PDA

View Full Version : எந்திரன்- நகைசுவை தொடர்கதை -முடிவுற்றதுமதுரை மைந்தன்
17-08-2010, 12:02 PM
http://img295.imageshack.us/img295/8708/robots15.gif (http://img295.imageshack.us/i/robots15.gif/)

விஞ்ஞானி ராமன் பணியாற்றிய ஆய்வுக் கூடத்தின் தலைவர் அவரையும் சக விஞ்ஞானிகளையும் ஒரு ஆலோசனை கூட்டதிற்கு அழைத்திருந்தார்.

தலைவர்: அனைவருக்கும் எனது காலை வணக்கம். நாம் இங்கு குழுமியிருப்பது ஒரு முக்கியமான பணியைப் பற்றி ஆலோசிக்க. உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்தியா அணுசக்தி துறையில் மேம்பாடு அடைந்துள்ளதைப் பற்றி. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பிறகு நாம் பல அணு உலைகளை நிறுவி மின் சக்தி உற்பத்தியை பெருக்கி வளம் காணப் போகிறோம். ஆனால் இதில் ஒரு சின்ன ப்ரச்சினை இருக்கிறது. அணு உலைகளை பழுது பார்க்கவும் பராமரிக்கவும் பல தொழிலாலர்கள் பயன் படுத்தப் படுகிறார்கள். பிரச்சினை என்னவென்றால் அவர்களது பணியில் அணுக்கதிர் வீச்சுகளால் பாதிப்பு ஏற்படுகிறது. தற்சமயம் அவ்ர்களைப் பாதுகாக்க அவர்களிடம் கதிர்வீச்சு அளவு மானி ஒன்று கொடுக்கப்படுகிறது. இந்த மானியில் கதிர் வீச்சின் அளவு அபாயகர எல்லையை தொடும்போது ஒரு ஒலி எழுப்பபட்டு அந்த அபாயத்தை பணி புருயும் தொழிலாளருக்கு தெரிவிக்க படுகிறது. அவர் உடனே தன் வேலையைக் கைவிட்டு அணு உலையிலிருந்து வெளியே வந்துவிடுவார். அவர் கைவிட்ட வேலையை மற்றொரு தொழிலாளி தொடருவார். இப்படி பல தொழிலாலர்களை பயன் படுத்துவதில் பணி தாமதப் படுததப் படுவதோடு கதிர் வீச்சின் பாதிப்பும் இருக்கிறது. இதை மாற்ற நாம் என்ன செய்யலாம்?

ராமன்:இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு நாம் எந்திரன்காளை உருவாக்கி அவர்களிடம் இந்த பணியை ஒப்படைக்க வேண்டும். எந்திரர்களை கதிர் வீச்சு பாதிக்காத படி நாம் வடிவமைக்கலாம். அவர்கள் பழுதடைந்தாலும் நாம் அவர்களை சரி செய்ய முடியும்.

தலைவர்:நல்ல யோசனை டாகடர் ராமன். இதற்கான ஆராய்ச்சியை உடன் துவக்குங்கள்.

ராமன்:நான் ஏற்கனவே இதற்கான செய்முறைகளையும் வரை படங்களையும் தயாரித்து வைத்துள்ளேன். உங்கள் அனுமதியுடன் முதல் எந்திரனை உருவாக்கி அவனை பரிசோதித்தபின் நாம் தொடரலாம்.

தலைவர்:டாக்டர் ராமனுக்கு உதவியாக பொறியாளர்கள் கோவிந்தனையும் சங்கரனையும் நியமிக்கிறேன்.

கூட்டம் முடிந்து ராமன், கோவிந்தன், சங்கரன் ஆகியோர் ஆய்வு கூடத்தில் எந்திரனை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறர்கள். நாட்கள் பல கழிந்து நாளொரு நட்டும் பொழுதொரு போல்டுமாக எந்திரன் உருவாகிறான்.

எந்திரன் உருவானதைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடாகி இருந்தது. அதில் ராமன் எந்திரனைக் கொண்டு தலைவருக்கு மாலை அணிவிக்க செய்ததும் அனைவரும் கை தட்டுகிறார்கள்.

தலைவர்: எந்திரன் உருவானதில் மகிழ்ச்சி. நாம் இன்னும் பல எந்திரர்களை உருவாக்க வேண்டும். நமது நாட்டின் தேவை மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்யலாம். இந்த பெருமை அனைத்தும் டாகடர் ராமனையே சாரும். ராமன் தான் எந்திரனுக்கு தந்தையும் தாயும்.

அனைவரும் கைதட்டி ராமனை பாரட்டுகிறார்கள். ராமன், கோவிந்தன், சங்கரன் மூவரும் ஆய்வு கூடத்திற்கு திரும்பியதும், கோவிந்தன் சங்கரன் கன்னத்தில் ஒரு அறை விடுகிறான்.

ராமன்:என்ன கோவிந்தன் ஏன் சங்கரனை அடித்தீர்கள்?

கோவிந்தன்:எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டான் அதனால் அவனை அடித்தேன்.

சற்று மவுனத்திற்கு பிறகு,

கோவிந்தன்:அய்யோ, என்னைப் பாத்து ஏண்டா அந்த கேள்வி கேட்ட? என்று சொல்லி மறுபடியும் சங்கரனை அடிக்கிறான்.

ராமன்:எதுக்கு அவனை திரும்ப திரும்ப அடிக்கிறீங்க? அப்படி என்ன தான் அவன் கேட்டான்?

கோவிந்தன்:தலைவர் உங்களை எந்திரனுக்கு தாய்னு சொன்னாரா, அப்படினா தாய் பால் நீங்க எப்படி கொடுத்தீங்கனு கேக்கிறான்.

ராமன் (சிரித்துக் கொண்டே);சரி சரி அவனை அடிக்காதீங்க. போய் எந்திரனுக்கு தாய் பால் கொடுங்க. சாரி, எந்திரன்ல இருக்கிற பாட்டரியை சார்ஜ் பண்ணுங்க.

இரவானதும், கோவிந்தனும் சங்கரனும் வீட்டுக்கு கிளம்பி சென்ற பின் மீதி வேலைகளை முடித்து விட்டு ஆய்வு கூடத்தை மூடிக் கொண்டு ராமன் தனது காரில் வீட்டுக்கு கிளம்பினார். வழி நெடுக மழை பெய்ததால் சாலையிலேயே கவனமாக காரை செலுத்தி வீடு வந்து சேர்ந்தார். அவருடைய கார் சத்தம் கேட்டவுடன் பள்ளி செல்லும் சிறுவர்களான அவருடைய மகன் ரவி, மகள் கீதா துள்ளி குதித்துக் கொண்டு "ஹையா, டாடி வந்தாச்சு" என்று சொல்லிக் கொண்டு காரின் அருகே வந்தனர். காரின் உள்ளே அவர்கள் பார்வை விழுந்ததும் " நல்ல டாடி எங்களோல் விளையாட ஒரு பெரிய பொம்மையை கொண்டு வந்திருக்கீங்க" என்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்டு காரின் உள்ளே பார்த்தார் ராமன். பின் சீட்டில் அமர்ந்திருந்தான் எந்திரன்.

தொடரும்

ஆதவா
17-08-2010, 12:09 PM
அடடே... புதிய நகைச்சுவை கதையா.... இருங்கோ படிச்சுட்டு வாரென்!!

தமிழ் மைந்தன்
17-08-2010, 12:15 PM
சுவாரஸ்யமாக உள்ளது தொடருங்கள்.
பாராட்டுக்களுடன் ...

Nivas.T
17-08-2010, 12:22 PM
http://img295.imageshack.us/img295/8708/robots15.gif (http://img295.imageshack.us/i/robots15.gif/)
நாட்கள் பல கழிந்து நாளொரு நட்டும் பொழுதொரு போல்டுமாக

தலைவர் உங்களை எந்திரனுக்கு தாய்னு சொன்னாரா, அப்படினா தாய் பால் நீங்க எப்படி கொடுத்தீங்கனு கேக்கிறான்.

