PDA

View Full Version : I AM BACK?



அமரன்
13-08-2010, 07:28 PM
அன்பர்களே..

இதை எழுதலாமா வேண்டாமா என்று பலத்த போராட்டம், சில நாட்களாக.. வேண்டாம் என்ற பக்கம் போகப் பல வலுவான காரணங்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று எழுது என்று கட்டளை இட்டது. இன்னது என்று தெரியாத அதுவே இத்தால் விளையும் அனைத்தும் காரணம்.



கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சூழ்ந்து கொண்ட சூன்யம் அண்மையில்தான் விலகியதாகத் தெரிகிறது.

அதென்ன கடந்த ஆண்டு மார்ச் மாதம்? என்ற கேள்வி உங்களைப் போலவே எனக்கும் எழுகிறது. பதில்தான் தெரியவில்லை. ஆனால் மேலே சொன்னது உண்மை என்பதில் உறுதியாக உள்ளேன். ஏனெனில் மார்ச் மாதத்துக்கு முந்திய மன்றப் பதிவுகள் பல செந்தனற் பூக்களாக நெஞ்சில் நிற்க அதுக்குப் பிந்திய மன்றம் கண்ட பதிவுகள் எதுவும் மனசில் பதியவில்லை. இத்தனைக்கும் சில பதிப்புகளைத் தவிர அத்தனையும் படித்திருக்கிறேன். இதைப் படித்திருக்கிறேனா என்பதைக் கூட படித்தவர் பட்டியலைப் பார்த்து அறிந்து கொள்ளும் நிலையில் கடந்த 17 மாதங்கள் இருந்திருக்கிறேன் என்பது நானே வியக்கும் உண்மை.

அதுக்காக நான் அபாரமான ஞாபகத் திறன் கொண்டவன் என்று அர்த்தமல்ல. ஏதோ ஒரு அளவுக்கு ஞாபக ஆற்றல் கொண்டவன் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மன்றத்தின் பதிவுகள் மட்டுமல்லாது, பார்த்த திரைப்படங்களும் மறந்து விட்டிருந்தன. இன்ன காட்சி இன்ன படத்தில் என்று அச்சொட்டாகச் சொல்லும் திறனையும் எங்கோ தொலைத்திருந்தேன். நடந்து முடிந்த நிகழ்வுகள் சிலதை, நடத்தி முடித்த நிகழ்ச்சிகள் சிலதை, எப்படி நடந்தது, எப்படி நடத்தினேன் என்று கூடத் தெரியாமல் இருக்கிறேன்.

ஏன்.....?

இந்தக் கேள்வியின் விடையும் வெறுமையாகத்தான் கிடக்கிறது. அந்த வெறுமைக்குள் நுழைந்து வெறுமையை விரட்ட முயன்றபோது, குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சில அசம்பாவிதங்களும் சந்தித்த பிரச்சினைகள் சிலவும் மங்கலாகத் தெரிகின்றன. ஆனால், அவை முற்றும் முடிந்திடவில்லை. ஜூலைக் கடைசியில் கூட உச்சமேறி மிச்சம் இருக்கின்றன, அப்படியே....

அப்படி இருக்க இப்ப கொஞ்ச நாளாக பழைய நிலைக்கு திரும்பியதாக எண்ணம். முன்பிருந்த என்னை எனக்குள் கண்டு பிடித்து மீட்டெடுத்து வந்ததாக உணர்வு. இதுக்கான மூலம் என்ன மாயம் என்பது இந்நொடி வரைக்கும் புரியவில்லை.

ஒரு வேளை, பிரச்சினைகளுக்குள் உள்நுழைந்து உலகத்தைப் பார்க்கும் தாமரை அண்ணா சொல்லும் நிலையை அடைந்து விட்டேனோ?

அறிஞர்
13-08-2010, 10:07 PM
மீண்டு வந்த அமரனின் இலக்கிய பதிவுகள் மன்றம் எங்கும் ஆக்கிரமிக்கட்டும். நல்ல நிலையில் உம் வாழ்வு செழிக்க வாழ்த்துக்கள்.

govindh
13-08-2010, 10:32 PM
குன்றளவு குழப்பங்கள்...
குண்டுமணியளவு கூட இல்லாமல் குறையட்டும்...!

விரும்பாத விவகாரங்கள்
விட்டு விலகி மறையட்டும்...!

மகிழ்வான மன நிலை அமையட்டும்...
மன்றப் பதிவுகள் பெருகட்டும்...!

