளிவந்துள்ளது.

அது இது:


மொட்டாய் இருந்தனை குழவிப் பருவத்தில்
ஏ உலர்ந்த பூவே!
முறுவலித்தாய் காற்று உன்னைத்
தன் மடியில் விளையாடச் செய்த போது
மென்மை மிகு எழில் மலராய் முழுவதும் நீ விரிந்தவுடன்
மது தன்னை அவாவி வட்டமிட வந்தது வண்டுக் கூட்டம்!
உறங்குவித்தது உன்னைத் தாலாட்டுப் பாடி.
தோட்டக்காரரின் கவனிப்பு மகிழ்வித்தது உன்னை.
பெருமிதமுடன் வீற்றிருந்தாய் கேளிக்கையில் ஈடுபட்டு.
கவனத்தில் இருந்ததா அப்போது இந்த இறுதிக் காட்சி?
காய்ந்துபோய்ச் சிதறிக் கிடக்கிறாய் மண்மீது தற்காலம்.
வாசனையும் மென்மையும் ஒருங்கே இழந்தாய்.
வாடிப் போயிற்று உன்றன் வனப்பு முகம்.
வருவதில்லை சந்திக்க வண்டாகிய காதலன்.
வைகறையில் வாய்த்த செந்நிறத்தைக் காணோம்.
எல்லாத் தேனும் மணமும்
தந்துவிட்டாய் ஒரே நாளில் தானமாய்.
வள்ளல் மலரே வருந்துவார் யார் உனக்காக?
கொள்ளாதே வேதனை.
இன்பத்தை நிரந்தரமாய்
யாருக்குத்தான் அளிக்கிறது உலகம்?
யாவருமே தன்னலமி.
படைக்கிறான் இறைவன் அப்படி.
உன் போன்ற தியாகிக்கே வருந்தவில்லை உலகம்
எம் போன்ற சாரமிலா மாந்தர்க்கு இரங்குமோ?
சொ.ஞானசம்பந்தன்

Nivas.T
18-08-2010, 08:42 AM
மனிதர்களை பற்றிக்கூட வருந்தாதவர்கள்
பூக்களைப்பற்றியா வருந்தப் போகிறார்கள்

அழகான கவிதை

மொழி பெயர்ப்புக்கு நன்றி ஐயா

கலையரசி
18-08-2010, 01:57 PM
இன்பத்தை நிரந்தரமாய்
யாருக்குத்தான் அளிக்கிறது உலகம்?

உண்மை தான். இன்பமும் துன்பமும் நிறைந்தது தானே வாழ்க்கை. நல்ல கவிதை.
இந்தியிலிருந்தும் மொழி பெயர்க்கத் துவங்கி விட்டமை மகிழ்ச்சி தருகிறது.

ஆகஸ்ட் மஞ்சரி இதழில் வெளி வந்துள்ளமைக்குப் பாராட்டு.

பாரதி
18-08-2010, 04:12 PM
மொழி பெயர்ப்பிற்கும் மஞ்சரி இதழில் கவிதை வெளியானமைக்கும் வாழ்த்தும் பாராட்டும் ஐயா.

meera
19-08-2010, 06:28 AM
மலருக்கே உள்ள குணம் தியாகம்.

மெலிதான சோகம் கவிதையில்.மனதை பாதித்தது அந்த கடைசி வரிகள்.

மொழிபெயர்ப்புக்கும் இதழில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள்.

சொ.ஞானசம்பந்தன்
21-08-2010, 06:58 AM
மனிதர்களை பற்றிக்கூட வருந்தாதவர்கள்
பூக்களைப்பற்றியா வருந்தப் போகிறார்கள்

அழகான கவிதை

மொழி பெயர்ப்புக்கு நன்றி ஐயா
பாராட்டுக்கு மனம் நிறை நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
22-08-2010, 05:46 AM
மொழி பெயர்ப்பிற்கும் மஞ்சரி இதழில் கவிதை வெளியானமைக்கும் வாழ்த்தும் பாராட்டும் ஐயா.

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
22-08-2010, 05:47 AM
இன்பத்தை நிரந்தரமாய்
யாருக்குத்தான் அளிக்கிறது உலகம்?

உண்மை தான். இன்பமும் துன்பமும் நிறைந்தது தானே வாழ்க்கை. நல்ல கவிதை.
இந்தியிலிருந்தும் மொழி பெயர்க்கத் துவங்கி விட்டமை மகிழ்ச்சி தருகிறது.

ஆகஸ்ட் மஞ்சரி இதழில் வெளி வந்துள்ளமைக்குப் பாராட்டு.

பாராட்டுக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
22-08-2010, 05:48 AM
மலருக்கே உள்ள குணம் தியாகம்.

மெலிதான சோகம் கவிதையில்.மனதை பாதித்தது அந்த கடைசி வரிகள்.

மொழிபெயர்ப்புக்கும் இதழில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள்.

வாழ்த்துக்கு நன்றி.