PDA

View Full Version : தவிப்பில் எனை ஈர்க்கும் மழையே!!!!!!!!!!!!



Nivas.T
15-08-2010, 08:05 AM
சில்லெனக் காற்றுச் சிலிர்க்க
மெல்லென மேகம் துளிர்க்க
வில்லென வானம் விரிக்க
அம்பென மழைதான் தெறிக்க
முதல் துளி முகத்தில் விழ
பல துளிகளோ நிலத்தில் விழ
எழும்பியது மண் வாசம்
நிரம்பியது என் சுவாசம்
வாடை காற்று வீசும்
இயற்கை என்னோடு பேசும்
மெல்ல துளிகளை பெருக்கும்
அவை சேர்ந்து என்னைக் கரைக்கும்
மனதில் மகிழ்ச்சியை நிறைக்கும்
பூக்களும் என்னோடு தளிர்க்கும்
மதியின் நிலையோ மறக்கும்
மனமோ காற்றில் பறக்கும்
திசையோ முற்றும் திறக்கும்
இசையோ செவியை நிறைக்கும்
பறவைகள் விண்ணில் பறக்கும்
உடல்மட்டும் என்னில் இருக்கும்
என்மேல் துளிகளைக் கோர்க்கும்
என்னைத் தழுவித் தீர்க்கும்
விண்மேல் கொண்டு சேர்க்கும்
தவிப்பில் எனை ஈர்க்கும் மழையே!!!!!!!!!!!!

அமரன்
15-08-2010, 09:59 AM
மதியின் நிலையோ மறக்கும்

மதியின் நிலை மறக்கடிக்கும் மழை
ஈர்ப்பான மழைதான்.

சொல்லடுக்குப் பிரமாதம்.

அடுக்கும் விதத்திலும் கவனம் காட்டினால் இன்னும் பிரமாதம்.

பாராட்டுகள்.

இனி மேல் திரு.அமரன் அவர்களே என்றால் மழைக்கு தடை போட்டுடுவேன்.:redface:

Nivas.T
15-08-2010, 10:28 AM
மதியின் நிலை மறக்கடிக்கும் மழை
ஈர்ப்பான மழைதான்.

சொல்லடுக்குப் பிரமாதம்.

அடுக்கும் விதத்திலும் கவனம் காட்டினால் இன்னும் பிரமாதம்.

பாராட்டுகள்.

இனி மேல் திரு.அமரன் அவர்களே என்றால் மழைக்கு தடை போட்டுடுவேன்.:redface:

:confused:

சரி அமர் அண்ணா, இனி உங்களை அண்ணா என்று அழைக்கலாம் அல்லவா? :icon_b: