PDA

View Full Version : தாய்மை.



ரங்கராஜன்
16-08-2010, 08:09 PM
wgrg3rw

அறிஞர்
16-08-2010, 10:33 PM
மனதில் கனத்தை ஏற்படுத்தும் கதை....
ஏமாற்றப்பட்ட அபலைகளின் வாழ்க்கையின் அவலம்.....
அவர்களும் பெண்கள் தானே.. தாய்மையின் உணர்வுகள்... பாவம் பச்சிளம் குழந்தைகள்...

கீதம்
16-08-2010, 10:38 PM
நாளிதழில் படிக்கும் துயரசம்பவத்தின் பின்னணியைக் கதையாக்கியவிதம் மனதை நெகிழ்த்துகிறது. தாய் படும் வேதனையை எழுத்துகளால் வர்ணித்தவிதம் அருமை. ஏனோ கதையாக இருந்தாலும் முடிவை ஏற்க மனம் மறுக்கிறது.

நிஜம் உறுத்தத்தானே செய்யும்? பாராட்டுகள், தக்ஸ். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள்.

Mano.G.
17-08-2010, 04:50 AM
ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினாள்,இல்லை இல்லை,
உலகத்தை விட்டே ஓடினாள்,
ஓடியும் விட்டாள்
பெயரோ நவீன நாகரீக
பெண்ணின் பெயர் லதா,
ஆனால் வறுமைக்கோ
நாகரீகமும் தெரியாது,
நவீனமும் தெரியாது,

அது தன் கடமையை செய்துவிட்டது,

உங்கள் தொழில் வாடை கொஞ்சம் மணக்கிரது
இந்த கதையில்
தம்பி தாக்ஸ்

வாழ்த்துக்கள்

பூமகள்
17-08-2010, 05:55 AM
தக்ஸ்..

ஏன் ஏன் ஏன்???

பத்து மாத குழந்தை சொல்லி நெஞ்சை வெடிக்க வைத்து விட்டாயே..

வேறு கதியே இல்லை என்பது போல் முடித்திருக்கும் பாங்கு எனக்கு ஜீரணிக்க முடியவில்லை.. பால் இன்றி உயிர் விடும் குழந்தை கண்டு ஓடி உதவ மனம் பதைக்கிறது. இக்கதையை பண்பட்டவர் பகுதிக்கு மாத்துங்க ப்ளீஸ்.. இக்கதையின் துயர் கனத்தை என்னால தாங்க முடியலை.. :frown::frown:

தக்ஸ்.. இந்த பின்னூட்டம் கண்டு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு மென் மனம்.. இக்கதை நிஜம் போலவே சுடுகிறது.. உதவ முடியாத இயலாமை கொல்கிறது..

வேண்டாம் தக்ஸ்... நிஜமானாலும்.. சில விசயங்கள் நம்மை வெகுவாக பாதிக்கும்.. இதுவும் அப்படித் தான். இக்கதை திடமானவங்களுக்கு மட்டும்னு முன்னெச்சரிக்கை செய்திருக்க வேண்டுமோ?? :eek::eek:

--

வேறு வழியே இல்லை என்பது போன்று தற்கொலை எண்ணங்கள் இது போல பலரும் மேற்கொள்கின்றனர். இக்கதையில் வரும் நிலை வந்தால் எவ்வாறெல்லாம் பிழைத்திருக்கலாம் என்று தீர்வு பற்றி பேசலாமே.. தாமரை அண்ணா அலசுவார் என்று நம்புகிறேன்.

தீர்வு நோக்கி சிந்திப்போமா??

ரங்கராஜன்
17-08-2010, 06:03 AM
மனதில் கனத்தை ஏற்படுத்தும் கதை....
ஏமாற்றப்பட்ட அபலைகளின் வாழ்க்கையின் அவலம்.....
அவர்களும் பெண்கள் தானே.. தாய்மையின் உணர்வுகள்... பாவம் பச்சிளம் குழந்தைகள்...

பின்னுட்டத்திற்கு நன்றி அறிஞர் அவர்களே.


நாளிதழில் படிக்கும் துயரசம்பவத்தின் பின்னணியைக் கதையாக்கியவிதம் மனதை நெகிழ்த்துகிறது. தாய் படும் வேதனையை எழுத்துகளால் வர்ணித்தவிதம் அருமை. ஏனோ கதையாக இருந்தாலும் முடிவை ஏற்க மனம் மறுக்கிறது.

.

அக்கா, நீங்கள் அந்த செய்தியை படித்தீர்களா....... நானும் படித்தேன், தொழில் ரீதியாக அனைத்தையும் அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. மனது உண்மையில் கனத்துப் போச்சு, அந்த செய்தியை அடிக்கும் போதே, என் கண்கள் தானாக குளமாகின.

இந்த முடிவை ஏற்க மனம் மறுக்கிறது என்று கூறினீர்கள், ஆனால் உண்மையான முடிவு அதைவிட பயங்கரமானது அக்கா, அந்த இரு குழந்தைகளும், அம்மாவின் துண்டு துண்டான பிணத்தை பிடித்துக் கொண்டு ரத்த சகதியில் ரொம்ப நேரம் இருந்து இருக்கிறார்கள். இப்போது மனோரீதியாக பாதிக்கப்பட்டு இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள், ........ அனாதைகளாக........ அதற்கு சாவே மேல்.



உங்கள் தொழில் வாடை கொஞ்சம் மணக்கிரது
இந்த கதையில்
தம்பி தாக்ஸ்

வாழ்த்துக்கள்

நன்றி அண்ணா, தொழிலின் வாடை வீசுகிறது என்ற சொல்லுக்கு எனக்கு சரியான அர்த்தம் புரியவில்லை, வாழ்த்துக்கு நன்றி

ரங்கராஜன்
17-08-2010, 06:14 AM
தக்ஸ்..

ஏன் ஏன் ஏன்???

பத்து மாத குழந்தை சொல்லி நெஞ்சை வெடிக்க வைத்து விட்டாயே..

வேறு கதியே இல்லை என்பது போல் முடித்திருக்கும் பாங்கு எனக்கு ஜீரணிக்க முடியவில்லை.. பால் இன்றி உயிர் விடும் குழந்தை கண்டு ஓடி உதவ மனம் பதைக்கிறது. இக்கதையை பண்பட்டவர் பகுதிக்கு மாத்துங்க ப்ளீஸ்.. இக்கதையின் துயர் கனத்தை என்னால தாங்க முடியலை.. :frown::frown:

தக்ஸ்.. இந்த பின்னூட்டம் கண்டு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு மென் மனம்.. இக்கதை நிஜம் போலவே சுடுகிறது.. உதவ முடியாத இயலாமை கொல்கிறது..

வேண்டாம் தக்ஸ்... நிஜமானாலும்.. சில விசயங்கள் நம்மை வெகுவாக பாதிக்கும்.. இதுவும் அப்படித் தான். இக்கதை திடமானவங்களுக்கு மட்டும்னு முன்னெச்சரிக்கை செய்திருக்க வேண்டுமோ?? :eek::eek:

--

வேறு வழியே இல்லை என்பது போன்று தற்கொலை எண்ணங்கள் இது போல பலரும் மேற்கொள்கின்றனர். இக்கதையில் வரும் நிலை வந்தால் எவ்வாறெல்லாம் பிழைத்திருக்கலாம் என்று தீர்வு பற்றி பேசலாமே.. தாமரை அண்ணா அலசுவார் என்று நம்புகிறேன்.

தீர்வு நோக்கி சிந்திப்போமா??


நன்றி பூ

இந்த கதை ஒரு உண்மை சம்பவம் தான், தொழில் நிமிர்த்தமாக தினமும் பல தற்கொலைகள் ,கொலைகளை பார்த்து என் மனம் மரத்து போய் விட்டது என்பது உன்னுடைய பின்னுட்டத்தை கண்டபின் தான் புரிந்துக் கொண்டேன். ஆனால் நான் எழுதி இருப்பது எல்லாம் பல சம்பவங்களின் கோர்வை பூ, தமிழ்நாட்டில் எதோ ஒரு மூலையில் இப்படி தினமும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை, கீதம் அக்காவை தவிர இங்கு பின்னூட்டம் ஈட்டவர்களுக்கு இந்த ரயில் சம்பவம் பற்றிகூட தெரிந்திருக்கவில்லை, சமீபத்தில் பேப்பரை படித்தவர்களின் மனதை சில நிமிடம் உறைய வைத்த செய்தி இது.

பல தாய்மார்கள் குழந்தைகளை தனியாக விட்டுப் போக மனம் இல்லாமல், தான் தங்களுடன் அழைத்து சென்று விடுகிறார்கள் கடவுளிடம். கீழே தான் கடவுள் இல்லை, அட்லீஸ்டு மேலேயாவது இருக்கானா என்று பார்க்க, ..........

வெளிமனிதனாக நீங்கள் பார்க்கும் போது தாயின் செயலில் மடைத்தனம் இருப்பதாக தெரியும், ஆனால் அந்த சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகளின் தாயாக இருந்து பார்த்தால் தான் அவளின் வேதனையும் தாய்மையும் புரியும்.

தற்கொலை என்பது கண்டிப்பாக தடுக்க வேண்டிய விஷயம் தான் ஆனால், லதாவை போன்ற பெண் என்றொ இறந்து விடுகிறார்கள், வேறு உடல் மட்டும் தான் மிஞ்சம் இருந்து இருக்கிறது.........சில நாட்கள் கழித்து அந்த உடலை விட்டும் தங்களை போக்கிக் கொள்கிறார்கள் அதுதான் தற்கொலை

தாமரை
17-08-2010, 07:05 AM
சமூகக் கட்டமைப்பு உருக்குலைந்து வருகிறது..

கடந்த சில நாட்களாகவே நான் கேள்விப்படும் சம்பவங்கள் இதைத்தான் உறுதி படுத்திக் கொண்டிருக்கிறது..

யோசித்துப் பார்க்கிறேன்.. ஒருகாலம் இருந்தது.

ஏழைகள் ஒதுக்குப் புறமாய் வசித்தாலும் கூட்டமாய் வசித்தார்கள். ஒன்றாய் உழைத்தார்கள்.. ஒன்றாய் உண்டார்கள் அல்லது பட்டினி கிடந்தார்கள்..

கூடப்பிறக்காத சகோதிரங்கள் அதிகம்.

ஊரோடு வாழ்ந்த காலங்கள் அவை. அனாதைகள் கூட வீடுகளில் எடுபிடி வேலைகள் செய்து ஜீவித்திருந்த காலம்.

ஏழைகளை ஏழைகளே கைவிட்டு விடும் காலம் இது..

மக்களாட்சிக்கு மாறி தவறு செய்து விட்டோமோ என எண்ண வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

கடமைகளை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போவோர் எல்லாம் சுகமாக இருக்கின்றனர்.

நம்பி ஏமாறுவோர் மட்டுமே இப்படி நாராகி விடுகிறார்கள்.

அடுத்த வீட்டில் பிரச்சனை என்றால் அந்தப் பக்கமே போகாதே எனச் சொல்லி பிள்ளைகளை வளர்க்க ஆரம்பித்து விட்டோம்.

மக்கள் அனைவரும் எதோ ஒன்றை தேடி வேகமாக ஒடிக் கொண்டே இருக்கிறார்கள், யாருக்கும் இவளை கண்டுக் கொள்ள நேரம் இல்லை.

இதுதான் யதார்த்தம். யாரோ ஒரு ஏஜெண்டுக்கு காசு கொடுத்து எங்கிருந்தோ வரும் முகம் தெரியாதவர்களை வேலைக்கு வைத்துக் கொள்கிறோம். ஆனால் நம் தெருக்கடைக் கோடியில் குடிசை மாதிரி ஒன்றில் வாழும் நாம் தினம் பார்த்த சபிக்கப்பட்டவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. அவ குடும்பம் அப்படி, நமக்கு எதற்கு வம்பு என்று..

சாக்கடை அடைத்துக் கொண்டால் பிரதம மந்திரி வரை திட்டித் தீர்க்கிறோமே தவிர, என்ன செய்தால் சரியாகும் என்று யோசிப்பது கூட இல்லை.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்பார்கள் ஒருகாலத்தில்.

இன்று சமுதாய விலக்காகி வருகிற மனிதர்கள் அதிகரித்து விட்டார்கள்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பதம் நிறமிழந்து அழிந்து கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பலரைச் சார்ந்திருக்கிறோம் என்பதை மறந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

இன்னொரு விஷயம் கூட..

சில சமயம் மனிதன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமா இருக்கு!!!.

மனதை பிசையும் கதையை எழுதிய தக்ஸிற்கு பாராட்டுகள்..

Nivas.T
17-08-2010, 07:26 AM
இந்தியாவை வல்லரசாக மாற்ற முயல்வோரை

இந்தியாவை முதன்மை நாடாக அறிவிக்க துடிப்போரை

இந்துபோன்ற உண்மை நிகழ்வுகளை மறைக்காதீர்
அதனை துடைக்க பாடுபடுங்கள்
என்று மன்றாடுகிறேன்

கொடுமையான வாழ்க்கை என்பதன் எடுத்துக்காட்டு இந்தக் கதை

அருமை நண்பர் தக்ஸ்க்கு நன்றி

ரங்கராஜன்
17-08-2010, 07:49 AM
இதுதான் யதார்த்தம். யாரோ ஒரு ஏஜெண்டுக்கு காசு கொடுத்து எங்கிருந்தோ வரும் முகம் தெரியாதவர்களை வேலைக்கு வைத்துக் கொள்கிறோம். ஆனால் நம் தெருக்கடைக் கோடியில் குடிசை மாதிரி ஒன்றில் வாழும் நாம் தினம் பார்த்த சபிக்கப்பட்டவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.

உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா, நீங்கள் மேலே குறி்ப்பிட்டது அருமையான வரி அண்ணா, உலகமே இப்பொழுது இப்படி தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது......

ரங்கராஜன்
17-08-2010, 07:52 AM
இந்தியாவை வல்லரசாக மாற்ற முயல்வோரை

இந்தியாவை முதன்மை நாடாக அறிவிக்க துடிப்போரை

இந்துபோன்ற உண்மை நிகழ்வுகளை மறைக்காதீர்
அதனை துடைக்க பாடுபடுங்கள்
என்று மன்றாடுகிறேன்

கொடுமையான வாழ்க்கை என்பதன் எடுத்துக்காட்டு இந்தக் கதை

அருமை நண்பர் தக்ஸ்க்கு நன்றி

நன்றி நண்பர் நிவாஸ், உண்மையில் இந்த வாழ்க்கைக்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருந்தாலும், உண்மையான தொடர்பு அவளை திருமணம் செய்து கொண்ட கணவனுக்கு தான் இருக்கிறது,,,,,,,,,, ஆகவே கணவன்கள் கொஞ்சம் திருந்தினாலே போதும், நினைத்துப் பாருங்கள்.... இதே நிலையில் கணவன் அவளுடன் இருந்தாள் கண்டிப்பாக லதா எந்த கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு உயிருடன் இருந்து இருப்பாள்.......

அமரன்
17-08-2010, 08:01 AM
இதுவும் மறந்து போவும்.

வாசகன் மனத்தில் கனத்தைக் கூட்ட கதையின் கனத்தில் அதிக கவனம் செலுத்து உள்ளீர்கள். தேக்கி வைச்ச அழுகையை திறந்துவிட்டிருக்கிறீர்கள். இப்ப உங்களுக்கு மனம் லேசாகி இருக்கும், கொஞ்சமேனும்.

இயன்றவரை மாற்ற முயல்வோம்.

பாராட்டுகள் தக்ஸ்.

ஆதவா
17-08-2010, 08:26 AM
சமூகக் கட்டமைப்பு உருக்குலைந்து வருகிறது..

கடந்த சில நாட்களாகவே நான் கேள்விப்படும் சம்பவங்கள் இதைத்தான் உறுதி படுத்திக் கொண்டிருக்கிறது..

..

இக்கதையைப் படித்தபிறகு இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

ஏலகிரி மலைக்கு சில மாதங்களுக்கு முன் சென்றிருந்த பொழுது, காலை நேரம் தேநீர் பருக நானும் எனது நண்பரும் தேநீர் பானக்கடையில் நின்றிருந்தோம். என்னருகே ஒரு சிறுமி, வயது பத்து இருக்கலாம். கருத்த மேனி, குளித்து பல மாதங்கள் இருக்கலாம். கையில் சில சில்லறைகளோடு பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்கு பிச்சையிடுவதில் எப்பொழுதும் இஷ்டம் இருந்ததேயில்லை. ஆனால் இப்படி யாசகம் கேட்பவர்களிடம் கதை மட்டும் கேட்டுவைப்பேன். அதன்படி, அவளது அம்மா நடக்கமுடியாதவள் என்றும், தந்தை உட்பட வேறெந்த உறவும் தமக்கில்லை என்றும் கூறினாள். அவளது அம்மாவை கைக்காட்டினாள், அவள் நடைபாதையில் அமர்ந்து கால்களை நீட்டியபடி இருந்தாள். மனம்கு(ழை)லைந்த நண்பன், ஐம்பது ரூபாய் கொடுத்து அச்சிறுமியை அனுப்பினான்... அடுத்தநாளோ, அல்லது அன்றோ திரும்பவும் அச்சிறுமியைக் காண நேர்ந்தது. அவளது அம்மாவும் அவளும் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்...