:lachen001: :lachen001: :lachen001: :lachen001:

:icon_b:

அமரன்
17-08-2010, 02:27 PM
ரசிக்க முடியுது.

நட்டும் போல்டும் என இயந்திர வார்த்தைகளை உபயோகித்திருப்பது சிறப்பு.

தொடருங்கள்.

மதி
17-08-2010, 02:56 PM
நல்ல ஆரம்பம்.. இந்த எந்திரன் என்னவெல்லாம் செய்யப்போகிறானோ?

காத்திருக்கிறோம்..

சுகந்தப்ரீதன்
17-08-2010, 04:18 PM
என்னது பவர் பிரச்சனைக்காக படைக்கப்பட்ட எந்திரனுக்கு பவர் போயிடுச்சா..?!

சரி.. சரி.. இப்பத்தான் குழந்தைங்க வந்திட்டாங்கள்ல... இனி எந்திரன் என்னாகப் போறாரோ.. ஆவலுடன் இருக்கும்போது தொடரும் போட்டுட்டீங்களே...?!

சீக்கிரம் தொடருங்கள் மதுரையண்ணா..!!:D

அன்புரசிகன்
18-08-2010, 05:15 AM
எந்திரருக்கு போரடிச்சுட்டுது போல... கவுண்டமணியின் நகைச்சுவையின் பாதிப்பு உங்கள் எழுத்தில் தெரிந்தது. :D

இதே டெம்போவில் மதியப்போல இல்லாம ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பாகமா பதியுங்க... :D

வாழ்த்துக்கள்

மதுரை மைந்தன்
18-08-2010, 11:39 AM
சுவாரஸ்யமாக உள்ளது தொடருங்கள்.
பாராட்டுக்களுடன் ...

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
18-08-2010, 11:41 AM
:lachen001: :lachen001: :lachen001: :lachen001:

:icon_b:


உங்கள் ரசிப்பு தன்மைக்கு தலை வணங்குகிறேன். நன்றி

மதுரை மைந்தன்
18-08-2010, 11:46 AM
ரசிக்க முடியுது.

நட்டும் போல்டும் என இயந்திர வார்த்தைகளை உபயோகித்திருப்பது சிறப்பு.

தொடருங்கள்.


எந்திரன் படப் பாடல் " புதிய மனிதா பூமிக்கு வா " வரிகளில் " எந்திரன் அவன் அமரன்" என்று வருகிறது. எந்திரன் அமரன்னா, அமரன் எந்திரன் தானே.

மதுரை மைந்தன்
18-08-2010, 11:47 AM
நல்ல ஆரம்பம்.. இந்த எந்திரன் என்னவெல்லாம் செய்யப்போகிறானோ?

காத்திருக்கிறோம்..


நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
18-08-2010, 11:48 AM
என்னது பவர் பிரச்சனைக்காக படைக்கப்பட்ட எந்திரனுக்கு பவர் போயிடுச்சா..?!

சரி.. சரி.. இப்பத்தான் குழந்தைங்க வந்திட்டாங்கள்ல... இனி எந்திரன் என்னாகப் போறாரோ.. ஆவலுடன் இருக்கும்போது தொடரும் போட்டுட்டீங்களே...?!

சீக்கிரம் தொடருங்கள் மதுரையண்ணா..!!:D

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
18-08-2010, 11:50 AM
எந்திரருக்கு போரடிச்சுட்டுது போல... கவுண்டமணியின் நகைச்சுவையின் பாதிப்பு உங்கள் எழுத்தில் தெரிந்தது. :D

இதே டெம்போவில் மதியப்போல இல்லாம ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பாகமா பதியுங்க... :D

வாழ்த்துக்கள்


தினம் ஒரு பாகம் பதிவு செய்ய முயற்சிக்கிறேன். நன்றி நண்பரே

பா.ராஜேஷ்
18-08-2010, 11:54 AM
அசத்தலான ஆரம்பம்... தொடருங்கள் மதுரை மைந்தரே... வீட்டில் எந்திரன் செய்ய போகும் கூத்தை படிக்க ஆவலாக உள்ளோம்...

மதுரை மைந்தன்
18-08-2010, 11:58 AM
எந்திரன்- நகைசுவை தொடர்கதை -2

http://img718.imageshack.us/img718/5910/robotdances2.gif (http://img718.imageshack.us/i/robotdances2.gif/)

காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த எந்திரனைப் பார்த்ததும் ராமனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. எந்திரனில் அவர் பொருத்திய செயற்கை மூளை வேலை செய்து எந்திரன் தனினிச்சயாக இயங்க முடிவதைப் பார்த்து பெருமிதம் அடைந்தார். வரும் வழியில் பெய்த மழையால் எந்திரன் பின் சீட்டில் அமர்ந்திருந்ததை அவர் கவனிக்கவில்லை. மகன் ரவி, மகள் கீதாவிடம் " இது பொம்மையல்ல. மனிதனுக்கு சமமான எந்திரம். இவனால் பார்க்க முடியும், கேட்க முடியும், பேசவும் முடியும். நீங்கள் இவனை ஆளுக்கு ஒரு பக்கமாக கைகளைப் பற்றி உள்ளே அழைத்து செல்லுங்கள். நான் காராஜை மூடிவிட்டு வருகிறேன்.

வீட்டிற்குள் நுழைந்த எந்திரனை எதிர் கொண்டு ஆச்சரியமும் பயமும் கலந்து பார்த்தார் ராமனின் மனைவி கமலா.

கமலா: இது என்ன எந்திரம்?

ராமன்: எந்திரம் இல்லை எந்திரன். அணு உலைகளில் பராமரிப்பு வேலைகளுக்கு இவன் உதவுவான். என்னால் உருவாக்கப்பட்ட இவனுக்கு ஆறறவுடன் ஏழாம் அறிவும் உண்டு.

கமலா: நீங்க என்ன சொல்றீங்க? ஏழாம் அறிவுன்னா என்ன?

ராமன்: பகுதத்றியும் ஆறாம் அறிவைக் கொண்டு இயற்கையுடன் முற்றிலும் ஒன்றி, பார்ப்பவர்கள் இது மாயமா, மந்திரமா என்று சொல்ல வைக்கும் வண்ணம் இயங்குவதற்கு ஏழாம் அறிவு என்பார்கள்.

கமலா: என்னவோ போங்க, இதெல்லாம் எனக்கு எட்டா அறிவு. சரி, எந்திரன் என்ன சாப்பிடுவாரு?

ராமன்: எந்திரனுக்கு சாப்பாடெல்லாம் அவன் உடம்பில் இருக்கும் பாட்டரி சார்ஜ் தான். பாட்டரிகளை அப்பப்போ சார்ஜ் பண்ணுவது தான் அவனது சாப்பாடு.

ராமனும் கமலாவும் பேசிக்கொண்டிருக்கையில் ரவியும் கீதாவும் எந்திரனுடன் பேச்சு கொடுக்கின்றனர்.

ரவி: எந்திரன் சார், நீங்க எப்படி பூமிக்கு வந்தீங்க?

எந்திரன்: முதல்ல நீங்க எப்படி வந்தீங்கனு சொல்லுங்க.

ரவி: எங்க அப்பாவும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அப்புறமா நாங்க பிறந்தோம்.

எந்திரன்: உங்க அப்பாவும் கோவிந்தன், சங்கரனும் கல்யாணம் பண்ணிக்கிட்டங்களானு எனக்கு தெரியாது. அவங்க கூடி என்னை உருவாக்கினாங்க.

கீதா: அய்யே அசிங்கம் ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?

ரவி: எந்திரன் சார், உங்களுக்கும் எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே. உங்க கை இரும்புக்கை. எங்க கை கரும்புக்கை. எங்க உடம்பை அறுத்தா வயறு தெரியும். உங்க உடம்பை அறுத்தா வயர் தெரியும். ஹா ஹா ஹா.

ராமன்; ரவி, கீதா சாப்பிடிட்டு ஹோம் வொர்க் பண்ணிட்டு படுத்துக்குங்க.

ரவி: டாடி, எனக்கு வயத்தில வலிக்குது.

கீதா: டாடி, எனக்கு தலை லேசா வலிக்குது.

எந்திரன் ஏதோ முனகுகிறான்.

ராமன்: எந்திரா, உனக்கு என்னாச்சு?

எந்திரன்: சார், எனக்கு திருகுவலி

ராமன்: திருகுவலியை ஸ்பானர் வச்சு சரி பண்ணிடலாம். ரவி, கீதா ஹோம் வொர்க் பண்ண சோம்பல் பட்டு வயித்து வலி, தலை வலின்னு சொல்லாதீங்க. உண்மையில் உங்களுக்கு வலிச்சதுனா கொண்டாங்க உங்க ஹோம் வொர்க்கை நான் பண்ணித் தரேன்.

ரவி, கீதா: டாடி, எந்திரனும் எங்க கூட படுத்துக்கட்டும்.

ராமன்: அது முடியாது. எந்திரன் கை, கால் இரும்பினால் ஆனது. தூக்கத்தில உங்க மேல பட்டா உங்களுக்கு வலிக்கும்.

ரவி, கீதா: அப்போ எந்திரன் எங்கே தூங்குவாரு?

ராமன்: எந்திரனுக்கு பசி, தூக்கம் எல்லாம் கிடையாது. நான் எந்திரனின் பாட்டரிகளை நிறுத்தி விட்டு அவனை நமது கார் ஷெட்டில் ஒரு ஓரமா நிறுத்தி வைக்கப் போறேன். ஒரு முக்கியமான விஷயம். எந்திரன் நம்ம வீட்டில வந்த விஷயத்தை உங்க நண்பர்கள் கிட்ட சொல்லிடாதீங்க. இவனை மாடலா வைச்சு இன்னும் பல எந்திரர்களை உருவாக்கணும்.

ரவி, கீதா சாப்பிட சென்றவுடன் ராமன் எந்திரனின் பாட்டரிகளை நிறுத்தி விட்டு அவனை தள்ளிச் சென்று காரேஜின் ஒரு பக்கமாக நிறுத்தி விட்டு காரேஜின் கதவை மூடி பூட்டு போட்டு விட்டு தானும் சாப்பிட்டு படுக்க சென்றார்.

மறு நாள் அதிகாலையில் வாசல் தெளித்து கோலம் போடலாம் என்று வந்த கமலா பதரியடித்துக் கொண்டு ஓடிப் போய் ராமனை எழுப்பினார். " என்னங்க நம்ம காரேஜ் கதவு திறந்திருக்கு. உள்ளே எந்திரனைக் காணோம்" என்றார்.

தொடரும்...

பா.ராஜேஷ்
18-08-2010, 12:13 PM
என்னங்க இது... எந்திரன் கலாட்டா பண்ணுவார்னு பாத்தா காணாம போயிட்டாரே!!?

மதுரை மைந்தன்
20-08-2010, 11:47 AM
எந்திரன்- நகைசுவை தொடர்கதை -3

http://img205.imageshack.us/img205/3283/enthiran.jpg (http://img205.imageshack.us/i/enthiran.jpg/)

ராமனின் மனைவி கமலா எந்திரனைக் காரேஜில் காணோம் என்று ராமனிடம் கூறிய அன்றைக்கு முந்திய இரவில் ராமனின் சக விஞ்ஞானியும் போட்டியாளருமான கிருஷ்ணன் தனது ஆட்கள் மாரிசாமி, மாடசாமியிடம்

கிருஷ்ணன்: ராமனின் எந்திரனைக் கடத்திக் கொண்டு வந்து என்னோட காரில் வைக்காமல் ராமனின் காரிலேயே வச்சு சொதப்பிடீங்களே. சரி, போகட்டும். இந்த வேளை எந்திரன் ராமனின் வீட்டில் இருப்பான். நீங்கள் இருவரும் அங்கு சென்று மறைந்திருந்து எந்திரன் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து அவனை எங்கிட்ட கொண்டு வாங்க. எந்திரன் ரொம்ப கனமா இருப்பான். அவன் கால்ல இந்த ஸ்கேட்டிங் போர்டைக் கட்டி இழுத்தீங்கனா சுலபமா கொண்டு வரலாம்.

மாரிசாமி, மாடசாமி: அப்படியே செய்யறோம் அய்யா. தண்ணியடிக்க காசு குடுத்தீங்கனா வசதியா இருக்கும்.

கிருஷ்ணன்: வசதியா இருந்தா சரி. ஆனா அசதியா ஆயி பழயபடி சொதப்பிடாதீங்க.

கிருஷ்ணனிடமிருந்து காசு வாங்கி கொண்டு குவாட்டர் பாட்டிலை வாங்கி ராமனின் வீட்டுப்பக்கம் வந்தடந்தனர் இருவரும். அப்போது தான் ராமன் எந்திரனை கார் ஷெட்டில் நிறுத்தப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். அதை மறைந்திருந்து ஒட்டுக் கேட்ட இருவரும் ராமன் வீட்டில் அனைவரும் உறங்கச் சென்ற பின் எந்திரனைக் கடத்த திட்டமிட்டனர். அப்போது,

மாரிசாமி: என்ன கொடுமை? உயிரில்லாத எந்திரனைக் கடத்த நம்ம உயிரை எடுக்குறாரு இந்த கிருஷ்ணன். அப்படி என்ன இருக்கு இந்த எந்திரன் கிட்ட? நம்மளை மாதிரி குவாட்டரை அடிச்சமா குப்புறப் படுத்தமானு ஜாலியா இருக்க முடியுமா இந்த எந்திரனால? இவனைத் தயாரிக்க கோடிக் கணக்கில செலவு பண்றாங்க.

மாடசாமி: கோடின்னா எவ்வளவு அண்ணே?

மாரிசாமி: எனக்கு தெரியாதப்பா. கோடி பணம் இருந்தா இந்த நாய் பொழப்பு பொழைக்க வேண்டாம். இந்த ராமன் கிருஷ்ணன் எல்லாரும் நம்மளுக்கு சலாம் போடுவாங்க. நாமளும் ஒரு எந்திரனை வச்சுக்கிட்டு அவனை கடைக்கு போய் குவாட்டர் வாங்கிட்டு வரச் சொல்லலாம்.

இப்படி பேசிக்கொண்டு தண்ணியடித்து விட்டு இருவரும் வந்த வேலையை மறந்து ராமன் வீட்டு தோட்டத்தில் படுத்து கிடந்தனர். விடி காலை நேரத்தில் முழிப்பு வந்து இருவரும் பதறியடித்துக் கொண்டு காரேஜின் கதவை உடைத்து உள்ளே நுழந்தனர். அங்கு ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எந்திரனின் காலில் ஸ்கேட்டிங் போர்டுகளைக் கட்டினர். ராமன் காரை மூடி வைத்திருந்த துணியை எடுத்து எந்திரனை மூடி இருவரும் ஆளுக்கொரு கையாக பிடித்து எந்திரனை தள்ளிக் கொண்டு போனார்கள்.

மாடசாமி: நாம எந்திரனைக் கொண்டு போய் குடுத்தா கிருஷ்ணன் நமக்கு அவார்டு தருவாராண்ணே?

மாரிசாமி: அவார்டு, ரிவார்டு எல்லாம் கிடைக்குமப்பா

" கருவாடு கூட கிடைக்காது. கோயில் சிலையையா கடத்துறீங்க தடிப்பசங்களா. நடங்கடா ஸ்டேஷனுக்கு" என்ற போலீஸ் காரரின் குரல் இடியாக வந்து இறங்கியது அவர்கள் மீது.

தொடரும்...

மதி
20-08-2010, 01:58 PM
கோவில் சிலையா.. நல்ல தமாசு...

Nivas.T
20-08-2010, 02:42 PM
அவார்டு, ரிவார்டு எல்லாம் கிடைக்குமப்பா
கருவாடு கூட கிடைக்காது. கோயில் சிலையையா கடத்துறீங்க தடிப்பசங்களா.