அன்புரசிகன்
14-08-2010, 12:55 AM
விலகியதாக அறிவதே மீள ஞாபகப்படுத்தும் என்று நினைப்பவன் நான். பிரச்சனைகள் வரும் போது வேறு விடையங்களில் நம்மை பழுவாக வைத்திருப்பதே சிறந்த மருந்து... நான் 4 வருடங்களாக மத்தியகிழக்கில் உழைத்த அனைத்து வருமானமும் ஓரிடம் கொடுத்து தொலைத்து மீழ 2006ம் ஆண்டில் எந்த நிலையில் இருந்தேனோ அவ்வாறு தான் 2010ம் ஆண்டு இருந்தேன். சில ஒருவாரம் என்ன செய்வதென்று அறியாது இருந்தேன். அதுவும் ஒரு நல்ல அனுபவம். பல பாடங்களை கற்பித்துவிட்டுள்ளது...

நீங்கள் திரும்ப பழைய நிலைக்கு வந்ததோடு நின்றுவிடாது கலக்குங்கள்..... வாழ்த்துக்கள்....

மதி
14-08-2010, 02:00 AM
ஏதேனும் சில காரணங்களால் அந்த நிலை ஏற்படுவது உண்மை தான்.. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எனக்கும் அந்த நிலை இருந்தது. இப்போது அதுவும் கடந்து விட்டதாகவே அறிகிறேன்.. வாங்க... எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிக்கிட்டே இருங்க..

ஆதவா
16-08-2010, 05:10 AM
சரிவர நான் வருவதில்லையாதலால் எனக்கு சரியான நிலவரம் தெரியாது!! எனினும்.... தொடர்ந்து எழுதுங்க அமரன்!!!

அமரன்
16-08-2010, 07:43 AM
வினாக்குறி பக்கத்துல இருக்கேப்பா..

ஆதவா
16-08-2010, 07:45 AM
வினாக்குறி பக்கத்துல இருக்கேப்பா..

வினா இருந்தா, பக்கத்தில விடையும் இருக்கும்!!!
விடையே இல்லாத கேள்விக்கு சப்பக்கட்டாவது இருக்கும்!!! :p

மச்சான்
16-08-2010, 08:31 AM
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சூழ்ந்து கொண்ட சூன்யம் அண்மையில்தான் விலகியதாகத் தெரிகிறது.
சந்தோஷமான செய்தி.....! இனிமேல் எந்த சூன்யமும் உங்களின் அருகில் நெருங்காமல் இருக்க இறைவன் அருள்பாலிப்பார். வெற்றி உங்களுக்கே.....!:icon_b:

விகடன்
10-10-2010, 02:04 PM
20 மாதத்திற்கு முதலிலிருந்து 2 மாதத்திற்கு முதல் வரை செய்வதறியாது செய்ததாக சொல்லியிருந்தீர்கள். எது எப்படியிருந்தாலும் மன்றத்தில் அமரனின் வீரியம் குறைந்திருந்திருக்குமே தவிர விபரீதம் ஏதுவும் நடந்ததாக தெரியவில்லைத்தானே. அதனையிட்டு சந்தோசப்படுங்கள்.

மீண்டும் பழைய அமரனாக வந்திட்டதை இட்டு மகிழ்ச்சியே. உங்கள் மீட்சி ஒலிக்கட்டும் உங்கள் பதிவுகளில்.

பூமகள்
11-10-2010, 05:28 AM
மன்றத்தின் மாணிக்கம் சில நாட்களாக காணவில்லையா?? நம்பமுடியவில்லை.. ஏனெனில்.. எப்போதும் அமரத்துவம் வாய்ந்த படைப்புகள் உங்கள் பலம்.. அதில் மாற்றம் நிகழ்ந்ததை விராடன் அண்ணா சொன்னது போல் காணக்கிடைக்கவில்லை..

மீண்டு மீட்டு வந்த எங்கள் அமரரைக் காண ஆவலுடன் இருக்கிறேன். :)

aren
11-10-2010, 02:03 PM
எனக்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான் இது அமரன். எல்லாம் தானாகவே சரியாகிவிடும். பின்னர் நான் சகஜ நிலைக்கு வந்துவிடுவேன். அதுமாதிரியாகத்தான் உங்களுக்கும் நடந்திருக்கும்.

விகடன்
11-10-2010, 02:16 PM
இல்லை இல்லை.
நீங்கள் தப்பா புரிஞ்சோண்டியல்...
இவருக்கு அடிக்கடி நடக்கவில்லையாம்.
அந்த குறிப்பிட்ட காலப்பகுதியில்த்தானாம்.
இப்ப எல்லாம் சரியாகிவிட்டதாம்... :lachen001: