PDA

View Full Version : கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்?Nivas.T
12-08-2010, 10:14 AM
வங்கக்கடல் வருந்துதம்மா!

அரபிக்கடலும் அழுகுதம்மா!

குமரியும்தான் குமுறுதம்மா!

பரதவர் கொடுமை நடக்குதம்மா!

பாரதம் வேடிக்கை பார்க்குதம்மா!

கடற்ப்படைகொடுமை தொடருதம்மா!

கயவர் கைதான் படருதம்மா!

வலைக்களும்தான் அங்கே அருபடுது!

மீன்களும்தான் கொள்ளை இடுபடுது!

உயிர்பலிதான் நித்தம் நடைபெருது!

மானம்தான் கடலிலும் இழிபடுது!

கடலிலும் சிங்க(ள)க் கொடிதானோ?

நரிகளின் நாட்டமை தான் ஏனோ?

தமிழன் என்றுதான் தனிக்கவேண்டம்!

இந்தியன் என்றாவது இறங்குகலேன்?

உயிரையும், உரிமையையும் தாருங்கலேன்?

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்?

வியாசன்
12-08-2010, 10:39 AM
நிவாஷ் எந்த உலகத்தில் இருக்குறீங்க? அதுதான் பாராளுமன்றம் அமளிப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு கிருஸ்ணா (பாதுகாப்பமைச்சர்) சொல்லிவிட்டார்

விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய கிருஷ்ணா கூறுகையில்,

இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை.

அதேசமயம் சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது.

2008-ல் இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு பிறகு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது. எனினும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்படும். இதுகுறித்து எனது அடுத்த இலங்கை பயணத்தின் போது அந்நாட்டு தலைவர்களிடம் விவாதிப்பேன்.

கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் வகையில், நடைபெறும் நிகழ்ச்சிகளை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கச்சத்தீவு பிரச்சனையில் இந்தியாவை எந்த நாடும் அடிபணிய வைக்க முடியாது.

இலங்கை அதிபர் டெல்லி வந்தபோது மீனவர்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி உள்ளோம். இலங்கை அதிபருடன், இந்திய பிரதமர் இதுகுறித்து விவாதித்துள்ளார். மீனவர்கள் தாக்கப்படுவது கவலை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது இந்த பிரச்சனையை மத்திய அரசு எழுப்பியது. இலங்கை அரசின் உயர் அரசியல் தலைவரான அந்நாட்டு அதிபரும், இந்திய அரசின் உயர் அரசியல் தலைவரான பிரதமரும் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். இலங்கை அரசிடம் இந்திய அரசு மீண்டும் இப்பிரச்சனை எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்.

இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக அங்கு 50 ஆயிரம் நிரந்தர வீடுகள் கட்டுவது, அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் தமிழர்களின் மறுகுடியேற்றம் ஆகியவற்றிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க முடியாது, தமிழக மீனவர்கள்தான் தவறு செய்கிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு தர முடியாது என ராஜ்யசபாவில் வைத்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா திட்டவட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் எஸ்.எம்.கிருஷ்ணா இப்படிக் கூறியதை திமுக, அதிமுக உள்பட எந்தக் கட்சியின் உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து சின்ன சலசலப்பைக் கூட ஏற்படுத்தவில்லை. மாறாக, விவாதத்தில் கலந்து கொண்டு அவரவர் கருத்தை மட்டும் தெரிவித்து விட்டு அமர்ந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தற்ஸ் தமிழ்.-

Nivas.T
12-08-2010, 10:55 AM
அப்போ இந்த வரிகள் எஸ்.எம். கிருஷ்ணா வுக்கா? :confused: :confused: :confused: :confused: :confused: :confused:

Nivas.T
12-08-2010, 10:58 AM
[COLOR="Purple"]இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க முடியாது, தமிழக மீனவர்கள்தான் தவறு செய்கிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு தர முடியாது என ராஜ்யசபாவில் வைத்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா திட்டவட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வாழ்க! வாழ்க! பாரத சமுதாயம் வாழ்கவே!

ஆதி
12-08-2010, 11:09 AM
//கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் வகையில், நடைபெறும் நிகழ்ச்சிகளை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. //

ஓ அனுமதிக்க வேற செய்வாங்களா ?

//இலங்கை அதிபர் டெல்லி வந்தபோது மீனவர்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி உள்ளோம். இலங்கை அதிபருடன், இந்திய பிரதமர் இதுகுறித்து விவாதித்துள்ளார். மீனவர்கள் தாக்கப்படுவது கவலை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.//

அதுக்கு இலங்கை அதிபர் என்ன சொன்னாரு னு சொல்லவே இல்லையே..

// இலங்கை அரசின் உயர் அரசியல் தலைவரான அந்நாட்டு அதிபரும், இந்திய அரசின் உயர் அரசியல் தலைவரான பிரதமரும் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். இலங்கை அரசிடம் இந்திய அரசு மீண்டும் இப்பிரச்சனை எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்.//

அதிபரும், பிரதமரும் பேசிய பயனில்லை.. பாதுக்காப்புதுறை அமைச்சர் பேசி என்ன நடக்க போகுது..

//இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக அங்கு 50 ஆயிரம் நிரந்தர வீடுகள் கட்டுவது, அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் தமிழர்களின் மறுகுடியேற்றம் ஆகியவற்றிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.//

இதுக்குள்ள அடுத்த தேர்தல் வந்திடும், அப்பவும் கூச்சப்படாம 50 ஆயிரம் வீடுக் கட்டித்தர போறோம் னு சொல்லி ஓட்டுக்கேப்பாங்க, ஏன் நான் இவங்களுக்கு நாக்கும் வாக்கும் ஒண்ணு..

//இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க முடியாது, தமிழக மீனவர்கள்தான் தவறு செய்கிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு தர முடியாது என ராஜ்யசபாவில் வைத்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா திட்டவட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.//

இதுக்குத்தான் இம்புட்டு பீடிக, எவன் செத்த என்ன ? இவங்க புள்ளைங்களும், பேரன், பேத்திகளும் பாதுகாப்பா தானே இருக்காங்க..

உடனே ஒருத்தர் கடிதம் எழுதுவார், இன்னும் ரெண்டு நாள்ல..

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்..

Nivas.T
12-08-2010, 11:16 AM
போங்கடா நீங்களும் உங்க அரசியலும்..

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

:icon_b:

சுகந்தப்ரீதன்
12-08-2010, 02:33 PM
நிவாஸ்... (வீணா என் வாயை கெளறாதீங்க..)
உங்க எழுத்துக்களில் அடிக்கடி எழுத்துபிழை எழுவதற்க்கு என் கண்டணத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..:frown:

நீங்க கண்டனம் ஒன்று கூற சொன்னதால் கூறினேம்ப்பா..!!:D

Nivas.T
15-08-2010, 08:28 AM
நிவாஸ்... (வீணா என் வாயை கெளறாதீங்க..)
உங்க எழுத்துக்களில் அடிக்கடி எழுத்துபிழை எழுவதற்க்கு என் கண்டணத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..:frown:

நீங்க கண்டனம் ஒன்று கூற சொன்னதால் கூறினேம்ப்பா..!!:D

உங்களது கண்டனம் கவனத்தில் வைக்கைப்படுகிறது

அது எழுத்துப்பிழை இல்ல சுகந்தவாசன்

தட்டச்சுப் பிழை

அமரன்
15-08-2010, 09:08 AM
மீனவர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது.

வியாசன்
15-08-2010, 09:18 AM
மீனவர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது.


அமரன் கண்டனத்துடன் முடிந்துவிடுமா? கடிதம் எழுதவேண்டாமா?

மச்சான்
15-08-2010, 09:37 AM
இந்தியன் என்றாவது இறங்குகலேன்?

உயிரையும், உரிமையையும் தாருங்கலேன்?

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்?

கண்டனம் ஒன்றல்ல..... பல கூறுவேன்...!! (கவிதையில் இருக்கும் எழுத்துப்பிழையை சரி செய்யுங்களேன்.....!)

வலைக்களும்தான் அங்கே அறுபடுது!

உயிர்பலிதான் நித்தம் நடைபெறுது!

இந்தியன் என்றாவது இறங்குங்களேன்?

உயிரையும், உரிமையையும் தாருங்களேன்?

கண்டனம் ஒன்றாவது கூறுங்களேன்?.

Nivas.T
15-08-2010, 10:22 AM
கண்டனம் ஒன்றல்ல..... பல கூறுவேன்...!! (கவிதையில் இருக்கும் எழுத்துப்பிழையை சரி செய்யுங்களேன்.....!)

வலைக்களும்தான் அங்கே அறுபடுது!

உயிர்பலிதான் நித்தம் நடைபெறுது!

இந்தியன் என்றாவது இறங்குங்களேன்?

உயிரையும், உரிமையையும் தாருங்களேன்?

கண்டனம் ஒன்றாவது கூறுங்களேன்?.

நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்

நன்றி மச்சான் :)

Nivas.T
15-08-2010, 10:25 AM
மீனவர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது.

மிக மிக நன்றி திரு அமரன்

கலையரசி
15-08-2010, 10:33 AM
சிங்கள அரசால் சாகடிக்கப்ப்டும் மீனவர்கள் தமிழர்கள்.மத்திய அரசைப் பொறுத்த வரை தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களே.
இந்தக் கொலைகளை எதிர்த்துக் கண்டனக் குரலெழுப்பும் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகிறார். அப்போது கூட தமிழர்க்கு மானம், ரோஷம் வரவில்லையே? இனவுணர்வு ஏற்படும் வரை இந்நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

Nivas.T
15-08-2010, 10:50 AM
சிங்கள அரசால் சாகடிக்கப்ப்டும் மீனவர்கள் தமிழர்கள்.மத்திய அரசைப் பொறுத்த வரை தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களே.
இந்தக் கொலைகளை எதிர்த்துக் கண்டனக் குரலெழுப்பும் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகிறார். அப்போது கூட தமிழர்க்கு மானம், ரோஷம் வரவில்லையே? இனவுணர்வு ஏற்படும் வரை இந்நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

உண்மை முற்றிலும் உண்மை

சுயநலவாதிகளும், சாதி வெறியர்களும், பணப்பித்தர்களும், பதவி வெறி பிடித்தவர்களும்,
கலையப்படாதவரை இந்நிலை நீடிக்கும்