:lachen001: :lachen001: :lachen001:

:icon_b:

lenram80
20-08-2010, 04:00 PM
எந்திரனைக் காணொம்ன்னு தெரிஞ்ச உடனே ராமன் "லக லக லக லக" ந்னு சொல்லப் போராரு.

அசத்துங்கள்... அருமை மதுரை வேந்தன்

மதுரை மைந்தன்
24-08-2010, 11:45 AM
எந்திரன்- நகைசுவை தொடர்கதை 4

"கோயில் சிலையவா கடத்திக்கிட்டு போறீங்க, நடங்க ஸ்டேஷனுக்கு" என்று மாரிசாமியையும் மாடசாமியையும் கழுத்தில் கை வைத்து கூட்டி சென்றார் கான்ஸ்டபிள் கந்தசாமி. அப்போது,

மாரிசாமி: இது கோயில் சிலையில்லை அய்யா, இது எந்திரன்.

கந்தசாமி: என்னை ஏமாத்தப் பாக்காதீங்க. அது சரி, அது என்ன எந்திரன்?

மாடசாமி: எந்திரம் போல் இயங்கும் மனிதனை எந்திரன்னு சொல்றோம்.

கந்தசாமி: அப்போ நானும் எந்திரன் தான். காலைல இருந்து நள்ளிரவு வரைக்கும் ஒரு எந்திரம் போல ஓடியாடி வேலை செய்யறேன்.

மாரிசாமி: இந்த எந்திரனுக்கு ஆயிரம் யானை பலம் இருக்கு.

கந்தசாமி: அப்படி வாங்க வழிக்கு. நீங்களே உண்மையை சொல்லிட்டீங்க. நீங்க கடத்தறது ஆஞ்சனேய சாமி சிலை தானே. அவருக்குத் தான் ஆயிரம் யானை என்ன லட்சம் யானை பலம் உண்டு.

மாடசாமி: இந்த எந்திரனை ராமன்கிட்ட இருந்து எடுத்துக்கிட்டு வறோம்.

கந்தசாமி: ஆமாம், ஆஞ்சனேய சாமி ரமர் பக்தர். அவர் எப்பவும் ராமரோட பாதங்கள் கிட்ட இருப்பாரு. ஆஞ்சனேய சாமி சிலையை கடத்தினீங்கனா உங்களுக்கு பாவம். இங்கே பக்கத்து ஆஞ்சனேயர் கோயில்ல இருந்து தானே கடத்திட்டு வறீங்க.

மாரிசாமியும் மாடசாமியும் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் நடக்கின்றனர்.

கந்தசாமி தன் மனதுக்குள்: இப்போ இந்த சிலையை ஸ்டேஷனுக்கு எடுத்துக்கிட்டு போனா இன்ஸ்பெக்டரும், ஹெட் கான்ஸ்டபளும் நாங்க தான் சிலையை கண்டு பிடிச்சோம்னு பெரிய இடத்தில சொல்லி பிரமோஷன் வாங்கிப்பாங்க. நமக்கு ஒண்ணும் கிடைக்காது. பேசாம நேர ஆஞ்சனேய சாமியை கோயில்ல ஒப்படைச்சா புண்ணியமாவது கிடைக்கும்.

அவர்கள் கொஞ்ச நேரம் நடந்த பின் ஆஞ்சனேயர் கோயில் வாசலில் வந்தடைகின்றனர்.

கந்தசாமி, மாரிசாமி மாடசாமியிடம்: ஏதோ நீங்க கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கீங்க. கோயில் வந்தாச்சு. சாமியை அர்ச்சகர் கிட்ட ஒப்படைக்கப்போறேன். இனிமே தப்பு தண்டா பண்ணாம பொழைக்கிற வழியை பாருங்க. நீங்க போகலாம்.

மாரிசாமி, மாடசாமி இருவருக்கும் அங்கிருந்த போக மனமில்லை. எந்திரன் தங்கள் கையை விட்டு போய் விட்டான் என்று கிருஷ்ண்னிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டே அங்கிருந்து நழுவினர்.

கந்தசாமி கோயிலுக்குள் எந்திரனை இழுத்து சென்று அர்ச்சகரிடம் " சாமி, ஆஞ்சனேய சாமி சிலையை கண்டு பிடுச்சுட்டேன். இந்தாங்க நல்லா பூசையெல்லாம் பண்ணுங்க. ஆஞ்சனேய வீரா, அனுமந்த சூரா" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு திரும்பினார்.

கண் பார்வை மங்கிய அர்ச்சகர் துணி போட்டு மூடியிருந்த எந்திரனை ஆஞ்சனேயர் பீடத்தில் நிறுத்தினார். கர்ப்பகிருகத்தை திரை போட்டு மூடி விட்டு அலங்காரம் பண்ண் வேண்டி தண்ணிரினால் எந்திரனை அபிஷேகம் செய்தார். அணு உலைக்குள் இறங்கி பராமரிப்பு செய்வதற்கு ஏற்ரவாறு ராமன் எந்திரனை வாட்டர் ப்ரூப் பண்ணியிருந்தார். தண்ணீரினால் அபிஷேகம் செய்த பிறகு அர்ச்சகர் சந்தனத்தை எந்திரனின் தலை முதல் கால் வரை அப்பினார். மலர் மாலைகளோடு வடை மாலை ஒன்றையும் சாத்தினார்.

எந்திரன் உள்ளே இருந்த பாட்டரிகளை முந்தினம் இரவு நிறுத்தி வைத்த ராமன் அவை காலை இயங்குமாறு ஏற்பாடு பண்ணியிருந்தார். அர்ச்சகர் வடை மாலை சாத்தியவுடன் எந்திரனின் பாட்டரிகள் வேலை செய்யத் தொடங்கி அவன் உயிர் பெற்றான். தான் எங்கிருக்கிறோம் என்று உண்ர சற்று நேரம் பிடித்தது அவனுக்கு. வடை மாலை அவன் கவனத்தை கவர அர்ச்சகர் வேறு வேலையாக திரும்பியபோது அதை தன்னுள் இழுத்துக் கொண்டான். செய்த அலங்காரம் சரிதான என்று தன் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்த அர்ச்சகர் வடை மாலையை காணாமல் ஆஞ்சனேயரே பிரத்சட்யமாக வந்து அதை சாப்பீடு விட்டார் என்று நினைத்து பரவசமாகி மூர்ச்சையடந்தார்.

அர்ச்சகர் மூர்ச்சையடந்ததும் எந்திரன் தன் மீதிருந்த அலங்காரங்களை களைந்துவிட்டு கோயிலின் பின் புறமாக வெளியே வந்து வீதியில் நடக்கத் தொடங்கினான். எந்திரனைப் பார்த்து ஒரு பெரிய கூட்டம் அவனை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தில் ஒருவர் " இங்கே பாரய்யா, இயக்குனர் ஷங்கர் தந்து எந்திரன் படத்துக்கு நூதனமா விளம்பரம் செய்யறாரு" என்றார். சில இளைஞர்கள் எந்திரனிடம் நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தினார்கள். எந்திரனுக்கு தன் சகாக்களுடன் ஆடிய நடனம் நினைவுக்கு வந்தது. அதன் அசை படத்தை இங்கே காணலாம்.

http://www.youtube.com/watch?v=hAPkYlaSxwE


( இந்த அசை படத்தை மன்றத்து நண்பர்களுக்காக நானே தயாரித்தேன்)

தொடரும்..

