PDA

View Full Version : முத்தரப்பு போட்டி



அறிஞர்
16-08-2010, 01:58 PM
முத்தரப்பு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது...

இலங்கை, இந்தியா, நியூசிலாந்து ஒரு போட்டிகளைப் பற்று இங்கு அலசலாம்.

அறிஞர்
16-08-2010, 02:15 PM
அம்பயரின் தவறான முடிவால் இந்தியா தடுமாறுகிறது...

ரோகித் சர்மாவுக்கு தவறான அவுட்டை.... கொடுத்தார் பாகிஸ்தான் அம்பையர்.....

32-3/10.4 ஓவர்

Nivas.T
16-08-2010, 04:20 PM
இந்திய வெற்றி
ஊக்கப் புள்ளியுடன்
34 . 3 ஓவர்களுக்கு 171 / 4 எடுத்து அபார வெற்றி

சேவாக் விளாசல்

99 ஓட்டங்கள் (100 பந்துகளுக்கு)
11 - நான்கு
2 - ஆறு

மச்சான்
16-08-2010, 06:06 PM
இலங்கை சுழற் பந்துவீச்சாளர் ரந்தீவ் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாதவர்........!:sauer028: இந்தியா வெற்றி பெற ஒரு ரன் வேண்டும். அதே நேரம் வீரேந்திர சேவாக் 100 ரன் எடுத்து சென்சுரி அடிக்கவும் ஒரு ரன் வேண்டும். அந்த சூழ்நிலையில் வேண்டும் என்றே ரந்திவ் நோ பால் போட, அதன் காரணமாக கிடைத்த ஒரு ரன் மூலமாக இந்தியா வென்று விடுகிறது. ஆனால் அந்த பந்தில் சிக்ஸர் விளாசியும் சேவாக்கினால் 99 ஐ கடக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எப்படி இருந்தாலும் நமது டீம் தோற்பது நிச்சயம் தான். இருந்தாலும் சேவாக் சென்சுரி போடக்கூடாது என்பதில் சிங்களன் எவ்வளவு தெளிவாக இருக்கிறான் பாருங்கள்.....!:eek:

அறிஞர்
16-08-2010, 06:34 PM
போட்டி என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜமப்பா...

எப்படியோ போனஸ் புள்ளியுடன் இந்தியா வெற்றி பெற்றுவிட்டது

அமரன்
16-08-2010, 07:19 PM
வெற்றி உறுதி எனத் தெரிந்தும், சேவாக் அடித்தாடியதுக்குக் காரணம், போனஸ் பொயிண்டுக்குத்தானே தவிர சதமடிக்க வேண்டும் என்றில்லை. சதமடித்திருந்தால் அது போனசுக்கே போனசு.:lachen001:

aren
17-08-2010, 03:27 AM
நீயூஸிலாந்துக்கு எதிராக ஆடிய இந்திய ஆட்டத்தைப் பற்றியும் இங்கே அலசலாமே.

உதை வாங்கும்போது மட்டும் நம் மக்கள் இங்கே தலை வைத்து படுப்பதேயில்லை

Nivas.T
17-08-2010, 06:00 AM
ஒரு உதை வாங்காவிட்டால்
நம்ப ஆளுங்களுக்கு அலட்சியமும், திமிரும், தலைக்கனமும் வந்துவிடும் :mini023:

இப்படி உதை வாங்கினால் தான் மற்ற ஆட்டங்களை ஒழுங்கா விளையாடுவாங்க :icon_b:

மதி
17-08-2010, 08:25 AM
ரண்டிவ் தன் அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டதாக சேவாக் தன் டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்...!!

Nivas.T
17-08-2010, 08:44 AM
ரண்டிவ் தன் அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டதாக சேவாக் தன் டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்...!!

இன்னும் மீத ஆட்டங்கள் உண்டு அல்லவா?

மதி
17-08-2010, 09:12 AM
இன்னும் மீத ஆட்டங்கள் உண்டு அல்லவா?
:D:D:icon_ush::icon_ush:

xavier_raja
17-08-2010, 01:49 PM
sehwag ஒரு ரன் எடுத்தால் சதம் என்கிறபொழுது அந்த கயவர்கள் நடந்தது கொண்ட விதம் cricket அரங்கில் பலரின் முக சுளிபுக்கு ஆளாகவேண்டி இருந்தது.. இதை விட கேவலம் வேறொன்றுமில்லை..

அன்புரசிகன்
17-08-2010, 09:56 PM
sehwag ஒரு ரன் எடுத்தால் சதம் என்கிறபொழுது அந்த கயவர்கள் நடந்தது கொண்ட விதம் cricket அரங்கில் பலரின் முக சுளிபுக்கு ஆளாகவேண்டி இருந்தது.. இதை விட கேவலம் வேறொன்றுமில்லை..

இந்த நினைப்பு தவறானது. அறிஞர் சொன்னது போல் விளையாட்டு போட்டி என்று வந்துவிட்டால் சட்டரீதியாக எதுவும் செய்யலாம்.

2000ம் ஆண்டில் சார்ஜாவில் ஜெயசூரிய 189 ஓட்டங்களில் இருந்தபோது அகலப்பந்து வீசி ஆட்டமிழக்கச்செய்திருந்தனர். சட்டப்படி அந்த ஆட்டமிழப்பில் தவறில்லை. ஆனால் அது ஒரு நேர்மையான ஆட்டம் இல்லை தான்.

மிக முந்திய காலத்தில் டெஸ்ட் போட்டியில் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் (சரியாக நினைவில்லை) எடுக்க வேண்டும். நேராக போட்டால் வென்றுவிடுவார்கள் என்று பந்தை உருட்டி விடுவார் அந்த பந்துவீச்சாளர். அந்தக்காலத்தில் அந்த பந்து சட்டபூர்வமாக எடுக்கப்பட்டது. இப்படி விளையாட்டு வரலாற்றில் ஏராளம்.

100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்ததிலும் 99உடன் ஆட்டமிழக்காமல் வந்தது அவரது சராசரிப்புள்ளியை ஏற்றும் என்ற நல்ல எண்ணத்தில் பாருங்கள்.

aren
18-08-2010, 02:10 AM
ரந்தீவ் செய்ததில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்று சொல்லிக்கொள்ளும்போது இந்த மாதிரியாக நடந்துகொள்வது கொஞ்சம் தவறுதான்.

ஆனால் ரந்தீவ் இப்படி செய்து அனைவரையும் அவர் பக்கம் இழுத்திருக்கிறார். நெகடிவ் அட்வர்டைசிங் என்று சொல்வதுபோல்.

மச்சான்
18-08-2010, 02:15 AM
ரந்தீவ் செய்ததில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை
தான் செய்தது தவறு என்பதை உணர்ந்ததால்தான் சேவாக்கிடம் சென்று எல்லோர் முன்னிலையிலும் ரந்தீவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்ங்ணா.............!:cool:

aren
18-08-2010, 06:18 AM
தான் செய்தது தவறு என்பதை உணர்ந்ததால்தான் சேவாக்கிடம் சென்று எல்லோர் முன்னிலையிலும் ரந்தீவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்ங்ணா.............!:cool:

இந்த விஷயம் பெரியதாக ஆனதால் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் கிரிக்கெட்டில் இதைவிட மட்டமான விஷயங்கள் பல நடந்துள்ளன.

இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் ஒரு பந்து பாக்கி இருந்தது, இரண்டு ரன்கள் எடுக்கவேண்டும், கிரெக் சாப்பல் அப்பொழுது காப்டனாக இருந்தார், அவர் அவருடைய தம்பியான டிரவெர் சாப்பலை பந்தை உருட்டிப் போடுமாறு சொன்னார். அவர் ஓடிவந்து பந்தை உருட்டி விட்டார், இங்கிலாந்து ஆட்டக்காரர் இதை எதிர்பார்க்கவில்லை, அதனால் அதை அடிக்க முடியாமல் தினறினார். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் ரூல் படி இது தவறல்ல, ஆனால் இறையான்மைபடி இது ஒரு மட்டமான காரியம்.

ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

மச்சான்
18-08-2010, 08:22 AM
இந்த விஷயம் பெரியதாக ஆனதால் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
சரியாக சொன்னீங்ணா.....!

இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் ஒரு பந்து பாக்கி இருந்தது, இரண்டு ரன்கள் எடுக்கவேண்டும், கிரெக் சாப்பல் அப்பொழுது காப்டனாக இருந்தார், அவர் அவருடைய தம்பியான டிரவெர் சாப்பலை பந்தை உருட்டிப் போடுமாறு சொன்னார். அவர் ஓடிவந்து பந்தை உருட்டி விட்டார், இங்கிலாந்து ஆட்டக்காரர் இதை எதிர்பார்க்கவில்லை, அதனால் அதை அடிக்க முடியாமல் தினறினார். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் ரூல் படி இது தவறல்ல, ஆனால் இறையான்மைபடி இது ஒரு மட்டமான காரியம்.
அடப்பாவிங்களா......!! அப்படியா செஞ்சாங்க.....?:eek: ஜென்டில்மேன்கள் சில நேரங்களில் மென்டல்மேன்களாகி விடுகிறார்கள்.:)

ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
உட்கார வைக்கணும்.....! அவர் செய்த தவறுக்கு அதுதான் சரியான தீர்ப்பாகும்.

