PDA

View Full Version : கேள்வி

meera
12-08-2010, 09:17 AM
உன்
மழலையின் சிரிப்பில்
என்னை மறந்து போனாய்
நியாயமா????
கதறுகிறது - என்
கவிதை குழந்தை:traurig001::traurig001:

சுடர்விழி
12-08-2010, 09:21 AM
நல்லா இருக்கு கவிதை...பாராட்டுக்கள்.உண்மை தான்...மழலை சிரிப்பில் நம்மைத் தொலைத்து விடுவோம் .கவிதைக் குழந்தையையும் கொஞ்சம் கவனியுங்கள்...

தாமரை
12-08-2010, 09:21 AM
கொஞ்சம் பொறு
இரவு வரட்டும்
தாலாட்டாய் உன்னை
மறுபிரசவம் செய்கிறேன்
நான்!

கீதம்
12-08-2010, 09:30 AM
கவிதைக்குழந்தைகளை அரவணைத்து கைக்குழந்தையைக் கைவிடுவதுதான் தவறு. குழந்தைகள் வளர்ந்து ஆளானபின் கொஞ்சுவதற்கு எப்போதும் கவிதைக்குழந்தைகள்தாம் நம் கையருகே இருக்கும். நல்லதொரு கவிதை. பாராட்டுகள், மீரா.

ஆதவா
12-08-2010, 09:44 AM
உன்
மழலையின் சிரிப்பில்
என்னை மறந்து போனாய்
நியாயமா????
கதறுகிறது - என்
கவிதை குழந்தை:traurig001::traurig001:

கொஞ்சம் பொறு
இரவு வரட்டும்
தாலாட்டாய் உன்னை
மறுபிரசவம் செய்கிறேன்
நான்!

எப்போதுமே மீரா கவிதை என்றதும் உடன் நினைப்பது தாமரை அண்ணா கவிதைதான்.
அதற்குப் பிறகு ஓட்டக்கூடாது ஆமாம்... சொல்லிட்டேன்.

இரண்டுமே நன்றாக இருக்கிறது! :icon_b:

தாமரை அண்ணா... இரவில் தான் பிரசவமா?
மறுபிரசவம் என்றால் கவிதாயினி (மீராக்கா :D) அடுத்த நிலைக்குப் பிறப்பதா?

ரெண்டு கேள்வி கேட்டு வைப்போம்... :cool:

தாமரை
12-08-2010, 09:58 AM

அட போப்பா, இரவில் குழந்தையை தூங்க வைக்க அம்மா தாலாட்டு பாடுவாங்க..

சாதாரண அம்மாக்கள் அத்தை அடிச்சாளோ, மாமன் அடிச்சானோ அப்படின்னு அடுத்தவர் மேல பழி போடக் கத்து குடுப்பாங்க..

ஆனா இந்தக் கவிதாயினி அம்மாக்கள் இருக்காங்களே தாலாட்டை தாங்களாகவே சொந்தமா எழுதிப் பாடுவாங்க.

அதனால கவிதை எழுதும் எண்ணம் வரும் பொழுதெல்லாம் அதைத் தாலாட்டாக அந்த கவிதாயினி அம்மா பாடலாமே.. அந்தக் குழந்தையையும் கவனிச்ச மாதிரி ஆச்சு.. இந்தக் குழந்தையையும் கவனிச்ச மாதிரி ஆச்சு..

ரொம்பப் புதுமை ஒண்ணும் கிடையாது.. இப்போ அனிருத்தை ஸ்வேதா கூட விளையாட விடறதில்லையா அப்படித்தான்,

மீராவைப் பார்த்து கவிதை என்னை மறந்திட்டாயே என்கிறது..

அதுக்கு மீரா கவலைப் படாதே இன்று தாலாட்டாக புதிய கவிதையைப் பிரசவம் செய்கிறேன் என்கிறார்.

கவிதை யார் யாரிடமோ காட்ட எழுதுகிறோம். இப்படி நம்ம குழந்தைக்கு அருமையான தாலாட்டு எழுதறது இன்னும் பூரிப்பைத் தருமில்லையா?

ஆதவா
12-08-2010, 10:19 AM
அண்ணே. அதுதான் முதலிலேயே நினைச்சேன்.. வேற ஏதாச்சும் மறைபொருள் இருக்கான்னு தேடினேன்.......

தாமரை
12-08-2010, 10:22 AM
அண்ணே. அதுதான் முதலிலேயே நினைச்சேன்.. வேற ஏதாச்சும் மறைபொருள் இருக்கான்னு தேடினேன்.......

வீட்ல திருடி ஒளிச்சு வைக்கிற பழக்கம் போகலியா?

மீரா வே இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு கவிதை எழுதி இருக்காங்க..

அதை நாம் வரவேற்போம்.. இப்போதைக்கு அவங்களை குழப்ப வேணாம்.. ஃபார்முக்கு வரட்டும்...

அப்புறம் வச்சுக்குவோம் கச்சேரியை

வியாசன்
12-08-2010, 10:33 AM
மீராவின் கவிதையும் அதற்கு பதிலாக தாமரை அண்ணாவின் கவிதையும் சூப்பருங்க

சுகந்தப்ரீதன்
12-08-2010, 03:01 PM
கச்சேரி ஆரம்பமாகிடுச்சி போல...!!

இனி வழக்கம்போல உட்காந்து வேடிக்கை பார்க்கலாம்...!!:D

வாழ்த்துக்கள் மீராக்கா..!!

அமரன்
12-08-2010, 06:25 PM
கச்சேரி ஆரம்பமாகிடுச்சி போல...!!

இனி வழக்கம்போல உட்காந்து வேடிக்கை பார்க்கலாம்...!!:D

வாழ்த்துக்கள் மீராக்கா..!!

நான் உன்னைய மாதிரி உக்காந்து பாக்க மாட்டேன். கச்சேரியில கலந்துடுவேன். எப்படித்தெரியுமா.. ஜால்ரா..

பூமகள்
13-08-2010, 03:30 AM
உன்
மழலையின் சிரிப்பில்
என்னை மறந்து போனாய்
நியாயமா????
கதறுகிறது - என்
கவிதை குழந்தை:traurig001::traurig001:

"கவிக் குழந்தை
எனைத் தேற்ற
மாற்றுத் தாய்
கவிஞர் உண்டு..
எனை பாலூட்ட
நீ மட்டும் தானே
அம்மா..!!"

நிஜக் குழந்தை கவிக்குழந்தைக்குமிடையேயான இந்த ஊசலாட்டத்தில் தத்தளித்தபடி நானும் மீரா அக்கா.

--

தாமரை அண்ணா சொல்படி, தாலாட்டு பாட நேரமில்லை.. அழும் குழந்தையை அமைதியாக்க அவ்வப்போது பாடி வைக்கிறேன் குழந்தை பெயர் வரும்படி ராகத்தோடு சில வரிகள் போட்டு. அவை கவிதை என்ற சொல்லுக்கும் தாலாட்டு என்ற சொல்லுக்கும் ஒட்டாமல் நிற்கிறது.. வேண்டுமானால் அவை இன்ஸ்டண்ட் காப்பி போல் இன்ஸ்டண்ட் பாடல்கள் என்று கொள்ளலாம்.

தாமரை
13-08-2010, 04:15 AM
பாலூட்டுவது தான்
அன்னையென்றால்
பலரின் அன்னை
பசுவும்
பால் புட்டியும்தான்

:icon_ush::icon_ush::icon_ush:

(பாலூட்டும் அன்னைமார்களும், பாலூட்ட இயலா அன்னைமார்களும் மன்னிக்கவும்)

இனியாவது என் குழந்தைக்கு நாமே ஏன் நம் ஆசைகளை, அறிவுரைகளை ஒரு பாட்டாக எழுதக் கூடாது என கவிதாயினிகள் எண்ணி கவித் தாய் இனி நாம் என மாறக்கூடாது?