பாரதி
24-08-2010, 12:02 PM
( இந்த அசை படத்தை மன்றத்து நண்பர்களுக்காக நானே தயாரித்தேன்)

இன்று தொடரைப்படித்தேன் நண்பரே.
வழமையான நகைச்சுவை இல்லாவிட்டாலும் கூட இரசிக்க முடிந்தது.
அதையும் விட மன்ற உறவுகளுக்காக அசைபடம் தயாரித்து வழங்கி இருக்கும் உங்களை எப்படிப்பாராட்டுவது என்றே தெரியவில்லை!:icon_b:

மதுரை மைந்தன்
28-08-2010, 10:22 PM
இன்று தொடரைப்படித்தேன் நண்பரே.
வழமையான நகைச்சுவை இல்லாவிட்டாலும் கூட இரசிக்க முடிந்தது.
அதையும் விட மன்ற உறவுகளுக்காக அசைபடம் தயாரித்து வழங்கி இருக்கும் உங்களை எப்படிப்பாராட்டுவது என்றே தெரியவில்லை!:icon_b:


அசை படத்தை பாராட்டியதற்கு நன்றி நண்பரே மற்ற மன்றத்து நண்பர்கள் அதை பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. பரவாயில்லை நான் தொடர்கிறேன்.

மதுரை மைந்தன்
28-08-2010, 10:26 PM
எந்திரன்- நகைசுவை தொடர்கதை -5

http://img26.imageshack.us/img26/1923/robotcop.jpg (http://img26.imageshack.us/i/robotcop.jpg/)


எந்திரனைச் சுற்றி கூட்டம் கூடியிருந்ததை அங்கு ஜீப்பில் வந்த போலீஸ்காரர் கந்தசாமி பார்த்தார். கூட்டத்தை விலக்கி நடுவில் நின்ற எந்திரனைப் பார்த்ததும் மாடசாமியும் மாரிசாமியும் கடத்தியது ஆஞ்சனேயர் சிலை இல்லை இந்த எந்திர மனிதன் என்று புரிந்து கொண்டார். கூட்டத்தாரை போகச்சொல்லிவிட்டு எந்திரனை ஜீபில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி சென்றார். போகும் வழியில் அவர் மனதுக்குள்
" இந்த எந்திர மனிதனைக் கொண்டு திருடர்களை பிடிக்க செய்து அதற்கான நல்ல பெயரை நாமே எடுத்துக் கொள்ளலாம்"

என்று திட்டமிட்டார். ஆகவே, ஸ்டேஷனுக்கு போகாமல் ஜீப்பை தன் வீட்டிற்கு எடுத்து சென்றார். அவருடைய மனைவி கடைக்கு சென்றிருந்தது அவ்ருக்கு வசதியாக இருந்தது. வீட்டில் தனது போலீஸ் உடையை எந்திரனுக்கு அணிவித்து கண்ணில் கறுப்பு கண்னாடியையும் மாட்டினார். நடப்பவை எல்லாம் எந்திரனுக்கு வியப்பாக இருந்தது. கந்தசாமி எந்திரனிடம்

" எந்திரா, இனிமே நீ தான் கான்ஸ்டபிள் கந்தசாமி. உன்னோட வேலை என்னனா திருடர்களை லபக்னு பிடிச்சு எங்கிட்ட ஒப்படைக்கணும். சரியா" என்று சொல்லி எந்திரனை வெளியில் அனுப்பினார். அதன் பின் கந்தசாமி மப்டி உடையில் ஜீப் ஏறி ஸ்டேஷன் சென்றார்.

போலீஸ் உடையில் வீதியில் நடக்க தொடங்கிய எந்திரனை வழியிலிருந்த பெட்டிகடை பெரியசாமி கூப்பிட்டார்.

பெரியசாமி: என்ன கந்தசாமி உன்னை பார்த்து கொஞ்ச நாளாயிடுச்சு. ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டே. உன்னோட பானை தொந்தியெல்லாம் கரஞ்சு சிங்கம் படத்தில வற மிடுக்கான சூர்யா மாதிரி ஆயிட்டே. எனக்கும் அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லு.

எந்திரன் பதில் பேசாமல் நின்றதை பார்த்து,

பெரியசாமி: முன்னெல்லாம் வள வளனு பேசுவே. இப்போ என்னா ஆச்சு உனக்கு?. அது போகட்டும், என்னை இந்த ரவுடி ரங்கன் பணம் கேட்டு ரொம்ப தொல்லை பண்றான். நீ அவனை ரெண்டு தட்டு தட்டி லாக்கப்ல போடு அப்ப தான் எனக்கு நிம்மதி.

எந்திரன் அதற்கும் பதில் பேசாத்தை பார்த்து,

பெரியசாமி: என்னப்பா நீ உனக்கு எவ்வளவு மாமூல் குடுத்திருக்கேன். நீ தினம் ஒரு சிகரெட் பாக்கெட், கோக கோலா, வாழப்பழம்னு காசு குடுக்காம எடுத்தப்பல்லாம் நான் பேசாம இருந்தேனே. இப்ப எனக்கு இந்த உதவியை செய்யமாட்டயா?. இதோ பாரு உனக்காக எந்திரன் பட சி.டி கூட எடுத்து வச்சிருக்கேன்.

பெரியசாமி காட்டிய எந்திரன் பட சி.டி யின் கவரில் இருந்த படங்களை பார்த்து எந்திரன் " இவர்கள் யார்?" என்று கேட்டான்.

பெரியசாமி: என்னது? இவங்களைத் தெரியாதா? தமிழ் நாட்டில பட்டி தொட்டியெல்லாம் இவங்களை தெரியும். உனக்கு என்னவோ ஆகியிருக்கு. சரி கேட்டுக்கோ. இந்த படத்தில கண்ணில கறுப்பு கண்ணாடி போட்டிருக்கிறவரு தான் நம்ம சூப்பர் ஸ்டார். அவர் தான் எந்திரனா நடிக்கிறாரு. பக்கத்தில் இருக்கிறவங்க உலகத்திலேயே மிக அழகான பொண்ணு ஐஸ்வர்யா.

எந்திரனுக்கு படத்தையும் பெரியசாமி சொன்னதையும் கேட்டு ஆச்சரியமாக இருந்தது. எந்திரன் என்று சொல்லப்படும் நபரின் கை, கால்கள் முகம் ஆகியவை சாதாரண மனிதர்களுக்கு இருப்பதை போலவே இருக்கு. ஆனால் தனக்கு கை கால்கள் இரும்பினால் செய்யப்பட்டு முகத்தில் கண்கள் இருக்கும் இடத்தில் இர்ண்டு பல்புகள் இருக்கின்றனவே என்று வியந்தான். கந்தசாமியின் போலீஸ் உடையும் கண்களில் போட்டிருந்த கறுப்பு கண்னாடியும் அவைகளை மறைத்திருந்தன. எந்திரன் பெரியசாமியிடம் " அழகான பொண்ணு என்றீர்களே அவர்கள் யார்?" என்று கேட்டான்.

பெரியசாமி: விடிஞ்சது போ. பொண்ணு யாருன்னு கேக்கறயே. உனக்கு புத்தி மாறாட்டம் ஆயிடுச்சா. பிகர்களை பாத்து ஜொள்ளு விடுவயே நீ. இப்போ என்ன ஆச்சு உனக்கு?. சரி சொல்றேன் கேளு. பெண்கள் மென்மையானவர்கள். அழகானவர்கள். எந்திரன் படத்தில எந்திரனுக்கும் அந்த அழகான பொண்ணுக்கும் காதல் ஏற்படுது.

எந்திரன்: காதல்னா என்ன?

பெரியசாமி எந்திரனை முறைத்து பார்த்து " காதல்னா அன்பு. ஒரு கவர்ச்சி. அது வந்ததுனா அது ஒரு சுகமான வலி".

அந்த சமயத்தில் " என்னோட செயினை அறுத்துட்டு ஓடறான் திருடன். பிடிங்க" என்று ஒரு பெண் கத்தவும், மின்னல் வேகத்தில் பாய்ந்து தனது இரும்பு கரத்தால் அந்த திருடனை மடக்கி அவனிடமிருந்து செயினை பிடுங்கி அந்த பெண்ணிடம் கொடுக்கிறான் எந்திரன்.

வாவ் என்று எந்திரனின் வீரத்தை பாராட்டிய அந்த பெண் " செயினை மீட்டு தந்தற்கு நன்றி. என்னுடன் காபி சாப்பிட வறீங்களா" என்று எந்திரனை அழைத்தாள்.

தொடரும்....

பா.ராஜேஷ்
29-08-2010, 02:30 PM
அசை படம் மிக அருமையாக இருந்தது மதுரையாரே!! நகைச்சுவை குறைவதை போல் தொண்டுர்கிறது... கவனித்து எழுதுங்கள்..

மதுரை மைந்தன்
04-09-2010, 01:47 AM
எந்திரன்- நகைசுவை தொடர்கதை -6

http://img546.imageshack.us/img546/3096/robot.jpg (http://img546.imageshack.us/i/robot.jpg/)

காபி சாப்பட வருகிறீர்களா என்று அந்த பெண் அழைத்ததும் தயங்கி தயங்கி எந்திரன் அவள் பின்னால் சென்றான். இருவரும் ஒரு உணவகத்தில் நுழைந்து ஒரு மேசையில் அமர்கின்றனர். அந்த பெண் எந்திரனிடம் " நீங்க என்னை கலா என்று கூப்பிடலாம்" என்று சொன்ன பின்,

கலா:நான் உங்களை காபி சாப்பிட அழைத்த போது நீங்க சிலை மாதிரி ஒரு ரியாக்ஷனும் இல்லாம நின்னீங்க. அப்புறம் என் பின்னால ஒரு எந்திரம் மாதிரி வந்திங்களே அது ஏன்?

அந்த சமயம் இரண்டு ரவுடிகள் அங்கு வந்து " நாங்க சாப்பிட்டிக்கிட்டிருந்த மேசைல வந்து குந்திகிட்டயே, எந்திரி" என்றார்கள் கலாவிடம்.

கலாவும் எந்திரனும் வேறொரு மேசைக்கு சென்று அமர்ந்ததும்,

எந்திரன்:ஓ நீங்க எந்திரியா? நான் எந்திரன்.

கலா அதை கேட்டு பலமாக சிரித்து: என்ன நீங்க எந்திரனா? சூப்பர் ஸ்டார் ரசிகனா இருக்கலாம் நீங்க, அதுக்காக அவர் நடிச்சு வெளி வரப் போற படத்தை வச்சு உங்களை எந்திரன்னு சொல்லிகறது கொஞ்சம் ஓவரா தெரியல?. இப்படித் தான் சிவாஜி படம் வந்தப்போ நான் தான் சிவாஜின்னும், படையப்பா வெளி வந்தப்போ நான் தான் படையப்பானும், அருணாச்சலம் படம் வெளி வந்தப்போ நான் தான் அருணாச்சலம்னும், முத்து படம் வெளி வந்தப்போ நான் தான் முத்துனும் சொல்லியிருபீங்க போல இருக்கே. போகட்டும். உங்களை பாத்ததும் எனக்கு உங்களை பிடிச்சு போச்சு. அடுத்தாப்பில அந்த திருடனை துரத்தி பிடிச்சு என் சங்கிலையை மீட்டு தந்ததும் எனக்கு உங்க மேல காதல் வந்துடுச்சு.

எந்திரன்:காதல்னா என்னாங்க?

கலா:என்னது? காதல்னா என்னாவா? மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோனு எஸ்.பி.பி. பாடியிருக்காரே, கேட்டதில்லையா நீங்க? உங்க இதயத்தை தொட்டு சொல்லுங்க உங்களுக்கு என் மேல காதல் இல்லைனு?

எந்திரனை உருவாக்கும்போது ராமன் தனது உதவி பொறியாளர்களிடம் எந்திரனின் நெஞ்சின் மையப் பகுதியில் உள்ள கணிணி தான் அவனது இதயம் என்று சொன்னதை கேட்டிருந்த எந்திரன் தனது நெஞ்சின் உள்ளே கைவிட்டு அங்கிருந்த கணிணியின் டச் பாடை தொடவும் அதிலிருந்து " நான் உன்னை காதலிக்கறேன்", "Nenu ninnu premisthunnaanu", "njan ninne premikkinu", Maza Tuzyavar Prem Ahe, Naanu Ninna Preethisuve , Main tumse pyar karta hun, "Tane Prem Karoo Choo", Main tenu pyar karda haan, Saya cintakan awak, Kimi o ai shiteru, Wo ie ni, Ami tomAy bhAlobAshi, ham tahara se pyar karila இப்படியாக எந்திரனுக்கு தெரிஞ்ச 60க்கும் மேற்பட்ட மொழிகளில் காதல் சொல்லப்பட்டது.

இவற்றைக் கேட்டு வியந்து போன கலா " எங்கே உங்க கையை காட்டுங்க" என்றாள்.

இரும்பு கம்பிகளாலான எந்திரனின் கைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவளாகி " உண்மையிலே நீங்க ஒரு எந்திரனா?" என்று கேட்டாள்.

அந்த சமயம் அந்த இரண்டு ரவுடிகளும் அவர்களின் மேசைக்கு வந்து " என்ன கான்ஸ்டபிள் கந்தசாமி, ஆளே அடையாலம் தெரியாம மாறிட்டே. முன்னாலெல்லாம் தூரத்திலிருந்து தான் பொம்பிளைகளைப் பாத்து ஜொள்ளு விடுவே. இப்போ கூட உக்காந்து காபி சாப்பிடற அளவுக்கு முன்னேறிட்டியயே. எங்கேயிருந்து பிடிச்ச இந்த பொம்பளைய? அயிஸ்க்ரீம் விக்கிற பார்ட்டிய தள்ளிக்கிட்டு வந்துட்டயே. எம்மே எங்க கூட வறியா?"

இதைக்கேட்டு கோபமடைந்த கலா எந்திரனிடம் " இவங்களை அடிச்சு தொவைச்சு தூக்கி போடு" என்றாள்.

எந்திரன் தனது இரண்டு கைகளாலும் ரவுடிகளின் கழுத்துகளை பிடித்து திருகி அவர்களை ஆகாயத்தில் தூக்கி எறிந்தான். இருவரும் பல பல்டிகள் அடித்து உணவகத்தின் வெளியே சென்று விழுந்தார்கள். தமிழ் படங்களில் வரும் சண்டை காட்சி மாதிரி இருந்ததால் அதை பார்க்க ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது. கூட்டத்தை விலக்கி விட்டு வந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி தனது காவல் நிலையத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் கந்தசாமி அப்படி ரவுடிகளை நொறுக்கியதை வியப்புடன் பார்த்தார்.

தொடரும்...

மதுரை மைந்தன்
04-09-2010, 01:53 AM
அசை படம் மிக அருமையாக இருந்தது மதுரையாரே!! நகைச்சுவை குறைவதை போல் தொண்டுர்கிறது... கவனித்து எழுதுங்கள்..


அசை படத்தை பாராட்டிய உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு என் நன்றிகள். கதையில் நகைசுவை குறைந்து வருவதை சுட்டி காட்டியதற்கும் நன்றி. நகைசுவையாக எழுதுவது கடினமானது. நகைசுவையாக எழுதுவதற்கு நான் முயல்கிறேன் . அதற்கு உங்களுடைய ஆதரவு மிக முக்கியமானது.

பா.ராஜேஷ்
05-09-2010, 11:08 AM
எங்களுடைய ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு... உங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டிற்குரியது... தோய்ந்து விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்..

அன்புரசிகன்
20-09-2010, 06:28 AM
வேலைப்பழுவுடன் இருந்ததாலா இன்று தான் 5-6 பாகங்களை படித்தேன். நகைச்சுவையாக போகுது. அதுவும் கலாவுடன் கலக்கலா கலக்கும் எந்திரன்.... கடைசியில அடித்து தூக்கியெறியும் இடத்தில் தமிழ் பட ஆரம்ப சண்டைக்காட்சி தான் ஞாபகம் வந்தீச்சு. :D

தொடருங்க... (காணொளிக்கும் நன்றி)

மதுரை மைந்தன்
23-09-2010, 09:36 AM
எந்திரன்- நகைசுவை தொடர்கதை 7

http://img823.imageshack.us/img823/5634/freesnap002.jpg (http://img823.imageshack.us/i/freesnap002.jpg/)

ஒரு கொலை கேஸ் சம்பந்தமாக துப்பு துலக்க மப்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி தான் யார் என்று காட்டிக் கொள்ள விரும்பாமல் ஸ்டேஷனுக்கு வந்ததும் கந்தசாமியிடம் பேசிக் கொள்லலாம் என்று அங்கிருந்து தனது மோட்டார் பைக்கில் விரைந்தார்.

அங்கு ஸ்டேஷனில் மப்டியில் இருந்த கந்தசாமிக்கு மனைவி துளசி சில நாட்களுக்கு முன் தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது.

துளசி: பத்து வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. இன்னமும் நீங்க கான்ஸ்டபிளாகத்தான் இருக்கீங்க. உங்க கூட படிச்ச நண்பர்கள் வக்கீல், டாக்டர்னு வேலை பாத்து நிறைய சம்பாதிக்கறாங்க. உங்களைக் கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தை கண்டேன். ஒரு நகை உண்டா, நட்டு உண்டா?

துளசி நட்டு உண்டா என்று கேட்டது நினைவுக்கு வர, கந்தசாமி தனக்குள்ளே சிரித்துக் கொண்டார் " துளசி, நீ ஒரு நட்டு உண்டானு கேட்ட. எந்திரன் உடம்பில இருந்து பல நட்டுக்களை எடுத்து உனக்கு நட்டு மாலையே போடறேன்". துளசி மேற்கொண்டு சொன்னதை நினைவு கூர்ந்தார் கந்தசாமி.

துளசி: இன்னும் எத்தனை நாளுக்கு தான் இந்த கஞ்சி போட்ட காக்கி உடையை போட்டுக்கிட்டு கான்ஸ்டபிளா இருக்க போறீங்க? எப்போ உங்களுக்கு இன்ஸ்பெக்டர் பிரமோஷன் கிடைக்கும்?

கந்தசாமி: துளசி, இன்ஸ்பெக்டரா பிரமோஷன் கிடைச்சாலும் இதே கஞ்சி போட்ட காக்கி உடையைத்தான் போடணும். பிரமோஷன் கிடைக்கணும்னா நாலு திருடங்களை பிடிக்கணும், கொலை கேஸை கண்டு பிடிக்கணும். நானா திருடனை பிடிக்க முடியலை? இந்த தொந்தியை தூக்கிட்டு ஓட முடியலை. திருடங்க எனக்கு கிச்சு கிச்சு மூட்டிட்டு ஆட்டோக்கள்ல் ஏறி போயிடறாங்க.

நிகழ் காலத்திற்கு தனது நினைவு திரும்ப, கந்தசாமி தனக்குள்ளே சொல்லிக்கொண்டார். " துளசி, திருடங்களை பிடிக்க எந்திரனை அனுப்பியிருக்கேன். "கான்ஸ்டபிள் கந்தசாமி திருடர்களை லபக் லபக் என்று பிடித்தார், ரவுடிகளை பறந்து பறந்து தாக்கினார்" என்று பேப்பர்ல கொட்டை எழுத்துல போடப்போறாங்க. அப்புறம் எனக்கு இன்ஸ்பெக்டர் பிரமோஷன் கிடைச்சுடும்.

இவ்வாறு யோசித்துக்கொண்டிருந்த* கந்த*சாமியின் பார்வையில் இன்ஸ்பெக்ட*ர் ப*ழ*னிசாமி கழற்றி வைத்திருந்த அவருடைய யூனிபார்ம் பட்டது. அதை எடுத்து அதிலிருந்த பழனிசாமி என்ற பெயர் வில்லையை கழற்றி வைத்துவிட்டு ஒரு பையில் போட்டுக்கொண்டு ஜீப்பில் ஏறி த*ன் வீட்டை நோக்கி விரைந்தார். வீட்டின் திண்ணையில் யூனிபார்மை மாட்டிக்கொண்டு " வெளியே கான்ஸ்ட*பிள் வீட்டில் இன்ஸ்பெக்ட*ர்" என்று த*ன*க்கு தானே நினைவு ப*டுத்திக் கொண்டு உள்ளே சென்றார்.

க*ந்த*சாமியை இன்ஸ்பெக்ட*ர் உடையில் பார்த்த* துள*சிக்கு ஆனந்த*ம் தாங்க* முடிய*வில்லை.

துள*சி: என்ன*ங்க*, உங்க*ளுக்கு பிர*மோஷ*ன் எப்ப* கிடைச்ச*து?

க*ந்த*சாமி: இப்ப*தான் திண்ணைல* தான் சீ சென்னைல* தான். ஒரு பெரிய* கொள்ளை கூட்ட*த்தை த*னி ஆளா போய் பிடிச்சேன். நான் பிடிச்ச*து எங்க* மேல*திகாரிக*ளுக்கு பிடிச்சு போயிடுச்சு. உட*னே மிஸ்ட*ர் க*ந்தசாமி உங்க*ளுக்கு இன்ஸ்பெக்ட*ர் பிர*மோஷ*ன் கொடுக்க*றோம். இன்னும் கொஞ்ச* நாள்ல* ச*ர்க்கிள் இன்ஸ்பெக்ட*ர் வேலையே உங்க*ளுக்குதான்னு சொன்னாங்க*. *ச*ரி, என*க்கு க*ளைப்பா இருக்கு. காபி போட்டு கொண்டா.

துள*சி: காப்பி என்ன*ங்க* உங்க*ளுக்கு போர்ன்விட்டா போட்டு கொண்டுவ*றேன். இனிமே மாச*ம் ச*ம்ப*ள*த்தில* ஆயிர*ம் ரூபாய் கூட* வ*ரும்ல*?

இப்ப*டி கேட்டுவிட்டு போர்ன்விட்டா போட்டு எடுத்துவ*ர* துள*சி ச*மைய*ல் அறைக்கு சென்றாள். மாத*ம் ச*ம்ப*ள*த்தில* கூட* ஆயிர*ம் ரூபாயா? இதை யோசிக்காம* போயிட்டோமே என்று க*வ*லைப்ப*ட்ட* க*ந்த*சாமி " எல்லாம் எந்திர*ன் க*வ*னிச்சுக்குவான்" என்று ச*மாதான*ம் அடைந்தார்.

தொட*ரும்....

மதுரை மைந்தன்
26-09-2010, 09:27 AM
எந்திரன்- நகைசுவை தொடர்கதை 8

http://img534.imageshack.us/img534/3953/26152394934483f002b1.jpg (http://img534.imageshack.us/i/26152394934483f002b1.jpg/)


கலாவும் எந்திரனும் ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வந்தனர். அவர்களை வழி மறித்து ஒரு பெரிய ரவுடி கும்பல் கைகளில் தடி, கத்தி, அரிவாள், சைக்கிள் செயின் சகிதமாக நின்றனர். கலாவை வம்புக்கிழுத்த ரவுடிகளை எந்திரன் பந்தாடியது அந்த கும்பலின் தலைக்கு தெரிய வந்து தனது ஆட்களுடன் ஆட்டோக்களில் வந்திறங்கினர். ரவுடிகளின் தலை சங்கரபாண்டியன் பேசினான்.

சங்கரபாண்டியன்: என்ன கந்தசாமி, பெரிய பிஸ்தாவாயிட்டயா? என்னோட பசங்களை பந்தாடற அளவுக்கு உனக்கு தகிரியம் வந்துடுச்சா? உன் பக்கத்துல ஃபிகர் இருந்தா ஹீரோனு நினைப்பா? வந்து பேசாம எங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. இல்லைனா உன் தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவேன்.

எந்திரனுக்கு அவன் பேசியது ஒன்றும் புரியவில்லை. கலா பயத்தில் அவனுடன் ஒட்டிக்கொண்டாள். எந்திரனுக்கு கலாவின் ஸ்பரிசம் அவனுடைய உடலின் உள்ளே ஓடும் மின்சாரம் வெளியே வந்தது போல் இருந்தது

எந்திரன் பதில் பேசாததைப் பார்த்து ஒரு ரவுடி " பாஸ், நான் போய் அவனை கவனிச்சுட்டு வறேன்" என்று சொல்லி வேகமாக வந்து எந்திரனின் வயிற்றில் ஒரு குத்து விட்டான். அவன் கை எந்திரனின் இரும்பு உடலில் பட்டு வீங்கிப் போய் "அய்யோ அம்மா" என்று கத்திக் கொண்டு ஓடினான். மற்றொரு ரவுடி ஓடி வந்து அரிவாளால் எந்திரன் தோளை வெட்டினான். அரிவாள் இரண்டாக உடைந்ததோடு அதிலிருந்து தீப் பொறிகள் வந்து அவனை தாக்க அவன் மயங்கி விழுந்தான். இவைகளைப் பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிள்ந்த சங்கரபான்டியன் கந்தசாமிக்கு புது சக்தி வந்திருக்கு என்று நினைத்து,

சங்கரபான்டியன்: அய்யா சாமி, கந்தசாமி ஆளை விடுப்பா. உனக்கு மாமூல் எல்லாம் தறோம். வாங்கடா போகலாம்.

சங்கரபான்டியனின் ஆட்கள் எந்திரன் அவர்களை நோக்கி முன்னேறுவதை பார்த்து பயத்தில் நடுங்கினர். அவர்களை நெருங்கிய எந்திரன் தனது பத்து விரல்களையும் நீட்டி அவற்றிலிருந்து வந்த லேசர் கதிர்களை ரவுடிகளிடம் செலுத்தினான். அவ்ர்கள் மயங்கி விழ சங்கரபானண்டியனும் சில ரவுடிகளும் அங்கிருந்து துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடினார்கள். இவ*ற்றை வேடிக்கை பார்க்க* ம*க்க*ள் திரளாக* வந்த*ன*ர். அவ*ர்கள் விய*க்கும் வ*ண்ண*ம் எந்திர*ன் க*லாவை தூக்கி கொண்டு வான*த்தில் பறந்து சென்றான்.

வானத்தில் பறந்த எந்திரன் கீழே தனக்கு பரிச்சயமான இடத்தில் கீழே இறங்கினான். அது ராமன் வீட்டு தோட்டம். எந்திரனை காணவில்லை என்று அப்போதுதான் ராமன் போலீசில் புகார் கொடுத்திருந்தார். உடனே எந்திரன் வந்து இறங்கியது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அணு உலைகளில் பணியாற்ற பல எந்திரன்களை உருவாக்க வேண்டிய நேரத்தில் முதல் எந்திரன் காணாமல் போனது அவருக்கு கவலையாயிருந்தது. எந்திரன் திரும்பியது அவருக்கு நிம்மதியளித்தது. இருந்தாலும் எந்திரனுக்கருகில் கலாவை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். கலாவே அவரிடம் " நீங்கள் தயரித்த எந்திரனை சந்திதது எனக்கு த்ரில்லிங்காக இருக்கு. நான் அவருடைய வேலையில் குறிக்கிடமாட்டேன். என்னை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றியதற்கு நன்றி மிஸ்டர் எந்திரன்" என்று சொல்லி விடை பெற்று சென்றாள்.

இன்ஸ்பெக்டர் உடையை களைந்துவிட்டு மப்டியில் ஸ்டேஷனுக்குள் நுழைந்த கந்தசாமியை இன்ஸ்பெக்டர் வரவேற்றார். " வாங்க கந்தசாமி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே நீங்க ரவுடிகளை பந்தாடியதை பார்த்தேன். ஆனா அப்போ நீங்க ட்ரிம்மா இருந்தீங்க. இப்போ பழயபடி தொப்பையோடு தளர்ந்து இருக்கீங்களே" என்றார். கந்தசாமி " என்னை மன்னிச்சுங்க சார். ஒரு என்திரனை சாமி சிலைனு நினைச்சு ஆஞ்சனேயர் கோயில்ல ஒப்படைச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது ஒரு என்திர மனிதன்னு. அவனுக்கு என்னோட யூனிபார்மை மாட்டிவிட்டு திருடன்களை பிடிக்க அனுப்பினேன். அவனைத்தான் நீங்க பார்த்தீங்க".

" ஓ, அவன் என்திரனா. அவனைக் காணோம்னு அவனை உருவாக்கின விஞ்ஞானி ராமன் என்கிறவர் புகார் கொடுத்திருந்தார். ஆனா அவனே அவர்கிட்ட திரும்பிட்டடதா இப்பொ தான் போன் பண்ணினார். அன்த என்திரனுக்கு பாதுகாப்பு தரணும்னு சொன்னார். நான் கமிஷனர் கிட்ட பேசினேன். அந்த என்திரனை பாதுகாக்கும் பொறுப்பை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன். அந்த டூட்டுக்கு உங்களுக்கு மாசம் சம்பளத்தில ஆயிரம் ரூபாய் கூடுதலா கிடைக்கும். அது சரி நான் கழற்றி வச்சிருந்த என்னோட யூனிபார்ம் எங்கே?"

மாசசம்பளத்தில் ஆயிரம் ரூபாய் கூட கிடைக்க போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்த கந்தசாமி " உங்க யூனிபார்ம் அழுக்கா இருக்குனு நான் தான் லான்டரில குடுத்திருக்கேன்" என்றார்.

முடிவுற்றது

மதுரை மைந்தன்
26-09-2010, 09:32 AM
எனது அடுத்த கதை "சித்திரக்குள்ளனும் மர்மயோகியும்" மன்றத்து நண்பர்களின் விருப்பத்தை பொறுத்து பதிவு செய்ய உள்ளேன்

அன்புரசிகன்
26-09-2010, 11:00 AM
கலா பயத்தில் அவனுடன் ஒட்டிக்கொண்டாள். எந்திரனுக்கு கலாவின் ஸ்பரிசம் அவனுடைய உடலின் உள்ளே ஓடும் மின்சாரம் வெளியே வந்தது போல் இருந்தது

இந்த வரிகளை வெகுவாக ரசித்தேன். உங்களது பாணியில் நல்லதொரு நகைச்சுவை படித்த திருப்தி...


சித்திரக்குள்ளனின் கதை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். (முன்பு ராணி கமிக்ஸ் இல் முகமூடி வீரர் மாயாவியின் கதையில் சித்திரக்குள்ளன் என்ற ஒரு கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள்.)

வாழ்த்துக்கள் மதுரையாரே..

மதி
26-09-2010, 02:00 PM
எந்திரன்.... நல்லா இருந்தது கதை.. அடுத்த கதையை தொடருங்கள்.. சித்திரக்குள்ளன் யாரென்று பார்ப்போம்..!!!

பாரதி
01-10-2010, 03:35 PM
முன்பு படித்தாலும், இறுதிப்பகுதியை எந்திரன் வெளியான நாளில்தான் படிக்க முடிந்தது. கதையை சட்டென முடித்ததாக உணர்கிறேன். வழக்கமான நகைச்சுவை இதில் இல்லை என்பதும் சற்றுக்குறையே. ஆனால் எல்லாவற்றையும் விட படைக்க வேண்டும் என்ற உங்களின் ஆர்வமும், தொடரும் திரிகளின் எண்ணிக்கையும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

மதுரை மைந்தன்
03-10-2010, 06:19 PM
முன்பு படித்தாலும், இறுதிப்பகுதியை எந்திரன் வெளியான நாளில்தான் படிக்க முடிந்தது. கதையை சட்டென முடித்ததாக உணர்கிறேன். வழக்கமான நகைச்சுவை இதில் இல்லை என்பதும் சற்றுக்குறையே. ஆனால் எல்லாவற்றையும் விட படைக்க வேண்டும் என்ற உங்களின் ஆர்வமும், தொடரும் திரிகளின் எண்ணிக்கையும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நேற்று எந்திரன் படத்தை பார்த்தேன். அதில் வரும் கருணாஸ், சந்தானம் காமெடியை விட என் கதையில் வரும் நகைச்சுவை நன்றாக இருக்கிறது. உங்களுடைய ஆதரவு தான் எனது பதிவுகளுக்கு உற்சாகத்தை தருகிறது. நன்றி.