PDA

View Full Version : நெஞ்சுக்குள் இருப்பவளும்...........நீதான்

Nivas.T
12-08-2010, 01:23 PM
கண்ணுக்குள் இருப்பவளும் நீதான்

கவிதையாய் பிறப்பவளும் நீதான்

நெஞ்சுக்குள் இருப்பவளும் நீதான்

மனதை பிளப்பவலும் நீதான்

காதல் வரமென வாங்கிவந்தேன்

காலம் முழுதும் ஏங்கிவந்தேன்

உன்நினைவை மட்டும் தாங்கிவந்தேன்

என்னை நானே நீங்கிவந்தேன்

உன்புன்னகை என்னும் மந்திரம்தான்

என் நினைவை ஈர்க்கும் தந்திரம்தான்

வார்த்தை ஒன்றை சொல்லிவிடு

இல்லை எனக்கு கொல்லியிடு

காதல் வந்தால் வசந்தகாலம்

இல்லை என்றால் இலையுதிர்காலம்

கண்கள் முழுதும் நீர்களின் கோலம்

நினைவுகள் தானே நம்மில் பாலம்

வார்த்தைகள் அதிகம் பரிமாறவில்லை

ஏக்கங்கள் மட்டும் நிறமாறவில்லை

கேள்விகள் ஏதும் புரியவில்லை

விடைகாணவும் எனக்கு தெரியவில்லை

விடுகதை நிறைந்த வாழக்கையிது

விடையில்லா விடுகதை போடுதது.

ஆதவா
12-08-2010, 01:51 PM
அன்பு நிவாஸ்,
இக்கவிதையில் உள்ள அனைத்து வார்த்தைகளும் மிகவும் பழையவையே, வார்த்தைகள் என்பன வார்த்தைகள் மாத்திரமன்று, அதன் கோர்ப்பு, அது முழுதாய் தரும் வடிவம் ஆகியவை. ஒரு கவிதை படித்ததும் அதன் மீது வாசகனுக்கு எண்ணம் வரவேண்டும்... எனக்கு கீழ்காணும் எண்ணமே வந்தது! தவறாக எண்ணவேண்டாம்

கண்ணுக்குள் இருப்பவளும் நீதான்

கருவிழியா?

கவிதையாய் பிறப்பவளும் நீதான்

கரு?

நெஞ்சுக்குள் இருப்பவளும் நீதான்

இதயம்?

மனதை பிளப்பவலும் நீதான்

அவள் என்ன கோடாளியா?

காதல் வரமென வாங்கிவந்தேன்
காலம் முழுதும் ஏங்கிவந்தேன்

வரத்தை வாங்கினா, உபயோகப்படுத்தனும்... ஏங்கப்படாது

உன்நினைவை மட்டும் தாங்கிவந்தேன்

தாங்கறதுக்கு அது அவ்வளவு பெரிய சுமையா?

என்னை நானே நீங்கிவந்தேன்

ஓவரா சுமந்தா அப்படித்தான்...

உன்புன்னகை என்னும் மந்திரம்தான்

மாயக்காரியா?

என் நினைவை ஈர்க்கும் தந்திரம்தான்

எலெக்ட்ரோ பாட்டா?

வார்த்தை ஒன்றை சொல்லிவிடு

ஒரே ஒரு வார்த்தைதானா?

இல்லை எனக்கு கொல்லியிடு

ஒண்ணுக்கு மேல சொன்னா கொல்லியா?

காதல் வந்தால் வசந்தகாலம்

காதலி பேரு வசந்தாவா?

இல்லை என்றால் இலையுதிர்காலம்

மொட்டையடித்துவிடுவாளோ?

கண்கள் முழுதும் நீர்களின் கோலம்

நீர்களா? கள்ளுக்கு ஏதுங்க கள்?
கோலம்போட கண்ணு என்ன வாசப்படியா?

நினைவுகள் தானே நம்மில் பாலம்

பாம்பன்? அப்பப்ப திறந்து மூடுமே?

வார்த்தைகள் அதிகம் பரிமாறவில்லை

சாம்பார் துவையலோடு இருந்தால் இன்னும் கொஞ்சம் பரிமாறியிருக்கலாம்.

ஏக்கங்கள் மட்டும் நிறமாறவில்லை

ஏக்கம் என்ன கலர்?

கேள்விகள் ஏதும் புரியவில்லை

+2 பரிட்சை மாணவரா?

விடைகாணவும் எனக்கு தெரியவில்லை

அப்ப மாணவரேதான்

விடுகதை நிறைந்த வாழக்கையிது

ஒண்ணும் புரியலைங்கறீங்க

விடையில்லா விடுகதை போடுதது.

முடியல!!

Nivas.T
12-08-2010, 02:28 PM
ஆஹா ஆதவா

என்னோட கவிதை எந்த அளவுக்கு உங்களுக்கு
புரிஞ்சிருந்தா
இப்டி எதிமறையான வார்த்தைகளா கண்டு புடுச்சிருப்பிங்க

இது ஒருதலைக்காதல்

காதலுக்கே கண் இல்லையாம்
காதல் கவிதைக்கு மட்டும் என்ன ?