ஆதவா
13-08-2010, 04:41 AM
இனியாவது என் குழந்தைக்கு நாமே ஏன் நம் ஆசைகளை, அறிவுரைகளை ஒரு பாட்டாக எழுதக் கூடாது என கவிதாயினிகள் எண்ணி கவித் தாய் இனி நாம் என மாறக்கூடாது?

அதையும் அப்படியே பாடிட்டோம்னா, “அம்மா பூதம் மாதிரி பாடறா” என்று LKG யில் பேசிக் கொள்வார்கள்!! :sprachlos020::D:sprachlos020:
(அதனால்தான் ஜெஸிகா பாடுவதேயில்லை)

பூமகள்
13-08-2010, 04:47 AM
பாலூட்ட மட்டுமா
அம்மா நீ வேண்டும்..!!
சீராட்டி அரவணைக்க
எத்தனை பேர் இருந்தாலும்
உனக்கீடாகுமா??

கீதம்
13-08-2010, 06:17 AM
கருவைப் பற்றி
கவிதை கொணர்வதற்குள்
பொறுமை வற்றி
புரண்டழுகிறதே குழந்தை!

தாமரை
13-08-2010, 06:27 AM
ஞாபகம் வந்தது
கவிதை; குழந்தையாம்
மறந்து போனது
குழந்தை; கவிதையாம்

இந்தக் கவிதை படித்து
பின்னூட்டம் போல
அந்தக் கவிதை படித்து
பின்னூட்டம்

கதம்பம் மணக்க
நாரும் மணக்க
பின்னிய கையும் மணக்க

விற்பதா சூடுவதா
அவரவர் விருப்பம்!!!

meera
16-08-2010, 05:24 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி சுடர்விழி

meera
16-08-2010, 05:30 AM
அண்ணா, கேள்விக்கு பதில் அசத்தல். ஆனா தாலட்டு பாடத்தான் கொஞ்சம் இல்லை இல்லை ரொம்ப பயம்.. இப்பவே சொன்ன கதை திரும்ப சொன்ன என் வாயை மூடிக்கறான். ரொம்ப உஷாரா இருக்கனும் இல்ல என்னோட தூங்கவே வராது.

meera
16-08-2010, 05:39 AM
கீதம், ஆதவா, வியாசன் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி......

ஆதவா, அமரன் அண்ணா, தாமரை அண்ணா உங்க கூட்டணியை கொஞ்சம் கலைச்சிறுங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. தாமரை அண்ணா ஒருத்தரையே சமாளிக்க முடியாது. இதுல நீங்க வேறயா???????????:eek::eek::eek::eek:

meera
16-08-2010, 05:45 AM
பூ, பின்னூடத்தை விடு,, நிஜமாவா? பாப்பா எப்படி இருக்கு? எனக்கு இத்தனை நாள் இது தெரியாதே?

வாழ்த்துகள் தங்கையே!

meera
16-08-2010, 05:52 AM
சுகந்தா, பின்னூட்டத்துக்கு நன்றி.. வேடிக்கை எல்லாம் பாக்க கூடாது. அக்காவுக்கு நல்ல தம்பியா சப்போர்ட் பன்னனும் சரியா?

சப்போர்ட் அக்காக்கு பன்னு. கட்சி மாறிட போற..............

தாமரை
16-08-2010, 06:15 AM
அண்ணா, கேள்விக்கு பதில் அசத்தல். ஆனா தாலட்டு பாடத்தான் கொஞ்சம் இல்லை இல்லை ரொம்ப பயம்.. இப்பவே சொன்ன கதை திரும்ப சொன்ன என் வாயை மூடிக்கறான். ரொம்ப உஷாரா இருக்கனும் இல்ல என்னோட தூங்கவே வராது.

இதுக்கெல்லாம் பயப்படலாமா..

ஒரு சின்னக் கதை சொல்றேன் கேளு..

முந்தாநாளு சாயங்காலம் ஜாலியா வாய்க்கு வந்ததைப் பாடிகிட்டு இருந்தேன். ஸ்வேதா வந்தா..

அப்பா நீ பாடு நான் டான்ஸ் ஆடறேன் அப்படின்னா (புதுசா டான்ஸ் கிளாஸ் போறா இல்லியா..)

நான் முதல்ல நான் எழுதி இருந்த பாடலைப் பாடினேன்..

பாட்டு ரொம்ப ஸ்லோவா இருக்கவே வேகமான ஒரு பாட்டு பாடலாம்னு தோணுச்சி..

சும்மா பல்லவி மாத்திரம் தான் கேளுங்க

நில்லு! நில்லு! - நில்லு
கண்ணே கொஞ்சம் நில்லு

சொல்லு! சொல்லு! - சொல்லு
காதல் மொழி சொல்லு

ஏக்கங்கள் நெஞ்சுக்குள்ளே
போட்டி போட்டுத் தவிக்குது
தூக்கமில்லை கண்ணுக்குள்ளே
சிட்டு முகம் சிரிக்குது

தேரில் வந்த தேவதை
நில்லு நில்லு நில்லு

தேகம் எங்கும் தேன்மழை
சொல்லு சொல்லு சொல்லு

வாராய் எந்தன் மாளிகை!
வாசம் பொங்கும் மல்லிகை!
நெஞ்சில் மின்னும் மேனகை!
செய்ய வேண்டும் புன்னகை!

நில்லு! நில்லு! - நில்லு
கண்ணே கொஞ்சம் நில்லேய்

சொல்லு! சொல்லு! - சொல்லு
காதல் மொழி சொல்லேய்!!!

பாட்டுக்கு டியூன் போட்டு.. பாட்டும் எழுதி.. அதுக்கு நடனமுத்திரையும் பிடித்து

அரங்கேற்றமும் ஆயாச்சி...

ஆடிக் களைச்ச ஸ்வேதாவின் முகத்தில் இருந்த சந்தோசத்தை விட மிகப் பெரிய பின்னூட்டம் இருக்க முடியுமா?

இப்போ சொல்லுங்க.. நம்ம குழந்தைங்களை சந்தோஷப்படுத்தாம யாரைச் சந்தோஷப்படுத்த கலைகள்?

உலகத்தில மத்தவங்க நம்மளை பாராட்டினா நமக்கு ஆணவம் கர்வம் இப்படி கூடவே துணையா வரும். ஆனா நம்ம குழந்தைகள் தரும் மலர்ந்த முக பின்னூட்டம் மட்டுமே களங்கமில்லாத ஆனந்தத்தைத் தரும்

உண்டா இல்லையா?

தாமரை
16-08-2010, 06:20 AM
பாலூட்ட மட்டுமா
அம்மா நீ வேண்டும்..!!
சீராட்டி அரவணைக்க
எத்தனை பேர் இருந்தாலும்
உனக்கீடாகுமா??

இதை
மகன் சொன்னால்
பனிமலை

மணாளன் சொன்னால்
எரிமலை!!!

தாமரை
16-08-2010, 06:30 AM
சுகந்தா, பின்னூட்டத்துக்கு நன்றி.. வேடிக்கை எல்லாம் பாக்க கூடாது. அக்காவுக்கு நல்ல தம்பியா சப்போர்ட் பன்னனும் சரியா?

சப்போர்ட் அக்காக்கு பன்னு. கட்சி மாறிட போற..............

அக்காக்கு பன்னு!!.. தங்கைக்கு பொறை!!

ஏற்கனவே சிக்கன் சவர்மா வாங்கிக் கொடுத்து வளர்த்த அக்கா அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டாங்கன்னு தம்பி கவலையில் இருக்காரு...

:icon_rollout::icon_rollout::icon_rollout::wuerg019::wuerg019::wuerg019:

தாமரை
16-08-2010, 06:33 AM
அண்ணா, கேள்விக்கு பதில் அசத்தல். ஆனா தாலட்டு பாடத்தான் கொஞ்சம் இல்லை இல்லை ரொம்ப பயம்.. இப்பவே சொன்ன கதை திரும்ப சொன்ன என் வாயை மூடிக்கறான். ரொம்ப உஷாரா இருக்கனும் இல்ல என்னோட தூங்கவே வராது.

இதுக்குத்தான் தாய்மாமன்கள் வேணுங்கறது.. சிறுவர் பக்கத்தில் இருக்கும் கதையெல்லாம் சொல்லியாச்சா.. ? இன்னும் வேணும்னா கேட்டு வாங்கணும்..

ஆதவா
16-08-2010, 06:39 AM
இதை
மகன் சொன்னால்
பனிமலை

மணாளன் சொன்னால்
எரிமலை!!!

மறுபடியும் ஆண்மனமா???

மக்களே.... மொதல்ல அந்த கவிதையை படிச்சுடுங்க.!! :rolleyes:

தாமரை
16-08-2010, 07:09 AM
மறுபடியும் ஆண்மனமா???

மக்களே.... மொதல்ல அந்த கவிதையை படிச்சுடுங்க.!! :rolleyes:

பேரை மட்டும் கொடுத்தா போதுமா? சுட்டி?
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24198

அதுக்கு முன்னால "அம்மா மாதிரி" படிங்க

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20975

சுகந்தப்ரீதன்
16-08-2010, 08:01 AM
சுகந்தா, பின்னூட்டத்துக்கு நன்றி.. வேடிக்கை எல்லாம் பாக்க கூடாது. அக்காவுக்கு நல்ல தம்பியா சப்போர்ட் பன்னனும் சரியா?
சப்போர்ட் அக்காக்கு பன்னு. கட்சி மாறிட போற..............ம்ம்ம்.. சரிக்கா..., ஆனா அமரு அடிக்கடி ஜிஞ்சாவை மாத்துனா நான் என்னக்கா செய்யறது..??:fragend005::confused:

அக்காக்கு பன்னு!!.. தங்கைக்கு பொறை!!
ஏற்கனவே சிக்கன் சவர்மா வாங்கிக் கொடுத்து வளர்த்த அக்கா அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டாங்கன்னு தம்பி கவலையில் இருக்காரு...
:icon_rollout::icon_rollout::icon_rollout::wuerg019::wuerg019::wuerg019:இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள அழவச்சிருவீங்க போலிருக்கு..:traurig001::traurig001::traurig001:

தாமரை
16-08-2010, 08:43 AM
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள அழவச்சிருவீங்க போலிருக்கு..:traurig001::traurig001::traurig001:

ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலதான் நிறுத்த முடியும்...

பூமகள்
17-08-2010, 04:22 AM
பூ, பின்னூடத்தை விடு,, நிஜமாவா? பாப்பா எப்படி இருக்கு? எனக்கு இத்தனை நாள் இது தெரியாதே?

வாழ்த்துகள் தங்கையே!
குட்டிப் பூ பூத்து மாதங்கள் சில கடந்து விட்டது மீராக்கா. பூ'மகள்' தான்.:icon_rollout: உங்க வாழ்த்துக்கு நன்றிகள் அக்கா.

உங்க வீட்டு சிங்க குட்டி நலமா?? உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும்.. நிறைய எழுதுங்க.. :)

meera
19-08-2010, 03:59 AM
இதுக்கெல்லாம் பயப்படலாமா..

ஆடிக் களைச்ச ஸ்வேதாவின் முகத்தில் இருந்த சந்தோசத்தை விட மிகப் பெரிய பின்னூட்டம் இருக்க முடியுமா?

இப்போ சொல்லுங்க.. நம்ம குழந்தைங்களை சந்தோஷப்படுத்தாம யாரைச் சந்தோஷப்படுத்த கலைகள்?

உலகத்தில மத்தவங்க நம்மளை பாராட்டினா நமக்கு ஆணவம் கர்வம் இப்படி கூடவே துணையா வரும். ஆனா நம்ம குழந்தைகள் தரும் மலர்ந்த முக பின்னூட்டம் மட்டுமே களங்கமில்லாத ஆனந்தத்தைத் தரும்

உண்டா இல்லையா?

அண்ணா, நீங்கள் சொல்வது சரி தான். நானாவே நிறைய கதைகள் சொல்லிருக்கேன். ஆனா அம்மா கவிதை எழுதற விஷயம் இன்னும் உங்க மருமகனுக்கு தெரியாது.

அதை தெரிய படுத்திட்டு சொல்லறேன் ரியாக்ஷன் என்னான்னு.

இதை
மகன் சொன்னால்
பனிமலை

மணாளன் சொன்னால்
எரிமலை!!!

எல்லா பெண்களும் இப்படி இல்லை. சில விதிவிலக்குகள் மட்டுமே இப்படி இருக்கும் எரிமலையாய்....

தாமரை
19-08-2010, 04:05 AM
எல்லா பெண்களும் இப்படி இல்லை. சில விதிவிலக்குகள் மட்டுமே இப்படி இருக்கும் எரிமலையாய்....

கொஞ்சம் மாத்திச் சொல்லீட்டிங்க..தங்கையே.. நான் நம்பின பலபேரும் இந்த விஷயத்தில காலை வாரி விட்டுட்டாங்க.. :traurig001:

meera
19-08-2010, 04:06 AM
அக்காக்கு பன்னு!!.. தங்கைக்கு பொறை!!

:icon_rollout::icon_rollout::icon_rollout::wuerg019::wuerg019::wuerg019:
மன்றம் வந்து கொஞ்சம் நாள் ஆயிடுச்சு இல்லன்னா அதான் ... கொஞ்சம் அசரவிடறது இல்ல க்கும் ??????

இதுக்குத்தான் தாய்மாமன்கள் வேணுங்கறது.. சிறுவர் பக்கத்தில் இருக்கும் கதையெல்லாம் சொல்லியாச்சா.. ? இன்னும் வேணும்னா கேட்டு வாங்கணும்..

தாய் மாமாக்கள் இருக்கறதுனாலதான் இப்படி நிம்மதியா இருக்க முடியுது...

தாய் மாமாக்களுக்கு ஒரு பெரிய நன்றீங்கோ:eek::sprachlos020::sprachlos020:

meera
19-08-2010, 04:11 AM
ம்ம்ம்.. சரிக்கா..., ஆனா அமரு அடிக்கடி ஜிஞ்சாவை மாத்துனா நான் என்னக்கா செய்யறது..??:fragend005::confused:
இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள அழவச்சிருவீங்க போலிருக்கு..:traurig001::traurig001::traurig001:

நீ ஒன்னும் கவலைப்படாதே சுகந்தா,

அமரன் ஜால்ராவை பிடிங்கிறலாம்.

குட்டிப் பூ பூத்து மாதங்கள் சில கடந்து விட்டது மீராக்கா. பூ'மகள்' தான்.:icon_rollout: உங்க வாழ்த்துக்கு நன்றிகள் அக்கா.

உங்க வீட்டு சிங்க குட்டி நலமா?? உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும்.. நிறைய எழுதுங்க.. :)

பூ, ரொம்ப சந்தோஷம். சிங்க குட்டி ரொம்ப நலம். பூ'மகளை' நலமாம் பார்த்துக்கொள். :icon_b:

meera
19-08-2010, 04:18 AM
கொஞ்சம் மாத்திச் சொல்லீட்டிங்க..தங்கையே.. நான் நம்பின பலபேரும் இந்த விஷயத்தில காலை வாரி விட்டுட்டாங்க.. :traurig001:

அப்படி இல்லை என்று அடித்து பேச துணிச்சல் இல்லை அண்ணா எனக்கு. இப்போ எல்லாம் அனைவருக்கும் தனிமை தான் பிடிக்கிறது. மாமனாரும், மாமியாரும் பாரமாய் தெரிகிறது.

என்னோடு வேலை செய்யும் ஒரு பெண், என்னிடம் கேட்டார்கள் உங்களுக்கு என்ன குழந்தை என்று. நானும் ஆண் குழந்தை என்றேன். அடுத்த நொடி பாவம் செய்தவர்களுக்கு தான் ஆண் குழந்தை பிறக்கும் என்றார் அவர். வாயடைத்துப் போனேன்.