இது எதிர்பார்த்த விஷயம்தான். எனினும், கால்களை இழந்த தாய் என்று சொல்ல, மனம் குழைபவர்கள் சிலராவது இருக்கலாம். ஆனால் அது பொய் என்று தெரியும்பொழுது, உண்மையான வறுமை கூட பொய்மையாக்கப்படும்!!

இரண்டாவது,

தேனி மதுரை மாவட்ட பகுதியிலிருந்து கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு ஓடி வந்த பெண், ஆதரவற்ற நிலையில் திருப்பூரில் யாரையும் தெரியாமல் எப்படி வாழப்போகிறோம் என்று புரியாமல் பட்டினிகளையும், இம்சைகளையும் கடந்து, (கிட்டத்தட்ட இந்த கதையைப் போன்றே) கற்பையும் விலைக்கு விற்று..... பின்னர் பனியன் கம்பனிகளில் வேலைக்கு இணைந்து நல்லபடியாக வாழ்கிறாள். கற்பை இழந்தது என்பது தவறான பிரயோகம் இங்கே. ஏனெனில் அது உடல்சுகம் அன்று. வயிறுதாகம். அப்போதைக்கு அது தேவைப்பட்டது. தொடர்ந்து அது தேவையில்லை என்று தெரிந்தவுடன் உடல்விரிப்பதை நிறுத்திக் கொண்டு பனியன் கம்பனிகளில் வேலைக்குச் செல்கிறாள்.

இது தீர்வு. இது போன்று பல தீர்வு கண்டவர்கள் இருப்பார்கள். எனக்குத் தெரிந்த சம்பவங்கள் இவை!
எதற்கும் தீர்வு இருக்கும். அதைத் தேடுவரை கஷ்டம்தான் துணை!

Mano.G.
17-08-2010, 08:54 AM
நன்றி அண்ணா, தொழிலின் வாடை வீசுகிறது என்ற சொல்லுக்கு எனக்கு சரியான அர்த்தம் புரியவில்லை, வாழ்த்துக்கு நன்றி

இல்லை நான் இந்த கதையை
வாசிக்கும் பொழுது , கதாசிரியர்
ஒரு செய்திப்பிரிவு ஆசிரியர் எனும்
எண்ணத்தில் வாசித்ததால் வந்த
எண்ணமாக இருக்கும்மோ, (செய்தி வாசிப்பது போல்) தோன்றியது

தாமரை
17-08-2010, 09:19 AM
நீங்கள் சொல்ற மாதிரி பலவழிகள் இருக்கு

1. ஆதரவற்றோர் ஆசிரம்த்தில் சம்பளமின்றி பணி செய்தல்
2. தொழில் நகரங்களுக்கு இடம் பெயர்தல்
3. உறவினர் நண்பர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் நல்லுறவு பேணுதல்
4. இட்லி, பலகாரக் கடைகள், இட்லி மாவு தயாரித்தல்
5. அக்கம் பக்க வீட்டு / கடை வேலைகள்
6, கூலி வேலைகள்

இப்படி பல ஆதரவற்றோர் தங்களை வாழ்வித்துக் கொள்ள பல பக்கங்களிலும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பெண்கள், அதுவும் கொஞ்சம் வாழ்க்கையில் சொந்தங்களை உதறியவர்கள்..என்றால் கொஞ்சம் இளப்பமா பார்க்கிறவர்கள் அதிகம். ஒழுங்காய் வாழ்பவரையும் இடறி இடையூறு செய்யும் வல்லூறுகள் உண்டு.

மன உறுதி, இப்படி எல்லாம் வாழலாம் என்ற தெளிவு இதையெல்லாம் நாம் நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

சமூகத்திலே இணைந்திருந்தால், கூலி வேலை, 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம், தொழிற்சாலைகளில் வேலை இப்படி பல வாய்ப்புகள் உண்டு. சமுதாயத்தை தள்ளி வெளியே வரும்பொழுதுதான் பிரச்சனை பெரிதாகிறது.

காதல் என்று முடிவு செய்து தன் சமுதாயத்தை விட்டு வெளியே வரும் பெண் இரு விஷயங்களை உறுதி செய்யணும்

1. எப்படி காதலனுடன் வாழப்போறோம்? வாழ்க்கைக்கு என்ன ஆதாரம்?. நான் இப்படி ஓடிப்போனா பிறக்கும் குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம்?
2. காதலன் துரதிர்ஷ்டவசமா இல்லாமல் போனாலும் என்னால் வாழமுடியுமா?

இதையெல்லாம் விட்டுவிட்டு காதல். .அது எதையும் தாண்டி புனிதமானது அப்படின்னு சொல்லித் தகுதியில்லாத ஒருவனுக்காக அப்பா, அம்மா அண்ணன் தம்பிகளை தலை குனிய வைத்துவிட்டு, உறவை விரோதித்துக் கொண்டு போவது இருக்குதே.. அதாங்க கொடுமை..

ரங்கராஜன்
17-08-2010, 10:04 AM
நண்பர்கள் ஆதவா, தாமரை அண்ணா, உள்ளிட்ட பலருக்கு இந்த பதில் பொருந்தும்

தற்கொலை என்ற எண்ணம் ஒரு நிமிடத்தில் ஏற்படும் மாற்றம், வாழ்க்கையில் பார்க்க கூடாத வறுமையையும், ஏமாற்றத்தையும் பார்த்த மக்களின் கடைசி ஆயுதம். அவர்களுக்கு தாமரை போலவோ, ஆதவா போலவோ, சொந்தங்களோ, கணவர்களோ இருந்தால் இத்தகைய எண்ணம் அந்த பெண்களுக்கு வந்து இருக்காது.

மனம் வெறுத்த போன பின் நடைப்பிணமாக வாழும் பெண்கள் தங்கள் உயிரின் பாதியான குழந்ததையையே கொல்ல துணிந்த பின் அவர்களிடம் நம்பிக்கையையும், வேலை வாய்ப்பு திட்டங்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நம்புவது முட்டாள் தானம்.......... குறிப்பாக இன்றைய அரசியல் மற்றும் அரசு வரலாற்றில் காசு கொடுக்காமல் இத்தகைய வேலைகள் நிறைவேறும் என்று நினைப்பது அதை விட முட்டாள் தனம்.

என்னையும் சேர்த்து தான் பின் வரும் இந்த வாசகத்தை சொல்கிறேன் யாரும் தப்பாக தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்.

மூன்று வேளை கழுது முட்ட சாப்பிட்டு கருத்து பேசுபவர்களுக்கு இவர்கள் கஷ்டம் புரியாது. மன்றத்தில் எத்தனை பேர் மூன்றாள் முழுக்க சாப்பிடாமல் இருந்து இருப்பீர்கள். பசி தான் முதலில் அதுவும் குழந்தைகள் பட்டினியாக கடந்து மயக்கம் போடுகிற நிலையில் .............. தற்கொலையை தவிர வேறு வழியில்லை

நானும் தற்கொலைக் கொலைக்கு எதிரானவன் தான் பலமுறை முயற்சி செய்து இருக்கிறேன் என்ற தகுதியில் இதை கூறுகிறேன், ஆனால் ஒரு பெண்ணாக இருந்து அந்த கஷ்டத்தை அனுபவித்தாகவன் என்ற தகுதியில் இந்த கதையை எழுதியுள்ளன்

கதைக்கு விமர்சனம் எழுதிய ஆதவா, தாமரை அண்ணா உள்ளிட்டவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்

தாமரை
17-08-2010, 10:23 AM
தக்ஸ் தப்பா புரிஞ்சிகிட்டீங்க என நினைக்கிறேன்.

நல்ல சமுதாயத்தின் மத்தியில் வாழும் மக்களுக்குத்தான் நான் சொன்ன அத்தனையும் பொருந்தும்.

ஒரு பெண் ஒரு நல்ல சமுதாயத்தில் தனித்து இருந்தால் அதையெல்லாம் செய்யலாம் என்றுதான் சொன்னேன்.

உங்கள் கதையில் சொன்ன சூழ்நிலைகள் இதுக்கு முற்றிலும் பொருந்தாது.. இப்போதையச் சமூக சீர்குலைவும் அந்த நிலைக்குத்தான் நம்மை தள்ளிகிட்டு இருக்கு.

நான் மூன்று வேளை பட்டினி கிடந்துமிருக்கிறேன். தாத்தா சாவுக்கு போக பஸ்ஸூக்கு காசில்லாமல் 25 கிலோ மீட்டர் நடந்துமிருக்கிறோம். ஆனால் அப்பா - அம்மா - அண்ணன்கள் - அக்காக்கள் என அனைவரும் சேர்ந்து உழைத்த உழைப்பு - சூழ்நிலை இன்று உயர்ந்திருக்கிறோம்.

ஆனால் அந்த மாதிரி உறவுகள் வாய்க்காதவர்கள் நிலைதான் லதாவின் நிலை. அதனால் உங்கள் கதையை விமர்சிக்கலை. சமூகம் நல்ல சமூகமா இருந்தால் என்ற ஒரு அடிப்படையில்தான் எழுதினேன்.

லதா செய்த முடிவைப் பற்றி நான் எதையும் சொல்ல முடியலை. காரணம் எல்லாம் அளவுக்கு மீறிப் போய்விட்டது.. அவள் அப்படி செய்திருக்கணும் என்று சொல்வதில் அர்த்தமில்லை. இதே மாதிரி இன்னொன்று நடக்காம இருக்க என்ன செய்வது என்று மட்டும்தான் யோசிச்சேன்.

மூன்று முக்கிய விஷயங்கள்

1. சுயநலம் பாராமை.. பரந்த நோக்கம்..
2. குடும்ப ஒற்றுமை
3. சமூக ஈடுபாடு

இவை மூன்றும் மிக முக்கியமானவை. இவை மூன்றும் வளர்க்கப் படவேண்டும் என்று இந்தக் கதையின் மூலம் பாடம் படிக்கிறோம்.

சமூகத்தில் ஒரு கதையைக் கேட்கும் போது அதிலிருந்து நம் வாழ்க்கைக்கு என்ன எடுத்துக் கொள்கிறோம் என்பதை மட்டுமே நான் பார்ப்பேனே தவிர அந்த கேரக்டர் இப்படி செய்திருக்க வேண்டும் என்பதல்ல... இதை விமர்சனமா பார்க்காமல், கதையில் இருந்து நான் பெற்ற பாடம் என்று பார்க்கவும்..

பாரதி
17-08-2010, 12:38 PM
மனதைப் பிழியும் கதை.
இருப்பினும் எனக்கு இக்கதை பிடிக்கவில்லை.

சுடர்விழி
17-08-2010, 12:42 PM
மனதைப் பிழியும் கதை.
இருப்பினும் எனக்கு இக்கதை பிடிக்கவில்லை.

எனக்கும் தான்..என்ன தான் உண்மை சம்பத்தை தழுவியது என்றாலும்,இப்படி தற்கொலை முடிவு ரொம்ப கொடுமை...படித்து மனம் கனத்தது.

கலையரசி
17-08-2010, 01:08 PM
உண்மை சில நேரங்களில் சுடுகிறது. வாழ்வில் இல்லையாயினும் கதையில் நம் மனம் சுபமாக முடிவதையே விரும்புகிறது.
நோயுற்று வாடும் தன் கணவனின் வயிற்றுப்பசி தீர்க்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணின் கதையைப் பற்றிச் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார்.

அவரது இந்தப் பொன்னகரம் சிறுகதை மிகவும் புகழ்பெற்றது. அதில் புதுமைப்பித்தன் கேட்கிறார்:-
என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இது தான் ஐயா, பொன்னகரம்!”
இக்கதை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.
உங்கள் கதையில் தன் குழந்தையைக் காப்பாற்ற தன் மானத்தை விற்கத் துணிகிறாள். அதிலும் அவளுக்குத் தோல்வி. இறுதியில் வேறிவழியின்றி சாவை நாடுகிறாள்.
மனதைக் கனக்க வைத்த உண்மைச் சம்பவம். அதை கதையாக்கி மனதைக் கனக்கச் செய்து விட்டீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் தக்ஸ்!

ரங்கராஜன்
17-08-2010, 05:22 PM
தாமரை அண்ணா

நான் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை, நீங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது, ஆழமான கருத்து அது.

ரங்கராஜன்
17-08-2010, 05:23 PM
நன்றி பாரதி அண்ணா, மற்றும் சுடர்விழி

மனதில் பட்டதை அப்படியே தெரிவித்து இருக்கிறீர்கள் அதற்கு ஒரு சபாஷ்

அடுத்த முறை உங்கள் மனம் கவர்ந்த மாதிரி எழுத முயற்சிக்கிறேன்.

ரங்கராஜன்
17-08-2010, 05:24 PM
நன்றி கலையரசி

அந்த சிறுகதையை படித்ததில்லை, முடிந்தால் தேடி படிக்கிறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி

கீதம்
17-08-2010, 10:45 PM
இன்று படித்த செய்தி! அமெரிக்காவில் 29 வயதுப் பெண்மணி ஒருவர் வேலையில்லாப் பிரச்சனையாலும், வறுமையாலும் தன்னிரு மகன்களையும் (இரண்டு வயது மற்றும் 18 மாதக்குழந்தை)தன் கையாலேயே அவர்கள் கழுத்தை நெறித்துக் கொன்று இருவரையும் காருக்குள் வைத்து தண்ணீரில் தள்ளி விபத்து போல் ஒரு நாடகம் எற்பாடு செய்திருக்கிறார். அது கண்டுபிடிக்கப்பட்டு அத்தாய் (?) இப்போது காவலில்! அந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள், அவளுக்கு பிள்ளைகளாய்ப் பிறந்ததைத் தவிர? குழந்தைகளிடமிருந்து விடுபடவே இக்கொடிய காரியத்தைச் செய்ததாக அவள் ஒப்புக்கொண்டிருக்கிறாளாம்.

தக்ஸின் கதையில் உள்ளதுபோல் நம் நாட்டில் தான் செத்தாலும் பிள்ளைகள் சாகக்கூடாது என்று நினைக்கும் தாய்களையும், தான் செத்தபிறகு பிள்ளைகளின் கதி நிர்க்கதியாகிவிடக்கூடாது என்று தன்னுடனேயே அவர்களையும் அழைத்துச் செல்லும் தாய்களையும் அறிந்த நமக்கு இதுபோன்ற தாய்களும் உலகில் இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் சான்றுகளில் இதுவும் ஒன்று.

பா.ராஜேஷ்
29-08-2010, 03:13 PM
உண்மை சம்பவத்தை கண் முன்னே கொண்டு நிறுத்தியுள்ளீர்கள் தக்ஸ்... பாராட்டுக்கள்...

xavier_raja
30-08-2010, 12:02 PM
வாழ்கையில் எதிர்த்து போராடவேண்டும் என்பது போல் கதையை முடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. போராடுபவன் வெற்றி பெறுவான்.

Nivas.T
30-08-2010, 12:14 PM
நன்றி நண்பர் நிவாஸ், உண்மையில் இந்த வாழ்க்கைக்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருந்தாலும், உண்மையான தொடர்பு அவளை திருமணம் செய்து கொண்ட கணவனுக்கு தான் இருக்கிறது,,,,,,,,,, ஆகவே கணவன்கள் கொஞ்சம் திருந்தினாலே போதும், நினைத்துப் பாருங்கள்.... இதே நிலையில் கணவன் அவளுடன் இருந்தாள் கண்டிப்பாக லதா எந்த கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு உயிருடன் இருந்து இருப்பாள்.......

உண்மைதான் தக்ஸ், ஆனால் கணவன் கைவிட்ட பின்பும் போராடியவர்கள் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன், அவளின் அந்த முடிவிற்கு கணவன் மட்டும் காரணமல்ல, இந்த இறக்கம் கெட்ட வெறிபிடித்த மிருகங்கள் திரியும் சமூகம்தான் என்பது என் கருத்து.

பா.சங்கீதா
05-09-2010, 06:58 AM
பாராட்டுகள், தக்ஸ் அண்ணா:)