காதலே பழசுதான்
கவிதைல மட்டும் என்ன பழசு புதுசு?

நன்றி திரு ஆதவா

ஆதவா
12-08-2010, 02:40 PM
அப்பாடா... இதை நீங்கள் பாஸிட்டிவாக எடுத்துக் கொண்டமைக்கு நன்றி, பயந்து கொண்டேயிருந்தேன்.
காதல் எப்பொழுதும் பழையதாவதில்லை.
ஒவ்வொரு காதலும் புதிதான,புதுமையானவையே!

அன்புடன்
ஆதவா

சசிதரன்
12-08-2010, 02:49 PM
காதல் எப்பொழுதும் பழையதாவதில்லை.
ஒவ்வொரு காதலும் புதிதான,புதுமையானவையே!

வழிமொழிகிறேன்... :)

கீதம்
12-08-2010, 11:46 PM
மனதை பிளப்பவளும் நீதான்

இல்லை எனக்கு கொள்ளியிடு

விடுகதை நிறைந்த வாழ்க்கையிது

காதல் பழசோ புதுசோ
கவிதை பிழையில்லாமல் இருந்தால்தான்
ஏற்றுக்கொள்ளப்படும்.

உருகி உருகி எழுதியிருக்கிறீர்கள், காதல் ஒவ்வொரு வரியிலும் வழிந்தோடுகிறது. பாராட்டுகள், நிவாஸ்.

Nivas.T
13-08-2010, 06:37 AM
காதல் பழசோ புதுசோ
கவிதை பிழையில்லாமல் இருந்தால்தான்
ஏற்றுக்கொள்ளப்படும்.

உருகி உருகி எழுதியிருக்கிறீர்கள், காதல் ஒவ்வொரு வரியிலும் வழிந்தோடுகிறது. பாராட்டுகள், நிவாஸ்.

காதலே பிழையாய் போனதால்
காதல் கவிதையிலும் பிழை வருகிறது போலும்

நன்றி கீதம் அவர்களே

Nivas.T
13-08-2010, 06:42 AM
வழிமொழிகிறேன்... :)

நானும்தான் :)

சுடர்விழி
02-09-2010, 07:47 AM
அன்பு நிவாஸ்,
இக்கவிதையில் உள்ள அனைத்து வார்த்தைகளும் மிகவும் பழையவையே, வார்த்தைகள் என்பன வார்த்தைகள் மாத்திரமன்று, அதன் கோர்ப்பு, அது முழுதாய் தரும் வடிவம் ஆகியவை. ஒரு கவிதை படித்ததும் அதன் மீது வாசகனுக்கு எண்ணம் வரவேண்டும்... எனக்கு கீழ்காணும் எண்ணமே வந்தது! தவறாக எண்ணவேண்டாம்

கருவிழியா?

கரு?

இதயம்?

அவள் என்ன கோடாளியா?

வரத்தை வாங்கினா, உபயோகப்படுத்தனும்... ஏங்கப்படாது

தாங்கறதுக்கு அது அவ்வளவு பெரிய சுமையா?

ஓவரா சுமந்தா அப்படித்தான்...

மாயக்காரியா?

எலெக்ட்ரோ பாட்டா?

ஒரே ஒரு வார்த்தைதானா?

ஒண்ணுக்கு மேல சொன்னா கொல்லியா?

காதலி பேரு வசந்தாவா?

மொட்டையடித்துவிடுவாளோ?

நீர்களா? கள்ளுக்கு ஏதுங்க கள்?
கோலம்போட கண்ணு என்ன வாசப்படியா?

பாம்பன்? அப்பப்ப திறந்து மூடுமே?

சாம்பார் துவையலோடு இருந்தால் இன்னும் கொஞ்சம் பரிமாறியிருக்கலாம்.

ஏக்கம் என்ன கலர்?

+2 பரிட்சை மாணவரா?

அப்ப மாணவரேதான்

ஒண்ணும் புரியலைங்கறீங்க

முடியல!!

எந்த விமர்சனத்திற்கும் தயாராக இருப்பவன் தான் நல்ல படைப்பாளி.என்றாலும் நமது மன்றத்தில் இப்படியொரு விமர்சனமா??அதுவும் உங்களைப் போன்ற மாமேதைகளிடம் இருந்து..பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டம் இடாமல் இருக்கலாம்,பிடிக்கவில்லை என்று கூட பின்னூட்டம் இடலாம்,எப்படி மேம்படுத்தலாம் என்று உங்களைப் போன்ற அனுபவசாலிகள், பெரியவர்கள் ஆலோசனை சொல்லி ஊக்கப்படுத்தலாம்..அதை விடுத்து இப்படி கேலி செய்வது போல் பின்னூட்டமிடுவது படைப்பாளியின் மனம் நோகச் செய்யும் என்பது எனது தாழ்மையான கருத்து..இதனால் புதியவர்கள் தங்கள் படைப்புகளை மன்றத்தில் பதியத் தயங்குவார்கள்...என் மனதில் தோன்றியதை சொல்லி விட்டேன்..யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...

ஆதவா
03-09-2010, 04:59 AM
அன்பு நிவாஸ்,
இக்கவிதையில் உள்ள அனைத்து வார்த்தைகளும் மிகவும் பழையவையே, வார்த்தைகள் என்பன வார்த்தைகள் மாத்திரமன்று, அதன் கோர்ப்பு, அது முழுதாய் தரும் வடிவம் ஆகியவை. ஒரு கவிதை படித்ததும் அதன் மீது வாசகனுக்கு எண்ணம் வரவேண்டும்... எனக்கு கீழ்காணும் எண்ணமே வந்தது! தவறாக எண்ணவேண்டாம்

ஆஹா ஆதவா

என்னோட கவிதை எந்த அளவுக்கு உங்களுக்கு
புரிஞ்சிருந்தா
இப்டி எதிமறையான வார்த்தைகளா கண்டு புடுச்சிருப்பிங்க

அப்பாடா... இதை நீங்கள் பாஸிட்டிவாக எடுத்துக் கொண்டமைக்கு நன்றி, பயந்து கொண்டேயிருந்தேன்.

எந்த விமர்சனத்திற்கும் தயாராக இருப்பவன் தான் நல்ல படைப்பாளி.என்றாலும் நமது மன்றத்தில் இப்படியொரு விமர்சனமா??அதுவும் உங்களைப் போன்ற மாமேதைகளிடம் இருந்து..பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டம் இடாமல் இருக்கலாம்,பிடிக்கவில்லை என்று கூட பின்னூட்டம் இடலாம்,எப்படி மேம்படுத்தலாம் என்று உங்களைப் போன்ற அனுபவசாலிகள், பெரியவர்கள் ஆலோசனை சொல்லி ஊக்கப்படுத்தலாம்..அதை விடுத்து இப்படி கேலி செய்வது போல் பின்னூட்டமிடுவது படைப்பாளியின் மனம் நோகச் செய்யும் என்பது எனது தாழ்மையான கருத்து..இதனால் புதியவர்கள் தங்கள் படைப்புகளை மன்றத்தில் பதியத் தயங்குவார்கள்...என் மனதில் தோன்றியதை சொல்லி விட்டேன்..யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...

உங்களது வெளிப்படையான எண்ணத்தைப் பாராட்டுகிறேன்!!

படைப்பாளி என்பவன் எந்த விமர்சனத்தையும் எதிர்நோக்கத் தயாராக இருப்பான் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். கிண்டல் செய்வதும் ஒரு விமர்சனம் தான். (மாமா பொண்ணை கிண்டல் பண்றதுக்கும் ரோட்ல போற பொண்ணை கிண்டல் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு... நான் மாமா பொண்ணை கிண்டல் பண்ணினேன்னு வெச்சுக்கோங்களேன்!!! :))

நான் முன்பே குறிப்பிட்டது போல, என் மனதில் தோன்றியதைத்தான் அவ்விதம் கொடுத்திருந்தேன். ஒருவேளை நான் வேற எதாவது எழுதியிருந்தால், அது போலியாக ஆகியிருக்கும் அல்லவா? போலியான விமர்சனங்களைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

எனது இரண்டாவது பின்னூட்டத்தில் எனக்கிருந்த படபடப்பை நீங்கள் கண்டுகொண்டிருக்கலாம். அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற படபடப்பு... ஆனால் நிவாஸ்.டி ஐ நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். இந்த விமர்சனத்தையும் ஏற்றுக் கொண்ட மனப்பான்மையை பெரிதும் பாராட்டுகிறேன். சமீபத்தில் அவரது கதைக்கும் அப்படித்தான் கொடுத்தேன்... ஆனாலும் அதை நிறையாகவே எடுத்துக் கொண்டார்... வளரும் படைப்பாளிக்கு அதுதான் தேவை.... பச்சையாக சொல்லவேண்டுமென்றால்..

படைப்பு என்பது ஒரு பெண்... அவள் அழகாகவோ அசிங்கமாகவோ, குட்டையாகவோ, நெட்டையாகவோ எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்..... விமர்சகன், அந்த பெண்ணை அங்குல அங்குலமாக சைட் அடிக்கும் ஆண்.... எல்லா ஆண்களும் பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள்? ஒருமாதிரியாகவா? இல்லையே... சிலர் கிண்டலடிக்கக் கூடும், சிலர் ரசிக்கலாம், சிலர் காமத்தோடு பார்ப்பார்கள், சிலர் தாயுள்ளத்தோடு பார்ப்பார்கள்!!!

காமத்தோடு பார்க்கிறார்கள் என்று பெண், தெருவினில் நடக்கமாட்டேன் என்று சொன்னால்???

புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

அப்பறம் இன்னொரு விஷயம்!! ”உங்களைப் போன்ற மாமேதை” என்ற வார்த்தை கொஞ்சமல்ல ரொம்பவே அதிகம்.. மேதை ஆக முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு காமன் மேன்.....

கண்மணி
03-09-2010, 05:17 AM
எந்த விமர்சனத்திற்கும் தயாராக இருப்பவன் தான் நல்ல படைப்பாளி.என்றாலும் நமது மன்றத்தில் இப்படியொரு விமர்சனமா??அதுவும் உங்களைப் போன்ற மாமேதைகளிடம் இருந்து..பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டம் இடாமல் இருக்கலாம்,பிடிக்கவில்லை என்று கூட பின்னூட்டம் இடலாம்,எப்படி மேம்படுத்தலாம் என்று உங்களைப் போன்ற அனுபவசாலிகள், பெரியவர்கள் ஆலோசனை சொல்லி ஊக்கப்படுத்தலாம்..அதை விடுத்து இப்படி கேலி செய்வது போல் பின்னூட்டமிடுவது படைப்பாளியின் மனம் நோகச் செய்யும் என்பது எனது தாழ்மையான கருத்து..இதனால் புதியவர்கள் தங்கள் படைப்புகளை மன்றத்தில் பதியத் தயங்குவார்கள்...என் மனதில் தோன்றியதை சொல்லி விட்டேன்..யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...

விலகி நின்று பார்ப்பதற்கும் கூடிக் கும்மியடிப்பதற்கும் இதுதான் வித்தியாசம் என்று நினைக்கிறேன்.

மீராக்கா எழுதிய தேடிக் கொண்டிருக்காதே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7248) திரியைப் படித்தால் கொஞ்சம் புரியும் என நினைக்கிறேன்.

அதிலும் கீழ்கண்டவை

மீரா சொல்லிய கவிதையில் எதுவும் தவறல்ல.

அனுபவம் ஆகி விடுவதுதான் பேருண்மை.
மீரா நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். குதர்க்கமான விமர்சனங்கள் செய்பவர் செய்து கொண்டுதான் இருப்பார்கள். பொருட்படுத்தாடீர்கள். சிலர் குறை சொல்வதே வாடிக்கையாக கொண்டு இருப்பார்கல்.

"நிகழ்கால உணர்தலே முக்கியமானது. இளசு அண்ணா சரியாக விமர்சனம் செய்துள்ளார்.

ராம்,

தங்களின் பாராட்டுக்கு நன்றி.

ஆனால் ஒன்று மன்னிக்க வேண்டும் ராம், இங்கு யாரும் குதர்க்கமாய் விமர்சிப்பது இல்லை.ஒவ்வொருவர் அனுபவமும் இங்கே பதிவாகிறது அவ்வளவே.யாரையும் கஷ்ட படுத்தும் நோக்கம் அல்ல.ஆகவே கவலை வேண்டாம்.

ராம் நான் ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

மன்றம் மக்களை இணைக்க வேண்டுமா இல்லை கடைத்தெருவா இருக்கணுமா? என்பதுதான்

மேலும் தொடர்ந்த விளக்கங்களைப் பாருங்க

நான் தான் கொஞ்சம் கோபப்பட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

ராம், என்ன பன்னுறது சில "நக்கீரர்"களும் மன்றத்தில் இருக்கிறார்களே....

நானும் தருமியாக வந்து அடிவாங்கியவந்தான்... இன்று சிறுவிமர்சனம் எழுதமுடிகிறது என்றால் அது மன்றம் தான்...

நீங்க என்னதான் எழுதினாலும் இளசு பாராட்ட மட்டும் தான் செய்வார்... அவர் தட்டி கொடுக்கவில்லை என்றால் நான் இந்த அளவு கூட இருக்கமாட்டேன்

செல்வன் இதற்க்கு மற்று சிந்தனை இருக்கா என்று பார்ப்பார்... இப்படியும் சிந்திக்கலாமே என்பது அவர் பார்வை...

ஓவியா... அப்படியே வந்து காலாயிஷுட்டு போயிடுவா...

மீரா... "கவிதை நல்லா இருக்கு, இன்னும் எதிர்பாக்கிறென்" அப்படின்னு ஒரு வசனத்தி கஷ்டபட்டு எழுதிட்டு போயிடுவா...

பிரதிப்பு... வாழ்க்கை ஓட்டத்தோது கவிதையை இனைத்து "எடுத்து" கொடுப்பார்...

ராகவன்... சின்ன செல்வன் ...பெரிய இளசு

அறிஞர் .. ஒரு குச்சியை வச்சுகிட்டு வாத்தியார் மதிரி யாராவது தப்பு பன்னுறாங்க்களான்னு கவனித்து கொண்டிருப்பார்... (அட சூப்பரா பதில் கவிதை கூட கொடுப்பார்)

இப்படி எல்லாரும் ஒருவிதம்... அட உங்களுக்கே போக போக புரியும்....

ஆனால் நீங்களும் ஏன் இப்படி விமர்சணகள் வருது என்பதை ஆராய்ந்து கோபபட்டிருக்கலாமோ????

இனிய பென்ஸ்,

இந்தப் பதிவைக் கண்டதும் என் மனதில் தோன்றிய எண்ணங்கள்
அப்படியே அச்சாய் உங்கள் வரிகளில்..

அட போங்கப்பா...

மாறன் என் மனசாட்சின்னு கலைஞர் சொன்னதுபோல்
பென்ஸ் என் மனசாட்சின்னு சொல்ல வச்சிடுவீங்க போலிருக்கே...:)

உண்மையில் செல்வன் போன்ற ஆத்மார்த்த வாசிப்படைப்பாளிகள் இல்லை என்றால் மன்றப்பொலிவு பல மாற்று கம்மியாக இருக்கும் என்பதே மாறாத உண்மை.

படித்ததை உள்வாங்கி, இன்னும் சிந்தித்து அர்த்தம் பொதிந்த பலவரி பின்னூட்டம் பெறுவதை விட, ஒரு படைப்புக்கு வேறு என்ன பெரிய அங்கீகாரம் கிடைத்துவிட முடியும்?

உங்கள் அடுத்த பதிவில் பல விமர்சகர்களையும் மிக அழகாக
விமர்சித்த விதம் - படு பாங்கு!

உள்ளவியல் வல்லுநர்தான் நம் பென்ஸ்!!!!!

மனசை இப்படி இலேசாக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு கிண்டலிலும் நட்பு வளரும்.

குரோதமும் வன்மமும் இல்லாத எல்லா பின்னூட்டங்களும் நல்ல பின்னூட்டங்கள்தான்.

வாங்க ஜோதியில் ஐக்கியமாகுங்க..

Nivas.T
03-09-2010, 06:10 AM
மனசை இப்படி இலேசாக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு கிண்டலிலும் நட்பு வளரும்.

குரோதமும் வன்மமும் இல்லாத எல்லா பின்னூட்டங்களும் நல்ல பின்னூட்டங்கள்தான்.

வாங்க ஜோதியில் ஐக்கியமாகுங்க..

ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை

விமர்சனமும் கிண்டலும் ஒன்றா?

கவிதையை விமர்சிப்பதும்
பெண்ணை கிண்டல் செய்வதையும் ஒப்பிடுவது
சம நிலையா?

எதையும் சகிக்கும் மனநிலை எல்லா படைப்பாளிகளுக்கும் இருக்குமா?

சில படைப்புகள் முழுவதும் கற்பனையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை அவர்களது சொந்த நிகழ்வாக இருக்கலாம், அப்பொழுது இது மாதிரியான வார்த்தைகள் அவர்களை கயப்படுத்தாதா?

அதற்காக பொய்யாக பாராட்ட வேண்டாம்
விமர்சனத்திற்கு வரம்பு உண்டு
விமர்சிக்கப் பட்டவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பது ஒருவகை
நாம் விமர்சித்த முறை சரியாய் ? என்பதுதான் நமது கருத்தாய் இருக்க வேண்டும்

சுடர்விழி
04-09-2010, 08:04 AM
உங்களது வெளிப்படையான எண்ணத்தைப் பாராட்டுகிறேன்!! இது நான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்ததுதான்...

படைப்பாளி என்பவன் எந்த விமர்சனத்தையும் எதிர்நோக்கத் தயாராக இருப்பான் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். கிண்டல் செய்வதும் ஒரு விமர்சனம் தான். (மாமா பொண்ணை கிண்டல் பண்றதுக்கும் ரோட்ல போற பொண்ணை கிண்டல் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு... நான் மாமா பொண்ணை கிண்டல் பண்ணினேன்னு வெச்சுக்கோங்களேன்!!! :))
மாமா பொண்ணா இருந்தாலும் இப்படித்தான் எல்லார் முன்னாடியும் கிண்டல் பண்ணுவீர்களா???

நான் முன்பே குறிப்பிட்டது போல, என் மனதில் தோன்றியதைத்தான் அவ்விதம் கொடுத்திருந்தேன். ஒருவேளை நான் வேற எதாவது எழுதியிருந்தால், அது போலியாக ஆகியிருக்கும் அல்லவா? போலியான விமர்சனங்களைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

போலியான விமர்சனத்தை எந்த நல்ல படைப்பாளியும் விரும்புவதில்லை..நான் குறிப்பிட்டது என்னவென்றால் ’மன்றத்தில் இது போன்ற விமர்சனங்கள்’ என்பது பற்றி தான்.

எனது இரண்டாவது பின்னூட்டத்தில் எனக்கிருந்த படபடப்பை நீங்கள் கண்டுகொண்டிருக்கலாம். அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற படபடப்பு... ஆனால் நிவாஸ்.டி ஐ நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். இந்த விமர்சனத்தையும் ஏற்றுக் கொண்ட மனப்பான்மையை பெரிதும் பாராட்டுகிறேன். சமீபத்தில் அவரது கதைக்கும் அப்படித்தான் கொடுத்தேன்... ஆனாலும் அதை நிறையாகவே எடுத்துக் கொண்டார்... வளரும் படைப்பாளிக்கு அதுதான் தேவை.... பச்சையாக சொல்லவேண்டுமென்றால்..

படைப்பு என்பது ஒரு பெண்... அவள் அழகாகவோ அசிங்கமாகவோ, குட்டையாகவோ, நெட்டையாகவோ எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்..... விமர்சகன், அந்த பெண்ணை அங்குல அங்குலமாக சைட் அடிக்கும் ஆண்.... எல்லா ஆண்களும் பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள்? ஒருமாதிரியாகவா? இல்லையே... சிலர் கிண்டலடிக்கக் கூடும், சிலர் ரசிக்கலாம், சிலர் காமத்தோடு பார்ப்பார்கள், சிலர் தாயுள்ளத்தோடு பார்ப்பார்கள்!!!

காமத்தோடு பார்க்கிறார்கள் என்று பெண், தெருவினில் நடக்கமாட்டேன் என்று சொன்னால்???

புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

அப்பறம் இன்னொரு விஷயம்!! ”உங்களைப் போன்ற மாமேதை” என்ற வார்த்தை கொஞ்சமல்ல ரொம்பவே அதிகம்.. மேதை ஆக முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு காமன் மேன்.....

படைப்பை பெண்ணோடு ஒப்பிட்டு சொல்வது சரியா??ஒரு பெண்ணாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது...சரி நீங்கள் சொல்வது போல் பார்த்தாலும் தெருவில் நடக்கும் பெண்ணை காமத்தோடு பார்ப்பவர்கள் மாதிரியா நமது தமிழ் மன்றத்தின் படைப்புகளின் நிலை.?????? தமிழ் மன்றம் தெரு போலவா???

மற்ற இடங்களில் இது போன்ற கிண்டல் விமர்சனங்கள் வந்தால் யாரும் வருத்தப்படப் போவதில்லை...என்னுடைய கேள்வியே,நமது மன்றத்தில் இப்படிப்பட்ட விமர்சனம் சரியா என்பது தான்...புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ...

நிவாஸ் அவர்களின் கதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் பற்றி நான் எதுவும் சொல்லவே இல்ல..உங்களுக்கு பிடித்ததா இல்லையா என்பதொடு நின்று விட்டது..கவிதைக்கான விமர்சனத்தில் வரிக்கு வரி இது தவறு என்று சுட்டிக் காட்டினால் அது விமர்சனம்..நீங்கள் வரிக்கு வரி கிண்டல் செய்திருந்தீர்கள்..நான் அதை தான் குறிப்பிட்டிருந்தேன்..புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ....தவறாக நினைக்க வேண்டாம்..

சுடர்விழி
04-09-2010, 08:06 AM
ஒன்று மட்டும் எனக்கு புரியவில்லை

விமர்சனமும் கிண்டலும் ஒன்றா?

கவிதையை விமர்சிப்பதும்
பெண்ணை கிண்டல் செய்வதையும் ஒப்பிடுவது
சம நிலையா?

எதையும் சகிக்கும் மனநிலை எல்லா படைப்பாளிகளுக்கும் இருக்குமா?

சில படைப்புகள் முழுவதும் கற்பனையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை அவர்களது சொந்த நிகழ்வாக இருக்கலாம், அப்பொழுது இது மாதிரியான வார்த்தைகள் அவர்களை கயப்படுத்தாதா?

அதற்காக பொய்யாக பாராட்ட வேண்டாம்
விமர்சனத்திற்கு வரம்பு உண்டு
விமர்சிக்கப் பட்டவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பது ஒருவகை
நாம் விமர்சித்த முறை சரியாய் ? என்பதுதான் நமது கருத்தாய் இருக்க வேண்டும்

முழு மனதுடன் வழிமொழிகிறேன்...

சுடர்விழி
04-09-2010, 08:11 AM
விலகி நின்று பார்ப்பதற்கும் கூடிக் கும்மியடிப்பதற்கும் இதுதான் வித்தியாசம் என்று நினைக்கிறேன்.

மன்றம் மக்களை இணைக்க வேண்டுமா இல்லை கடைத்தெருவா இருக்கணுமா? என்பதுதான்

இது தான் என்னுடைய கேள்வியும்............விளக்கங்கள் எடுத்துக்காட்டியதற்கு நன்றி கண்மணி !!

ஆதவா
04-09-2010, 12:15 PM
படைப்பை பெண்ணோடு ஒப்பிட்டு சொல்வது சரியா??ஒரு பெண்ணாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது...சரி நீங்கள் சொல்வது போல் பார்த்தாலும் தெருவில் நடக்கும் பெண்ணை காமத்தோடு பார்ப்பவர்கள் மாதிரியா நமது தமிழ் மன்றத்தின் படைப்புகளின் நிலை.?????? தமிழ் மன்றம் தெரு போலவா???

மற்ற இடங்களில் இது போன்ற கிண்டல் விமர்சனங்கள் வந்தால் யாரும் வருத்தப்படப் போவதில்லை...என்னுடைய கேள்வியே,நமது மன்றத்தில் இப்படிப்பட்ட விமர்சனம் சரியா என்பது தான்...புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ...

நிவாஸ் அவர்களின் கதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் பற்றி நான் எதுவும் சொல்லவே இல்ல..உங்களுக்கு பிடித்ததா இல்லையா என்பதொடு நின்று விட்டது..கவிதைக்கான விமர்சனத்தில் வரிக்கு வரி இது தவறு என்று சுட்டிக் காட்டினால் அது விமர்சனம்..நீங்கள் வரிக்கு வரி கிண்டல் செய்திருந்தீர்கள்..நான் அதை தான் குறிப்பிட்டிருந்தேன்..புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ....தவறாக நினைக்க வேண்டாம்..

உதாரண ஒப்பீடுகள் என்றென்றும் நிரந்தரம் ஆகிவிடாது. படைப்பை பெண்ணோடு ஒப்பிடுவது சரியா என்று கேட்கும் நீங்கள், அதையே கவிதையில் வந்தால் ஒத்துக் கொள்வீர்களா? மறுப்பீர்களா? கவிதையும் படைப்புதான், நிலாவும் இறைவனின் படைப்புதான்.... ஏன் பெண்ணோடு ஒப்பிடுகிறீர்கள்?? ஒப்பிடுவது எதனோடும் செய்யலாம், அதற்கு வரம்பு கிடையாது..... ஒரு கவிஞன் படைக்கும் படைப்பு விலைமாதருக்கு ஒப்பானது. விலைமாதரை எப்படி அணுகுகிறார்களோ அதைப் போன்றே படைப்பையும் அணுகவேண்டும் என்று கூட ஒப்பிட்டு சொல்லலாம். அதற்கென்று அளவு முறைகள் கிடையாது. ஆனால் அதற்காக “என்ன நீங்கள், படைப்பை விலைமாதருக்கு ஒப்பிடுகிறீர்கள்? என்று கேட்பது ஒப்புமை இலக்கணம் அறியாதவர் கேட்பதைப் போலிருக்கிறது.... படைப்பை குழந்தையோடு ஒப்பிட்டாலும், “படைப்பு என்றால் குழந்தையா” என்று கேட்காதீர்கள்...

ஒரு பெண்ணை சைட் அடிக்க, தெரு மட்டும் வேண்டியதில்லை.... கோவிலிலும் சைட் அடிக்கலாம். எனில், தமிழ்மன்றமும் கோவிலும் ஒன்றா என்று கேட்பீர்களா? தெரு அல்லது கோவில் என்பன குறியீட்டுச் சொற்கள். பின்னூட்டங்களை வாசிக்கும் பொழுது உதாரண ஒப்பீடுகளையும் குறியீடுகளையும் கவனித்து வாசித்தால்தான் அதன் முழு அர்த்தம் அகப்படும். படைப்புக்கான விமர்சனம் எந்த வகையிலும் வரலாம்.. அது விமர்சிப்பவனின் உரிமை... கிண்டல் செய்வார்கள் என்று பயந்தால், படைப்பை எதற்கு கடைவிரிக்கிறீர்கள்? உங்கள் படைப்பு மாத்திரமல்ல, எல்லாருடைய படைப்புகளும் உயரிய விமர்சனங்களையும் கேலிகளையும் தாண்டிதான் வந்திருக்கின்றன. இதை மறுக்கிறீர்களா?

தமிழ்மன்றம் என்பது குடும்பமல்ல. பல அறிஞர்கள் சிந்தனை துளிர்க்கும், கிண்டலடிக்கும், படைப்பு படைக்கும் சகோதரத்துவம் நிறைந்த தளம்... அதில் விமர்சனம் இப்படித்தான் எழுதவேண்டும், மனம் புண்படும், என்று யாரும் சொல்லவில்லை. கண்மணி சொன்னதைப் போன்று வன்மம் அற்ற எந்த விமர்சனமும் நல்ல விமர்சனமே!

உங்களுக்கு எனது பின்னூட்டம்(ங்கள்) எரிச்சலை உண்டாக்கியிருந்தால் நீங்கள் என்னை தவிர்த்து விடலாம். அதில் தவறில்லை. நான் அப்படித்தான்.. நான் மட்டுமல்ல.. ஒரு புதிய படைப்பாளி இந்த அளவிலேனும் மனம் புண்படக்கூடாது என்று நினைக்கும் நல் மனது கொண்ட நீங்களும் அப்படித்தான்... யாரும் யாருக்காகவும் மாறவேண்டியதில்லை அல்லவா.

நிவாஸுக்கு பரிந்து பேசும் உங்களை பாராட்டுகிறேன். அதேபோல, எனது பின்னூட்டம் உங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருப்பதாகக் கூறினீர்கள். அதற்கு என் வருத்தங்கள்..... சற்று ஆழ்ந்த புரிதல் இருந்தால் இவை தவிர்க்கலாம் என்பது என் கருத்து!!

ம்ம்.... பிறகு..... என் மனதில் என்ன தோணுமோ அதைத்தான் அடுத்து வரும் கவிதைகளுக்கும் நான் விமர்சனமாகத் தருவேன்.... அது கிண்டலாகவும் இருக்கலாம்.

மாமா பொண்ணா இருந்தாலும் இப்படித்தான் எல்லார் முன்னாடியும் கிண்டல் பண்ணுவீர்களா???

நம்ம தமிழ்மன்றம் என்றீர்கள்?? நம்ம மக்கள் உள்ள இடத்தில் கிண்டல் செய்தால் தவறாக எண்ணுவீர்களா?

அன்புடன்
ஆதவா.

Ravee
04-09-2010, 12:54 PM
படைப்பாளிகள் என்று வரும் போது சிலர் ஆணோ பெண்ணோ முழுதுமாய் படைப்பாளிகள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுகிறார்கள். சிலர் ஆண் படைப்பாளி பெண் படைப்பாளி என்றே இறுதி இட்டு நின்று விடுகிறார்கள். எனவே சில கருத்துக்கள் ஒரு எல்லை கோட்டை தாண்டி இங்கே மறுமுனையில் இருப்பவரை அடைவதில்லை. அதற்க்கு அவர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை.

இங்கு ஆதாவாவின் வழக்கமான குறும்பு கலந்த விமர்சனம் விமர்சிக்கப்படுகிறது. இதை எளிதாக எடுத்துக்கொண்டது நிவாஸின் நாகரீகம். அப்பாடா பாசிடிவா எடுத்துக்கொண்டீங்க என்றது ஆதவாவின் மனதில் தவறோ என்று குறுகுறுத்தது தெரிகிறது. மனதில் பட்டதை சொல்வதில் தவறில்லை. ஆனால் அது உங்கள் இருவரோடு முடிவதில்லை ... இதை படிக்கும் அனைவரின் மனதையும் சென்று அடையும் ஒரு விஷயம் இதை சுடர்விழி ஒரு எல்லையில் இருந்து விமர்சிக்கிறார். நம் எண்ணங்களும் கருத்தும் அடுத்தவரை சென்று அடைவது நமது வெற்றி. ஆனால் கோபம் வெறுப்பு அடுத்தவரையும் தொற்றிக்கொள்வது சரியா தவறா உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.

சுடர்விழி
04-09-2010, 02:53 PM
இதை படிக்கும் அனைவரின் மனதையும் சென்று அடையும் ஒரு விஷயம் இதை சுடர்விழி ஒரு எல்லையில் இருந்து விமர்சிக்கிறார். நம் எண்ணங்களும் கருத்தும் அடுத்தவரை சென்று அடைவது நமது வெற்றி. ஆனால் கோபம் வெறுப்பு அடுத்தவரையும் தொற்றிக்கொள்வது சரியா தவறா உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.
நான் கோபமோ,வெறுப்போ காட்டவில்லை..என் கருத்தை தான் தெரிவித்தேன்...அது மற்றவர்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்....

அமரன்
04-09-2010, 11:06 PM
நிவாசின் கவிதைக்கு ஆதவா கருத்துரைத்ததும் நம்ம மன்ற நிவாஸ் என்ற எண்ணத்தில்..

ஆதவாவின் விமர்சனம் சரியானதாகப்படவில்லை என்று சுடர்விழி சொன்னதும் நம்ம மன்ற ஆதவா என்ற எண்ணத்தில்...

இதே எண்ணங்களுடன் விமர்சனங்களை எடுத்தல் வேண்டும்.

அதே போல் படைப்பாளியை உயர்த்தும் நோக்கில் விமர்சனங்களைக் கொடுக்க வேண்டும். விமர்சகனின் உயரத்தைக் காட்டும் வண்ணத்தில் விமர்சனங்கள் கொடுக்கக் கூடாது. இதை நன்குணர்ந்த பலர் மன்றத்தில் உள்ளார்கள். அவர்களால் வளர்ந்தவர்களும் மன்றிலுண்டு.

அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் நன்மையே!

அமரன்
04-09-2010, 11:08 PM
காதல்வசப்பட்ட ஒருவனின் ஆழ்மனப் புலம்பல்களை கவிதை சுமக்கிறது அழகாக.

பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
06-09-2010, 02:17 PM
காதல்வசப்பட்ட ஒருவனின் ஆழ்மனப் புலம்பல்களை கவிதை சுமக்கிறது அழகாக.

பாராட்டுகள் நிவாஸ்.

மிக்க நன்றி அமரன் :)