Nivas.T
18-08-2010, 08:32 AM
அடப்பாவிங்களா......!! அப்படியா செஞ்சாங்க.....?:eek: ஜென்டில்மேன்கள் சில நேரங்களில் மென்டல்மேன்களாகி விடுகிறார்கள்.:)



சிங்களர்களை விட மட்டமானவர்கள்
ஆஸ்த்ரேலியர்கள்

அதற்கு பல ஆட்டங்கள் சான்று

அமரன்
18-08-2010, 12:40 PM
ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

இதுக்காகத்தான் இந்தளவுக்குப் பெரிசாக்கிறாங்களோன்னும் தோணுது.

மச்சான்
19-08-2010, 12:00 PM
ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
நீங்க சொன்னாமாதிரி இன்றைய நியூசிலாந்துடன் நடக்கும் போட்டியில் ரந்தீவுக்கு விளையாட தடை விதிச்சிட்டாங்கள்ல.......! சரியான நடவடிக்கைதான் என ஐ சி சி யும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தை பாராட்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த யோசனையை ரந்தீவுக்கு சொன்ன தில்ஷானின் சம்பளப்பணத்தில் பாதியையும் எடுத்து விட்டார்கள்.

இனிமேலாவது திருந்தினால் சரிதான்.......!:eek:

Nivas.T
19-08-2010, 01:08 PM
அதற்க்கு முந்தைய பந்தில் வேண்டும்மென்றே பைஸ் விட்ட சங்ககராவுக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

Nivas.T
22-08-2010, 09:31 AM
கோலிக்கு பதிலாக யுவராஜ் சிங் சேர்ப்பு
டாஸ் வெற்றிபெற்று பேட்டிங் தேர்வு

கார்த்தி, சேவாக் தொடக்கம்

அமரன்
22-08-2010, 09:59 AM
தொடக்க ஆட்டக்காரர்களை குலெசேகரா கழட்ட சர்மாவும் யுவராஜும் தொடர்ந்தாட்டம்.

ஓவியன்
22-08-2010, 11:34 AM
யூவியும் போச்...!! :icon_ush:

அப்படியே இந்திய அணியின் வெற்றியும்..!! :eek:

அமரன்
22-08-2010, 12:01 PM
103 ஓலவுட்.

வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாட்டம்.

பெரெய்ரா 5 விக்கட்.

"பொத்தனூர்"பிரபு
22-08-2010, 12:02 PM
103/10

aren
23-08-2010, 01:41 AM
இந்த போட்டியைப் பற்றி அலசலாமா?

வெற்றி பெற்றால் மட்டுமே மக்கள் அதனை பாராட்டுகிறார்கள். தோற்றால் அதைப் பற்றி பேசுவதேயில்லை.

பந்து ஸ்விங் ஆனாலோ அல்லது நன்றாக எழும்பினாலோ நம் மக்களுக்கு ஆடத் தெரியவில்லை என்று இன்னொரு முறை அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோரை இனிமேல் இந்தியாவில் நடக்கும் மாட்சை கணக்கில் வைத்து எடுக்கக்கூடாது என்று தெரியவருகிறது.

தைரியமாக ஐபிஎல் போட்டியில் ஆடிய சவ்ரவ் திவாரிக்கு ஏன் சான்ஸ் கொடுக்கவில்லை என்று எனக்கு விளங்கவில்லை.

அடுத்த உலகக்கோப்பைக்கு பல நாடுகள் ஆயத்தமாகிவிட்டன, நம் இந்தியா இன்னும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறது.

தோனியின் தலைக்கு ஆபத்து என்றே தெரிகிறது.

ஓவியன்
23-08-2010, 05:41 AM
இந்தப் போட்டியையும் அலசலாமே அண்ணா, முன்பே நான் இந்த திரியில் குறிப்பிட்டது போல திவாரிக்கு வாய்ப்புக் கொடுத்திருக்க வேண்டும். ஷேவக்கை மட்டும் நம்பி எல்லா போட்டிகளிலும் விளையாட முடியாதே...

யுவராஜ் முன்னைய போட்டிகளில் எப்படி விளையாடியிருந்தாலும் நேற்று பொறுப்பாக ஆட முனைந்திருந்தார், மத்திய வரிசையில் யாராவது ஒருவர் அவருக்கு தோள் கொடுத்திருந்தாலும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

அணி வீரர்களில் வெற்றிக்கான முனைப்புத் தெரியவில்லை, அது தெரிய ஆரம்பித்தால் வெற்றி தானே வசப்படும்.

ஓவியன்
23-08-2010, 05:54 AM
தோனியின் தலைக்கு ஆபத்து என்றே தெரிகிறது.

தோனியை விட்டால் யாரைத் தலைவராக நியமிப்பது...??

ஷேவக் தலைவரானால் ஷேவக் அணி, தோனி அணி என இரு அணி இருப்பது இன்னமும் வலுப்படும், அது அணி ஒற்றுமையைக் குலைக்கும்...

கம்பீர் வந்தாலும் அது ஷேவக் அணிதான்..!! :D

ரெய்னாவுக்கு அனுபவம் போதாது...

யுவராஜ் அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கிறார்...

அதனால் தலைவரை மாற்றிக் கொண்டிராமல், நல்ல இளம் வீரர்களை அணிக்குள் உள்வாங்கி இதே தலைமையில் அணி ஒற்றுமையைப் பலப்படுத்துவதே நல்லது.

ஓவியன்
23-08-2010, 05:59 AM
ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோரை இனிமேல் இந்தியாவில் நடக்கும் மாட்சை கணக்கில் வைத்து எடுக்கக்கூடாது என்று தெரியவருகிறது.

தினேஸ் கார்த்திக்குக்கு பதில் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய நமன் ஓஜாவுக்கும், சர்மாவுக்கு பதில் சவுரவ் திவாரிக்கும் வாய்ப்பளித்துப் பார்க்கலாம்...

அமரன்
23-08-2010, 09:43 AM
உலகக்கோப்பை நடக்க இருப்பது ஆசியாவில். இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் தினேஸ் கார்த்திக் போன்றவர்களையும், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் நடக்கும் போட்டிகளில் சச்சின், காம்பீர் போன்றவர்களைக் கொண்ட அணியையும் களமிறக்கி இந்தியா கோப்பையை ஜெயிக்கும் பாருங்கள்.

அமரன்
23-08-2010, 09:50 AM
இந்தப் போட்டியின் இந்தியாவின் ஆட்டம் சிறப்பானதாக இல்லை என்றாலும் இலங்கையின் ஆட்டம் துடிப்பாக இருந்தது. திட்டமிடல், தீட்டல், ஒருங்கிணைதல், செயலாக்கல் என அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்கினர்.

ஸ்டம்புக்குப் பின்னால் நிற்பதும், திடீரென தூரமாக நிற்பதுமான சங்காவின் பாசைகளை பந்துவீச்சாளர் புரிந்து பந்து வீச, சுதாரிப்பதுக்குள் அனைவரும் சுருண்டு இந்தியா தோத்தது.

ஷேவாக், யுவராஜ் தவிட மற்ற எல்லாரும் அவுட்டானதைப் பார்த்து வெறுத்து விட்டேன். தோனியின் அவுட், அவருடைய பழைய அவுட்களின் அப்பட்டமான கொப்பி.


அண்மைய வெற்றி தோல்விகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் வெற்றி தோல்வி ஷேவாக்கிடம் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓவியன்
23-08-2010, 09:59 AM
அண்மைய வெற்றி தோல்விகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் வெற்றி தோல்வி ஷேவாக்கிடம் என்று எண்ணத் தோன்றுகிறது.

உண்மைதான் அமரன், ஷேவக்கின் விக்கெட் வீழ்ந்ததும் நண்பர் ஒருவரின் முகப்புப் புத்தக ஸ்டஸ் மெசேச் இப்படி இருந்தது....


Oh poor Viru, today no chance for 99,no ball and press meet ;)off spinners r always troubling him. That day Randiv and today Dharmasena

:D :D :D :D

ஓவியன்
23-08-2010, 10:01 AM
தினமலரின் செய்தியைப் பாருங்கள், முக்கியமாக செய்தியின் தலையங்கம்..!! :D:D:D

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6873&value3=I

அமரன்
23-08-2010, 10:10 AM
சரியாத்தானே சொல்லி இருக்காங்க ஓவியன்.

யுவராஜ்தானே நேற்று இந்திய அணி.

அவர் வெளியேற்றப்பட்டது முறையற்றது.

அப்ப, சரியாத்தான் மணம்விட்டிருக்கு தினமலர்

ஓவியன்
23-08-2010, 10:14 AM
அப்ப, சரியாத்தான் மணம்விட்டிருக்கு தினமலர்

ஆமா, சரியாகத்தான் சொல்லி இருக்காங்க, அதனால் தான் பல்லை இளிக்க வேண்டியதாயிற்று...!! :D

ஏனென்றால் நானும் இலங்கையில் பிறந்தவனாச்சே..!! :lachen001:

மச்சான்
23-08-2010, 12:53 PM
103- க்கு ஆல்அவுட்....! 15 - ஓவர்களிலேயே அந்த இலக்கை இலங்கை அணி அடைந்து வெற்றி....! இப்படி ஒரு சம்மட்டி அடி இந்திய அணிக்குத் தேவைதான்.....! ஒரு அடி வாங்கினால்தான் அடுத்த போட்டியில் வீறு கொண்டு எழுந்து விளையாடுவார்கள். இதுதான் காலாகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. புதிய உத்வேகத்துடன் விளையாடி, நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் நிச்சயம் கோப்பை இந்தியாவுக்குத்தான்....! இதுவரை இந்த திரியில் ஓட்டுப்போட்ட 11 பேரில் மெஜாரிட்டி ஓட்டு இந்தியாவுக்கு சாதகமாகத்தான் விழுந்திருக்கிறது. அதனை இந்திய அணி பொய்ப்பிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

இந்திய அணி தோற்றதற்கு முக்கிய காரணம் ஒன்றையும் நாம் மறக்கக் கூடாது....! இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா, மகிழா ஜெயவர்த்தனே, தில்ஷான் இவர்களுடன் சமகாலத்தில் விளையாடியவர்தான் குமார் தர்மசேனா....! இவர்தான் ஐசிசி -யால் நியமிக்கப்பட்ட இப்போட்டியின் நடுவர்களில் ஒருவர்....! நான்கு இந்திய பேட்ஸ்மேன்களை தன் தவறான தீர்ப்பின் மூலம் அவுட் கொடுத்து பெவிலியனுக்கு அனுப்பி விட்டார். அதன் மூலம் தன் தேசப்பற்றை சரியான நேரத்தில் காட்டியும் விட்டார்.....! காரணம், இந்த போட்டியில் இலங்கை அணி ஜெயிக்காவிட்டால் போட்டியிலிருந்தே வெளியேற வேண்டியதுதான் என்பது அவருக்கும் தெரியாதா....? நான்கு முக்கிய பேட்ஸ்மேன்களை அநியாயத்துக்கு அவுட்டாக்கினால், எந்த ஒரு பெரிய டீமும் கூட திணறித்தான் போகும். அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதை யாராலும் மறுக்க இயலாது.

இவர் நடுவர் தொழிலை விட்டுப்போட்டு இலங்கை அணியில் சேர்ந்தே விளையாடி இருக்கலாமே.....? வாழ்க குமார் தர்மசேனா....! வளர்க உமது நடுவர் பணி.....!! ஓங்குக உமது நாட்டுப்பற்று.....!!!:sauer028:


.

Nivas.T
23-08-2010, 01:27 PM
இவர் நடுவர் தொழிலை விட்டுப்போட்டு இலங்கை அணியில் சேர்ந்தே விளையாடி இருக்கலாமே.....? வாழ்க குமார் தர்மசேனா....! வளர்க உமது நடுவர் பணி.....!! ஓங்குக உமது நாட்டுப்பற்று.....!!!:sauer028:
.

நடுவர்கள் தவறான தீர்ப்பால்
இந்திய அணி பாதிக்கப்படுவது இது முதல் தடவை அல்ல

ஓவியன்
25-08-2010, 09:01 AM
ரோஹித் சர்மாவுக்கு பதில் கோலியும் ஓஜாவுக்குப் பதில் முனாவ் பட்டேலும் இன்றைய போட்டியில் இந்திய அணியில் விளையாடுகிறார்கள்...

இன்றைய போட்டியிலும் திவாரியும் அஸ்வினும் உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்க்கப் போகிறார்கள்...!!;)

ஓவியன்
25-08-2010, 09:05 AM
மில்ஸின் முதலாவது பந்து பரிமாற்றத்தின் மூன்றாவது பந்தில் கார்த்திக் பிடி கொடுத்து வெளியேறுகிறார் :sport009:...

சூரியன்
25-08-2010, 09:08 AM
இந்தியா 3 ரன்னுக்கு 1 விக்கெட்.

சூரியன்
25-08-2010, 09:15 AM
மூன்று ஓவர்களுக்கு 8ரன் .

அமரன்
25-08-2010, 09:48 AM
சேவாக் ஆடுறார்ப்பா...

அவரு ஆடினாத்தான் உண்டு என்ற நிலைதானோ இன்னும்..

பாக்கலாம்.

ஓவியன்
25-08-2010, 09:50 AM
சேவாக் ஆடுறார்ப்பா...

அவரு ஆடினாத்தான் உண்டு என்ற நிலைதானோ இன்னும்..

பாக்கலாம்.

அவரு ஆடினாத்தான் நியூசிலாந்து ஆட்டம் காணும்..!! :D

ஓவியன்
25-08-2010, 09:58 AM
யூவி போச்..!! :icon_ush:

அமரன்
25-08-2010, 10:11 AM
ரைனாவும்...

அன்புரசிகன்
25-08-2010, 11:12 AM
சேவாக் 100 (87) தோனி 31 (60) இந்தியா 162-4

ஓவியன்
25-08-2010, 11:17 AM
இந்திய அணியின் அண்மைக்கால ஆபத்தாண்டவர் ஷேவக் தான்...!! :)

மச்சான்
25-08-2010, 12:45 PM
46.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் -அவுட் ஆனது. இதில் ஷேவாக் 110 ரன்கள் விளாசினார். இரண்டாவது பெரிய ஸ்கோராக கேப்டன் தோனி எடுத்த 38 ரன்கள்.....! மூன்றாவதாக வந்த முக்கிய பேட்ஸ்மேனின் பெயர் எக்ஸ்ட்ரா....!! அவர் எடுத்தது 22 ரன்கள்......!:lachen001:

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 01:59 PM
28/4 , 11.2 ஒவர்

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 02:17 PM
பிரவின் , நெக்ரா சிறப்பாக visukioraarkaL

அமரன்
25-08-2010, 02:19 PM
வில்லியம்ஸண் தனது நான்காவது சர்வதேசப் போட்டியில் முதல் ஓட்டம் எடுத்தார். முதலிரண்டு போட்டிகளில் எதிரணிப் பந்து வீச்சில்ல் ஓட்டமெடுத்த இவர் மூன்றாவது போட்டியில் துடுப்பெடுத்தாட இல்லை.

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 02:21 PM
41/5 , 16 ஒவர்

அமரன்
25-08-2010, 02:26 PM
42/6...

Nivas.T
25-08-2010, 02:29 PM
பிரவீன் குமார் -3
நெஹரா - 1
இசாந்த் சர்மா - 1
முனாப் பட்டேல் - 1

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 02:45 PM
52/7...
பிரவீன் குமார் -3
நெஹரா - 1
இசாந்த் சர்மா - 1
முனாப் பட்டேல் - 2

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 02:49 PM
86 க்குள் ஆட்டம் இழக்குமா?

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 02:53 PM
53/8...
பிரவீன் குமார் -3
நெஹரா - 1
இசாந்த் சர்மா - 1
முனாப் பட்டேல் - 3

அமரன்
25-08-2010, 02:54 PM
பழிக்குப் பழி வண்ணமா.

Nivas.T
25-08-2010, 02:54 PM
53/8....

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 02:55 PM
முனாப் பட்டேல் - 3
மொத்தத்தில் 50 விக்கெட் 44 போட்டியில்
(இன்று சர்மாவும் 44(61வி),பிரவினும் 44(52 வி)

Nivas.T
25-08-2010, 02:56 PM
பழிக்குப் பழி வண்ணமா.

:D

இன்னும் ஒரு பழி பாக்கி

அது இறுதி ஆட்டத்தில்

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 02:59 PM
4 4 4.............ஹாஆஆஆஆஆ
70/8

Nivas.T
25-08-2010, 03:04 PM
ஆஹா வட போச்சே?

:eek: 80/9

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 03:04 PM
80/9..
ஜடெஜா 1

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 03:10 PM
ஆஹா வட போச்சே?

:eek: 88/9
_________

Nivas.T
25-08-2010, 03:17 PM
111/9

மில்ஸ் - 48 (28 பந்துகளில்)
:eek:

சூரியன்
25-08-2010, 03:25 PM
NZ 112/9 in 28 Overs.

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 03:28 PM
ஆஹா வட போச்சே?
116/9
மில்ஸ் 51*

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 03:32 PM
118 / 10

"பொத்தனூர்"பிரபு
25-08-2010, 03:34 PM
அப்பாடா........

சூரியன்
25-08-2010, 03:34 PM
105ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

Nivas.T
25-08-2010, 03:58 PM
105ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

அது 153 ஆ இருக்கணும் :redface: :mad:

பரவால்ல இறுதி ஆட்டம் இருக்குல்ல? :icon_b:

சூரியன்
25-08-2010, 04:05 PM
பொறுத்திருந்துதான் பார்க்கனும் என்ன நடக்கும்னு. :cool:

கஜினி
25-08-2010, 05:42 PM
எப்படியோ ஜெயிச்சுட்டாங்க. அது போதும் சேவாக்கிற்கு வாழ்த்துக்கள்

aren
26-08-2010, 02:38 AM
இறுதிப் போட்டிக்கு சுவுரவ் திவாரியை கொண்டு வருவார்களா?

கார்த்திக் அல்லது விராத் கோஹலியை உட்கார வைத்துவிட்டு திவாரியை இறக்கலாம்.

ஜடேஜா மட்டையாளரா அல்லது பந்து வீச்சாளரா என்று தெரியவில்லை. இரண்டிலுமே ஒன்னும் சோபிக்கவில்லை. அதற்கு பதில் ஒரு முழு பந்துவீச்சாளரை களத்தில் இறக்கலாம். அஸ்வினை உள்ளே கொண்டுவரலாம் என்பது என் கருத்து.

ஒன்று தெரிகிறது. பந்து எழும்பினாலோ அல்லது ஸ்விங் ஆனோலோ நம்ம விளையாட்டாளர்களுக்கு ஆடத் தெரியவில்லை என்று மறுபடியும் நிரூபித்துவிட்டார்கள். கஷ்டம்!!!!!

மச்சான்
26-08-2010, 07:03 AM
புதிய உத்வேகத்துடன் விளையாடி, நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் நிச்சயம் கோப்பை இந்தியாவுக்குத்தான்....! இதுவரை இந்த திரியில் ஓட்டுப்போட்ட 11 பேரில் மெஜாரிட்டி ஓட்டு இந்தியாவுக்கு சாதகமாகத்தான் விழுந்திருக்கிறது. அதனை இந்திய அணி பொய்ப்பிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
நியூசிலாந்தை வென்றதன் மூலம் நான் சொன்னதில் பாதியை நிறைவேற்றி விட்டார்கள். மீதி பாதியை நிறைவேற்றுவார்களா....? பொறுத்திருந்து பார்ப்போம்.............!;)

அறிஞர்
26-08-2010, 01:57 PM
நல்ல விறுவிறுப்பான ஆட்டம்..

இறுதியில் இலங்கைக்கு... வாய்ப்பு அதிகம்.

Nivas.T
28-08-2010, 10:28 AM
இலங்கை 108/0 (17 ஓவர்கள்)

சிறப்பான துவக்கம்
பலமான அடித்தளம்

Nivas.T
28-08-2010, 12:39 PM
இலங்கை 268/6
(46 ஓவர்கள்)

Nivas.T
28-08-2010, 12:58 PM
இலங்கை 299/8 (50.0 ஓவர்கள்)

அமரன்
28-08-2010, 12:58 PM
இந்தியாவுக்கு ஓட்ட இலக்கு 300.

சேவாக், கார்த்திக், கோலி, சர்மா, யுவ்ராஜ், ரைனா, தோனி என ஏழு மட்டையாளர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியா எட்டுமா இலக்கை.

எட்டும் என்றே நம்புகிறேன். விரும்புகிறேன்.

மதி
28-08-2010, 12:59 PM
இலங்கை 299/8..

பார்க்கலாம்...:confused::confused:

மதி
28-08-2010, 01:00 PM
இந்தியாவுக்கு ஓட்ட இலக்கு 300.

ஏழு மட்டை வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியா எட்டுமா இலக்கை.

எட்டும் என்றே நம்புகிறேன். விரும்புகிறேன்.
ஒருவேளை எட்டு மட்டையாளர்களுடன் இறங்கினால் எட்டுவதில் சிரமமிருக்காதோ??:icon_b:

கஜினி
28-08-2010, 01:13 PM
ஆட்டம் நினைத்த அளவிற்கு பரபரப்பாக இருக்காதென்றே தோன்றுகிறது. ஆனாலும் இந்தியா வெல்வதற்கு குறைவாகவே வாய்ப்பிருக்கிறது.

அன்புரசிகன்
28-08-2010, 01:43 PM
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் களத்தில். 100 அடித்தால் நிச்சயம் வெற்றி ... பார்க்கலாம். முதலாவது ஓவரிலேயே கார்த்திக் சென்றுிட்டார். பார்க்கலாம்.

அன்புரசிகன்
28-08-2010, 01:49 PM
சேவாக் LBW கேட்டு ஓடிக்கொண்டிருக்கும் போது ரன் அவுட்... யுவி இறங்கியிருக்கார்.

Nivas.T
28-08-2010, 02:07 PM
ஆட்டம் நினைத்த அளவிற்கு பரபரப்பாக இருக்காதென்றே தோன்றுகிறது. ஆனாலும் இந்தியா வெல்வதற்கு குறைவாகவே வாய்ப்பிருக்கிறது.

ஏஏஏஏஏ...................ன்?:icon_hmm:

அன்புரசிகன்
28-08-2010, 02:36 PM
2 தடவை நடுவரின் தவறான தீர்ப்பில் தப்பிய யுவி சிறப்பாக ஆடினாலும் பெரேராவின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்துவிட்டான். அணித்தலைவர் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் கோலி உடன் ஆட வந்துகொண்டிருக்கிறார்.

"பொத்தனூர்"பிரபு
28-08-2010, 03:05 PM
111/4 (21.6 ov)

Nivas.T
28-08-2010, 03:11 PM
கோலி இப்ப காலி

122/4

"பொத்தனூர்"பிரபு
28-08-2010, 03:42 PM
159/5 (31 ov)

"பொத்தனூர்"பிரபு
28-08-2010, 04:03 PM
182/6,,,, 36 ov

கஜினி
28-08-2010, 04:57 PM
ஏஏஏஏஏ...................ன்?:icon_hmm:

உண்மை பல நேரங்களில் கசக்கத்தான் செய்யும்.

Nivas.T
28-08-2010, 05:06 PM
உண்மை பல நேரங்களில் கசக்கத்தான் செய்யும்.

:):D:D

அமரன்
28-08-2010, 08:53 PM
முன்பு தோற்கும் போது நடுவர் தர்மசேனாவின் நாட்டுப்பற்று என்று சுயதேற்றல் கொண்டோம். இன்று, நடுவர்கள் இருவரும் உதவியும் வெற்றி கொள்ள முடியவில்லை. போராடித்தானே தோற்றோம், மோசமாகத் தோற்கவில்லை என்று இன்றும் நம்மை நாமே தேற்றுவோம்.

இந்தியாவிடம் இல்லாத எது இலங்கையிடம் இருந்தது.

இந்தியாவுக்கு நிகரான எதிர்பார்க்கத்தக்க திறனுடைய துடுப்பாட்ட வரிசை இல்லாத போதும் நம்பத்தக்க வகையில் துடுப்பாட்ட வரிசை கடைசி வரை இருந்தது.

மேத்யூ, பெரெரா, ரந்திவ் போன்ற சகலதுறை ஆட்டக்காரர்கள் அணியில் இருந்தமை நெருக்கடியான நிலையை இலங்கைக்குக் கொடுக்கவில்லை.

பந்துவீச்சாளர்கள் பொறுப்புணர்ந்து பந்து வீசியமை.

இந்த ஆட்டக்காரருக்கு இந்த பந்து வீச்சாளர் நெருக்கடி கொடுப்பார் எனக் கணித்த தலைமை. அதனை பிசகின்றிச் செயற்படுத்திய மேலாண்மை.

அன்புரசிகன்
28-08-2010, 11:51 PM
நேற்று விளையாட்டுவீரர்களிலும் நடுவர்கள் நன்றாகவே தடுமாறினார்கள். கார்த்திக் அவுட் அல்ல. ஆனால் கொடுத்துவிட்டார். சேவாக்கிற்கு கேட்க்க கொடுக்கவில்லை. ஆனால் அவரே ரன்னவுட்டுக்கு வழிவிட்டுக்கொடுத்தார். யுவி 2 தடவை தப்பினார். நான் நினைத்தது அவருக்கு இன்று நல்ல காலம் என... பெரேராவின் பந்துக்க தேவையற்ற விதத்தில் மட்டையை காட்டி ஆட்டமிழந்தார்.

நேற்று ஆரம்ப ஆட்டக்காரர்கள் சற்றே எழுந்துவரும் பந்துகளை விலத்தியே விட்டார்கள். ஆனால் எட்டாத பந்துக்கு மட்டையை காட்டி ஆட்டமிழந்தார்கள். அனுபவ ஆட்டக்காரர்கள் போல் தோன்றவில்லை...

தோனி நிதானமா ஆடினார். எந்த பந்தையும் தூக்கி அடிக்கவில்லை. மட்டை அடிதான்.

மச்சான்
29-08-2010, 08:46 AM
டாஸ் ஜெயித்து யார் முதலில் பேட் செய்கிறார்களோ.... அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என இரு அணி தலைவர்களும் போட்டி துவங்குவதற்கு முன்னரே அடித்து ஆணித்தரமாக ஆரூடம் சொல்லி விட்டார்கள். மின்விளக்கொளியில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் எனவும் தெரிவித்திருந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் போட்டியை ஏன் இரவு பகல் ஆட்டமாக நடத்த வேண்டும்.....? பகல் ஆட்டமாகவே நடத்தியிருக்கலாமே....?